World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள்: வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

The working class and the 2000 US elections

Part 3: The crisis of the political system

தொழிலாள வர்க்கமும் 2000 ல் அமெரிக்கத் தேர்தல்களும்

பகுதி3: அரசியல் அமைப்பின் நெருக்கடி

Statement of the Socialist Equality Party of the United States
5 October 2000

Back to screen version

அமெரிக்கத் தேர்தல்கள் பற்றிய மூன்றாவது மற்றும் முடிவுப்பகுதி

செல்வந்தத்தட்டுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான அமெரிக்க சமுதாயத்தின் ஆழமாகிவரும் துருவமுனைப்படல் அரசியல் அமைப்பு முறை அழுகலின் வேரில் கிடக்கிறது. இரு பழம் பெரும் கட்சிகளதும் அவை கட்டுப்படுத்தும் தேர்தல் முறைகளதும் தளர்ந்த இயல்பு பரவலாய் உணரப்படுகிறது. நீண்டகாலமாய் இருந்துவரும் மற்றும் அதிகமாய் வெறும் சம்பிரதாயங்களாக இருந்து வரும்-- ஆரம்பப்பிரச்சாரங்கள், மாநாடுகள், விவாதங்கள்- பலம் படைத்த ஆட்சியின் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும் சமூகத்தின், ஜனநாயக மூடுதிரையாக பெரிதும் தொடர்கிறது.

தனது மூன்றாவது புத்தகத்தில் அரிஸ்டாடில் எழுதினார்: ``ஒருவனின் கொடுங்கோலாட்சி ஆட்சியாளருக்கு சாதகமானது, குழு ஆட்சி செல்வர்களுக்கு சாதகமானது, ஜனநாயகம் ஏழைகளுக்குச் சாதகமானது``. வாக்களித்தல் நடைமுறை புறவடிவங்கள் பற்றிய பிரச்சினை அல்ல, எடுத்துக்காட்டாக -கிரேக்கத்தத்துவ ஞானி எழுதினார்: ``ஜனநாயகத்துக்கும் குழு ஆட்சிக்கும் இடையிலான வேறுபாடு வறுமையும் செல்வமும்தான்``.

அந்தத் தராதரத்தில், அமெரிக்க ஐக்கிய நாடுகள் மிகவும் மேலோட்டமான அர்த்தத்தில் மட்டும் ஜனநாயகமாக எஞ்சியுள்ளது. செல்வந்தர்கள் இரு அரசியல் கட்சிகளையும் கட்டுப்படுத்துகின்றனர். மற்றும் அவர்கள் நேரடியாகவும் உடனடியாகவும் பயன்பெறும் வகையில் கொள்கைகளை நிர்ணயிப்பார்கள். இவ்வாறு, காங்கிரஸில் பலத்த பெரும்பான்னையினை கொண்டு, 200 லட்சம் தொழிலாளர்களுக்கு பயனளிக்கும் சராசரி கூலியை அதிகரிப்பதற்கு தடைபோடுகிற அதேவேளை, சில ஆயிரம் கோடீசுவரர்கள் மட்டும் செலுத்தும் எஸ்டேட் வரியை ரத்து செய்வதற்காக ஆர்வத்துடன் வாக்களிக்கின்றனர்.

அதிகாரப்பூர்வ அரசியல் கட்டமைப்புக்கும் பரந்த அமெரிக்க மக்களுக்கும் இடையிலான முறிவானது ஒரே இரவில் ஏற்பட்ட இயல்நிகழ்ச்சி அல்ல, மாறாக அழுகிய நீண்ட காலப்பகுதியின் முடிவான உற்பத்தியாகும். கடந்த 25 ஆண்டுகளாக இரு பெரும்வர்த்தகர்களின் கட்சிகளும் அதி வலதுபக்கத்திற்கு நகர்ந்துள்ளன. இவை உழைக்கும் மக்களின் கொஞ்சநஞ்ச அக்கறையைக் கூட கைவிட்டுவிட்டதுடன், வால்ஸ்டீரிட் மற்றும் கார்ப்பொரேட் அமெரிக்கா முன் என்றுமில்லா வகையில் நெடுஞ்சாண்கிடையாக மண்டியிடுகின்றன.

ஒரு சமயம் கிழக்கத்திய நிதிநிறுவனத்தின் கட்சியாக விளங்கிய, இன்று பெரும்பாலும் தெற்கத்திய இனவாதிகள் மற்றும் கிறித்தவ அடிப்படைவாதிகள் இவர்களுடன், முன்னாள் அமெரிக்க வலதுசாரி அரசியலின் வெறிபிடித்த சக்திகள் எனக்கருதப்பட்ட சுதந்திர சந்தையின் தீவிர சிந்தனையாளர்களாலும் கட்டுப்படுத்தப்படுகின்றது.

ஜனநாயகக் கட்சியானது, குடியரசுக் கட்சி எதிரணியினரால் முன்னர் முன்னெடுக்கப்பட்ட -நிதிப்பழமைவாதம், சட்டம்- ஒழுங்கு வாய்ச்சவடால் மற்றும் ஒழுக்க பக்தி போன்ற வேலைத்திட்டத்திற்கு ஆதரவான, ரூஸ்வெல்ட்டின் புதிய ஒப்பந்தத்துடன் இனங்காட்டப்பட்ட மிதவாதசீர்திருத்தக் கொள்கைகளை கைவிட்டுவிட்டது.

இந்த அன்னியமாதலின் அளவு ஒரு சிறு உண்மையில் பிரதிபலிக்கிறது: வாக்களிக்கத் தகுதியுள்ளோரில் 40 சதவிதத்தினருக்கு சற்று அதிகமானோர் நவம்பர் 7 வாக்குப் பதிவிற்கு செல்வர். அமெரிக்க ஐக்கியநாடுகளின் குடியரசுத்தலைவர், பிரதிநிதிகள் சபை மற்றும் செனட்டிற்கான உறுப்பினர்கள் மக்களில் சிறிய பகுதியினரால் தேர்ந்தெடுக்கப்படுவர். வாக்களிப்போர் உரிய விகிதத்தில் இல்லாமல் மிகவும் சலுகைமிக்கத் தட்டினரிடமிருந்தே வாக்குகள் பெறப்படுகிறது. இளைஞர்கள், ஏழைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் வாக்களிக்கப் போகிறவர்களது எண்ணிக்கை, ஜனநாயக மற்றும் குடியரசுக்கட்சிகளின் பிரச்சார வல்லுநர்கள் மற்றும் தேர்தல் ஆய்வாளர்கள் வழக்கமாய் கணக்கில் எடுத்துக் கொள்ளாத அளவு குறைந்த அளவாக இருக்கும்.

மக்களில் பெரும் எண்ணிக்கையினர் தேர்தலைப் புறக்கணிக்க அல்லது அலட்சியம் செய்கின்றவேளை, ஆளும் வர்க்கம் முடிவைத் தீர்மானிக்க என்றுமில்லாத அளவு அதிகரித்த வளங்களைக் கொட்டுகிறது. 1996 தேர்தல் பிரச்சாரம்தான் முதலாவது 2000 கோடி டாலர் தேர்தல் பிரச்சாரமாக இருந்தது. 2000 ஆண்டின் தேர்தல் பிரச்சாரம் 3000 கோடி டாலர்களுக்கு மேல் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உச்சக்கட்டமாக தொலைக்காட்சி விளம்பரங்களில் இருபகுதியினரும் திரித்துக் கூறல்கள், வாய்ச்சவடால்கள் மற்றும் சேற்றைவாரி இறைத்தல் ஆகியவற்றினால் நிரம்பி வழிகிறது.

பிரதிநிதிகள் சபைக்கான போட்டி இப்போது வழக்கம்போல் 10லட்சம் டாலர்களாகும். செனட்டிற்கான போட்டியில், நியூயார்க்கில் ஹிலாரி கிளிண்டன் போன்றோரின் பிரச்சாரம் போன்றவை, ஒவ்வொரு கட்சியாலும் 200 லட்சம் டாலர்கள் அல்லது அதற்கு மேலான செலவு பிடிக்கக்கூடியவை. குடியரசுத்தலைவர் பதவியைப் பொறுத்தமட்டில், ஜனநாயக மற்றும் குடியரசுக்கட்சி மனுதாரர்கள் பிரச்சாரத்தில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே 5000 லட்சம் டாலர்களுக்குமேல் செலவு பிடிக்கக்கூடியது. இந்த திகைப்பூட்டும் செலவுகள் குறைந்து செல்லும் பயன்பாடு விதியின் கீழ் இயங்குமாறு காணப்படுகின்றன. தேர்தல் போட்டிகளில் ஊதாரித்தனமாய் அதிகம் செலவு செய்யச்செய்ய, குறைவான மக்கள் ஆர்வம் அல்லது குறைவான அக்கறையையும் கூட தோற்றுவிக்கும்.

இதன் விளைவாக இடதுபுறம் பெருமளவில் அரசியல் வெற்றிடம் உள்ளது. அது அமெரிக்காவில் சோசலிசக் கொள்கைகளுக்கு ஆதரவளிப்பதை மக்கார்தீற் (McCarthyite) வேட்டைக்காரர்கள் குற்றமாக்கியதன் பின்னர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறது. இப்போது மிதவாதம் மங்கலாகிப்போய் விட்டது. மற்றும் அதிகாரப்பூர்வ அரசியல் கிளிண்டன் மற்றும் கோரின் ``நடுத்தர`` பழமைவாதத்திலிருந்து நெவ்ட் ஜிங்ரிச், ஜெஸி ஜாக்ஸன் மற்றும் டாம்டிலேயின் அரைப்பாசிச அரசியலுக்கு நீடிக்கப்படுகின்றது.

இருகட்சிகளும் எதற்காகப்போராடுகின்றன?

இருகட்சி முறையானது பரந்த உழைக்கும் மக்களுக்கும் சலுகைமிக்க வர்க்கத்திற்கும் இடையிலான அடிப்படை பகைமைக்கு முற்போக்கான தீர்வை வழங்கவில்லை. இருப்பினும் அதற்கு, அரசியல் ஏற்பாட்டுக்குள்ளே மோதல்கள் இல்லை என்று பொருளாகாது. பரந்த வெகுஜனங்கள் சம்பந்தப்பட்ட சமூகப் பிரச்சினைகளைப் பற்றிய எந்தவித சீரிய விவாதமும் இல்லாதநிலையில், அரசியல் அமைப்பானது பணக்காரத்தட்டுக்குள்ளே உள்ள போட்டிக் குழுவினரிடையிலான மூர்க்கமான போராட்டத்தில் மேலாதிக்கம் செய்யப்படும்.

ஆளும் வட்டங்கள் எந்தவித வெகுஜன ஆபத்திலிருந்தும் சுதந்திரமாக உணர்வது அதிகரிக்க, இந்த மோதலானது கொந்தளிப்பதுடன் தட்டுத்தடங்கலின்றி அதிகமாகிவருகிறது. 1992ல் கிளிண்டன் தேர்வினால் அதிர்ச்சியும், சுகாதாரம் பற்றிய அவரது மிதமான சீர்திருத்த முன்மொழிவுகள் மற்றும் அரசியல் தோல்விப் பிரச்சாரத்தைத் தொடுக்க வைத்த வரிவிதிப்பு ஆகியவற்றால் திகைப்பும் அடைந்த அதிவலதுசாரி சக்திகள், வைட்வாட்டர் விசாரணையால் நிர்வாக இயக்கத்தை இடையூறு செய்தனர். இது சட்டமாமன்ற குடியரசுக்கட்சித்தலைமை மற்றும் சுதந்திர கவுன்சில் அலுவலர் கென்னத்தஸ்டார் (Kenneth Starr) ஆகிய நடுவர்கள், வலதுசாரி செயல் முனைவோருடனான சதிமூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத்தலைவரை பதவியிலிருந்து அகற்றுவதற்கான முயற்சியில், மொனிகா லெவின்ஸ்கி ஊழலுடன் உச்சக்கட்டத்தை அடைந்தது.

அரசியல் குற்றச்சாட்டு தோல்வியடைந்தது, ஜனநாயகக் கட்சியினரின் எந்தவித சீரிய எதிர்ப்பினாலும் அல்ல மாறாக இரு தேர்தல்களின் விளைவுகளை திரும்பக் கொண்டுவருவதற்கு, இட்டுக்கட்டப்பட்ட பாலியல் ஊழலைப் பயன்படுத்துதற்கு உள்ள எதிர்ப்பினால் ஆகும். இருகட்சிகளும் 1998 சட்டமாமன்றத் தேர்தலின் விளைவால் அதிர்ச்சி அடைந்தன. அரசியல் குற்றச்சாட்டு விசாரைைணயை நடத்த வேண்டும் என்று வாக்களித்த பின், குடியரசுக்கட்சியினர் அத்தேர்தலில் இடங்களை இழந்தனர். இப்பொழுது 2000ன் தேர்தல் பிரச்சாரத்தில், இருகட்சிகளும் குற்றச்சாட்டு விசாரணை முயற்சியையும் இந்த அரசியல் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியின் முக்கியத்துவத்தையும் விவாவதிக்கும் எதனையும் தவிர்க்க முயன்றனர்.

தேர்தல் முறை மற்றும் வாயரற்றல்களுக்கு அப்பால், ஜனநாயகக்கட்சிக்கும் குடியரசுக்கட்சிக்கும் இடையிலான உண்மையான வேறுபாடுகள் தான் என்ன?

குடியரசுக்கட்சி மற்றும் புஷ் பிரச்சாரத்தின் இலக்கு தனிநபர்

செல்வக்குவிப்புக்கு எதிரான அனைத்துத் தடைகளையும் அகற்றுவதாகும். அது மிகவும் தன்னலம்படைத்த, பேராசை பிடித்த, தற்பெருமை படைத்த மற்றும் குறுகிய நோக்குடைய ஆளும் தட்டின் பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. குறிப்பிடத்தக்க வகையில், புஷ் பிரச்சாரமும் சட்டமாமன்ற குடியரசுக்கட்சித் தலைமையும் எஸ்டேட் வரியை நீக்குவதற்காக பொதுமக்கள் ஆதரவைத் திரட்ட விருந்தனர். இந்தவரியால் ஒவ்வொரு ஆண்டும் செல்வம் படைத்த சில ஆயிரம் பேர் மட்டும் பாதிப்படைந்தனர். In heritance tax மற்றும் அதன் துணையான சீரான வருமானவரி ஆகியன 1900களின் தொடக்கத்தில் முன்னேற்ற சகாப்தத்தின் பொழுது சேர்க்கப்பட்டன. மேலதிகமாய் குவிந்து கிடக்கும் செல்வம் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாகும் என்ற அக்கறைகளினால் இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பொழுது, நிதிப்பிரபுக்களது ஆட்சியை ஸ்திரப்படுத்துவதற்கான எஞ்சிய சில தடைகளும் தாக்குதலுக்காளாகியுள்ளன.

ஜனநாயகக்கட்சியும் கோர் பிரச்சாரமும், உடனடியாய் செல்வத்தைத் திரட்டலிலும் அதனை அனுபவிப்பதிலும் குறைவாய் உறுதியுள்ளவர்களை மற்றும் இலாப அமைப்பு முறையின் பாதுகாப்பு தொடர்பாக ஏதோ வகை மிகவும் தொலைநோக்கு உடையவர்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்றது. அவர்கள் அதிகாரத்தையும் செல்வத்தையும் இன்றுமட்டும் அல்ல, நாளைக்கும் கூட அனுபவிக்க விரும்புகிறார்கள். ஆகையால் கொஞ்சம் வளங்களை அரசாங்கத்தின் உபயோகத்திற்காகவும் சமூக பாதுகாப்பு எனப்படும் வால்வை(social safety valve) அழிப்பதற்காகவும் ஒதுக்கிவைப்பதை அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

``அதிகாரம் படைத்தவர்கள் அல்ல, மக்கள்தான்`` எனும் கோரின் வாயரற்றல் முதலாளித்துவம் குறிப்பிட்ட அளவு பொதுமக்களின் ஆதரவு இல்லாமல் உயிர்வாழமுடியாது என்பதன் உறுதிப்பாடு ஆகும். இருப்பினும் இவ் ஆதரவுப் பிரமைகள் மற்றும் பொய்மையான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அவரது ஜனரஞ்சகவாதம் கடுமையாக மட்டுப்படுத்தப்பட்டது, கவனமாக பண்பு அறியப்பட்டது, சிறப்பாக ஒட்டுமொத்தக் கட்டமைப்பின்மீது கார்ப்பொரேட் மேலாதிக்கத்தை உயர்த்திப்பிடித்துக் கொள்ளும் அதேவேளை, கண்டித்துத் திருத்துவதற்காக குறிப்பிட்டத் தொழிற்சாலைகள்ை மட்டும் தேர்தெடுப்பது ஆகும். குறிப்பாக, கோர் 1992ல் மற்றும் 1996ல் கிளிண்டனைப்போல் வால்ஸ்ட்ரீட்டின் பணக்கார முதலாளிகள் மத்தியில் கணிசமான ஆதரவைப் பெற்றார்.

ஆளும் வர்க்கத்தினைப் பொருத்தமட்டில் நெருக்கடியானது, அமெரிக்க முதலாளித்துவத்தின் குவிந்துவரும் முரண்பாடுகளிலிருந்து வெளிவர எந்த மாற்றீடும் ஒருபோதும் தீர்வை வழங்கவில்லை என்பதுதான். புஷ்ஷின் கொள்கைகள் ஆளும் வர்க்கம் தனது சொந்த செல்வத்தில் மூச்சுமுட்டி, வயதானதால் தளர்ந்து பைத்தியம் பிடித்த வடிவம் என்றால், கோரின் கொள்கைகள் சுய ஏமாற்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறது.

கோர் பொது மனிதனுக்கு ஆதரவாய் கண்டனங்களை எழுப்புவதில் நேர்மையாய் இருக்கிறார் என்று ஒருவர் தாரளமாய் ஏற்கவேண்டுமானால், (நாங்கள் அதை ஏற்பதற்கில்லை) கோர்-லிபர்மேன் நிர்வாகத்தால் அற்பமான சீர்திருத்த வாத வேலைத்திட்டத்தைக் கூட நடைமுறைப்படுத்த எடுக்கும் எந்த முயற்சியும் கார்ப்பொரேட் மற்றும் அரசியல் தட்டிலிருந்து கடும் எதிர்ப்பினை எதிர்கொள்ளச் செய்யும்.

கிளின்டனின் 1993 வலவு செலவுத்திட்டம் சட்டமாமன்றத்தில் குடியரசுக்கட்சியினரின் ஒரு ஓட்டுகூட இன்றி நிறைவேற்றப்பட்டது, ஆளும் வட்டாரத்துக்குள் திடுக்கிடச் செய்ததை ஒருவர் நினைவு கூரவேண்டும். இந்த நடவடிக்கை வால்ஸ்ட்ரீட் பத்திரிகையின் தலையங்கப் பகுதியில் அரைக்கிறுக்குத்தனத்தை சூடேற்றவைத்ததுடன் கிளிண்டனின் அரசியல் குற்றச்சாட்டு விசாரணையாய் உச்சக்கட்டத்தை அடைந்த அரசியல் ஆத்திரமூட்டலுக்கு வழியமைத்தது.

மேலும் கோரால் முன்மொழியப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் கூட ஆளும் வர்க்கத்துக்கு மரண ஆபத்தான அரசியலைக் கொண்டிருக்கிறது, ஏனெனில் தற்போதைய அமைப்பின் கீழ் பொதுமக்கள் எதிர்பார்ப்புக்கள் திருப்திப்படுத்தப்பட முடியாதவை என்பதைப் பற்றியும் கார்ப்பொரேட் அதிகாரத்தை தங்குதடையின்றி பயன்படுத்துவதைப்பற்றியும் அவர்கள் விழிப்படைந்திருப்பது எதிர்ப்பினை ஊக்குவிக்கும் என்பதால் தான். மோசமான ஆட்சி தன்னேயே சீர்திருத்த முயலும்போது பெரும்பாலும் குழப்பத்தில் ஆளும் என்பது வரலாற்று விதியாகும்.

அமெரிக்காவும் உலக முதலாளித்துவமும்

அடிப்படைரீதியாக அமெரிக்க முதலாளித்துவத்தின் உலக நிலையானது, முதலாளித்துவ நிர்வாகம் எந்தவித சமூகச் சீர்திருத்தங்களையும் நிறைவேற்ற முடியாததாய்ச் செய்கிறது. அமெரிக்க ஐக்கிய நாடுகள், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகச் சந்தையில் அது அனுபவித்த ஒப்பிட்டளவு சுதந்திரத்தை இனி பெற முடியாத நிலையில் உள்ளது அல்லது அந்நூற்றாண்டின் கடைசிக் காலகட்டத்தின் பெரும்பகுதியில் தக்கவைத்திருந்த, வெளிநாட்டு போட்டியாளர்கள் உடனான அதன் மேலாதிக்க நிலையை இனியும் பெறமுடியாத நிலையில் உள்ளது.

1990களின் நிதிச் செழிப்பானது பெரிய அளவில் அமெரிக்கா, அன்னிய மூலதன முதலீட்டை ஈர்க்கும் அதன் திறமையின் மீது தளப்படுத்தப்பட்டிருந்தது. இது அமெரிக்க கம்பெனிகள் -தங்களது ஐரோப்பிய ஆசியப் போட்டியாளர்களை ஒப்பிடுகையில்- வேலைகளை அழித்தலில், விதிமுறைகளைத் தளர்த்தலில் மற்றும் சமூக நலஅரசை அழித்தலில் -அவற்றின் பெரும் வெற்றியை, பெரிதும் அடிப்படையாய்க் கொண்டிருந்தது.

அமெரிக்கப் பொருளாதாரம் தானும் அதிகமாய் நிலையிலாததாய் இருப்பது, சுற்றியுள்ள பங்குச்சந்தையில் நிச்சயமற்றதன்மையின் காரணமாக மட்டும் அல்ல, மாறாக வர்த்தகச் சமநிலைப் பற்றாக்குறை குவிவதால்தான். இது தற்போது ஆண்டுக்கு 400 பில்லியன் டாலர் வீதத்தில் போகிறது. தேர்தல் ஆண்டின் அனைத்து ஆரவாரங்கள் முதல் கூட்டாட்சி உபரி வரவு செலவுத்திட்டம் வரை, வர்த்தகப் பற்றாக்குறைபற்றி பெரும்பாலும் கலந்துரையாடலே இருக்கவில்லை. அந்நிய முதலீட்டாளர்கள் அமெரிக்கச் சந்தையை விட்டு ஓடத்தொடங்கிவிட்டால் அது விரைவில் தாங்கமுடியாத சுமையாய் மாறும். அமெரிக்க பொருளாதார மேலாதிக்கம் உச்சத்தில் இருந்த போது, அமெரிக்க ஐக்கிய நாடுகளைப் போல் உலகத்தில் எந்த முதலாளித்துவ ஜனநாயகமும் தொழிலாள வர்க்கம் வென்றெடுத்த சமூக சீர்த்திருத்தத்தையும் சமூக முன்னேற்றத்தையும் அந்த அளவு கடும் மூர்க்கத்துடன் தடுக்கவில்லை. அமெரிக்கத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை மிகவும் குறைந்தபட்ச தொழிற்சங்க உரிமைகளை வென்றெடுக்கக் கூட அதற்கு அறுபதாண்டுகால கோரமான மற்றும் இரத்தம் தோய்ந்த யுத்தங்கள் தேவைப்பட்டன. இது பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஆலைகளையும் வேலைத்தளங்களையும் முற்றுகையிட்ட, முதிர்ச்சி பெறாத எழுச்சிப்போராட்டத்தின் மூலம் மட்டுமே அடையப்பட்டது.

கறுப்பர்களுக்கான அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டம் உள்நாட்டு யுத்தத்தின் முடிவிலிருந்து குறிப்பிடத்தக்க குடியுரிமை மசோதா பாதை வரையிலான ஒரு நூற்றாண்டை எடுத்தது. அது வெட்டிக்கொல்லுதல், பரந்த அளவில் ஒடுக்குதல் மற்றும் சதி செய்து கொல்லுதல் ஆகியவை மூலம் தடுக்கப்பட்டது. அது நகர்ப்புற எழுச்சிகளது அரசியல் சூழலில் மட்டுமே அடையப்பெற்றது. இறுதியில் சமூகநல அமைப்பு தொழிலாளர் மற்றும் குடியுரிமை போராட்டங்களின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டது, எந்த பிரதான தொழிற்துறை நாட்டிற்கும் மிக அடிப்படை அம்சமாகும்.

பங்குச்சந்தை பூரிப்பின் மொத்த மாளிகையும் சமுகத்திட்டங்களின் அழிவின் மீதும் தொழிலாள வர்க்கத்தின் என்றுமில்லாத அளவு பரந்த தட்டினரின் ஏழ்மைமீதும் கட்டப்பட்டிருக்கும் பொழுது, ஜனநாயகக்கட்சி நிர்வாகத்தாலோ அல்லது குடியரசுக்கட்சி நிர்வாகத்தாலோ இப்போது சமூக சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று கருத்துரைப்பது, அப்பட்டமான மோசடியாகும். சமூக முன்னேற்றத்தின் புதிய சகாப்தத்துக்கான ஒரே ஒரு அடிப்படை தொழிலாள வர்க்கத்தின் சுதந்திரமான அரசியல் போராட்டமாகும்.

கார்ப்ரேட் அதிகாரத்துக்கு எதிர்ப்பு

உழைக்கும் மக்களின் சுதந்திரமான இயக்கத்தின் தோற்றத்திற்கான சூழ்நிலைமைகள் விரைவாய் அபிவிருத்தி அடைந்து வருகின்றன. ஜனநாயகக் கட்சியினரும் சரி குடியரசுக்கட்சியினரும் சரி இருவருமே உண்மையான மக்கள்தளத்தை இழந்துவிட்டனர். இரண்டு வழிகளையும் துண்டிக்கும் ஆழமான பிரிவு உள்ளது. ஆளும் தட்டானது மக்களின் துயரங்கள் பற்றி கவலைப்படாததாயும் கூர் உணர்வற்றாதாகவும் உள்ளது. அபிவிருத்தி அடைந்திருக்கும் சமூக இடைவெளியின் உண்மையான வரையறை பற்றிய ஆழ்ந்த அறிவானது மக்களுக்கு அரிதாக இருக்கிறது. தங்களின் அரசியல் மற்றும் சமூக நாட்டங்களில், இந்த இரு பிரதான வர்க்கங்களும் ஒரே மொழியைக் கூடப் பேசுவதில்லை: அதனால்தான் தொடர்ந்து பொதுமக்களின் கருத்துப்பற்றிய தவறான கணிப்பீடுகள் செய்தித் தொடர்பு சாதனங்களாலும் அரசியல் பண்டிதர்களாலும், உருவாக்கப்படுகிறது--அது முதலில் அரசியல், குற்றச்சாட்டுவிசாரணை நெருக்கடியாகவும் இப்போது குடியரசுத் தலைவர் தேர்தலாகவும் வருகிறது.

அமெரிக்க மக்கட் தொகையில் பெரும்பாலோர் அரசியல் அமைப்பு முறையிலிருந்து மட்டும் அந்நியப்படவில்லை, அமெரிக்காவில் உள்ள கம்பெனிகளின் அதிகார கட்டமைப்பு முழுவதிலிருந்தும் கூட அந்நியப்பட்டுள்ளனர். அண்மையில் பிசினஸ் வீக் இதழ் வளர்ந்துவரும் கார்ப்பொரேட் எதிர்ப்பு உணர்வு தொடர்பாக ஒரு விளக்கட்டுரையில் குறிப்பிட்டது: ''பரந்த பெரும்பான்மை அமெரிக்கர்கள் பெரும் வர்த்தகர்களது அதிகாரம் தொடர்பாக ஆழமான வெறுப்புணர்வை உணர்கின்றனர்'' என்று.

முதலாளித்துவ அமைப்பின் மிகவும் தொலைநோக்குடைய பிரநிதிகள் இந்தப் போக்குபற்றி அக்கறையை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர். கூட்டாட்சி ரிசர்வ் போர்டின் தலைவர் அலன் கிரீன்ஸ்பான், வ்யோமிங்கில் உள்ள, ஜாக்சன்ஹோலில் வங்கியாளர்களின் சர்வதேச மாநாட்டில் அண்மையில் நிகழ்த்திய உரையில், ``செல்வத்தை சந்தைகள் விநியோகம் செய்யும் விதம் அமைதியற்றதாயிருக்கிறது`` என்று பொதுமக்களை எச்சரித்தார். ``அண்மைய ஆண்டுகளில் அமைக்கப்பட்ட நிலையிலிருந்து பொருளாதார செயல்பாடுகளில் உள்ள குறிப்பிடத்தக்க எந்தவித துண்டு விழலும், சந்தை வழிப்பட்ட அமைப்பு முறைகள் பற்றிய புதுப்பிக்கும் உணர்வில் ஆபத்தை விளைவிக்கிறது``, என்று கூறினார்.

இருகட்சிகளும் பங்குச்சந்தைப் பூரிப்பை சலுகைமிக்க சிறுபான்மைக்கான வெகுமதியாக அல்லாமல், உலக அளவிலான முன்னேற்றத்தை அர்த்தப்படுத்துவதுபோல் கொண்டாடி 2000த்தின் பிரச்சாரத்தைத் தொடங்கின. முதலாளித்துவத்தின் வரலாறு முழுவதும் உலகச் செழிப்புக் காலக்கட்டம் ஒவ்வொன்றும் வர்த்தகச் சுழற்சி கைப்பற்றிக் கொண்டுவிட்டது என்றும் இலாப அமைப்பு சந்தைகள் மட்டுமே மேலே உயரக்கூடிய புதிய சகாப்தத்திற்குள் நுழைந்துவிட்டன என்றும் பிரமைகளின் வளர்ச்சியால் குறிக்கப்பட்டு வருகின்றது. அத்தகைய மோசடிகள் பகுத்தறிவானதைவிட தனிநபர் போராசையைக் காட்டுகின்றன என்பது பரவிவருகிறது. ஆனால் கடந்த பல மாதங்களில் சுயதம்பட்டம் அடிக்கும் மனோபாவம் மறையத்தொடங்கிவிட்டது, அதனுடன் புஷ் வாக்குகளில் முன்னணி என்பதும் மறையத்தொடங்கி விட்டது.

ஏற்கனவே பல திருப்பங்களையும் திரித்தல்களையும் கொண்டிருந்த பிரச்சாரம் மேலும் அதிர்ச்சியை சேமித்துவைத்திருக்கிறது. ஆனால் விளைவு எதுவாயினும், முக்கிய பிரச்சினை இதுதான்: ஆழமாய் வரும் சமூக நெருக்கடிக்கு எந்த முதலாளித்துவ வேட்பாளர்களும் அல்லது கட்சிகளும் ஒரு தீர்வையும் காணப்போவதில்லை. ஒரே உண்மையான வருவது உரைத்தல் (எதிர்வுகூறல்) எதுவெனில், தேர்தலுக்குப் பிந்தைய காலகட்டம் உக்கிரப்படுத்தப்பட்ட சமூக அமைதியின்மையால் பண்பாக்கம் செய்யப்படும் என்பதுதான். அது பொருளாதாரநிலைமை மோசமடைகையில் பெரிய விகிதத்தினை அடையும்.

இயற்கையைப்போல், அரசியலும் வெற்றிடத்தை நிரப்பத்துடிக்கிறது. மக்கள் தொகையில் பெரும்பான்மையினரான அமெரிக்க உழைக்கும் மக்கள் தங்களது சமூக நலன்களுக்கும் அல்லது ஜனநாயக உரிமைகளுக்குமான உண்மையான ஆதரவாளர்களை, இருக்கின்ற, முற்றிலும் சீரழிந்துபோன அரசியல் அமைப்பில் கண்டுகொள்ளமுடியாது. அவர்கள் அரசியல் சமூகப்போராட்டங்களுக்குள் நுழைகையில்-வருகின்ற காலங்களில் தவிர்க்க முடியாதவாறு-அவர்கள் பழைய கட்சிகளுடன் உறவை முறித்துக்கொள்வதற்கு இட்டுச்செல்லும் அத்துடன் தொழிலாள வர்க்கத்தின் புதிய வெகுஜனக் கட்சியைக் கட்டி அமைக்கும் அரசியல் நீர்வழிக்குள் தள்ளப்படுவார்கள்.

Top of Page

வாசகர்களே: உலக சோசலிச வலைத்தளம்(WSWS ) உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறது. தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்பவும்.


Copyright 1998-2000
World Socialist Web Site
All rights reserved