World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்: சினிமா விமர்சனம்

The sad life and death of a Cuban poet

Before Night Falls, பீவீக்ஷீமீநீtமீபீ தீஹ் யிuறீவீணீஸீ ஷிநீலீஸீணீதீமீறீ, ஷ்க்ஷீவீttமீஸீ தீஹ் சிuஸீஸீவீஸீரீலீணீனீ ளி'ரிமீமீயீமீ, லிஊக்ஷ்ணீக்ஷீஷீ நிரனீமீக்ஷ் சிணீக்ஷீக்ஷீவீறீமீs ணீஸீபீ யிuறீவீணீஸீ ஷிநீலீஸீணீதீமீறீ

ஒரு கியூபா கவிஞனின் மரணமும் துன்ப வாழ்க்கையும்

பொழுது சாயுமுன் திரைப்படம், ஜூலியன் சனாபெலால் இயக்கப்பட்டது. இது கன்னிங்காம் ஓ'கீ்ஃபெ, லசாரோ கொமெஸ் கேரில்ஸ் மற்றும் ஜூலியன் ச்னாபெல் ஆகியோரால் எழுதப்பட்டது.

By David Walsh
16 January 2001

Back to screen version

பொழுது சாயுமுன் திரைப்படத்தில் இயக்குநர் (மற்றும் நியூயோர்க் ஓவியர்) ஜூலியன் சனாபெல், (Julian Schnabel) கட்டுப்பாடற்ற கியூபா கவிஞன் ரெய்னால்டோ அரெனாஸ் (Reinaldo Arenas) ன் (பிறப்பு 1943 ) வாழ்வும் சாவும் பற்றிய வேறுபட்ட விளக்கத்தை அளிக்கின்றார். ரெய்னால்டோ அரெனாஸ், காஸ்ட்ரோ ஆட்சியால் துன்பங்களுக்கு உள்ளாக்கப்பட்டார். நியூயார்க் நகரத்தில் எய்ட்ஸ் நோயால் பீடிக்கப்பட்டு, சுகாதாரக் காப்புறுதி வசதி இல்லாமல், 1990ல் தானே மரணத்தைத் தழுவினார். அது ஒரு துக்ககரமான கதை. சரியான நபர்களின் கைகளில் கிடைத்தால், கவனித்துப் பார்க்கக்கூடிய நாடகமாகவும் ஆகலாம்.

(Schnabel) சனாபெல்லின் படம், பரந்த அளவில், அறிவார்ந்த, பொதுவாக தொட்டும் தொடாத தாக்கமாக, வாழ்க்கையை கவிதை நடையில் கொடுக்க முயற்சிக்கிறார். நாம் அரெனாசை (Arenas) கியூபா கிராமத்துக் குழந்தையாக, சேற்றில் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். இந்தப் பூமி, மரங்கள், கடல், பாலுணர்வு ஆகிய இவற்றுடன் அவரது உறவில் ஏதோ ஒரு அடிப்படை இருக்கிறது.1959 கியூபாப் புரட்சியுடனான அவரது ஆரம்ப ஆதரவு, இயற்கை, சுதந்திரம் இவை மீதான அவரது நேசிப்பின் உள்ளார்ந்த உற்பத்திப் பொருளாகத் தோன்றுகிறது. அதன் ஆரம்ப நாட்களில் மிக ஆர்வத்துடன் பங்கு கொள்கின்றார். அவர் எழுதத்தொடங்கி சில அங்கீகாரத்தையும் பெறுகிறார்.

பிறகு விஷயங்கள் மோசமாகப் போகின்றன. 1960களில் ஓரினச் (homosexuals) சேர்க்கைக்காக கலைஞர்கள், அரசியல் எதிர்ப்பாளர்கள் ஒடுக்கு முறையைச் சந்திக்கின்றனர். கலைஞர்களையும் அறிவுஜீவிகளையும் இழிவுபடுத்தும் வண்ணம் அரசாங்க அதிகாரத்துவங்களின் வாரியங்களின் முன் "சுய-விமர்சனங்கள்" செய்யும்படி நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். ஒருவரது மனைவி துள்ளிக் குதிக்கிறாள். அரெனாஸ் (Arenas) தொடர்ந்தும் தமது எழுத்துப்பணிகளைத் தொடர்கிறார், பிரசுரிப்பதற்காக தனது நாவல்களை நாட்டிலிருந்து கடத்தி வருகிறார். இந்தக் குற்றத்திற்காக அவர் துன்புறுத்தப்படுகிறார். 1973ல் ஆத்திரமூட்டும் நடத்தை விதிகளின் விளைவாக, அரெனாஸ் கற்பழிப்புக் குற்றம் ஜோடிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுகிறார். அங்கிருந்து அவர் தப்பிக்கிறார் மற்றும் ரகசியமான வழிகளில் கியூபாவை விட்டு பறந்து செல்லும் முயற்சியில் தோல்வி அடைகிறார். அதன் காரணமாக அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு எல் மோரோ (El Morro) எனும் கொடிய சிறைச்சாலைக்கு அனுப்பப்படுகிறார். அங்கு அவர் இரண்டு ஆண்டுகளைக் கழிக்கிறார். அடிகள் மற்றும் முறைகேடாக நடாத்தப்படுவதால் துன்பத்திற்கு ஆளாகிறார். ஏனைய சிறைக் கைதிகளுக்கு கடிதங்கள் எழுதியதால் தப்பிப்பிழைக்கிறார்.

1980ல் அரெனாஸ் மாரியல் (Mariel) துறைமுகத்தின் படகுத்துறையில் கியூபாவை விட்டுச் செல்கிறார். இறுதி விளைவாக நியூயோர்க்கில் ஒரு துணையுடன் தங்கிவிடுகிறார். புலம் பெயர்ந்த சூழலில் எழுத்தாளனின் மகிழ்ச்சியற்ற சூழலை எண்ணிப்பார்க்கிறார். அவர் சீற்றம் கொண்ட நடையில் எழுதுகிறார். ஆனால் எய்ட்ஸ் தொற்றி மன உளைச்சலுடன் இறக்கிறார்.

குறிப்பாக திரைப்படத்தின் முதற்பகுதியில் அங்கே ஆர்வமூட்டும் விஷயங்கள் உள்ளன. ஸ்பானிய நடிகர் ஜேவியர் பார்தெம் (Javier Bardem) அரெனாஸாக சிறப்பாக நடித்துள்ளார். கவிஞன் தொடர்பானதில், இங்கு நல்ல எண்ணத்துடனும் வலிமையான உணர்வுகளுடனும் யாரோ ஒருவர் இருக்கிறார் என நாம் நினைக்கிறோம். ஒடுக்குமுறை மற்றும் கஷ்டங்களை எதிர்கொள்கிறார் என்பது துயரமாக இருக்கிறது. இருப்பினும் திரைப்படம் அதற்கு மேல் ஆழமாய்ப் போகவில்லை. அனைத்துக் காரணங்களுக்காகவும் உள்நோக்கத்திற்காகவும் அங்கே நின்றுவிடுகிறது. கிட்டத்தட்ட எல்லாமே ஒரேமாதிரியாய் --மனம்போல் திரியும் கட்டுப்பாடற்றவர்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள்--ஈவிரக்கமற்ற அதிகாரிகள் என "கவிதைத்" தன்மையானதாய் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவற்றை நாம் முன்னரே பார்த்திருக்கிறோம். பொழுது சாயும்முன் இன்னொரு மணிநேரம் அப்படியே போகிறது. ஆனால் பெரும்பாலும் திரும்பக் கூறுதலாகவே இருப்பதுடன் மிகவும் சுய பரிதாபத்திற்குரியதாகவும் இருக்கிறது. சனாபெல்லின் (Schnabel) கருத்து சிக்கலாக இருக்கிறது அல்லது பற்றாக்குறையாக இருக்கிறது. குறிப்பிட்ட அளவுக்கு, அரெனாஸின் பாத்திரத்திலும் கூட அது இருக்கிறது.

அவர் திறமையான எழுத்தாளனாக இருந்தார். அத்தகைய ஒடுக்கு முறையில் பாதிக்கப்பட்டவர், மிகவும் சாதகமான நிலைமைகளின் கீழ் இருந்தால் அவரது எழுத்துக்கள் எப்படி இருந்திருக்கும் எனபதைக் கூறுவது கடினமானது. எடுத்துக்காட்டாக கடலுக்கு பிரியாவிடை போன்ற புத்தகம்-- அவரது நாவலாக்கப்பட்ட மயங்கவைக்கும் சுயசரிதையின் ஐந்து தொகுதிகளுள் ஒன்று-- வாசிப்பதற்கு கடினமானது: 400 பக்கங்கள் அவமதிக்கும் பழிச்செயல் மற்றும் ஆற்றொணா நிலையாய் ஒருங்கிசைவான நிலைப்பாட்டை அரிதாகவே காண்கிறது. ஆதரவு விமர்சகர் கூட (ஜேய்ம் மான்ரிக்யூ Jaime Manrique) பின்வருமாறு குறிப்பிடுகிறார்: "அவரது நாவல்களில் பெரும்பாலானவை, தனிச்சிறப்பான பெரும் திறமை மற்றும் மேதைமை (உயிரோடிருக்கும் எழுத்தாளர்களில் அவரைத் தொடும் அளவுக்கு எவரும் இல்லை என்றளவுக்கு அவரது சிறப்பான தன்மை) கணங்களால் நிரப்பப்பட்டிருந்தாலும், அளவுக்கு அதிகமான அணிநய வளங்களால் பாதிக்கப்பட்டிருந்தது. நாவலின் ஒழுங்கற்ற மற்றும் கூறியது கூறல் கட்டமைப்புக்கள் பலவீனப்படுத்துவதை நான் பார்க்கிறேன்." கடைசிக் கருத்துடன் ஒருவர் உடன்படுவார்.

அரெனாஸ் காஸ்ட்ரோ ஆட்சியைப் புரிந்து கொள்ளத் தவறுகிறார். அவர் அதனை அதன் வார்த்தையால் எடுத்துக் கொண்டு சாதாரணமாக பொதுப்படையான சொற்களால் "மார்க்சிசம்" மற்றும் "கம்யூனிசம்" என வசைபாடுகிறார். ஆட்சியின் கொடூரத்திற்கு வக்காலத்து வாங்கும் அவரது கவிதையோ அல்லது அரசியலோ எதுவும் இல்லைதான். இருப்பினும், அவர் எதற்கு எதிராக எழுந்து நின்றார் என்பதைப் புரிந்திருந்தாரேயானால், அவர் நீடித்த மரபுரிமைச் செல்வத்தை விட்டுச் சென்றிருக்க முடியும்.

கடலுக்குப் பிரியாவிடையில் 1960 அளவில், அதிருப்தியாளர் கியூபா கலைஞரின் வாழ்க்கை மற்றும் மனநிலை பற்றிய தெளிவான படத்தைக் கொடுக்கக்கூடிய சில பந்திகள் உள்ளன: "அதைக் காட்டுவதற்கு துணிவு இல்லாத அளவுக்கு அச்சம் இருந்தது. மோசமான விஷயம் எதுவெனில்....... எங்கு நல்ல எண்ணங்கள் முடிகின்றன மற்றும் நம்பிக்கை மோசடிகள் தொடங்குகின்றன என உங்களால் கூறமுடியாதவாறு ஒவ்வொன்றும் திரிக்கப்பட்டிருந்தது, கலக்கப்பட்டிருந்தது, நஞ்சூட்டப்பட்டிருந்தது, கெடுக்கப்பட்டிருந்தது, குழப்பப்பட்டிருந்தது" என்கிறார்.

இது உண்மையை உரத்து ஒலிக்கிறது. "நல்ல எண்ணங்கள்" மற்றும் நம்பிக்கை மோசடி இவைகளுக்கு இடையிலான வேறுபடுத்தலை அவர் விரும்பியிருந்தாலும், அங்கு வேலை செய்யும் பல்வேறு சமூக விருப்பங்களைக் கண்டுபிடிக்கும்படியும், அவரவர்களின் வரலாற்றையும் முன்னோக்குகளையும் கண்டுபிடிக்கும்படியும் தள்ளப்படுவார். அவர் கலை வழியாக, கியூபாப் புரட்சியையும் கியூபா அரசாங்கத்தையும் "சோசலிஸ்டோ" அல்லது "கம்யூனிஸ்டோ" அல்ல மாறாக ஏனையோரைப் போல குட்டிமுதலாளித்துவ தேசியவாத நிர்வாகம் என்றும், அவர்கள் 1960களில் குளிர்யுத்த பிரத்தியோக சூழ்நிலைகளின் கீழ் செல்வாக்காக இருந்தவர்கள் என்பதையும் கண்டுகொள்ளுமளவு நெருங்கி வரக்கூடும். காஸ்ட்ரோ அமெரிக்க முட்டாள்தனம் மற்றும் விட்டுக்கொடுக்காத தன்மையால் சோவியத் ஸ்ராலினிசத்தின் கைகளுக்குள் போகும்படி தள்ளப்பட்டார். அது நிலைக்காது போய்விட்டது.

பில்வான் (Bill Vann) தனது சொற்பொழிவான "காஸ்ட்ரோயிசமும் குட்டிமுதலாளித்துவ தேசியவாத அரசியலும்"&ஸீதீsஜீ; என்பதில் குறிப்பிட்டவாறு: "யதார்த்தத்தில் இரண்டாவது உலக யுத்தத்தைத் தொடர்ந்து பத்தாண்டுகளின்போது, ஏனைய பல ஒடுக்கப்பட்ட நாடுகளைப் போன்றே கியூபாவும் எதிர்மறை அர்த்தத்தில் நிரந்தரப்புரட்சியின் உறுதிப்படுத்தலை வழங்கியுள்ளது. அதாவது எங்கு தொழிலாள வர்க்கத்துக்கு புரட்சிகரக் கட்சி இல்லையோ, அதன் காரணமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தலைமை வழங்குவதற்கு அது தகுதியற்றுப்போக, தேசிய முதலாளித்துவ வர்க்கத்தினதும் குட்டிமுதலாளித்துவ தேசியவாதிகளினதும் பிரதிநிதிகள் அங்கு உள்ளே நுழையவும், தங்களது சொந்த தீர்வினைத் திணிக்கவும் முடிகிறது. நாசர், நேரு, பெரன், பென்பெல்லா, சுகர்ணோ, பாத்திஸ்டுகள் மற்றும் பிந்தைய காலகட்டத்தில் ஈரானில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மற்றும் நிகராகுவாவில் சான்டினிஸ்டாக்கள் ஆகியோர் இந்த நிகழ்வுப்போக்கின் எடுத்துக்காட்டுக்கள் ஆவர். உண்மையில் இவை எல்லாவற்றிலும் தேசியமயமாக்கலும் நடைமுறைப் படுத்தப்பட்டது."

அமெரிக்காவின் வலுச்சண்டைக்கும் மியாமியில் உள்ள அரைப்பாசிச புலம்பெயர்ந்தோருக்கும் எதிராக, துன்பகரமான, ஜனநாயகவிரோத காஸ்ட்ரோ ஆட்சிக்கு ஒரு அங்குலம் கூட விட்டுக்கொடுக்காமல் கியூபாவைப் பாதுகாத்தல் அரசியல் ரீதியாக முக்கியமானது. (வான் குறிப்பிட்டார்: "உதாரணமாக கியூபா ட்ரொட்ஸ்கிஸ்டுகள் ஈவிரக்கமற்ற முறையில் நசுக்கப்பட்டார்கள். அவர்களின் தலைவர்கள் சிறையிலிடப்பட்டார்கள். மற்றும் பத்திரிகைகள் நசுக்கப்பட்டன. உலகில் மற்றெந்த நாட்டையும்விட அதிகமான அரசியல் கைதிகளை நீண்ட காலத்திற்கு சிறையில் அடைத்திருந்த நாடாக இந்தத்தீவு நீண்டகாலமாக இருந்து வருகிறது. அவர்களுள் ஜூலை 26 இயக்கத்தின், காஸ்ட்ரோவின் முன்னைய தோழர்கள் கொஞ்சநஞ்சம் பேரல்லர்.") ஒரு திரைப்படத்தை எடுக்கையில், ஒரு கலைஞன் என்னென்ன வகையில் தேர்ந்தெடுத்துக் கொண்டாலும் கியூபாப் புரட்சியின் முரண்பாடுகள் மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி நிச்சயமாக கருத்துரைப்பது சாத்தியமானதே. ஆனால் அதற்கு கவிதை மற்றும் விஞ்ஞானம் (வரலாற்றின் விஞ்ஞானம்) ஆகிய இரண்டும் தேவைப்படுவனதான்.

அரெனாஸ் ஆவது குறைந்தபட்சம் அத்தகைய அணுகுமுறையின் சாத்தியத்திற்கான குறிப்புக்களைக் கொடுக்கிறாரெனில், சனாபெல் ஒன்றும் காட்டவில்லை. அவர், "இயற்கையில் சுதந்திரமாய் இருத்தலும் சமுதாயத்தால் கட்டுப்படுத்தப்படுவதும் சாதாரண உண்மை... காஸ்ட்ரோவை பற்றிய முன் கருத்து எதுவும் என்னிடத்தில் இல்லை... நான் ஓரினச் சேர்க்கையாளனுமல்லன். நான் கியூபனும் இல்லை. நான் ரெய்னால்டோவின் கதையைத்தான் சொல்ல முயற்சிக்கிறேன்" என்ற கருத்துக்களுடன் திருப்திப்பட்டுக்கொள்கிறார், தன்னைத்தானே முழுமையாய் சந்தோஷப்பட்டுக் கொள்கிறார்.

கியூபாப் புரட்சி, காஸ்ட்ரோவாதம் மற்றும் காஸ்ட்ரோ எதிர்ப்புவாதம், இலத்தின் அமெரிக்காவில் அமெரிக்காவின் பாத்திரம் மற்றும் இந்தவாறாக ---சிறப்பான சமூகவியல் நிகழ்ச்சியுடன் பிரிக்கமுடியாதவாறு கட்டுண்டிருக்கும் ஒரு தனிமனிதனின் வாழ்க்கையைப்பற்றி, அந்நிகழ்ச்சிகளுள் ஏதாவது ஒன்றைப்பற்றி ஆய்வு செய்வதற்கு சின்ன முயற்சிகூடச் செய்யாமல், ஒருவர் "கதை சொல்லும்" எண்ணமும் அவை பற்றி ஒரு முடிவுக்கு வருதலும் படுமோசமான அறிவு மழுக்கம் ஆகும். இந்த வகையான வேண்டுமென்றே அலட்சியம் செய்தல் இன்றைய "கலை வட்டங்களில்" குறிப்பாக அமெரிக்காவில், ததும்பி வழிகின்றது. மற்றும் அது நிகழ்காலக் கலையின் பலவீனத்தை விளக்கவும் உதவுகின்றது.

தனது சொந்த உள்ளுணர்வின் ஆற்றலில் சனாபெல் கொண்டிருக்கும் அபரிமித நம்பிக்கையின் விளைவாக--அவரது பூச்சு ஓவியத்திலாவது (paintings) ஒருபோதும் மகிழ்ச்சியின் பலாபலன்களைப் பெறவில்லை. தற்செயலாக --அது பலவீனமான, பொருட் செறிவில்லாத இன்னும் சொல்லப்போனால் சோம்பேறித்தனமான வேலைதான். குயில்ஸ் (Quills) போல, கலை மற்றும் சுதந்திரம் பற்றிய பாதுகாப்பில் அக்கறை தொடர்பாக இன்னமும் வெட்டிப்பேச்சு பேசுபவர்களுக்கு, துரதிர்ஷ்டவசமாக அந்த நேரம் பிரதானமாக மகிழ்ச்சியை ஊட்டும்.

Top of Page

வாசகர்களே: உலக சோசலிச வலைத்தளம்(WSWS ) உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறது. தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்பவும்.


Copyright 1998-2000
World Socialist Web Site
All rights reserved