International May Day 2014

இணையவழி பொதுக்கூட்டம்

மே 4, ஞாயிறு

சோசலிச சமத்துவத்துக்காகப் போராடு! ஜனநாயக உரிமைகளை காப்பாற்று! யுத்தத்துக்கான உந்துதலை நிறுத்து! தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்துக்காக!

உலக சோசலிச வலைத் தளத்துடன்
மே தினத்தை கொண்டாடுங்கள்

சோசலிச சமத்துவத்துக்காக போராடு! ஜனநாயக உரிமைகளை காப்பாற்று! யுத்தத்துக்கான உந்துதலை நிறுத்து! தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்துக்காக!

2014 சர்வதேச மே தினத்தை குறிக்கும் வகையில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் உலக சோசலிச வலைத் தளமும் சமத்துவமின்மை, சர்வாதிகாரம் மற்றும் யுத்தத்துக்கும் எதிராக ஒரு உலக இணையவழி கூட்டத்தை ஏற்பாடுசெய்கின்றன. அனைத்து தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கும் இந்த தன்நிகரில்லாத நிகழ்வில் பங்குபற்ற இன்றே பதிவு செய்யுமாறு நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம். இந்தக் கூட்டத்தில் உலகம் பூராவும் இருந்து வரும் பேச்சாளர்கள் மனித குலம் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகளைப் பற்றி பேசுவர்.

வங்கிகளையும் நிதிய அமைப்பு முறையையும் பிணை எடுத்துள்ள பெருநிறுவன மற்றும் நிதிய உயரடுக்கின் அரசியல் பிரதிநிதிகள், மிருகத்தனமான சிக்கன நடவடிக்கைகள் மற்றும் சம்பள வெட்டுக்களின் ஊடாக இதற்கு தொழிலாள வர்க்கத்தை விலை கொடுக்கச் செய்ய கட்டாயப்படுத்துகின்றனர். சமூக வெடிப்பை எதிர்கொள்வதற்கான தயாரிப்பில், மிகவும் அடிப்படையான ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. நாம் முதலாம் உலக யுத்தத்தின் 100வது ஆண்டு நிறைவை அண்மிக்கின்ற நிலையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகளால் உக்ரேனில் ஏற்பாடு செய்யப்பட்ட வலதுசாரி சதி, பல தலைமுறைகளுக்கு மிகவும் ஆபத்தான சர்வதேச புவி-சார் நெருக்கடிகளை உருவாக்கிவிட்டுள்ளது.

வெகுஜனங்களின் பரந்த பெரும்பான்மையினரின் குரல் கேட்க வேண்டும்! ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாள வர்க்கம் எழுந்து நின்று, மனித இனத்தை அழிவுக்குள் தள்ளிச் செல்லும் பெரும் நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் கொள்கைகளுக்கு எமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டிய கட்டம் இது.

ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு மற்றும் பணக்காரர்களின் நலன்களுக்காக வர்க்க உறவுகளை மறுசீரமைப்பதற்கான ஒரு பூகோள பிரச்சாரமும் மீண்டும் தலைநீட்டியுள்ள நிலையில், முன்னெப்போதையும் விட அதிகமாக தொழிலாள வர்க்கத்தின் கோட்பாட்டுச் சொல் “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்” என்பதாக இருக்க வேண்டும்.


கூட்டம் நடக்கும் திகதி மற்றும் நேரம்

ஞாயிறு,
மே 4, 2014 அன்று கூட்டம் நடைபெறும்

நிகழ்வின் பின்னர் பதிவுசெய்தவர்களுக்கு ஓலிப்பதிவை கேட்க முடியும்

நேர வலயங்கள்

அமெரிக்க கிழக்கு நேரம் (EDT)): மு.ப. 11:00 – பி.ப. 3:00
லொஸ ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா (PDT): மு.ப. 8:00 – பி.ப. 12:00
மெக்சிக்கோ நகரம், மெக்சிக்கோ: மு.ப. 10:00 – பி.ப. 2:00
லண்டன், இங்கிலாந்து (BST)பி.ப. 4:00 – பி.ப. 8:00
பேர்லின், ஜேர்மனி: பி.ப. 5:00 – பி.ப. 9:00
கெய்ரோ, எகிப்து: பி.ப. 5:00 – பி.ப. 9:00
மொஸ்கோ, ரஷ்யா: பி.ப. 7:00 – பி.ப. 11:00
இந்தியா மற்றும் இலங்கை: பி.ப. 8:30 – அதிகாலை 12:30
பெய்ஜிங், சீனா: பி.ப. 11:30 – அதிகாலை 3:30
சிட்னி, ஆஸ்திரேலியா : அதிகாலை 1:00 – அதிகாலை 5:00 (திங்கள், மே 5)

உங்களது நேர வலயத்தில் நேரத்தை காண இங்கே அழுத்தவும் .

பேச்சாளர்கள்

அமெரிக்க சோசகயின் தேசியத் தலைவரும் WSWS சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவருமான
டேவிட் நோர்த்

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் செயலாளர் பீட்டர் சுவார்ட்ஸ்
பிரித்தானிய சோசகயின் தேசியச் செயலாளர்
கிறிஸ் மார்ஸ்டன்

இலங்கை சோசகயின் பொதுச் செயலாளர்
விஜே டயஸ்

ஆஸ்திரேலிய சோசகயின் தேசியச் செயலாளர்
நிக் பீம்ஸ்

பிரித்தானிய சோசகயின் உதவி தேசியச் செயலாளர்
ஜூலி ஹைலண்ட்

மற்றும் பலர்.

சமூக வலைத் தளங்கள்

Social Media

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit.

இணையமூல சர்வதேச மேதின கூட்டத்தில் இணைந்துகொள்ள இன்றே பதிவு செய்யுங்கள்

இந்த சர்வதேச மே தினக் கூட்டம் யூ டியூப் ஒலிபரப்பு ஊடாக இடம்பெறும். பதிவு செய்த அனைவருக்கும் நிகழ்வுக்கு முதல் நாள் ஒலிபரப்புக்கான இணைப்பு ஒன்று அனுப்பி வைக்கப்படும். இந்த நிகழ்வு இலவசமானதும் பொதுமக்களுக்கானதும் ஆகும். இதற்கான செலவுகளை ஈடு செய்வதற்காக,கீழே உள்ள இரண்டாவது தேர்வில்,குறிப்பிட்ட ஒரு தொகையை பதிவுசெய்து நிதி உதவி செய்யுமாறு உங்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம். உங்களால் இங்கே அழுத்துவதன் மூலம் WSWSக்கு நேரடியாக நிதியுதவி செய்யவும் முடியும்.

பதிவு செய்யும் முறையில் ஏதாவது கேள்விகள் அல்லது பிரச்சினைகள் இருந்தால் இங்கே அழுத்தவும்.

Register

The International May Day Rally rally will be held via Youtube broadcast. A link to the broadcast will be sent to all registrants a day prior to the event.

The event is free and open to the public.To help meet costs, we urge you to make a donation by entering an amount in the second option below.

If you have any questions or problems with the registration process, click here.

Personal details
  • emails only