World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்: மத்திய கிழக்கு

Appeals Court upholds guilty verdict in show trial against Iranian Jews

ஈரானிய யூதர்களுக்கெதிரான பொய்வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு

By Justus Leicht
23 September 2000

Back to screen version

செப்டம்பர்21. வியாழன் அன்று ஈரானிய மேல்முறையீட்டு நீதிமன்றம் பத்து ஈரானிய யூதர்களை'' இஸ்ரேலின் உளவாளிகள்'' என பெயரிட்டு யூலை மாதத்தில் ஒரு நீண்டகால தடுப்புக் காவலில் வைப்பதற்கான தீர்மானத்தை வழங்கியது. பின்னர் இந்த பொய்க் குற்றச் சாட்டான ''உளவாளிகள்'' எனும் பதத்தை நீதிமன்றம் நீக்கிவிட்டு, ''ஒரு எதிரி அரசுடன்'' இவர்கள் இணைந்து வேலை செய்திருக்கிறார்கள்'' என்று கூறி ''அதற்காக மட்டும்'' இப் பிரதிவாதிகளுக்கு ஒன்பது வருட சிறைத் தண்டனையை வழங்கியது. எனினும் ஒவ்வொரு குற்றவாளிகளுக்கும் தீர்க்கப்பட்ட உண்மையான தண்டனைக்காலம் மேற்கத்தைய அழுத்தம் காரணமாக ஓரிரு வருடங்கள் குறைக்கப்படலாம். அமெரிக்க அரசாங்க திணைக்களம் விடுத்த எதிர்ப்பில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது. எவ்வாறிருந்தபோதும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் இத்தீர்ப்பினால் உற்சாகமடைந்துள்ளதாக தெரிவித்தார்.

ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட உண்மையான தீர்மானம் தற்போது ''தளர்த்தப்பட்டும்'', தடுப்புக் காவல்தண்டனை ''குறைக்கப்பட்டுமுள்ளது'' எனும் விடயத்தை மேற்கத்தைய செய்திநிறுவனங்கள், தமது முதலாவது விசேடமான அறிவித்தலாக தெரிவித்தன. அதேசமயம் அவைகள் இந்த அனைத்து விதமான அடிப்படை, ஜனநாயக சட்ட உரிமைகளுடன், ஆரம்பம் முதல் முடிவுவரையில் முட்டிமோதி பின்னர் அவற்றை காலால் மிதித்த அந்த நீதியின் பாசாங்கு நடவடிக்கைகளுடனும் இணைந்துகொண்டுள்ளனர்.

வியாபாரிகள், கைவினைஞர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் ஆன்மீகத்துறையினர் போன்றோரே இப்போலி குற்றச்சாட்டிற்கு உள்ளாகி பரிதாபமாக பலியாபவர்கள் ஆவர். இவர்களில் எவரிடத்தும், இஸ்ரேல் சம்பந்தமான ஆவணத்தை வைத்திருந்ததிற்கான எந்தவொரு தடயமும் இருக்கவில்லை. மேலும் அத்தாட்சிகள் எதுவும் பகிரங்கமாக்கப்படவுமில்லை. மேலும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்த செய்திகள் பரிமாறப்பட்டதிற்கான தடயங்களையும் விசாரணை நீதிமன்றத்தால் முன்வைக்கமுடியாமல் போய்விட்டது. அந்தப் பிரதிவாதிகளை 18 மாத காலம் எந்தவொரு தொடர்புகளுமோ அல்லது சட்டத்தரணியோ அல்லது அவருடைய உறவினர்களோ சந்திக்கமுடியாதவாறு ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சிறையில் அடைத்து வைக்க ''நிர்ப்பந்திக்கப்பட்ட'' ஒரேயொரு ''அத்தாட்சி'' மட்டும்தான் அவர்களுக்கு கிடைத்தது. மற்றும் இச்சிறைக் காட்சி அரசாங்கத்தின் ரேடியோ, தொலைக் காட்சிகளில் எப்பொழுதும், வழக்குக்கு எடுக்கப்பட்ட ஒரு சட்டத்தரணியின் விளக்கங்களை கூறுவதாக அல்லாமல் அவர்கள் விரும்பியவற்றை கூறுவதாகவே காண்பிக்கப்பட்டது. மேலும் இதற்கான வழக்குகள் ஒரு பூட்டிய அறைக்குள்ளேயே நடைபெற்றதுடன், அதற்கான அரசசட்டத்தரணியும், நீதிபதியும் ஒரே பேர்வழிகளாகும். புலன் விசாரணைக்கான தீர்ப்பு கூறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் சட்டத்தரணி இஸ்மாயில் நாசேரி (Ismail Nasseri) யின் பேச்சாளர் அவரது வழக்களியின் உளவு சம்பந்தமான விடயத்தை ஒத்துக்கொள்ளுமாறு கொலைப்பயமுறுத்தலுக்கு உள்ளாகியதாக தெரிவித்தார்.

ஈரான் அரசாங்கம் இரு இஸ்லாமியர்கள் இவ் வழக்கில் உடந்தையாக்க நிறைய விடயங்களை செய்திருந்தது. இவர்களில் ஒருவர் யூத எதிர்ப்பு வழக்கை தொடருவதென முடிவெடுத்ததை அடுத்து கத்தி ஆர்பரித்திருந்தார் என்பதும், இருப்பினும் இது சரியாக முடிவெடுக்கப்படவில்லை. மேலும் இவர் ஒரு இராணுவ அதிகாரி என்பதும், மற்றவர் ஒரு ஆயுததொழிற்சாலையில் பணிபுரிபவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இவர்களுடைய தொழில் சம்பநதமாக இவர்களுக்கு முக்கியமான இரகசியங்களை சொல்வதற்கு சாத்தியங்கள் இருந்த போதிலும் ஒப்பீட்டுரீதியில் இவர்களுக்கு மிகவும் குறைவான தண்டனையே கிடைத்தது. ஹிட்லரின் வெறிக்கழியாட்டமான ''எனது போராட்டம்'' தோன்றியதன் விளைவாக ஒரு யூத எதிர்ப்புவாத பிற்போக்கு நிலவியதும், இந் நிலமைகளே யூதர்களை ஒரு ''காட்டுமிராண்டி வெறியாட்டத்திற்கு'' இட்டு சென்றதும் என முதலாவது வழக்கு கூறியது. இவ் வழக்கு ஈரானிய யூதர்களை அங்கே ஒரு பயங்கரவாத சூழலுக்கு அச்சுறுத்தியது. யூதர்களின் கடை ஒரு சமயவாத தீவிரவாதிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. யூதர்களின் வருகை ஈரானுக்குள் அதிகரித்து வருவதாக பத்திரிகைகள் மேலும் செய்திகளை வெளியிடுகின்றன.

கிஸ்பொலா [Hisbollah], புரட்சிகர பாதுகாவலர் மற்றும் பாஷி - போராளிகள் (Basij - Milizen) போன்ற இஸ்லாமிய அதிரடிப் படையினரும், அவர்களுடைய கொலையாளி கூட்டங்களும், இந்த யூத எதிர்ப்பு பொய் வழக்கின்மூலம் உசார் அடைந்து படுபிற்போக்கு வாதிகளையும், சமயவாதத் தீவிரவாதிகளையும் தமக்குள் சேர்த்துக்கொண்டு சமயவாத சிறுபான்மையினருக்கு எதிராக மட்டுமல்லாது ''எதிரிகளும் துரோகிகளும்'' என அவர்கள் விசேடமாக கூறிக்கொள்ளும், எதிர்ப்பைக்காட்டும் மாணவர்கள், மற்றும் தொழிலாளர்களை வேட்டையாடுகின்றனர்.

இதனூடு ஜனாதிபதி காட்டாமி அரசாங்கத்தின் ''சீர்திருத்தம்'' என்று கூறப்படுகின்ற இயலாமை ஓர் உயர்ந்த மட்டத்தில் வெளிப்பாடாகியது. காட்டாமி இவ் வழக்கைப் பற்றி எழுந்த அனைத்து விமர்சனங்களையும் நிராகரித்துவிட்டு ஈரானின் நீதித்துறை அதனுடைய எதிராளியின் வழக்குத் தொடர்பாக மிகவும் ஒரு ''சுயாதீனமுடையது'' எனத் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் இந்த நீதித்துறையானது, பொலிசிலும், காவல்துறையிலும் வைக்கப்பட்டுள்ள அதனுடைய கொலைகாரர்களுக்கு எதிராக வெளிப்படையாக குரல் கொடுத்த பத்திரிகை, புத்தகங்களையும் மற்றும் அவற்றின் ஆதரவாளர்களையும் கடைசி மாதங்களில் தடைசெய்தது.

இவை அனைத்திற்கும் மத்தியில் மேற்கு நாடுகளின் எதிர்ப்புக் குரலானது மெல்ல குறைந்துபோனது. தனது ஐரோப்பிய போட்டியாளருக்கு எதிராக அமெரிக்கா ஈரானின் எண்ணை வளங்களை கருத்தில் கொண்டு தனது உறவுகளை புதுப்பிக்க முயல்கின்றது. ஏனைய மேற்கு ஜரோப்பிய நாடுகள் தற்போது ஈரானுடன் தமது பொருளாதார, அரசியல் உறவுகளை இறுக்கமாக்கியுள்ளன. ஜேர்மன் நிறுவனமான லிண்ட (Linde) ஈரானில் உலகிலேயே ஒரு பெரிய இயற்கை வாயுவுக்கான இயந்திரத்தை நிறுவ ஒப்பந்தம் செய்துள்ளது. பல நூறு மில்லியன் டொச் மார்க்குகள் பெறுமதி வாய்ந்த போட்டிக்கான ஒப்பந்தங்களில் ஜேர்மனி, இங்கிலாந்து, மற்றும் இத்தாலி போன்ற நாடுகள் பங்குபற்ற உள்ளன அல்லது அவற்றில் கைச்சாத்திட்டுள்ளன.

இவ்வாறான நிலமைகளின்கீழ் அமெரிக்க நிறுவனங்கள் ஈரானுக்கு மேலான பொருளாதாரத்தடையை முற்றாக நீக்குமாறு தமது சொந்த அரசாங்கத்தினை பெரியளவில் நெருக்குகின்றன. ஈரானிய '' சீர்திருத்தவாதி'' அமெரிக்கா ஈரானுக்கான பொருளாதாரத் தடையை நீக்கும் பட்சத்திலும், அதேபோல் தமது குள்ளத்தனம் மிக்க பழமைவாத கொடுக்கல் வாங்கல் விளையாட்டுக்களையும் அமெரிக்கா ஆதரிக்கும் பட்சத்திலும் அதனுடன் நெருக்கமாக இணைந்துவேலை செய்ய தன்னையே அர்ப்பணித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனவே கவலைக்கிடமான இந்த பத்து யூதர்களின் தலைவிதி இந் நிலமைகளிற்குகீழ் ஒரு முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறது. ஆகஸ்ட் இறுதி முதல் செப்டம்பர் தொடக்கம் வரையில் நியூயோர்கில் நடைபெற்ற ஜக்கிய நாடுகள் சபையின் உச்சி மாநாட்டில் ஈரானைச் சேர்ந்த பல பிரதிநிநிகள் கலந்துகொண்டனர். நியூயோர்க் கலைக்கண்காட்சி மண்டபத்தில் ஈரான் பாராளுமன்றத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளும், அவர்களில் ஒரு யூதரும், ஒரு பெண்ணும், பாராளுமன்றப் பிரதிநிதியான மேடி காரூபியும் (Mehdi Karrubi) மற்றும் அவர்களுடன் குடியரசு, ஜனநாயகக் கட்சியையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அமெரிக்க காங்கிரஸ், அதேபோன்று யூத- அமெரிக்க மன்றம், இவ் இரண்டினதும் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். அமெரிக்கப் பிரிவின் கருத்துப்படி இச்சந்திப்பு ''சிறப்பாகவும் நட்பாகவும் '' நடைபெற்றதாகவும், மேலும் இதில் ஈரான் பாராளுமன்றத்தைச் சேர்ந்த யூதர் மற்றும் ஒரு பெண்பிரதிநிதி கலந்து கொண்டமை ''அழுத்தமானதாகவும்'', மேலும் இச் சந்திப்பு இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளில் ஒரு ''ஐஸ் கட்டியின் உடைவு'' க்கான ஒரு பாதையை வகுக்கலாம் எனவும் கூறப்பட்பது.

காரூபி தனது கருத்தில், இவ்வாறான இந்த இணைந்த சந்திப்பை ''நேசத்திற்குரியது'' என வர்ணித்தார், பின்னர் அமெரிக்க எண்ணை நிறுவனத்தின் பிரதிநிதியைச் சந்தித்து ஈரானுக்கு எதிரான இத் தடையை நீக்குமாறு வேண்டிக்கொண்டார். ஈரானின் வெளிநாட்டு அமைச்சர் காமால் காராச்சி (Kamal Kharazi) அவர் ஈரான் உயர் அதிகாரிகளிடம் பெற்றுக் கொண்ட புதிய அனுமதிகளின் பேரில் பல அமெரிக்க பல்கலைக் கழகங்களுக்கு சென்று அங்கே அறிஞர்களையும், எண்ணை நிறுவனங்களின் முதலாளிகளையும் சந்தித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் உச்சி மாநாட்டின் சந்திப்பில் விசேடமாக ஈரானின் அண்டை நாடான ஆப்கானிஸ்தான் பற்றிக் குறிப்பிடுவதற்காக கலந்து கொண்ட அமெரிக்க வெளிநாட்டு அமைச்சர் அல்பிரைட், எமது அமெரிக்க- ஈரானின் ''ஐக்கியப்பட்ட நலனை'' ஆப்கானிஸ்தானின் போதைவஸ்து கடத்தலுடன் தொடர்புபடுத்தி கருத்து தெரிவித்தார். இவர் மேலும், ஈரானின் பிரதமர் காட்டாமியால் நிகழ்த்தப்பட்ட அவருக்கு மிகவும் பிடித்துக்கொண்ட ஒரு பேச்சான ''மனித நாகரீக வளர்ச்சிக்கான உரையாடல்'' எனும் கூட்டத்திலும் கலந்து கொண்டார். அதேபோன்று அமெரிக்க ஜனாதிபதி கிளின்டனும், காட்டாமியும் மற்றும் ஏனையவர்களுடைய பேச்சுக்களையும் மிகவும் பூரிப்புடன் கேட்டனர்.

முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் இருந்த ஒரு விடயமான யூதர்களுக்கு எதிரான வழக்கு அங்கிருந்த சிலராலும், பத்திரிகையாளர்களாலும் கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கிளின்டன் அரசாங்கம் குற்றவாளிகளின் பிரதிவாதிகளின் நலன்களையே பாதுகாக்க தம்மால் இயன்ற அனைத்தையும் செய்வதாக மீண்டும் மீண்டும் கூறினர். காட்டாமியும், மற்றும் ஏனைய பிரதிநிதிகளும் ''சுயாதீனமான ஈரானின் நீதியை'' பாதுகாத்துக்கொண்ட அதேசமயம் மேல்முறையீட்டின்போது, நீதிமன்றம் வழங்கப்பட்ட அதனது தண்டனையை சில சமயம் குறைத்துக் கொள்ளலாம் எனவும் கருத்து தெரிவித்தனர்.

இது இவ்வாறு இருக்கும்போது, மேற்கு ஐரோப்பிய நிறுவனங்களும் அதனுடைய அரசாங்கங்கள் முயற்சி செய்வதைப்போன்று இந்தக் கடுமையான ஈரான் நீதிபதியும் தனது உண்மையான முகத்தை பாதுகாக்க முயல்கின்றனர். இங்கே ஒரு பிரிவு இதை ''மேற்கத்தைய நாடுகளின் அழுத்தம் '' விட்டுக் கொடுக்கப்பட கூடாதென்று கூற, மற்றவர் இந்த ''அழுத்தம்'' ஆகக்குறைந்தது ஒரு பகுதி வெற்றியையாவது கொடுத்திருக்கிறது என்கையில் இவ்விருவரும் மொத்தத்தில், தத்தமதுவிடயத்தில் ஒருவரோடு ஒருவர்ஒத்துப் போகின்றனர். இந்த சிடுமூஞ்சித்தனமான விளையாட்டில் தோல்வியைத் தழுவுபவர்கள் தீர்ப்புக்குள்ளான யூதர்களும், ஈரானைச் சேர்ந்த பெரும்பான்மையான மக்களுமேயாவர்.

Top of Page

வாசகர்களே: உலக சோசலிச வலைத்தளம்(WSWS ) உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறது. தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்பவும்.


Copyright 1998-2000
World Socialist Web Site
All rights reserved