World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்:விஞ்ஞானம்&ஸீதீsஜீ;

Science and Society, a Socialist Perspective

விஞ்ஞானமும் சமூகமும், ஒரு சோசலிச முன்நோக்கு

அமரர் கந்தசாமி

கடந்த இரண்டு வருடகாலமாக எம்முடன் கூடி வாழ்ந்த அமரர்&ஸீதீsஜீ; கந்தசாமி தனது 80 வயதில் காலமானார். இவர் உலக சோசலிச வலைத்தளத்தின் தமிழ் பக்கம் உருவாக்கப்பட்டதில் இருந்து தள்ளாத வயதிலும் ஒரு இளைஞனின் துடிப்புடனும், குதூகலத்துடனும், மிகுந்த பொறுப்புணர்வோடும் உலக சோசலிச வலைத்தளத்தின் ஆங்கில ஆக்கங்களை தமிழில் மொழிபெயர்ப்பதில் ஈடுபட்டிருந்தார். இவரது உற்சாகமும், இளமை உணர்வும் எமக்கு ஆச்சரியமானதாக இருந்தது. உலக சோசலிச வலைத்தளத்தின் ஆய்வுக் கட்டுரைகள் ஒவ்வொன்றையும் மொழிபெயர்க்கும்போது தான் இளமையில் நம்பிய அரசியல், தத்துவப்போக்குகள் அனைத்தும் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டதை கண்டார். இது அவரது உற்சாகத்தை இன்னும் அதிகப்படுத்தியது. தான் வாழ்ந்த காலத்தில் அவர் முகம்கொடுத்த பிரச்சனைகளுக்கான உண்மையான தீர்வு இருந்ததையிட்டு ஆச்சரியம் அடைந்தார். அதை தானே தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உற்சாகத்துடனும் மகிழ்சியுடனும் கலந்துரையாடினார்.

இவர் மனித வாழ்வின் உயிர்த்துடிப்பு நிறைந்த அம்சங்களை கடைப்பிடித்தார்.வாழ்வின் மீது பிடிப்புள்ளவராகவும்,தன்னம்பிக்கை உடையவராகவும் எல்லாவற்றுக்கும் மேல் வருங்காலத்தின் மீது நம்பிக்கையுடையவராகவும் இருந்தார். இவரது இந்த குணாதிசயம் தான் அவர் தனது இறுதிகாலத்தினை ஆக்கபூர்வமான முறையில் அதாவது மனிதகுலத்தின் உயர்ந்த கலாச்சாரத்தினை அடுத்த சந்ததிக்கு அறிமுகப்படுத்துவதில் கவனம் செலுத்துவதற்கான உந்து சக்தியாக இருந்தது. அவரின் இறுதி நிமிடம் வரை அவர் தனது புத்திஜீவிதத்தை இழந்து விடவில்லை. இவர் வாழ்வின் ஒவ்வொரு வினாடிகளையும் இரசித்து அனுபவித்துடன் தன்னைச் சுற்றியும் உலகில் நடக்கும் ஒவ்வொரு விடயங்களையிட்டும் அக்கறை காட்டியதுடன், அவர் தனது மரணத்தின் இறுதி நிமிடங்களில் பத்திரிக்கைகள் மற்றும் முக்கியமான இணைய செய்திகள் அனைத்தையும் வாசித்துவிட்டிருந்தார்.

இவரது இறுதிக்கால வாழ்வு எமக்கு ஒரு மாபெரும் அனுபவத்தையும் நம்பிக்கையையும் தருகிறது. அதாவது, சமூக பிரச்சனைகளுக்கு விடைதேடும் மனிதன் அதற்கான தீர்வை கண்டு கொள்ளும் போது வயது வித்தியம் இல்லாமல் தனக்கு நேர்மையாக இருக்கும் பட்சத்தில் தன் முழுச்சக்தியையும் அதற்காக அர்ப்பணிக்க பின்னிற்க மாட்டேன் என்பதே.

உலகத்தின் உயர்ந்த கலாச்சாரத்தினை பிரதிநித்துவப்படுத்தும் சோசலிச ஆய்வுக் கட்டுரைகளை தனது தள்ளாத வயதிலும் தமிழில்மொழி பெயர்த்ததன் மூலம் மிகவும் சிக்கலான வரலாற்றுப் பிரச்சனைகளை இன்றைய இளம் சந்ததி படித்து அறிந்து கொள்ளவும், விளங்கிக் கொள்ளவும் தன்னாலான பங்கை அவர் குதூகலத்துடனும் மகிழ்ச்சியுடனும் ஆற்றியுள்ளார்.இதனால் அவர் தமிழ்பேசும் உலகின் அனைவரினது நெஞ்சங்களிலும் வாழ்வார், வருங்காலத்தில் எல்லோராலும் நினைவு கூரப்படுவார்.

இன்று அவரது இறுதிக் கடமைகள் நடைபெறுகின்றன. இத்தருணத்தில் அவர் இறுதியாக மொழிபெயர்த்த இக்கட்டுரையை இன்று பிரசுரிப்பதன் மூலம் உலக சோசலிச வலைத்தளத்தின் தமிழ் பக்கம் உலகத் தொழிலாள வர்க்கத்தின் இளம் தலைமுறைக்கு அவரது ஞாபகத்தை சமர்ப்பிக்கின்றது. ஓர் உயர்ந்த உலகிற்காக போராடுபவர்களினதும், தியாகம் செய்பவர்களினதும் இதயங்களில் அவர் உரிமையுடன் வாழ்வார்.

......... ......... ......... ............ ...........

விஞ்ஞானமும் சமூகமும், ஒரு சோசலிச முன்நோக்கு

A lecture by Chris Talbot
29 December 1998

Back to screen version

Kent நகரத்திலுள்ள Canterbery பல்கலைக் கழகத்தில் உயிரியல் தொழில்நுட்பமும் பொதுஜன விவகாரம் பற்றிக் தபால் மூலம் பட்டப்படிப்பினை மேற்கொள்ளுவோர் சமுகமளித்திருந்த ஓர் வைபவத்தில் பிரித்தானிய சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினரும் கணிதப் பேராசிரியருமான Chris Talbot ஆல் வழங்கப்பட்ட விரிவுரை(guest lecture) கீழே தரப்படுகின்றது.

சர்வதேச ட்ரொஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒரு பிரிவான பிரித்தானிய சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினராக பேசுகின்றேன். பெப்ரவரியிலிருந்து உலக சோசலிச வலைத்தளத்தை நாங்கள் ஆரம்பித்துள்ளோம், மேலும் விஞ்ஞானம், மருத்துவம், தொழில்நுட்பம் உள்ளடங்கலாக பல வித்தியாசமான துறைகளில் விமர்சனக் கண்ணோட்டத்துடனான சிந்தனைகளுக்கு ஊக்கம் அளிப்பதை கடைப்பிடித்து வருகிறோம். அத்துடன் நான் ஒரு விஞ்ஞானப் பின்னணி கொண்ட ஒருவனாக பேசுகிறேன் அதேவேளை நான் கணிதவியல் பேராசிரியராகவும் இருக்கின்றேன்.

ஓர் குறிப்பிட்ட அர்த்தத்தில், பின்வரும் கோரிக்கையுடன் எனது உரையை ஆரம்பிக்க அனுமதியுங்கள். அதாவது, ஒருவரின் உலகத்தைப் பற்றிய அணுகுமுறையானது தொடர்ச்சியாக விஞ்ஞானபூர்வமாக இருப்பதும், மனிதகுலம் எதிர்நோக்கும் ஆழப்பதிந்துள்ள சமூக அரசியல் பிரச்சனைகள் பற்றி ஒரு சோசலிஸ்ட்டாக இல்லாது சரியான முறையில் அறிந்து கொள்வதும் சாத்தியமற்றதாக இருக்கும். இது, ஒரு சோசலிஸ்ட்டாக அல்லது மார்க்சிசவாதியாக அல்லாதவர்களால் விஞ்ஞானத்தை அபிவிருத்தி செய்வதற்கு முக்கியமான வகையில் உதவி புரியமுடியாது என்று அர்த்தப்படாது. ஆனால், சமுதாயத்தில் விஞ்ஞானத்தின் பங்கினை ஆய்வு செய்வதன் அர்த்தம்-- சந்தையையும் தனியார் இலாபத்தினையும் அடித்தளமாக கொண்ட-- இந்த குறிப்பிட்ட சமுதாயமே விஞ்ஞான ஆராச்சியின் திசையையும் மற்றும் அதன் கண்டுபிடிப்புகள் எந்த வழியில் உபயோகப்படுத்துவது என்பதையும் தீர்மானிக்கின்றது என்பதை விமர்சன ரீதியில் ஆய்வுசெய்யவதாகும்.

ஒருவர் இவ்வகையான பிரச்சனைகளைக் கவனிக்குமிடத்து, இருபதாம் நூற்றாண்டில் விஞ்ஞானத்தினதும், தொழில்நுட்பத்தினதும் திகைப்படையச் செய்யுமளவிலான அபிவிருத்திக்கும், வியாதியும் வறுமையும் ஊட்டக்குறைவும் தொடர்ந்து அதிகரித்து வருவதற்குமான பயங்கரமான முரண்பாடுகளை நாங்கள் பார்க்கின்றோம். அவை அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் மட்டுமல்லாமல் முன்னேற்றமடைந்த நாடுகளான பிரித்தானியா,அமெரிக்கா போன்ற நாடுகளிலும் கூட இருக்கின்றன. விஞ்ஞானம் இவ்வகையான பலபிரச்சனைகள் அனைத்தையும் தெளிவு படுத்துவதற்கு வழிவகுத்துள்ளது. ஆயினும் அவை தொடர்ந்தும் இருந்துவருவது மட்டுமல்லாது மோசமடைந்தும் வருகின்றன. உதாரணமாக உலகளாவிய ரீதியில் வரலாற்றில் ஒருபோதுமில்லாதவாறு 300 மில்லியன் மக்கள் கசரோகத்தால் இறந்துள்ளார்கள். பிரிட்டனிலும் கூட இப்படியான நோய்கள் முக்கியமாக அதிகரித்து உள்ளன. உலக சுகாதார நிறுவனத்தின் கருத்தின்படி மலேரியா "பயமுறுத்தக் கூடிய வகையில் பரவிவருகின்றது". ஆகக் குறைந்தபட்சம் வருடத்திற்கு 300 மில்லியன் தொற்றுநோய் சம்பவங்களும், ஆபிரிக்காவில் 5 வயதுக்குட்ப்பட்ட 90 சதவீத குழந்தைகளின் மரணங்களும் உள்ளளடங்கலாக ஆகக்குறைந்தது 1.5 மில்லியன் மரணங்களும் சம்பவிக்கின்றன.

இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்குரிய மூலவளங்கள் உலகில் இருக்கின்றன.ஆனால் அவை யாவும் தனியார் கைகளில் இருக்கின்றதுடன், சிறியளவிலான பெரும் பணக்காரர்களினால் பணம் குவிப்பதற்கு உபயோகப்படுத்தப்படுகின்றது. அதிகரித்துவரும் சமத்துவமின்மை தொடர்பாக அண்மையில் ஒரு ஐக்கிய நாடுகளின் அறிக்கையிலிருந்து மேற்கோள்காட்டுகையில் உலகத்தில் 225 செல்வந்தர்கள் இப்பொழுது (Trillion) 1ரில்லியனுக்கும் (10இலட்சம் கோடிக்கும்) கூடுதலான தொகையின் சொந்தக்காரர்களாவர். இது உலகத்திலுள்ள 47 சதவீதமான ஏழை ஜனத் தொகைகளின் வருடாந்த வருமானத்திற்கு சமமானதாகும். ஐக்கியநாடுகள் (United Nations) அறிக்கையின் படி 4 சதவீதமான இச்செல்வத்தின், அதாவது 40 பில்லியன்(4 ஆயிரம் கோடி) டாலர், ஒருவருடத்திற்கு உலகத்தில் ஒவ்வொருவரும் அடிப்படைக் கல்வி பெறுவதை சாத்தியமாக்கவும்,அத்துடன் அனைவரதும் அடிப்படை ஆரோக்கியத்தை கவனிக்கவும், Üனைவருக்கும் போதிய உணவு,பாதுகாப்பான தண்ணீரும் சுகாதாரமும் வழங்கவேண்டிய போதுமான மூலதனத்தை வழங்க முடியும். தற்போதய நிலையில்1 பில்லியன் மக்களுக்கு இந்த அடிப்படை வசதிகள் கிடையாது.

இன்று சமூகத்தில் விஞ்ஞானம் உபயோகப்படுத்தப்படும் வகை மீதான எனது விமர்சனம் இலாப முறை மீதான விமர்சனத்திலிருந்து எழுகின்றது. ஒரு மார்க்சிஸ்ட் என்ற முறையில் நான் கொண்டிருக்கும் சிந்தனைகள்யாவும் அவை தோன்றுவதற்கு காரணமான சமூக உறவுகளால் ஆழமாக ஆதிக்கம் செலுத்தப்படுகின்றது. முதலாளித்துவ சமூகத்தால் உருவாக்கப்பட்ட சித்தாந்த நோக்கு மிகவும் தந்திரமான முறையில் பலவிதத்திலும் செல்வாக்குச் செலுத்தியுள்ளது. சில மிகவும் தெளிவான உதாரணங்கள் என்னவெனில் சட்டவிரோதமாக மறுபடியும் ஒழுங்கற்ற கோட்பாடுகளை உபயோகத்திற்கு கொண்டுவரும் முயற்சிகளான, அதாவது குற்றச்செயலுக்கான காரணம் சமூகநிலை அல்ல பரம்பரை அலகுதான் என்பது அல்லது செல்வம்மிகுந்தவர்கள் பரம்பரை ரீதியில் சிறந்தவர்கள் என்றபடியால்தான் அவர்களது சமூகநிலை மேம்பட்டதாக இருக்கின்றது போன்றவையாகும். இத்தியாதி.....

அப்படியானால் நாங்கள் சமூகக் கேள்விகளை எவ்வாறு புறநிலைரீதியாக, விஞ்ஞானவழியில் ஆய்வு செய்வ?. இயற்கை விஞ்ஞானம், பெளதீகம், இரசாயனவியல், உயிரியல், இதரவகையானவை பெருமளவில் புறநிலையான வெளிப்பாட்டையும், ஆய்வுமுறைகளையும் கொண்டுள்ளன. உண்மையில் அங்கே பலவிதமான பிரச்னைகளும் அவற்றின் சமூக மூலம் மீதான கூரிய ஆழுமை தொடர்பான பிரச்சனைகளும் இருக்கின்றன. ஆனால் ஒரு தனிப்பட்ட விஞ்ஞானியினுடைய தொழிலுடன் ஒப்பிடும் போது இது மிகவும் நீண்ட நேரத்தை எடுக்கக்கூடியம் இறுதி ஆய்வுகளின் படி அக்கருத்துக்கள் அனுபவம் மற்றம் நடைமுறை ரீதியாகவும் பிரயோகிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.

ஒப்பிட்டுப் பார்க்கும்போது சமுக விஞ்ஞானத்ததிற்கு நாங்கள் வரும்போது தத்துவங்களும் சிந்தனைகளும் பரந்தளவில் அப்போதுள்ள சமூக அமைப்பினால் செல்வாக்கு செலுத்தப்பெற்றிருந்தது. இந்த விடயமாக உங்களுக்கு உரை நிகழ்த்தவிருக்கும் பல நிறுவனங்களின் ஊழியர்களுக்கு அவமரியாதை இல்லாத வகையில் நான் ஊர்ஜிதம் செய்வது என்னவெனில் விஞ்ஞானமும் சமுகம் தொடர்பான கேள்விகள் புறநிலைக்கு அப்பாற்பட்டு இருக்கின்றன என்பதாகும். நான் நாணயமற்ற தன்மை தொடர்பாகவோ அல்லது நேர்மையற்ற வகை தொடர்பாகவோ பேசவில்லை அல்லது இரகசியமாக பெருமளவு திட்டமிட்டு அங்கே விஞ்ஞானிகளும் வல்லுனர்களும் பெரிய வர்த்தகர்களுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டுள்ளனர் என நான் குறிப்பாக கூறவில்லை. இருந்தபோதிலும் வேலைத்தளம் மீதான ஆராச்சிக்கான நிதி உதவிக்காகவும், விஞ்ஞானிகளும் வல்லுனர்களும் கூடுதலான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். இது குறித்துக் காட்டுவது என்னவெனில் சமுகம் சம்பந்தமான கேள்விகளுக்கு வரும்போது இது தற்போதுள்ள நிலை ஏற்றுக்கொள்ளப்படுவதுடன், இந்தவகையில் விஞ்ஞானம் சம்பந்தமான, பொதுக் கொள்கை தத்துவங்கள் மிகவும் குறைந்தளவில் விஞ்ஞானபூர்வமுடையவையாக இருக்கின்றன.

நீங்கள் எல்லோரும் உயிரியல் -இரசாயன மாணவர்கள் என்பதை நான் அறிவேன். எனவே நான் சமூக விஞ்ஞானத்தைப் பற்றி நீண்ட அளவில் பேசுவதற்கு விளையமாட்டேன். ஆனால் பல்கலைக்கழக மனிதவியல் துறையிலும் சமூக விஞ்ஞானத்துறையிலும் "பின்நவீனத்துவ" [postmodernism] சிந்தனைகள் பரந்தளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இவை பின் இருத்தியல் வாதிகள், பெண்ணியவாதிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்புவாதிகள் போன்றவர்களால் தலைமை தாங்கப்படுகின்றது. அவர்களுக்குப் பொதுவானது என்னவெனில் அவர்களது தீவிர வாயடிப்புகளுக்கு மத்தியிலும் தற்போதய சமூக அமைப்பை பாதுகாப்பதை நியாயப்படுத்துவதனுடன், ஒரு மாற்றீட்டையும் முன்வைக்காததுடன், விஞ்ஞானத்தை தாக்குகின்றார்கள்.

அவர்களுடைய தாக்குதலுக்குள்ளான முக்கிய புள்ளி என்ன? அது புறநிலை உண்மை ஆகும். ஏனய துறைகளில் செய்வது போல் விஞ்ஞானத்திலும் கட்டுப்பாடற்ற சார்பியலை முன்னெடுக்கின்றனர். அவர்கள் உண்மையானது முற்றுமுழுதான சார்புத்தன்மை வாய்ந்தாக இருக்கிறது என கூறுகின்றார்கள். ஏனைய பிரசங்கங்களைப்{கதையாடல்களைப்} போல் விஞ்ஞானமும் ஒரு {கதையாடலாகும்} பிரசங்கமாகும். ஆபிரிக்க ஆதி இனக்குழுவின் இரவுநேர வானத்தைப் பற்றிய புராணக்கதை மற்றும் கட்டுக்கதைகள் போன்று அதே மாதிரியான பெறுமதியை தற்கால வானவியல், பிரபஞ்ஞவியல் ஆகியவற்றின் ஆய்விற்கும் வழங்குகின்றனர். அவர்கள் விஞ்ஞானப் புரட்சியையின் முழு பாரம்பரியத்தின் மீதும் அறியாமைக்கு எதிரான போராட்டத்தின் மீதும் தாக்குகின்றார்கள். இது சமூக முன்னேற்றம் அல்லது முற்போக்கான சமூக மாற்றங்களை சந்தேகத்துடன் பார்ப்பதுடன் இணைந்துள்ளது. இவர்களில் பெரும்பான்மையானவர்கள், சோசலிஸ்ட்டுக்கள் என்று ஒத்துக்கொள்பவர்களும், மார்க்சிஸ்ட்டுக்கள் என்று கூறிக்கொள்பவர்களுமாக இருந்தபோதும் இவர்கள் மார்க்சிச அடிப்படைக் கொள்கைகளான பாட்டாளி வர்க்கமே சமூக மாற்றங்களை உண்டாக்க கூடிய ஒரே ஒரு சமூகசக்தி என்பதற்கும், பாட்டாளி வர்க்கத்தனரை அரசியல் அறிவூட்டி தயார் செய்வது சோசலிஸ்ட்டுக்களின் கடமையாகும் என்பதற்கும் எதிராகவுள்ளனர்.

பின்நவீனத்துவத்தின் இப்படியான [post-modern] தாக்குதல்களைப் எதிராக விஞ்ஞானிகளுக்கிடையில் பல எதிர்ப்புகள் அபிவிரித்தியடைந்து வருகின்றன. Alan Sokal's Work (1) இல் "Transgressing The Boundaries (எல்லைக்கோடுகளின் அத்துமீறல்கள்)" என அவர் பின்நவீனத்துவத்தை ஏளனத்துடன் காட்டியுள்ளதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். The Transformative Hermanutics of Quantum Gravity (கதிரியக்க பகுதி புவியீர்ப்பின் மாறக்கூடிய ஹேர்மனுட்ரிக்ஸ்) இது கலாச்சார ஆய்வு தினசரியான Social Text இல் வெளிவந்துள்ளது. ஆனால் பின்நவீனத்துவத்தின் [post-modern] விஞ்ஞானத்திற்கு எதிரான கருத்துக்கள் மீதான மறுப்பானது அவர்களது அறியாமையை நிராகரிப்பதுடனோ அல்லது இயற்கை விஞ்ஞானம் சம்பந்தமான கேள்விகளை திரித்துக் கூறுவதாலோ செய்ய முடியாது என நான் விவாதிப்பேன். ஒரு பக்கத்தில் பின்நவீனத்துவ வாதிகளுக்கும் மறுபக்கத்தில் இலாபமுறையைப் பாதுகாப்பவர்களுக்கும், பெரிய நிறுவனங்களுக்கும் பதிலளிப்பதற்கும் ஒரு விமர்சனத்துடன் கூடிய விஞ்ஞானபூர்வமான அணுகுமுறை இருக்கவேண்டும். தற்கால சமூகத்தில் விஞ்ஞானத்தினை பிரயோகிப்பது சம்பந்தமான சகல பிரச்சனைகளை அணுகுவதற்கு ஒரு சோசலிச முன்னோக்கு தேவைப்படுகின்றது.

BSE கொடூரம்

தேசத்தின் ஒரு பகுதியைப் பாதிக்கின்ற BSE/ Mad Cow Disease (விசர் மாட்டுநோய்) சம்பவத்தை ஆழ்ந்து சிந்தனை செய்துபாருங்கள். தற்கால சமுதாயத்தின் விஞ்ஞானம் சம்பந்தமாக நான் பேசவிரும்பும் பலகருத்துக்களில் சிலவற்றை இது தெளிவுபடுத்தும்.

உங்களில் பலருக்குத் தெரியக் கூடும், நாம் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களைக் கொண்டிருந்தபோதிலும், SEP (சோசலிச சமத்துவ கட்சி) ஆனது சென்ற வருடம் மே மாதத்தில் BSE இன் பிரச்சனை சம்பந்தமாக ஒரு விசாரணையை ஒழுங்கு செய்திருந்தது. விசாரணையில் எங்களால் வழங்கப்பட்ட பங்கையும், மற்றும் எங்களால் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகள் பற்றியும் எங்களுடைய புத்தகத்தில்(2) படிக்கலாம். BSE இன் பிரச்சனைக்குப் பின்னால் இருந்த உண்மையை வெளிக் கொண்டுவந்த அனுபவமானது ஒரு பெரும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். அதேநேரத்தில் CJD சம்பவத்தில் மரணமடைந்தவர்களின் உறவினர்களால் அல்லது அரசியலில் உள்ளவர்கள், பொருளாதாரம் மற்றும் ஏனய பகுதிகளில் உள்ளவர்களால் வழங்கப்பட்ட பங்குகள் பற்றி குறைமதிப்பிடாது விஞ்ஞானம் சம்பந்தமான கேள்விகளை நான் ஒருமுனைப்படுத்துகின்றேன்.

எங்களுடைய வேலைக்கு பேராசிரியர் Richard Lacey உம் Dr. Harash Narang உம் பெரும் பங்களிப்புச் செய்துள்ளனர். பங்களித்த பலர் போல் எங்களுடைய அரசியல் கருத்துக்களை அவர்கள் கட்டாயமாக ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால் விஞ்ஞானம் சம்பந்தமாக அவர்களிடம் நம்பத்தகுந்த கணிசமான அனுபவம் இருக்கின்றது.

தற்போதைய அரசாங்கம் மேற்கொண்ட முழுமையான விசாரணைகள் மூலம் குறைந்தபட்சம் எங்களுடைய நிலையானது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் சுகாதாரம்பற்றி எந்தவித அக்கறையும் இன்றி இறைச்சி வியாபார நிறுவனங்களின் இலாபத்திற்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளனர். TORY பழமைவாதக் கட்சியின் விவசாய-கால்நடைத்துறை மந்திரி Douglas Hogg இற்கும் மற்றும் பிரதித் தலைவர் Michael Heseltine இற்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் அறிக்கைகளை நான் குறிப்பிட்டிருக்கின்றேன். வெளிவந்துகொண்டிருக்கும் சாட்சிகளின் பிரகாரம் பசுமாடுகளில் உள்ள BSE "அனேகமாக நிகழக்கூடிய" புதியவகை CJD தான் மனிதரில் ஏற்ப்பட்டதின் காரணம் என எதிர்ப்புகள் தோன்றியுள்ளன. பிரிட்டனிலுள்ள பல மில்லியன் பெறுமதி வாய்ந்த மாடுகளை கொன்று விடுவது மட்டும்தான் அவர்கள் எடுக்கவேண்டிய தீர்மானத்தை Hogg முன்மொழிந்தார். Heseltine இப்பிரச்சனை பற்றி குறிப்பிடும் போது "எங்களுடைய" பழமைவாத Tory அரசாங்கத்தின் வல்லுனர்கள் சரியாக கூறியமை நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர் பேராசிரியர் Lacey ஐயும் மற்றவர்களையும் உண்மையில் கருத்தில் கொண்டுள்ளார். பழமைவாத Tory அரசாங்க மந்திரி சபை Hogg இன் முன்மொழிதலை பயனற்றதென இரத்துச்செய்ததுடன் மேலும் அரசாங்கம் அதன் முயற்சிகளை ஒழுங்குபடுத்தி பொதுமக்களின் சுகாதாரத்தை முன்னுரிமைப்படுத்துவதிலும் பார்க்க நுகர்வோரின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சிகளில் ஈடுபடவேண்டுமெனத் தீமானித்தனர். இது மார்ச்20 1996 இல் சுகாதார சேவைக்குப் பொறுப்புள்ள அரசாங்கச் செயலாளர் StephenDorrell கட்டாயத்தின் பிரகாரம் வெளியிட்ட அறிக்கையில் பசுமாடுகளில் BSE இக்கும் மனிதரில் CJD இற்கும் இடையிலான தொடர்பை ஏற்றுக்கொண்டதான் காரணமாக மாட்டிறச்சியின் வியாபாரத்தில் வீழ்ச்சிக்கு வழிவகுத்ததுடன், இதையிட்ட ஐரோப்பாவின் தடை உத்தரவுக்கும் காரணமாய் அமைந்தது. அத்துடன் பழமைவாத Tory அரசாங்கத்தின் கொள்கை தொழிற்கட்சி அரசாங்கத்தின் கீழும் தொடர்கின்றது.

எங்களால் கண்டுபிடிக்ககப்பட்ட சில உண்மைகளை சுருக்கமாகக் கூறுகின்றேன்

செம்மறி ஆட்டினதும், மாட்டிறைச்சி எலும்பிலிருந்து உபயோகப்படுத்திய உணவை, மிருக உணவு தயாரிக்க பயன்படுத்தியதுதான் BSE இன் தோற்றத்திற்கு காரணமாகியது. அது தகுந்தளவு சோதனைகளும் கட்டுப்பாடுகளும் செய்யப்படவில்லை என கருத்தப்படவில்லை. பெருமளவு மாட்டிறச்சியின் ஏற்றுமதியால் கிடைக்கும் ஆதாயத்தின் ஆற்றல்கள் பிரதானமானதாகும். இதன் வளரும் காலம் மாடுகளில் 2 தொடக்கம் 9 ஆண்டுகளும் மனிதருக்கு 5 தொடக்கம் 15 ஆண்டுகளும் என்ற காரணத்தால் அதன் விளைவுகளை உடனடியாகக் கண்டுகொள்ள முடிவதில்லை.

உலக உணவு மற்றும் மருந்து தயாரித்து விற்பனை செய்வதையும் ஆதிக்கம் செலுத்தும் கம்பனிகளுடன் ஒப்பிடுகையில் விவசாய வியாபாரத்திலும், பிரிட்டனில் மாட்டிறச்சியைத் தயாரித்து விற்கும் சிறிய தொழிற்சாலைகளை சார்பாக ஒப்பிட்டால் இவைகள் ஒரு சிறுமீன் கூட்டங்கள்போல் இருக்கும். இப்பொழுது மிகவும் அதிகமாக முன்னேற்றமடைந்த விஞ்ஞானத்தையும் மேலும் தொழில் பற்றி ஆராயும் விஞ்ஞானத்தையும் பில்லியன் டாலர் உதவியினால் உந்தப்பட்ட உணவு மற்றும் மருந்து தயாரித்து விற்ப்பனை செய்வது போன்ற தொழிற்சாலைகளின் தோற்றங்கள் அனைத்தும் அபாயங்களை உள்ளடக்கியுள்ளன என்பதை வெளிக்காட்டுகின்றன. எத்தனை உற்பத்திப் பொருட்களுக்கு அவற்றின் தரத்தினையும், நிலைக்கும் தன்மையையும் பரிசோதிக்கும் காலம் போதியளவு வழங்கப்பட்டது?

2) அரசாங்க விஞ்ஞானிகளும் மற்றும் நிர்வாக சபையினரும் அவர்களது வர்த்தக ஸ்தாபனத்தின் ஆதாயத்துக்காக அதிகாரம் செலுத்துகின்றனர். விவசாய இலாகா, மீன்பிடி மற்றும் உணவு (MAFF) இலாகாக்களைப் பொறுத்தவரையில் இது வெளிப்படையான சம்பவமாவதுடன், உணவு உற்பத்தித் தொழிலை ஆரம்பித்து வைத்தவர்களும் தாங்கள் என விபரித்ததுடன், உணவினைப் பாதுகாக்கும் பொறுப்பானவர்கள் எனவும் எண்ணிக் கொள்கின்றனர். அதாவது சட்டங்கள் காரணமாக அரசாங்க நிர்வாக சபையின் பற்பல விஞ்ஞானிகள் பற்றி பேராசிரியர் லேசியினால் (Professor Lacey) வெளியிடப்பட்ட விமர்சனங்களை நாங்கள் தவிர்த்துவிட்டோம். அவர்கள் எப்பொழுதும் சாமர்த்தியமான முறையில் விடப்பட்டுள்ள "சிக்கனத்திற்கான உண்மை என்பது" BSE ஐ பொறுத்தவரையில் ஆபத்தானது. இது MAFF ஐ மட்டும் எல்லைக்கு உட்படுத்தவில்லை, Sir Donald Acheson இனால் நடாத்தப்படும் அரசாங்க விசாரணைக்கு இந்த அறிக்கை ஒரு முக்கியமான விடையமாக இல்லாதுவிட்டால் இது ஒரு கேலிக்கூத்தாகிவிடும். 1980 இன் தலைமை சுகாதார வைத்திய அதிகாரி, தான் எதற்காக அந்த மாநாட்டில் "தீங்கில்லாதது" எனக் கூறிவந்தையிட்டு விளக்கமளிக்க முயற்சி எடுக்கும்போது, இந்தச் சம்பவத்தைப் பற்றி பல ஆண்டுகளின் பின்னர் நான் அறிந்துகொள்ளமுடிந்தது என்னவெனில் சில மக்களுக்கு "தீங்கில்லாதது" என்ற வார்த்தைகளை கட்டுப்படுத்தும் விதி இல்லாததன் தன்மையால் சராசரி அபாயமானது பூஜ்யம் ஆகிவிட்டது.

சிலர் MAFF பாகமானது பிரச்சனைக்குள்ளாகி இருப்பதற்கு தொழிற் கட்சியின் ஒரு உணவுத்திட்ட நிறுவனத்திற்கான (Food Standard Agency) பிரேரணைக்கான ஆதரவு கிடைத்துள்ளது என வாதிடுகின்றார்கள். இதிலிருந்து இப்பொழுது அரசாங்கம் தனது ஆதரவை பின்வாங்கியுள்ளது. தாம் ஐக்கிய அமெரிக்காவிலுள்ள உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (Food and Drug Administrtion) போன்றவற்றின் வழியில் தொடர்வதெனவும், அது கூடுதலாக சயேட்சையாக ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனம் எனவும் கூறப்பட்டது. பிரதானமான கம்பனிகளுக்கு மிகப்பெரிய அதிகாரங்கள் வழங்கப்பட்டதிலிருந்து நான் பணிவுடன் முரண்படுகின்றேன்.

John Abraham (3) இன் "விஞ்ஞானம், அரசியல் மற்றும் மருந்து தொழிற்துறை" புத்தகத்தை பற்றி விரிவாகப் படித்து அதன் தீர்மானத்தை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அவர் கூறுவது என்னவெனில் பிரித்தானிய மற்றும் அமெரிக்க அதிகார வர்க்கம் விஞ்ஞானம் சம்பந்தமான சந்தேகங்களுக்குரிய உற்பத்திகளுக்கு அனுகூலமான கொடுப்பனவுகளை தொடர்ச்சியான வழியில் செய்துள்ளனர் (P248) அதே சமயம் அவர் ஒத்துக்கொள்வது அமெரிக்க நிறுவனங்கள் மீது அனேகமாக "தொழிற்துறையின் அழுத்தமானது குறைந்தளவு மென்மையாக" உள்ளது என்பதுடன், அது கஷ்டமானது அல்ல எனவும் ஏனெனில் அமெரிக்காவில் உள்ள மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் அனேகமாக இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளுடன் வர்த்தக தொடர்புகளை வைத்துள்ளனர். இதன் மூலம் விரும்பாத ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு கணிசமான அளவு எதிர்ப்பை காட்டமுடியும் எனவும் அவர் கூறுகின்றார்.

(3) வெளிப்படையாகப்பேசும் விஞ்ஞானிகளுக்கு பயமுறுத்தல்களும் நிபந்தனைகளும் -BSC இன் பயங்கரம்பற்றி வெளிப்படையாக பேசியமைக்காக Dr.Harshnarang, பேராசிரியர் Lacey பயமுறுத்தப்பட்டுள்னர். Transmissable Spongiform Encephalopathies (TSE இந்தவகை நோய்கள் தான் BSC, CJD மற்றும் Sheep Scrapie) இல் உள்ளடங்கியுள்ளன. என்பதைப்பற்றி Dr.Narang ஆராய்ச்சி செய்துவருகின்றார். அவர் நீக்கப்பட்டுவிட்டார். பேராசிரியர் Lacey பாரளுமன்றத்தில் அங்கே அவதூறுச்சட்டத்தின் கீழ் அப்படிச் சேர்த்துக்கொள்ளாத போதும் கூட அவர் "மன சம்மந்தமாக குழப்பம் அடைந்துள்ளார்" என விபரிக்கப்பட்டார். சில விதிமுறைகளுக்கு புறம்பாக அவர்கள் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகளில் இருந்து தவிர்த்து வைக்கப்பட்டுள்ளனர். பேராசிரியர் Lacey இப்பொழுது Leeds University இல் தொழிலையும் இழந்துள்ளார்.

எந்த விஞ்ஞானிகளாக இருந்தாலும் வர்த்தக ஆதாயத்திற்கு எதிராகப் பேசினால் இதேவகையான நடவடிக்கைகளுக்கு உட்பட வேண்டிவரும் என்பதை நான் அறிவுறுத்தகிறேன். அண்மையில் இடம்பெற்ற ஒரு உதாரணம் என்னவென்றால் Dr. Arpad Pusztai ஸ்கொட்லான்டில் உள்ள றோவெல் ஆராய்ச்சிக் கலாசாலையில் (Rowell Research Institute in Scotland) 35 ஆண்டுகள் ஆராய்ச்சியாளராக கடமை புரிகின்றார். அவர் அண்மையில் பரம்பரை அலகுகளில் மாற்றம் செய்யப்பட்ட உணவைப்பற்றி தனது கவலையைத் தெரிவித்துள்ளார். அவருடைய ஆராய்ச்சித் தொழில் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதால் அவர் தனது பதவியிலிருந்து ஓய்வெடுக்க தீர்மானித்து விட்டார்.

4. முடிவாக மக்களின் சுகாதார சம்பந்தமான பகுதிகளில் நிதிக்கட்டுப்பாட்டின் விளைவும் மற்றும் குறிப்பாக TSCs ஆராட்சிகளை நிறுத்துவற்குமான தீர்மானமும். எந்தப்பகுதிகளுக்கான ஆராய்ச்சிக்கு நிதி உதவி வழங்கப்படுவது, குறிப்பாக அரசாங்க கலை உபகரணங்களுக்கு வழங்கப்பட்ட செலவு தற்போதய விஞ்ஞானம் சம்பந்தமான நடைமுறைக்கும் வந்துவிட்டது. இந்தக் கருத்திற்கு நான் திரும்பிவருவேன். நடிப்புப் பாவனை(பாசாங்கு)எதுவும் இல்லாமல் இது உண்மை, பிரிட்டனில் BSE/CJD இன் தோற்றம் பற்றி சக்திவாய்ந்த ஒரு பரிசோதனையைத் தேடுவதற்கு .சராசரி பத்து வருடங்கள் இழக்கப்பட்டுள்ளன -குணமடையச் செய்வது தனித்துவிடப்பட்டுள்ளது.

விஞ்ஞானம் தொடர்பான பொதுக் கேள்விகளுக்குச் செல்வதற்குமுன் BSE இன் தற்போதைய நிலமைபற்றி எனது விமர்சனத்தை சுருக்கமான முறையில் தெரியப்படுத்துகிறேன். நீங்கள் Prions பற்றியும் TSE பற்றியும் இடம்பெற்ற விஞ்ஞான ஆய்வுகளை கவனிப்பீர்களானால் உங்களுக்குத் தெரிய வருவது என்னவெனில் மாட்டிறச்சி இப்போது பாதுகாப்பானது என இப்பொழுது அரசாங்கம் கோருவது உண்மை அல்ல என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நான் நம்புகின்றேன். தேர்ந்தெடுத்த நடவடிக்கையின் பிரகாரம் தொற்றுதல் குறைந்திருக்கலாம் ஆனால் அனேகமாக தொற்றிப் பரவும் சக்தியை அழித்துவிட்டதற்கு நிச்சயமான உத்தரவாதம் எதுவும் இல்லை. Dr. James விஞ்ஞானம் பற்றியும் சமுதாயம் பற்றியும் தெளிவான கேள்விகளில் மனதை ஒருமுகப்படுத்தும் படியும் என்னை கேட்டுள்ளார். ஆனபடியால் BSE விசாரணை பற்றியும் இந்த தொழிற்கட்சி அரசியல் பற்றியும் மேற்கொண்டு சொல்ல விரும்பவில்லை. ஆனால் நீங்கள் எமது வலைத்தளத்தில் வரும் கட்டுரைகளப் படிப்பீர்கள் என நம்புகின்றேன்.

பூகோள நிறுவனங்களும் விஞ்ஞானமும்

விஞ்ஞான பயிற்சியின் மேலாக தொழிற்சாலைகளின் இலாபத்தை பாதுகாக்கும் வழிமுறை ஆபத்தான ஒன்றாகும். BSE இதற்கு ஒரு உதாரணம் மட்டும் தான். மார்க்சிச நோக்கு நிலையிலிருந்து சுருக்ககமான பகுதிகளாக பிரித்துக் குறிப்பிடுகின்றேன்.

கடந்த கடைசி இரண்டு தகாப்தங்களில் பார்க்கையில் யுத்தத்திற்கு பின்னரான உடனடி வருடங்களில் விஞ்ஞானம் இயங்கிய விதத்திலிருந்து முக்கியத்துவமான மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது. மிகவும் அதிகமாக விஞ்ஞானத்திற்கும் தொழிற்நுட்பத்திற்கும் அன்று பகிரங்கமாக நிதி வழங்கப்பட்டதுடன், இன்று நாங்கள் காண்பது போல் நிர்வாகங்களின் அழுத்தல்களுக்கு உள்ளாகவில்லை. பகுதி கடத்திகள் தொடக்கம் பரம்பரை அலகுகளை உருவாக்கும் DNA ஐ கண்டுபிடிக்கும் கணனிகள் வரை கண்டுபிடிக்கப்பட்டன. நான் உண்மையில் அப்போதிருந்த விஞ்ஞானத்தின் கொள்கைகளின் தொடர்பான அரசியலை விமர்சன ரீதியாக பார்க்காமல் இருக்கவில்லை- அது நீதியான முறையில் விவாதிப்பது, உதாரணமாக, குளிர் யுத்த காலத்தில் மிகப்பெரிய இராணுவத்தை கட்ட பொறுப்பற்ற முறையில் அணுசக்தி பயன்படுத்தப்படுவதற்கு பொறுப்பாக இருந்தது. Chernobl பேராபத்தின் பயங்கரமான கேள்விகள் இன்னமும் எங்களுடன் இருந்து வருகிறது. இருந்தபோதிலும் விஞ்ஞானத்தின் நீண்டகால அணுகுமுறைகளின் பொதுவான சம்மதத்தை சுட்டிக்காட்டலாம். அமெரிக்கவின் பாதுகாப்பு இலாகா கூட அடிப்படையான ஆராய்ச்சிக்கு நிதிவழங்கியுள்ளது. அதனால் நன்மைகள் அவர்களுக்கு உடனடியாக அளிக்கக் கூடியதாக இருக்கவில்லை.

அண்மைக்காலத்தில் என்ன நடந்தது? அந்த பரந்தளவிலான சமூகம் மற்றும் அரசியல் மாற்றங்கள் சோவியத் யூனியனின் வீழ்ச்சி, கொடிய யுத்தத்தின் முடிவு, தேசிய விடுதலை இயக்கங்களின் சரணாகதி மற்றும் புதிய உக்கிரமான தேசியவாதத்தின் எழுச்சி, தொழிற்சங்கங்களின் பரந்தளவிலான வீழ்ச்சி, உலகளாவிய வகையில் சமூக சமத்துவமற்ற நிலை, உலகப் பொருளாதாரம் மற்றும் நிதிசம்பந்தமான உறுதியற்ற நிலை மற்றும் இத்தியாதி. இவற்றை உலகப் பொருளாதாரத்தின் அடிப்படையான மாற்றங்களின் அடிப்படையில் தான் இவற்றை விளங்கப்படுத்த முடியும். நான் பேச விளைவது என்னவென்றால் உலகளாவிய உற்பத்தியில் மிகப்பெரிய நகர்தல், தேசிய அரசுகள் மீதும் அரசாங்கங்கள் மீதும் நாடுகடந்த நிறுவனங்களினதும் சர்வதேச நிதி மூலதனத்தினதும் ஆதிக்கம் மற்றும் இவை அனைத்தும் விஞ்ஞானத்தினதும் Microchip இன் அபிவிருத்தியில் தங்கியுள்ளது. இது விஞ்ஞானம் மற்றும் தொழிற்நுட்பத்தினை நடைமுறைப்படுத்துவதிலும் அடிப்படையான பாரிய தாக்கத்தை கொண்டுள்ளது.

இத்தாக்குதலுக்கான பிரதானமான காரணம் விஞ்ஞானத்திற்கு வழங்கிய பொது நிதியை கட்டுப்படுத்துவதாகும். இது சுயாதீன சந்தையின் பிரதானமான வேண்டுகோள்களான அரசாங்கச் செலவுகளைக் குறைத்து தேவையான "பொறுப்புடமையுடன்" தனியார்மயப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்வதாகும். உலகளாவிய ரீதியில் இந்த இரண்டு விளைவுகள் பற்றி உங்களிற்கு சுட்டிக்காட்ட விளைகின்றேன்.

UNESCO இன் உலக விஞ்ஞான அறிக்கை [1996/6] இன் அறிக்கையை நாங்கள் வாசிப்போம்.

அந்த C.I.S. (கூட்டுறவான சுதந்திர அரசுகள் -சோவியத் யூனியனின் வீழ்ச்சியின் பின்னர் உருவாக்கப்பட்ட கூட்டு) நாடுகள் புனருத்தானத்திலும் அபிவிருத்தியிலும் [R&D] பாரிய வீழ்ச்சியை அனுபவிக்கின்றன. இது விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் முன்னொருபோதும் இல்லாத விதத்தில் வளர்ச்சியடைந்துள்ள 20 ஆம் நூற்றாண்டின் ஒரு அபூர்வமான சம்பவமாகும்.

ரஷ்யாவில் புனருத்தானத்திக்கும் அபிவிருத்திக்குமான செலவிற்கான மொத்த உள்ளூர் உற்பத்தியின் [GDR] இன் பங்கானது 1990 இற்கும் 1993 இற்கும் இடையில் 2.03 % இலிருத்து 0.81% இற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. [அப்பொழுதிலிருந்து GDP யானது ஊசலின் நுனியில் பொருத்தப்பட்டுள்ள பாரம் போலானது] இந்த வீழ்ச்சியானதன் கால அளவானது பூரணமாக 1990 இல் $23.9 பில்லியனிலிருந்து 1993 இல் $6.4 பில்லியன் இடத்திற்கு வந்துள்ளது.

அந்தத் தொகைகள் யாவும் தங்களைப்பற்றி தாங்களே பேசிக்கொள்ளும். சுற்றுச்சூழலிலும் சுகாதாரத்திலும் இதன் விளைவுகளின் பயங்கரம் அளவிட முடியாதது.

ஆபிரிக்கவைப்பற்றி அப்போதைய அந்த அதே UNESCO உலக விஞ்ஞான அறிக்கையிலிருந்து.

1970 இன் நடுப்பகுதியிலிருந்து ஆபிரிக்காவின் பல்கலைக்கழக முறையானது எப்பொழுதும் ஆழ்ந்த ஆபத்தான முறையில் உள்ளது. பல்கலைக்கழகப் பட்டம் பெறவிருக்கும் மாணவர்களின் சம்பளம் பற்றிக் கூடுதலான அழுத்தத்தை பல்கலைக்கழக வரவு செலவுத் திட்டத்தில் குறைத்திருப்பதாலும் பொருளாதாரத்தின் தாராளமயமானதன் காரணமாகவும் பட்டதாரிகளின் வேலையில்லா நிலை உயர்ந்துள்ளது. அப்படியான நீண்ட பட்டியலானது பயங்கரமான பிரச்சனை ஆகிவிட்டது.

நான் உங்களுக்கு ஒன்றை ஞாபகப்படுத்த விளைகின்றேன். அதாவது, ஆபிரிக்காவில் உண்மையான விஞ்ஞான சம்பந்தமான அடித்தளம் இல்லாத காரணத்தினால் HIV/AIDS நோய்சம்பந்தமான வியாதிகள் தீவிரமாகியுள்ளன. தொற்று நோய்க்கு உட்ப்படுத்தப்பட்டவர்களின் தொகை 21 மில்லியனாகும். Botswana இலும் Zimbabwe இலும் நாலுபேரில் ஒருவர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவைகள் அனைத்தும் இறுதியான சம்பவங்கள் என நீங்கள் கூறக்கூடும் மேலும் ஒரு சோதனை மூலம் "அபிவிருத்திஅடைந்துள்ள" நாடுகள் என அழைக்ககப்படும் நாடுகளில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பமும் வித்தியாசமான காட்சியைத்தருகின்றன. குறிக்கோள்களின் மதிப்பீடுகள் பற்றி இங்கே என்னால் வாதாடமுடியும். நான் உண்மையில் விஞ்ஞான எதிர்ப்பான, தீவிர சூழல்பாதுகாப்பு நிலையில் இருந்து பேசவில்லை. இதுகூட விபரிப்பது என்னவெனில் மக்களால் விஞ்ஞானத்திற்கு வழங்கப்பட்ட பொதுநிதி உதவியையும், குறிப்பாக அடிப்படை ஆராய்ச்சிகளுக்கு கண்டபடி குறைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இது விஞ்ஞானம், உணவு, விவசாய வியாபாரம், மருந்து தயாரித்தல் போன்றவற்றில் ஆழ்ந்த போட்டிகளை உருவாக்கியுள்ளதுடன், BSE சம்பவத்தில் எடுத்துக்காட்டப்பட்டதை போன்று குறைந்தவிலான சட்டங்களின் அழுத்தத்தை கொண்டுவருவதனால் உருவாகியது போன்ற பிரச்சனைகளை உருவாக்குகின்றன.

எனக்குத் தெரியும் இந்தவகையில் நீங்கள் பரம்பரை அலகுகளில் மாற்றம் செய்த உணவைப் பற்றி கலந்துரையாடிக் கொண்டிருக்கின்றீர்கள். இந்த வழியிலுள்ள அபாயம் தொடர்பாக பல திறமை உள்ளவர்களால் கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன. இவற்றினைப்பற்றி என்னிலும் பார்க்க நீங்கள் மிகக் கூடுதலாக அறிந்திருப்பீர்கள்.என நான் நம்புகின்றேன். எங்கள் உலக சோசலிச வலைத்தளம் [4] இல் உள்ள எங்கள் கட்டுரைகளை நீங்கள் வாசிக்கலாம். சாத்தியமான அபாயங்களைத் தந்துள்ளன. MONSATO, DUPONT மற்றும் வேறு நிறுவனங்களால் கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்கி அவர்களின் இலாபத்தை உயர்த்துவதற்கு அனுமதிக்கும் படி கோரியுள்ள அழுத்தத்தை பற்றி நீங்கள் பரந்தளவில் கண்டிக்க வேண்டும் என நான் நினைக்கின்றேன்

ஆனால் இந்த ஒரு பிரதேசத்தில் சட்டம் இப்போது உபயோகப்படுத்தப்படுகின்றது. Financial Times Survey இல் உயிரியல் தொழில்நுட்ப ஆராய்வில் அது குறித்துக் காட்டுவது என்னவென்றால் அங்கே பல பகுதிகளில் உயிரியலானது தற்போதய சட்ட முறைகளுக்கு அப்பால் இயங்குகின்றது. சாதாரண உயர்ந்தளவிலான தொழிற்சாலைகளுக்கான சட்டம் போதும் என வாதாடுகின்றனர். ஆனால் Financial Times எடுத்துக்காட்டுவது என்னவெனில் ஆகக் குறைந்தளவில் அமெரிக்க நிறுவனங்களில் உள்ள ஒரு விஞ்ஞானி இது "National Rifle Association" [தேசிய துப்பாக்கி அமைப்பு] இடம் அதனையே ஒழுங்குபடுத்த கேட்பது போல் இருக்கின்றது [7] என சந்தேகத்துடன் கூறுகின்றார்.

அனேகமாகப் பல்கலைக் கழகங்களில் இப்பொழுது என்ன நடக்கின்றன. சில வழிகளில் எதிர்கால விஞ்ஞானத்தின் வளர்ச்சியானது கூடுதலான நீண்டகால ஆபத்துக்களைக் காணப்போகின்றது. ஆராய்ச்சிக்கு வர்த்தகங்களின் பெருமளவு மூலதனம் வழங்கப்படுகின்றது. அல்லது அரசாங்க அமைப்புகளால் வழங்கப்படுகின்றது. அவைகளின் பிரதான நோக்கம் தொழிற்சாலைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வது அல்லது குறைந்ததபட்சம் "மக்கள் சம்பந்தமான சிரத்தை" என அழைக்கப்படுதை பூர்த்தி செய்வது. இன்னொரு வார்த்தையில் சொல்வதானால் இதில் உடனடியான தேவைகளிருப்பதாக நீங்கள் வாதாடா முடியாது விட்டால் "தொலைத்தொடர்பு சாதனங்களின் கவனத்தின்" மூலம் வர்த்தக மூலதனத்தை இழுத்துக்கொள்ள முயற்சிக்கவேண்டும் என்பதாகும். [ஐரோப்பிய வியாழன் ஆய்வு நிலையத்திற்கு தரையிறங்குவதற்கான பாரிய சொகுசான பலூன்கள் தேவையாக இருந்தது. அவர்களால் அதிலுள்ள விளம்பரத்திற்கான பகுதி வானத்திற்கு வெளியே முதல் கோகோ கோலா அடையாளம் என நிறுவனத்திற்கு விற்கப்பட்டது].

பொதுவாக PhD மானியத்திற்கு, தற்காலிகமான சர்வகலாசாலை படிப்பிற்கு, ஏனைய மானியங்களுக்குகான நிதித்தேவைக்கான பாரிய போட்டியுள்ளது. Kenneth M. Brown இன்னுடைய Downsizing Science என்னும் புத்தகம் அமெரிக்காவில் இந்த பிரச்சனையை பற்றி ஆராய்ந்துள்ளது. Kenneth M. Brown, US National Science Foundation இருக்கின்றார். அவர் முன்பு CIA இற்காக தொழில் புரிந்தவர். மேலும் நிச்சயமாக உலகளாவிய முதலாளித்துவத்தின் ஆதரவாளருமாக இருந்தபோதிலும் அவர் விஞ்ஞானத்திற்கு அமெரிக்கா குறைந்தளவிலான செலவு செய்வதையிட்டு அதிர்ச்சியடைந்த நிலையில் அதிருப்பதியுடன் நோக்குகின்றார். அதன் உண்மையான அளவு 1994 இருந்து 2002 வரை 16.8 சதவீதம் வீழ்ச்சியடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. Hale- Bopp வால் நட்சத்திரத்தை கண்டுபிடித்த இணைக் கண்டுபிடிப்பாளரான Alan Hale இடமிருந்து பரந்தளவில் வினியோகிக்கப்பட்ட E-mail கடிதத்திலிருந்து அக்கறையுடன் பின்வருமாறு எடுத்துக்காட்டியுள்ளார்.

"என்னுடய சொந்த உணர்ச்சி என்னவெனில், எங்களுடைய சமுதாயம் விஞ்ஞானத்தை அணுகும் முறையிலும் எங்களுடைய சொந்த வாழ்க்கையை சில பங்களிப்பிற்காக தியாகம் செய்த எங்களை நடத்தும் விதத்திலும் ஒருசில தீவிர மாற்றங்கள் அடைந்துள்ள நிலையில் எந்த வழியிலும் திறந்த மனப்பான்மையுடன் தற்கால மாணவர்களை விஞ்ஞான தொழில்முறையைத் தொடருவதற்கு என்னால் வழிகாட்ட முடியாது".

இது இப்பொழுது நிதி நிலமையின் கேள்வியை மட்டும் பொறுத்ததல்ல. விஞ்ஞானத்தின் முழு அமைப்பும் அபூர்வமான எழுச்சிக்கு ஊடாக சென்றுள்ளது. Johnz Ziman அவருடைய Prometheus Bound என்ற அவரது புத்தகத்தில் இது தொடர்பாக பின்வருமாறு எழுதியுள்ளார்.

"விஞ்ஞானம் மிகவும் கூடுதலாகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட, கட்டுப்பாட்டிற்குள்ளான, மேற்பார்வைக்குள்ளான ஒரு அடிப்படையான மாற்றத்தினூடு சென்று கொண்டிருகுகின்றது. புது மொழியாக "மதிப்பீடு"," உள்ளேவருதல் மற்றும் வெளிப்போதலை காட்டுவது", "முதன்மையாக அமைத்தல்", "தேர்ந்தெடுக்கும் திறன்" "விமர்சனரீதியான அளவீடு" ['accountability', 'evaluation', 'input and output indicators', 'priority-setting', 'selectivity', 'critical mass'] போன்றவை உலகம் முழுவதும் பொதுவான இடத்திற்கு வந்துள்ளது.

விஞ்ஞானம் ஆராய்ச்சியின் நோக்கங்களை கேள்விக்குள்ளாக்கியுள்ளதுடன் அல்லாமல் அதே நேரம் அங்கு சரியான பலனைப் பெறுவதற்கு அழுத்தம் இருப்பதுடன், சுதந்திரமான முறையில் ஆராட்சி செய்வதையும் கருத்துக்களை விருத்தி செய்வதற்கும் தீவிரமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. Zinman சரியான முறையில் கூறியுள்ளதானது Einstein மற்றும் Darwin இந்த வகையின் கீழ் நிதிவசதிகளை பெற்றுக்கொள்வது முடியாத விடயமாக இருந்திருக்கும். அடிப்படையான அல்லது சுதந்திரமான ஆராய்ச்சிகள் கட்டாயமான தாக்குதலின் கீழ் உள்ளாகியுள்ளது. சுதந்திரமான தகவல்கள் வெளிவருதலை கட்டடுப்படுத்தலும், புத்திஜீவி சொத்துடமை திட்டவட்டமான முறையில் பயமுறுத்தலின் கீழ் உள்ளாவதும் பாரிய துறை ஒன்று அதனது உரிமை தொடர்பாக கவனத்திற்குள்ளாக வேண்டியுள்ளது பற்றி என்னால் சுருக்கமாகக் கூறமுடியும்.

விஞ்ஞானம் சுதந்திரமான முறையில் தகவல் வெளிவருவதில் தங்கியுள்ளதுடன், எப்பொழுதும் சர்வதேச ஒத்துழைப்பில் தங்கியுள்ளது. இப்பொழுது நாங்கள் தேசியளவில் போட்டிகளும், ஆதாய உத்தவேகத்துடன் சர்வதேச கூட்டு நிறுவனம் போன்றவற்றில் தலையீடு செய்வதும் கூடுதலாகக் காணக்கூடியதாகவுள்ளது. உதாரணமாக இப்படியான சர்வதேசப்போட்டிகள் காரணத்தாலும் மற்றும் USSR இன் பொருளாதார வீழ்ச்சி காரணமாயும் சர்வதேச வானிலை நிலையத்திட்டம் [InternationalSpace Station] முற்றுப்பெற முடியாமல் போய்விட்டது.

என்னுடைய குறிப்புக்களை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகின்றேன். நான் சுருக்கமாக விபரித்த விஞ்ஞானத்தின் மாற்றங்கள் மிகவும் ஆபத்தான கேள்விகளை வீசிவிடுகின்றது. எங்களுடைய சுற்றுப்புறங்களையும், சுகாதாரத்தையும் பாதிக்கக்கூடியதுமான அவற்றின் பேராபத்துக்களிலிருந்து விஸ்த்தீரணம் அல்லது உள்ளுறவுள்ள பேராபத்துக்களும், விஞ்ஞானத்தின் அபிவிருத்தியின் அடிப்படையான பிரச்சனைகளும் சமூகத்தின் இயக்கத்தின் கடமையாகும்.

என்னுடைய வாதம் என்னவெனில் இப்பாரிய பிரச்சனைகளுக்கான இறுதியான காரணம் சுயேச்சையான உலகசந்தைப் பொருளாதாரம் ஆகும். அத்துடன் இன்னமும் தெளிவாகத் தெரிவது என்னவெனில் அந்த நாடுகடந்த நிறுவனங்கள் இறுக்கமான தேசியக்கட்டுப்பாடுகள் அல்லது சட்டங்கள் அவர்களது நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த அனுமதிக்க மாட்டார்கள் என்பதாகும். இந்த அணுகுமுறையானது பொது வாழ்க்கையின் ஒவ்வொரு விடயத்தின் மீதான வியாபாரத்தின் கட்டுப்பாட்டினை அசட்டை செய்கின்றது.

இதற்கு ஒரு சில கட்டுப்பாடுகள் அல்ல மாறாக, விஞ்ஞானத்தினதும் தொழில்நுட்பத்தின் பலாபலன்களின் மேல் பொதுமக்களின் பகிரங்கக் கட்டுப்பாடுகள் தேவைப்படுகின்றன. Down Sizing என்ற புத்தகத்தில் கொடுக்கப்பட்ட வாதமான தனியார்மயமாக்கலுக்கு மாற்றான விஞ்ஞானத்தினதும் தொழில்நுட்பத்தின் மீதான பொதுமக்கள் கட்டுப்பாடு அதிகாரத்துவத்திற்கும், தடைப்படுதலுக்கும், ண்டகாலத்திற்கும் இட்டுச்செல்லும் என்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. 70 ஆண்டுகளுக்கு மேல் ஸ்ராலினிசத்திற்கு எதிரான எதிர்ப்பாக இருந்த வரலாற்றையுடைய ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் உறுப்பினரான என்னால் தேசிய அதிகாரத்துவத்தின் ஆழுமை இல்லாது சமுதாயம் தனது சொந்த வழியில் இயங்கமுடியும் என விவாதிக்கக முடியும்.

மனித சமுதாயத்தின் பாதுகாப்பான எதிர்காலமும், மனித தகமையின் அபிவிருத்தியும் விஞ்ஞானத்தின் மேல் உண்மையான சர்வதேச கட்டுப்பாடு ஒன்று இருக்குமேயானால் மட்டுமே யதார்த்தமாக்கப்பட முடியும். இது பரந்தளவிலான மூலப்பொருட்கள் மீதான நாடுகடந்த நிறுவனங்களின் கட்டுப்பாடும், சொத்துரிமையும் நீக்கப்படும் வரை சாத்தியமாகாது. ஆனபடியால்தான் சோசலிச முன்னோக்கு விஞ்ஞானத்திற்கு இன்று மிகவும் முக்கியத்துவமும் பொருத்தமுமாகும் என நான் கருதுகிறேன்.

Top of Page

வாசகர்களே: உலக சோசலிச வலைத்தளம்(WSWS ) உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறது. தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்பவும்.


Copyright 1998-2000
World Socialist Web Site
All rights reserved