World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள்: பூகோள சமத்துவமின்மை

World Bank admits 85 percent of world's population has no retirement income

உலக மக்கள் தொகையில் 85% பேருக்குஓய்வு ஊதிய வருமானம் இல்லை என்பதைஉலக வங்கி ஒப்புக் கொள்கிறது

By Jean Shaoul
18 July 2001

Back to screen version

உலக வங்கியால் அண்மையில் வெளியிடப்பட்ட புத்தகமான வயதானோர் பாதுகாப்பு பற்றிய புதிய கருத்துக்களின் படி 65 வயதுக்கும் மேற்பட்டோருள் ஓய்பெற்ற பின்னர் வருமானம் ஏதும் பெறுவார்களாயின், உலக மக்கள் தொகையில் 15 சதவீதத்திற்கும் குறைவானவர்களே தற்போது பெறுகின்றனர்.

சமூக இன்சூரன்ஸ் மற்றும் அரசாங்க நிதியூட்டப்படும் ஓய்வூதியத் திட்டங்கள் மீதான உலக ரீதியான தாக்குதல்கள், அவர்கள் ஓய்வு பெறும்போது எந்த முன்னேற்றகரமான ஆதரவும் பெற முடியாத நிலையில் பலலட்சக்கணக்கான உழைக்கும் மக்களை கைவிட்டுள்ளது.

இந்த வகையில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகள் இலத்தின் அமெரிக்காவிலும் முன்னாள் சோவியத் ஒன்றியத்திலும் இருக்கின்றன. ஆனால் இதன் தாக்கத்தை வளர்ச்சி அடைந்த நாடுகளில் கூட உணரத் தொடங்கி உள்ளனர். தங்களின் கடைசிக்கால வாழ்க்கையில் அச்சுறுத்தும் வறுமை மற்றும் தனிமைப்படலை எதிர்நோக்கும் வயதானோருக்கு இது சமூகப் பேரழிவுகளை உருவாக்கி உள்ளது.

இப் புத்தகமானது 1994க்குப் பின்னர், உலக வங்கி வயதானோர் நெருக்கடியைத் தடுத்தல் எனத் தவறாகப் பெயிரிடப்பட்ட அதனுடைய அறிக்கையில் ஓய்வூதிய சீர்திருத்தங்களுக்கான கொள்கைகளை அமைத்துக்கொடுத்த பொழுது, அனைத்துவிதமான அரசியல் வண்ணங்களையும் கொண்ட அரசாங்கங்கள் தனியார் ஓய்வூதியங்கள் மற்றும் தனியாரால் நிதியூட்டப்படும் திட்டங்களுக்கு இடம்பெயர்ந்த பின்னர், என்ன நடந்தது என்பதைப் பற்றி ஆய்வு செய்கின்றது.

இதன் ஆசிரியர்களான உலக வங்கியின் ஓய்வூதிய நிபுணர், ஆஸ்திரிய பேராசிரியர் றொபேர்ட் ஹோல்மான் மற்றும் அதன் முன்னாளைய தலைமைப் பொருளியலாளர் ஸ்டிக்லிஸ்ட் ஆகியோர், ஒப்பீட்டளவில் குறுகியகாலத்தில் ஓய்வூதியத் திட்டம் குறிப்பிடத்தக்க அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது என்ற உண்மையை மறைக்க முடியவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்னால்தான், பேராசிரியர் ஹோல்மான் 2000 ஆண்டில் 65 வயதும் அதற்கு மேலுமான மக்கள் தொகையில் 20 சதவீதம் பேர்கள் மற்றும் 15-64 வயதுக்கு இடையில் உள்ள 30 சதவீதத்திற்கும் கீழானோர் சிலவகை மேலோட்டமான ஓய்வூதிய திட்டத்தைப் பெறுவர் என்று கூறினார்.

ஓய்வு ஊதிய சீர்திருத்தங்கள் என்று அழைக்கப்படுபவை உலக வங்கியின் சொந்த பொருளாதார மற்றும் நிதிரீதியான இலக்குகளான தனியார் சேமிப்பைக் கூட்டலைச் செய்யவில்லை என்பதையும் கூட அந்த ஆசிரியர்கள் உறுதிப்படுத்துகின்றனர். மிகத் தற்பெருமையாகக் குறிப்பிடப்பட்ட சந்தையின் திறம் என்பது பொருந்தாக் கற்பனையாகப் போனது. தனியார் ஓய்வூதியத் திட்டங்களை நிர்வகிக்கும் செலவு பொலிவியாவில் மொத்தப் பங்களிப்பில் 6சதவீதம் தொடங்கி, ஆர்ஜெண்டினாவில் மிக அதிகமாக 23 சதவீதமாக ஆகின்றது, இது அரசாங்க பொது திட்டங்களை குறைந்த செலவில் நிர்வகிப்பதுடன் கடும் வேறுபாட்டைக் கொண்டிருக்கிறது. இங்கிலாந்தில், முற்றிலும் பொருத்தமற்ற தனியார் ஓய்வூதிய உற்பத்திப் பொருட்களை விற்றல் மற்றும் ஊழல் மற்றும் மோசடிகளைத் தடுப்பதற்கான ஒழுங்குமுறைப்படுத்தலின் இயலாமை ஆகியன தனியார் ஓய்வு ஊதிய தொழிற்துறையை அவப்பெயர் அடையச் செய்துள்ளன. அரசாங்கம் அரசாங்க ஓய்வூதியங்களை அகற்றினால், தனியார் ஓய்வூதியத் திட்டங்களைக் கட்டுப்படுத்தும் உரிமைக் கட்டளைகளை அரசாங்கம் வகுத்துக்கொடுக்க வேண்டியது அதற்கு தேவைப்படும் என்பது பரந்த அளவில் உணரப்படுகிறது. ஆனால் ஆசிரியர்கள் இதனையாரையும் பிறழச்செய்துவிடாத குறுகியகால இயல்நிகழ்ச்சி என்று வலியுறுத்திச் செல்கின்றனர்.

1985ல் சர்வதேச நாணய நிதியம் மற்றும் 1998ல் பொருளாதார அபிவிருத்திக்கான அமைப்பு (OECD) இவற்றால் செய்யப்பட்ட முன்மொழிவுகளைத் தொடர்ந்து, எந்தக் கடனுதவிகளும் ஓய்வூதிய சீர்திருத்தங்களின் நிபந்தனைகளின் அடிப்படையில் செய்யப்படவேண்டும் என்று இரு அமைப்புகளும் வலியுறுத்தின. இதன் மூலம் உலக வங்கி அர்த்தப்படுத்துவது 1981ல் பினோசே இன் கீழ் முன்னோடியாகக் காட்டப்பட்ட அந்தவகையிலான "சீர்திருத்தங்கள்" ஆகும். தொழில்துறை நாடுகள் மற்றும் சில கிழக்கு ஆசிய நாடுகளில் ஓய்வு ஊதிய வருமானத்திற்கு அடிப்படையாய் இருக்கும் சமூகப்பதுகாப்பு நிதிகளின் மேல் கைவப்பதில் சர்வதேசநிதி மூலதனம் உறுதியாய் இருப்பதுடன் அதனை மூலதனச் சந்தைகளுக்குள் வழிப்படுத்தவும் உறதியாய் உள்ளது.

உலக வங்கி, மக்கள் தங்களது உழைக்கும் வாழ்க்கையை நீட்டிக்க கட்டாயம் ஊக்கப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூட நம்புகின்றது. உலகரீதியாக 64 டிரில்லியன டொலர்கள் என்று மதிப்படப்பட்டுள்ள வயது வந்தோருக்கான மருத்துவ சேவை மற்றும் ஓய்வூதியங்களைச் சந்திக்க, "தகுந்த வயதுக்கு முன்னரே ஓய்வுபெறலை ஊக்கப்படுத்தாது இருத்தல் மூலமும் சமூகப்பாதுகாப்பு திட்டங்கள் முழுவதுமாய் நிதியூட்டப்படுவதன் மூலமும் பற்றாக்குறை சேமிப்புக்களின் அச்சுறுத்தலைக் குறைக்க நிறுவன கட்டமைப்பை தொழில்துறை நாடுகள் உருவாக்க வேண்டிய தேவை உள்ளது" என்று அது கூறுகிறது. (உத்தியோகபூர்வ பதங்களில், ஓய்வு பெற்றோருக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் திட்டங்கள் தற்போது உழைத்துக் கொண்டிருக்கும் உழைப்பாளர்களின் பங்களிப்பில் இருந்து செலுத்தப்படுவது தவறுதலாக "நிதியூட்டப்படாத திட்டங்கள்" எனப்படுகிறது, அரசாங்கத்தினதாக இருப்பினும் தனியாருடையதாக இருப்பினும், பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டதிலிருந்து கிடைக்கும் இலாபங்களில் இருந்து செலுத்தப்படுபவை "நிதியூட்டப்பட்ட" திட்டங்கள் எனப்படுகிறது)

பொதுவான வரிவிதிப்பு மற்றும் அல்லது தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் இவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட சமூக இன்சூரன்ஸ் பங்களிப்பு இவற்றின் அடிப்படையிலான அரசாங்க நிதியூட்டப்பட்ட ஓய்வூதியத் திட்டங்களில் இருந்து, பங்கு முதல் சந்தையில் முதலீடு செய்யப்பட்ட தனியார் ஓய்வூதியத் திட்டங்களுக்கு இடம்பெயருமாறு உலக வங்கி கோரியது. அரசாங்க ஓய்வூதியத் திட்டங்களாக உள்ள இடங்களில், அவை "வரையறுக்கப்ப்ட பங்களிப்பு" திட்டங்கள் ஆக மாற்றப்படும், இதனால் ஓய்வூதிய வருமானம் தனிப்பட்ட நபர்களால் அளிக்கப்பட்ட பங்களிப்புக்களின் மட்டத்தைப் பொறுத்து, பெறுகின்றதை உரிமை உள்ளதாக்கும். அதன் இலக்கு அரசாங்கத்தால் முன்னேற்பாடாக ஒதுக்கப்படும் தொகையின் குறைந்துசெல்லும் மட்டங்கள் மற்றும் அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் திட்டத்திற்கோ அல்லது தனியாரால் நிருவகிக்கப்படும் திட்டத்திற்கோ தனிநபர்களின் பங்களிப்பினூடாக நேரடியாக நிதியூட்டப்படும் அதிகரிக்கின்ற பகுதி என இரண்டு அடுக்கு உரிமைக்கட்டளைத் திட்டமாகும். இதன்படி நடைமுறையில், ஒவ்வொருவரும் அவரது சொந்த தனிப்பட்ட "பணிஓய்வு கணக்கை" கொண்டிருப்பர், பின்னர் அது பங்கு முதல் சந்தையில் கூட்டாக முதலீடுசெய்யப்படும்.

அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஜேர்மனி மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகள் உலகவங்கியின் கொள்கைகளின் சில அம்சங்களைத் தழுவியுள்ளன. ஓய்வூதியங்கள் பெரும்பாலும் அரசின் வரவு-செலவு திட்ட செலவினங்களில் மிகப்பெரிய தனித்த கூறாக உள்ளது. மிக அண்மைய உலகவங்கி குறிகாட்டிகள் அறிக்கை, தொழிலாளர்களாலும் பணியாளர்களாலும் செலுத்தப்பட்டு அவர்களுக்காக வழங்கப்பட்ட அரசாங்க நிதியூட்டப்பட்ட ஓய்வூதியங்கள் மேற்கில் 10 சதவீதமாக இருந்த போதிலும், ஆஸ்திரியா, போலந்து மற்றும் இத்தாலியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதம் ஆகும். முன்னாள் சோவியத் ஒன்றியத்தைக் கொண்ட நாடுகளில் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 5சதவீதம் ஆகும், உலகின் ஏழைநாடுகள் பலவற்றில் செல்வந்த தட்டு மற்றும் ஒரு சில அரசாங்க உயர் அதிகாரிகளைத்தவிர ஓய்வூதிய அளிப்பு இல்ல.

இலத்தின் அமெரிக்காவிலும் முன்னாள் சோவியத் ஒன்றியத்திலும் உலகவங்கி அரசாங்கத்துறையின் கடனுதவித் திட்டத்தின் கீழ், கடன் வழங்குதலை தனியார்மயமாக்குதலுடனும் ஓய்வூதிய சீர்திருத்தங்களுடனும் இணைத்துள்ளது.

நல்ல ஓய்வூதியம் இல்லை என்றதன் அர்த்தம் தொழிலாளர்கள் ஓய்வுபெறும்போது, அவர்கள் தங்களது அற்ப ஓய்வூதியத்துடன் அவர்களால் என்னவேலை செய்யமுடியுமோ அதையும் கூடுதலாகக் கொடுக்க வேண்டிஉள்ளது. இவ்வாறு ஓய்வூதிய "சீர்திருத்தங்கள்" மலிவான மற்றும் அனுபவம் வாய்ந்த கூடுதல் உழைப்பின் சேர்மத்தை உண்டுபண்ணியுள்ளது. வயதான சமூகத்தில் முன்னேற்றத்தைப் பராமரித்தல் என்ற OECD யின் புத்தகம், "முன்னேற்றத்தைப் பராமரித்தலுக்கான மூலோபாயத்தின் முக்கியமான பகுதி, நிதி ரீதியாக அவர்களை மிகவும் ஈர்க்கும் வண்ணம் வேலை செய்ய வைப்பதன் மூலம் மக்களை நீண்டகாலம் வேலைசெய்வதற்கு ஊக்கப்படுத்தலுடன் சம்பந்தப்படடுள்ளது" என்று வெளிப்படையாக விளக்குகிறது.

OECD கூறுகின்றவாறு தனியார் ஓய்வு ஊதியங்கள் பெரும் வர்த்தகர்களுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் இலாபத்துக்கான புதிய ஊற்றுமூலத்தையும் கூட வழங்குகின்றன: "இதன் விளைவாக நிதிச் சந்தை கட்டமைப்புகள் தனியார் ஓய்வூதிய நிதி சொத்துக்களில் அதிகரிப்புக்கு பொருந்துமாறு பலப்படுத்தப்படவேண்டும். "பங்கு முதல் சந்தைக்கு பெருமளவுநிதிகள் மாற்றப்படுவது அதன் ஓயாதுமாறுகின்ற தன்மையினைக் கூட்டுவதுடன் ஊகவாணிகத்தை உக்கிரப்படுத்தும். இங்கிலாந்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகள் ஓய்வூதிய நிதியாலும் காப்பீட்டுக் கழக நிறுவனங்களாலும் வைக்கப்பட்டிருக்கின்றன. 1960களின் நடுப்பகுதியில் இங்கிலாந்து ஓய்வூதிய நிதி பங்குகளை சராசரியாக 23 ஆண்டுகளாக வைத்திருந்தன, இப்பொழுது அவை அவற்றை என்றுமில்லா அளவு அதிகப்படியான வருவாய்க்காக 18 மாதங்களுக்கு மட்டுமே வைத்திருக்கின்றன. 1997ல் சிலி மற்றும் மலேசியாவின் பொருளாதாரங்கள் சீர்குலைந்த பொழுது சிலி மற்றும் மலேசிய ஓய்வூதியம் பெறுவோர் தங்களைப் பலியிட்டவாறு, தனியார் ஓய்வூதியங்கள் ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் வருமானமாக ஆவது பங்கு முதல் சந்தையின் உறுதியிலாத்தன்மையைச் சார்ந்துள்ளதுடன் மட்டும் அல்லாமல், அது உழைக்கும் மக்களின் சுரண்டும் வீதத்தை பெரிய அளவில் அதிகரிப்பதற்கும் கூட வழிவகுத்துள்ளது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved