World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : இந்தோனேசியா

A warning sign of a resurgent rightwing

Indonesian police and thugs break up anti-globalisation conference

வலதுசாரிகளின் மறுதோற்றத்திற்கான ஓர் அபாய அறிகுறி:

இந்தோனேசிய பொலிசாரும் குண்டர்களும் பூகோளமயமாக்கலுக்கு எதிரான மாநாட்டை சிதறடித்தனர்.

By Peter Symonds
14 June 2001.

Back to screen version

கடந்த வாரம் ஜக்காட்டா (Jakarta) வில் நடந்த பூகோளமயமாக்கலுக்கு எதிரான மாநாட்டில் பொலிசாரின் தேடுதல் வேட்டை ஜனநாயக உரிமைகளில் மேல் ஆத்திரமூட்டகூடிய தாக்குதலாகும். இது இந்தோனேசிய அரசியல் நிலையில் ஓர் பயங்கரமான புதிய திருப்பத்தினை குறிக்கின்றது.

சர்வதேச ரீதியில் பங்குகொண்ட 32பேர் உட்பட முக்கிய அமைப்பாளர்களும் உள்ளடங்கலாக நாற்பது பேர் கைது செய்யப்பட்டவேளை, பலமாக ஆயுதம் தாங்கிய டசின் கணக்கான பொலிசார் யூன் 8ம் திகதி தலைநகரத்தில் வெளிப்புறத்தில் உள்ள Sawangan Golf inn இல் 100 பேர் கலந்து கொண்ட கூட்டத்தை கலைத்தனர். பொலிசாருடன் சேர்ந்து வாள்களாலும் தடிகளாலும் ஆயுதபாணியாக்கப்பட்ட இஸ்லாமிய குண்டர்களின் குழுவால் தாக்கப்பட்டதன் விளைவாக குறைந்து ஏழு இந்தோனேசியர்கள் காயப்பட்டதுடன், இதில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனது அரசியல் எதிர்ப்பாளர்களை பயமுறுத்தவும் துன்புறுத்தவும் சுகாட்டோ கையாண்ட (Suhato) பொலிஸ்- அரசின் சர்வதிகாரத்தின் முறைக்கு திரும்புவதாக இத் தாக்குதல்கள் எடுத்துக்காட்டுகின்றன. ஓர் பகுதி இந்தோனேசிய பத்திரிகைகள் இதனை விமர்சித்த அதேவேளை அமைப்பாளர்களோ அல்லது பங்கு கொண்டவர்களோ பிழை எதுவும் செய்தார்களென அதிகாரிகளால் எதுவித சாட்சிகளும் கண்டுபிடிக்காமல் இருந்தும் கூட ஜனாதிபதி அப்துல்ராமன் வாகீட் (Abdulraman Wahid) உம், உதவி ஜனாதிபதி மேகாவதி சுகானோபுத்திரி (Megawati Suharnoputri) பொலிசாரின் செயல்கள் சம்பந்தமாக எதுவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

யூன் 8ம் திகதி, இடது மக்கள் ஜனநாயக கட்சி (Letftist Democratic party) தலைவரான Budiman Sudjatmiko உட்பட அமைப்பாளர்களும் விடுதலை செய்யப்பட்டனர். அடுத்த நாள் பொலிஸ் பாதுகாவலில் வைக்கப்பட்ட நான்கு வயது குழந்தை உட்பட சர்வதேசரீதியில் கலந்துகொண்டவர்களும் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் பொலிசார் இவர்களுடைய கடவுச் சீட்டுக்களை கைப்பற்றியதுடன் இவர்களை குடிவரவு அதிகாரிளுடனும், பொலிசாருடனும் திங்கட்கிழமை நேரடி விசாரணைக்கு சமூகமளிக்குமாறு வேண்டப்பட்டனர்.

பொலிசாரின் பிரதிநிதியான உயர் அதிகாரி Anton Bachrul Alam, மாநாட்டிற்கு வருகைதந்த வெளிநாட்டவர்கள் தங்களுடைய சுற்றுலா விசாக்களை துஸ்பிரயோகம் செய்த காரணத்தால் பாதுகாவலில் வைத்திருக்கிறோம் என குறிப்பிட்டார். இந்தோனேசிய குடிவரவு சட்டத்தின் ஓர் பகுதியை குறிப்பிட்டுக் காட்டுகையில் சட்டத்தை மீறியவர்கள் நாட்டை விட்டு திருப்பி அனுப்பப்படுவார்கள் இல்லையேல் நீதிமன்றத்தில் 25 மில்லியன் Rupiah ($2,232) அபராதமும், கூடியது ஐந்து வருட சிறைத்தண்டணைக்கு ஆளாகலாமென எச்சரித்தார்.

ஆனால் மாநாட்டை குறி வைத்ததற்கான தீர்மானம் அரசியல் ரீதியானதென்பது தெளிவானதாகும். ஆறு மாதத்திற்கு மேலாக மாநாட்டை விளம்பரப்படுத்தியிருந்தும் கூட இதற்கு வருகை தந்தவர்களையோ, மாநாட்டு அமைப்பாளர்களையோ சட்டத்தை மீறினால் கைது செய்யப்படுவார்களென பொலிசார் எச்சரிக்கவில்லை. மேலும் இச் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் தன்மை, உயர் குடிவரவு அதிகாரியான Mursanuddin Gani தனது தினைக்களத்திற்கு இத் தேடுதல் வேட்டை சம்பந்தமாகவோ குற்றம்சாட்டப்பட்ட குடிவரவு அத்து மீறியது சம்பந்தமாகவோ முன்பு தெரியாது கூறியதன் மூலம் தெளிவாகின்றது.

ஜக்காட்டா போஸ்ட் (Jakarta Post) என்ற பத்திரிகைக்கு Gani கூறுகையில் "பொலிஸ் எங்களுடைய அலுவலகத்திற்கு தேடுதல் நடத்துவதற்கு முன்னர் தொடர்பு கொண்டிருக்கலாம், ஆனால் எனக்கு தெரிந்த மட்டத்தில் எந்தவித அறிவித்தல்களும் இல்லை. நாங்கள் பல தொடர் கூட்டு நடவடிக்கைகளை குடிவரவுச் சட்டங்களை அத்துமீறும் வெளிநாட்டவர்கள் என நம்பப்படுபவர்களை குறிவைத்து நடவடிக்கை எடுத்திருக்கிறோம், ஆனால் இந்தச் சந்தர்ப்பத்தில் அப்படி செய்யவில்லை". அவர் மேலும் குறிப்பிட்டு காட்டுகையில் இந்தோனேசியாவிற்கு வருகை தரும் விருந்தாளிகள் இப்படியான மாநாடுகள் போன்ற விசேடமான நிகழ்ச்சிகளுக்கு பிரத்தியோகமான விசாக்கள் எடுக்க தேவையில்லை ஆனால் சாதாரண சுற்றுலாவிற்காக வந்தடையும் போது கொடுக்கப்படும் விசாவை பிரயோசனப்படுத்தலாம்.

 

ஓர் விதிவிலக்குடன் சகல வெளிநாட்டிலிருந்து வந்து பங்கெடுத்தவர்களின் கடவுச் சீட்டுக்கள் திருப்பி கையளிக்கப்பட்டதுடன் அவர்களின் விருப்பப்படி இந்தோனேசியாவில் நிற்கலாம் இல்லையேல் வெளியேறலாம் என கூறப்பட்டது. அநேகமான சர்வதேச ரீதியாக கலந்துகொண்டவர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து வந்தவர்கள், கணிசமானவர்கள் Democratic Socialist Party போன்ற தீவிரவாத அமைப்புகளில் இருந்து வந்தவர்கள், இவர்கள்தான் PRD (மக்கள் ஜனநாயக கட்சி) உடன் நெருங்கிய உறவு வைத்திருப்பவர்களாவர். ஏனையவர்கள் நியூசிலாந்து, ஜப்பான், அமெரிக்கா, பெல்ஜியம், கனடா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உடன் தாய்லாந்தும், பிரான்சு ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரான Pierre Rousset உட்பட எழுத்தாளரான Eric Toussaint வருகை தந்திருந்தனர்.

ஒர் பகுதி நடுத்தர வர்க்கமும்,சிறிய ஆளும் வர்க்கத்திடையேயும் அதாவது சுக்காட்டோவின் சர்வாதிகார முறை திரும்பவும் வருவதற்கான கருத்துகள் பிரதிபலித்ததுடன், ஜக்காட்டாவில் மனித உரிமைகள் குழுக்களிடமும், பத்திரிகைகளிடமும் இந்த பொலிசாரின் தேடுதல் வேட்டையை கூர்மையான எதிர்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ஜக்காட்டா போஸ்ட் தனது ஆசிரியர் தலையங்கத்தில் "ஜனநாயகத்திற்கு ஆபத்து" என சுகாட்டோவின் இராணுவ ஆட்சிக்கு சமாந்தரமாக்கியது. அது மேலும் ''கடந்த மூன்று வருடங்களாக இந்த நாடு நிலை நிறுத்த போராடியதும், அர்ப்பணிப்புகளுடன் கூடிய போராட்டங்களினது ஒவ்வொரு பெறுமதியையும் கொள்கைகளையும், பொலிசாரும் இவர்களுடைய நண்பர்களான குண்டர்களும் முழுமையாகவே அலட்சியம் செய்துள்ளார்கள். இந்த நாடு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் தனது சொந்த அமைப்பு நாட்டினுடைய சட்டத்தையும், அரசியல் அமைப்புகளையும் உடைப்பதை கண்மூடிப்பார்த்திருக்குமானால், அந்த நாள் இந்த நாடு ஜனநாயகத்திடமிருந்து விடைபெறுவதற்கான வாழ்த்து கூறும் நாளாகும்" என குறிப்பிட்டது.

அவுஸ்ரேலியா, சுகாட்டோ யுந்தாவுடன் மூன்று சகாப்தத்திற்கு மேலாக நெருங்கிய உறவு வைத்திருந்ததால், அதன் வெளிநாட்டு வர்த்தக, தொடர்பு திணைக்களத்தின் சுபாவமான பிரதிபலிப்பு, இந்தோனேசிய பொலிசாருடனும், அவர்களின் இந்தோனேசிய குடிவரவு சட்டங்கள்களை அத்துமீறுவதன் அபாயங்களை எச்சரிப்பதாக பக்கம் சேர்ந்து கொண்டது. ஜக்காட்டாவில் உள்ள அவுஸ்ரேலிய தூதரகம் சில நாட்கள் கழித்தே சம்பிரதாயப்படி, சம்பவத்தை பற்றி எதிர்ப்புகாட்டியது.

ஆனால் இந்தோனேசியாவில் உள்ளதுபோல, அவுஸ்திரேலியாவிலும் கூட இது ஆளும் வட்டங்களிடையே தாக்கங்களை உருவாக்கியுள்ளது. "நாம் ஜக்காட்டோ மேல் பரிவு காட்டுவது சுதந்திரத்தை உறைய வைக்கும் முன் எச்சரிக்கை என, Sydney Morning Herald எச்சரித்ததுடன், அது மேலும் "உதவி ஜனாதிபதி மேகாவதி சுக்கானோபுத்திரி ஆட்சிக்கு தள்ளப்படுவதன் பின்னால் சுக்காட்டோ காலத்து சக்திகள் திரும்ப சேர்வது இந்தோனேசியாவின் வழமையான ஒன்றானதாக இலகுவில் வரலாம் என்ற கருத்தினை உள்ள கெடுபிடியான உதாரணங்களுள் ஓர் தொகையான அவுஸ்திரேலியர்கள் அகப்பட்டுள்ளனர்" என குறிப்பிட்டது.

கம்யூனிச எதிர்ப்பின் மறு எழுச்சி

கடந்த கிழமை தேடுதல் வேட்டை குறிப்பாக ஆத்திரமூட்டும் அதே வேளை கடந்த வருடங்களுக்கு மேலாக கம்யூனிசத்தை எதிர்க்கும் சுகாட்டோவின் கோல்க்கார் கட்சி (Golkar Party) யுடன் தொடர்புள்ள குழுக்களும், இராணுவம், பொலிசாரும், வலதுசாரி இஸ்லாமிய நிறுவனங்கள் போன்றவற்றின் வளர்ச்சியின் அறிகுறியை காணக்கூடியதாகவுள்ளது. 1990 களில் சுகாட்டோவிற்கு எதிரான போராட்டத்தில் தீவிரமடைந்த மாணவர்களிடையே கவர்ந்த சக்தி வாய்ந்த ஆனால் சிறிய குழுவான மக்கள் ஜனநாயக கட்சி, முக்கிய இலக்காக அமைந்துள்ளது.

ஜக்காட்டா போஸ்ட் என்ற பத்திரிகைக்கு, பொலிஸ் அதிகாரியான Anton Bachml Alam ஒப்புக்கொண்டது என்னவெனில் மக்கள் ஜனநாயக கட்சியின் பங்கெடுப்பு இருந்தபடியாலேயே மாநாட்டில் தேடுதல் வேட்டை நடாத்தப்பட்டது. அவர் குற்றம் சாட்டியதாவது, மக்கள் ஜனநாயக கட்சி தலைவரான Budiman இந்தோனேசிய மக்கள் ஆலோசனை சபையால், ஆகஸ்ட் 1 இல் நடக்கவிருக்கும் வாகிட்டை அகற்றும், மற்றம் அவரின் குற்றச் சாட்டுக்களை விசாரிக்கவிருக்கும் கூட்டத்தை குழப்புவதற்கு திட்டமிட்டுள்ளார் என்றார். மேலும் அவர் ''நாங்கள் Buddiman ஜ நீண்ட நாட்களாக பின்பற்றி வருகிறோம். எங்களிடம் தகவல்கள் உள்ளன. அதாவது அவர் இந்த விசேட கூட்டத்தை குழப்புவதால் ஜக்கட்டாவில் ஓர் கலவரத்தை உருவாக்க திட்டமிட்டிருந்தாக'' குறிப்பிட்டார்.

ஜக்கட்டா போஸ்ட் தனது ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிடுகையில் "பொலிசாருடைய விளக்கங்கள் சகலதுமே யார் சுக்காட்டோவின் காலத்தினூடாக வாழ்ந்தவர்களோ அவர்களுக்கு, மிகவும் பழக்கப்பட்டவை. அப்போதும் சரி, இப்போது போலவே ஏன் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படலாம் இல்லை நசுக்கப்படலாம் என்பதற்கு ஏதாவது மேலெழுந்தவாரியான காரணங்களை பாதுகாப்பு படையினர் வைத்திருந்தனர். மக்கள் ஜனநாயக கட்சியின் மாநாட்டிற்கு எதிராக அற்பமான காரணங்களுடன் செயல்படலாம் என பொலிசாரும், இவர்களின் பின்னால் இராணுவத்தினருக்கும் உள்ள துணிவே அரசியல் நிலைமையில் ஒர் மாற்றத்தை குறிக்கின்றது.

மே 1998 இல் சுகாட்டோவை வெளியேற்றியதன் பின் உடனேயே இராணுவமும், அரசின் பிரிவுகளும் தங்களுக்கான பாதுகாப்பை ஏற்படுத்தி கொண்டன. இரவிலேயே அதிகாரிகள், அரச சர்வாதிகாரிகளும் கோல்கர் எதிர்ப்பாளர்களும் தங்களுடைய அரசியல் குறிகளை விட்டு மாற்றும்படி தள்ளப்பட்டதுடன் தங்களை சீர்திருத்தத்தினதும், ஜனநாயகத்தினதும் சார்பானவர்கள் என சொல்லிக்கொண்டனர். இவர்கள் இப்படி கூறக்கூடியதாக இருந்தமைக்கான காரணம் கூடியளவில் "ஜனநாயகவாதிகள்" ஆகிய வாகிட்டிடமும், மேகாவதியிடமும் தங்கியிருந்ததாகும். இவர்கள் சுகாட்டோவின் ஆட்சியின் கீழும் கூட மிகவும் நெருங்கிய தொடர்புகள் இராணுவத்துடன் வைத்திருந்தும், தங்களுடைய அதிகாரத்தை மீறும் சக்திகளின் முக்கியமான சவால்களை எதிர்த்தனர்.

கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக இராணுவமும், கோல்க்கா் கட்சியும் தங்களுடைய கடந்த பாதைகளில் பிடுங்குப்பட்டுக்கொண்டார். 1999 தேசிய தேர்தலைத் தொடர்ந்து இவர்கள் வெளிப்படையாகவே ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட கூடிய தகைமையில் இல்லாதிருந்ததுடன், தங்களுடைய பிரதிநிதிகளின் எண்ணிக்கைகளை இந்தோனேசிய மக்கள் சபையில் (MPR) வாகிட்டிற்குப் பின் நின்று மேகாவதிக்கு எதிரான வெற்றியை உறுதி செய்தனர். இவர்களுடைய தெரிவு ஆளும் வட்டங்களிடையே மேகாவதிக்கு மேலான தனிப்பட்ட ரீதியில் இல்லை என்பதை பிரதிபலித்தது ஆனால், உண்மை என்னவெனில் கணிசமான அளவு தொழிலாள மக்கள் தங்களுடைய சமூக நிலைமையில் மாற்றம் ஏற்படுமென எதிர்பார்த்து மேகாவதியினுடைய கட்சிக்கு வாக்களித்தனர். வாகிட், எதுவித சமூக அடித்தளமும் சொந்தத்தில் இல்லாதபடியால், இதே மாதிரியாக பிரச்சனைகளை எதிர்நோக்கவில்லை.

ஆனால் சில மாதங்களுக்குள், யார் வாகிட்டிற்கு பக்கபலமாக நின்றார்களோ அவர்கள், மேகாவதியின் பின்னால் தங்களை மாற்றிக் கொண்டனர். அவர் தனது தோல்விக்கு காரணமாக இருந்த இராணுவத்தினதும், கோல்க்கார் கட்சியினதும் ஆதரவை கவனத்திற்கு எடுக்க ஆரம்பித்தார்.

பெரிய வல்லரசுகளினதும் சர்வதேச நானய நிதியத்தின் அழுத்தத்தினாலும், வாகிட்டினுடைய நிர்வாகம் சுகாட்டோவிற்கும், அவருடைய குடும்பத்திற்கு எதிராகவும் சில கோழைத்தனமான முறையில் குற்ற நடவடிக்கை எடுத்ததுடன், இராணுவத்திற்கு மேலாக மக்கள் கட்டுப்பாட்டிற்கு உறுதி செய்ததுடன், பொறிந்த வங்கிகளின் சொத்துக்களை விற்றதுடன் Acheh இலும் மேற்கு பப்புவாவிலும் பிரிவினைவாத குழுக்களுடன் பேச்சு வார்த்தை நடாத்தியது போன்றனவற்றால் வாகிட்டிற்கு பகைமை வளர்ந்தது. "தேசத்தை பாதுகாத்தல்" என்ற கோசத்தின் கீழ் மேகாவதி வர்த்தக ரீதியாகவும், அரசியலும் அபாயத்திற்குள்ளான சுகாட்டோ அரச ஆட்சியின் ஆதரவாளர்களை தொடர்பு கொண்டு உதவியை சேகரிக்கத் தொடங்கினார்.

தனது ஜனநாயக நற்பெயரை உயர்த்தும் நோக்கத்துடன் வாகிட் இரண்டு விதமான பிரேரணைகளை கடந்த மார்ச்சில் வைத்தபோது ஓர் திருப்பு முனையாகவிருந்தது. இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சியை தடை செய்ததன் மூலம் சுகாட்டோவின் ஆட்சிக்கு அடித்தளமிட்ட 1966 இல் கம்யூனிசத்தை சட்டவிரோதமாக்கிய சட்டத்தையும், இராணுவம் தலைமை தாங்கி ஏறத்தாள 1- 1/2 கோடி இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் (PKI) அங்கத்தவர்களான தொழிலாளர்களையும் விவசாயிகளையும் கொலை செய்ததையும் வாகிட் இந்தோனேசிய மக்கள் சபையை அழைத்து இல்லாமல் செய்தார். இக் கொலைகளை விசாரணை செய்வதென தற்காலிகமாக ஜனாதிபதி அறிவித்தார்.

வாகிட்டினுடைய யோசனைகளை உடனடியாகவே கோல்கார் (Golkar) இராணுவம், இந்தோனேசிய மக்கள் சபையில் Amien Rais தலைமையிலான இஸ்லாமிய குழுக்கள் போன்றவற்றின் மத்தியில் எதிர்ப்பான ஆத்திரமூட்டலை உருவாக்கியது. 1966 படுகொலைகள் பற்றிய எங்வொரு விசாரணைகளும், குறைந்த மட்டத்திலும் கூட, இக் குழுக்களின் பொறுப்புகளை வெளிக்காட்டுவதை பயமுறுத்தியதுடன், வாகிட்டின் சொந்த Nahdlatul ulama உட்பட மற்றைய அமைப்புகளும் இக் கொலைகளுக்கு பொறுப்பானவை. சுகாட்டோவின் கீழ் அரசின் கொள்கையாக, பத்திரிகைகளும் கல்வி நிலையங்களும் முழுவதுமாக பிரகடனப்படுத்தப்பட்ட, கம்யூனிச எதிர்ப்பை சவால் விடுவதற்கு இவர்களும் கூட விரோதியாக இருந்தார்கள்.

வலதுசாரி இஸ்லாமிய கட்சிகளே வாகிட்டின் குற்றச் செயல்கள் சம்பந்தமாக முதல் குரலை கொடுத்தவர்களாவர். கடந்த வருடம் ஏப்பிரலில் பிறை சந்திரனும் நட்சத்திரமும் என்ற கட்சியின் (Cresent and Star Party) தலைவர் Achmad Sumargono, வெளிப்படையாகவே தணிக்கை விலக்கப்பட்டால் "கம்யூனிசம் மிகவும் வேகமாக வளர்ந்துவிடும்" என எச்சரிக்கை விடுத்தார். மேலும் அவர் ''வாகிட்டின் சொந்த திட்டங்கள் ஏழைக்கும் பணக்காரருக்கும் இடையில் உள்ள இடைவெளியை கூட்டுமென்பதால் இந்தோனேசியாவிற்குள் கம்யூனிசம் செழிப்பாக வளர்வதற்குரிய நிலமாக மாறும்'' என கூறினார்.

இப்படியான கடுமையான விமர்சனம், இந்தோனேசிய மக்கள் சபையில் கேள்விகளுக்கு எதிராக வாதாட வாகிட்டை வலிமை குறைந்த நிலையில் இட்டுச்சென்றது. "இது எவருமே கேட்க கூடிய அளவில் அனுமதித்துள்ளது" என அவர் கடந்த மே குறிப்பிட்டார். "நான் தனியே கேட்கிறேன் ஆனால் ஆத்திரம் வெடிக்குமளவில் உள்ளது. அவர்கள் என்னை துரோகி என அழைக்கின்றார்கள்". ஓர் பிரபல்யமான ஜனநாயக சீர்திருத்தத்திற்கு பிரச்சாரம் ஒன்றை செய்யமுடியாத நிலையில் வாகிட் தனது பிரேரணைகளை அதன் மிகவும் துரிதமாக கைகழுவி விட்டார். ஓர் புதிய குற்றச்சாட்டுகளுக்கான முன்நிபந்தனைகள் வாகிட்டின் மேல் கண்டு பிடிக்கப்பட்டது, எப்படியிருந்தாலும் இது லஞ்ச ஊழல்கள் அரசு நிதிகளை துர்ப்பிரயோகப்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டதும் புருனாய் சுல்தானிடமிருந்து பெறப் பெற்ற நற்கொடைப் பணம் தொடர்புபட்டதாகும்.

வலது சாரிகளை உற்சாகப்படுத்துதல்

மேகாவதி தங்களுடைய புதிய உருவமாக அமைவதற்கு "ஜனநாயக" உதவிகளை சேர்த்துக் கொள்ளும் வேளை கோல்கார் இராணுவத்தினது உற்சாகப்படுத்துதல் வளர்ச்சியடைந்துள்ளது. இராணுவம் கடந்த டிசம்பரில், உதவி ஜனாதிபதியின் உதவியுடன் பல பிரபல்யமான பிரிவினைவாத தலைவர்களை மேற்கு பப்புவாவில் துரோகச் செயல்கள் புரிந்ததாக கைதுசெய்ததுடன், பகிரங்கமாகவே அவர்களை விடுதலை செய்யும்படி வாகிட்டினுடைய உத்தரவுகளை அலட்சியப்படுத்தினர். இவ் வருடம், இராணுவத்தின் கூடிய அழுத்தத்தினால் ஜனாதிபதி, பிரிவினைவாத கொரிலாக்களுக்கு எதிராக Ache என்ற இடத்தில் தாக்குதலை நடாத்த அனுமதித்தார்.

பெப்ரவரியில், இதே வலதுசாரி கூட்டு, மேகாவதியின் பின்னணியுடன் வாகிட்டிற்கெதிரான குற்றச்சாட்டுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு தொடங்கியதுடன் ஜனாதிபதியின் ஆதரவாளர்கள் மத்தியில் ஆத்திர மூட்டினர். கிழக்கு ஜாவாவில் அவர்கள் பல கோல்கார் அலுவலகங்களை தாக்கியதுடன், கோல்கார் தலைவரான Akbar Tandjung, மக்கள் ஜனநாயக கட்சியிடம் சுட்டிக்காட்டியதுடன் சட்ட நீதி மந்திரியை இக் கட்சி சம்பந்தமாக "மீளாய்வு" செய்யவேண்டுமென அழைத்தார். சுகாட்டோவின் கீழ் மக்கள் ஜனநாயக கட்சி தடை விதிக்கப்பட்டதுடன் இதன் தலைவர்கள் சிறையில் இடப்பட்டவேளை சுகாட்டோவின், ஆட்சியின் வீழ்ச்சியின் பின் 1999 தேர்தலில் கலந்துகொள்ளலாமென சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டது. Tandjung முழுமனத்துடன் கட்சி திரும்பவும் தடை செய்யப்பட வேண்டுமென கேட்டுக் கொண்டதுடன் "மக்கள் ஜனநாயக கட்சியின் நோக்கமும்,கொள்கைகளும் இந்நாட்டின் தேவைக்கு உகந்ததாக இல்லாதபடியால் இதன் தோற்றம் கேள்விக்கிடமானது" என கூறினார்.

கடந்த வாரம் பொலிசாருடைய தேடுதலை அடுத்து, பல கம்யூனிச எதிர்ப்பு குழுவினர் உருவாகியுள்ளனர். இஸ்லாமிய குழுக்களால் உருவாக்கப்பட்ட பரந்த அளவலான கம்யூனிச எதிர்ப்பு மன்றத்தின் ஓர் பகுதியான Gepako (கம்யூசை எதிர்ப்பு இயக்கம்) வில் சேர்வதற்கு "நூற்றுக்கணக்காண மக்கள்" கையெழுத்திட்டதாக ஜக்காட்டா போஸ்ட் (Jakarta Post) அறிவித்துள்ளது. "எங்களுடைய குறிக்கோள் கம்யூனிசத்திற்கும், மார்க்சிசத்திற்கும், லெனினிசத்திற்கும் எதிராக போராடுவதுதான்" என Yogyarta வில் உள்ள கோல்கார் கட்சியின் அலுவலக தலைவரான Dandung Pardiman குறிப்பிட்டார்.

மே மாதத்தில் இஸ்லாமிய இயக்கமென அறியப்படும் ஓர் குழுவினர் மே 20 விழித்தெழுகின்ற நாள் என நாடு பூராகவுள்ள புத்தக நிலையங்களை முற்றுகையிடுவதாகவும் "இடதுசாரிகளின் புத்தகங்களை" கைப்பற்றப்போவதாகவும் பயமுறுத்தியுள்ளனர். வலது சாரிகளினுடைய நகர்வுகளை பாராளுமன்றம் வழக்கமாக எதிர்க்கும் அதேவேளை பெரிய புத்தக கடைகள் இறுதிவரை பொறுத்திருக்காமல் பிரச்சனையூட்டக் கூடிய புத்தகங்கள் என கணிக்கப்பட்டவைகளை தங்களுடைய தட்டிலிருந்து அகற்றினர். பத்திரிகைகளின் தகவல்களின் படி, பொலிசார் "பாதுகாப்பை வைத்திருப்பதற்காக" புத்தகங்கள் சேகரிக்கும் நடவடிக்கைகளுக்கு "உதவியதாக" அறிவித்தனர்.

கடந்த வாரம் பொலிசாருடைய தேடுதல் வேட்டை, இந்தோனேசியாவிலுள்ள புத்திஜீவிகள், மாணவர்கள், உட்பட தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பயங்கர நிலைமை, தீவிர வலதுசாரி குழுவினர் பொலிசாருடனும் இராணுவத்துடனும் இணைந்து இயங்குவதன் மூலமாக கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்கனவே ஆழமாக்கப்பட்டுள்ள சமூக பிரச்சனைகளின் மத்தியில் ஆரம்பித்துள்ள தொழிலாளர்களினதும், ஏனையோரினதும் போராட்டத்தை ஒடுக்குவதற்காக இந்த மாநாட்டின் மேல் நடாத்தப்பட்ட தாக்குதல் ஓர் பரிசோதனை முயற்சி ஆகும்.

கடந்த 3 வருடங்களில் ஓர் சுருக்கமான மீளாய்வின் மூலம் நீரூபிக்கப்படுவது என்னவெனில், முன்னாள் எதிர் குற்றவாளிகளான மேகாவதியும் வாகிட்டும் போன்றவர்கள் பழைய சுகாட்டோ சக்திகள் திரும்பவும் அரசியல் தளம் அமைப்பதை அனுமதித்துள்ளனர். இது கூட இன்னுமோர் அபாயத்தை சுட்டிக் காட்டுகின்றது. அது தீவிரவாத இளைஞர்களுக்கு மத்தியிலே அதாவது ஜனநாயக வாதிகளென அழைக்கப்பட்டவர்களில் அழுக்கத்தை கொடுப்பதனால் முற்போக்கான நடவடிக்கைகளை நடாத்த முடியும் என்ற மாயை உருவாக்குவதற்கு மக்கள் ஜனநாயக கட்சியின் சந்தர்ப்பவாத அரசியல் முக்கிய பங்கு வகித்தது என்பதாகும்.

1990 களில் மக்கள் ஜனநாயக கட்சி தோன்றியபோது மேகாவதியுடன் ஓர் முன்னணியை ஏற்படுத்தியதுடன், அவரை பிரகாசிக்கும் சொற்தொடர்களான ஓர் ஜனநாயகவாதி, சீர்திருத்தவாதி, அத்துடன் சுகாட்டோவின் விரோதி என புகழ்ந்தனர். இந்த "ஜனநாயகவாதி" பகுதி இராணுவம், கோல்கார், அத்துடன் தீவிரவாத வலது சாரிகளுடன் குழுவாக சேர்ந்தபோது மிகவும் தெளிவானபோது தான் மக்கள் ஜனநாயக கட்சி மேகாவதியுடன் இருந்து உறவை முறித்துக் கொண்டது. இந்த அரசியல் அநுபவங்களில் இருந்து எதுவித பாடங்களும் படிக்காமல், திரும்பவும் மக்கள் ஜனநாயக கட்சி விரைவாக இன்னுமோர் சர்ந்தப்பவாத முன்னனியை கட்ட முயற்சித்தது. இம் முறை ஜனாதிபதி வாகிட்டின் உதவியாளர்களுடன் ஆகும்.

DSP யின் (Democratic Socialist Party-Australia) Green Left Weekly யில் ஜனவரி இறுதி பகுதியில் வெளிவந்த கட்டுரை ஒன்றில் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரான Budiman பிரதிநிதிகள் வாகிட்டின் இஸ்லாமிய இயக்கமான Nahdlatul Ulama (Nu) இடையில் கடந்த கட்டத்தில், கூட்டாக கோல்காரை எதிர்த்து பிரச்சாரம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டனர். இந்த கட்டுரையிலோ அல்லது தொடர்ச்சியாக வந்த எந்த கட்டுரைகளிலோ ஏன் மக்கள் ஜனநாயக கட்சி திடீரென மேகாவதியிடமிருந்து வாகிட்டிற்கோ அல்லது ஏன் சீர்திருத்தவாதி என அழைக்கப்பட்ட மேகாவதி பிற்போக்கு சக்திகளுடன் கூட்டுச் சேர்ந்துள்ளார் என எதுவித விளக்கமுமோ கொடுக்கவில்லை.

வாகிட்டினுடைய நன்கு வேர்ஊன்றிய சதிவேலைகள் மேகாவதியை போன்றே வலதுசாரிகளிடமிருந்து வரும் அபாயத்திற்கு எதிராக மக்களை அணிதிரட்டுவதில் இல்லை. நடந்து கொண்டிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு ஜனாதிபதியின் பதில் இராணுவத்திடம் உதவியை தேடி அவசர கால சட்டத்தை கோருவதும், பாராளுமன்றத்தை கலைப்பதுவுமாகும்.

மக்கள் ஜனநாயக கட்சியும் இவர்களுடைய அவுஸ்திரேலிய சக சிந்தனையாளர்களான ஜனநாயக சோசலிச கட்சியும் இந்தோனேசியாவில் பத்தாண்டுகாலமாக நிரூபிக்கப்பட்ட அடிப்படை மார்க்சிச உண்மையை நிராகரித்துள்ளனர். அதாவது பின்தங்கி அபிவிருத்தியடைந்த எந்தவொரு முதலாளித்துவ நாட்டிலும் ஆளும் கட்சியின் எந்தவொரு பிரிவினரும் அதிக குறைந்த பட்சம் சீர்திருத்தத்தையோ அல்லது சாதாரண உழைக்கும் மக்களில் சமூக நிலைகளை உயர்த்துவதற்கோ உண்மையிலே இலாயகற்றவர்கள் என்பதாகும்.

இந்தோனேசியாவில் வலதுசாரிகளுக்கும், இராணுவத்தின் மீள்தோற்றத்திற்கும் எதிரான ஓர் உண்மையான போராட்டம், மிகவும் சிந்தனைமிக்க தொழிலாளர்கள், மாணவர்கள், புத்திஜீவிகள் அனைவரும் ஓர் தொடர்ச்சியான ஜனநாயக உரிமைகளுக்காக போராடக்கூடிய சமூக சக்தி தொழிலாள வர்க்கமே என்பதை அடையாளம் கண்டுகொள்வதாலாகும். இது மக்கள் ஜனநாயக கட்சி (PRD) போன்ற தீவிரவாத போக்குகள் தொழிலாளர்களை இந்த அல்லது வேறு பிரிவு முதலாளித்துவத்துடன் முடிச்சு போடுவதற்கெதிராக அரசியல் போராட்டம் நடாத்துவதாலேயே சாத்தியமாக்க முடியும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved