காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சி

 சீனப் புரட்சியும்  ட்ரொட்ஸ்கிச இயக்கமும்

WSWS : Tamil : நூலகம்
சீனப் புரட்சியும் ட்ரொட்ஸ்கிச இயக்கமும்
சீனப் புரட்சியும் ட்ரொட்ஸ்கிச இயக்கமும்
 
சீனப் புரட்சி

மூன்றாம் சீனப்புரட்சியும் அதற்குப் பின்னரும்


"சோசலிசத்திற்கான உலக வாய்ப்புகள்"
ட்ரொட்ஸ்கிசமும் சீனப் புரட்சியும்

டெங் ஜியாவோபிங்கும் சீனப் புரட்சியின் கதியும்

1925-27 சீனப் புரட்சியின் துன்பியல்
 

விரிவுரை எண் ஆறு: தனியொரு நாட்டில் சோசலிசமா அல்லது நிரந்தரப் புரட்சியா
 


The Lessons of October
 


 

Fourth International

நான்காம் அகிலம்

Trotskyism and the Chinese Revolution

ட்ரொட்ஸ்கிசமும் சீனப் புரட்சியும்

Vol. 16, Nos. 1-2 16வது தொகுப்பு, எண்கள் 1-2

ஆசிரியர் குழு

Use this version to print | Send feedback

டெங் ஜியாவோபிங்கின் ஸ்ராலினிச அதிகாரத்துவம் கடந்த சில வாரங்களில் தீவிரமாகப் புரட்சி எழுச்சிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள்மீது, நாடு தழுவிய வேட்டையாடலை நடத்தி, ஏராளமானவர்களைக் கைது செய்து வருகிறது என்று வெளிவரும் தகவல்களுக்கு இடையே, நான்காம் அகிலம் என்ற இவ்விதழ் வெளிவருகின்றது.

சீருடை அணியாத பொலிஸார் வீட்டிற்கு வீடு சென்று சோதனைகளை நடத்துகையில், மிகப் பெரிய அளவிலான படைகளும், கவசவாகனங்களும்  பெய்ஜிங்கை ஒரு இராணுவ முற்றுகையின் கீழ் இருத்தியுள்ளன.

ஸ்ராலினிச அதிகாரிகள், ஷங்காயில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழு ஒன்றின்மீது ஏறி அவர்களைக் கொன்ற இரயிலை எரித்த நிகழ்வில் பங்கு கொண்டனர் என்ற குற்றச்சாட்டிற்கு உட்பட்டிருந்த மூன்று தொழிலாளர்களின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை தொலைக்காட்சி மூலம் காட்டினர். இதற்கிடையில் வேலைநிறுத்தங்களில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பொலிஸாரின் சுற்றிவளைத்துப் பிடிக்கும் நடவடிக்கைகளின் முக்கிய புள்ளியாகியுள்ளனர். பெய்ஜிங் அதிகாரத்துவம் கட்டவிழ்த்துள்ள இந்த அடக்குமுறை அலை, சீனப் பாட்டாளி வர்க்கத்திற்கு எதிரான ஒரு எதிர்ப்புரட்சிகரமான அச்சறுத்தும் ஆட்சி என்றவகையில் மிகத் தெளிவாக வெளிப்பட்டுள்ளது.

நிராயுதபாணிகளான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களைப் படுகொலை செய்த துருப்புக்களை தன்னுடையஇரும்பு. எஃகு பெரும்சுவர்என்று டெங் புகழ்கையில், தற்போதைய அடக்குமுறை அலை ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் அரசியல் புரட்சியை ஒன்றும் முடிவிற்குக் கொண்டுவந்துவிடவில்லை. இப்பதிப்பில் வெளியிடப்பட்டுள்ளஸ்ராலினிசம் வீழ்க! சீன அரசியல் புரட்சி நீடூழி வாழ்க!” என்ற தலைப்பில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அறிக்கை தெளிவாக்கியுள்ளதுபோல், இப்புரட்சி சீனப் புரட்சியின் வெற்றிகளை தகர்த்து, முதலாளித்துவ சொத்து உறவுகளை மீண்டும் புனருத்தாரணம் செய்ய முற்பட்டுள்ள முயற்சிகள் மீதான தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பில் ஆழ்ந்த வேர்களைக் கொண்டுள்ளது. அரசியல் புரட்சியை நோக்கி முன்னேறும் இதே இயக்கம் கிழக்கு ஐரோப்பா மற்றும் சோவியத் ஒன்றியத்திற்குள்ளேயேயும் தடுக்கமுடியாமல் வளர்ச்சியுற்று வருகிறது என்பதைக் காட்டுகிறது.

இந்த நிகழ்வுகள் 50 ஆண்டுகளுக்கு முன்பு நான்காம் அகிலத்தின் நிறுவன ஆவணத்தில் முன்வைத்த, அதிகாரத்துவமயமான தொழிலாளர் அரசின் எதிர்கால பரிமாணம் பற்றிய பின்வரும் ட்ரொட்ஸ்கியின் மதிப்பீட்டிற்கு முற்றிலும் முழுமையான நிரூபணத்தை வழங்கியுள்ளன: "அதிகாரத்துவம், தொழிலாளர் அரசில் உலக முதலாளித்துவத்தின் ஒரு கருவியாக மேலும் மேலும் மாறிக்கொண்டிருக்கும் அதிகாரத்துவம், புதிய சொத்துடமை வடிவங்களை தூக்கிவீசி நாட்டை மீண்டும் முதலாளித்துவத்தினுள் கொண்டுசெல்லும் அல்லது தொழிலாள வர்க்கம் அதிகாரத்துவத்தை நசுக்கி சோசலிசத்திற்கான பாதையைத் திறக்கும்." இவைதான் பெய்ஜிங் தெருக்களிலும், மற்ற சீன நகரங்களிலும் சமீபத்திய காலத்தில் மோதலுக்கு வந்துள்ள இரண்டு பிரிவினரதும் நிலைப்பாடுகளில் துல்லியமாக உள்ளன.

மேலும், அனைத்துலகக் குழு சீனாவின் எழுச்சிகளை சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்ட இயக்கத்தின் ஒரு பகுதியாகவே எதிர்பார்த்தது. உலக முதலாளித்துவ நெருக்கடியும் நான்காம் அகிலத்தின் பணிகளும் (The World Capitalist Crisis and the Tasks of the Fourth International) என்று ஆகஸ்ட் 1988ல் நிறைவேற்றப்பட்ட அதன் முன்னோக்குகள் பற்றிய தீர்மானத்தில் அனைத்துலகக் குழு பின்வருமாறு எழுதியது:

"கிழக்கு ஐரோப்பா முழுவதிலும் மற்றும் சீனா, வியட்நாம், லாவோஸிலும் அதிகாரத்துவங்கள் சோவியத் ஒன்றியத்தைவிடவும் விரைவாக தங்கள் தேசியப் பொருளாதாரங்களை உலக முதலாளித்துவத்தின் கட்டமைப்புக்குள் ஒருங்கிணைத்துவிட முனைகின்றன. இந்நிகழ்ச்சிப்போக்கு சீனாவில் மிகவும் முன்னோக்கி சென்றுள்ளது. மாவோவின் சடலம் பொதுப் பார்வைக்காக தைலமூட்டிப் பேணி வைத்திருக்கலாம், ஆனால் அவருடைய மரபியம் ஏற்கனவே மிகவும் அழுகிய கட்டத்திற்குச் சென்று விட்டது.

திட்டமிட்ட பொருளாதாரத்தில் எஞ்சியிருந்த அனைத்தையும் அவருக்குப் பின்வந்தவர்கள் தகர்க்கத் தொடங்கிவிட்டனர். 1949க்குப் பின்னர் கூட்டுப்பண்ணையாக்கப்பட்டிருந்த நிலங்கள் அனைத்துமே உண்மையில் தனியார் உடைமைகளாக மாற்றப்பட்டுவிட்டன. மேலும் அரசாங்கம் ஊக்கமளித்துள்ள கோஷமான "செல்வத்தை அடைவது சாலச்சிறந்தது" என்னும் பதாகையின்கீழ் முதலாளித்துவ உறவுகள் கிராமப்புறங்களிலும் தளைத்தோங்கத் தொடங்கிவிட்டன. நகர மையங்களில், முதலாளித்துவ தொழில்முயற்சிகள் மீது இருந்த அனைத்துத் தடைகளும் கிட்டத்தட்ட அகற்றப்பட்டுவிட்டன. ஒரு காலத்தில் அரசுக்குச் சொந்தமாக இருந்த தொழில்துறைகளின் பெரும் பிரிவுகள் வெளிநாட்டு, உள்நாட்டு முதலாளித்துவத்தினருக்கு ஏலத்திற்கு விடப்பட்டுள்ளன.....

"நாட்டை ஒரு பொருளாதாரப் பேரழிவிற்குள் தள்ளிவிடும் உந்துதலைக் கொண்டுள்ள முதலாளித்துவத்தை, மீண்டும் வெறித்தனமாக  அறிமுகப்படுத்தும் சீன ஸ்ராலினிஸ்ட்டுக்களின் கொள்கைகள், கட்டாயமாக பாட்டாளி வர்க்கத்தின் பாரிய கிளர்ச்சிக்கு இட்டுச்செல்லும். அடுத்த புரட்சிகர எழுச்சியின்போது, வறிய விவசாயிகளுக்கு தலைமை கொடுப்பதன் மூலம் அதிகாரத்துவத்தினரிடமிருந்தும் மற்றும் ஸ்ராலினிஸ்ட்டுக்களால் ஊக்குவிக்கப்பட்டிருக்கும் பேராசைபிடித்த முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்தும் நாட்டை தூய்மைப்படுத்தும் பாரிய போராட்டத்தினை சீனத் தொழிலாள வர்க்கமே செய்யும்.

சீனாவில் நடக்கும் நிகழ்வுகள் சீனப் புரட்சியின் விதி பற்றி ஸ்ராலினிசத்திற்கு எதிராகப் போராடிய ட்ரொட்ஸ்கியின் முன்னோக்கை மட்டும் நிரூபணமாக்கவில்லை. நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் அறிக்கை விரிவாக எடுத்துக் காட்டுவதுபோல், நான்காம் அகிலத்திற்குள்ளேயே சந்தர்ப்பவாதத் திரிபுகளுக்கு எதிராக அனைத்துலகக் குழு நடத்திய நீடித்த போராட்டத்தையும் ஒரு முடிவிற்குக் கொண்டுவரும்.

அதிகாரத்துவத்திற்கும் அதன் வெளிப்படையான முதலாளித்துவ புனருத்தாரணக் கொள்கைக்கும் எதிரான ஏராளமான தொழிலாளர்களின் போராட்டம், ஸ்ராலினிசம் மற்றும் மாவோயிசத்திற்குச் சரணடைந்துவிட்ட இந்த அனைத்துத் திருத்தல்வாத போக்குகளும் கொண்டிருந்த எதிர்ப்புரட்சிப் பங்கை அம்பலப்படுத்த உதவியுள்ளது.

நான்காம் அகிலத்தை அழித்துவிடும் அச்சுறுத்தலைக் கொண்டிருந்த மிஷேல் பப்லோவின் தலைமையிலான சந்தர்ப்பவாதப் போக்கை எதிர்த்துப் போரிடுவதற்காக 1953ல் அனைத்துலகக் குழு நிறுவப்பட்டது.

ஒருபுறம் ஏகாதிபத்தியத்தின் மறுஸ்திரத்தன்மையுடன் போருக்குப் பிந்தையை ஏகாதிபத்திய உடன்பாட்டிற்கும், மறுபுறம் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் பிடி பலமடைவதான தோற்றப்பாட்டிற்கும்  பதிவுவாதமுறைக்கான -impressionistic- அடிபணிவிலிருந்தே பப்லோவின் கலைப்புவாதம் வெளிப்பட்டது.

இந்தப் போக்குகளுக்கான பப்லோவாதிகளின் பிரதிபலிப்பு, முற்றிலும் வேறுபட்ட வர்க்க நிலைப்பாட்டை எடுக்கும் நிலைக்கு இட்டுச்சென்றது. அது பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரப் பங்கு மற்றும் தொழிலாள வர்க்கத்திடையே சோசலிச நனவை அபிவிருத்திசெய்யும் ஒரு புரட்சிகரக் கட்சியின் தலையாய பங்கு இரண்டையுமே நிராகரிப்பதை அடிப்படையாகக் கொண்டிருந்தது.

குறிப்பாக, பப்லோவாதிகள் தங்கள் திருத்தல்வாதங்களுக்கு -revisions-இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்த நிலைமைகளில் அடித்தளமாக கொண்டிருந்தனர். இங்கு தனியார் சொத்துடமை இல்லாதொழிக்கப்பட்டது தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர, சுயாதீன அணிதிரட்டின் மூலம் நடைபெறவில்லை, மாறாக இந்நாடுகளை சோவியத் செம்படை ஆக்கிரமித்ததால் ஏற்பட்டதாகும்.

அதிகாரத்துவம் நிறுவியிருந்த இப்புதிய ஆட்சிகளை ட்ரொட்ஸ்கிசவாதிகள் உருக்குலைந்த தொழிலாளர் அரசு என்று வரையறுத்திருந்தனர். இந்நாடுகள் தொடர்பாக நான்காம் அகிலம் கொண்டிருந்த அடிப்படை அணுகுமுறை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தேசியமயமாக்கப்பட்ட சொத்துக்களைப் பாதுகாத்தல் என்பதாகவும், அதே நேரத்தில் அவை ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கு எதிரான ஒரு அரசியல் புரட்சியை முன்னெடுக்க தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கு ஒரு புரட்சிகரக் கட்சியைக் கட்டமைக்க வேண்டும், தொழிலாளர்களின் அதிகாரத்திற்கான உண்மையான அமைப்புகளை நிறுவுவதற்காக போராடவேண்டும் என்றும் இருந்தது.

மேலும், ட்ரொட்ஸ்கிசத்தை பாதுகாத்தவர்கள் கிழக்கு ஐரோப்பாவில் சொத்துக்கள் தேசியமயமாக்கப்பட்டதின் மூலம் முதலாளித்துவத்திற்கு எதிராக எத்தகைய தற்காலிகமான தாக்குதல்கள் செய்யப்பட்டபோதிலும், அவை உலகளவில் ஏகாதிபத்தியத்துடன் ஒத்துழைப்பு, மற்றும் சோசலிசப் புரட்சியைக் காட்டிக் கொடுத்தல் என்னும் ஸ்ராலினிச நிலைப்பாட்டினால் பெரிதும் முக்கியமிழந்துவிட்டன என்பதை  அறிந்திருந்தனர்.

இந்த அடிப்படை முன்னோக்கு 1939-40ல் சோசலிச தொழிலாளர் கட்சியினுள் -Socialist Workers Party- குட்டி முதலாளித்துவ எதிர்ப்பிற்கு எதிரான போராட்டத்தில் ட்ரொட்ஸ்கியினாலேயே முற்கூட்டியே கூறப்பட்டிருந்தது. 1939ம் ஆண்டு செம்படை போலந்துமீது படையெடுத்ததை தொடர்ந்து அதிகாரத்துவம் மேற்கோண்ட சமூக நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை பகுப்பாய்கையில், ட்ரொட்ஸ்கி பின்வருமாறு எழுதினார்:

"எமக்கு முக்கியமான அரசியல் அளவுகோல், அவை எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும்கூட ஏதேனும் ஒரு பிரிவில் சொத்துடமைகள் உறவுகளை மாற்றுதல் என்பது அல்ல; மாறாக உலக பாட்டாளி வர்க்கத்தின் நனவு மற்றும் ஒழுங்கமைப்பில் மாற்றத்தை காண்பதும், முந்தைய வெற்றிகளை அவர்கள் பாதுகாத்துக்கொள்ளும் தகமையை உயர்த்துதல், மற்றும் புதிய வெற்றிகளைச் சாதித்தல் என்பதுதான். இதில் இருந்து, அதுவும் ஒரே உறுதியான நிலைப்பாட்டில் இருந்து, முழுமையாக மாஸ்கோவின் அரசியலை கருத்தில்கொண்டால் அது அதன் முழுமையான பிற்போக்குத்தனத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளதுடன் மற்றும் உலகப் புரட்சிக்கான பாதையில் முக்கிய தடையாக உள்ளது."

ட்ரொட்ஸ்கி மேலும் கூறினார்: "உற்பத்திச் சாதனங்களை அரசமயமாக்கல், நாம் கூறியதுபோல், ஒரு முற்போக்கான நடவடிக்கைதான். ஆனால் அதன் முற்போக்கானதன்மை ஒப்புமையாகத்தான் உள்ளது; ஏனைய அனைத்துக் காரணிகளின் மொத்தக் கூட்டில்தான் அதன் விஷேட கனம் தங்கியுள்ளது. இவ்வகையில் தாம் முதலிலும் முக்கியமானதுமாக அதிகாரத்துவத் தன்னாட்சி மற்றும் ஒட்டுண்ணித்தனம் நிறைந்த மேலாதிக்கத்திற்கு உட்பட்டுள்ள ஆட்சிப்பகுதிகளில் விரிவாக்கம் --"சோசலிச நடவடிக்கைகள்" என்று கூறப்படுவதால் மூடி மறைக்கப்பட்டுள்ளது-- கிரெம்ளினின் கௌரவத்தை அதிகரிக்கும் என்பதை நிரூபிக்க வேண்டும்; அதேபோல் பாட்டாளி வர்க்கத்தின் புரட்சியை, அதிகாரத்துவ தந்திர நடவடிக்கைகள் பிரதியீடுசெய்யக்கூடிய வாய்ப்புக்கள் பற்றிய நப்பாசைகள் மற்றும் அதுபோன்றவற்றையும் வளர்க்கும் என்பதைக் காட்ட வேண்டும். இந்த தீமைதான் போலந்தில் ஸ்ராலினிச சீர்திருத்தங்களில் முற்போக்கான உள்ளடக்கங்களில் அதிக தாக்கத்தை செலுத்துகின்றது". (In Defence of Marxism [London: New Park Publications, 1971l, PP. 23-24).

"இத்தீமைதான்" நான்காம் அகிலத்தின் பப்லோவாத திருத்தல்வாத வளர்ச்சியில் பொதிந்திருந்தது.

கிழக்கு ஐரோப்பாவில், அதிகாரத்துவத்தால் நிறுவப்பட்ட சொத்துடமை வடிவங்களை, பப்லோ ஒரு முழுப் புதிய வரலாற்று முன்னோக்கின் ஆரம்ப கட்டமாகக் கொண்டார். முதலாளித்துவம் இல்லாதொழிக்கப்படுதல் என்பது மரபார்ந்த முறையில் மார்க்சிஸ்ட்டுக்களால் வரையறுக்கப்பட்டதுபோல் பாட்டாளி வர்க்கப் புரட்சியால் அல்லாது மாறாக அதிகாரத்துவ இராணுவ வழிவகையினால்தான் என்ற கருத்தை அவர் முன்வைத்தார். ஏகாதிபத்தியத்துடன் இராணுவமோதலில் உந்தப்படும் ஸ்ராலினிச அதிகாரத்துவம், தேசியமயமாக்கப்பட்ட சொத்துரிமை உறவுகளை இன்னும் புதிய பகுதிகளுக்கு இராணுவ வழிவகைகள் மூலமும், முதலாளித்துவ நாடுகளில் இருக்கும் ஸ்ராலினிசக் கட்சிகளுக்கு புரட்சிகர போராட்டங்களுக்கு தலைமை தாங்குமாறு உத்தரவிடுவதின் மூலமும் விரிவாக்கம் செய்யும் நிர்ப்பந்தத்திற்கு உட்படுத்தப்படும் என்று அவருடைய கண்ணோட்டம் கூறியது.

முழு மார்க்சிச கோட்பாட்டு மரபியத்தையும் நிராகரிக்கும் இத்தகைய முன்கணிப்பின்படி தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன புரட்சிகரக் கட்சிகளை கட்டமைப்பதின் மூலம் மார்க்சிச நனவை வளர்ப்பதற்கான போராட்டம் முற்றிலும் தேவையற்றது, ஏனெனில் ஒரு உருக்குலைந்த தன்மை உடையதாக இருந்தாலும் சோசலிசம் நிகழ்வுகளின் அழுத்தங்களால் நனவற்றுச் செயற்பட்டு, தொழிலாள வர்க்கத்தின் அரசியல் பிரதியீடாக செயல்புரியும் அதிகாரத்துவங்கள் மற்றும் தொழிலாள வர்க்கமற்ற பிறசக்திகளாலும் அடையப்பட முடியும் எனக் கூறப்பட்டது. இம்முன்னோக்கின் இதன் நடைமுறை முடிவானது தவிர்க்கமுடியாதபடி நான்காம் அகிலத்தை கலைப்பதை நோக்கி இட்டுச்செல்லும்.

சாராம்சத்தில், பப்லோவாத திருத்தல்வாதம் தொழிலாள வர்க்கப் புரட்சி என்னும் முழு மார்க்சிச முன்னோக்கிற்கும் எதிரான ஒரு குட்டி முதலாளித்துவ எழுச்சியைத்தான் பிரதிபலித்தது. 1949ல் மாவோயிசத்தின் வெற்றிக்கான அதன் பிரதிபலிப்பு இந்த அடிப்படை நிலைப்பாட்டின் ஒரு மாறுபாடுதான்.

சீனாவைப் பொறுத்தவரை, கோமின்டாங் முதலாளித்துவ ஆட்சி 1949ல் அகற்றப்பட்டது, ஸ்ராலினிசக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் ஒரு விவசாயிகளின் இராணுவத்தால் சாதிக்கப்பட்டது. ஒரு சோசலிசப் புரட்சியின் வளர்ச்சி சீனாவில் ஏற்படுவதற்கு நீண்டகாலமாக கூறப்பட்ட வரலாற்றுப் பிரச்சினைகளை ஒதுக்கிவைத்து, மாவோவின் வெற்றியை பப்லோவாதிகள் ஸ்ராலினிசம் சர்வதேச அளவில் ஒரு புரட்சிகரப் பாத்திரத்தை வகிக்கமுடியும் என்பதற்கான மற்றொரு நிரூபணம் என்று கண்டனர்.

தொழிலாள வர்க்கத்தின் விடுதலை தொழிலாள வர்க்கத்துடைய கடமையே மற்றும் அதற்கு பாட்டாளி வர்க்க தலைமையினுள் மார்க்சிச காரியாளர்களை அபிவிருத்திசெய்வது தேவை என்னும் மார்க்சிச மூலசூத்திரத்தைப் பப்பலோவாதிகள் தாக்கினர். ஒரு நனவான  ட்ரொட்ஸ்கிச தலைமையின் உதவி இல்லாமலேயே சோசலிசப் புரட்சி அடையப்பட முடியும் என்பதை சீனப் புரட்சி காட்டுகிறது என்று அவர்கள் வலியுறுத்தினர். மேலும் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன தலையீடு இல்லாமலும் அது நடத்தப்பட முடியும் என நிரூபித்தது என்றனர். ஸ்ராலினிசத் தலைமையில் விவசாயிகளின் இராணுவம் அப்பணியைச் செய்ய முடியும் என்றனர்.

பப்லோவாத திருத்தல்வாதத்தின் ஆபத்தான தாக்கங்கள் அவற்றின் உச்சக்கட்ட வெளிப்பாட்டை சீன ட்ரொட்ஸ்கிஸ்ட்டுக்கள் மீது அவர்கள் கொண்டிருந்த இகழ்வுணர்வில் வெளிப்பட்டது. சீனத் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன நலன்களுக்கும் மற்றும் அணிதிரட்டப்படுவதற்கான போராட்டத்தை ஒடுக்குவதற்காக மாவோவாத ஆட்சி இப்போராளிகளை சிறையில் தள்ளியது, நாடு கடத்தியது மற்றும் மரண தண்டனைக்கு உட்படுத்தியது.

அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சியின் அப்பொழுதைய தலைவர் ஜேம்ஸ் பி. கனனுக்கு எழுதிய கடிதத்தில், சீன ட்ரொட்ஸ்கிஸ்ட்டான எஸ்.ரி.பெங், எப்படி பப்லோ முறையாக மாவோவின் ஆட்சி சீனாவில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை இரத்தம்தோய்ந்த முறையில் அடக்குகிறது என்பதைப் பற்றிய அனைத்து விவாதங்களையும் நசுக்குகிறது என்று விவரித்து இருந்தார்.

நவம்பர் 1952ல் சீனப் பிரிவு முகங்கொடுக்கும் நிலைமைகள் குறித்து சர்வதேச செயலகத்திற்கு -International Secretariat- அறிக்கை ஒன்றை கொடுக்க இறுதியாக பெங் அனுமதிக்கப்பட்டார். தான் கனனுக்கு எழுதிய கடிதத்தில் பப்லோ இந்த அறிக்கையை உதறித்தள்ளி, “மாவோவின் ஆட்சி ட்ரொட்ஸ்கிஸ்ட்டுக்களை படுகொலை செய்வது வேண்டுமென்றே எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல, அது ஒரு தவறு, அதாவது ட்ரொட்ஸ்கிஸ்ட்டுக்கள் கோமின்டாங் முகவர்கள் என்று தவறாகக் கருதப்பட்டதன் விளைவு; ட்ரொட்ஸ்கிஸ்ட்டுக்களை மாவோ துன்புறுத்தியது உண்மை என்றாலும், அது ஒரு விதிவிலக்கு என்றுதான் கொள்ளப்பட வேண்டும்என்று அறிவித்தார்.

இப்படுகொலை ஒன்றும் ஒரு தவறு இல்லை என்று பெங் விடையிறுத்தார்: இதுட்ரொட்ஸ்கிஸ்ட்டுக்கள் மீது ஸ்ராலினிச விரோதம் என்னும் ஆழ்ந்துள்ள ஸ்ராலினிச மரபில் இருந்து தோன்றியது, வேண்டுமென்றே, திட்டமிட்டு ட்ரொட்ஸ்கிஸ்ட்டுக்களை அழித்துவிடும் ஒரு முயற்சிதான்”, ஹோ சீ மின் வியட்நாமிய ட்ரொட்ஸ்கிஸ்ட்டுக்களைக் கொன்றது அல்லது ஸ்பெயினின் உள்நாட்டுப் போரின்போது GPU ட்ரொட்ஸ்கிஸ்ட்டுக்களை கொன்றது போல்தான் இதுவும், மேலும் இது ஒரு விதிவிலக்கு அல்லஎன்று கூறினார்.

பின்னர் பெப்ருவரி 1953ல் நடந்த சர்வதேச செயலகத்தின் விரிவாக்கப்பட்ட கூட்டத்தில் முந்தைய இரண்டு மாதங்களில் நடைபெற்ற முழுச் சீன ட்ரொட்ஸ்கிஸ்ட்டுக்களின் கைது பற்றிய அறிக்கை ஒன்றை பெங் வழங்க முற்பட்டதையும் பப்லோ எதிர்த்தார். “மாவோ சே-துங் புரட்சியின் சாதனையுடன் ஒப்பிடும்போது, ஒரு சில நூற்றுக்கணக்கான ட்ரொட்ஸ்கிஸ்ட்டுக்கள் கைதுசெய்யப்பட்டது ஒரு பொருட்படுத்தக்கூடிய விடயம் அல்லஎன்று பப்லோ அறிவித்தார்.

சீன ட்ரொட்ஸ்கிஸ்ட்டுக்களிடமிருந்து உதவிக்கான அழைப்புஎன்ற பிரசுரத்தை பெங் வழங்க முயற்சித்தவை அனைத்தும் பின்னர் பப்லோவினால் தடுக்கப்பட்டன. “இந்த ஆவணத்தை நசுக்குவதன்மூலம், பப்லோ என்னையும் சீனத் தோழர்களையும் வேண்டுமென்றே ஏமாற்றியது மட்டும் இல்லாமல், இரண்டு மன்னிக்க முடியாத குற்றங்களையும் செய்துள்ளார்: (1) உண்மையில் அவர் சீன ட்ரொட்ஸ்கிஸ்ட்டுக்கள் துன்பறுத்தப்பட்டது குறித்த நடைபெற்ற கொடூர உண்மைகளை சீன கம்யூனிஸ்ட் கட்சி வெகுஜனங்களுக்கு முன் மறைக்க உதவினார். (2) பல நாடுகளில் நுழைவுவாத தந்திரோபாயத்தை செயல்படுத்துபவர்கள் அல்லது செயல்படுத்த விரும்பவர்கள், சீனத் தொழிலாளர்கள் மீது பயன்படுத்தப்பட்ட மிருகத்தனமான துன்புறுத்தல்களில் இருந்து படிப்பினைகளை பெற்றுக்கொள்வதை சாத்தியமற்றதாக செய்துவிட்டார்.”

சீனாவில் நடைபெற்றுள்ள சமீபத்திய நிகழ்வுகள், ஒரு புறம் மாவோயிசத்தை போற்றும் பப்லோவாத திருத்தல்வாதத்தின் குற்றத்தன்மையையும் மறுபுறம் அதனால் சீன ட்ரொட்ஸ்கிஸ்ட்டுக்கள் தீயவகைகளில் துன்பறுத்தப்பட்டதையும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. “ஒரு சில நூறு ட்ரொட்ஸ்கிஸ்ட்டுக்கள் அழிக்கப்பட்டது பப்லோவினால் அதிக முக்கியத்துவமற்ற நிகழ்வு என்று உதறித்தள்ளப்பட்டது. ஆனால் இது சீனத் தொழிலாள வர்க்கத்திற்கு அது முதலாளித்துவத்தை மீட்பதில் குறியாக இருந்த ஒரு அதிகாரத்துவத்தை தூக்கிவீசும் பணியை முன்னெடுப்பதற்கு அவசரமாகத் தேவைப்பட்ட ஒரு நனவான புரட்சிகர முன்னணியை இழக்குமாறு செய்துவிட்டது.

சீன ட்ரொட்ஸ்கிஸ்ட்டுக்கள் கோமின்டாங் மற்றும் ஸ்ராலினிச அச்சுறுத்தல் என்னும் இரு கடின சூழ்நிலைகளிலும், அதே போல் ஜப்பானிய ஆக்கிரமிப்புக் காலத்திலும் போராடியுள்ளனர். 1927 புரட்சியின் தோல்வியில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சியை விவசாயிகளை அடித்தளமாக கொண்டு கட்டுவது முக்கியம் என்று நினைத்த மாவோ மற்றும் பிற ஸ்ராலினிசத் தலைவர்கள்போல் இல்லாமல், ட்ரொட்ஸ்கிஸ்ட்டுக்கள் வீரம் செறிந்த சென்-துஹ்ஷியூ தலைமையில் முன்னெடுத்த தொழிலாள வர்க்கத்தில் மார்க்சிச காரியாளர்களை அபிவிருத்திசெய்யும் போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டனர்.

அவர்கள் எத்தகைய தந்திரோபாயத் தவறுகளைச் செய்திருந்தாலும், அவர்களுடைய அடிப்படை முன்னோக்கு மிகச் சரியானதுடன், இன்று மகத்தான வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்டது. இப் புரட்சிகரப் போராளிகளை பப்லோவாதம் குறைமதிப்பிற்கு உட்படுத்தியது தொழிலாள வர்க்கத்தின் மீதான குட்டிமுதலாளித்துவ விரோதப்போக்கின் மிகத் தெளிவான வெளிப்பாடாகும்.

இதேயளவிலான தீர்க்கரமான பாத்திரத்தைத்தான் சர்வதேச தொழிலாளர் இயக்கத்தில் மாவோயிசம் விதைத்த குழப்பத்திற்கு உதவுவதிலும் உடந்தையாக இருந்ததிலும் பப்லோவாதம் தன் பங்கைக் கொண்டிருந்தது. சீன-சோவியத் மோதலில், உலகெங்கிலும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் பிளவிற்கு உட்பட்டு குறிப்பாக ஆசியா, ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க கண்டங்களில் உள்ள ஒடுக்கப்பட்டுள்ள நாடுகளில் மாவோவாதக் குழுக்கள் அமைக்கப்பட்டன.

இந்நாடுகளில் மாஸ்கோ-வழிவகைக் கட்சிகள் முன்வைத்த சோசலிசத்திற்கான சமாதான பாதைஎன்பதற்கு, தான் ஒரு கூடுதலான புரட்சிகர மாற்றீடு என மாவோயிசம் தவறாகக் காட்டிக் கொண்டது முதலாளித்துவ தேசியவாதம், விவசாயிகளின் தீவிரவாதம் மற்றும் ஸ்ராலினிசம் என்னும் பலதர கூட்டினை அடித்தளமாகக் கொண்ட வகையில், பெய்ஜிங்கின் தலைமையைப் பின்பற்றிய கட்சிகள் உண்மையான தொழிலாள வர்க்க புரட்சிகரக் கட்சிகளை கட்டமைப்பதை தடுப்பதில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தன.

மாவோவாதிகள் தொழிலாளர்களை ஒவ்வொரு நாட்டிலும் பேரழிவு தரும் தோல்விகளுக்குத்தான் இட்டுச் சென்றனர். இவற்றுள் மிகவும் குறிப்பிடத்தக்கது 1965ல் இந்தோனேசிய தொழிலாளர்களின் துயர்மிக்க  பேரழிவு ஆகும். அங்கு மாவோவாத கருத்தியலானநான்கு வர்க்கங்களின் கூட்டு என்ற அடிப்படையில் பெய்ஜிங் சார்பான கம்யூனிஸ்ட் கட்சி உலகிலேயே மிகப்பெரியதாக இருந்த நிலையில், தொழிலாள வர்க்கத்தை சுகார்ணோவின் முதலாளித்துவ தேசியவாத ஆட்சிக்கு அடிபணிய செய்ய வைத்திருந்தது. இது ஒரு இராணுவ சதியை எதிர்கொண்ட நிலையில் இந்தோனேசியத் தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியாக நிராயுதபாணியாக செய்திருந்தது. இதனால் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் தொழிலாளர்களும் விவசாயிகளும் படுகொலை செய்யப்பட்டனர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு சில ஆண்டுகளுக்கு பின்னர், மாவோவினால் ஊக்கம் பெற்ற நக்சலைட் இயக்கம் இந்தியாவில் குருதிகொட்டிய தோல்வியில் முடிவுற்றது. மேலும் இலத்தீன் அமெரிக்காவில், விவசாயிகளின் கெரில்லா முறை தத்துவமான கிராமப்புறத்தில் இருந்து நகருக்குஎன்பது குட்டி முதலாளித்துவத்திடம் உடனடி ஆதரவைப் பெற்றபோது, மாவோயிசம் மிக அதிக அளவில் 1960களிலும் 1970இன் தொடக்க ஆண்டுகளிலும் தொழிலாள வர்க்கத்தின் அலையென வந்த தோல்விகளுக்குத்தான் பெரும் பங்களித்தது.

பப்லோவாத தலைமை, மாவோயிசம் பற்றி தொழிலாள வர்க்கத்திற்கு தெளிவுபடுத்துவது என்பதற்கு முற்றிலும் மாறாக அதுவே முற்றிலும் அதற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டது. மாவோயிஸ்ட்டுக்கள்நிரந்தரப் புரட்சிக்கு அருகே வருபவர்கள்என்று மண்டேல் பாராட்டினார். இலத்தீன் அமெரிக்காவில் பப்லோவாதிகள் அதே துன்பகரமாக முடிவடைந்த கெரில்லா வழிமுறைக்கு ஆதரவு கொடுத்தனர். அது முழுக் கட்சிகளையும் அழிவிற்கு இட்டுச்சென்று ஆயிரக்கணக்கான இளைஞர்களின் இறப்பிற்கு வகை செய்தது.

இவ்வாறு செய்கையில், திருத்தல்வாதிகள் வர்க்கப் பகுப்பாய்வு அனைத்தையும் நிராகரித்து, மார்க்சிச தத்துவார்த்த மரபு முழுவதையும் இகழ்ந்தனர். சீனா பற்றிய நான்காம் அகில அறிக்கை தெளிவாக்குவதுபோல், மாவோயிசம் ஸ்ராலினிசத்துடன் முறித்துக் கொண்ட ஒரு புதிய புரட்சிகரப் போக்கு அல்ல. மாறாக, இது நிரந்தரப் புரட்சியை வெளிப்படையாக நிராகரித்ததை அடித்தளமாகக் கொண்டிருந்து, மென்ஷிவிக்கின்இரண்டு-கட்ட புரட்சிமற்றும் அதன்  இணைக் கோட்பாடானநான்கு வர்க்கங்களின் கூட்டுஆகியவற்றை தழுவியது. 1927ல் சீனத் தொழிலாள வர்க்கத்தின் குருதி கொட்டிய தோல்விக்கு வழிவகுத்த ஸ்ராலினிச வர்க்க ஒத்துழைப்புக் கொள்கைகளைப் பற்றி மாவோ ஒரு விமர்சனத்தையும் வைத்தது கிடையாது. மாறாக அவர் தொழிலாள வர்க்கத்திற்கு தன் முதுகைத்தான் காட்டினார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை கிட்டத்தட்ட ஒரு விவசாயிகள் அமைப்பாக மாற்றி, தேசிய முதலாளித்துவ பிரிவுகளில் இருந்தஏகாதிபத்திய-எதிர்ப்பினருடன்கூட்டு என்ற தேடலுக்காக பல ஆண்டுகளையும் நூறாயிரக்கணக்கான உயிர்களையும் வீணடித்தார்.

சோசலிசத்தில் சம ஆர்வம் கொண்டிருந்த தொழிலாளர்களையும் விவசாயிகளையும்சுரண்டப்படுபவர்கள்” (Toilers) என்று சமன்படுத்தியிருந்த நரோத்னிக்குகளின் கருத்தாய்வுகளை லெனின் தத்துவார்த்த ரீதியாக எதிர்த்திருந்தார். தேசிய முதலாளித்துவம் மற்றும் விவசாயிகள் ஆகியோரிடம் இருந்து தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்காக இடைவிடாமல் அவர் போராடி, ரஷ்ய புரட்சியில் பாட்டாளி வர்க்க மேலாதிக்கத்திற்கும் பாடுபட்டார்.

தன்னுடைய நிரந்தரப் புரட்சி தத்துவத்தில் ட்ரொட்ஸ்கி நிலப் பிரச்சினை உட்பட முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் கடமைகள் தொழிலாள வர்க்கத்தின் மூலம்தான் தீர்க்கப்பட முடியும் என்று நிறுவியிருந்தார். தனக்குப் பின்னே விவசாயிகள் பிரிவை அணிதிரட்டுக்கொண்ட வகையில், அதுதான் ஒரு சோசலிசப் புரட்சியில் அதிகாரத்தைக் கைப்பற்றி தொழிலாள வர்க்கத்தின் சர்வாதிகாரத்தை நிறுவும் என்றார். இச்சர்வாதிகாரம் நிறுவப்படுவது, தவிர்க்க முடியாமல் ஜனநாயக கடமைகள் மட்டுமின்றி சோசலிச கடமைகளையும் முன்னிறுத்தும், இவை முன்னேற்றம் அடைந்துள்ள முதலாளித்துவ நாடுகளுக்கு புரட்சி விரிவாக்கப்படுவதன் மூலம்தான் சாதிக்கப்பட முடியும். இதுதான் போல்ஷிவிக் கட்சியின் வழிகாட்டும் முன்னோக்காக மாறி, அக்டோபர் 1917ல் பாட்டாளி வர்க்கப் புரட்சியை நடாத்தியதுடன், ஸ்ராலினிச சீரழிவிற்கு முன்னதாக, கம்யூனிச அகிலத்தின் புரட்சிகர வேலைத்திட்டத்தின் அஸ்திவாரமாகவும் இருந்தது. இத்தத்துவார்த்த மரபியத்தில் தளத்தைக் கொண்டு, ட்ரொட்ஸ்கி 1927 ஷங்காய் படுகொலைக்குப் பின்னர் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, விவசாயிகளை நோக்கி திரும்பியதற்கு ஆழ்ந்த விமர்சனத்தை வைத்தார். ஆனால் ட்ரொட்ஸ்கிசத்தின்தனிமைப்படுத்தப்படுதலைகடப்பதற்கான பரபரப்பான முயற்சிகளில் பப்லோவாதிகள் மார்க்சிசத்தின் இந்த வெற்றிகளை உதறித்தள்ளி, ஸ்ராலினிசம் மற்றும் மாவோயிசத்திற்கு தங்களை அடிபணிய வைத்துக்கொண்டனர்.  

பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிராக அனைத்துலகக் குழு கட்டமைக்கப்பட்டபோது, அது பல முறையும் இதே சந்தர்ப்பவாத, தகர்த்தல் போக்குகள் தன்னுடைய சொந்த மட்டங்களில் இருந்தே வெளிப்பட்டு வருதை எதிர்த்துப்போரிடும் கட்டாயத்திற்கு உட்பட்டது.

இவ்வகையில், அனைத்துலகக் குழு அமைக்கப்படுவதை முன்னெடுத்த 10 ஆண்டுகளுக்குப் பின்னர், அமெரிக்காவின் சோசலிச தொழிலாளர் கட்சி ட்ரொட்கிசத்தில் இருந்து முறித்துக் கொண்டு பப்லோவாதிகளுடன் மறுபடியும் இணைந்து கொண்டது. 1959ம் ஆண்டு கியூப புரட்சிமழுங்கிய ஆயுதங்களுடன்சோசலிசம் சாதிக்கப்பட முடியும் என்பதை நிரூபித்தது என்று அது வாதிட்டது. அதாவது குட்டி முதலாளித்துவ தேசியவாத கெரில்லா இயக்கங்கள், தொழிலாள வர்க்கம் அல்லது ஒரு நனவான மார்க்சிச முன்னணிக் கட்சியின் தலைமையில்லாமலும் அடையப்படமுடியும் என்றது.

பல ஆண்டுகள் பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் முன்னணியிலிருந்த பிரித்தானிய பிரிவான தொழிலாளர் புரட்சிக் கட்சி(Workers Revolutionary Party-WRP) ஒரு நீடித்த சந்தர்ப்பவாத தேசிய சீரழிவிற்குள்ளாகி, அது 1985-86 இல் அனைத்துலகக் குழுவுடன் பிளவுற்றதில் உச்சக்கட்டதை அடைந்தது. 1980 களின் நடுப்பகுதியை ஒட்டி, பிரிட்டிஷ் தலைமையான ஹீலி, பண்டா, சுலோட்டர் ஆகியோர் ஏகாதிபத்தியத்தின் அழுத்தங்களுக்கு உட்பட்டு, நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவையே ஸ்ராலினிசம், சமூக ஜனநாயகம் மற்றும் முதலாளித்துவ தேசிய வாதம் ஆகியவற்றின் காட்டிக் கொடுப்புக்களுக்கு உடந்தையாக மாற்ற முயன்றது.

ஆனால் WRP தலைமையின் சந்தர்ப்பவாத வழிவகை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பெரும்பான்மைப் பிரிவுகளால் எதிர்க்கப்பட்டதுஅவை தங்களை பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிராகவும் ட்ரொட்ஸ்கிசத்தை பாதுகாக்கவும் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக வளர்க்கப்பட்ட போராட்டத்தின் உறுதியான அஸ்திவாரங்களில் தளம் கொண்டன.

1985-86 பிளவின் போது ஒன்றையொன்று எதிர்த்துக் கொண்ட இரு போக்குகள் இன்று சீன நிகழ்வுகளின் தடுப்புக்களின் எதிர்ப்புறங்களில் நிற்பதை காண்கின்றன. அனைத்துலகக் குழு பிரதிநிதித்துவப்படுத்தும் பாட்டாளி வர்க்க சர்வதேசிய போக்கு, சீனத் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களின் போராட்டங்களுக்கு சர்வதேச சோசலிசம், அரசியல் புரட்சி என்ற பெயரில் ஆதரவு கொடுக்கிறது. குட்டி-முதலாளித்துவத் தேசியவாதப் போக்கான, எல்லாவற்றிற்கும் மேலாக ஹீலி, பண்டா மற்றும் சுலோட்டரால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் WRP இன் துரோகத் தலைமை தன்னை ஏதேனும் ஒரு விதத்தில் ஸ்ராலினிசத்துடன் பிணைத்துக் கொள்கிறது.

இது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. பிரிட்டிஷ் பிரிவின் சீரழிவு மாவோயிசம், ஸ்ராலினிசம் மற்றும் குட்டி முதலாளித்துவப் பிற்போக்குத்தனம் ஆகியவற்றிற்கு தம்மை தகவமைத்துக்கொண்டதில் அதன் மூலவேர்களை கொண்டுள்ளது. பல ஆண்டுகள் வலதுசாரிக் குழுவான ஹீலி, பண்டா மற்றும் சுலோட்டர் அனைத்துலக் குழுவினுள் சீனப் பிரச்சினை பற்றி கொள்கை ரீதியான விவாதங்களைத் தடுத்து வந்தனர். இதற்குக் காரணம் பிரிட்டிஷ் பிரிவே பப்லோவாதத்திடம் இருந்து முற்றிலும் தன்னை முறித்துக் கொள்ளாததுதான்.

மேலும், WRP யின் பொதுச் செயலாளராக வந்த மைக்கேல் பண்டாவின் தலைமைக்குள்ளேயே ஒரு அழுகிய சமரசம் இருந்தது. மாவோயிசம் பற்றிய பண்டாவின் கருத்துக்கள் அனைத்து அடிப்படைகளிலும் பப்லோவாதிகளுடையதைப் போலவேதான் இருந்தன. ஹீலியும் சுலோட்டரும் இப்பிரச்சினைகள் குறித்து அனைத்துலகக் குழுவில் விவாதம் நடந்தால், அது தங்கள் பிரிவிலேயே ஒரு அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தி, பிரிட்டனில் நடைமுறை செயல்களை தடைக்கு உட்படுத்திவிடும் என அஞ்சினர்.

எனவே 1960 களில் மாவோ மற்றும் செங்காவலர் (Red Guard) இயக்கம் ஆகியவற்றை புகழ்ந்த அறிக்கைகளை பண்டா எழுதி, நான்காம் அகிலத்தின் பணிகளையே அவற்றிற்குக் கொடுத்தார். உதாரணமாக 1967ல் அவர், “வரலாற்றின் இயங்கியல், தவிர்க்க முடியாமல்கலாச்சாரப் புரட்சியைஒரு அரசியல் புரட்சியாக மாற்றுவதில் உள்ளதுஎன அறிவித்தார். இத்தகைய திருத்தல்வாத நிலைப்பாடுகள் பிரிட்டிஷ் இயக்கத்தை கருத்தியல்ரீதியாக நிராயுதபாணியாக்கி அக்காலகட்டத்தில் அதன் மீது சுமத்தப்பட்ட சக்திவாய்ந்த வர்க்க சக்திகளால் பாதிக்கப்படக்கூடியதாக்கினர்.  

1960களில் ஐரோப்பா முழுவதையும் ஆக்கிரமித்த குட்டி-முதலாளித்துவ தீவிரவாத அலை, அதன் உச்சக்கட்டத்தை பிரான்சில் மாணவர் எதிர்ப்பு இயக்கத்தில் உச்சக்கட்டத்தை அடைந்தபோது, மாவோயிசம் பெரிய, செல்வாக்கை செலுத்தியது. இந்தச் சமூக அடுக்குகள், தெளிவாக அவற்றின் தொழிலாள வர்க்க எதிர்ப்பு உள்ளடக்கத்தின் காரணமாக  விவசாயிகள் கம்யூன்கள், “மக்கள் போராட்டம்ஆகியவற்றைத் தளமாகக் கொண்ட கருத்தியல் போக்கை நோக்கி நகர்ந்தன.

மத்தியதர வர்க்கத்தின் இந்த தீவிரமயப்படுத்தப்பட்ட பிரிவுகள் மாவோவின் நீண்டபயணத்தை(Long March) ஐரோப்பிய மண்ணில் செய்யப்போவதில்லை என்றாலும், அவை முதலாளித்துவ சமூகத்தில் தொடர்ச்சியான புரட்சிகர வர்க்கமாக இருக்கும் தொழிலாள வர்க்கத்திற்கு தங்களை அடிபணியச்செய்ய தேவையில்லை என்ற வசதியான உத்தரவாதத்தை மாவோயிசத்தில் பெற்றன. இவ்வகையில், மாவோயிசம் முன்னேற்றமடைந்த முதலாளித்துவ நாடுகளில் தீவிரமயப்படுத்தப்பட்ட குட்டி முதலாளித்துவத்திற்கு, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான புரட்சிகர இயக்கத்தின் மீது மேலாதிக்கம் செலுத்துவதற்கும் அதை நெரிப்பதற்கும் ஒரு சித்தாந்தரீதியான நியாயப்படுத்துதலைக் கொடுத்தது.

திருத்தல்வாத வெளிப்பாடுகளுக்கு எதிராக போரிடுவதில் கண்ட தோல்வி, மற்றும் தன்னுடைய தலைமைக்குள்ளேயே இச்சமூகத்தட்டுகளுக்கு அடிபணிந்து நடந்து கொண்ட நிலையும், பிரிட்டிஷ் இயக்கத்திற்கு பெரும் தீய விளைவுகளைக் கொடுத்தன. 1970களின் தொடக்கத்தில், கட்சி விரைவில் ஒரு மத்தியவாதத் திசையில் போக்கைக் கொண்டிருந்தது. மாவோயிசத்திற்கான பண்டாவின் அடிபணிவானது விரைவில் WRP யில் அனைத்து மட்டங்களில் இருப்போராலும் பற்றி எடுக்கப்பட்டது. இது முதலாளித்துவ தேசியவாதம், சமூக ஜனநாயகம் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு நிபந்தனையற்ற சரணடைதலைத்தான் வெளிப்படுத்தியது.

பிளவுற்ற நேரத்தில் பண்டா தன்னை WRP என்று இன்னமும் அழைத்துக் கொள்ளும் ஒரு பிரிவின் தலைவரான கிளிவ் சுலோட்டருடன் சேரந்துகொண்டு நான்காம் அகிலம் அழிக்கப்பட வேண்டும் என்று கோரி ட்ரொட்ஸ்கிச வரலாறு முழுவதையும் இழிவுபடுத்தினார். “ஏன் அனைத்துலகக் குழு புதைக்கப்பட வேண்டும் என்பதற்கு 27 காரணங்கள்என்று பிளவை நியாயப்படுத்தியவகையில் ஒரு முக்கிய ஆவணத்தையும் இவர் எழுதினார்.

பிளவிற்குப் பின்னர், பண்டா ட்ரொட்ஸ்கிசத்தில் இருந்து வெளிப்படையாகவே முறித்துக் கொள்ள முற்பட்டு, ட்ரொட்ஸ்கிசத்தைசோவியத் ஒன்றியத்திற்கு எதிரான உலக ஏகாதிபத்தியத்தின் சித்தாந்தரீதியான கருவிஎனக் கூறினார். மாவோவை அவர் புரட்சித் தலைவர்களில் மிகப் பெரியவர் என்று பாராட்டி, தன்னுடைய தயக்கமற்ற ஆதரவை ஸ்ரானிலுக்கும் மாஸ்கோ அதிகாரத்துவத்திற்கும் அளித்தார்.

சோவியத் ஒன்றியத்தை ஒரு ஊனமுற்ற தொழிலாளர் அரசு என்று ட்ரொட்ஸ்கி வரையறை செய்ததைப் பண்டா நிராகரித்தார். ட்ரொட்ஸ்கியின் கருத்துப்படி சோவியத் ஒன்றியத்தில் ஒன்று அதிகாரத்துவம் முதலாளித்துவத்தை தவிர்க்க முடியாமல் மீட்கும் அல்லது இந்த அதிகாரத்துவம் தொழிலாளர் வர்க்கத்தினால் தூக்கிவீசப்பட்டு சோசலிசத்தை நோக்கி முன்னேறும். மாறாக, பண்டா அக்டோபர் புரட்சியின் வெற்றி மற்றும் 1949 சீனப் புரட்சி மீண்டும் பழைய நிலைக்குச் செல்லமுடியாதுஎன்று அறிவித்தார்.

ட்ரொட்ஸ்கியின் முன்கணிப்பில் உண்மை இருந்தால், ஒரு புதிய கட்சியான நான்காம் அகிலத்தால் வழிநடத்தப்பட்டு முதலாளித்துவ புனருத்தாரணத்தை தடுப்பதற்கு அரசியல் புரட்சியை நடத்த வேண்டும் என்று அழைப்பு நியாயப்படுத்தப்பட்டிருக்கும்என்று பண்டா எழுதினார். “ஆனால் இது சோவியத் ஒன்றியம், சீனா, யூகோஸ்லேவியா அல்லது இந்தோ-சீனாவில் ஒரு செல்திசையாக இல்லை.”

இதற்கு மாறுபட்ட வகையில் பாரியளவிலான சான்றுகள் இருப்பதை ஆராய பண்டா ஒருபொழுதும் ஈடுபட்டதில்லை. சீனாவில் ஏற்கனவே தொடங்கியுள்ள, சோவியத் ஒன்றியத்தில் விரைவாக வளர்ந்துவரும் அலையென வந்த கூட்டு நிறுவனங்களின், நேரடி ஏகாதிபத்திய முதலீடுகள் மற்றும் முழுமையாக தனியார் உடைமைகள் மீட்கப்பட்டது ஆகியவை குறித்து அவர் புறக்கணித்தார். புரட்சிகர மார்க்சிசத்தை நிராகரித்து, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரத் தகமைகளையும் பயனில்லை என ஒதுக்கிய நிலையில், பண்டா  புறநிலை நிகழ்வுகளை ஒட்டி எவ்வளவு முரண்பட்டிருந்தாலும்கூட ஸ்ராலினிசத்தின் நிரந்தர வெற்றித்தன்மையில் தொடர்ந்து நம்பினார். நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவில் இருந்து உடைந்துகொண்ட அனைத்து விட்டோடிகளின் பொதுவான கருத்தைத்தான் பண்டாவும்  பகிர்ந்து கொள்கிறார்.

தன்னுடைய பங்கிற்கு 50 ஆண்டுகள் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் இருந்தபின், ஜெரி ஹீலி நேரடியாக மாஸ்கோவிற்குத் தன் பாதையைக் கண்டார். அக்டோபர் புரட்சியின் 70ம் நிறைவு நாள் களிப்பு நிகழ்ச்சிகளில் கோர்பச்ஷேவ் அதிகாரத்துவம் மற்றும் KGB யின் உத்தியோபூர்வ விருந்தாளியாகச் சென்றார். அவரும் அவருடன் இணைந்து சென்ற வனேசா ரெட்கிரேவ் உம் அதற்குப் பின் பலமுறை சோவியத் தலைநகருக்கு சென்றுள்ளனர்; அங்கு அவர்கள் கோர்பச்ஷேவிற்கு மிகப் பிரியமானவர்களாக நின்று அதிகாரத்துவத்திற்கு அதன் அரசியல் தந்திரோபாய செயல்களுக்கு “ட்ரொட்ஸ்கிச” மூடுதிரையை வழங்கினர்.

ஹீலியின் தவறாகப் பெயர்சூட்டப்பட்டிருந்தமார்க்சிச கட்சியின்மையக் கருத்தாய்வு, கோர்பச்ஷேவ் சோவியத் ஒன்றியத்தில்அரசியல் புரட்சிக்குதலைமை தாங்குகிறார், எனவே நிபந்தனையற்ற ஆதரவு அவருக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதாகும். அதிகாரத்துவத்தின் இழிந்த செல்ல நாயான இவர், இதேபோல் பெய்ஜிங் ஆட்சி வெகுஜனங்களைக் குருதிகொட்ட அடக்குவதற்கு கோர்பச்ஷேவ்  கொடுக்கும் ஆதரவிலும் சேருவார் என்பதில் சந்தேகம் இல்லை. சோவியத் ஒன்றியத்தைப் போலவே, சீனாவிலும், மேலிருந்து செயல்படுத்தப்படும் முதலாளித்துவ மீள்புனருத்தாரண கொள்கைக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் அரசியல் புரட்சி”, ஹீலிக்கும் அவருடைய புதிய புரவலர் கோர்பச்ஷேவிற்கும்எதிர் புரட்சியாகதோன்றுகிறது.

இறுதியில் கிளிப் சுலோட்டர் உள்ளார். இவருடைய WRP பிளவுப் பிரிவு பலமுறையும் பெய்ஜிங் மற்றும் மாஸ்கோவில் ஸ்ராலினிச ஆட்சிகளின் கொள்கைகள் பற்றிய நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் ஆய்வுகளைக் கண்டித்துள்ளது. முதலாளித்துவ மீட்பு ஒருபொழுதும் இயலாது என வலியுறுத்துகிறது. இவர்கள் இப்பொழுது பெரெஸ்ட்ரோய்க்காவின் (Perestroika)  விமர்சனமற்ற ஆதரவாளர்களாக மாறிவிட்டனர்.

சுலோட்டர் குழுவின் Workers Press ல் வெளிவரும் சீன நிகழ்வுகள் பற்றிய பல அறிக்கைகளில், எந்த இடத்திலும் முதலாளித்துவ மீட்சியின் ஆபத்து பற்றிய குறிப்போ, அதிகாரத்துவத்தின் முதலாளித்துவ சார்பு நடவடிக்கைகள் தோற்றுவிக்கும் சமூக சமத்துவமின்மை மற்றும் அதனாலான அடக்குமுறை பற்றிய குறிப்போ கிடையாது. அவைதான் சீனத் தொழிலாள வர்க்கத்தை அரசியல் போராட்டம் ஒன்றிற்கு உந்துதல் கொடுத்து அழைத்துச் செல்லுகின்றன.

Workers Press ன் மே 20 பதிப்பில, “சீனப் புரட்சி நீடுழி வாழ்கஎன்ற தலைப்பில் ஓர் அறிக்கை கூறுவதாவது: “இதுவரை அனுபவிக்காத ஒரு நிலைமையை எப்படிச் சமாளிப்பது என்பது பற்றி அதிகாரத்துவம் ஆழ்ந்த பிளவடைந்துள்ளது. முதலாளித்துவ வர்க்கத்தைப் போல் இல்லாமல், தன்னுடைய நலன்களை வலுப்படுத்துவதற்கு உற்பத்தி சாதனங்களில் சுயாதீனமான பங்கு ஏதும் இதற்கு கிடையாது.”

இது, பெய்ஜிங் அதிகாரத்துவத்திற்கு ஒரு கோழைத்தனமான வக்காலத்து என்பதைவிட வேறு ஒன்றும் இல்லை. அதிகாரத்துவம் உறுதியாகஉற்பத்தி சாதனங்களில் சுயாதீனப் பங்கை கொண்டுள்ளது.” இலஞ்சம் மற்றும் தன் பரந்த சலுகைகளைப் பாதுகாத்தல் என்னும் வகையில், அதிகாரத்துவம் எப்பொழுதும் இந்த உற்பத்தி சாதனங்களை பொருளாதாரம் மற்றும் தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிராகத்தான் தன்னுடைய நலன்களுக்காக திரித்து கையாள்கின்றது.

இன்று டெங் ஜியாவோபிங் தலைமையில் கடந்த தசாப்தத்தில் செயல்படுத்தப்பட்ட முதலாளித்துவ சார்பு பொருளாதார சீர்திருத்தங்கள் அதிகாரத்துவத்தினருக்கும் அவர்கள் குடும்பத்திற்கும்சுயாதீனப் பங்கு கொடுத்திருப்பது மட்டுமின்றி, பொருளாதாரத்தின் பெரும்பாலான பிரிவுகளில் நேரடியாக அல்லது மறைமுகமாக உடமையை கொடுத்துள்ளது. உயர்மட்ட அதிகாரிகள் தங்கள் பதவிகளைப் பயன்படுத்தி இந்த தனியார் நிறுவனங்களுக்கு விநியோகங்களும் ஒப்பந்தங்களையும் கொடுக்கின்றனர். இதனால் தேசியமயமாக்கப்பட்ட துறையின் இழப்பில் தனி உரிமையாளர்களை செல்வக் கொழிப்பு உடையவர்களாக ஆக்குகின்றனர். சீனப் புரட்சியின் வெற்றிகளுக்கு பேராபத்தான இந்த அச்சுறுத்தல்கள்தான், இச்செயற்பாடுகள்தான் மில்லியன் கணக்கான தொழிலாளர்களை அதிகாரத்துவத்துடன் வாழ்வா, சாவா என்னும் போராட்டத்திற்கு கொண்டுவந்துள்ளன. இதைத்தான் சுலோட்டர் கவனத்துடன் மூடி மறைக்கிறார்.

லண்டன் பொருளாதாரப் பயிலகத்தில் பொருளாதாரப் பேராசிரியராக உள்ள சிரில் ஸ்மித் WRP யின் முக்கிய நபராக இந்த ட்ரொட்ஸ்கிசத்திற்கு எதிரான திருத்தல்வாதத் தாக்குதலை நடத்துகிறார். மே 13, 1989ல் Workers Press இல் சீன நிகழ்வுகளுக்கு இடையே வெளியிடப்பட்ட கட்டுரை ஒன்றில் ஸ்மித் பின்வருமாறு எழுதுகிறார்:

அவர்கள் [ICFI] கோர்பச்ஷேவின் கிளாஸ்நோஸ்ட்டையும் பெரெஸ்ட்ரோய்க்காவையும் முதலாளித்துவத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற ஒரு திட்டமிட்ட, முழு நனவுடன் செய்யப்படும் நடவடிக்கை என்பதாகத்தான் காண்கின்றனர்.

சோவியத் தொழிலாள வர்க்க இயக்கத்திற்கு எதிராக அதிகாரத்தின் ஒரு பிரிவு தன்னை பாதுகாக்கும் முயற்சியை பிரதிபலிப்பதுதான் இம்மாற்றங்கள் என்ற எந்தவித மதிப்பீடுகளையும் அவர்கள் நிராகரிக்கின்றனர்.”

முதலாளித்துவமுறை மீள்புனருத்தாரணம் அதிகாரத்துவம் தன்னையே தொழிலாள வர்க்கத்திடம் இருந்து பாதுகாத்தல் என்று காட்டிக் கொள்வது, இவை இரண்டும் ஏதோ முற்றிலும் எதிரிடையான கருத்துக்கள் போல் என்பது, ட்ரொட்ஸ்கிசத்திற்கு சுலோட்டர் குழு கொண்டுள்ள விரோதப் போக்கைத்தான் வெளிப்படுத்துகிறது. தொழிலாள வர்க்கத்திடம் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் துல்லியமாக அதிகாரத்துவம் தன்னை ஒரு உண்மையான ஆளும் வர்க்கமாக மாற்றிக் கொள்ள விரும்புகிறது.

ட்ரொட்ஸ்கி காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சி என்னும் நூலில் எழுதியுள்ளது போல், “அதிகாரத்துவம் அமைதியான முறையில், தானாகவே சோசலிச சமத்துவத்திற்காக தன்னை அழித்துக் கொள்ளும் என்று நம்புவதற்கில்லை. தவிர்க்க முடியாமல் அது எதிர்வரும் காலகட்டங்களில் சொத்துடமை உறவுகளில்தான் தனக்கு ஆதரவைத் தேட முற்படும்…. ஒரு நிறுவனத்தின் இயக்குனராக இருந்தால் மட்டும் போதாது பங்குதாரராகவும் இருக்க வேண்டும். இந்த முக்கியமான பிரிவில் அதிகாரத்தின் வெற்றி என்பது அது ஒரு புதிய செழித்திருக்கும் வகுப்பு என்று தன்னை மாற்றிக்கொள்ளும் என்ற பொருளைத் தரும்.”

ஒரு முந்தைய கட்டுரையில் சுலோட்டர் குழு, கோர்பச்ஷேவின் மீளமைப்பு கொள்கைகளை எதிர்ப்பது அதிகாரத்துவத்தின் லிகஷாவ் Ligachev- பிரிவிற்கு ஆதரவு என்னும் பொருளைத் தருகிறது என்று வலியுறுத்தியது.

இவ்வகையில், சுலோட்டர் பிரிவு அடிப்படையில் பண்டா முன்வைத்தமீண்டும் பழைய நிலைக்குச் செல்லமுடியாது” ("irreversibility") என்னும் கோட்பாட்டைத்தான் ஏற்றுள்ளது. ஹீலியைப் போல, ஆனால் இன்னும் சற்றே எச்சரிக்கை உணர்வுடன், கோர்பச்ஷேவின் முதலாளித்துவ சார்பு வேலைத்திட்டத்திற்கு ஆதரவு கொடுத்து ட்ரொட்கிச இயக்கம் தொழிலாள வர்க்கத்திடம் ஒரு சுயாதீன நிலைப்பாட்டிற்காக போராட முடியாது என்றும் அதிகாரத்துவத்தின் பிரிவுகளில் ஒன்றைத்தான் நம்ப வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.

இந்த இரு கருத்தாய்வுகளும் தவிர்க்கமுடியாமல் WRP யின் மூன்று ஓடுகாலிப் பிரிவுகளின் அரசியலிலும் பிணைந்துள்ளது. இவை பாட்டாளி வர்க்க மார்க்சிசத்தின் மீது தங்களுடைய அடித்தளத்தைக் கொள்ளாமல் குட்டி முதலாளித்துவ சந்தர்ப்பவாதத்தின் மீது அடித்தளத்தைக் கொண்ட அனைத்துத் திருத்தல்வாதக் குழுக்களிலும் உள்ளன. முதலாளித்துவ மீள்புனருத்தாரணம் சாத்தியமில்லை, அதிகாரத்துவம் தொழிலாளர் அரசுகளுக்குள் ஒரு எதிர்ப்புரட்சிப் பாத்திரம் வகிக்கின்றது என்பதை மறுக்கையில், இக்குழுக்கள் வெளிப்படையாக அரசியல் புரட்சியை நிராகரிக்கின்றன. பண்டா, ஹீலியுடனும் சுலோட்டருடனும் சேர்ந்து செய்தது போல், அல்லது இதைத் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக அதிகாரத்துவத்தின் ஏதேனும் ஒரு பிரிவிற்கு வெளிப்படையான அல்லது மறைமுகமான ஆதரவைக் கொடுப்பதற்கு அடையாளச் சொல்லாகப் பயன்படுத்துகின்றன.

அனைத்துலகக் குழுவின் பிளவு அதன் நான்காம் ஆண்டு நிறைவை அடையும் தறுவாயில், WRP யின் இந்த மூன்று முன்னாள் தலைவர்களையும் பிரிப்பதில் எந்தவிதக் கொள்கை அல்லது வேலைத்திட்டரீதியான பிரச்சினைகளும் இல்லை என்பதுதான் தெளிவாகிறது. இவர்கள் அனைவருமே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கும் ட்ரொட்ஸ்கிசத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கும் எதிராக ஒன்றாக இணைந்து நிற்பவர்கள்.

முதலாளித்துவத்தை மீள்புனருத்தாரணம் செய்வதற்கு பெய்ஜிங்கின் அதிகாரத்துவம் முயற்சிகள் மேற்கொண்டுள்ள சூழ்நிலையின்கீழ், சீனத் தொழிலாளர்களிடையே மகத்தான புரட்சிகர எழுச்சிகளை தூண்டியிருக்கையில், இவர்கள் அனைத்து பப்லோவாதப் போக்குகளின் நிலைப்பாட்டில் நேரடி முகவர்களாக இணைந்து ஒன்றாக நிற்பதுடன், அதிகாரத்துவத்திற்கு வக்காலத்து வாங்குபவர்களாகவும் நிற்கின்றனர்.

சீனாவில் நடந்துள்ள வியத்தகு நிகழ்வுகள் கடந்த நான்கு தசாப்தங்களாக உலக முதலாளித்துவத்தின் உறவுகள் தங்கியிருந்த உடன்பாடுகள், அமைப்புகள் ஆகியவை உடைந்துகொண்டிருக்கும்  காலகட்டத்தின் ஆதிக்கத்தில் வாழ்கிறோம் என்பதைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இந்த வரலாற்றுத் தன்மை வாய்ந்த நெருக்கடி தொழிலாளர் இயக்கத்திலுள்ள அனைத்துவகை ஏகாதிபத்திய முகவர்களின் திவால்தன்மையையும் மிக விரைவாக வெளிப்படுத்துகிறது.

தியனன்மென் சதுக்கத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், மாவோயிசம் சோசலிசத்திற்கான போராட்டத்திற்கும், ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் ஒரு புதிய முன்னேற்றப் பாதையை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்ற முழுக் கட்டுக்கதையையும் முற்றிலும் அம்பலப்படுத்தியுள்ளது. குருதியால் மூடப்பட்டநிலையில், இது தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்புரட்சிகரமான விரோதி என்று அனைவருக்கும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. சோசலிசப் புரட்சியை கோர்பச்ஷேவ் அதிகாரத்துவம் வெளிப்படையாக கைவிடத் தொடங்கியது மற்றும் ஒவ்வொரு முதலாளித்துவ தேசியவாதத் தலைமையும் தொடர்ச்சியாக ஏகாதிபத்தியத்திற்கு ஒன்றன்பின் ஒன்றாக நிபந்தனையற்றுச் சரணடைந்ததை தொடர்ந்து இதுவும் வந்துள்ளது.

சீன நிகழ்வுகள், உலக சோசலிசப் புரட்சியின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக ஸ்ராலினிச அதிகாரத்துவங்களுக்கு எதிரான அரசியல் புரட்சியில் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கின்றது. ஸ்ராலினிசம் மற்றும் அதன் குட்டி முதலாளித்துவத் திருத்தல்வாத வக்காலத்து வாங்குபவர்களுக்கு எதிராக பாட்டாளி வர்க்கப் புரட்சி என்ற முன்னோக்கை முன்னெடுத்துச் செல்லும் நான்காம் அகிலத்தின் நீடித்த போராட்டத்தின் மகத்தான வரலாற்று முக்கியத்துவத்தையும் இவை நிரூபிக்கின்றன.