World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்: ஐரோப்பா : பால்கன்

US-European antagonisms sharpen over Macedonia

அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான மசடோனியா மீதான பகைமைகள் கூர்மை அடைகின்றன

By Richard Tyler and Chris Marsden
22 August 2001

Back to screen version

மசடோனியாவில் "முக்கிய அறுவடை நடவடிக்கை" தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதா என்று நேட்டோ தலைமைகள் இன்று முடிவு செய்வார்கள். விட்டு விட்டுத் தாக்குதலும் ஆச்சிரமங்கள் மீதான குண்டு வீச்சுக்களும் இருந்த பொழுதும், கடந்த திங்கள் அன்று ஒப்புக்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்ந்து நிலைத்திருக்குமா என்று வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு தலைமைத் தளபதியான அமெரிக்க ஜெனரல் ஜோசப் ரால்ஸ்டன் விஜயத்தைத் தொடர்ந்து முடிவெடுக்கப்பட உள்ளது. மார்ச்சில் இருந்து மசடோனிய அரசாங்கப் படைகளை எதிர்த்துப் போராடிவரும் அல்பேனிய கிளர்ச்சியாளர்களான தேசிய விடுதலைப் படையின் ஆயுத ஒப்படைப்பை மேற்பார்வை செய்யும் பணியில் இராணுவ நடவடிக்கைக் குழு இறுதியில் 3,500 படைவீரர்களைக் கொண்ட நேட்டோ படை அனுப்பப்பட இருக்கிறது.

"மோதல்களை முற்றிலும் நிறுத்துவதற்கு" மற்றும் மசடோனியாவின் அல்பேனிய சிறுபான்மையினருக்கு கூடிய உரிமைகள் தருவதற்கான அரசியல் மாற்றங்களை உருவரை செய்ய உடன்படும் ஒப்பந்தம் ஒன்று ஸ்கோப்ஜி (ஷிளீஷீஜீழீமீ) யில் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்தவார இறுதியில் பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு படைப்பிரிவுகள் முன்கூட்டிய பாதுகாப்பாக மசடோனியாவை வந்தடைந்தன. நாட்டின் பிரதான மசடோனிய மற்றும் அல்பேனிய கட்சிகளின் பிரதிநிதிகள் "உருவரை உடன்பாட்டில்" (திக்ஷீணீனீமீஷ்ஷீக்ஷீளீ கிரீக்ஷீமீமீனீமீஸீt) கையெழுத்திட்டனர். அதுவும் கூட நேட்டோ நடவடிக்கைக்கு அடிப்படையை வழங்கியது.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்க கூட்டு ஆதரவின் கீழ் தயாரிக்கப்பட்ட பத்திரமோ அல்லது நேட்டோ படைகளை அனுப்புவதோ இந்த முன்னாள் யூகோஸ்லாவியாவிற்கு அமைதியைக் கொண்டுவரப் போவதில்லை. உண்மையில் உடன்பாட்டில் கையெழுத்திட வைத்த இச்சூழ்நிலைமைகள் பற்றிய ஆய்வு, மசடோனியாவின் சீர்குலைவானது மூலோபாய முக்கியத்துவமான பால்கன் பிராந்தியத்தில் மேலாதிக்கம் சம்பந்தமாக மேற்கத்திய வல்லரசுகளுக்கு இடையிலான மோதலின் விளைபொருள் என்று காட்டுகின்றது.

ஒருமாதத்திற்கு முன்னர்தான் நேட்டோ செயலாளர் ஜெனரல் ரொபர்ட்சன் தேசிய விடுதலைப் படையை "ஜனநாயக மசடோனியாவை அழிப்பதை இலக்காகக் கொண்ட கொலைகாரக்கூட்டம்" என்று கண்டித்தார். அமெரிக்க ராஜாங்க செயலாளர் கொலின் பாவெல், "மசடோனியாவில் ஜனநாயக நிகழ்ச்சிப்போக்குகளை நிலைகுலைவிக்க முயற்சிக்கும் பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத அமைப்புக்களின் கோழைத்தனமான மற்றும் பயந்தாங்கொள்ளித்தனமான செயல்களை "எதிர்கொள்கையில்" மசடோனியாவின் எல்லைப்புற ஒற்றுமைக்கு ஐக்கிய அமெரிக்காவின் முழு அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றவேளை, ஐரோப்பிய வெளிவிவகார கொள்கையின் தலைவர் ஜேவியர் சோலனா, "தேசிய விடுதலைப் படை" பயங்கரவாதிகள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்" என்றார்.

அத்தகைய அறிக்கைகளை நினைவு கூர்தல் மசடோனியாவில் "நேர்மையான தரகர்களாக" செயல்படுவதற்கான மேற்கத்திய வல்லரசுகளால் சொல்லப்படும் எந்தவிதமான கூற்றுக்களின் பாசாங்குகளையும் வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. உருவரை ரீதியான உடன்பாட்டின் பிரதான இலக்கு, முன்னர் நேட்டோ கூட்டாளிகளால் அவர்கள் பலாத்காரத்தால் எதிர் கொள்ளப்பட வேண்டும் என்று கண்டனம் செய்யப்பட்ட அதே அமைப்புடன் ஸ்கோப்ஜியில் உள்ள அரசாங்கத்தை ஒரு உடன்பாட்டை செய்வதற்கு தள்ளுவதாகும்.

உடன்பாடானது அரசின் பரந்த அளவிலான "மையப்படுத்தலுக்காக" அனுமதிக்கின்றது. பாதுகாப்பு படைகளில் அல்பேனிய இனத்தவர்களின் கூடிய பிரதிநிதித்துவம் பற்றிய வாக்குறுதியின் அர்த்தம் முன்னாள் தேசிய விடுதலைப் படை கொரில்லாக்கள், குண்டர்கள் கும்பலாக நடத்தப்படுவதைக்காட்டிலும், விரைவில் போலீஸ் சீருடைகளை மாட்டிக்கொள்வார்கள் என்பதாகும்.

KLA-- பால்கன்கனில் அமெரிக்க நலன்களுக்கான கருவி

இந்த பிரதேசத்தில் அதிகாரம் உள்ளதாக தேசிய விடுதலைப் படையை உயர்த்துதல் அதற்கான மூல தோற்றுவாயை ஸ்லோபோடான் மிலோசெவிக்கின் சேர்பிய ஆட்சியை கீழிறக்குவதற்கான அமெரிக்க முயற்சிகளில் இருக்கின்றது. இந்த பிராந்தியத்தில் ஆதிக்கம் செய்யும் அரசு என்ற வகையில் சேர்பியாவானது, வாஷிங்டனால் பால்கனில் அதன் கட்டுப்பாட்டிற்கு ஒரு தடையாகப் பார்க்கப்பட்டது.

சேர்பியாவுக்கு எதிரான அதன் யுத்தத்தில், அமெரிக்கா அல்பேனிய இனத்து பிரிவினைவாத கொசோவா விடுதலை இராணுவத்திற்கு (அல்பேனியாவில் உள்ள ரிலிகி அல்லது ஹிசிரி) நிதி, பயிற்சி மற்றும் ஆயுதங்களைக் கொடுத்தது. அது பயங்கரவாதப் பிரச்சாரத்தைத் தொடுத்தது மற்றும் மிலோசவிக் தேசியவாத அரசாங்கத்தால் பதில் நடவடிக்கையைத் தூண்டி விட்டது. இனத்துடைத்தழிப்பில் இருந்து கொசோவா அல்பேனியர்களைக் காத்தல் என்ற மூடுதிரையின் கீழ், 1999 மார்ச்சில் நேட்டோ சேர்பியாவுக்கு எதிரான கோழைத்னமான யுத்தத்தைத் தொடுத்தது. பெல்கிரேடிலும் மற்றைய சேர்பிய மாநகர்களிலும் மூன்று மாதங்களாக மிக உயரத்திலிருந்து குண்டுவீச்சுக்களுக்குப் பின்னர், மேற்குலகு- திணித்த "அமைதி" கொசோவாவில் சட்டப்படி எவ்வாறாயினும் நடைமுறையில் நேட்டோவின் காப்பாட்சியைக் கண்டது.

கொசோவாவில் கணிசமான அளவு ஈய, துத்தநாக, சாட்மியம், வெள்ளி, தங்கம் மற்றும் நிலக்கரி போன்ற --யூகோஸ்லாவியாவின் சொந்த இயற்கை வளங்களை கட்டுப்படுத்துதலைப் பெறுவதுபோல-- பால்கன்களில் யார் ஆதிக்கம் செலுத்துகின்றார்களோ அவர்கள் சோவியத் ஒன்றியத்தின் முன்னாள் எல்லைப்பகுதிகளை அடையக்கூடியதை கட்டுப்படுத்தக் கூடியவர்களாக இருப்பர். உலகில் துளையிட்டு வெளியே எடுக்கப்படாத மிக உச்ச அளவு எண்ணெய் மற்றும் எரிவாயுப் படுகைகள் காஸ்பியன் கடலை எல்லையாக ஒட்டிய முன்னாள் சோவியத் குடியரசுகளில் (அஜர்பெய்ஜான், கஜக்ஸ்தான் மற்றும் துர்க்மேனிஸ்தான்) அமைந்துள்ளன. அளவில் ஈரான் மற்றும் ஈராக்குடன் ஒப்பிடக்கூடிய அளவு படுகைகளைக் கொண்டிருப்பது, யார் இதன் மீது கறந்தெடுக்கும் கட்டுப்பாட்டை கொண்டிருக்கப் போகிறார்கள் என்ற கடும்போட்டிக்கு ஆளாக்கியிருக்கிறது. மேற்கத்திய ஆய்வாளர்கள் கஸ்பியன் பிராந்தியத்தை பிரதான தங்க உற்பத்தியாளர்களாக ஆகும் என்று கூட எதிர்பார்க்கின்றார்கள். 10,000 தொன்களைக் கொண்ட கஜக்ஸ்தான் உலகின் இரண்டாவது பெரியதங்க இருப்பு பகுதியாக இருக்கின்றது.

பெப்ரவரி 1998ல் கஸ்பியன் பிராந்தியம் மீதான மூலோபாய முக்கியத்துவம் மீதான அமெரிக்க பிரதிநிதகள் சபைக் கூட்டத்தின்பொழுது, தலைவர் டக் பெரியூட்டர் விவரித்தார்: "இந்த பிராந்தியத்தில் சக்தி வளங்கள் சம்பந்தமாக அமெரிக்கக் கொள்கை இலக்குகளானது அரசுகளின் சுதந்திரத்தை மற்றும் மேற்குடன் அவர்களின் பிணைப்பை ஆதரித்துப் பேணும்; எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து வழியின் மீதான ரஷ்யாவின் ஏகபோகத்தை உடைத்தல்; ஒன்றுக்கொன்று மாறுபட்ட அளிப்பாளர்கள் வழியாக மேற்கின் சக்தி பாதுகாப்பை முன்னுக்குக் கொண்டுவரல்; ஈரான் எண்ணெய், எரிவாயுவைக் கொண்டு செல்லாத கிழக்கு --மேற்கு எண்ணெய்க்குழாய் வழியை அமைப்பதை ஊக்கப்படுத்தல்; மற்றும் மத்திய ஆசிய பொருளாதாரங்கள் மீதான ஈரானின் செல்வாக்கை மறுத்தல் ஆகியவற்றை உள்ளடக்கி உள்ளது."

சேர்பியாவிற்கு எதிரான யுத்தத்தைத் தொடர்ந்து, அமெரிக்க ஆதரவின் கீழ், முன்னாள் கொசோவா விடுதலைப்படை கெரில்லாக்கள் "கொசோவா பாதுகாப்பு படை" யின் உறுதியான அத்திவாரமாக ஆனதுடன் நவீன ஆயுதபாணியாக்கப்பட்டார்கள். இது சேர்பியாவில் மிலோசெவிக் ஆரசாங்கத்தை சீர்குலைக்கும் தொடர் நடவடிக்கைகளுக்கான அடிப்படையை அளித்தது. முதலில், ரிலிகி பிரெசேவோ, மெத்வெத்ஜா மற்றும் புஜானோவாக் ஆகியவற்றின் விடுதலை இராணுவமாக (ஹிசிறிவிஙி) குஞ்சுகளை ஈன்றது. இது சேர்பியாவில் உள்ள அல்பானிய பெரும்பான்மைப் பகுதியான பிரெசேவோ பள்ளத்தாக்கில் உள்ள சேர்பியன் போலீஸ் பிரிவுகளின் மீது தாக்கதல்களை அதிகரித்ததற்குப் பொறுப்பானதாக இருந்தது.

பின்னர், கொசோவாவில் உள்ள அமெரிக்க நேட்டோ துருப்புக்களின் கண்காணிப்பின் கீழ், தேசிய விடுதலை இராணுவ (ழிலிகி) வேடத்தின் கீழ், "நுண் துளைகள்" என்று அழைக்கப்படுகின்ற எல்லையோரத்தைக் கடந்து மசடோனியாவுக்குள் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தை மேற்கொண்டு நடத்த ரிலிகி ஆயுதங்கள் மற்றும் ஆட்களை அனுப்பும் பொறுப்பாளனாக ஆனது.

ஹிசிறிவிஙி மற்றும் ழிலிகி ஆகியவற்றின் நடவடிக்கைகள், ரிலிகி வின் உடைந்துபோன அதிதீவிரவாத பிரிவுகள், அகன்ற அல்பேனியா எனும் தங்களின் பிரச்சாரத்தை முன்னெடுக்கும் பொருட்டு, தங்கள் சார்பாக மீண்டும் ஒருமுறை நலையீடு செய்வதற்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய வல்லரசுகளுக்கு அழுத்தம் கொடுப்பதாகும் என்று சில விமர்சகர்கள் கூறுகின்றார்கள். இருப்பினும், மற்றவர்கள், மசடோனியாவை சீர்குலைப்பதற்கான பிரச்சாரத்துக்கும் அதனை ஐரோப்பிய செல்வாக்கைக் காட்டிலும் அமெரிக்க செல்வாக்கின் கீழ் கொண்டு வருவதற்குமான மிக அதிகமான அமெரிக்க ஆதரவு என்று குற்றம் சாட்டுகின்றனர்.

அமெரிக்க--ஐரோப்பிய குரோதங்கள்

ஐரோப்பாவானது பால்கனை தமது பொருளாதார மற்றும் அரசியல் வட்டத்துக்குள் கொண்டுவருவதற்கு விடாப்பிடியான முயற்சிகளைச் செய்து வருகின்றது. இந்த ஆண்டு ஏப்ரலில், ஸ்திரப்படுத்தல் மற்றும் ஒத்துழைப்புக்கான உடன்பாட்டில் கையெழுத்திட்டது. அது தாராள வாணிகம், அரசியல் ஒத்துழைப்பு, ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராவதையும் யூரோவை ஏற்றுக் கொள்வதையும் நோக்கிய படிநிலையாக பொருளாதார மற்றும் ஸ்தாபன ரீதியான சீர்திருத்தங்கள் ஆகியவனவற்றை வழங்குகிறது. அல்பானியாவும் பல்கேரியாவும் அதே வழியைப் பின்பற்ற திட்டமிட்டுள்ளன. இந்த நாடுகள் மீதான ஐரோப்பாவின் மேலாதிக்கம் கெட்டிப்படுத்தப்படுமா, இது காகஸ் மற்றும் கஸ்பியன் பகுதிகளில் அமெரிக்காவின் முக்கிய நலன்களை அச்சுறுத்தமுடியும்.

இந்தப் பிராந்தியத்தின் முக்கிய அளிப்பு வழித்தடங்களில் ஒன்றான கருங்கடலையும் அட்ரியாட்டிக் கடற்கரையையும் இணைக்கும் வழித்தடமானது பல்கேரியா, மாசிடோனியா மற்றும் அல்பேனியா வழியாக செல்கின்றது. ஒட்டாவா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மைக்கேல் சோசுடோவ்ஸ்கியால் எழுதப்பட்ட கட்டுரை பின்வருமாறு குறிப்பிடுகிறது: "ஆங்கிலோ-அமெரிக்க கூட்டிணைப்பு கட்டுப்படுத்தும், பல்கேரியத் துறைமுகமான பர்காஸை அல்பேனிய அட்ரியாட்டிக் கடற்கரைவழி மீதான வ்ளோருடன் (அல்பானியாவின் இரண்டாவது துறைமுக நகரம்) இணைக்கும் கிவிஙிளி டிரான்ஸ்-பால்க்கன் குழாய்ப்பாதை திட்டமானது, ஐரோப்பாவின் போட்டிமிக்க ராட்சத எண்ணெய் நிறுவனமான டோட்டல்-பினா-எல்ப் (ஜிஷீtணீறீ-திவீஸீணீ-ணிறீயீ) பங்கேற்பதை அதிகமாய் தவிர்க்கிறது." (மசடோனியாவில் அமெரிக்க யுத்தம், ஜூன்30,2001)

கிவிஙிளி குழாய்ப்பாதை இறுதியில் மற்றைய குழாய்ப்பாதை இடைவழி நிலப்பகுதிகளை கருங்கடல் மற்றும் கஸ்பியன் கடல் எண்ணெய்ப் பகுதி இடையில் நேரடியாக இணைக்கிறது.

அதனது அல்பானிய பதிலாட்களின் செல்வாக்கை அதிகரிப்பதன் மூலம் முழுப்பகுதியையும் கட்டுப்படுத்துவதை உறுதி செய்யும் பொருட்டு, அமெரிக்காவானது ரிலிகி மற்றும் அதனது மசடோனிய சகோதர கட்சியான ழிலிகி ஆகியவற்றின் நடவடிக்கைகளுக்கு ஊக்க ஆதரவு செய்துகொண்டிருப்பதாக சோசுடோவ்ஸ்கி வாதிடுகிறார். அத்தகைய கருதுகோளுக்கு ஆதரவாக கணிசமான ஆதாரம் உள்ளது. நேட்டோ கண்காணிக்கும் போர்நிறுத்தத்திற்கான அண்மைய முன்மொழிவுகளை வரைவு செய்வதில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா இரண்டும் பங்கெடுத்த போதும், மசடோனியாவில் ரிலிகி யின் நடவடிக்கை பிரிட்டிஷ் ஆதரவுடன் சக்திமிக்க வகையில் அமெரிக்காவால் ஊக்க ஆதரவு அளிக்கப்படுகின்றது என ஐரோப்பிய பத்திரிகைகளில் வெளிப்படையாக குற்றச்சாட்டுக்களைக் கூறல் உட்பட, அதன் கீழான பதட்டங்களின் திரும்பத் திரும்ப குறிகாட்டல்கள் அங்கே இருக்கின்றன.

பிரிட்டனின் ஒப்சேர்வர் பத்திரிகையில் இடம்பெற்ற மார்ச் 11ம் தேதி கட்டுரை மேற்கோள் காட்டிய, படைப்பிரிவு கொமாண்டருக்கான ஐரோப்பிய ரி என்பவர் பின்வருமாறு கூறுகிறார்: "ஸ்லோபோடன் மிலோசேவிக்கை தூக்கி வீசுவதற்கு வடிவமைக்கப்பட்ட தனியார் இராணுவத்துடன் சொசோவாவில் கலவரம் நடப்பதற்கு சிமிகி அனுமதி அளித்திருக்கிறது. இப்பொழுது அவர் போய்விட்டார். அமெரிக்க அரசாங்கத்துறையானது மாற்றானுக்குப் பிறந்த இராணுவத்தின் கடிவாளத்தைப் பிடித்திழுக்க திராணியற்று காணப்படுகிறது.... கடந்த ஆண்டில் பெரும்பாலும், மிதவாத அல்பேனியர்களைப் பொருத்தவரை அமெரிக்க ஆதரவுக்கு அதிருப்தி வளர்ந்து வருகிறது. அமெரிக்காவின் கொள்கை மற்றைய நேட்டோ கூட்டாளிகளுடன் ஒத்துப்போனதில்லை, இன்னும் ஒத்துப்போகவில்லை"

ஜூன்25 அன்று, மசடோனிய தலைநகர் ஸ்கோப்ஜிக்கு வெளியில் இருந்து நூற்றுக்கணக்கான அல்பானிய பிரிவினைவாத கொரில்லாக்களை வெளியேற்ற ஒருதலைப்பட்சமான முடிவை அமெரிக்கப் படைகள் எடுத்தன. அவர்கள் மசடோனிய இராணுவத்தால் வளைக்கப்பட்ட பிறகு, ஸ்கோப்ஜிக்கு வெளியே அரசினோவா கிராமத்திலிருந்து ழிலிகி வைச் சேர்ந்த துருப்புக்கள் 20 பேருந்துகளில் ஏற்றப்பட்டனர். அதற்கு 81 அமெரிக்க படைவீரர்களும் 16 ஆயுதம் தாங்கிய இராணுவ வண்டிகளும் பாதுகாப்புக் கொடுத்தன.

நான்கு நேட்டோ டிரக்குகள் பிரிவினைவாதிகளின் ஆயுதங்களை ஏற்றிச் செல்ல உதவின. அவை பின்னர் நேட்டோ கொமாண்டர் அமெரிக்க ஜெனரல் ரால்ஸ்டனால் மேற்கொள்ளப்பட்ட, ஜனாதிபதி புஷ், அவரது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கண்டோலீசா ரைஸ் மற்றும் பாதுகாப்பு செயலாளர் டொனால்ட் ரம்ஸ்பெல்ட் ஆகியோரால் அனுமதி அளிக்கப்பட்ட நடவடிக்கையில் பயன்படுத்துதற்கு கொரில்லாக்களிடம் திருப்பிக் கொடுக்கப்பட்டன.

ஜூன் 28 அன்று ஹம்பர்கர் ஆபண்ட் பிளாட் எனும் ஜேர்மன் நாளிதழ், மீட்பு நடவடிக்கை பற்றி செய்தி வெளியிட்டது, "பின்வாங்கும் கிளர்ச்சியாளர்கள் மத்தியில் 17 'பயிற்சியாளர்களும்' கூட--கிளர்ச்சியாளர்களுக்கு இராணுவ விஷயங்களைக் கற்பித்த முன்னாள் அமெரிக்க அதிகாரிகள்-- இருந்தனர். இதுவல்ல முழுவதும்: மசடோனிய பாதுகாப்பு வட்டாரங்கள் கொரில்லாக்களால் கொண்டு செல்லப்பட்ட இராணுவ சாதனங்களில் --மூன்றாம் தலைமுறை இரவுப் பார்வையாளர் எனப்படும் மிக நவீன வகை சாதனங்கள் உட்பட--- 70 சதவீதம் சாதனங்கள் அமெரிக்காவால் செய்யப்பட்டவை என்று தொடர்ந்தும் கூறி வந்தன."

ஜூலை முடிவில், பிரபல ஜேர்மன் வார இதழ் டேர் ஸ்பிகல் "அமெரிக்கன் இரட்டை வேடம்" என்று தலைப்பிடப்பட்ட கட்டுரையில், மசடோனியாவில் அல்பேனிய கிளர்ச்சியாளர்களுடனான அமெரிக்கத் தொடர்பை அம்பலப்படுத்தியது." அமெரிக்கா ஐயத்திற்கிடமான விரும்பத்தகாத வேலையைச் செய்கிற அதேவேளையில், ரிலிகி பிரதான வில்லன் ஆக இருக்கிறது" என்றது.

"ரிலிகி போராளிகள், கொசோவாவில் மிலோசெவிக் இன் படைவீரர்களுக்கு எதிராகப் பயன்படுத்துதற்காக அல்பானிய முகாம்களில் அமெரிக்க பிரிட்டிஷ் பயிற்றுநர்களால் உண்மையில் பயிற்றுவிக்கப்பட்டவர்களாவர். மிக முக்கிய பங்காளர்களை --ரிலிகி வை ஆணையிடும் கட்டமைப்பு, அவர்களுக்கு நிதி கொடுத்தவர்கள் மற்றும் ஆயுதம் அளித்தவர்கள், அதேபோல அல்பானிய உளவு ஸ்தாபனத்தை இணைக்கப்பட்ட அமைப்பாக கருதிய சிமிகி பற்றி ஒருவரும் அறியார்."

மசடோனியாவில் உள்ள ரிலிகி/ழிலிகி உடன் ஸ்கோப்ஜியில் உள்ள அரசாங்கத்தை நிர்ப்பந்தப்படுத்தும் பேச்சுடன், வாஷிங்டனானது அதன் பாத்திரம் பற்றிய விமர்சனத்தை திசை திருப்பும் பொருட்டு, அதனை சமநிலைப்படுத்தும் நிர்ப்பந்தத்திற்கு ஆளானது. டேர் ஸ்பிகல் வார இதழில் இடம்பெற்றது போன்ற செய்திகள் லண்டன் சண்டே டைம்ஸில் அதிகமாக இடம் பெற்றன.

ஆகஸ்ட் 10 அன்று , பிரிஸ்டினாவில் உள்ள அமெரிக்க பொதுவிவகார அலுவலகம் ஐரோப்பாவில் உள்ள பத்திரிகைகளை கருத்தில் கொண்டு கடும் வார்த்தைகளுடன் அறிக்கை வெளியிட்டது. அவை "மாசிடோனியாவில் (ஹிசிரி) தேசியவிடுதலை இராணுவம் என்று அழைக்கப்படுவதற்கு அமெரிக்க ஆதரவு தருவதாக தவறான அறிக்கைகளை பரப்புகின்றன. தவறான தகவல்களைப் பரப்புவது மசடோனிய கட்சிகள் ஆகஸ்ட் 8 அன்று கையொப்பம் இட உள்ள உடன்பாட்டை நடைமுறைப்படுத்துதற்கான சூழலை மீளக் கொண்டுவருதலைக் கடினமாக்குகிறது.

"குறிப்பாக, நாங்கள் டேர் ஸ்பிகல் மற்றும் சண்டே டைம்ஸில் வெளியிடப்பட்ட அப்பட்டமான தகவல்கள் உள்ளூர் பத்திரிகைகளில் ருசுப்படுத்தல் அல்லது ஆதாரம் இல்லாமல் திரும்ப பிரசுரிக்கப்பட்டது பற்றி கவலைப்படுகிறோம். பொறுப்பற்ற மற்றும் ஆத்திரமூட்டும் அறிக்கைகள் அமைதி தீர்வுக்கு ஆதரவளிக்கும் சர்வதேச சமுகத்தின் உண்மையான முயற்சிகளை கீழறுக்கும் ."

பிரிட்டன் 1000 துருப்புக்களை அனுப்பவிருக்கின்ற போதிலும், பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகியன குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் படைவீரர்களை அனுப்ப இருக்கின்றன. அவை அமெரிக்காவானது பொஸ்னியாவிலும் கொசோவாவிலும் செய்தது போன்று சம்பவங்களை நடத்த ஆணையிடும் நிலையில் இல்லலாதிருக்கும் நிலையை உறுதிப்படுத்த ஆர்வத்துடன் உள்ளன.

அட்லாண்டிக்கிற்கு குறுக்கே வெளிப்படையாக மறைக்கப்பட்ட பதட்டங்களை வலியுறுத்தும் வண்ணம், பிரிட்டனின் கன்சர்வேட்டிவ் எதிர்க்கட்சி நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்று கேள்வி கேட்டது. ஆங்கிலோ- அமெரிக்கன் அச்சின் கடும் ஆதரவாளரான டோரிகள், மசடோனியாவில் ஐரோப்பிய முன்முயற்சியின் அடிப்படை ரீதியானது பற்றி அமெரிக்கா வேண்டா வெறுப்பாக நடந்துகொள்ளும் என்றனர். நிழல் பாதுகாப்பு செயலாளர் அயைன் டுன்கான் ஸ்மித் (மிணீவீஸீ ஞிuஸீநீணீஸீ ஷினீவீtலீ) "பிரிட்டீஷ் துருப்புக்கள் எந்நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற சூழ்நிலைமைகளில் அனுப்பப்படுவது" பற்றி தனது அவநம்பிக்கையை குறிப்பிடுகிற அதேவேளை, கட்சியின் பத்திரிகைக் குறிப்பு அதன் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வண்ணம், "அமெரிக்காவானது ஆரம்பநிலையில் துருப்புக்களை அனுப்புவது பற்றி ஐயுறவு உணர்ச்சியைக் கொண்டிருந்தது" என்றது.

இறுதி ஆய்வில், பால்கன்களில் மேற்கத்திய வல்லரசுகளின் சூழ்ச்சிகள் எதிர் சூழ்ச்சிகள் எளிதில் கட்டுப்படுத்த முடியாத சுருள்வில் போன்ற நிலைமைகளை உருவாக்கி உள்ளன. மசடோனியாவில் அல்பேனிய தேசியவாதிகளின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவால் எந்த அளவுக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும், தேசிய குரோதங்களை மென்மேலும் ஊக்கிவிடல் அதன் சொந்த தர்க்கத்தைக் கொண்டிருக்கும். உருவரை உடன்பாட்டை மேற்கத்திய ஆதரவுடன் பிழிந்தெடுக்கப்டட சலுகை என்று சரியாகக் கருதும் பிரிவினைவாதிகள், அதனை அகன்ற அல்பேனியாவை சாதிப்பதற்கான ஒரு அடியாக கருதுவர்.

உடன்பாடு கையெழுத்திடப்பட்டதன் பின்னர் சண்டை தணியாது தொடர்ந்து வருகின்றது. உருவரை உடன்பாட்டிற்கு பிரதான கிளர்ச்சிப்படைகள் ஆதரவை அளித்த போதிலும், பிளவு படுத்திக்கொண்டு தன்னை அல்பேனிய தேசிய இராணுவம் என்று அழைத்துக்கொள்ளும் குழுவானது "நாம் அல்பானிய தேசங்களின் முழுவிடுதலையையும் சாதிக்கும் வரை" அதன் முயற்சிகளைத் தொடருவோம் எனக்குறிப்பிட்டது. ழிலிகி வின் கொரில்லா யுத்தமானது பெரும்பான்மை மசடோனிய ஸ்லாவ் மக்களுக்கும் சிறுபான்மை அல்பானிய மக்களுக்கும் இடையில் குரோதங்களை ஆழப்படுத்தி உள்ளது. அல்பானிய சிறுபான்மையினரை ஒடுக்குவதற்காக மசடோனிய இனவாதிகள் இந்தக் குரோதங்களை ஏற்கனவே ஊக்கிவிட்டு வருகின்றனர்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved