Home

Print Version

 

The world capitalist crisis and the tasks of the 4th international.
நான்காம் அகிலத்தின் ஐம்பது ஆண்டுகள்

சர்வதேசியமும்,பாட்டாளிவர்க்கமும்

முதலாளித்துவ நெருக்கடியும் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையும்

நான்காம் அகிலமும் சந்தர்ப்பவாதமும்

சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு வரலாற்று கணக்கெடுப்பு

ஸ்ராலினிசத்தின் பங்கு பற்றி பப்லோவாதம்

சோவியத் யூனியன் இன்று

நிரந்தரப்புரட்சித் தத்துவம் ஊர்ஜிதம்

ஐக்கிய அமெரிக்க அரசுகள், ஜப்பான்,ஐரோப்பாவும் ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான குரோதங்களின் வளர்ச்சியும்

ஏகாதிபத்தியமும் ஆசிய பசுபிக்கரையும்

பின்தங்கிய நாடுகளின் வறுமை

உலகக் கடனின் பெருக்கம்

ஏகாதிபத்திய யுத்தத்திற்கெதிரான போராட்டம்

அனைத்துலகக்குழுவும் மார்க்சிசத்துக்கான போராட்டமும்

 

 

The Theory of Permanent Revolution Vindicated

நிரந்தரப்புரட்சித் தத்துவம் ஊர்ஜிதம்

81. ஸ்ராலினிசத்திற்கும், மாவோயிசத்திற்குமான பப்லோவாதிகளின் அடிபணிதலுடன் பின்தங்கிய நாடுகளில் தேசிய முதலாளித்துவ வர்க்கங்களுடன் அவர்கள் அடிபணிந்துபோவதுடன் ஒன்று சேர்ந்தது. அக்டோபர் புரட்சி, சீனப்புரட்சி (1925- 1927) மற்றும் ஸ்பானியப் புரட்சியின் அத்தியாவசியமான வரலாற்றுப் படிப்பினைகளுக்கு புறமுதுகு காட்டுவதன் மூலம் பப்லோவாதிகள் அல்ஜீரியாவின் பென்பெல்லா மற்றும் ஆர்ஜென்டீனாவின் பெரோன் முதல் பர்மாவின் நெவின் வரையிலான ஒவ்வொரு முதலாளித்துவ தேசிய தலைவர்களுக்கும் கூட கைதட்டும் தலைவர்களாயினர். தேசிய முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் சுதந்திரத்துக்காகப் போராடுவதன் அவசியத்தை நிராகரித்தனர். பதிலாக நிரந்தரப்புரட்சி தத்துவத்தினைப் பொய்மைப் படுத்தினர். பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்துக்கான போராட்டத்துக்கு வழிகாட்டும் ஒரு நனவாக மூலோபாயம் என்ற நிலையில் இருந்து, இந்த தத்துவத்தினை பாட்டாளி வர்க்கம் அல்லாத சக்திகளுக்கு தமது சொந்த அடிபணிவினை நியாயப்படுத்தும் நிலைக்கு உருமாற்றினர். தொழிலாள வர்க்கத்தை சுதந்திரமாக அணிதிரட்டுவதன் மூலம் நிரந்தரப்புரட்சி திட்டத்தின் மூலோபாயத்திற்காகப் போராடுவதைக் காட்டிலும், பப்லோவாதிகள் அது நனவற்ற முறையிலாயினும் காஸ்ட்ரோ, பென்பெல்லா, பெரன் போன்ற முதலாளித்துவ தேசியவாதிகளினால் அடையப்பட்டுள்ளதாக மிக திருப்தியுடன் பிரகடனம் செய்தனர். மேலும் காஸ்ட்ரோ, பென்பெல்லா, போன்ற ''நனவற்ற மார்க்சிஸ்டுகள்'' தொழிலாளர் அரசுகளை'' ஸ்தாபிப்பதில் வெற்றிகண்டுள்ளதாகக் கருதப்படுவதால், பாட்டாளி வர்க்கம் ஆட்சிக்கு வர தனது சொந்த புரட்சிக் கட்சியை கொண்டிருக்க வேண்டியதில்லை என பிரகடனம் செய்தனர். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் சம்பந்தமாக மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், மற்றும் ட்ரொட்ஸ்கி எழுதிய அனைத்தையும் சிறப்பாக ஆட்சியின் புதிய வடிவமாக தொழிலாளர் வர்க்கத்தினால் கண்டுபிடிக்கப்பட்ட சோவியத்துக்களின் உலக முக்கியத்துவத்தை புறக்கணித்துவிட்டு பப்லோவாதிகள், ஒரு தொழிலாளர் அரசு உருவாகிவிட்டதா இல்லையா என்பதை தீர்மானம் செய்வதற்கு தொழிலாளர் ஆட்சியின் சுதந்திரமான வடிவங்களின் தோற்றம் ஒரு அத்தியாவசியமான அளவீடு ஆகாது என வாதிட்டனர்.

82. 1963-ஆம் ஆண்டின் மறு இணைப்பிற்கான மாநாடு, பின்தங்கிய நாடுகளில் நான்காம் அகிலத்தின் பகுதிகளைக் கட்டி எழுப்பும் வரலாற்றுத் தேவையை நிராகரிக்கும் வேலைத் திட்டத்தினை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அந்தக் காங்கிரசில் பப்லோவாதிகளால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பிரகடனம் செய்வதாவது; ''மூலாதாரம் வரை அழுகிப்போய், பரந்த மக்களின் ஆதரவினை இழந்துபோயுள்ள ஆளும் வர்க்கங்களால் எதிர்கொள்கையில் புரட்சியானது ஏழைவிவசாயிகள் திவாலாகிவிட்ட குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினர் உட்பட பரந்த உழைக்கும் மக்கள் தொகையைப் போராட்டத்தினுள் ஈர்க்கின்றது. இதன்மூலம் பாரம்பரிய ஒழுங்கையும், அதன் அரசினையும் சீர்குலைவுக்குக் கொண்டு வருகிறது. அத்தகைய அழுத்தங்களை மத்தியவாத தொழிலாளர் வர்க்க கட்சிகள் மற்றும் அதேபோன்ற அமைப்புக்கள் மீது செலுத்துவதன் மூலம் அவற்றை ஆட்சிக்குக் கொணரச் செய்கிறது... பின்தங்கிய நாடுகளில் எதிரியின் பலவீனங்கள் மொட்டை ஆயுதத்துடனும் கூட ஆட்சிக்கு வருவதற்கான சாத்தியக்கூறைத் திறந்து விட்டிருக்கிறது''.

83. புரட்சிக் கட்சியைக் கட்டி எழுப்பும் போராட்டத்தினை கைவிடுவதானது, சாராம்சத்தில் பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரத்தினையே நிராகரிப்பதாகும். இவ்வாறாக பாட்டாளி வர்க்கத்திற்கு மாற்றுக்களை தேடுதலானது, அவர்களின் மறு இணைப்புத் தீர்மானத்தில் வெளிப்பட்டது; இந்நாடுகளின் தனித்துவமான சமூக பொருளாதார நோக்கில் பாட்டாளி வர்க்கத்தின் பிரதான பலம் தொழில்துறை நிறுவனங்களின் தொழிலாளர்களிடையே இருக்கவில்லை. இவர்கள் ஆர்ஜென்டீனாவைத் தவிர இந்நாடுகளின் சுறுசுப்பான மக்கள் தொகையில் ஒரு இம்மியளவு பிரிவினரையும் கூலி பெறுபவர்களில் சிறு பகுதியினரையும் மட்டுமே கொண்டுள்ளனர். சுரங்கத் தொழிலாளர், பெருந்தோட்ட விவசாயத் தொழிலாளர் மற்றும் பேரளவில் வேலையற்றோர் மீது கவனம் செலுத்தப்பட வேண்டும்... கெரில்லாப்படைகளை விரிவுபடுத்தும் வகையில் விவசாயிகள் சந்தேகத்திற்கு இடமில்லாமல், மார்க்சிச கோட்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டதைவிட, மிகவும் மேலான தீவிரமான மற்றும் தீர்க்கமான பாத்திரத்தினை காலனித்துவப் புரட்சியில் ஆற்றியுள்ளனர்.''

84. கெரில்லா வாதத்தினைப் புகழ்ந்து பொலிவிய பப்லோவாத மொஸ்கோஸா வினால் உச்சரிக்கப்பட்டதாவது; ''கியூபா நாட்டினரால் முன்வைக்கப்பட்ட கெரில்லா முறையானது, ஒவ்வொரு நாட்டினதும் சிறப்புத் தன்மைக்கு ஏற்றவாறு வடிவத்தில் வேறுபடவேண்டியிருப்பினும், சகல பின்தங்கிய நாடுகளிலும் பிரயோகிக்கத்தக்கதாகும். தீர்வு காணப்படாத நிலப் பிரச்சினைகளைக் கொண்ட பரந்த அளவிலான விவசாயிகளைக் கொண்ட அந்நாடுகளில், கெரில்லாக்கள் விவசாயிகளிடமிருந்து தமது பலத்தினைப் பெறுவர். கெரில்லாப் போராட்டம் இம் மக்களைக் கியூபாவில் சியரா மேஸ்ட்ராவிலிருந்து தொடங்கியது போல ஆயுதமும் கையுமாக தமது விவசாயப் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கையில் ஈடுபடுத்தும். ஆனால் மற்ற நாடுகளில் பாட்டாளி வர்க்கமும் நகர்ப்புற தீவிரவாத குட்டிமுதலாளித்துவ வர்க்கமும் கெரில்லாப் படைகளுக்கு ஆட்களை வழங்கும்.'' (எர்ணஸ்ட் மண்டேல், ஆசிரியர், உலகப்புரட்சியின் ஐம்பதாண்டுகள், நியூயோர்க் பாதபைன்டர் அச்சகம், 1970, பக்கம் 194 - 195) அன்று சிலி தொழிலாளர்களின் எதிர்காலத் தோல்விக்கான தயாரிப்பு செய்துகொண்டிருந்த மொஸ்கோசாவின் சகாவான விட்டெல் கெரில்லா யுத்தத்தின் அளவு கடந்த முக்கியத்துவத்தைத் தம்பட்டமடித்து ''இந்தப் புதிய ஆயுதக் கிளர்ச்சி மூலோபாயத்தை தொடக்கி வைத்த பெருமை மாவோசேதுங்குக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்குமே உரியது என்பதில் கேள்விக்கே இடமில்லை.'' (அதே நூல் பக்கம் 46) எனக் கூறினார்.

85. பப்லோவாதிகளின் அரசியல் குற்றங்களின் பரிமாணத்தினை முழுமனே புரிந்துகொள்ள கெரில்லா மூலோபாயத்தின் பலாபலன்களை பற்றிய ஒரு கணக்கெடுப்பை (Balance Sheet) வரைய வேண்டியிருக்கும். சிலி, உருகுவே, பொலிவியா, ஆர்ஜென்டீனா முதலான நாடுகளில் கெரில்லா வாதத்தினை புகழ்ந்து பாராட்டுவதன் மூலம் பப்லோவாதிகள் பாட்டாளி வர்க்கத்திலிருந்து புரட்சிகர சக்திகளை தனிமைப்படுத்தினர். தொழிலாளர் வர்க்கத்துள் புரட்சிகரக் கட்சியின் அபிவிருத்தியைத் தடைசெய்ததுடன், பெரும் தோல்விகளுக்கும் பங்களிப்புச் செய்தனர்.

86. நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டினைக் காட்டிக் கொடுத்த இப்பயணத்தில், பப்லோவாதிகள் அனைத்துலகப் பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டினை முழுமனே கைவிட்டதுடன், ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்திற்கு எதிரான தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டத்தின் வேர்களினின்று, சோசலிசத்தின் வரலாற்று முன்னோக்கினைத் தனிமைப்படுத்தினர். பப்லோவாதிகள் தமது சந்தர்ப்பவாதப் போக்கினை அமுல் செய்யும் பொருட்டு ஸ்ராலினிஸ்டுகளின் பழைய, செல்வாக்கிழந்த ''இரண்டுகட்ட'' கோட்பாட்டுக்கு புத்துயிரூட்டினர். பல தசாப்தங்களாக கிரெம்ளின் அதிகாரத்துவம் இக் கோட்பாட்டின் மூலமே சோசலிசப் புரட்சிக்கான முன்முயற்சி ஜனநாயகப்புரட்சி நிறைவேற்றப்படும் வரை தாமதப்படுத்தப்பட வேண்டும் எனக்கூறி பாட்டாளி வர்க்கத்தினை பல்வேறு முதலாளித்துவ தேசியத் தலைவர்களுக்குக் கீழ்ப்படுத்தினர்.

87. தேசிய முதலாளித்துவத்திற்கு தமது அடிபணிவினை நியாயப்படுத்திக் கொண்டிருந்த அதேவேளையில், பப்லோவாதிகள் தமது மறு இணைப்பிற்கான காங்கிரசில், பின்தங்கிய நாடுகளில் புரட்சிகரத் தலைமைக்கான நெருக்கடி உண்மையில் நிலவவில்லை அல்லது குறைந்த பட்சம் அற்ப அளவில் தானும் இல்லை எனவும் குறிப்பிட்டனர். ''காலனித்துவ, அரைக்காலனித்துவ நாடுகளில் முதலாளித்துவத்துக்குரிய பலவீனமானது ஏகாதிபத்தியத்தினால் உருவாக்கப்பட்ட பிரத்தியேகமான சமூகப் பொருளாதார முழு அடிப்படையும் ஆகும். ஒரு தீவிரமான விவசாயப்புரட்சி இல்லாமையால் சனத்தொகையில் பெரும்பகுதியினரின் நீடித்த அவலங்களும், தொழில்மயமாக்கல் சார்பு ரீதியில் துரிதமாக முன்னேறிய போதிலும் வாழ்க்கைத்தரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியும், ஒரு புரட்சிகர அலையில்லாமல் தன்னியக்கமாகவே சார்புரீதியான அல்லது தற்காலிகமான அளவில் கூட சமூக அல்லது பொருளாதார உறுதிப்பாட்டுக்கான நிலைமையை உருவாக்கிவிடாது. பொலிவியா 10 ஆண்டுகளாகப் பெற்றிருக்கின்ற அனுபவங்களைப் போன்று, ஒரு ஓய்ந்து போகாத வெற்றியளிப்பதாகக் காணப்படுகின்ற பரந்துபட்ட மக்கள் போராட்டம் தொடர்கின்றது'' கடந்த கால்நூற்றாண்டின் துன்பகரமான அனுபவங்கள் இந்தோனேஷியா, சிலி, பொலிவியா, ஆஜென்டீனா, சூடான்- தோல்விகள் (பெயர் குறிப்பிட சில மட்டுமே) இன்னும் இந்த சந்தர்ப்பவாத உதாசீனத்தின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்றன.

88. பல ஆண்டுகளாக பப்லோவாதிகள் தமது கொள்கை நிரந்தரப்புரட்சிக் கோட்பாட்டினை அடிப்படையாகக் கொண்டது என கூறி வந்தனர். ஆனால் 1982ல் பப்லோவாதத்தின் பிடிவாதமான தாக்கத்தினைத் தொடர்ந்து சோசலிசத் தொழிலாளர் கட்சி தனது சகோதரக் கட்சிகளாக வரவேற்றுக்கொண்டுள்ள கிரனெடா ''நியூ ஜூவ்வல் மூவ்மென்ட் '' (New Jewel Movement), நிகரகுவா சாண்டினிஸ்டா போன்ற குட்டி முதலாளித்துவ இயக்கங்களைக் கொண்ட ஒரு புதிய ''பரந்த லெனினிச அகிலத்தின்'' அபிவிருத்திக்கு நிரந்தரப்புரட்சி கோட்பாடு ஒரு தடையாக இருப்பதாக பிரகடனம் செய்தது. நிரந்தரப்புரட்சிக் கோட்பாட்டைக் கைவிட்டதோடு சோசலிச தொழிலாளர் கட்சியானது, 1917ல் போல்ஷிவிக்குகளினால் கைவிடப்பட்டு, 1920களில் சியாங்கேஷேக்குடனான தனது நாசகரமான கூட்டினை நியாயப்படுத்தும் பொருட்டு, ஸ்டாலினால் புத்துயிரூட்டப்பட்ட ''தொழிலாளர் - விவசாயிகளது ஜனநாயகச் சர்வாதிகாரம்'' என்ற பழைய கருத்துருவினை புனருத்தாரணம் செய்துள்ளனர். ட்ரொட்ஸ்கிசம் மீதான இந்தத் தாக்குதலின் அர்த்தமானது, தென் ஆபிரிக்க தேசிய காங்கிரசின் அரசியல் ஆளுமைக்கு நிபந்தனையின்றி அடிபணிய வேண்டுமென சோசலிசத் தொழிலாளர் கட்சி தீவிரமாக வற்புறுத்தியதன் மூலம் நன்கு துல்லியமாகத் தெளிவாகியுள்ளது.

89. தேசிய முதலாளித்துவ வர்க்கத்திடம் பப்லோவாதிகளின் இழிவான அடிபணிவு - சாராம்சத்தில் இரண்டாம் உலகப் போருக்குப் பின் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் அச்சுறுத்தலைத் திசைதிருப்பும் பொருட்டு, ஏகாதிபத்தியம் அந்த சக்திகளின்பால் ஒத்துப்போகும் நிலைக்குத் திரும்பியதையே பிரதிநிதித்துவம் செய்கிறது. இரண்டாம் உலகப் போரினைத் தொடர்ந்து ஆசியா, மத்தியகிழக்கு, ஆபிரிக்கா முழுமையாகவும் உள்ள அரசுகளுக்கு ஏகாதிபத்தியத்தினால் போலிச் சுதந்திரம் வழங்கப்பட்டது. ஆனால் 40 ஆண்டுகளின் பின்னரும் இந்தப் ''புதிய சுதந்திர அரசுகளில்'' அடிப்படை ஜனநாயகப் பணிகள் எதுவுமே வெற்றிகரமாக அமுல் செய்யப்படவில்லை. ஸ்ராலினிசத்தின் சீரழிவுடன் சேர்ந்து, பின்தங்கிய நாடுகளில் மக்களின் அடிப்படைத் தேவைகளைத் திருப்தி செய்யமுடியாத முதலாளித்துவ தேசியவாதத்தின் தோல்வி, சோசலிசத்தை அடைவது என்பது தனியாக ஒருபுறமிருக்க, சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் உள்ளே மார்க்சிசத்தின் அபிவிருத்தியைத் தடைசெய்ய குட்டிமுதலாளித்துவ தத்துவவாதிகளால், சிறப்பாக பப்லோவாதிகளால் முன்வைக்கப்பட்ட எல்லா மூலிகைகளுக்கும் மேலாக ட்ரொட்ஸ்கிசத்தின் பூரண தத்துவார்த்த வெற்றியைப் பறைசாற்றுகின்றது.

90. 1947-ல் இந்தியா துண்டாடப்பட்டது, தேசிய முதலாளித்துவம் ஏகாதிபத்தியத்துடன் கூட்டமைத்து ஜனநாயக தேசியப் போராட்டத்தைக் கருச் சிதைத்ததுடன் அடையாளமாயிற்று. இந்தப்பாணி அதனையே மீண்டும் மீண்டும் இடம்பெறச் செய்தது. ஆயுதப் போராட்டத்தின் தலையீட்டில் நேரடி காலனித்துவ ஆட்சி முடிவுற்ற அங்கெல்லாம், தேசிய முதலாளித்துவத்தினால் காலனித்துவத்தின் கசப்பான மரபுகளையும் பொருளாதார பின்னடைவுகளையும் இல்லாமற் செய்ய முடியவில்லை. குறைந்த ஏகாதிபத்தியத்தின் பொருளாதாரக் குரல்வளை விடுபட முடியாத வகையில் நெரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதானது, குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகள் என்றழைக்கப்படும் நாடுகளின் தப்பவியலாத கடன்பழுவில் இருப்பதில் காண முடிகிறது. பின்தங்கிய நாடுகளின் மக்கள் தொகையின் பல்வேறு தேசிய இனங்களுக்கிடையில் சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கு மாறாக, இன, மொழி மற்றும் மத ரீதியான குரோதங்கள் திட்டமிட்டு வேண்டுமென்றே தூண்டிவிடப் படுகின்றன. சுயநிர்ணய உரிமை மறுப்பின் வெளிப்பாடே இனவாதம், படுகொலைக்கான ஏற்பாடுகள் மற்றும் அரச ஒடுக்குமுறைகளாகும்.

91. பப்லோவாதிகள் சுயாதீனமான பாட்டாளி வர்க்கப் புரட்சித் தலைமையின் அபிவிருத்தியை இடைவிடாது எதிர்த்து வந்த வேளையில், தேசிய முதலாளித்துவம் தமது சொந்த நலன்களை பலப்படுத்திக்கொள்ள, ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களில் பரந்த மக்களின் தியாகங்களை சுரண்டிக் கொண்டது. இதுவே அல்ஜீரியா, பங்களாதேஷ், சிம்பாப்வே, மொசாம்பிக் போராட்டங்களில் வெளிப்பட்டது என்பதை எடுத்துக் கூறுவதற்கான சில உதாரணங்கள் மட்டுமேயாகும். ஈரானில் முதலாளித்துவ வர்க்கம், ஈராக்குடன் சகோதரர்களைக் கொல்லும் மரண யுத்தத்திற்கு புரட்சியினை இட்டுச் சென்றமை, பாரசீகவளைகுடாவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கரத்தை வலுப்படுத்தியது.

92. மிக அண்மைக் காலத்தில் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து ஒரு உறுதியான போராட்டத்தினை நடத்தும் தேசிய முதலாளித்துவத்தின் இயல்பான இயலாமையானது, பி. எல். ஓ, தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் நிக்கரகுவாவின் சாண்டினிஸ்டாக்களால் தெளிவாக படம்பிடித்துக் காட்டப்பட்டது. பாலஸ்தீனிய சுயநிர்ணயத்திற்கு எதிரான மிகக் கசப்பான எதிரியான, பிற்போக்கு அரசு முதலாளித்துவ வர்க்கத்தின் முந்தானையில் முடிச்சுப் போட்டுக் கொண்டுள்ள பி. எல். ஓ. ஆனது, காசா மற்றும் மேற்குக் கரையில் உள்ள இளைஞர்கள், தொழிலாளர்களது இயக்கத்தை பலஸ்தீன முதலாளித்துவம் ஏற்றுக் கொள்ளும் வரம்புகளுக்குள் கட்டுப்படுத்தி வைத்திருக்க முயன்றது. அரபாத்தின் கொள்கைகள் தேசிய இயக்கத்தினை மத்தியகிழக்கின் பாட்டாளி வர்க்கத்திடமிருந்து திட்டமிட்டு தனிமைப்படுத்தி வைக்கிறது.

93. சிறீலங்காவில் தமிழ் குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் மிகவும் தீவிரப் பிரிவினராக பிரதிநிதித்துவம் செய்யும் விடுதலைப் புலிகள், சுயநிர்ணய உரிமைக்கான ஒரு உறுதியான போராட்டத்தினை கொண்டு நடத்த தகுதியற்றதாக உள்ளனர். புலிகளின் அரசியல், இந்திய முதலாளித்துவத்தின் மீதான அவர்களுடைய ஆபத்து நிறைந்த பிரமைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இது இந்திய- இலங்கை ஒப்பந்தத்தை அவர்கள் அங்கீகரித்ததன் மூலம் உச்சக்கட்டத்தை அடைந்ததோடு தமிழ் மக்களை இன்றைய இக்கட்டான நிலைக்கு இட்டுச் சென்றது. புலிகள் இந்திய இராணுவத்தினால் வேட்டையாடப்படும் இன்றைய நிலையிலும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்கள் ராஜீவ்காந்தி மீதான நம்பிக்கையை இன்னும் பிரகடனப்படுத்துவதுடன், இந்தியப் பாட்டாளி வர்க்கத்திற்கு புறமுதுகு காட்டி வருகின்றனர். விடுதலைப் புலிகளின் குட்டி முதலாளித்துவத் தன்மையின் பிரதிவிளைவுகள், இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் மூலோபாய நலன்களைப் பேணுவதில் அவர்களை மிகத் தெளிவாய் படம்பிடித்துக் காட்டுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாடானது, அதன் மத்தியகுழு உறுப்பினரான திலகரால் கொடுக்கப்பட்ட பேச்சினில் சுருக்கமாகக் கூறப்பட்டது. அவர் பிரகடனப்படுத்தியதாவது; எமது விடுதலை இயக்கம் இந்தியாவின் நலன்களுக்கு எதிரானது அல்ல. தெற்காசியாவின் பிராந்திய வல்லரசு என்ற முறையில் அதன் அந்தஸ்தினை நிலைநாட்டும் இந்தியாவின் மூலோபாய அபிலாசைகளுக்கு நாம் எவ்விதத்திலும் எதிரானவர்கள் அல்லர். நாம் எப்போதும் இந்தியாவின் நேச சக்தியாக இயங்கி வந்துள்ளோம். அவ்வாறே தொடர்ந்தும் இயங்குவோம். உடன்படிக்கை இந்தியாவின் புவியியல்- அரசியல் நலன்களை ஈட்டிக்கொள்வதில் இலக்காகக் கொண்ட இந்திய - இலங்கை உறவுகளின் வரையறைக்குள் நின்றுகொண்டிருப்பின், நாம் எமது நிபந்தனையற்ற ஆதரவை இந்திய - இலங்கை ஒப்பந்தத்திற்கு வழங்குவோம்.''

94. இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் புவியியல் - அரசியல் நலன்களுக்கு விடுதலைப் புலிகள் சாஸ்டாங்கமாக வீழ்ந்து கும்பிடுபோடும் பாணி ஏரியஸ் திட்டம் நிகரகுவா சாண்டிஸ்டாக்களால் அங்கீகரிக்கப்படுவதில் எதிரொலித்தது. அது மத்திய அமெரிக்காவில் ஏகாதிபத்திய மேலாதிக்கத்தினை ஊர்ஜிதம் செய்யும் அரச வடிவங்களின் மீறத்தகாத தன்மையை ஏற்கின்றது. சான்டினிஸ்டாக்களின் வரலாறும், பரிணாமமும் முதலாளித்துவ தேசியவாதத்துக்கு பப்லோவாத அடிபணிவினை அடித்து நிரூபித்துள்ளது. ஆட்சிக்கு வந்த ஒரு தசாப்தத்தின் பின்னர், சாண்டினிஸ்டாக்கள் ஜனநாயகப் புரட்சியின் எந்தவிதமான அடிப்படைப் பணிகளையும் செய்யத் தவறிவிட்டனர். நிலச்சீர்திருத்தம் சம்பந்தமான விரிவான வேலைத்திட்டம் எதுவுமே கிடையாது நாட்டின் பொருளாதாரத்தின் பெரும்பாகம் இன்னமும் தனியார் உடமையாக இருக்கையில் சோசலிசத் தொழிலாளர் கட்சி நிகரகுவா ஒரு தொழிலாளர் அரசு என பிரகடனம் செய்கின்றது. இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் சாண்டினிஸ்டாக்கள் தொழிலாளர் வர்க்க வேலைநிறுத்தங்களை நசுக்குகையில் மனாகுவாவில் கொண்ட்ரா கலகக்காரர்களை சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். உண்மையில் கொண்ட்ரா தலைவர்களுடன் இவர்களில் பலர் ஒரு காலத்தில் சாண்டினிஸ்டா முன்னணியில் இருந்தவர்கள் - உறவுகள் புதிப்பிக்கப்பட்டதானது தேசிய முதலாளி வர்க்கத்தின் தீவிரவாத குட்டிமுதலாளித்துவவாத ஜனநாயகப் பிரிவினர் கூட தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீனமான இயக்கத்தினை எதிர்கொள்ளும் தருணத்தில் மிகவும் பிற்போக்கான முதலாளித்துவ வர்க்கப் பிரிவினருடன் கூட்டுச்சேர தயாராய் உள்ளமையை அம்பலப்படுத்துகிறது.

95. அமெரிக்காவில் அனைத்துலகக் குழுவுடன் அரசியல் ஐக்கியம் கொண்ட வேர்க்கஸ் லீக்- அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆத்திரமூட்டலுக்கு எதிராக நிகராகுவாவை சமரசத்திற்கு இடம்கொடாத வகையில் பாதுகாத்து வந்துள்ளது. உலக ஏகாதிபத்தியத்தின் மையத்தில் தனது தினசரி வேலைகளை நடத்துகின்ற ஒரு கட்சி என்ற முறையில் அனைத்து ஒடுக்கப்படும் தேசங்களதும், சிறப்பாக யங்கி ஏகாதிபத்தியத்துடன் நேரடியான கடும் மோதலுக்கு ஆளாகியுள்ள லத்தீன் அமெரிக்கா , கரீபியன் நாடுகளின் நலன்களைக் காக்கும் ஒரு விசேட பொறுப்பு வேர்க்கஸ் லீக்கின் தோளில் விழுகின்றது. மேலும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களுடனான பாட்டாளி வர்க்க ஐக்கியத்திற்கான போராட்டம் அமெரிக்கத் தொழிலாளர் வர்க்கத்தினுள்ளே புரட்சிகர வர்க்க நனவினை வளர்த்தெடுப்பதற்கான ஒரு தீர்க்கமான அங்கமாக விளங்குகிறது.- அமெரிக்கத் தொழிலாளர் வர்க்கம் அமெரிக்க ஐக்கிய நாடுகளினால் இழைக்கப்படும் ஒவ்வொரு ஏகாதிபத்திய காட்டுமிராண்டித் தனத்தையும் வெறுத்தொதுக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இருந்தபோதிலும் ஏகாதிபத்திய அடிமைத்தனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒடுக்கப்படும் நாடுகளை நிபந்தனையின்றி பேணுகையில் வேர்க்கஸ் லீக்கோ அல்லது அனைத்துலகக் குழுவின் எந்த ஒரு பகுதியோ அவற்றின் முதலாளித்துவத் தலைவர்களின் வேலைத் திட்டத்தினை அங்கீகரிக்க கடமைப்பட்டவை அல்ல. உண்மையில் எண்ணற்ற கசப்பான அனுபவங்கள், பாட்டாளி வர்க்க சோசலிசப் புரட்சியின் அடிப்படையில்தான் ஜனநாயகப் புரட்சியின் வெற்றி சாத்தியமாகும் என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளன.

96. உலக சோசலிசப் புரட்சி மூலோபாயத்தினை அடிப்படையாகக் கொண்ட ஒரு கட்சி என்ற முறையில் அனைத்துலகக் குழு தனியொரு வர்க்க நிலைப்பாட்டையே கடைப்பிடிக்கிறது. தேசிய முதலாளித்துவத்தின் எந்த ஒரு பிரிவினரின் கீழும் தொழிலாளர் வர்க்கத்தை கீழ்ப்படுத்துவதை நியாயப்படுத்தும் ''விதிவிலக்கான நிலைமைகள்'' எந்தவொரு நாட்டிலும் இருக்கப் போவதில்லை; இருக்கவும் முடியாது. கம்யூனிஸ்ட் அகிலத்தின் முதல் நான்கு காங்கிரஸ்களின் காலப்பகுதியில் (1919-22) பல நாடுகளில் இன்னமும் முதலாளித்துவ உறவுகள் அரிதாகவே வளர்ச்சி கண்டிருந்ததோடு, அதில் பாட்டாளி வர்க்கம் மக்கள் தொகையில் புறக்கணிக்கக் கூடிய தொகையினரையே கொண்டிருந்தபோது, லெனின் முதிர்ச்சியடையாத பாட்டாளி வர்க்கத்தினரிடையேயும் கூட அதன் சுதந்திரமான நலன்பற்றிய நனவினை விருத்திசெய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். ஏறத்தாழ 70 ஆண்டுகளின் பின்னர் ஒவ்வொரு கண்டத்திலும் ஏற்பட்டுள்ள முதலாளித்துவ உறவுகளின் பிரமாண்டமான வளர்ச்சிகளுக்கிடையே சகல ஒடுக்கப்படும் நாடுகளிலும் தேசிய முதலாளித்துவ வர்க்கம் அழுகி நாற்றமெடுத்ததை நிரூபித்த பரந்த வரலாற்று அனுபவங்களுக்கு இடையே, தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுதந்திரத்துக்கான போராட்டத்தில் இருந்து செய்யும் பின்வாங்கல்கள் அதனை நிராயுதபாணியாக்கி தோல்விகளைத் தயார் செய்வதற்கு மட்டுமே உதவும்.

97. தொழிலாளர் புரட்சிக் கட்சியின் (W.R.P) குத்துக்கரணம் நிரூபித்தது போன்று மத்திய கிழக்கில் தொழிலாளர் வர்க்க நலன்கள் காட்டிக்கொடுக்கப்பட்டமையானது, விடாப்பிடியான முறையில் பிரிட்டனிலேயே முதலாளித்துவ வர்க்கத்திற்கு சரணாகதி அடைவதற்கு இட்டுச் சென்றது. லிபியாவின் கடாபியுடனும், ஈராக்கில் சதாம் ஹுசைனுடனும் ஹீலி கொண்டிருந்த கொள்கையற்ற கூட்டுக்கள் உலக ஏகாதிபத்தியத்தின் அடிப்படை நலன்களுக்கே சேவகம் செய்தன. ஏகாதிபத்தியம் இந்த அல்லது அந்த ஆட்சியாளர்களுடன் என்னதான் முரண்பாடுகளைக் கொண்டிருப்பினும், பின்தங்கிய நாடுகளில் அதற்கு முக்கிய அச்சுறுத்தலாக விளங்கும் புரட்சிகர தொழிலாளர் வர்க்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கு இன்னமும் தேசிய முதலாளித்துவ வர்க்கத்திலேயே தங்கியுள்ளது.

98. அனைத்துலகக் குழுவும் அதன் பகுதிகளும் இப்பூகோளத்தின் ஒவ்வொரு பகுதியிலும் அனைத்துப் போராட்டங்களிலும் சர்வதேச புரட்சிகர வர்க்கமான தொழிலாளர் வர்க்கத்தின் வரலாற்று நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன. அவை எல்லாவித நிலைமையின் கீழும் ஏகாதிபத்தியத்தின் அனைத்து அரசியல் கைக்கூலிகளிடம் இருந்தும் தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் சுதந்திரத்தை நிலைநாட்டப் போராடுகின்றன.

99. 1985 ல் இருந்து அனைத்துலகக் குழு, பிரித்தானிய ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் முன்னாள் தலைவர்களான ஓடுகாலிகள் ஹீலி, பண்டா, சுலோட்டருக்கு எதிராக நடத்திய போராட்டத்தின் வரலாற்று முக்கியத்துவம் இங்குதான் தங்கியுள்ளது. தொழிலாளர் புரட்சிக் கட்சியுடன் ஏற்பட்ட பிளவானது, பப்லோவாத சந்தர்ப்பவாதத்துக்கு எதிரான அனைத்துலகக் குழுவின் புதுப்பிக்கப்பட்ட போராட்டத்தினை பிரகடனம் செய்தது. இதன் மூலம் நான்காம் அகிலத்தின் உள்ளே 1951 ஆம் ஆண்டின் மூன்றாம் காங்கிரசுடன் ஆரம்பமாகி நீண்டு வந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கான நிலைமைகளைத் தோற்றுவித்தது.

100. 1963 ஆம் ஆண்டின் மறு இணைப்பிற்கு எதிராகவும், அனைத்துலகக் குழுவினைப் பேணவும் சோசலிச லேபர் லீக் (1973 ல் தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP) எனப் பெயர்மாற்றப்பட்டது.) தலைமை தாங்கிய போராட்டத்திற்கு இடையே சோசலிச லேபர் லீக்கினதும், தொழிலாளர் புரட்சிக் கட்சியினதும் அரசியல் போக்கு 1960 களின் கடைப்பகுதியில் இருந்து பெரிதும் தேசியவாத, சந்தர்ப்பவாதப் பண்பினை எடுத்தது. பப்லோவாதத்திற்கு எதிரான அனைத்துலகக் குழுவின் போராட்டத்திலிருந்து பின்வாங்கிய சோசலிச லேபர் லீக்- தொழிலாளர் புரட்சிக் கட்சி பிரிட்டனில் புரட்சிக் கட்சியைக் கட்டுவதற்காக அனைத்துலகக் குழுவினை அமைப்பதனை அடிபணியச்செய்தது. இது எப்போதும் தேசிய பணிகளுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டதாக, திட்டவட்டமான தேசிய அழுத்தங்களுக்கான சந்தர்ப்பவாத அடிபணிவினை பிரதிபலித்தது. 1968 மே ஜூன் சம்பவங்களின் முக்கியத்துவம், அவை பிரிட்டனின் நடைமுறைவேலையில் ஏற்படுத்தும் தாக்கங்களின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டதே அன்றி (அதாவது ஒரு தினசரிப் பத்திரிகையை ஸ்தாபிதம் செய்தல்) தொழிலாளர் இயக்கத்தில் உள்ள எல்லாவித போக்குகளுக்கும் வகித்த பாத்திரங்களை முழுமையாக ஆய்வு செய்யக் கோரும் அனைத்துலகப் பாட்டாளி வர்க்கத்தின் ஒரு மூலோபாய அனுபவமாக மதிப்பிடப்படவில்லை.

101. இந்தப் பின்வாங்கல் எஸ். எல். எல் (SLL) தலைமையின் உள்ளேயான பப்லோவாதப் போக்குகளின் அபிவிருத்தியுடன் பிணைந்து கிடந்தது. 1967 அளவில் பண்டா ஹோ. சி. மின்- ஐ லெனினின் அரசியல் மறுபிறப்பு என பாராட்டியும் சீனாவில் செங்காவலர் (REDGARD) இயக்கத்துக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியும், நாசரின் முதலாளித்துவ தேசியவாத ஆட்சிக்கு எகிப்திய தொழிலாளர் வர்க்கத்தை அடிபணியக்கோரியும் வந்தார். ட்ரொட்ஸ்கிச அடிப்படைக் கொள்கைகள் மீதான தாக்குதல்களை எதிர்கொள்வதற்குப் பதிலாக ஹீலியும், சுலோட்டரும் புரட்சிகர இயக்கத்தின் வேலைத்திட்டம் பற்றிய பிரச்சினைகள் சிறியளவு முக்கியத்துவம் கொண்டவை என்ற நிலைப்பாட்டை அபிவிருத்தி செய்தனர். எஸ். எல். எல். டபிள்யூ. ஆர். பி. தலைவர்களின்படி ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்தை அபிவிருத்தி செய்வதைவிட ''பிரச்சாரவாதத்துக்கும்'', ''கருத்தியல் சிந்தனாமுறைகளுக்கும்'' எதிராகப் போராடுவதே அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

102. 1971 ஐ தொடர்ந்து சோசலிச லேபர் லீக்- தொழிலாளர் புரட்சிக் கட்சி தலைவர்களால் அதிகரித்த கர்ண கடூரத்துடன் முன்வைக்கப்பட்ட இந்தக் கருத்துருவின் முக்கியமான உள்ளடக்கம், நான்காம் அகிலத்தை எதிர்கொண்டுள்ள ஆபத்து அரசியல் தனிமைப்படுத்தலாக இருந்தது என்பதாகும். மேலும் ஹீலி, பண்டா, சுலோட்டர் ஆகியோர் ட்ரொட்ஸ்கிச அடிப்படையில் கொள்கைகளைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றலே இந்த தனிமைப்படுத்தலுக்கான காரணம் என்றனர். அது ''கோட்பாட்டிற்கும் நடைமுறைக்கும் உள்ள ஐக்கியத்தினை உண்மையாக விளங்கிக் கொள்வதற்கு ஒரு தடைக்கல்லாக இருப்பதாக'' அவர்கள் தெரிவித்தனர். அது ''ஒரு பிரச்சாரவாத வாழ்வை நியாயப்படுத்தியது.'' அது ''ஒருபோதும் உண்மையான புரட்சிகர நடைமுறைக்கான வழிகாட்டுதலாக அழைக்கப்படவில்லை,'' பதிலாக அது உயிர்வாழ்ந்து கொண்டிருக்கும் வர்க்கப் போராட்ட இயக்கத்தை புரிந்துகொள்வதற்குத் தடையான, மாற்றத்திற்குத் தடையான போலி ஒப்பந்த மூடுதிரையை இப்பொழுது வழங்குகிறது'' என்றனர்.

103. நான்காம் அகிலம் எதிர்கொள்ளும் பேரபாயம், தனிமைப்படல் என்ற நிலைப்பாடானது, நான்காம் அகிலத்தினுடைய கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டத்துடன் துண்டிப்பது அவசியம் என்ற முடிவிற்கு அவர்களை இட்டுச் சென்றது. 1972க்குப் பின்னர் வரையில் இருந்து சுலோட்டர் ஐயுறவாதத்துடன் கேட்டிருந்தார் ''நெருக்கடிகளின் விளைவுகளினாலான அரசியல் அபிவிருத்திகளில் தொழிலாளர் வர்க்கம் ஆட்சியதிகாரத்துக்கு வருவதற்கும், சோசலிசத்தைக் கட்டுவதற்கும் அதற்கு தலைமை தாங்கக்கூடிய புரட்சிகரக் கட்சிகளை உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் ட்ரொட்ஸ்கிச சக்திகளின், ட்ரொட்ஸ்கிசத்தின் வேலைத்திட்டங்களை வெறுமனே கொண்டு வருவதால் மட்டுமே கட்டியெழுப்ப முடியுமா?'' அவரது பதில் அழுத்தமாக இல்லை என்பதாக இருந்தது. 1979ல் பண்டாவினால் எழுதப்பட்டு, பின்னர் அனைத்துலகக் குழுவின் பெயரால் ஒரு கட்சி அறிக்கை விநியோகிக்கப்பட்டது. அதில் தொழிலாளர் புரட்சிக் கட்சி வலியுறுத்தியதாவது, ''வர்க்கப் போராட்டத்தின் அபிவிருத்திகளுக்கு பிரச்சார லேபல்களை இட்டு அதன் காரணமாக அதனுடைய சாரத்தை உண்மையாக பிரித்தறிவதற்குத் தடையாக இல்லாதவாறு கட்சி ஊழியர்கள் கட்டாயம் பயிற்றுவிக்கப்பட வேண்டும். ஆனால் பதிலாக அவர்கள் அபிவிருத்தியடைந்து வரும் புரட்சிகர யதார்த்தம் கோருகின்ற ஒரு போராடும் உணர்வுமிக்க விழிப்புணர்வை அபிவிருத்தி செய்ய வேண்டும்.'' என்றது.

104. எல்லாவித அரசியல் போக்குகளையும், இயக்கங்களையும் அவை பிரதிநிதித்துவம் செய்யும் சமூக சக்திகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யும் பாரம்பரிய மார்க்சிச விதிமுறையினையே தொழிலாளர் புரட்சிக் கட்சியின் சந்தர்ப்பவாதிகள் ''வர்க்கப் போராட்டத்தின் அபிவிருத்தியின் மேல் பிரச்சார லேபிள்களை ஒட்டுதல்'' என இழிவுபடுத்தினர். இந்த வழியினால் மட்டுமே தொழிலாளர் வர்க்கத்தின் சதந்திரமான மூலோபாய தந்திரோபாய வழிமுறைகளை நிர்ணயம் செய்ய முடியும். மறுபுறத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக்குழுவின் உள்ளே ஹீலிவாத சந்தர்ப்பவாதப் பிரிவு, பாட்டாளி வர்க்கத்தினதும், சர்வதேச மார்க்சிச இயக்கத்தினதும் அத்தியாவசியமான வரலாற்று அனுபவங்களை கணக்கில் எடுக்காமல் ''வளர்ச்சியடையும் புரட்சிகர யதார்த்தம் வேண்டுவது என்ன?'' என்பதை தீர்மானித்துக் கொள்ளக்கூடியதாக இருக்கவேண்டும் என்றனர்.

105. 1985 - 86 பிளவு வரையிலான தசாப்தத்தில் தொழிலாளர் புரட்சிக் கட்சித் தலைவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட சகலவிதமான காட்டிக்கொடுப்புக்களுக்கும் இது அடிப்படையாக விளங்கிற்று; நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டினை நிராகரித்தல், மத்திய கிழக்கு, ஆபிரிக்க முதலாளித்துவ தேசியவாத ஆட்சியாளர்களுடனான கூட்டு, பிரிட்டனில் தொழிற்சங்க, தொழிற்கட்சி அதிகாரத்துவத்துக்கு அடிபணிவு, மற்றும் அனைத்துலகக் குழுவின் பகுதிகளை அழிப்பதற்கான வரிசைக் கிரமமான முயற்சிகள் ஆகியவற்றுக்காகும். ஒரு நீடிக்கப்பட்ட காலப்பகுதியில் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் தலைவர்கள் இன்றைய சகாப்தத்தின் முக்கிய பண்பு தோல்வி காணாத தொழிலாளர் வர்க்கத்தின் தோற்றமே என பிரகடனம் செய்வதன் மூலம் உலகப்பாட்டாளி வர்க்கத்தின் மூலோபாய அனுபவங்கள் பற்றிய எந்தவொரு மார்க்சிச மதிப்பீட்டையும் தடைசெய்ய முயன்றனர். இந்த பிசுபிசுத்த சொற்றொடரோடு தொழிலாளர் புரட்சிக் கட்சியின் சந்தர்ப்பவாதிகள், பாட்டாளி வர்க்கப் புரட்சித் தலைமைக்கான நெருக்கடியை குலைத்ததோடு, அதனிடத்தில் வர்க்கப் போராட்டம் பற்றிய முற்றிலும் அருவமான மற்றும் திருப்தியான ஒரு கருத்துருவை இருத்தினர். தொழிலாளர் வர்க்கத்தின் ஒவ்வொரு நிகழ்வும், அவற்றின் பெறுபேறுகளைப் பொருட்படுத்தாமல் தோல்விகாணா தொழிலாளர் வர்க்கத்திற்கு ஒரு உதாரணம் என தம்பட்டம் அடிக்கப்பட்டது. உண்மையில் இக்கோட்பாடு தொழிலாளர் வர்க்கத்திற்கு மார்க்சிச முன்னணிப்படை ஆற்றவேண்டிய சுதந்திரமான பங்கைக் குறைக்கின்ற அதேவேளையில் ஸ்ராலினிஸ்டுக்கள், சமூக ஜனநாயகவாதிகள், முதலாளித்துவ தேசியவாத தீவிரவாதிகளின் குற்றங்களை நியாயப்படுத்தவும், மூடிமறைக்கவுமே சேவை செய்தது.

106. 1985-86 அனைத்துலகக் குழுவுக்கும், தொழிலாளர் புரட்சிக் கட்சியின் சந்தர்ப்பவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட பிளவில் இருந்த ஓடுகாலிகளின் அனைத்துப் பிரிவுகளும் ட்ரொட்ஸ்கிசத்திலிருந்து பூரணமாக துண்டித்துக் கொண்டனர். ஹீலி தம்மை மிகையில் கொர்பச்சேவின் ஆதரவாளராக பிரகடனம் செய்ததோடு, அக்டோபர் புரட்சியின் 70 வது ஆண்டு நிறைவு ''கொண்டாட்டங்களில்'' கலந்துகொள்ள அதிகாரத்துவத்தினால் மாஸ்கோவுக்கு அழைக்கப்பட்டார். கிரீசில் சவாஸ் மைக்கேலின் தலைமையிலான அவரது சகாக்கள் கொர்பச்சேவை ஒட்டுமொத்தமாக புகழாரம் சூட்டுதலை, உள்நாட்டில் ஸ்ராலினிஸ்டுகளின் மக்கள் முன்னணி அரசியலில் நேரடி பங்கு கொள்வதன் மூலம் இணைத்துக் கொண்டனர். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அரசியல் ஆளுமையை நிராகரிப்பதற்கான ஒரு சாக்குப் போக்காக தொழிலாளர் புரட்சிக் கட்சியில் பிரசுரிக்கப்பட்ட அனைத்துலகக் குழுவிற்கு எதிரான ஒரு பகிரங்க கண்டனத்தினை எழுதியதன் பின்னர் பண்டா தொழிலாளர் புரட்சிக் கட்சியில் இருந்து பிரிந்தார். அவர் ட்ரொட்ஸ்கியையும் கண்டனம் செய்ததோடு, தம்மை ஜோசப் ஸ்ராலினின் ஒரு தீவிர ஆதரவாளனாகவும் பிரகடனம் செய்து கொண்டார். இன்று சுலோட்டரினால் தலைமை தாங்கப்படும் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் மிச்சசொச்சங்களை, உடனடியாக அனைத்து பப்லோவாதக் குழுக்களுக்குள்ளும் பழையதும் வர்க்க சகவாழ்வைக் கடைப்பிடித்தலில் மதிப்பிழந்தவர்களுமான மரினோவாதிகளுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு வழிவகுத்தது.

107. 1985- 86ன் பிளவில் இருந்து இடம்பெற்று வரும் சம்பவங்கள் புரட்சிகர இயக்கத்தின் உள்ளே சந்தர்ப்பவாதத்துக்கு எதிரான போராட்டத்திற்கும் வர்க்கப் போராட்டத்தின் வரலாற்று அபிவிருத்திக்கும் இடையேயான ஆழ்ந்த உறவை மீண்டும் எடுத்துக்காட்டியது. பிளவானது நான்காம் அகிலத்தினுள் பிரதிபலித்த புறநிலைவர்க்க சக்திகளின் போராட்டத்தின் விளைவாக இருந்தது. 1938ல் ட்ரொட்ஸ்கியால் ஸ்தாபிக்கப்பட்ட நான்காம் அகிலம், நிகழ்வுகளின் அழுத்தங்களின் கீழ் 1963 அளவில் ஒரே சீரான தன்மையான அரசியல் இயக்கமாக இல்லாதிருந்தது. 1963ல் அமெரிக்க சோசலிசத் தொழிலாளர் கட்சி (SWP) யின் சீரழிவுக்கு எதிராக எஸ்.எல்.எல் ஆல் பாதுகாக்கப்பட்டது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக்குழு 1985ம் ஆண்டளவில் சமரசம் செய்ய முடியாத வர்க்கப் போக்குகளுக்கிடையில் துருவமுனைப்படுத்தப்பட்டிருந்தது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் நீண்ட மரபுரிமைகளை அடிப்படையாகக் கொண்டிருந்தமையாலேயே, பிரித்தானிய சந்தர்ப்பவாதிகளின் காட்டிக்கொடுப்புக்களை எதிர்க்க முடிந்தது. பிளவானது தொழிலாளர் புரட்சிக் கட்சியை இருளடையச் செய்த அதேவேளை, அது அனைத்துலகக்குழுவை பெருமளவில் பலப்படுத்தியதோடு, மார்க்சிசக் கோட்பாட்டின் ஒரு உண்மையான மறுமலர்ச்சிக்கும் இட்டுச் சென்றுள்ளது.

108. தொழிலாளர் புரட்சிக் கட்சி ஓடுகாலிகளுக்கு எதிரான போராட்டத்தினை அனைத்துலகக் குழு நடத்துகையில் நான்காம் அகிலத்துக்குப் பேராபத்து 'பிரச்சாரவாதம்' அன்றி சந்தர்ப்பவாதமே என்ற அடிப்படை உண்மையை மீண்டும் ஊர்ஜிதம் செய்தது. இங்கு முன்னைய பண்பானது, வேலைத்திட்டத்தை மிதமிஞ்சிய வகையில் வெறுமனே காட்சிக்கு வைப்பதை நோக்கிய சரிவாகும். இப்பலவீனம் கல்வி, வெகுஜன இயக்கத்தின் உள்ளேயான அனுபவத்தின் ஊடாகக் களையப்பட முடியும். பின்னையதோ பலம் வாய்ந்த சமூக சக்திகளில் வேரூன்றிய அரசியல் போக்காகும். இது தொழிலாளர் வர்க்கத்தின் மீதும் மற்றும் புரட்சிகர முன்னணி மீதும் ஏகாதிபத்திய அழுத்தத்தினை பிரதிபலிக்கின்றது. பிரச்சாரவாதத்தினை நோக்கிச் சரிந்துவிட்ட தோழர்கள்பால் சலுகை காட்டாத போதிலும், கட்சி பொறுமையை கடைப்பிடிக்கும் வேளையில் சந்தர்ப்பவாதத்தின் ஒவ்வொரு வெளிப்பாடு சம்பந்தமாகவும் அது ஈவிரக்கமற்ற பகைமைப் போக்கினைக் கடைப்பிடிக்கிறது.

109. 1985 - 86 பிளவு நான்காம் அகிலத்தின் அபிவிருத்தியில் ஒரு வரலாற்று மைல்கல் என்பதில் எந்தவொரு கேள்விக்கும் இடமில்லை. இது 1953ல் அனைத்துலகக்குழு நிறுவப்பட்டதில் இருந்து பப்லோவாத சந்தர்ப்பவாதத்துக்கு எதிராக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தினால் தொடுக்கப்பட்ட நீண்ட போராட்டத்தின் உச்சக்கட்டமாகும். பப்லோவாத சந்தர்ப்பவாதத்தினால் தோற்றுவிக்கப்பட்ட நீண்டகால ஐக்கியமின்மையும், தடுமாற்றமும் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. ''உலகம் முழுமையும் உள்ள அனைத்துவித உண்மையான ட்ரொட்ஸ்கிஸ்டுகளையும் அதாவது புரட்சிகர மார்க்சிஸ்டுகளை அனைத்துலகக்குழுவின் பதாகையின் கீழ் கொண்டு வருவதற்கான நிலைமைகள் உருவாகியுள்ளன.

110. ஸ்ராலினிசம், சமூக ஜனநாயகம் மற்றும் பப்லோவாத சந்தர்ப்பவாதம் ஆகியவற்றினது இணைந்த காட்டிக்கொடுப்புக்கள், பிரெட்டன் வூட்ஸ் இன் சரிவினால் தூண்டிவிடப்பட்ட மிக மோசமான நெருக்கடி காலப்பகுதியில் நின்றுபிடிப்பதற்கும் உலக முதலாளித்துவ சமபல நிலையை ஸ்தாபிப்பதற்கும் அவசியமான அரசியல், பொருளாதார கொள்கைகளை தயார் செய்யவும் அனைத்துலக முதலாளித்துவ வர்க்கத்திற்கு நிலைமைகளை உருவாக்கிக் கொடுத்தது. பெட்ரோ- டாலர்களின் மறுசுற்றோட்டம் என்ற தீர்க்கமான பொறிமுறையின் மூலம் கலைப்பு நெருக்கடி அச்சுறுத்தலிலிருந்து மீளமுடிந்தது. பொருளாதாரப் பின்னடைவுக்கு முடிவுகட்டவும், உலக வர்த்தகத்தை விரிவுபடுத்தும் பொருட்டும் வங்கி கடன்கொடுப்புக்களை பிரமாண்டமாக அதிகரிக்க அங்கீகாரம் அளிக்கப்பட்டது. எவ்வாறெனினும் 1973-75 பொருளாதார பின்னடைவில் இருந்து தற்காலிகமாக விடுபடமுடிந்த போதிலும் உலக முதலாளித்துவத்தின் மிக முக்கியமான புள்ளிவிபரங்கள் பிரெட்டன் வூட்ஸ் சகாப்தத்தின் செழிப்பு நிலைமைகளுக்கு திரும்பவே இடமில்லை என்பதைச் சுட்டிக்காட்டின. 1970களின் கடைசிப்பகுதிகளில் பணவீக்க அதிகரிப்பு வீதத்தையும், குறைந்த வளர்ச்சி வீதத்தையும் குறிக்கும் பொருட்டு 'ஸ்டாக்பிளேசன்' (STAGFLATION-பணவீக்கமும் தேக்கமும் இணைந்த) என்ற பதம் புழக்கத்துக்கு வந்தது.

111. இலாபவீதம் சம்பந்தமான புள்ளிவிபரங்கள் மிகவும் முக்கியம் வாய்ந்தவை. இவை 1970கள் பூராகவும் தொடர்ந்து வீழ்ச்சி கண்டன. 1974ன் பின்னர் ஐரோப்பா, அமெரிக்கா இரண்டிலும் லாபவீதம் கடுமையாக வீழ்ச்சி கண்டன. 1976 அளவில் முதலீட்டு மூலதனம் மீதான சராசரி லாபவீதம் 9.2% ஆகும். 1966ல் இது 13.4% ஆக இருந்தது. அமெரிக்காவில் நிதியல்லாத கம்பனிகளின் லாபவீதம் 1963 - 66ல் 15.5%-ல் இருந்து 1967 - 70ல் 12.7% ஆகவும் 1971 - 74ல் 10% ஆகவும் 1978ல் 9.7% ஆகவும் வீழ்ச்சி கண்டது. 1965-ல் இலாபங்கள் தேசிய வருமானத்தின் 14% ஆக விளங்கின. 1970 அளவில் அவை 8.8% வீழ்ச்சி கண்டது. 1980 ல் புள்ளி 8.2% ஆக இருந்தது, 1982ல் 6.7% குறைவாக வீழ்ச்சியடைந்தது.

112. இலாபவீதத்தின் வீழ்ச்சி, சுருள்பணவீக்கம், டாலர் மீதான அனைத்துலக நம்பிக்கையின் சரிவினை எதிர்கொண்ட அமெரிக்க முதலாளித்துவ வர்க்கம், 1970களின் கடைசிப்பகுதியில் தொழிலாளர் வர்க்கத்தின் வாழ்க்கைத்தரங்களின் மேல் நேரடித் தாக்குதலை நடத்துவதைவிட மாற்றுவழி இல்லை என்ற முடிவுக்கு வந்தது. 1979ல் கார்ட்டர் நிர்வாகம் பால்வாக்கரை சமஷ்டி ரிசர்வ் வங்கியின் தலைவராக நியமனம் செய்தது. அவர் உடனடியாக பயங்கரமான சிக்கன கொள்கைகளை அமுல் செய்யத் தொடங்கினார். இரண்டாம் உலகப்போரின் பின்னர் இருந்து, தொழிலாளர் வர்க்கத்துக்கு எதிராக நீடித்த படுமோசமான தாக்குதலை நடத்தும் பொருட்டு, முதலாளித்துவத்தால் பயன்படுத்திக்கொள்ளப்பட்ட பொருளாதாரப் பின்னடைவினை ஒரு தூண்டும் தேவைக்காக வட்டிவீதங்கள் வரலாற்றின் மட்டங்களுக்கு உயர்த்தப்பட்டன. ஒருசில மாதங்களுக்குள் ஐரோப்பாவிற்கும் பொருளாதார பின்னடைவு பரவியது. 1983ல் வேலையற்றோர் எண்ணிக்கை 1975ல் இருந்ததைக் காட்டிலும் இரண்டு மடங்காகியது.

113. 1980 நவம்பரில் றீகன் தெரிவு செய்யப்பட்டமை அமெரிக்காவில் தொழிலாளர் இயக்கத்துக்கு எதிரான உக்கிரமான தாக்குதலை சமிக்ஞை காட்டியது. எதிர்ப்புக்காட்ட மாட்டோம் என்ற வாக்குறுதியை ஏ. எப். எல் - சி. ஐ. ஓ. (AFL- CIO) விடம் பெற்ற ரேகன் நிர்வாகம், கார்ட்டர் நிர்வாகத்தினால் தயார் செய்யப்பட்ட அவசரகால அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு 1981, ஆகஸ்டில் 13,000 விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களை ஒரேயடியாக வேலைநீக்கம் செய்தது. தொழிலாளர் வர்க்கத்தின் கடந்தகாலத் தேட்டங்களைக் கட்டிக்காப்பது பற்றிய எந்தவிதமான பாவனையையும் கூட அதிகாரத்துவம் கைவிட்டதால் தொழிற்சங்க இயக்கத்தினை அடியோடு துடைத்துக்கட்டுவது தொடர்ந்தது.

114. தொழிலாளர் வர்க்க எதிர்ப்பின் ஒவ்வொரு வடிவத்தினையும் முறையாக நாசப்படுத்தும் பொருட்டு ஏ. எப். எல்- சி. ஐ. ஓ. தொழிற்சங்க இயக்கத்தினை துடைத்துக்கட்ட தலைமைதாங்கத் தொடங்கியது. இது தொழிற்துறை சார்ந்த ஒப்பந்தங்களை ஒழிப்பதை வரவேற்றது. இருந்துகொண்டிருக்கும் உடன்படிக்கைகளை இரத்துச் செய்ய இணங்கியது. கூலிவெட்டுக்கும், ''திரும்பக்கொடு'' என்பது போன்ற கணக்கற்ற எண்ணிக்கையுடைய கோரிக்கைகளுக்கு அனுமதியளித்தது. மற்றும் பல எண்ணிக்கையில் தொழிற்சாலைகள் மூடலுக்கு ஆர்வத்துடன் துணைபோனது. தொழிற்சங்க தலைமை நடைமுறையில் அதனை கூட்டுத்தாபன நிர்வாகத்தின் ஒழுங்கமைப்புக்குள் ஒருங்கிணைத்துக் கொள்ளுதலை ஏற்றுக்கொண்டது. அதிகாரத்துவம் தனது வேலையை முற்றுமுழுதாக நிறைவேற்றுவதால், பெரிய கூட்டுத்தாபனங்கள் ஆயிரக்கணக்கான நடுத்தர நிர்வாகிகளை வேலைநீக்கம் செய்து, அவர்களின் முன்னைய மேற்பார்வை வேலைகளை தொழிற்சங்க அதிகாரிகளிடம் ஒப்படைப்பதைச் சாத்தியமாக்கியது. பெரிய அமெரிக்க கூட்டுத்தாபனங்களால் சமீபத்தில் வெளியிடப்பட்ட உயர்ந்த லாபங்கள் தொழிலாளர் அதிகாரத்துவத்தினால் சாத்தியமாக்கப்பட்ட பெருமளவில் அதிகரித்த சுரண்டல் மட்டத்தினைப் பிரதிபலிக்கின்றது. பெரும்பாலான கம்பனிகளில் நஷ்டத்திலிருந்து லாபத்துக்கு இடம்பெயர்வதில், விற்பனை அதிகரிப்பு அல்ல செலவில் வெட்டுதலே ஒரு பெரும் காரணியாக விளங்குகிறது. 1980 க்கும் முன்னரைவிட 24% குறைவான விற்பனையில் மோட்டார் கம்பெனிகள் தற்போது லாபம் ஈட்டுகின்றன. 1970 ல் கூலிகளும் சம்பளங்களும் தேசிய வருமானத்தில் 75.4% உள்ளடக்கியிருந்தன. 1986- ல் அந்தப்புள்ளிகள் 61% ஆக வீழ்ச்சியுற்றன.

115. 1979-80ல் அமெரிக்க முதலாளித்துவத்தினால் மேற்கொள்ளப்பட்ட கொள்கைகள், அனைத்துலக மட்டத்தில் ஒரு வர்க்க ஆட்சி விதிமுறையில் ஒரு மாற்றத்தை சமிக்ஞை செய்தது. 1979 மே மாதத்தில் தாட்சர் தேர்ந்து எடுக்கப்பட்டமை, தொழிலாளர் வர்க்கத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதை இலக்காகக் கொண்ட நீடித்த உக்கிரமான ஒரு எதிர்த்தாக்குதலின் ஆரம்பத்தையும், இரண்டாம் உலகப்போரின் பின்னர் உருவாக்கப்பட்ட சமூகநல அமைப்புக்களை ஒழித்துக்கட்டுவதையும் ஏககாலத்தில் குறித்து நின்றது. பிரான்சில் ஸ்ராலினிச அமைச்சர்கள் நால்வரைக்கொண்ட ''சோசலிச'' மித்திரன் அரசாங்கம், ஒரு பகட்டான தீவிரவாதத்தை காட்டிய பின்னர், ரேகனின் பொருளாதாரக் கொள்கைகளில் இருந்து பேதம் காணமுடியாத கொள்கைக்குத் திரும்பியது. ஹெல்முட் கோல் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜேர்மனியிலும் இத்தகைய ஓர் அபிவிருத்தி ஏற்பட்டது. ரேகனிச ''சீர்கேடுகளின்'' ஐரோப்பிய சாரச் சுருக்கமானது வெறிபிடித்த ''தனியார்மயமாக்கல்'' பிரச்சாரம் தேசியமயமாக்கப்பட்ட தொழிற்துறைகளை சிதறடிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. 1979 - 1988க்கு இடையே போர்த்துக்கல் முதல் கிரீஸ் வரையிலான ஐரோப்பிய அரசாங்கமும் சமூக சீர்திருத்தல்வாதம், வர்க்க சமரசக் கொள்கைகளை நிராகரித்தன. இப்போக்கு அமெரிக்காவுடனும், ஐரோப்பாவுடனும் மட்டும் கட்டுப்பட்டு நின்றுவிடவில்லை. ஆஸ்திரேலியாவில் கவுக்கின் கீழும், நியூசிலாந்தில் லாங்கேயின் கீழும், சமூகஜனநாயக அரசாங்கங்கள், தடையற்ற முதலாளித்துவ சுரண்டல்களுக்கு எதிராக தொழிலாளர் வர்க்கத்தினால் அமைக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட தடைகளைக்கூட தகர்க்கின்றனர். சர்வதேச நாணய நிதியினதும், உலகவங்கியினதும் சாட்டையின் கீழ் பொருளாதார ரீதியில் பின்தங்கிய நாடுகள் கூட பெப்ரஸ்கோர்டேராவின் ஈக்குவடோர் மற்றும் சீகாவின் ஜமைக்கா முதல் ஜெயவர்த்தனேயின் இலங்கை மற்றும் காந்தியின் இந்தியா வரை ரேகன் நிர்வாகத்தின் கொள்கைகளை பின்பற்ற முயற்சிக்கின்றன.

116. அனைத்துலகத் தொழிலாளர் இயக்கத்தின் வெளிப்படையான நெருக்கடி, முதலாளித்துவப் பிரச்சார வாதிகளால் முதலாளித்துவத்தின் புதிய பொற்காலம் எனப் பிரகடனப்படுத்துவதற்காக கைப்பற்றப்பட்டது. ஆனால் வறுமையின் பெரும் வளர்ச்சிக்கு இடையேயும் முதலாளித்துவ வர்க்கத்தினால் முழு முதலாளித்துவ முறையினதும் உலக நெருக்கடியில் இருந்து விடுவித்துக்கொள்ள முற்றிலும் முடியாது போயிற்று உலகளவில் முதலாளித்துவ வர்க்கம் முகம்கொடுக்கும் நெருக்கடியானது வெறும் கற்பனையல்ல, ஒரு வரலாற்றுரீதியானதும் ஒழுங்குமுறையான பண்பைக் கொண்டுள்ளது.

117. 1970களின் இலாபவீதத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியும் பொதுவான பொருளாதார தேக்கநிலையும் நாடுகடந்த கூட்டுத்தாபனங்களின் செயலில் திடீர் வளர்ச்சிக்கு உந்துதலைக் கொடுத்தது. இதன் விளைவாக உலகச் சந்தை முன்னொருபோதும் இல்லாத விதத்தில் இணைக்கப்பட்டு உற்பத்தியும் சர்வதேசமயமாக்கப்பட்டது. அனைத்து தேசியப் பொருளாதாரங்களும் அமெரிக்கா உட்பட, உலகப் பொருளாதாரத்தின் முழுமையானதும் தீவிரமானதுமான மேலாதிக்கத்திற்கு ஆட்பட்டமை நவீன வாழ்வின் ஒரு அடிப்படை உண்மையாகும். ஒரு இணைந்த சுற்றுவழிகளின் கண்டுபிடிப்புடனும் பூரணத்துவத்துடனும் கூடிய விதத்தில் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் செய்தித்தொடர்புச் சாதனங்களில் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளன. அவை பதிலாக, பூகோளத்தின் பொருளாதார ஒருங்கிணைப்பு வழிமுறைகளை துரிதப்படுத்தியுள்ளன. ஆனால் இந்தப்பொருளாதார தொழில்நுட்ப அபிவிருத்திகள் முதலாளித்துவத்திற்கு புதிய வரலாற்று சாலைகளைத் திறப்பதற்கு மாறாக, உலகப் பொருளாதாரத்துக்கும் முதலாளித்துவ தேசிய அமைப்பு முறைக்கும் இடையேயும் சமூக உற்பத்திக்கும் தனிச்சொத்துடைமைக்கும் இடையேயும் அடிப்படையான முரண்பாடுகளை வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு தீவிரமாக்கியுள்ளன.

118. பிரமாண்டமான நாடுகடந்த கூட்டுத்தாபனங்களின் மற்றும் உற்பத்தி பூகோளமயமாக்கப் பட்டதன் தோற்றமானது பிரிக்கமுடியாதவாறு, புரட்சிகரத் தாக்கங்களைக் கொண்ட மற்றுமோரு காரணியுடன் இணைந்து கொண்டுள்ளன. அமெரிக்கா தனது உலகப் பொருளாதார மேலாதிக்கத்தினை சார்பு ரீதியிலும் முழுமையாகவும் இழந்தமை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலக அந்தஸ்தில் ஏற்பட்ட இந்த வரலாற்று மாற்றம் அமெரிக்காவை உலகின் முக்கிய கடன் கொடுப்பாளர் என்ற நிலையில் இருந்து மாபெரும் கடனாளி என்ற நிலைக்கு மாற்றியதன் மூலம் வெளிப்பாடாயிற்று. இது தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களில் ஏற்பட்ட பெரும் வீழ்ச்சிக்கான காரணமாக அடிப்படையைக் கோடிட்டுக் காட்டியதோடு, அமெரிக்காவில் புரட்சிகர வர்க்க மோதுதல்களுக்கான காலப்பகுதிக்கும் கட்டாயம் இட்டுச் செல்கின்றது.

119. அமெரிக்காவின் மேலாதிக்கத்தின் கீழ் மறு நிர்மாணம் செய்யப்பட்ட யுத்தத்துக்குப் பிந்திய உலகமுதலாளித்துவத்தின் முழு பொருளாதார மற்றும் பூகோள அரசியல் கட்டமைப்பின் சீர் செய்ய முடியாத தகர்வானது, ஜப்பான் பலம்வாய்ந்த தொழிற்துறை சக்தியாகவும் பெரும் மூலதன ஏற்றுமதியாளராகவும் எழுச்சி கண்டதைக் காட்டியது. இது அமெரிக்க முதலாளித்துவத்தை பூகோளத்தின் ஒவ்வொரு மூலையிலும் சவால் செய்கின்றது. அமெரிக்காவிற்கும், ஜப்பானுக்கும் இடையேயான மோதல்தான் பெரிதும் வெடிக்கும் தன்மையுடையதாய் இருந்தாலும், அது ஏகாதிபத்தியவாதிகளுக்கிடையே மோசமடைந்து செல்லும் குரோதத்தின் ஒரு வெளிப்பாடு மட்டும் ஆகிவிடாது. ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கம் பொருளாதார சமூகத்தை ஜப்பானிய, அமெரிக்க மூலதனம் இரண்டையும் சவால் செய்யவல்ல ஒரு வர்த்தக நிதி கூட்டாக மாற்றம் செய்ய முயன்று வருகையில், யுத்தத்தின் பிந்தைய ''அட்லாண்டிக் கூட்டு'' அடியோடு தகர்ந்து வருகிறது. 1992 களில் தனியொரு ஐரோப்பியச் சந்தையை நிறுவும் திட்டங்களின் முக்கியத்துவம் இதுவே ஆகும்.

120. மாபெரும் புரட்சிகர முக்கியத்துவமுடைய நான்காவது காரணி ஆசிய பசுபிக் கரையோர பொருளாதாரங்களின் அசாதாரணமான துரித அபிவிருத்தியாகும். நிலைத்திருக்க வைக்க முடியாத ஏற்றுமதி சந்தைகளில் முற்றிலும் தங்கியுள்ள பொருளாதார நிலையைக் கொண்ட தேசிய முதலாளித்துவத்திற்கெதிரான போராட்டத்தில் தள்ளப்பட்டுவரும் பரந்த தொழிலாள வர்க்கத்தினைத் தோற்றுவித்துள்ளது. தென்கொரிய தொழிலாளர் வர்க்க இயக்கம் இளையதாயினும் பலம்வாய்ந்த தொழில்துறைப் பாட்டாளி வர்க்கம் படைப்பிரிவுகளாக ஆசியா முழுமையும் உலகப்புரட்சி அரங்கினுள் நுழைவதைக் குறிக்கிறது. ஏகாதிபத்தியத்தின் மூலதன ஏற்றுமதியினால் தொழிலாளர் வர்க்கத்தின் புதியதும், சக்திவாய்ந்ததுமான படையணிகள் எழுச்சி கண்டிருப்பது ஆசியாவில் மட்டுமல்ல, இதே போக்குகள் ஆபிரிக்காவிலும், லத்தீன் அமெரிக்காவிலும் (சிறப்பாக மெக்சிக்கோ) நன்கு முன்னேறியுள்ளன.

121. நம் கவனத்தைக் கவர்ந்த ஐந்தாவது காரணி, பின்தங்கிய நாடுகளின் ஏழ்மையடைதலும், கையாகாலாத தேசிய முதலாளித்துவத்தின் கணக்கற்ற வளர்ச்சி மூலோபாயங்களின் சீர்குலைவுமேயாகும். லத்தீன் அமெரிக்க நாடுகள், ஆபிரிக்கா மற்றும் இந்தியத் துணைக்கண்டத்தின் நாடுகள் அவற்றின் தொழில் மற்றும் பொதுப் பொருளாதார வளர்ச்சியில் ஒருபோதும் ஒத்தவையாக இல்லாதிருப்பினும் அவை அனைத்தும் சமூக வெடிமருந்து பீப்பாய்கள் ஆகும். ஏகாதிபத்தியம் மற்றும் அதன் கையாளான தேசிய முதலாளித்துவம் ஆகியவற்றின் கொள்கைகளால் உருவாக்கப்பட்ட துன்பங்கள், இழிவுகள் இவற்றிலிருந்து சோசலிசப்புரட்சி மூலமாக தவிர வேறு வழியாக தப்பமுடியாது.

122. இறுதியாக ஆறாவது காரணி, நாம் ஏற்கனவே குறிப்பிட்டவாறு சோவியத் யூனியனில், கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் மற்றும் சீனா ஆகியவற்றில் உள்ள ஆளும் ஸ்ராலினிச அதிகாரத்துவங்களால், சந்தைப்பொருளாதார கொள்கைகளுக்குச் சென்றதன் திருப்பத்திலிருந்து கட்டாயம் ஊற்றெடுக்கின்ற புரட்சிகர பிரதி விளைவுகளாகும். சீனாவில் நகரங்களிலும், நாட்டுப்புறங்களிலும் முதலாளித்துவ உறவுகளை ஸ்ராலினிச அதிகாரத்துவம் ஊக்குவித்ததன் விளைவாக 35 ஆண்டுகளுக்கும் மேலாகக் காணாத வறுமையின் அம்சங்கள் புதுப்பிக்கப்படுகின்றன. பணவீக்கமும், வேலையில்லாத் திண்டாட்டமும் ஏற்கனவே அவற்றின் தாக்கத்தை உணரப்பண்ணிக் கொண்டிருக்கின்றன. போலந்தில் அண்மையில் நடைபெற்ற வேலைநிறுத்தங்கள் எடுத்துக்காட்டியவாறு, ஸ்ராலினிஸ்டுகள் ஆளும் நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் முதலாளித்துவத்தை மீண்டும் அறிமுகம் செய்வதை அமைதியாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.