பொதுக்கூட்டம்

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் உலக சோசலிச வலைத்தளமும் பாரிசில் மார்ச்16 அன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் தலைவரும் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் பொதுச் செயலருமான, கீர்த்தி பாலசூரிய மறைவின் இருபதாம் ஆண்டை நினைவு கூரும் கூட்டம் ஒன்றை நடத்தவிருக்கின்றன.

பாலஸ்தீன விடுதலை இயக்கம் மற்றும் காஸ்ட்ரோவின் ஜூலை 26 இயக்கம் போன்ற தேசியவாத இயக்கங்கள் உலகம் முழுவதும் தீவிரவாத போக்கினரால் புதிய புரட்சிகர முன்னணிப்படையாக புகழ்ந்து போற்றப்பட்ட காலகட்டத்தில், உறுதியான ஒரே புரட்சிகர வர்க்கம் தொழிலாள வர்க்கம் என்ற என்ற அடிப்படை மார்க்சிச கருத்துருவை கீர்த்தி பேணினார்.

அவர் தமது 19ம் வயதில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் தலைவராக ஆனார்; லங்கா சம சமாஜ கட்சியின் வரலாற்று காட்டிக் கொடுப்பிற்கு ஒரு விடையாக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் நிறுவப்பட்டது. இலங்கை தொழிலாள வர்க்கத்தில் பெரும் பின்பற்றாளர்களை கொண்டிருந்த இந்த முன்னாள் ட்ரொட்ஸ்கிச கட்சி தேசியவாத அழுத்தத்திற்கு அடிபணிந்து, முதலாளித்துவ கூட்டரசாங்கத்தில் இணைந்தது.

இந்த வரலாற்றுக் காட்டிக்கொடுப்பு மரண ஆபத்தான விளைபயன்களை கொண்டிருந்தது. அது இரத்தம் தோய்ந்த உள்நாட்டு யுத்தத்திற்கு வழிவகுத்தது, அந்த யுத்தமானது 25 ஆண்டுகளுக்கு பின்னரும் இன்னும் சீரழித்துக் கொண்டிருப்பதுடன் 70,000க்கும் மேலான உயிர்களை பலிகொண்டுள்ளது.
ஏகாதிபத்திய ஒடுக்குமுறையின் மிக அப்பட்டமான வடிவங்கள் மீளவும் எழுந்து கொண்டிருக்கையில் லங்கா சம சமாஜ கட்சியின் காட்டிக்கொடுப்பிற்கு உறுதியான கீர்த்தி பாலசூரியவின் எதிர்ப்பும் நிரந்தரப் புரட்சி தத்துவத்தை அவர் பேணியமையும் இன்று உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கு பெரும் முக்கியத்துவத்தை கொண்டிருக்கிறது. தேசிய இயக்கங்களின் அரசியல் திவால்தன்மை எங்கும் காணக்கூடியதாக இருக்கிறது.

தொழிலாள வர்க்க சர்வதேசிய முன்னோக்கிற்காக அவர் தமது வாழ்க்கை முழுவதும் நடத்திய போராட்டங்களின் படிப்பினைகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும். தாங்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் கொளுந்துவிட்டெரியும் சமூகப் பிரச்சினைகளுக்கு இப்பொழுது தீர்வுகளை தேடிக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கும் புரட்சிகர அரசியலை நோக்கித் திரும்பும் இளைஞர்களுக்கும் கலங்கரை விளக்கமாக அவை திகழ்கின்றன.

கீர்த்தி பாலசூரியவை நினைவுகூரும் இக்கூட்டம் தங்களின் வாழ்க்கைத்தரங்கள் மீதும் உரிமைகள் மீதுமான நிரந்தரத் தாக்குதல்களிலிருந்து வெளியேற வழி தேடிக்கொண்டிருக்கும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் உடையதாக இருக்கும் இந்த படிப்பினைகளை விவாதிக்கும்.
லங்கா சம சமாஜ கட்சியின் காட்டிக்கொடுப்பு

கூட்ட விபரங்கள்

கூட்டம் மார்ச் 16, ஞாயிறு, பிற்பகல் 2;30 மணி

177 rue de Charonne
75011 Paris
Métro: Charonne – ligne 9, Alexandre Dumas – ligne 2, Nation – RER A , Bus – ligne 76


கீர்த்தி பாலசூரிய மறைவின் இருபதாம் ஆண்டு நிறைவு

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம்/சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்குகள்

தொழிலாளர் புரட்சிக் கட்சியின் உடைவு

இலங்கையின் உள்நாட்டு யுத்தம்

இலங்கையின் உள்நாட்டு யுத்தம்

சிறப்பு வாசிப்புகள்

 

The Permanent Revolution The Permanent Revolution & Results and Prospects The Workers League and the founding of the Socialist Equality Party The Lessons of October