Home

Print Version

 

The world capitalist crisis and the tasks of the 4th international.
நான்காம் அகிலத்தின் ஐம்பது ஆண்டுகள்

சர்வதேசியமும்,பாட்டாளிவர்க்கமும்

முதலாளித்துவ நெருக்கடியும் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையும்

நான்காம் அகிலமும் சந்தர்ப்பவாதமும்

சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு வரலாற்று கணக்கெடுப்பு

ஸ்ராலினிசத்தின் பங்கு பற்றி பப்லோவாதம்

சோவியத் யூனியன் இன்று

நிரந்தரப்புரட்சித் தத்துவம் ஊர்ஜிதம்

ஐக்கிய அமெரிக்க அரசுகள், ஜப்பான்,ஐரோப்பாவும் ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான குரோதங்களின் வளர்ச்சியும்

ஏகாதிபத்தியமும் ஆசிய பசுபிக்கரையும்

பின்தங்கிய நாடுகளின் வறுமை

உலகக் கடனின் பெருக்கம்

ஏகாதிபத்திய யுத்தத்திற்கெதிரான போராட்டம்

அனைத்துலகக்குழுவும் மார்க்சிசத்துக்கான போராட்டமும்

 

 

Imperialism and the Asian Pacific Rim

ஏகாதிபத்தியமும் ஆசிய பசுபிக்கரையும்

136. கடந்த கால்நூற்றாண்டில் ஆசிய பசுபிக் கரையென பேர்பெற்ற பிராந்தியத்தில் முதலாளித்துவம் பரந்த வளர்ச்சி கண்டுள்ளது. இது ஜப்பான், தாய்வான், தென்கொரியா, ஹாங்காங், சிங்கப்பூர், இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், ஆகியவற்றைக் கொண்டிருந்தது. சீனமக்கள் குடியரசும் இந்தப் புவியியல் பிராந்தியத்தில் ஒரு பாகமேயாகும். இன்று ஆசிய பசுபிக்கரை அபிவிருத்தி பற்றிய முதலாளித்துவ ஆய்வுகளில் இதன் பொருளாதாரமும் உலக முதலாளித்துவ பொருளாதாரத்தில் இதன் பாத்திரம் பற்றியும் சேர்க்கப்பட்டுள்ளதென்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 1960 - 1982க்கும் இடையில் சீனா உட்பட ஆசிய - பசுபிக் நாடுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) உலக உற்பத்தியில் 7.8%-ல் இருந்து 16.4% ஆக உயர்ந்தது. அமெரிக்காவின் மொத்த உற்பத்தியுடன் தொடர்புபடுத்துகையில் ஆசிய - பசுபிக்கின் உற்பத்தி 18%-ல் இருந்து 53.2% ஆக அதிகரித்தது. 1965ல் ஒருங்கிணைந்த ஆசிய - பசுபிக் பொருளாதாரங்கள் 18,300 கோடி டாலர் பொருட்களையும், சேவைகளையும் உற்பத்தி செய்தன. இது வட அமெரிக்க மட்டத்திற்கு 75% குறைந்ததாகும். 1983 ல் அவர்களின் மொத்த உற்பத்தி 170,000 கோடி (1.7 டிரில்லியன்) டாலர்களாக உயர்ந்தது. இது வடமெரிக்க உற்பத்தியைக் காட்டிலும் 30% குறைவானதாகும்.

137. இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் இருந்து உலகின் அநேக பாகங்களில் முதலாளித்துவம் விரிவடைந்தமையும் ஆசியாவில் பிரமாண்டமான முதலாளித்துவ மையங்கள் உருவாகியமையும் ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம் என்ற லெனினின் வரைவிலக்கணத்தை எவ்வித முரண்பாட்டுக்கும் உள்ளாக்கி விடவில்லை. லெனின், ஏகாதிபத்தியம் என்பதில் சிறப்பாக எச்சரித்தது போன்று ''இந்த போக்கு முதலாளித்துவத்தின் துரித வளர்ச்சியை நீக்கி விடுகின்றதென நம்புவது தவறாகும். இது அப்படியல்ல.'' அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆசிய பசுபிக் நாடுகளை ''பாகங்களை இணைக்கும் தளங்கள்'' ஆகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றது. உதாரணமாக அமெரிக்க செமிகண்டக்டர் (Semiconductor) தொழிலில், ஒருங்கிணைந்த மின்சுற்றுக்களின் மிகவும் சிக்கலான பாகங்களைத் தனது ஆசிய-பசுபிக் வசதிவாய்ப்புக்களுக்கு ஏற்றுமதி செய்கின்றது. அங்கு நெருக்கமான உழைப்புடனான இணைப்பு வழிமுறைகள் நிறைவேற்றப்படுகின்றன. இவ்வாறான முழுமையாக இணைக்கப்பட்ட அலகுகள் திரும்ப அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படுவதுடன் ''ஒரே ஸ்தாபனத்தினுள்ளான வர்த்தக'' சுழற்சி பூர்த்தியடைகிறது. இந்த அபிவிருத்திகளின் பின்னணியில் உள்ள உள்நோக்கம் பெரிதும் தெளிவானது. 'செமிகண்டக்டர்' தொழிலைப்பற்றிய ஒரு ஆய்வு குறிப்பிடுவதுபோல்; ''1964-1972 காலப்பகுதியில் அமெரிக்கா ஒருங்கிணைந்த, மின்சுற்றுநிறுவனங்கள் கடல்கடந்த இடங்களுக்கு பகுதி இணைப்புக்கு இடம்பெயர்ந்தமையானது, உழைப்பு ஆழ்ந்த கட்டங்களைக் கொண்ட ஒருங்கிணைந்த மின்சுற்று உற்பத்தியில் உழைப்புச் செலவைக் குறைப்பதற்கான ஒரு உக்கிரமான நடவடிக்கை ஆகும். தெற்காசிய அபிவிருத்தியடையும் நாடுகளுக்கும், அமெரிக்காவிற்கும் இடையேயான பெருமளவிலான ஊதிய செலவின் வேறுபாடுகள் 'பகுதிகள் இணைத்தலை' கடல்கடந்த இடங்களுக்கு நகர்த்துவதை பெருமளவிலான பொருளாதார ரீதியில் ஊக்குவிக்கின்றது.'' (சர்வதேசப் போட்டியில் அமெரிக்க தொழில்துறை, சிஸ்மன்- ரைசன், 1983).

138. ஆசிய-பசுபிக் முதலாளித்துவப் பொருளாதாரங்கள் தொழிலாளர் வர்க்கத்தை இந்த மிலேச்சத்தனமான சுரண்டலுக்கு உள்ளாக்குவதன் அடிப்படையில் அமைந்துள்ளன. தேசிய முதலாளித்துவ வர்க்கம் சர்வதேச நாணய நிதியத்தினால் விரும்பப்படும் 'ஏற்றுமதி மூலோபாயத்தை' இராணுவ - போலீஸ் சர்வாதிகாரங்களுடன் பேணுகின்றது. இவை அரச அமைப்புக்களில் வேரோடிய, உண்மையான ஜனநாயகப் புரட்சிகளினால் ஒருபோதும் அடித்துச் செல்லப்படாத பல அரை நிலபிரபுத்துவ மிச்சசொச்சங்களை பேணிக் காக்கின்றன. ''டிரான்ஸ் நாஷனல்'' கூட்டுத்தாபனங்களின் உச்ச சுரண்டலுக்கான களஞ்சியங்களாக தொழிற்படும் வேளையில், இந்த 'குட்டி ஜப்பான்கள்' எனப்படுபவற்றின் பொருளாதாரங்கள் உலக வர்த்தக மாதிரிகளால் கடுமையாகப் பாதிக்கப்படக் கூடியவையாகும். பொருளாதாரப் பின்னடைவு அல்லது பாதுகாப்புவாதச் சட்டத்தின் விளைவுகள் பெரும் அழிவு நிறைந்ததாக இருக்கும்.

139. ஆசிய பசுபிக்கில் முதலாளித்துவ பரவலாக்கத்தின் முக்கிய அம்சம் இப்பிராந்தியம் முழுவதிலும் பாட்டாளி வர்க்கத்தின் பிரமாண்டமான வளர்ச்சியாகும். 1960 களில் இருந்து தென்கொரியாவின் நாட்டுப்புறங்களில் இருந்து ஏற்பட்ட தீவிரமான இடம்பெயர்வினால் தொழிலாளர் வர்க்கம் துரிதமாக வளர்ச்சியடைந்தது. வேலைநிறுத்த அலைகள் தென்கொரியாவை ஆட்டங்காணச் செய்ததோடு ஜெனரல்- சண்- டு- வானை பலவந்தமாக ஓய்வெடுக்கச் செய்தது. இது முதலாளித்துவ ஆய்வாளர் ஒருவரை பின்வருமாறு மதிப்பிடச் செய்தது; ''கடந்த 20 வருடங்களுக்கு மேலாக கொரியத் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் பற்றிய எதிர்பார்ப்புக்கள் அதிகரிக்கின்றது. தொழிலாளர்களாக மாற்றப்பட்ட விவசாயிகள் நகர்ப்புறங்களில் தொழிற்சாலைகளில் ஜீவியத்தை ஈட்டிக்கொள்ளும் வாய்ப்புக்காக தொடர்ந்து நன்றியுடையவர்களாக இல்லை. தொழிலாளர்கள் தங்களைச் சுற்றிலும் உற்பத்தி சக்திகள் வியப்பூட்டும் அளவுக்கு மற்றும் நீடித்த அளவு உற்பத்தித்திறன் விஸ்தரிக்கப்பட்டுள்ளதைக் கண்டனர். மக்கள் தொகையின் குறிப்பிடத்தக்க பகுதிகளின் குறிப்பாக, வல்லுனர், தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகத்துறை தொழிலாளர்கள் மற்றும் முதலின் சொந்தக்காரர்களின் வருமானப்பெருக்கத்தையும் கண்டனர். அதிகரித்துவரும் வருமான வித்தியாசங்களுக்கான சான்று மிகக் குறைவானதேயாகும். ஆனால் 1970 களின் ஆரம்பத்திலிருந்து வருமானப் பங்கீட்டில் குறிப்பிடத்தக்க பாதிப்புக்கான அடையாளத்தை உத்தியோகபூர்வ ரீதியான வெளியீடு கூட கொண்டிருக்கிறது. குறிப்பாக, வருமானம் பெறும் பரந்த அளவிலான குழுவினர் மத்தியில் தொழிற்துறை தொழிலாளர்கள் மிகக்குறைந்த கூலியைப் பெறுகின்றனர். (சி. ஹாமில்டன் மற்றும் ஆர். டாண்ட்டர், சர்வதேச விவகார பத்திரிகை) 'தென்கொரியாவில்' வெற்றியின் முரண்பாடுகள். பக்கம் 65)

140. இக்கட்டுரையின் ஆசிரியர்கள் தென்கொரியாவில் முதலாளித்துவத்தின் வெற்றியை நிரூபிக்கும் புள்ளி விபரங்களைத் தந்துள்ளனர். இதேசமயம் கொரிய அபிவிருத்தி கழகத்தின்படி 1980 ல் 5 பேர்களைக் கொண்ட குடும்பம் ஒன்றின் குறைந்தபட்சம் வாழ்க்கைச்செலவு மாதாந்தம் 2,70,000 வோன் ஆகும். 56% தொழிலாளர்கள் மாதம் ஒன்றுக்கு 2,00,000 வோணுக்கும் குறைவாகவே பெறுகிறார்கள். கொரியத் தொழிலாளர்கள், வாரத்துக்கு ஏறக்குறைய 53 மணிநேரம் வேலை செய்கின்றார்கள். சர்வதேச தொழிலாளர்கழகத்தின் (ILO) ஆய்வின்படி, இது வேறு எந்த நாடுகளைக் காட்டிலும் அதிகமானதாகும். எஃகுத்தொழில் துறையில் வேலைநேரங்கள் 12 மணி நேரங்களைக் கொண்டவையாகும். வேலை முறை மாற்றத்தின் போது சில தொழிலாளர்கள் தொடர்ச்சியாக 24 மணி நேரங்களுக்கு வேலைசெய்ய வேண்டியது சர்வசாதாரணமானதாகும். 1985 பாதுகாப்பு நிலைமைகளினால் 1,618 தொழிலாளர்கள் விபத்துக்களில் கொல்லப்பட்டனர்.

141. ஆசிய பசுபிக்கின் ஏனைய 'விருத்தியடையும்' பொருளாதாரங்களில் தென்கொரிய நிலைமைகள் பொதுவில் இன்னமும் மிகக் கொடூரமான முறையில் பிரதிபலிக்கின்றன. தென்கொரியாவில் போராட்டங்கள் ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளதுபோல், ஒடுக்குமுறை முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டத்தின் பாட்டாளி வர்க்கம் முன்னணிக்கு வந்துகொண்டிருக்கின்றது. ஆசிய பசுபிக், நிரந்தரப்புரட்சிக் கோட்பாட்டிற்கு மாபெரும் வரலாற்று மெய்ப்பித்தலை வழங்கவிருக்கிறது என்பதில் பிரச்சினைக்கே இடமில்லை.