ஞாயிறு, ஏப்ரல் 30 அன்று, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்துக்கான வரலாற்று நாளான மே தினத்தை கொண்டாடுவதற்காக, ஒரு சர்வதேச இணையவழி கூட்டத்தை நடத்தவுள்ளது. குறித்த நிகழ்வு (அமெரிக்க) கிழக்கு பகல் நேரம் காலை 11:00 மணிக்கு wsws.org/mayday இணைப்பில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

உலகம் முழுவதும் இருந்து நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முன்னணி பிரதிநிதிகள் கூட்டத்தில் பேசுவதோடு, போர், சர்வாதிகாரம் மற்றும் முதலாளித்துவ முறைமைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தும் போராட்டத்தைப் பற்றி உரையாற்றுவார்கள்.