இஸ்ரேல் நிறுவப்பட்டு 75 ஆண்டுகள்: நக்பா மற்றும் யூத-அரபு ஒற்றுமைக்கான போராட்டம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

இஸ்ரேல் அரசு ஸ்தாபிக்கப்பட்டு 75வது ஆண்டு விழா மே 14 அன்று நடைபெற்றது. இது ஹீப்ரு நாட்காட்டியின்படி ஏப்ரல் 25 ஆக இஸ்ரேலில் அதிகாரப்பூர்வமாக குறிக்கப்பட்டுள்ளது. இந்த அரசை உருவாக்குவதற்காக நடத்தப்பட்ட போரில் மற்றும் இஸ்ரேலின் அடுத்தடுத்து நடந்த போர்களில் இறந்தவர்களை அதேபோல் அரசுக்கு சேவை செய்வதற்காக  செயலூக்கத்துடன் கடமையாற்றியவர்கள் ஆகியோரை நினைவு கூருவதற்கான நினைவு நாளாக ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. 

உத்தியோகபூர்வ ஆண்டுவிழா ஒரு முடக்கப்பட்ட நிகழ்வாக இருந்தது. பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கூட்டணி அரசாங்கத்தின் பாசிச, மத மற்றும் பாலஸ்தீனிய பகுதிகளில் குடியேற்றப்பட்டவர்களின் கட்சிகளின் அரசியல் சாசன சதியின் மூலமாக உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் திட்டங்களுக்கு எதிராக, அரசின் வரலாற்றில் யூத இஸ்ரேலியர்களின்  மிகப்பெரிய  வெடித்தெழல் மத்தியில் இது நடைபெற்றது.  

இஸ்ரேலின் வரலாற்றில் மிகத் தீவிர வலதுசாரி அரசாங்கத்திற்கு ஏற்பட்ட எதிர்ப்பின் அளவு, அரசின் உயிர்வாழ்வை அச்சுறுத்தக்கூடிய அளவுக்கு மற்றும் அது உள்நாட்டுப் போராக சரிந்து செல்லக்கூடும் என்ற தொடர்ச்சியான எச்சரிக்கைகளுக்கு வழிவகுத்தது. ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள பாலஸ்தீனியர்கள், இஸ்ரேலின் சொந்த அரபு குடிமக்கள் மற்றும் அண்டை அரசுகள் எல்லாவற்றிற்கும் மேலாக ஈரான் மற்றும் சிரியா மற்றும் இஸ்ரேலை எதிர்க்கும் சில பாலஸ்தீனிய போர்க்குணமிக்க பிரிவுகளை ஆதரிப்பவர்களை குறிவைத்து நெதன்யாகு வேண்டுமென்றே போர் வெறியை தூண்டியதும் இதில் உள்ளடங்கும். 

பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவின் நீதித்துறை மறுசீரமைப்பு திட்டத்தை இஸ்ரேலியர்கள் எதிர்த்தனர், மார்ச் 26, 2023 அன்று, இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில், இஸ்ரேலிய தலைவர் தனது பாதுகாப்பு அமைச்சரை பதவி நீக்கம் செய்ததை அடுத்து, போராட்டத்தின் போது நெருப்பு மூட்டி,நெடுஞ்சாலையில் அணிவகுத்திருக்கும் மக்கள். [AP Photo/Ohad Zwigenberg]

கடந்த டிசம்பரில் நெதன்யாகுவும் அவரது தீவிர வலதுசாரி அணியும் பதவியேற்றதிலிருந்து, சமூக மற்றும் அரசியல் கருத்து வேறுபாடுகளை அடக்குவதற்கு வசதியாக நீதித்துறையின் இழப்பில் தனது அதிகாரத்தை ஒருங்கிணைக்க அவரது அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் பெரும்பகுதியை நிரந்தரமாக இணைப்பதற்கும் பாலஸ்தீனியர்களுக்கு மட்டுமல்ல ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கும் எதிரான இரத்தக்களரி இராணுவத் தலையீடுகளுக்கும் அரசாங்கம் வழி வகுக்க முயல்கிறது. நெதன்யாகுவின் கூட்டணி, பாலஸ்தீனிய பாராளுமன்ற உறுப்பினர்களை இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் பணியாற்றுவதிலிருந்து தகுதி நீக்கம் செய்யவும், 20 சதவீத இஸ்ரேலிய குடிமக்களின் வாக்குரிமையை நிரந்தரமாக ரத்து செய்யவும், அவர்களின் கட்சிகள் தேர்தலில் நிற்பதைத் தடை செய்யவும் திட்டமிட்டுள்ளது.

இது இஸ்ரேலின் 2018 அடிப்படைச் சட்டம், தேசம் அரசு சட்டம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட நிறவெறி-பாணி அரசியலமைப்பு மாற்றங்களை ஒருங்கிணைக்கும் யூத மேலாதிக்கத்தை அரசின் சட்ட அடித்தளமாக பொறிக்கும். 'இஸ்ரேல் அரசில் தேசிய சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்துவதற்கான உரிமை யூத மக்களுக்கு மட்டுமே உரித்தானது.' என்று இந்த சட்டம் அறிவிக்கிறது. இஸ்ரேலின் தலைநகராக 'முழுமையான மற்றும் ஒன்றுபட்ட' ஜெருசலேம் முழுவதையும் நிரந்தரமாக இணைப்பதற்கான ஆதரவை அது அறிவிக்கிறது மற்றும் குடியேற்ற கட்டுமானத்தை 'தேசிய மதிப்பாக' அங்கீகரிக்கிறது. மேலும் அரபு மொழியை அதிகாரப்பூர்வ அரசு மொழியிலிருந்து நீக்குவது என்பது இஸ்ரேலின் சொந்த அரபு குடிமக்களுக்கு இரண்டாம் தர அந்தஸ்தை வழங்குகிறது. இதற்கு பல மனித உரிமை அமைப்புகள் சாட்சியமாக  இருக்கின்றன. 

இந்த மாற்றங்கள் குறித்த உத்தியோகபூர்வ எதிர்ப்பானது, முதலாளித்துவ சியோனிசக் கட்சிகளின் முற்றிலும் வேறுபட்ட குழுவினால் வழிநடத்தப்படுகிறது. நெதன்யாகுவுடனான அதன் கருத்து வேறுபாடுகள் என்பன, அவர் அரசின் நலன்களுக்கு ஆபத்தை விளைவிப்பதான கவலையை பிரதிபலிக்கிறது.

பாலஸ்தீனியர்கள் மற்றும் அரேபிய இஸ்ரேலியர்களின் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான எதிர்ப்பை, இஸ்ரேலில் உருவாகி வரும் பாசிச அச்சுறுத்தலுக்கு எதிரான எதிர்ப்புடன் எந்த வகையிலும் இணைப்பதை நெத்தன்யாகுவின் எதிர்ப்பாளர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். இஸ்ரேல்-பாலஸ்தீனத்திற்கு அப்பால் பரவும் சர்வாதிகாரத்தை மற்றும் போரின் ஆபத்தை எதிர்ப்பதற்கான வழி கண்டுபிடிக்கப்பட வேண்டுமானால், இவை அனைத்தும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய மையப் பிரச்சினையாகும்.

இஸ்ரேல் கிரிகோரியன் நாட்காட்டியை ஏற்றுக்கொண்டிருந்தால், பாலஸ்தீனியர்கள் அனுபவித்த 'பேரழிவு (அல் நக்பா)' மற்றும் இஸ்ரேல் உருவாகிறதுக்கு முன்னும் பின்னும் பெரும்பாலான பாலஸ்தீனியர்கள் இடம்பெயர்ந்ததைக் குறிக்கும் நக்பா தினத்திற்கு முன்னதாக இஸ்ரேலின் ஸ்தாபக ஆண்டு நிகழ்வு நடந்திருக்கும். இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் இடையே உள்ள உறவை ஆராய்வதன் மூலம் மட்டுமே, யூதர்கள் மற்றும் அரேபியர்கள் ஆகிய இருவரையும் சியோனிசம் மூழ்கடித்த அவநம்பிக்கையான மற்றும் சோகமான சூழ்நிலைக்கு ஒரு அரசியல் பதிலை உருவாக்க முடியும்.

இஸ்ரேல் நிறுவப்படல்

இஸ்ரேலில் விரிவடையும் நெருக்கடியானது, சியோனிச அரசிற்குள் அரசியல் மற்றும் கருத்தியல் ரீதியாக ஆழமாக வேரூன்றிய முரண்பாடுகளின் விளைபொருளாகும். இது, உலகின் மிகவும் சமத்துவமற்ற நாடுகளில் ஒன்றில் தொழிலாள வர்க்கத்திற்கும் ஆளும் உயரடுக்கிற்கும் இடையே வளர்ந்து வரும் பிளவுகளால் தூண்டப்படுகிறது. 1930கள் மற்றும் 1940களில் பாசிசத்தால் ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆறு மில்லியன் யூதர்கள் இன அழிப்பில் கொல்லப்பட்டதில் அது  உச்சக்கட்டத்தை அடைந்தது, இந்தப் பேரழிவில் தான் இஸ்ரேலின் அஸ்திவாரம் வேரூன்றி உள்ளது.  

1944 ஆம் ஆண்டு அவுஷ்விட்ஸில் ஹங்கேரிய யூதர்கள் 'தேர்வு' செய்யப்படுகின்றனர். 400,000 மக்களைக் கொண்ட ஹங்கேரியின் கிட்டத்தட்ட முழு யூத சமூகமும் 1944 கோடையில், நாஜிக்களின் வதை முகாமான அவுஷ்விட்ஸில் நச்சு வாயு பாய்ச்சப்பட்டு அழிக்கப்பட்டனர்.

இஸ்ரேல் நிறுவப்பட்ட 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் 1998ல் பில் வான் ஓகென் WSWSல் எழுதிய முன்னோக்கில் இவ்வாறு விளக்கப்பட்டது:

இஸ்ரேலின் பிறப்பு மற்றும் பரிணாம வளர்ச்சியில் 20 ஆம் நூற்றாண்டின் தீர்க்கப்படாத பெரும் முரண்பாடுகள் குவிந்துள்ளன. அதன் முக்கிய தோற்றம் மனிதகுலத்திற்கு எதிரான வரலாற்றின் மிகப்பெரிய குற்றங்களில் ஒன்றான நாஜி இன அழிப்பில் உள்ளது.  ஆறு மில்லியன் ஐரோப்பிய யூதர்கள் கொல்லப்பட்டது என்பது சோவியத் ஒன்றியம் மற்றும் கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஸ்ராலினிச சீரழிவால் ஏற்படுத்தப்பட்ட தொழிலாள வர்க்க இயக்கத்தின் நெருக்கடிக்கு கொடுக்கப்பட்ட பயங்கர விலையாகும். ஸ்ராலினிசத்தின் குற்றங்களும், தொழிலாளர் இயக்கத்தின் மீதான அதன் மேலாதிக்கமும், நெருக்கடியில் மூழ்கிய முதலாளித்துவ அமைப்புமுறைக்கு தொழிலாள வர்க்கம் முற்றுப்புள்ளி வைக்க விடாமல் தடுத்தது. அது பாசிசத்தில் தான் அதன் இறுதிப் பாதுகாப்புக்கான எல்லையைக் கண்டது.

தொழிலாள வர்க்கத்தின் தோல்விகள், ஸ்ராலினிசத்தின் குற்றங்கள் மற்றும் இன அழிப்பு பயங்கரங்கள் ஆகியவை இஸ்ரேலின் உருவாக்கத்திற்கான வரலாற்று நிலைமைகளை உருவாக்கியது மற்றும் சியோனிசத்தை உலக யூதர்களுடன் சமன்படுத்த அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் ஸ்ராலினிசத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட முயற்சி, சியோனிச இயக்கத்தின் பெரும் வெற்றிகரமான முயற்சியாக இருந்தது. இது ஒரு இயக்கம் மற்றும் இறுதியாக ஊக்கமின்மை மற்றும் விரக்தியின் அடிப்படையில் நிறுவப்பட்ட ஒரு அரசாகும். 

ஸ்ராலினிசத்தின் துரோகங்கள் சோசலிச மாற்றீடு குறித்து ஏமாற்றத்தை உருவாக்கியது, அது உலகம் முழுவதிலும் உள்ள யூத உழைக்கும் மக்களுக்கு அத்தகைய சக்திவாய்ந்த கவர்ச்சியாக இருந்தது. ஜேர்மன் பாசிசத்தின் குற்றங்கள் ஐரோப்பாவில் அல்லது வேறு எங்கும் சரி யூத-விரோதத்தை தோற்கடிக்க இயலாது என்பதற்கான இறுதி ஆதாரமாக முன்வைக்கப்பட்டது. இதற்கு சியோனிசத்தின் பதில், ஒரு அரசு மற்றும் இராணுவத்தைப் பெறுவது மற்றும் யூத மக்களின் வரலாற்று அடக்குமுறையாளர்களை அவர்களின் சொந்த விளையாட்டில் தோற்கடிப்பது  என்பதாகும்.

ஐரோப்பாவின் நாடற்ற மற்றும் வீடற்றிருந்த எஞ்சியிருக்கும் யூத மக்கள் மிகவும் திட்டவட்டமான பூகோள அரசியல் காரணங்களுக்காக பாலஸ்தீனத்திற்கு அனுப்பப்பட்டதால், சியோனிசத்தின் முயற்சிகள் வெற்றியடைந்தன. நாஜி ஒடுக்குமுறையிலிருந்து தப்பியோடிய யூதர்களுக்கு அமெரிக்க எல்லைகளை மூடிய வாஷிங்டன், பழைய காலனித்துவ சக்திகளான பிரிட்டன் மற்றும் பிரான்சின் இழப்பில், அப்பிராந்தியத்தில் தனது சொந்த மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கான ஒரு கருவியாக மத்திய கிழக்கில் யூத அரசு உருவாகுவதைக் கண்டது.

இஸ்ரேலை ஒரு யூத நாடாக நிறுவுவது என்பது, துன்புறுத்தல் மற்றும் மிருகத்தனத்தில் இருந்து தஞ்சம் அடைந்த மக்களை ஒரு பெரிய குற்றத்தில் ஈடுபடுத்துவதன் மூலம் மட்டுமே சாத்தியமானது. கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பாலஸ்தீனியர்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டதுடன், அவர்களின் நிலங்கள் ஒரு மிருகத்தனமான சுத்திகரிப்பு பிரச்சாரத்தின் மூலம் கைப்பற்றப்பட்டன.

சியோனிசத்தால் முன்வைக்கப்பட்ட இஸ்ரேலின் ஸ்தாபக கட்டுக்கதைகளின்படி, யூதர்கள் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு வெளியேற்றப்பட்ட அவர்களின் விவிலிய 'வாக்குறுதியளிக்கப்பட்ட நிலத்திற்கு' திரும்பியுள்ளனர் என்பதாகும். மேலும், ஒரு யூத முதலாளித்துவ அரசை நிறுவுவது என்பது, 'நிலம் இல்லாத மக்கள், மக்கள் இல்லாத நிலம்' என்ற கூற்றுக்களை உள்ளடக்கியிருந்தது.   

இந்த பிந்தைய கூற்று (மக்கள் இல்லாத நிலம்) வெளிப்படையான ஒன்று. ஆனால், அரசியல் ரீதியாக அவசியமான பொய்யாகும். 

1922 இல் பாலஸ்தீனத்தை கட்டுப்படுத்த பிரிட்டனுக்கு 25 ஆண்டுகால 'ஆணை' வழங்கிய, இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து புதிதாக உருவாக்கப்பட்ட நாடுகளின் கழகம் என்பதன் வாரிசான ஐக்கிய நாடுகள் சபை, பாலஸ்தீனத்தை இரண்டு தனித்தனி மற்றும் அடுத்தடுத்து இல்லாத அரபு மற்றும் யூத நாடுகளாகப் பிரிக்க முன்மொழிந்தது. (இப்போது ஜோர்டானாக உள்ளதை பிரிட்டன் உருவாக்கிய பிறகு, அதன் அளவு குறைக்கப்பட்டது) ஒருபோதும் அங்கீகரிக்கப்படாத பிற்போக்குத்தனமான இந்த முன்மொழிவு, யூதர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போரை வெடிக்கச் செய்தது. மற்றும் எகிப்து, ஜோர்டான், ஈராக் மற்றும் பிற அரச அரேபியர்களை உள்ளடக்கிய 1948 அரபு-இஸ்ரேலியப் போரைத் தூண்டியது.

ஜெருசலேம் சர்வதேசக் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், இப்போது ஜோர்டானாக உள்ளதை இரண்டு தனித்தனி மற்றும் தொடர்பற்ற அரபு மற்றும் யூத நாடுகளாக உருவாக்குதல் போன்றவை ஒருபோதும் அங்கீகரிக்கப்படாத பிற்போக்குத்தனமான முன்மொழிவாக இருந்தது. இது, யூதர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே ஒரு உள்நாட்டுப் போரையும் எகிப்து, ஜோர்டான், ஈராக் மற்றும் பிற அரபு நாடுகளை உள்ளடக்கிய 1948 அரபு-இஸ்ரேலியப் போரையும் தூண்டியது. பிந்தையது பிரிட்டனின் ‘’சட்ட உரிமை கட்டளை' காலாவதியானதைத் தொடர்ந்து மே 14 அன்று இஸ்ரேல் அரசால் பிரகடனம் செய்யப்பட்டது

இஸ்ரேல் நிறுவப்பட்டபோது, யூதர்கள் எண்ணிக்கை சட்ட பூர்வ பாலஸ்தீனத்தின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கை மட்டுமே கொண்டிருந்தது. அதில் 1,157,000 பாலஸ்தீனிய முஸ்லீம்கள், 146,000 கிறிஸ்தவர்கள் மற்றும் 580,000 யூதர்கள் உள்ளடங்கியிருந்தனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இஸ்ரேலாக மாறிய இடத்தில் சுமார் 200,000 பாலஸ்தீனியர்கள் மட்டுமே இருந்தனர். அவர்கள் 1966 வரை இராணுவ ஆட்சியின் கீழ் இருக்க வேண்டியிருந்தது. 

மேட்டு  கலிலியில் உள்ள சசா என்ற அரபு கிராமத்துடன் போரில் இஸ்ரேலிய படையினர். [Photo by National Library of Israel/digital ID. 990040390490205171/Gideon Markowiz / CC BY-SA 3.0]

இப்போரில், பல ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர், அதே சமயம் குறைந்த பட்சம் 700,000 பேர் அவர்களின் இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர், தப்பியோடியவர்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக மாறினார்கள், அங்கே தற்காலிக கூடார முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். 

அங்கே குறைந்தபட்சமாக 31 படுகொலைகள் நடைபெற்றதாக உறுதிப்படுத்தப்பட்டன. அட்டூழியங்கள் குறித்த கணக்கெடுப்பில், அல்-தவாய்மா கிராமத்தில், இஸ்ரேலியப் படைகள் பாலஸ்தீனக் குழந்தைகளை 'தடிகளால் அடித்து அவர்களின் மண்டையை பிளந்தார்கள்' மற்றும் சாலிஹாவில், அங்கு வாழ்ந்து வந்த 60 முதல் 80 வரையிலான பாலஸ்தீன குடிமக்களை ஒரு கட்டிடத்திற்குள் உள்ளே தள்ளிய பின்னர், அக்கட்டிடத்தை தகர்த்து அவர்களைக் கொன்றனர். 

இப்பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட பாலஸ்தீனியர்கள், அவர்களது சந்ததியினருடன், இஸ்ரேலுக்குத் திரும்ப தடை விதிக்கப்பட்டது. அவர்களது வீடுகளும் சொத்துக்களும் இஸ்ரேலிய அரசால் கைப்பற்றப்பட்டன. அரபு-இஸ்ரேல் போரின் போது 1948 இல் நிறைவேற்றப்பட்ட சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. தீர்மானம் 194 ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, நக்பா மற்றும் இனச் சுத்திகரிப்பு அல்லது பாலஸ்தீனியர்கள் தமது சொந்த நிலங்களுக்கு திரும்புவதற்கான உரிமை ஆகியவற்றை ஏற்க இஸ்ரேல் மறுத்துவிட்டது.

மாறாக, இஸ்ரேலின் 1950 ஆம் ஆண்டு திரும்பும் சட்டம் மற்றும் 1952 ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டம் என்பன, ஒவ்வொரு யூதருக்கும் இஸ்ரேலுக்கு வந்தவுடனேயே உடனடி குடியுரிமைக்கான உரிமையை வழங்கியது. போருக்குப் பிந்தைய மூன்று ஆண்டுகளில், சுமார் ஒரு மில்லியன் யூதர்கள் ஐரோப்பாவின் இடிபாடுகளிலிருந்தும், முக்கியமாக மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவிலிருந்து இஸ்ரேலில் குடிபெயர்ந்தனர். 

இயல்பாகவே ஒரு ஜனநாயக விரோத சமூகம்

அதன் தொடக்கத்திலிருந்தே, பாலஸ்தீனியர்களை வலுக்கட்டாயமாக அடக்கி அண்டை நாடுகளுடனான போரில் கட்டமைக்கப்பட்ட இஸ்ரேல், ஒரு உண்மையான ஜனநாயக சமுதாயத்தை உருவாக்குவதற்கு இயல்பாகவே இலாயக்கற்று இருந்தது. விரோதமான அண்டை நாடுகளால் சூழப்பட்ட மற்றும் மதப் பிரத்தியேகவாதத்தை நிலைநிறுத்துவதை அடிப்படையாகக் கொண்ட இராணுவமயமாக்கப்பட்ட அரசாக இஸ்ரேல் வெளிப்பட்டது. அது விரைவாக அணுசக்தி திறன்களை வளர்த்து, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அதிக நிதியுதவி பெற்ற படை அணியாக மாறியது, இராணுவம் சமூகத்தின் மையத் தூணாக செயல்படுகிறது. இஸ்ரேலின் இராணுவ மற்றும் அரசியல் 'வெற்றிகள்' எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவு நிச்சயமாக அதன் வலதுசாரி மற்றும் ஜனநாயக விரோதப் பாதை உறுதி செய்யப்பட்டது. 

ஒருமுறை பலரால் வீரம் மிக்க அடாவடி நாடாகவும் மற்றும் பயங்கரமான வரலாற்றுத் தவறுகளைச் சந்தித்த மக்கள் வசிக்கும் இடமாகவும் கருதப்பட்ட இஸ்ரேல், இந்த பிராந்தியத்தில் முதன்மையான இராணுவ சக்தியாகவும், ஒரே அணுவாயுத சக்தியாகவும் மாறியது.

ஜூன் 1967, கோலன் குன்றுகளில் முன்னேறும் இஸ்ரேலிய டாங்கிகள் [Photo by Government Press Office (Israel) / CC BY-SA 4.0]

1967 ஆம் ஆண்டில், அமெரிக்க ஆதரவுடன், எகிப்து, சிரியா மற்றும் ஜோர்டான் மீது இஸ்ரேல் படையெடுத்தது. ஜோர்டான் ஆற்றின் மேற்குக் கரை, கிழக்கு ஜெருசலேம், சிரியாவிலுள்ள கோலான் குன்றுகள் மற்றும் காசா பகுதி ஆகியவற்றைக் கைப்பற்றி ஒரு புதிய சுற்று அகதிகளை உருவாக்கியது. இந்த மோதல் யாசீர் அராபத்தின் தலைமையில் பாலஸ்தீன விடுதலை அமைப்பு (PLO) உருவாகுவதற்கும் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே ஒரு சமமற்ற இராணுவப் போராட்டத்திற்கும் வழிவகுத்தது. 

போர் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் குடியேற்றக் கட்டுமானங்களின் மூலம், விரிவாக்கவாத 'அகண்ட இஸ்ரேல்' என்ற கொள்கை மாற்றத்தை இஸ்ரேல் தோற்றுவித்தது. புதிதாக ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்கள் யூத மக்களுக்கு கடவுளால் வாக்குறுதியளிக்கப்பட்ட சமாரியா மற்றும் யூதேயாவின் விவிலிய நிலங்களாக இஸ்ரேலிய இறையாண்மையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என்று ஒரு வலதுசாரி கோரிக்கையும் விடுக்கப்பட்டது. இது பாலஸ்தீனியர்களின் மீதான தொடர்ச்சியான இன அழிப்பு மற்றும் யூத காலனித்துவ பாணி குடியேற்றத்தை அவசியமாக்கியது.

இதன்மூலம், போர்கள் தொடர்ச்சியாக வெடித்தெழுவதற்கான நிலைமை உருவாக்கப்பட்டது. அதில் சிரியா, லெபனான் மற்றும் ஈரானுக்கு எதிரான அரபு-இஸ்ரேல் இராணுவ ஆக்கிரமிப்பு போர், 1973 இல் வெடித்தது. மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் அடிப்படையில் பாதுகாப்பற்ற மற்றும் வறிய பாலஸ்தீனியர்கள் மீது மீண்டும் மீண்டும் இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்களை நடத்தியது. அது அகதிகளின் புதிய அலைகளை மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களை மேலும் உருவாக்கியது.

இஸ்ரேலின் தீவிர வைதீக அரசியல் கட்சிகள், குறிப்பாக அவ்வப்போது ஏற்படும் யூத குடியேற்றத்தின் அலைகளின் உள்ளடக்கத்தில், ஒரு மிகவும் வலிமையான சக்தியாக மாறியது. முன்னர் மதச்சார்பற்றதாகக் கருதப்பட்ட பகுதிகளில் யூத மதச் சட்டங்களைத் அது திணித்ததோடு, மேலும் வலதுசாரிகளாக மாறிய அரசாங்கங்களை உருவாக்குவதையும் தீர்மானித்தது. மதச்சார்பற்ற மற்றும் வைதீக யூதர்களுக்கு இடையிலான மோதல்கள், சமூக வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் ஒரு தோற்றமாக மாறியது.

இதுவே, அரசியல் மற்றும் இராணுவ நிறுவனங்களுக்குள் பாசிசப் போக்குகள் தோன்றுவதற்கான அடிப்படையை உருவாக்கியது. உலக சோசலிச வலைத் தளம் விளக்கியது போல், 'இப்போது அரசாங்கக் கொள்கையை ஆணையிடும் இந்த சக்திகள்தான் பாலஸ்தீனியர்களை மட்டுமல்ல, பெரும்பாலான இஸ்ரேலியர்களையும் மிருகத்தனமான அடக்குமுறையால் அச்சுறுத்துகின்றன.'

1970களில் இருந்து பல தசாப்தங்கள் சமூக செல்வம் மேல்நோக்கிச் செல்வதையும், ஆற்றொணா வறுமையின் வளர்ச்சியையும் காணக்கூடியதாக இருந்தது. 2010 இல் சுமார் 20 இஸ்ரேலிய குடும்பங்கள் இஸ்ரேலிய பங்குச் சந்தையில் பாதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர், மற்றும் நான்கில் ஒரு இஸ்ரேலிய நிறுவனங்களுக்குச் அவர்கள் சொந்தமானவர்களாக இருந்தனர். பெரும்பாலும் பணக்காரக் குடும்பங்களுக்குச் சொந்தமான பத்து வணிகக் குழுக்கள், பொது நிறுவனங்களின் சந்தை மதிப்பில் 30 சதவீதத்தைக் கட்டுப்படுத்துகின்றன. இஸ்ரேல், 71 அமெரிக்க டாலர் பில்லியனர்கள் அங்கு இருப்பதாக பெருமையாக பேசுகிறது. ஒவ்வொரு மில்லியன் மக்களுக்கும் 6.7 பேர் உலகிலேயே உயர்ந்த தனிநபர் வருமானங்களைக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இவர்கள் அனைவரும் அங்கு வசிக்கவில்லை.

2006 இல் இஸ்ரேலில் வீடற்ற மனிதர் [Photo by charcoal soul/Flickr / CC BY-ND 2.0]

எதிர் துருவத்தில், ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு (OECD) நாடுகளில், இஸ்ரேல் இன்று அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது. அது பல்கேரியா மற்றும் கோஸ்டாரிகாவிற்கு அடுத்தபடியாக, OECD இல் மூன்றாவதாக அதிக வறுமை விகிதத்தைக் கொண்டுள்ளது. அதன் வறுமை விகிதம் OECD சராசரியை விட கிட்டத்தட்ட இருமடங்காகும். வறுமையானது, இப்போது அனைத்து இஸ்ரேலியர்களில் 27 சதவீதத்திற்கும் அதிகமானவர்களையும், மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான குழந்தைகளையும் பாதிக்கிறது, 10 சதவீதத்திற்கும் அதிகமானோர் (312,000 குடும்பங்கள்) கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர். இது 2011 இல் அரபு வசந்தத்தை அடுத்து, வெகுஜன எதிர்ப்புகளைத் தூண்டியது - இது இப்போது நெதன்யாகுவின் நீதித்துறை சீர்திருத்தத்திற்கு எதிராக வெடித்துள்ள அரசியல் அமைதியின்மைக்கு ஒரு முன்னோடியாகும்.

இஸ்ரேலிய வாழ்க்கையின் நிலையான அம்சம் பாலஸ்தீனியர்களை கோரமான முறையில் நடத்துவதாகும். இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான எந்த உத்தியோகபூர்வ நடவடிக்கையும் அரசியல் யதார்த்தங்களை மாற்றவில்லை. 1993 ஆம் ஆண்டு ஓஸ்லோ உடன்படிக்கைகள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிரான கிட்டத்தட்ட ஆறு வருட பாலஸ்தீனிய இன்டிஃபாடாவிற்கு முற்றுப்புள்ளி வைத்தன. ஆனால் இஸ்ரேலினால் நிர்ணயிக்கப்பட்ட அதன் விதிமுறைகள் பாலஸ்தீனியர்களுக்கு ஒரு பொறியாக அமைந்தது. இது ஒரு 'இரண்டு அரசுத் தீர்வு' என்ற மாயவித்தையை வழங்கியது, இது உண்மையில் இஸ்ரேலுக்கு பக்கமாக ஒரு சிறு இரண்டாக பிரிக்கப்பட்ட மற்றும் ஒன்றோடு ஒன்று தொடர்பற்ற பாலஸ்தீனிய அரசை உள்ளடக்கியது. பதிலுக்கு, அரபாத் மற்றும் PLO இஸ்ரேலை அங்கீகரித்து, அதன் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளித்து, பாலஸ்தீன விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தை கைவிட ஒப்புக்கொண்டனர்.

பாலஸ்தீனிய தேசிய அதிகார சபையின் பிரதமர் மஹ்மூத் அப்பாஸ், அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யூ. புஷ் மற்றும் ஏரியல் ஷரோன், செங்கடல் உச்சி மாநாடு, அகாபா, ஜூன் 2003

நக்பா, திரும்புவதற்கான உரிமை, பாலஸ்தீனிய அமைப்பின் தலைநகராக ஜெருசலேமின் நிலை மற்றும் சியோனிச குடியேற்றங்களின் எதிர்காலம் ஆகியவற்றைப் புறக்கணித்து, பாலஸ்தீனிய அதிகாரத்தை (PA) ஓஸ்லோ நிறுவியது. காத்திருக்கும் நிலையில் ஒரு பெயரளவிலான இந்த அரசாங்கம், அதன் எல்லைகள் மீது எந்தக் கட்டுப்பாட்டையும் கொண்டிருக்கவில்லை. காசாவின் முழு அதிகார வரம்பும், மேற்குக் கரையின் 18 சதவிகிதம் (ஏரியா ஏ), மற்றும் இஸ்ரேலுடனான கூட்டு அதிகார வரம்பு 22 சதவிகிதம் (ஏரியா பி). பெரும்பாலான குடியிருப்புகள் உள்ள மேற்குக் கரையில் (ஏரியா சி) முழுமையாக 60 சதவீதம் இஸ்ரேலிய இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளது.

இஸ்ரேலுக்கு எதிரான பாலஸ்தீனிய எதிர்ப்பை கண்காணிப்பதே பாலஸ்தீனிய அதிகாரத்தின் மையச் செயல்பாடாகும். பிரதம மந்திரி யிட்சாக் ராபின் புகழ்வது என்னவென்றால், பாலஸ்தீனிய அதிகாரம் 'உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதிக்காது மற்றும் இஸ்ரேலிய சிவில் உரிமைகள் சங்கம் அங்குள்ள நிலைமைகளை விமர்சிப்பதில் இருந்து தடுக்கும், அதன் காரணமாக அந்த பகுதிக்கு செல்ல அனுமதி வழங்காது.'

ஒரு கேலிச்சித்திரமான இந்த அரசு கூட ஏரியல் ஷரோன், பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவர்களது லிகுட் கட்சிக்கு வெறுப்பாக இருந்தது. 1995 நவம்பரில் ஒரு வலதுசாரி இஸ்ரேலிய வெறியரால் அவர் படுகொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, ராபினின் இரத்தத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்த கூட்டத்தை அவர்கள் உற்சாகப்படுத்தினர். 2000 கோடையில் கேம்ப் டேவிட்டில், தொழிற்கட்சி பிரதம மந்திரி எஹுட் பராக், மேற்குக் கரை மற்றும் காஸாவின் சில பகுதிகளில் இருந்து திரும்பப் பெறுவது, பாலஸ்தீனியர்களுக்கு அசல் பாலஸ்தீனத்தில் 15 சதவீதத்தை மட்டுமே விட்டு வைக்கும் என்று தெளிவுபடுத்தினார். இதற்கு அராபத் கையெழுத்திட மறுத்ததால், 'சமாதான செயல்முறை' முடிவுக்கு வந்தது. அல்-அக்ஸா மசூதி/டெம்பில் மவுண்ட் வளாகத்திற்கு ஷரோனின் ஆத்திரமூட்டும் வருகை மற்றும் இரண்டாவது intifada (பாலஸ்தீன எழுச்சி) வெடித்ததன் மூலம் இது எடுத்துக்காட்டப்பட்டது.

1997 இல், யாசர் அராபத் [Photo by National Library of Israel/digital ID. 990040390490205171/Gideon Markowiz / CC BY 4.0]

அதன்பிறகு, அனைத்து சியோனிசக் கட்சிகளும் 'மக்கள்தொகை பிரச்சனையை' எதிர்கொள்வதையும் மேற்குக் கரையில் கட்டுப்பாட்டை விரிவுபடுத்துவதையும் இலக்காகக் கொண்ட கொள்கைகளை முன்வைத்தன.

இன்று, இஸ்ரேல்-பாலஸ்தீனத்தில் ஏறக்குறைய சம எண்ணிக்கையிலான யூத இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனியர்கள் வாழ்கின்றனர், பாலஸ்தீனியர்கள் விரைவில் பெரும்பான்மையாக மாற உள்ளனர். இஸ்ரேல் நாட்டை அதன் விதியை நிர்ணயிக்கும் மக்கள்தொகையின் யதார்த்தத்தால் அளவிடப்பட்டால், 1967 க்கு முந்தைய சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அதன் எல்லைகளுக்குள் 9.3 மில்லியன் இஸ்ரேலியர்களும் அடங்குவார்கள், அவர்களில் 2 மில்லியன் பாலஸ்தீனியர்கள் ஆவர். ஆனால் 1967 அரபு இஸ்ரேலியப் போரில் கைப்பற்றப்பட்ட ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் உள்ள சுமார் 5.4 மில்லியன் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய இராணுவ ஆட்சியின் கீழ் வாழ்கின்றனர்.

எனவே, விரைவில் மக்கள்தொகை சிதைவு, முஸ்லிம் பெரும்பான்மை மற்றும் யூத சிறுபான்மை கொண்ட ஒரு பிராந்திய பகுதி அரசிற்கு வழிவகுக்கும். ஆகவே, அவர்களின் இருப்பு தொடர்பான (இருத்தலியல்) அச்சுறுத்தலாக சியோனிசம் கருதுவதற்கான ஒரே பதில் போர் மற்றும் இனச் சுத்திகரிப்பு ஆகும். 2002 டிசம்பரில் பிரதம மந்திரி ஏரியல் ஷரோன் யூத குடியேற்றங்களுக்கு வழி வகுக்கும் வகையில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பாலஸ்தீனியர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்று அறிவித்தார், அதே நேரத்தில் நெதன்யாகு, 'நாங்கள் முழு பகுதியையும் சுத்தப்படுத்தப் போகிறோம்...' என்று முழங்கினார்.

தொழிற் கட்சி ஆதரவுடன் இஸ்ரேலுக்கும் மேற்குக் கரைக்கும் இடையே பிரிவினைச் சுவரைக் கட்டுவதற்கு ஷரோன் இரண்டாவது பாலஸ்தீனிய எழுச்சியை (இன்டிஃபாடாவை) பயன்படுத்தி நியாயப்படுத்தினார். இந்தச் செயல்பாட்டில் இஸ்ரேல், மேற்குக் கரைக்குள் 18 கிமீ நிலப்பரப்பை நிரந்தரமாகக் கைப்பற்றியதோடு, முக்கிய குடியேற்ற முகாம்கள் உட்பட, 9 சதவீத நிலப்பரப்பைக் கைப்பற்றி, இஸ்ரேல் பக்கத்தில் சுமார் 30,000 பாலஸ்தீனியர்களையும், மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேம் பக்கத்தில் 230,000 பாலஸ்தீனியர்களையும் தனிமைப்படுத்தியது. இரு பகுதிகளையும் பிரிக்கும் சுவர் மற்றும் மேற்குக் கரையின் 80 சதவீத நிலத்தடி நீரின் மேற்குப் பகுதியின் மீதான இஸ்ரேலின் கட்டுப்பாடு, மில்லியன் கணக்கான மக்களுக்கு நீண்டகால மற்றும் செயற்கையான நீர் நெருக்கடிக்கு வழிவகுத்தது. மற்றும் 1967 க்கு முன் 14 சதவீதமாக இருந்த பாசன விவசாய நிலங்களின் அளவு கடுமையாகக் குறைக்கப்பட்டது. இன்று இவை 2 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளன.

இவை அனைத்தும் இஸ்ரேலின் உச்ச நீதிமன்றத்தால் சட்டப்பூர்வமானதாக கருதப்பட்டது.

இஸ்ரேலிய இராணுவத்தினால் கொல்லப்பட்ட பாலஸ்தீனிய-அமெரிக்க பத்திரிகையாளர் ஷிரீன் அபு அக்லே, பெத்லகேமில் உள்ள மேற்குக் கரைப் பிரிப்புச் சுவர், 2022 [Photo by Dan Palraz / CC BY-SA 4.0]

மேற்குக் கரையில் குடியேற்ற விரிவாக்கம் மற்றும் ஒருங்கிணைப்புக்கான அமெரிக்க ஒப்புதலைப் பெறுவதை நோக்கமாகக் கொண்ட ஷரோனின் துண்டிப்புத் திட்டத்தின் கீழ் 2005 இல் காசா மேலும் தனிமைப்படுத்தப்பட்டது. 2007 இல், இஸ்ரேலினால் சூழப்பட்ட காஸாவை, ஹமாஸ் கட்டுப்படுத்தியபோது, இஸ்ரேலின் கைப்பற்றும் மூலோபாயம் முழு அளவிலான பொருளாதார முற்றுகையாக மாறியது. செயல்பாட்டில், மேற்குக் கரை ஒரு வறிய கெட்டோவாகவும் (தனிமைப்படுத்தப்பட்ட வறிய சேரிகள்), காசா திறந்த சிறைச்சாலையாகவும் மாற்றப்பட்டது. 

சியோனிசமோ அல்லது அரபு தேசியவாதமோ அல்ல, மாறாக சோசலிச சர்வதேசியமே!

நெத்தன்யாகுவின் ஆளும் கூட்டணிக்கும் எதிர்க்கட்சி கூட்டணிக்கும் இடையிலான மோதலின் மிக அடிப்படையான அம்சம் அனைத்து அடிப்படைகளிலும் அவர்கள் கொண்டுள்ள உடன்பாடு தான். இது 'ஜனநாயகம்' குறித்த ஒரு அருவமான காதல் அல்ல, மாறாக சியோனிசம் மற்றும் இஸ்ரேலிய முதலாளித்துவத்தின் சமூக நலன்கள் குறித்த விட்டுக்கொடுக்காத வக்காலத்தாகும், அது, எதிர்ப்புத் தலைவர்களை உச்ச நீதிமன்றத்தின் மீதான தாக்குதலுக்கு எதிராக தூண்டி விட்டுள்ளது.  குற்றஞ்சாட்டப்படாத போர்க் குற்றவாளிகளான எதிர்க்கட்சித் தலைவர் பென்னி காண்ட்ஸ் மற்றும் நெதன்யாகுவின் கிளர்ச்சிக்கார பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் ஆகியோர் நெதன்யாகுவும் அவரது பாசிச ஆதரவாளர்களும், இனச் சுத்திகரிப்பு, மத-கலாச்சார தாக்குதல் மற்றும் சட்டரீதியான சூழ்ச்சிகள் போன்றவற்றைப் பின்பற்றுவதன் மூலமாக  நெதன்யாஹுவை சிறையில் இருந்து காப்பாற்றுகிறார்கள் என்று அஞ்சுகின்றனர். பல தசாப்தங்களாக பாலஸ்தீனியர்கள் மீதான இடைவிடாத தாக்குதல்களுக்கு உச்சநீதிமன்றம் மற்றும் நீதித்துறை வழங்கிய போலி 'ஜனநாயக' மறைப்பை அவர்கள் பலவீனப்படுத்துவதாக கருதுகின்றனர்.

இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட், இடதுபுறம், இஸ்ரேலிய ஜனாதிபதி ருவன் ரிவ்லின், இரண்டாவது இடது, இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் பென்னி காண்ட்ஸ், மூன்றாவது இடது, முன்னாள் பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவருமான பெஞ்சமின் நெதன்யாகு, நான்காவது இடது, மற்றும் பிற முக்கியஸ்தர்கள் இஸ்ரேலின் ஜெருசலேமில் நடந்த நினைவு விழாவில் கலந்து கொண்டனர். ஞாயிறு, ஜூன் 20, 2021. [AP Photo/Abir Sultan/Pool Photo via AP]

யூத மேலாதிக்கவாதிகள் மற்றும் மத பிற்போக்குவாதிகளிடம் முன்னெடுப்புகளை ஒப்படைப்பதன் மூலம் இஸ்ரேலிய சமுதாயத்தை சீர்குலைப்பது இஸ்ரேலுக்கு உலகெங்கிலும் உள்ள ஆதரவைக் பலவீனப்படுத்தி உள்ளது. இதில் அமெரிக்காவில் உள்ள உலகின் மிகப்பெரிய யூத சமூகமும் உள்ளடங்கும். அது மத்திய கிழக்கின் 'முழுமையான ஜனநாயகம்” இஸ்ரேல் என்று வாஷிங்டன் மற்றும் ஐரோப்பாவின் தலைநகரங்களில் இஸ்ரேலை சித்தரிப்பதில் ஒரு பகுதியாக இருக்கிறது. சியோனிசத்திற்கான எதிர்ப்பை 'இடது யூத-எதிர்ப்பு' வடிவமாக சித்தரிக்கும் முயற்சிகளை அதனை கடுமையாக பலவீனப்படுத்தி உள்ளது. இது 'தாராளவாத ஜனநாயகங்களில்' எதிர்பார்க்க முடியாத தரத்திற்கு இஸ்ரேலை உயர்த்தியுள்ளது மற்றும் இஸ்ரேலுக்கும் நிறவெறியின் கீழ் இருந்த தென்னாப்பிரிக்காவிற்கும் இடையில் ஒரு தவறான முறையில் சமமாக பார்க்கும் நிலையை ஏற்படுத்துகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக, இது இப்பிராந்தியத்தில் வாஷிங்டனின் ஆக்ரோஷமான இராணுவக் கொள்கைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது, அங்கே அதன் பூகோள மூலோபாய நலன்களைப் பின்தொடர்வதில் இஸ்ரேல் அதன் தாக்கி குதறும் நாயாகச் செயல்படுகிறது. 

உள்நாட்டில், எதிர்ப்பு இயக்கத்தின் நிகழ்ச்சி நிரல் தற்போது சியோனிச முதலாளித்துவத்தால் கட்டளையிடப்பட்டு நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் சமூக ஆதரவைப் பெற்றிருந்தாலும், அரசியல் எழுச்சிகள் ஜனநாயக உரிமைகளின் மீதான அடக்குமுறைக்கு எதிரான சமூகப் போராட்டங்களின் வெடிப்பை ஏற்படுத்தும் அபாயத்தை கொண்டுள்ளது. ஆக்கிரமிப்பு மற்றும் போருக்கு பணம் செலுத்தவும் இஸ்ரேலின் தன்னலக்குழுக்களை வளப்படுத்தவும் சிக்கன பொருளாதாரக் கொள்கைகள் சியோனிச முதலாளித்துவத்திற்கு தேவைப்படுகின்றன.

சியோனிசமானது (மத-கலாச்சார அடையாளம் மற்றும் அனைத்து யூதர்களுக்கும் பொதுவான தேசிய நலன்களின் அடிப்படையில் ஒரு அரசை ஊக்குவித்தல்) நீண்ட காலமாக பாலஸ்தீனிய மக்களின் உரிமைகளின் பாதுகாப்பை எதிர்ப்பது மட்டுமல்லாமல், யூதத் தொழிலாளர்களின் சுதந்திரமான சமூக மற்றும் அரசியல் நலன்களின் எந்தவொரு வலியுறுத்தலையும் எதிர்க்கும் அடிப்படையை உருவாக்கியுள்ளது.

டெல் அவிவில் உள்ள (ஹிஸ்டாட்ரட்) இஸ்ரேலின் தேசிய தொழிற்சங்க தலைமையகம் [Photo by צילום:ד"ר אבישי טייכר / CC BY 2.5]

தேசிய தொழிற்சங்க கூட்டமைப்பு (ஹிஸ்டாட்ரட்) இஸ்ரேலின் சேவைத் துறை, அதன் மிகப்பெரிய கூட்டு நிறுவனங்கள், தேசிய வங்கி மற்றும் சுகாதாரம் மற்றும் மருத்துவ நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் ஒரு அரசு நிறுவனமாக உருவானது. பொருளாதார தாராளமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கல் ஆகியவற்றினால் பூகோள ரீதியாக முன்கண்டிராத அளவில் அதன் உறுப்பினர் சரிவைக் கண்டது. 1983 இல் சுமார் 1.8 மில்லியனிலிருந்து (அப்போது 85 சதவீதம் பணியாளர்கள்) இன்று 200,000 க்கும் குறைவான பணியாளர்கள் உள்ளனர். அரபு மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களைத் தவிர மற்ற அனைத்து வெகுஜன எதிர்ப்புகளின் போது, ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கான அதன் அழைப்பு, அதிகாரத்துவ கட்டுப்பாட்டிற்கு வெளியே வளரும் வேலைநிறுத்தங்களின் ஆபத்தை எதிர்த்து நெதன்யாகுவுடன் ஒருங்கிணைந்து கொண்டது.

இஸ்ரேல் அரசின் நிறுவன சித்தாந்தமான தொழிற்கட்சி சியோனிசம், அதன் தொழிற்சங்கப் பிரிவை விட மோசமான வீழ்ச்சியை சந்தித்தது, ஏனெனில் அதன் சோசலிச பாசாங்குகள் முதலாளித்துவத்தை அடிப்படையாக கொண்ட ஒரு அரசு மற்றும் சமூகத்தின் யதார்த்தங்கள் மற்றும் குறுங்குழுவாத மதப் பிரத்தியேகவாதத்தினால் சிதைக்கப்பட்டுள்ளன.

இஸ்ரேலின் 75வது ஆண்டு விழாவை நொறுக்கும் அரசியல் மற்றும் சமூக கொந்தளிப்பு, ஒரு புரட்சிகர சோசலிச மாற்றுக்காக போராடுவதற்கான நிலைமைகள் இருப்பதை உறுதிப்படுத்துகிறது. ஆனால், சியோனிசத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை சவால் செய்யப்படாத வரையில், முதலாளித்துவ ஆட்சியின் நெருக்கடியானது மேலும் வலதுபுறம் சாய்வதன் அடிப்படையில் தீர்க்கப்படும்.

எல்லாவற்றையும் விட மிகவும் ஆபத்தானது, அதிகரித்து வரும் அரசியல் நெருக்கடி பாலஸ்தீனியர்கள் மீதான இராணுவ அடக்குமுறை மற்றும் சிரியா மற்றும் ஈரானுடன் போரைத் தூண்டுவதை நோக்கிய கூர்மையான திருப்பத்திற்கு எப்போதும் வழிவகுக்கிறது. பூகோள மேலாதிக்கத்தைப் பாதுகாப்பதற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இராணுவ உந்துதலில் இஸ்ரேல் ஒரு முக்கிய பங்கை ஆக்கிரமித்துள்ள நிலையில், உக்ரேனில் ரஷ்யாவுடனான நடைமுறையிலுள்ள போரில் இருந்து சீனா வரை நீண்டு, முழு மத்திய கிழக்கையும் சூழ்ந்திருக்கும் ஒரு போரின் அச்சுறுத்தல் இன்னும் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது.

சியோனிச கற்பனாவாதத்தின் அடிப்படையிலான ஒரு தேசிய அரசில் உலகிலுள்ள யூதர்கள் ஒரு புகலிடத்தை காணக்கூடியதாக இருக்கும். ஆனால், அதற்குப் பதிலாக பொலிஸ் அரச வடிவங்களில் தலைகீழாக சரிந்து செல்வதற்கும், பாசிசத்தின் தோற்றத்திற்கும், உள்நாட்டுப் போரின் வெடிப்புக்கும்  மற்றும் பாலஸ்தீனியர்கள் மற்றும் இஸ்ரேலின் அரபு அண்டை நாடுகளுடன் போருக்கும் வழிவகுக்கிறது. இதிலிருந்து முன்னோக்கி செல்வதற்கான வழி முதலாளித்துவத்திற்கு எதிராகவும், சோசலிசத்திற்காகவும் ஒரு கூட்டுப் போராட்டத்தில், யூத மற்றும் பாலஸ்தீனிய தொழிலாள வர்க்கத்தை ஒன்றிணைப்பதில் தான் தங்கியுள்ளது.

தீவிர வலதுசாரி அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள யூதத் தொழிலாளர்கள், 'மற்றொரு தேசத்தை அடிமைப்படுத்தும் ஒரு தேசம், அதன் சொந்த அடிமைச் சங்கிலிகளை கட்டுகிறது' என்ற மார்க்சின் பிரகடனத்தை தங்கள் கோட்பாட்டு சொல்லாக கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் பாலஸ்தீனியர்களுக்கும், மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவின் முழு பிந்தைய காலனித்துவ வரலாறும், அதே போல் பாலஸ்தீனிய அதிகாரமும் நிரூபித்தபடி, ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெறுவதற்கு ஒரு தேசிய முதலாளித்துவ பாதை இல்லை என்ற ஆழமான புரிதலை உருவாக்க வேண்டும்.

துருக்கியிலுள்ள பிரிங்கிபோவில் உள்ள அவரது மேசையில் லியோன் ட்ரொட்ஸ்கி

ஒரு உண்மையான புரட்சிகர மாற்றீடானது, நிரந்தர புரட்சி கோட்பாட்டின் அடிப்படையில் இருக்க வேண்டும். ஏகாதிபத்திய சகாப்தத்தில், முதலாளித்துவத்தின் எழுச்சியுடன் முந்தைய காலகட்டத்தில் தொடர்புடைய ஒடுக்கப்பட்ட நாடுகளில் அடிப்படை ஜனநாயக மற்றும் தேசிய பணிகளை நிறைவேற்றுவது ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய முன்னோக்கில் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரட்டலின் மூலம் மட்டுமே சாதிக்க முடியும் என்று ட்ரொட்ஸ்கி விளக்கினார்.

அனைத்து தேசிய பிளவுகளையும் தாண்டி, தொழிலாளர்கள் மத்திய கிழக்கின் ஐக்கிய சோசலிச அரசுகளுக்காக போராட வேண்டும். அது ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் நாடுகடந்த பெருநிறுவனங்களின் கொள்ளையடிக்கும் திட்டங்களிலிருந்து சுதந்திரமாக இருக்க வேண்டும்.  அனைத்து பிராந்திய மக்களுக்கும் சமத்துவம் என்ற இன்றியமையாத கோட்பாட்டின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டிருக்க வேண்டும். இது அத்தியாவசிய சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பிராந்தியத்தின் பரந்த இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதன் அடிப்படையில் அனைவருக்கும் ஒரு ஜனநாயக மற்றும் வளமான எதிர்காலத்தை உத்தரவாதம் செய்யும்.

இதற்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளை இஸ்ரேல், பாலஸ்தீனம் மற்றும் பிராந்தியம் முழுவதிலும் கட்டியெழுப்பி, ஒரு சோசலிச புரட்சிகர தலைமையை இப்பிராந்தியத்தில் வாழும் அனைத்து தொழிலாள வர்க்கத்துக்கும் வழங்க வேண்டும்.

Loading