World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்: ஐரோப்பா : பிரான்ஸ்

France announces measures to prevent spread of BSE/Mad Cow Disease

விசர் மாட்டு நோய்\BSE பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பிரான்ஸ் அறிவித்துள்ளது.

By Chris Marsden
17 November 2000

Back to screen version

இறைச்சியில் இருந்து செய்யப்படும் உணவுப் பண்டங்களை விலங்குப் பண்ணைகளில் உணவாக பயன்படுத்துவதை ஒரு தற்காலிக இடைநிறுத்தம் செய்துள்ளதாகவும், மாட்டெலும்புகளில் இருந்து செய்யப்படும் ஸ்ரெக் வகைகளை தடை செய்துள்ளதாகவும் பிரான்சின் பிரதமர் ஜொஸ்பன் அறிவித்துள்ளார். இது BSE அல்லது விசர் மாட்டு நோய்யால் பீடிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்ற மக்களின் பீதியை அமைதிப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகும்.

மாடு வெட்டப்படும் இடங்களுக்கு அனுப்பப்படும் மாடுகள் கூட மேலோட்டமான பரிசோதனைக்கே உட்படுத்தப்பட்டிருக்கும். BSE (Bovine Spongiform Encephalopathy மற்றும் மனிதனுக்கான வடிவமான Creutzfeldt Jacobs Disease (vCJD) எனப்படும் பாரதூரமான முறையில் மூளையை சேதப்படுத்தும் நோய் பற்றிய ஆய்விற்கான நிதி அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இந்த நோயினால் 80 பேர் பிரித்தானியாவிலும், இருவர் பிரான்சிலும், ஒருவர் இத்தாலியிலும் இறந்துள்ளனர்.

பிரான்சில் BSE இனால் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த வருடத்தில் இருந்து மூன்று மடங்காக அதிகரித்து வருவதுடன் இது 94ல் இருந்து அதிகரித்து வருகிறது.

1990 இருந்து இறைச்சி மற்றும் எலும்பில் இருந்து செய்யப்பட்ட உணவை மாடுகளுக்கு உணவாக பயன்படுத்துவது பிரான்சில் தடைசெய்யப்பட்டிருந்தது ஆனால் இது ஏனைய மிருகங்களுக்கு இதுவரை உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. மாட்டு முதுகெலும்புகளின் உபயோகத்தினை கட்டுப்படுத்தும் பாகமாகவே மாட்டெலும்புகளில் இருந்து செய்யப்படும் ஸ்ரெக் வகைகள் தடை செய்யப்பட்டிருக்கின்றது. முதுகெலும்புப் பகுதிகளில் தான் BSE நோயின் பாதிப்பு செறிவாக இருப்பதாக நம்பப்படுகிறது. காளை அல்லது எருதுகளின் விதையில் இருந்து செய்யப்படும் உணவான Sweetbreads ஒரு வருடத்திற்கு விற்பனை செய்வது தடைசெய்யப்பட்டிருப்பதாக விவசாய அமைச்சகம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

BSE மற்றும் அதன் அபாயம் குறித்து பிரெஞ் மக்களின் பீதியின் அதிகரிப்புக்கு தான் முகம் கொடுக்க வேண்டி வரும் என்ற நிர்பந்தத்தில்தான் ஜொஸ்பனின் இந்த அறிவிப்பு இருந்தது.

BSE இனால் பாதிக்கப்பட்ட 8 தொன் எடையுள்ள மாட்டு இறைச்சிகள் நவீன அங்காடிகளில் விற்கப்பட்டது கடந்தமாதம் தெரிய வந்ததுதான் தாமதம் அபாய ஒலி எங்கும் பரவியது. இதைத் தொடர்ந்து இறைச்சி விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளதுடன் மாட்டு இறைச்சி உணவு மற்றும் எலும்பு வகை உணவுகள் பிரான்சில் உள்ள உணவகங்கள் மற்றும் பாடசாலைகளின் உணவுப் பட்டியல்களில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. பிரான்சில் இருந்து மாட்டு இறைச்சியை இறக்குமதி செய்வதை பல நாடுகள் மட்டுப்படுத்தியுள்ளன.

1996 க்கு முதல் பிறந்த அனைத்து மாடுகளையும் கொன்று விடுவதற்கு பிரெஞ் விவசாய சங்கம் அழைப்பு விட்டுள்ளது. இந்த மாடுகளில் ஒன்று பாதிக்கப்பட்ட உணவுகளுடன் அதிகமாக தொடர்பு பட்டுள்ளதுடன் குறிப்பிட்ட அளவு வியாபார ரீதியாக முக்கியமானதாகவும் இருக்கின்றன. இது நுகர்வோர் மத்தியில் "புத்தி சுவாதீனமற்ற தன்மையை'' ("psychosis") உருவாக்கக் கூடும் அத்துடன் இதற்கு செலவு மிகுதியாகும் எனக்கூறி இந்த ஆலோசனையை விவசாய அமைச்சரான Jean Glavany நிராகரித்துள்ளார்.

இது எப்படியிருந்தபோதும், விசர் மாட்டு நோய் (BSE) மற்றும் மனிதனுக்கான வடிவமான Creutzfeldt Jacobs Disease (vCJD) எனப்படும் பாரதூரமான முறையில் மூளையை சேதப்படுத்தும் நோய் இரத்த பரிமாற்றத்தின் மூலமா அல்லது அரை அவியல் உடனான சிகப்பு இறைச்சியை உணவாக உண்பதன் மூலமா தொற்றுவதற்கான சாத்தியம் பெரிதும் இருகிறது என்பதற்கான ஒரு ஆய்வைச் செய்யும்படி விஞ்ஞானிகளை கேட்டுக்கொள்ள பிரெஞ்சு அரசாங்கம் நிர்பந்திக்கப்பட்டுள்ளது. விசர் மாட்டு நோய் (BSE) பிரித்தானியாவில் பரவியபோது மிருக இறைச்சியின் தசைகளை உண்பதால் நோய் பரவுவதற்கான சாத்தியமில்லை என அரசாங்கம் தொடர்ந்து அறிக்கை விட்டது. BSE இனால் பாதிக்கப்பட்ட ஓர் ஆட்டின் இரத்தத்தை நோய் அற்ற இன்னொரு ஆட்டிற்கு செலுத்தியதன் மூலம் அந்த ஆட்டையும் BSE இனால் பாதிப்படைய வைக்கக்கூடியதாக இருந்தது ஆனால் அந்த நோயிற்கான எந்த அறிகுறியையும் நாம் அதனிடத்தில் காணவில்லை என Edinburgh இல் உள்ள விலங்கு ஆரோக்கிய கல்வி நிறுவனம் செப்டம்பரில் அறிவித்திருந்தது.

1980-96 பக்கு இடையில் பிரித்தானியாவிற்கு விஜயம் செய்தவர்களிடம் இருந்து இரத்தம் வாங்குவதை மட்டுப்படுத்தியுள்ளதாக சுவிஸ் செஞ்சிலுவைச் சங்கம் (Red Cross) கடந்த வாரம் அறிவித்துள்ளது. ஜரோப்பாவில் இப்படியான தடை விதிக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும் மேலும் இது சுவிற்சர்லாந்தில் இரத்தம் கொடுப்பவர்களில் இரண்டாயிரம் பேரை பாதிப்படையச் செய்யும்.

BSE நெருக்கடியானது ஜரோப்பா முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜரோப்பாவில் பிரித்தானியாவுக்கு அடுத்ததாக BSE இனால் பாதிக்கப்பட்டவர்கள் சுவீற்சர்லாந்தில் தான் அதிகமாக உள்ளனர். அங்கு இருவர் BSE இனால் பாதிக்கப்பட்டிருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டதன் பின்னர் நகரங்களில் பாடசாலைகள் மற்றும் சிறுவர் பாடசாலைகளில் மாட்டு இறைச்சிக்கு உடனடியாக தடைவிதிக்கப்பட்டுள்ளது என ஜெனிவா உத்தியோகத்தர்கள் அறிவித்துள்ளனர். மிருகக்கழிவுகளை மாட்டு உணவுகளில் பயன்படுத்துவதற்கு 1996 இல் தடை விதிக்கப்பட்டிருந்தது ஆனால் அதன் பிறகு பிறந்த மாடுகளும் கூட BSE நோயினால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மிருகங்களுக்கு அளிக்கும் அனைத்து உணவு வகைகளிலும் மிருகக் கழிவுகளை பயன்படுத்துவதை முற்றாக தடை செய்யுமாறு சுவிஸ் விவசாயிகளும் மத்திய விவசாயத்துறை அலுவலகமும் கேட்டுள்ளன.

20 மாதங்களுக்கு அதிமான வயதை உடைய மாடுகளை பிரான்ஸ் மற்றும் அயர்லாந்தில் இருந்தும் இறக்குமதி செய்வதை தாம் தடைவிதித்துவிட்டதாக ஸ்பெயின் அறிவித்துள்ளது. அத்துடன் ரஷ்யாவும் பிரான்சில் இருந்து இறக்குமதி செய்வதை மட்டுப்படுத்தியுள்ளது.

ஜரோப்பிய ஒன்றியத்தின் மிருக வைத்தியர்கள் குழுவினது உடனடி கூட்டம் நடக்கும் வரை பிரெஞ் மாட்டிறைச்சி இறக்குமதிக்கு தடையை நிர்பந்திக்கப் போவதாக இத்தாலி அறிவித்துள்ளது. ''இந்த குழுவின் கூட்டத்தினை கூடிய விரைவில் ஒழங்கு செய்யவில்லையானால் அபாயத்தில் உள்ள மாட்டிறச்சி இறக்குமதியை நிறுத்த இத்தாலி முடிவெடுக்கும்'' என இத்தாலி விவசாய அமைச்சரான Alfonso Pecoraro Scanio தெரிவித்துள்ளார்.

புறுசல்ஸ் (Brussels) இல் இருக்கும் ஜரோப்பிய கமிஷன் ஜரோப்பா முழுவதும் மில்லியன் கணக்கான BSE இனால் பாதிக்கப்பட்ட வயது வந்த மாடுகளை அழிக்கும் அதனது வேலைத்திட்டத்தை விரிவாக்க தற்போது முடிவெடுத்துள்ளது. 30 மாதங்களுக்கு அதிகமான வயதுடைய கொல்லப்படும் முழு மாடுகளும் பரிசோதிக்கப்படும், நோய் தொற்றி அறிகுறி தெரிவதற்கு நீண்ட காலம் பிடிப்பதால் வயது வந்த மாடுகளில் தான் நோயின் அறிகுறி தென்படக்கூடியதாக இருக்கிறது. 15 நாடுகளைச் சேர்ந்த வல்லுனர்கள் அடுத்த கிழமை நடக்கவிருக்கும் கூட்டத்தின் மூலம் ஏற்றுக்கொள்வதற்கான விடயம் இதுவாகவே இருக்கும். பிரெஞ் மாட்டிறைச்சி தொழிற்துறை முகம் கொடுத்த விலை வீழ்ச்சிக்கு உதவிதொகையாக 60 மில்லியன் ஈரோவை (Euros) ஜரோப்பிய ஒன்றியம் ஒதுக்கியுள்ளது.

Top of Page

வாசகர்களே: உலக சோசலிச வலைத்தளம்(WSWS ) உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறது. தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்பவும்.


Copyright 1998-2000
World Socialist Web Site
All rights reserved