World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்: ஐரோப்பா  

Depleted uranium responsible for cancer among Europe's Balkan troops

ஐதான யுரேனியம் பால்கனில் நிலை கொண்டுள்ள ஐரோப்பிய படையினரிடையேயான புற்றுநோய்க்கு காரணம்

By Julie Hyland
9 January 2001

Back to screen version

பால்கனில் ஐதான யுரேனியத்தை [Depleted uranium] கொண்ட ஆயுதங்களை பாவித்தமைக்கும் அங்கு கடமையில் இருந்த படையினரிடையே லொய்கேமியா [Leukaemia -இரத்த உற்பத்தியை தடைசெய்தல்] போன்ற நோய் பரவியுள்ளதற்சுசுகுமான தொடர்பை ஆராயுமாறு நேட்டோவை இத்தாலி கேட்டுள்ளது.

இத்தாலிய அரச வானொலிச் சேவைக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் தலைவரான ரோமானோ போடி இவ்வகையான ஆயுதங்களை பாவித்ததின் பாதிப்பு குறித்த உண்மை உறுதிப்படுத்தப்படவேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அவர் ''பொஸ்னியாவினதும் சேர்பியாவின் அரசுகளுடன் உடனடியாக தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டு இவ் ஐதான யுரேனியத்துடன் தொடர்பான சுற்றாடல் மாசடைதல் பிரச்சனைகள் கலந்துரையாடப்பட வேண்டும் எனவும்'' முன்மொழிந்துள்ளார்.

ஐதான யுரேனியமானது அணு ஆயுதங்களுக்கும் அணு ஆலைக்கான எரிபொருள் தயாரிப்புக்காகவும் பயன்படுத்தும் யுரேனியம் பதப்படுத்தப்படும் போது விளையும் உபவிளைவாகும்.காரீயத்தை விட 1.7 மடங்கு பாரமான ஐதான யுரேனியமானது பலமான தடைகளை ஊடறுத்து செல்வதற்கு ஏதுவாக ஆயுதங்களுக்கு சேர்க்கப்படுகின்றது. இது கதிரியக்கமுள்ள ஆவிமண்டலமான யுரேனியம் ஒக்சைட்டை உருவாக்குவதுடன், இது சுவாசிக்கப்பட கூடியதும் காற்றினால் கொண்டு செல்லப்பட்டு மண் அசுத்தமடைவதுடன் உணவுத்தொடரிலும் பரவுதலுக்கான சாத்தியமும் உள்ளது.

ஐதான யுரேனியத்தை அதிகளவில் கொண்ட ஆயுதங்கள் 1991 ஈராக் யுத்தத்திலும், 1995 பொஸ்னிய யுத்தத்திலும், 1999 யூகோஸ்லாவியா மீதான யுத்தத்திலும் பிரயோகிக்க அமெரிக்கப் படைகளால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அண்ணளவாக 944,000 சுற்று ஐதான யுரேனிய ஆயுதங்கள் ஈராக்கிலும் குவைத்திலும் 1991 இல் பாவிக்கப்பட்டது. பல வளைகுடா யுத்த வீரர்கள் தாம் இதனால் பாரிய நோய்களுக்கு உள்ளாகியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். தற்போது ''பால்கன் யுத்த அறிகுறிகள்'' என அழைக்கப்படுவது முன்னாள் யூகோஸ்லாவியாவில் கடமையாற்றிய போர்வீரர்களிடையே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் 6 போர்வீரர்களும், 5 பெல்ஜிய வீரர்களும், 1 போர்த்துக்கல் வீரரும் லொய்கேமியாவால் இறந்துள்ளனர். பிரான்சில் 5 வீரர்களுக்கு இந்நோய்க்கான சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதுடன், பெல்ஜியத்தினதும் போர்த்துக்கலினதும் முன்னைய கோரிக்கைகளுக்கு பிரான்சின் ஆதரவுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்பு அமைச்சு ஐதான யுரேனியத்தை பாவித்தது தொடர்பான விசாரணையை நடாத்துகின்றது. பிரான்சின் பாதுகாப்பு அமைச்சரான அலன் ரிச்சர்ட் இவ்விடயத்தை இன்னும் வெளிப்படையாக்க கேட்டுள்ள வேளையில் இவ்வாயுதங்கள் வாபஸ் பெறப்படுவதற்க்கு காரணமெதுவுமில்லை என கூறியுள்ளார்.

கிறீஸ், பின்லாந்து, ஸ்பெயின் போன்றவை ஏற்கெனவே இது தொடர்பாக ஆராய தொடங்கியுள்ளதுடன், செக் குடியரசு கடந்த கிழமை இரத்த ஒழுங்கீனத்தால் இறந்த வான் ஊர்தி ஓட்டியின் மரணம் தொடர்பாக ஆராய தொடங்கியுள்ளதாக கூறியுள்ளது. கடந்த வருடம் ஏப்ரல் மாதம் நேட்டோ படைகள் அல்பானியாவுடனான கொசவோ எல்லையில் 50.000 ஐதான யுரேனிய ஆயுதங்கள் பாவித்ததாகவும், சேர்பியா மீது 7 தடவையும், மொன்டினீ குரோ மீது ஒரு தடவையும் பாவித்ததாக குற்றம் சாட்டியுள்ளது.

இத்தாலிய ஆதாரங்கள் ஐதான யுரேனிய ஆயுதத்தின் அபாயம் தொடர்பாகவும் அதிலிருந்து பாதுகாப்பது தொடர்பாகவும் அமெரிக்க படைகள் நன்கு அறிந்திருந்ததாகவும் இத்தாலிய படைகளுக்கு இதுபற்றி தெரியாது எனவும் தெரிவிக்கின்றன. இத்தாலிய பாதுகாப்பு அமைச்சு இவ் மூலகத்தை ஆயுதங்களில் பாவிக்க வேண்டாம் என நேட்டோவை கேட்டுக்கொண்டுள்ளதுடன் படைவீரர்களின் இறப்பு பற்றி விஞ்ஞான ரீதியாக விசாரிக்க ஒரு ஆணைக்குழுவை நியமித்துள்ளது.

நேட்டோ பேச்சாளரான மார்க் லைற்றி நேட்டோ இது தொடர்பாக விசாரணை எதுவும் நடத்தாது எனவும், ஆனால் இது தொடர்பான தேவையான விபரங்களை வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.'' எங்களுக்கு இயலுமான வழிகளில் இத்தாலிக்கு உதவுவதே நேட்டோவின் நிலைப்பாடு எனவும் அவர்கள் இப்போது விபரங்களை கேட்டுள்ளார்கள் நாங்கள் அவற்றை கண்டுபிடிக்க முயல்கின்றோம்'' என மேலும் அவர் BBC க்கு தெரிவித்துள்ளார்.

இவ்வாரம் டிசம்பர் 1995 இற்கும் ஏப்ரல் 1996 இற்கும் இடையில் பொஸ்னியாவில் கடமையாற்றிய முன்னாள் பிரித்தானிய இராணுவ பொறியியலாளர் முதலாவது இங்கிலாந்தின் முதலாவது ''பால்கன் யுத்த அறிகுறிகள்'' இன் தாக்குதலுக்கானவராக வெளிப்பட்டுள்ளார். Kevin Rudland (41) என்பவர் தான் பொஸ்னியாவிலிருந்து இங்கிலாந்து திரும்பிய பின் தலைமயிர் உதிர்ந்ததாகவும், பற்கள் ஈடாடியதாகவும், தீராத சோர்வினையும், எலும்பு சம்பந்தமாகவும், மிக மோசமான உள்ளுறுப்புக்களில் பிரச்சனைகளை அனுபவித்ததாக கடந்த வியாழக்கிழமை வெளிப்படுத்தினார். Rudland தனது நோய்க்கு யுரேனிய தூசிகளின் தொடர்புதான் காரணமென நம்புவதாக கூறியுள்ளார். மேலும் ''இப்போது இங்கு நான் தான் முதலாவது ஆளாக இருக்கிறேன்.ஆனால் இன்னும் பலர் இருக்கலாம். அவர்கள் இன்னும் முன்னுக்கு வரவில்லை அல்லது அவர்களுக்கு இன்னும் தெரியாது இருக்கிறது'' என எச்சரித்தார்

அமெரிக்காவும் இங்கிலாந்தும் வளைகுடா யுத்தத்திற்க்கும் ''பால்க்கன் யுத்த அறிகுறிகளுக்கும்''

ஐதான யுரேனியத்திற்கும் உள்ள தொடர்பை மறுக்கின்றனர். பென்டகன் பேச்சாளரான கெனத் பெக்கன் வளைகுடா யுத்தத்தின் போது பாவித்த ஆயுதங்கள் குறித்து பரந்த ஆய்வை செய்துள்ளதாகவும் புற்று நோய்க்கான அல்லது வேறு உடல் நலக்கேடுக்கான அறிகுறிகளுக்கான சாட்சியங்கள் கண்டுபிடிக்கப் படவில்லை என குறிப்பிட்டுள்ளார். ஆனால் அமெரிக்க இராணுவ சுற்றாடல் கொள்கைகளுக்கான அமைப்பு மூன்று வருடங்களுக்கு முன்னர் வெளிவிட்ட அறிக்கையில் '' ஐதான யுரேனியம் உடலினுள் புகுந்தால் அது மருத்துவ விளைவுகளை உருவாக்கும் தன்மைகளை கொண்டுள்ளதாகவும், அதனுடன் தொடர்பாக இரசாயன, கதிரியக்க அபாயம் இணைந்துள்ளதாகவும், ஐதான யுரேனியத்தினை செலுத்தும் வாகனத்தினுள் இருக்கும் அல்லது அண்மையிலுள்ள நபர்களுக்கு முக்கிய உள்ளுடல் பாதுகாப்பின்மையை உருவாக்கும்'' என குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே வெளியிடப்பட்ட ஆய்வுகள் அனைத்தும் புற்று நோய்க்கும் ஐதான யுரேனியத்திற்கும் ஒரு தொடர்புகளும் இல்லை என கூறுகின்ற போதும் ''பொதுவான ஆய்வுகள் மிக குறைவாக இருக்கின்றது அல்லது நாடு திரும்பிய படைவீரர்களால் அல்லது பொதுவானமக்களால் மேற்கொள்ளப் படாதிருக்கின்றது [பொதுவான மக்களின் தலைமையின் கீழ் சில இருந்த போதும் இவை சிறப்பாக செய்யப்பட்டது அல்ல]. பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு எந்த ஒரு வளைகுடா யுத்த படைவீரரையும் கடந்த பத்தாண்டுகளாக சோதனைக்குட்படுத்தவில்லை' 'என BBC குறிப்பிட்டுள்ளது.

ஈராக்குக்கு எதிரான பொருளாதார தடைகள் காரணமாக வளைகுடா யுத்தத்தின் பின்னர் அதிகரித்துள்ள புற்றுநோய் தொடர்பான பரிசோதனைகளை செய்வதற்கான கருவிகளை இறக்குமதி செய்யமுடியாமல் உள்ளது. இதேவேளை பால்க்கனில் தான் பாவித்த ஐதான யுரேனியம் தொடர்பான விபரங்களை மறுப்பதால் ஒரு ஆழமான ஆய்வினை செய்யமுடியாமல் உள்ளது.

விஞ்ஞானிகளும், சுற்றுசூழல் பாதுகாப்புவாதிகளும், வைத்தியர்களும், முன்னாள் படைவீரர்களும் நீண்ட காலமாகவே ஐதான யுரேனியம் உள்ளடங்கிய ஆயுதங்களை பாவிப்பதற்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளதுடன், எதிர்கால சந்ததி மீதான கணிப்பிடமுடியாத அதன் விளைவுகள் தொடர்பாகவும் எச்சரித்துள்ளனர். 1999 இல் லண்டனில் நடந்த மகாநாடு ஒன்றில் பிரித்தானிய உயிரியலாளரான ரொஜர் கொக்கில் வளைகுடா யுத்தத்திலும், சேர்பியாவுக்கு எதிராகவும் அமெரிக்க, பிரித்தானிய படைகளால் பாவிக்கப்பட்டதால் 10.000 மோசமான புற்றுநோயாளிகளை உருவாக்கியிருக்கலாம் என்பது தொடர்பாக கலந்துரையாட வேண்டும் என எச்சரித்தார். முதல் புற்றுநோயாக லொய்கேமியா இருக்கலாம் எனவும் இது ஒரு வருடகாலத்தினுள் வெளிப்படலாம் எனவும், இதில் பாதிக்கப்படுபவர்களில் அரைப்பகுதியினராக'' சாதாரண மக்களும், K-FOR படைவீரர்களும், உதவியாளர்களும், ஒவ்வொருவரும்'' இருப்பர் என அன்றே கொக்கில் தெரிவித்தார்.

 

Top of Page

வாசகர்களே: உலக சோசலிச வலைத்தளம்(WSWS ) உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறது. தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்பவும்.


Copyright 1998-2000
World Socialist Web Site
All rights reserved