நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு

2024 ஆண்டு, மே மாதம் 4ந் திகதி, சனிக்கிழமையன்று, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் உலக சோசலிச வலைத் தளமும் உலகம் முழுவதிலுமுள்ள பேச்சாளர்களைக் கொண்ட ஒரு இணையவழிப் பேரணியாக மே தினத்தை நடத்தவிருக்கின்றன.

காஸாவில் ஆழமடைந்து வரும் இனப்படுகொலை, ஈரானை இலக்கு வைத்து மத்திய கிழக்கில் ஒரு பிராந்தியப் போர் அச்சுறுத்தல், உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிராக நடந்து வரும் அமெரிக்க-நேட்டோ போர் மற்றும் சீனாவுடன் நேரடி மோதலை நோக்கி அதிகரித்து வரும் நகர்வுகளுக்கு மத்தியில், 2024 ஆண்டு மே தினம் நடைபெறுகிறது. உலகம் மீதான ஒரு புதிய ஏகாதிபத்திய மறுபங்கீடு இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, அணுவாயுத மோதலின் அச்சுறுத்தலானது பனிப்போரின் எந்தவொரு புள்ளியையும் விட இன்று உயர்ந்தளவில் உள்ளது.

போர், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் குறிப்பாக காஸாவில் நடந்துவரும் கொடூரமான இனப்படுகொலைக்கு எதிர்ப்பானது, சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்குள்ளாக அதிகரித்து வருகிறது. இனப்படுகொலைக்கு எதிராக ஒவ்வொரு கண்டத்திலும் மில்லியன் கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர், இஸ்ரேலில் உள்ள சியோனிச ஆட்சியுடன் தங்கள் அரசாங்கங்கள் உறவுகளை துண்டிக்க வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.

இனப்படுகொலை மற்றும் போருக்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் போராட்டங்கள் பயனற்றவையாக உள்ளன, ஏனெனில் ஏகாதிபத்தியத்தை சீர்திருத்த முடியாது. அது தூக்கியெறியப்பட வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, இதற்கு தொழிலாள வர்க்கத்தில் ஒரு புரட்சிகர சோசலிசத் தலைமையைக் கட்டியெழுப்புவது அவசியமாகும். இந்த 2024 ஆண்டு மே தினக் கூட்டமானது, இந்தத் தலைமையை கட்டியெழுப்புவதற்கான ஒரு முன்னோக்கையும் வேலைத்திட்டத்தையும் வழங்குவதோடு ஒரு சோசலிச எதிர்காலத்திற்கான போராட்டத்தில் ஒரு முன்னோக்கிய பாதையையும் வழங்கும்.

இந்த மே தினப் பேரணியானது wsws.org/mayday என்ற இணையவழியூடாக நேரடியாக ஒளிபரப்பப்படும். தயவுசெய்து கீழே உள்ள படிவத்தைப் பயன்படுத்தி உங்களைப் பதிவு செய்துகொள்ளுங்கள், மேலும் பேரணியை முடிந்தவரை பரவலாக பங்கெடுக்கும் வகையில் ஒழுங்குபடுத்தி கட்டமைக்க எங்களுக்கு ஒரு நன்கொடை உதவியையும் வழங்குமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம்.

சனிக்கிழமை, மே 4
பிற்பகல் 3 மணி
அமெரிக்க கிழக்கு நேரம்

சாவ் பாலோ:மே 4, பி.ப 4:00

லண்டன்: மே 4, பி.ப 8:00

பெர்லின்: மே 4, பி.ப 9:00

இஸ்தான்புல்: மே 4, பி.ப 10:00

கொழும்பு: மே 5, அதிகாலை 12:30

பெய்ஜிங்: மே 5, அதிகாலை 3:00

சிட்னி: மே 5, அதிகாலை 5:00

ஆக்லாந்து: மே 5, காலை 7:00

அனைத்து நேர வலயங்கள்

Register

Enter your email address to receive a reminder for this and future WSWS events.

பேச்சாளர்கள்

David North

Chairperson of the International Editorial Board of the World Socialist Web Site

Christoph Vandreier

National secretary of the Sozialistische Gleichheitspartei (Germany)

Ulaş Ateşçi

Leading member of the Socialist Equality Group (Turkey)

Joseph Kishore

National secretary of the Socialist Equality Party (US)

Cheryl Crisp

National secretary of the Socialist Equality Party (Australia)

Tom Peters

Leading member of the Socialist Equality Group (New Zealand)

Deepal Jayasekera

General Secretary of the SEP (Sri Lanka)

Keith Jones

National secretary of the Socialist Equality Party (Canada)

Alex Lantier

National secretary of the Parti de l’égalité socialiste (PES)

Tom Scripps

Assistant national secretary of the Socialist Equality Party (UK)

and more...

David North
Chairman of WSWS IEB and SEP (US)
Cheryl Crisp
National Secretary of SEP (Australia)
Ulaş Ateşçi
Socialist Equality Group (Turkey)
Deepal Jayasekera
Assistant National Secretary of SEP (Sri Lanka)
Chris Marsden
National Secretary of SEP (UK)
Evan Blake
SEP (United States)
Nick Beams
Socialist Equality Party (Australia)
Christoph Vandreier
Sozialistische Gleichheitspartei (Germany)
Joseph Kishore
National Secretary of SEP (US)
And more...
அவசியமான வாசிப்புகள்

அமெரிக்கா-ஜப்பான் உச்சிமாநாடு: சீனாவுடனான போரை நோக்கிய ஒரு முக்கிய படி

இந்த வாரம், ஜப்பானிய பிரதம மந்திரி ஃபுமியோ கிஷிடாவின் அமெரிக்க விஜயம், இந்தோ-பசிபிக் முழுவதும் வாஷிங்டனின் கூட்டணிகளை ஒருங்கிணைப்பதிலும், சீனாவுடனான போருக்கான அதன் தயாரிப்புகளை துரிதப்படுத்துவதிலும் ஒரு முக்கிய படியைக் குறிக்கிறது.

Peter Symonds

"எதிர்காலத்தின் இராணுவம்": ஜேர்மனி தனது இராணுவத்தை ஒட்டுமொத்தப் போருக்காக மறுகட்டமைக்கிறது

ஜேர்மன் பாதுகாப்பு மந்திரி இராணுவத்தை (Bundeswehr) மறுகட்டமைப்பு செய்வதை இரகசியமாக வைத்திருக்கவில்லை. அவர் ஒட்டுமொத்தப் போரை நடத்தும் திறன் கொண்ட ஒரு தாக்குதல் இராணுவ இயந்திரத்தை உருவாக்குகிறார்.

Johannes Stern

"மனிதகுலத்திற்கு எதிரான போர்": காஸா இனப்படுகொலையின் ஆறு மாதங்கள் 

காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலை ஏகாதிபத்திய சக்திகளால் நிதியுதவி, ஆயுதம் வழங்கி பாதுகாக்கப்படுகிறது. இது முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்தின் உலகளாவிய வெடிப்பின் ஒரு பாகமாகும்.

Andre Damon

நேட்டோவின் 75 ஆண்டுகள்: பனிப்போர் முதல் இன்றைய போர் வரை

நேட்டோ இராணுவக் கூட்டணி உருவாக்கப்பட்டு எழுபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, முன்பை விட மூன்றாம் உலகப் போர் வெடிப்பிற்கு நெருக்கமாக உள்ளது.

Peter Schwarz
David North

இனப்படுகொலை எதிர்ப்பு வன்முறையற்ற போராட்டங்களுக்கு எதிரான பொலிஸ் ஒடுக்குமுறையை பைடென் ஆதரிக்கிறார்

இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு மாணவர்களின் விடையிறுப்பு தொழிலாள வர்க்கத்தின் பாரிய போர் எதிர்ப்பு இயக்கத்தை முன்னறிவிக்கிறது என்று வெள்ளை மாளிகை அஞ்சுகிறது.

Patrick Martin

இனப்படுகொலைக்கு எதிரான மாணவர்களின் போராட்டங்கள் மீதான பொலிஸ் அடக்குமுறையை நிறுத்துவற்கு தொழிலாளர்கள் தொழில்துறை நடவடிக்கைக்கு தயாராக வேண்டும்!

மாணவர்கள் துணிச்சலான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். ஆனால், அவர்களின் நடவடிக்கைகள் தொழிலாள வர்க்கத்திலிருந்து இன்னும் சக்திவாய்ந்த இயக்கத்தை எதிர்பார்க்கின்றன. அவர்கள் எழுப்புகின்ற பிரச்சினைகளுக்கு பலகலைக்கழக வளாகங்களில் மட்டும் அல்ல, மாறாக தொழிற்சாலைகள், பொருட்களை சேமித்து வைக்கும் கிட்டங்கிகள், ரயில் பாதைகள் மற்றும் கப்பல் துறைமுகங்களில் மட்டுமே தீர்க்க முடியும்.

சர்வதேச தொழிலாளர் குழுக்களின் சாமானிய தொழிலாளர் கூட்டணி

நேட்டோவின் பினாமிப் போருக்கு எதிரான சோசலிஸ்ட் போக்டன் சிரோடியுக்கை உக்ரேனிய சிறையில் இருந்து விடுவிக்கக் கோருங்கள்

ஏப்ரல் 25, வியாழன் அன்று, வலதுசாரி செலென்ஸ்கி ஆட்சிக்கும், நேட்டோவினால் தூண்டிவிடப்பட்ட உக்ரேன்-ரஷ்யா போருக்கும் எதிரான சோசலிஸ்ட் போக்டன் சிரோடியுக்கை (Bogdan Syrotiuk) உக்ரேனின் பாதுகாப்பு சேவை (SBU) ஆல், தெற்கு உக்ரேனில் உள்ள அவரது சொந்த ஊரான பெர்வோமைஸ்கில் (Bervomaisk) வைத்து கைது செய்துள்ளது.

David North

பசுமைக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜில் ஸ்டெயின் கைது ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலாகும்

ஸ்டெய்ன் மற்றும் சமீபத்திய வாரங்களில் ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கானவர்களுக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளும் கைவிடப்பட வேண்டும்.

Niles Niemuth