World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள்: கலை விமர்சனம்

மிஸீsவீபீமீ ளிutஸீமீஷ் சிலீவீஸீமீsமீ ணீக்ஷீt ணீஸீபீ tலீமீ ஜீஷீறீவீtவீநீணீறீ நீஷீஸீபீவீtவீஷீஸீs tலீணீt ஜீக்ஷீஷீபீuநீமீபீ வீt

உ ள்ளே வெளியில் -- புதிய சீனக்கலையும் அதனை உருவாக்கிய அரசியல் சூழ்நிலைகளும்

By Maria Esposito
14 May 2001

Back to screen version

உள்ளே வெளியில்: புதிய சீனக்கலை, சீன மக்கள் குடியரசு (PRC), தைவான், ஹாங்காங் மற்றும் மேற்கத்திய நாடுகளில் இருந்து தற்கால சீனக்கலைஞர்களால் படைக்கப்பட்ட மை பூச்சு ஓவியங்கள் (Ink paintings), சிற்பங்கள் (Sculptures), நிழற்படங்கள் (Photographs), வீடியோக்கள் (Videos), கருவி கல அமைவு (installations) மற்றும் செயல் காட்சிக் கலை (நாட்டிய நடனம் performance art) ஆகியவற்றின் ஒரு அசாதாரண தொகுப்பு ஆகும்.

நியூயோர்க்கில் ஆசிய சமூக கூடத்தாலும், சான்பிரான்சிஸ்கோ நவீன கலையின் அருங்காட்சியகத்தாலும் ஒழுங்கு செய்யப்பட்ட இக் கண்காட்சி, கடந்த ஆண்டு கான்பெர்ராவில், ஆஸ்திரேலிய தேசிய கலைக்கூடத்தில் காட்சிப்படுத்துவதற்கு முன்னர், அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் ஆசியாவிலும் மூன்று ஆண்டுகளாக சுற்றுலாவை மேற்கொண்டது. இந்த விமர்சனம் செய்யும், பிரதான சீன நாட்டிலிருந்து பெறப்பட்ட படைப்புக்கள், 1995க்கும் 1998க்கும் இடையில் உருவாக்கப்பட்டவை. இது இக்கண்காட்சியை ஏற்பாடு செய்யும் பல்வேறு கலைக்கூடங்களில் மேடை ஏற்றப்பட்ட செயற்காட்சிகளால் வளமூட்டப்பட்டது.

சீனாவில் தற்கால கலைஞர்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களை --எந்தவிதமான புதியது புனையும் கலைப்படைப்புக்களை அரசியல் அச்சுறுத்தலாய் பார்க்கின்ற ஆளும் சீன ஸ்ராலினிசக் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர்ச்சியான ஒடுக்குமுறை, தணிக்கை மற்றும் அவர்களின் தனிமைப்படல் ஆகிய கஷ்டங்களைப் பற்றி-- சிறிதும் புரிந்துகொள்ளாமல், இந்த பன்முகப்படுத்தப்பட்ட கலைக்கண்காட்சியை முழுவதுமாய் மதிப்பீடு செய்வது இயலாததாகும்.

சீன தற்கால கலையின் முதல் கண்காட்சிகள் கலாச்சாரப் புரட்சிக்கு பின்னரும் 1979ல் வெளிநாட்டு கம்பனிகளால் பெரிய அளவில் முதலீடும் சந்தை சீர்திருத்தங்களும் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரும் இடம்பெற்றன. சில கலைஞர்கள் ஐரோப்பிய கலை வரலாற்றைப் படிப்பதற்கு அனுமதிக்கப்பட்டார்கள், செயல் அக்கறை கொண்ட செல்வாக்கு மிக்க வெளிநாட்டு கலைக் கண்ணோட்டம் போன்ற கலைப் பத்திரிகைகள் தோன்றத் தொடங்கின, மற்றும் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக காணப்படாத சில கலைக் கண்காட்சிகள், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய கலை பற்றிய கண்காட்சிகள் பெய்ஜிங்கில் நடத்தப்பட்டன.

பல இளம் கலைஞர்கள் அதனை சோதனை செய்து பார்க்கத் தொடங்கினர் மற்றும் இரு பிரதான போக்குகள் தோன்றின: பதிவுவாதிகளாலும் (Post-impressionist) அருவ வெளிப்பாடுகளின் நுட்பங்களாலும் (Abstract expressionist techniques) செல்வாக்கு செலுத்தப்பட்ட ஸ்டார்கள் (The Stars) என்ற கலைஞர்களின் குழு; கலாச்சாரப் புரட்சியின் பொழுது அனுபவித்த மனோரீதியான வடுக்களைப் பற்றி ஆய்வு செய்ய முயற்சிக்கும் வடுக்கள் (The Scar) குழு. கலைப் பத்திரிகைகளின் நீண்ட அரசியல் தர்க்கங்கள், கலையின் பாத்திரம் மற்றும் வேலை பற்றி விவாதங்கள் நடத்தப்பட்டன, மற்றும் ஓரளவு கலைச் சுதந்திரம் அடையலாம் என்றும் நம்பினர்.

ஆனால் 1982 ல், இப்பிரச்சினை மீதான விவாதம் பரவலானது, இதற்கு அரசாங்கம் "ஆன்மீக மாசு எதிர்ப்பு பிரச்சாரத்தை பதிலாக தந்தது. தற்கால கலை "முதலாளித்துவ கலை" என்று கூறப்பட்டு பல கலைக் கண்காட்சிகள் தடை செய்யப்பட்டன. கலை மாத இதழ் இதனை பகிரங்கமாக கண்டனம் செய்தது. அது 1983 ஜனவரியில் அருவ கலைப் பற்றிய கட்டுரையை வெளியிட்டப் பின்னர், ஆசிரியர் குழு முழுவதும் அகற்றப்பட்டு அரசாங்க ஆதரவாளர்கள் அந்த இடத்தில் வைக்கப்பட்டனர் ஐந்து பேரின் நவீன கலைஞர்களின் கண்காட்சி, கலையின் பொதுக் கருத்து தொடர்பான தொகுப்பு புஜியன் (Fujian) மாகாணத்தில் க்சியாமெனில் (Xiamen) நடக்கவிருந்தது, இது திறக்கப்படும் முன்பே தடைசெய்யப்பட்டது. பரிசோதனைப் பூச்சோவிய கண்காட்சி: மேடை 1983, ஷங்காய் விடுதலை நாளிதழால் விமர்சிக்கப்பட்ட பின்னர் மூடப்பட்டது.

85 இயக்கம்

அரசாங்கமானது கலைஞர்கள் மத்தியில் சில ஆதரவைப் பராமரிக்கும் முயற்சியில், 1984ல் பெய்ஜிங்கில் புதிய கலை தொடர்பான தேசிய கண்காட்சியை ஏற்பாடு செய்த்து. ஆனால் அதிகாரபூர்வமாய் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பெரிதும் கற்பனை செய்யமுடியாத வேலைப்பாபடுகள், கலைஞர்களையும் கலை விமர்சகர்களையும் பாதிப்புக்குள்ளாக்கவில்லை மற்றும் பல தீவிர அமைப்புக்கள் தோன்றி நாடுமுழுவதும் பரவின. 85 இயக்கம் எனப்பட்ட இப்போக்கு, டாடையிசம் (Dadaism), குறிப்பாக மார்ஷல் டுசாம்ப் (Marcel Duchamp) அமெரிக்க பொப் கலைப்பாணிகள் மற்றும் தற்கால செயல்காட்சிகளால் செல்வாக்கு செலுத்தத் தொடங்கின. இவை நுண்கலைகளுடன் மட்டுப்படுத்தப்படவில்லை மாறாக இலக்கியம், நடனம், இசை மற்றும் திரைப்படத்திற்கும் விரிவாக்கப்பட்டது.

85 இயக்கம் அரசாங்கக் கட்டுப்பாட்டில் உள்ள கலைக்கூடங்களையும் கடந்து பொது அரங்குகளிலும், கிராமப்புற தொழிற்சாலைகளிலும் நகர்ப்புற வீதிகளிலும் மேடை ஏறியது. நிதிப்பற்றாக்குறைகள் அல்லது நிறுவன ஆதரவின்மையிலிருந்து பெறப்பட்ட பெயர்கொண்ட ஷென்ழென் சூனியக் கண்காட்சி (Shenzhen Zero Exhibition) எனப்படும் கண்காட்சி வித்தியாசமான ஒன்றாகும். அது ஷென்ழென் சிறப்புப் பொருளாதார பிரதேசத்தில் (Shenzhen Special Economic Zone) நடாத்தப்பட்டது.

ஒரு விமர்சகரால் விவரிக்கப்படுகின்றவாறு, "பொதுமக்களோடு வேண்டுமென்றே முரண்படும் வண்ணம் இருக்கின்ற அதிகாரத்தை", 85 இயக்கமானது, அரசாங்க எதிர்ப்பு உணர்வுகளை எதிரொலித்தது. இது நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் தியனென்மன் சதுக்கத்தில் மாணவர் எதிர்ப்புக்களாக வெடித்தது.

அதிகாரபூர்வ அரசாங்க கலை வட்டாரங்கள் இந்த இயக்கத்தைத் தாக்கியதுடன் 1986 ஜனவரியில் கடைசி கண்காட்சி 86 எண்1 ஐ அது தொடங்குவதற்கு மூன்று மணிகளுக்கு முன்னரே மூடிய அதேவேளை, ஏழுமாதங்களுக்குப் பின்னர் ஹூப்பேயில் இளைஞர் கலை விழா ஒன்றுக்கான முதன் முதலான முயற்சி நடந்தது.

இளைஞர் கலைவிழா, தற்கால சீனக்கலையின் என்றும் இல்லா பெரிய கண்காட்சியாகும். இது ஐந்து நகரங்களிலிருந்து ஐம்பது பல்வேறுபட்ட குழுக்களிலிருந்த கலைஞர்களையும் உள்ளடக்கிய, கிட்டத்தட்ட 2000 கலைப் படைப்புக்களை வைத்த கண்காட்சியாகும். அதன் வெற்றியால் தூண்டப்பட்ட கலைஞர்கள், விமர்சகர்கள் மற்றும் எழுத்தாளர்களின் அவை கூடலானது, இளைஞர்களின் கலைக் குழுவின் தொடர்பு மற்றும் ஆய்விற்கான தேசியரீதியான கண்காட்சி எனத் தலைப்பிடப்பட்ட இன்னொரு கண்காட்சியை நடாத்தத் திட்டமிட்டனர். ஆனால் கலைக்கான நிதியில் வெட்டுக்களும் அரசாங்கம் 1987 ஏப்ரல் 4ல், இளைஞர்களுக்கு இடையிலான அமைப்புரீதியான அனைத்து அறிவுபூர்வமான தொடர்புகளையும் தடைசெய்தல் என்ற ஆணையும் கண்காட்சியைத் தடுத்துவிட்டது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் 1989 பிப்ரவரியில், நிகழ்கால கலைப் படைப்புக்களின் விரிந்து அகன்ற தொகுப்பு --சீன அவன்ட் கார்ட் கண்காட்சி-- பெய்ஜிங்கில் தேசிய கலைக்கூடத்தில் மேடை ஏற்றப்பட்டது. 186 கலைஞர்களினாலான 193 வண்ணப் பூச்சு ஓவியங்கள், சிற்பங்கள், வீடியோக்கள் மற்றும் கருவி கல அமைப்பு ஆகியவற்றைக் கொண்ட தொகுப்பு திறக்கப்பட்ட உடனேயே, செயற் காட்சியின் பகுதியாக இரு கலைஞர்கள் சுடப்பட்டார்கள். உள்ளே வெளியில் -ஐ பிரதிநிதித்துவம் செய்யும் வாங் குவாங்யி (Wang Guangyi), க்சு பிங் (Xu Bing), வு ஷான் ழுவான் (Wu Shan Zhuan), ஹூவாங் யோங் பிங் (Huang Yong Pinரீ) மற்றும் வெண்டா கு (Wenda Gu) ஆகியோரால் ஆன படைப்புக்களை உள்ளடக்கும். அது மறுமுறை திறக்கப்பட்டது, பின்னர் கலைக்கூடம், நகராண்மை அரசாங்கம் மற்றும் பெய்ஜிங் பொதுப் பாதுகாப்புக் கழகம் ஆகியன வெடிகுண்டு அச்சுறுத்தலுக்குள்ளானதால் முழுமையாக மூடப்பட்டது.

சீன /அவன்ட் கார்ட் கண்காட்சி தொடர்பான அரசாங்கத்தின் மனநிலை மிகவும் உறுதியானதாக இருந்தது. கண்காட்சி மூடப்பட்ட இரு மாதங்களுக்குப்பின், தொழிலாள வர்க்கத்தின் பிரிவுகளிலிருந்து ஆதரவு பெற்ற, மாணவர்கள் தியெனென்மன் சதுக்கத்தில் ஜனநாயக உரிமைகள் மற்றும் ஏனைய அடிப்படை உரிமைகளைக்கோரி அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். இந்த நிகழ்ச்சியினை விரிவாக விளக்குவதற்கு இந்த ஆய்வில் சாத்தியமில்லை. பல கலைஞர்களின் ஆதரவைப் பெற்ற இந்த இயக்கம் இராணுவம் மற்றும் போலீசாரால் ஈவிரக்கமற்ற வகையில் நசுக்கப்பட்டது. இவ்வியக்கம் முறியடிக்கப்பட்டு நூற்றுக் கணக்கானோர் கொல்லப்பட்டனர் ஆயிரக்கணக்கானோர் சிறையிலடைக்கப்பட்டனர்.

இரத்தம் தோய்ந்த எதிர்ப்பு ஒடுக்குமுறைக்குப் பின்னர், அரசாங்கம் சீன/அவன்கார்ட் கண்காட்சியை முதலாளித்துவ தாராண்மைவாதம் என்று திரித்துக் கூறியதுடன் அதனோடு தொடர்புடைய அனைத்தையும் கண்டனம் செய்தது.

பொதுக் கண்காட்சிகளுக்கும் கலை மாத இதழ், சீனாவில் நுண்கலைகள் போன்ற வெளியீடுகளுக்கும் சில வாய்ப்புக்கள் கிடைத்தன. புதிய கலை இயக்கத்தில் முக்கியபாத்திரம் ஆற்றியவை ஒன்றில் மூடப்பட்டன அல்லது அவற்றின் ஆசிரியர் குழு அரசாங்கத்தின் அடிவருடிகளால் மாற்றப்பட்டது, அவன்கார்ட் வேலை சிலகாலத்திற்கு சரிவைச் சந்தித்தது.

சில கலைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் ஐரோப்பா, அமெரிக்கா அல்லது ஆசியாவில் கண்காட்சிகளை நடத்தினர். எஞ்சியிருந்த அவர்கள் கிட்டத்தட்ட தலைமறைவு வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டனர், அவர்கள் தங்களின் கலைப்படைப்புக்களை தனியார் கட்டிடங்கள் அல்லது அந்நிய தூதரகங்களில் காட்டும்படியான நிர்ப்பந்தத்துக்கு ஆளாயினர். ஏனையோர் தங்களது படைப்புக்களை உடைந்துபோன வீடுகளில் அல்லது தொழிற்பேட்டைகளில் நிறுவத் தொடங்கினர்.

இந்த நேரம் சீனாவில் தோன்றிய மேலாதிக்கம் செய்யும் போக்குகளுள் ஒன்று அரசியல் பொப் என்று அழைக்கப்படுவதாகும். இது சோசலிச யதார்த்தமும் அமெரிக்க பொப் கலை பாணியும் சேர்ந்த சேர்க்கையாக, அரசாங்கம் முதலாளித்துவ சந்தை உறவுகளை அறிமுகப்படுத்தலையும் மேற்கத்திய நுகர்வுப் பொருட்களை ஊக்கப்படுத்தல் மற்றும் அவற்றின் இலச்சினைகளை விளம்பரப்படுத்தல் ஆகியவற்றை வசைபாடலாகக் காட்டும் கலை ஆகும். இந்தக் கருத்துக்கள் 1990 களில் தோன்றிய புதிய வரலாற்றுக் குழு (New History Group) மற்றும் நீண்ட வால் யானைக் குழு ஆகிய இரு பிரிவுகளிடையே எடுத்துக் கொள்ளப்பட்டன.

1990கள் முழுவதும் அரசாங்கத்தின் தணிக்கைகளும் தலையீடுகளும் தொடர்ந்தன. 1993 ஏப்ரல் 28ல் புதிய வரலாற்றுக் குழுவால் மக்கள் நுகர்வு எனும் முதலாவது பன்முக ஊடக நிகழ்ச்சி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டது. இது வண்ணப் பூச்சு ஓவியங்கள் மற்றும் கலையின் ஏனைய படைப்புக்களைப் போலவே, ïவீன உடையலங்கார காட்சி (Fashion show), ரொக் இசை ஆகியவற்றைக் கொண்டிருந்ததுடன், இது பெய்ஜிங்கில் உள்ள மக்டொனால்ட் சிற்றுண்டிச்சாலையில் நடைபெற விருந்தது. ஆனால் பார்வையாளர்களின் கவனத்தை கலைப் பொருட்களில் இருந்து விலக்கி அதன் தயாரிப்பு முறைகளின்பால் குவிமையப்படுத்துவதை இலக்காகக் கொண்டிருந்த இக் கண்காட்சி, தொடங்குவதற்கு ஒரே ஒரு மணி நேரத்திற்கு முன்பாக ஏப்ரல் 27 நள்ளிரவில், பெய்ஜிங் பொதுப் பாதுகாப்புக் கழகத்தால் தடை செய்யப்பட்டது. இதன் பின்னர் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், 1996 டிசம்பரில் நிகழ்கால சீனக்கலையின் வரவேற்புக் கண்காட்சி அதன் தொடக்க நாளிலேயே அரசாங்கத்தால் மூடப்பட்டது. அம்மூடலுக்கு காரணங்கள் தரப்படவில்லை.

கலைப் படைப்பின் முக்கியத் தேர்வுகள்

உள்ளே வெளியில் இந்த சிக்கலான மற்றும் மற்றும் கடினமான காலகட்டத்திலிருந்த கலைப்படைப்புக்களின் குறுக்குமுக வெட்டுத் தோற்றத்தை உள்ளடக்கி இருக்கிறது. இக் கண்காட்சியானது, கடந்த 20 ஆண்டுகளாக மேற்கில் தயாரான கலைப்படைப்புக்களில் பெரும்பாலானவற்றில் காணப்படாத சிந்தனையைத் தூண்டுகின்ற, நேர்மையான, ஆர்வம்மிக்க மற்றும் அமைதியைக் குலைக்கின்ற பல படைப்பபுக்களைக் கொண்டிருக்கிறது. உண்மையில் படைப்புக்களில் பெரும்பான்மையானவை ஆளும் அரசாங்கத்துடன் அடிப்படைக் குரோதத்தைக் கொண்டிருக்கின்றன. தற்போதைய சீனாவில் உள்ள அரசியல் மற்றும் சமூக வாழ்வின் முரண்பாடுகளையும் சில பதட்டங்களையும் திறந்து காட்டுவதற்குமான அக்கறையுடன் கூடிய முயற்சியைக் கொண்டிருக்கின்றன.

நன்கு பிரபலமான சீனக்கலைஞர்களுள் ஒருவரான, ழாங் ஹுவானின் (Zhang Huan) செயல் முறைக் காட்சி இந்த வாழ்க்கை நடைமுறை ஓவியப்பாணிக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். தெரியாத மலைக்கு ஒரு மீட்டர் கூட்ட என்ற அவரது படைப்பு நிழற்படங்களைக் கொண்டிருக்கிறது. இது 1995-ல் பெய்ஜிங்கில் மியாவோ ஃபெங் (Miaofeng) மலையில் இடம் பெறுகிறது. ஒரு மலை உச்சியில் ஒருவர் மீது ஒருவராக பலர் நிர்வாணமாகப் படுத்திருக்கிறார்கள். அவர்களது நோக்கு மலையின் உயரத்தை ஒருமீட்டர் உயர்த்துவதாகும். மனித குலம் எதனையும் மாற்றமுடியுமா அல்லது நமது நடவடிக்கைகள் வித்தியாசத்தை உருவாக்குமா என, ஹுவான் (Huan) காண்போரைத் தனக்குள் கேட்டுக் கொள்ளுமாறு தூண்டிவிடுவதாகக் காணப்படுகிறார்.

இன்னொரு செயல் காட்சியான --மீன் குளத்தில் நீர் மட்டத்தை அதிகரிக்க-- பெய்ஜிங்கின் நான் மொபான் மீன்குளத்தில் 40 தொழிலாளர்கள் மற்றும் மீனவர்களால் 1997-ல் மேடை ஏற்றப்பட்டது. நெச்சுவரை நீரில் மூழ்கி இருக்கும்படி பெரிய குளத்தில் மனிதர்கள் நிற்கிறார்கள். 1980களில் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜாவோ ஜியாங், சீன மக்கள் பண்டப் பொருளாதாரக் கடலில் நீந்தக் கற்றுக் கொள்ள வேண்டும்" என்று பிரகடனம் செய்தார். ஒருவேளை ஹுவான் இதனை அரசியல் நையாண்டி செய்யலாம் மற்றும் வேலை தேடி பரந்த அளவில் கிராம மக்கள் இடம் பெயர்ந்ததை வெளிச்சம் போட்டுக் காட்டலாம். அல்லது அவர் யாங்ட்சி (Yangtze) நதியின் குறுக்கே கட்டப்படும் -உலகின் மிகப் பெரிய மூன்று கார்ஜஸ் அணைக்கட்டால் விரைவில் வெளியேற்றப்படவிருந்த பத்து இலட்சம் மக்களின் தலைவிதியைப்பற்றி சுட்டிக் காட்டியிருக்கலாம். ஹுவான் தெளிவாக விடை சொல்லாதிருந்தாலும், அவரது மறை புதைவான கலைப் படைப்புக்கள் இன்று சீனாவில் பெருந்திரளான மக்கள் எதிர்கொள்ளும் நிச்சயமற்றதன்மையின்பால் கவனத்தை ஈர்க்கும்படி செய்கின்றது.

உள்ளே வெளியில் பல அரசியல் பொப் வண்ண பூச்சு ஓவியங்களையும் கூட சிறப்பாய்க் கொண்டிருக்கிறது. வாங் குவாங்கியின் மாபெரும் கடிந்துரைக்கும் வரிசைகள்: அவ்வகை பாணி எடுத்துக்காட்டுகளுள் மிக வித்தியாசமான ஒன்று கோக்கோ கோலா (1983) ஆகும். அமெரிக்க பொப் கலைப்பாணியுடன் சோசலிச யதார்த்தக் கருத்துக்களையும் இணைத்து, எண்ணெய்ப் பூச்சு ஓவியம், சுவரொட்டியின் தரத்தில் மூன்று உருவங்கள் அடர்ந்த கருப்புக் கோடுகளாக சித்தரிக்கப்பட்டுள்ளன. இளஞ்சூடான மஞ்சள் மற்றும் சிவப்புக்களின் தட்டையான பின்புலத்துக்கு எதிராக இம்மூன்று உருவங்கள், இரு ஆண்கள் மற்றும் ஒரு பெண் ஒருவர் பின் ஒருவராக நிற்கின்றனர். அவர்களின் பெரிதான கைகளில் இராட்சதப் பேனாவைப் பிடித்துக் கொண்டுள்ளனர். இம் மூன்று உருவங்களும் தனி மனிதராக நிற்கவில்லை மாறாக --புத்தகத்துடன் ஒரு ஆலைத் தொழிலாளி, ஒரு விவசாயப் பெண் மற்றும் ஒரு இராணுவ வீரன் என வகைகளாக நிற்கின்றனர். இப் பூச்சோவியம் அடையாள எண்கள் (Identification numbers) காணப்படுகின்றவாறு மூடப்பட்டிருக்கின்றன.

பேனாவிலிருந்து படபடக்கும் செங்கொடி மற்றும் உயர் வீரமிக்க எழுத்துக்களின் அடியில் வலது கை மூலையில் உள்ள கோக்கோ கோலா இலச்சினையுடன் முரண்படுகிறது. குவாங்கியின் கருத்து தெளிவானது: பழைய கொள்கைப் பிரச்சார உருவங்கள் மற்றும் அதே முகங்கள் முதலாளித்துவ நுகர் பொருட்களை புகழ்ந்துரைக்கப் பயன்படுத்தப்படுகிறது.

(1961-ல் பிறந்த) லின் டியன் மியாவோ (Lin Tian-miao) வினால் ஆக்கப்பட்ட கட்டுண்டும் கட்டுண்டிராமலும் (1997) என்ற படைப்பு கருவி கல அமைப்பு சம்பந்தப்பட்டுள்ளது--சமையல் பாத்திரங்கள், தட்டுக்கள், சீனாவின் வணிக அடையாள குச்சிகள், புட்டிகள், கேத்தில்கள், குவளைகள் மற்றும் பழைய தையல் எந்திரம் ஆகியன கொண்ட கருவி கல அடுக்குத் தோற்றம் ஆகும். ஆழமான மற்றும் தீவிரமில்லா வெண்மை வண்ணமும் நூலிழையும் அவற்றுக்கு களிமண் போன்ற தோற்றத்தைத் தருகிறது. எவ்வாறாயினும், 300 புதுமையான வகைகளின் நெருக்கமான ஆய்வு, இப்பொருட்கள் பருத்தி இழையால் சுற்றப்பட்டு, அவற்றின் அடிப்படை வடிவங்களைக் குறைத்துள்ளதைக் காட்டுகின்றன. பெரிய வீடியோ திரையில் ஒரு ஜோடி கத்தரிக்கோல்கள் நிலையாக தறியில் நூலை வெட்டுவதாகக் காட்டப்படுகின்றது. ஒலியமைப்பு வெட்டப்படுவது உணர்வுகளை மழுங்கடிக்கிறது மற்றும் வீட்டு வேலையின் அடிமைத்தனத்தையும் இலட்சக்கணக்கானோரின் சலிப்பூட்டும் அன்றாட வாழ்க்கையையும் கோடிட்டுக் காட்டுகின்றது.

பெற்றோர்கள் (1998), வாங் ஜின்சோங் (Wang Jinsong) கால் ஆக்கப்பட்ட 20 வண்ண நிழற்படங்களின் தொகுதி ஆகும். இது நடுத்தர மற்றும் வயதான தம்பதியர்கள் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் உள்ள உருவப்படங்கள். அவர்கள் அவர்களுக்கு மிகப்பிடித்த இடத்தில் அல்லது அறையில் நிற்கின்றார்கள் அல்லது உட்கார்ந்திருக்கிறார்கள், அவர்கள் மிக விரும்புகின்ற பொருட்களால் சூழப்பட்டிருக்கிறார்கள். ஒரு தம்பதியைப் பொறுத்தமட்டில் அது புத்தகத்தொகுதிகள், இன்னொரு தம்பதியருக்கு பியானோ, அதேவேளை காலாவதியாகிப் போன நாட்காட்டி மற்றொரு தம்பதியருக்கு பரிசளிக்கப்பட்ட உடைமையாக இருக்கிறது. இந்த நிழற்படங்கள் , ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் முதலாளித்துவ சந்தை ஆதரிப்பு, அதன் அரசாங்க விளம்பரம் மற்றும் "பணக்காரர் ஆவது கீர்த்தி மிக்கது" எனும் விளம்பரத்துடன் கடுமையாக வேறுபடும் வகையில், அமர்ந்திருப்போரின் வாழ்க்கையில் உள்ள சாதாரண மகிழ்ச்சிகளையும் அவர்களின் கெளரவத்தையும் மனிதத்தன்மையையும் உருவகப்படுத்துகின்றது.

இரத்த வழி: குடும்ப உருவப்படம் எண்2 (1994), ழாங் க்சியாவோகாங் (Zhang Xiaogang) ஆல் வரையப்பட்ட மிருதுவான நூலிழையிலான எண்ணெய்ப் பூச்சோவியம் ஆகும். திருமணமான தம்பதியரும் அவர்களது ஒரே குழந்தையும் --அரசாங்கத்தின் ஒரே குழந்தை குடும்பக் கட்டுப்பாட்டு திட்டத்தின் வேதனை மிக்க கருத்தாகும். கறுப்பு உடையில் ஒரு குடும்பம் முகத்தில் உணர்ச்சியே இல்லாமல் ஊன்றிய பார்வையுடன் அமர்ந்திருப்பதாய் காண்போருக்குத் தெரிகிறது. அதேவேளையில் பெற்றோர் குழந்தையுடன் மெல்லிய சிவப்புக் கோடுகளால் இணைக்கப்பட்டுள்ளனர், அங்கு அவர்களுக்கு இடையில் எந்தவிதமான உணர்வு ரீதியான பிணைப்பும் இல்லை. குழந்தை சாதாரணமாய் பெற்றோரின் சிறிய பதிப்பாக இருக்கிறது. ஒவ்வொரு பெற்றோர் முகத்திலும் ஒளிப்புள்ளி விழுகிறது. குழந்தை முகத்தின் ஒரு பகுதி இளஞ்சிகப்பில் மூழ்கி உள்ளது. கலைஞர்களால் தீட்டப்படும் இவ்வகைக் கருத்துடையவற்றுள் ஒன்றான இப்பூச்சோவியம் ஆழமான துன்பியல் பண்பைக் கொண்டிருக்கிறது.

இன்னொரு கிளர்ச்சி ஊட்டுகின்ற காரசாரமான பிம்பங்கள் இரண்டு, ஆள் உயர கறுப்பு வெள்ளை நிழற்படங்கள் ஆகும். அவை கலைஞர் சோங் யோங்பிங்-ன் பெற்றோர்களான திரு மற்றும் திருமதி சோங்கின் இளமைக்கால மற்றும் வயதான நிழற்படங்கள் ஆகும். பெருமைக்குரிய இளம் தம்பதிகளாக, திரு சோங் தனது இராணுவச் சீருடையிலும் அவரது மனைவி புரட்சிக்கு பிந்திய அதிகாரப்பூர்வ உடையிலும் உள்ளனர்.அவர்கள் பலமானவர்களாக, எதற்கும் தயாரானவர்களாக மற்றும் எதிர்காலத்தில் நம்பிக்கை கொண்டவர்களாகத் தோன்றுகின்றார்கள். இதில் நிழற்பட நிலையத்து நிழற்படங்களைப்போல, பின்புலத்தில் இனங்காணத்தக்கதாய் ஒன்றும் இல்லை. அச்சமய நிழற்படத்தில் திரு மற்றும் திருமதி சோங் அவர்களது சிறிய படுக்கை அறையில் உள்ளாடைகளுடன் நிற்கின்றனர். அவர்களின் உடல்கள் பல்லாண்டுகளான கடினமான வேலை மற்றும் துன்பங்களால் சுருக்கமுற்று, முதுமைப்பட்டதாக செதுக்கப்பட்டுள்ளது. அவர்களின் உணர்வு ரீதியான நோக்கம் போய்விட்டது, மிஞ்சி இருப்பது அவர்களின் வாழ்க்கை அனுபவங்களின் தழும்புகள்தான்.

உள்ளே வெளியில் வு ஷான் ழுவான் (Wu Shan Zhuan) இன் சிவப்பு நகைச்சுவை (1986), சுவரொட்டிகளிலிருந்து பெரிதாக கருவி கல அமைப்பு வேலை செய்யப்பட்டிருக்கிறது. ஷெஜியாங் (Shejiang) மாகாணத்தில் ழூஷான் (Zhoushan) இல் 1960ல் பிறந்த வு ஷான் ழுவான் இப்பொழுது ஜேர்மனியில் வசிக்கிறார். இவர் பாரம்பரிய சீன சுவரொட்டிகளில் அறை கட்டியுள்ளார். அதில் சிவப்பு மற்றும் கறுப்பு வண்ணங்களில் அரசியல் முழக்கங்கள், புத்த சிற்பங்கள், செய்யுள்கள் மற்றும் விளம்பரங்கள் விசிறி அடிக்கப்பட்டிருக்கின்றன. பல பார்வையாளர்களுக்கு வார்த்ததைகள் புரியாதிருக்கும் அதே வேளையில், கட்டுமானத்தில் எடுப்பான வண்ணங்கள், சீன எழுத்துக்களின் கோபம் கொண்ட குழப்பநிலை மற்றும் ஏதோ ஒதுக்கிடத்தில் கட்டுதல் ஆகியன கோப உணர்ச்சி, அதிருப்தி மற்றும் வழியற்ற தன்மையை உருவாக்குகின்றன.

இக்கண்காட்சியில் மிகவும் ஈர்க்ககூடிய படைப்புக்கள் வெண்டா கு (Wenda Gu) மற்றும் க்சு பிங் (Xu Bing) ஆகியோரின் படைப்புக்கள் ஆகும். 1955ல் ஷாங்காயில் பிறந்த கு 1987ல் அமெரிக்காவுக்கு சென்றார். இவர் பாரம்பரிய மைப் பூச்சோவியத்திலும் கையெழுத்துத்திறத்திலும் (Calligraphy) பரிசோதனைகள் செய்தார். புகழ் பெற்ற நிலப்பரப்பு பூச்சோவிய கலைஞர் லீ யான்ஷோ (Lee Yanshao) வின் மாணாக்கர் இவர். பாரம்பரிய பூச்சோவிய முறைகள் மற்றும் கையெழுத்துத் திறன்களை கேள்விக்குட்படுத்திய கு, 1984ல் மிகை யதார்த்தவாத தொழில் நுணுக்கங்களுடன் பாரம்பரிய மை மற்றும் தூரிகை ஓவியங்களின் நுட்பங்களையும், கண்டுபிடிக்கப்பட்ட சீன எழுத்துக்களைப் பயன்படுத்தலையும் சேர்த்து கூட்டிணைவாக்கத் தொடங்கினார்.

போலி எழுத்துக்கள் வரிசைகள்: உலகை ஆழ்ந்து பார்த்தல் (1984) என்பது, சுருள் வடிவச் சுவடியில் கருப்புமையால் ஆன மூன்று பெரிய ஓவியத் தொகுதியானது, அவரது படைப்பின் மற்றும் அவர் மை பூச்சோவியத்தில் ஆரம்பித்துவைத்த புதிய போக்கையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. பாரம்பரிய கருப்பொருள்களான --நிலம், நீர், வான், மேகம்-- ஆகியவற்றைப் பயன்படுத்தி --பெரிய மை ஓவியத்தின் நடுவில் சீன எழுத்தினை வைக்கிறார். ஆனால் சீன எழுத்து அர்த்தமற்றதாகவும் அதன் அளவு இருண்ட நிலப்பரப்பை அல்லாமல் அமைதியை ஊறுபடுத்துவதாகவும் அமைந்துள்ளது. பாரம்பரிய சீனப் படங்கள் செய்வதைப்போல அமைதி மற்றும் ஓய்வின் உணர்வுகளை உண்டு பண்ணுவதைக் காட்டிலும், படமானது கிளர்ச்சி ஊட்டுவதாகவும் அமைதி குலைவிப்பதாகவும் இருக்கிறது. நன்கு தெரிந்ததன் பின்னால் அச்சுறுத்தல் நிகழும் சாத்தியம் உள்ளது. பழைய உலகுடன் சில தவறாக இருக்கிற வேளையில், புதியவற்றுக்க நகர்வது தெரியாத ஆபத்துக்களை முன்வைக்கிறது.

உள்ளே வெளியில் இல் உள்ள இன்னொரு பிரமிப்பூட்டும் படைப்பு கு ஆக்கிய படைப்பாகும். ஐக்கிய நாடுகளின் வரிசைகள்: சொர்க்கத்தின் கோயில் (சீன நினைவுச் சின்னம்) (1998) எனபதாகும். நடுத்தர அளவுள்ள அறைக்குச் சமமான இடம், உலகம் முழுவதும் இருந்து சேகரிக்கப்பட்ட மனித முடியிலிருந்து செய்யப்பட்ட நறுக்குகளால் [துண்டுகளால்] சுற்றி வளைக்கப்பட்டிருக்கிறது. முடியானது, சீன எழுத்துக்களை, அர்த்தமற்ற ரோம எழுத்துக்களை மற்றும் ஏனைய கண்டுபிடிக்கப்பட்ட எழுத்துக்களை உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது. அறையில் நிறைய நாற்காலிகளுடன், தொலைக்காட்சி திரைகளில் நகரும் மேகங்களின் அடி அளவைக் காட்டுகிறது. ஐக்கிய நாடுகள் தொடர் கண்காட்சி ஒவ்வொன்றுக்கும் புதிய பதிப்புக்களை உருவாக்கினாலும், கருவி கல அமைப்பு, அவரது மை ஓவியத்தைப் போலவே புதிரான முறையில் அமைதி மிக்க மற்றும் உறுதி அற்ற உணர்வுகளை வெளிப்படுத்துகின்றது--- அறையானது உள் அமைதியின் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றது அதேபோல குழப்பமான கருத்துக்கள் மற்றும் தீர்க்கப்படாத பிரச்சினைகளின் கனவு போன்ற சூழலைக் காட்டுகிறது.

பல சீனக் கலைஞர்கள் கு வின் தெளிவில்லாத சீன எழுத்துக்களுடனான சோதனைகளால் ஊக்கப்படுத்தப்படுகின்றனர். டியன்ஷு (Tianshu) (வானிலிருந்து புத்தகம்) (1987-91) க்சு பிங் (Xu Bing) ஆல் செய்யப்பட்ட கருவி கல அமைப்பாகும். இதில் அவர் கையால் அச்சிடப்பட்ட புத்தகங்கள் மற்றும் பாரம்பரிய சீன அச்சுக்கலை உத்தியுடன் செய்யப்பட்ட சுருள்கள் மற்றும் கலைஞரால் கண்டுபிடிக்கப்பட்ட 2000க்கும் மேற்பட்ட கையால் செதுக்கப்பட்ட எழுத்துக்களைப் பயன்படுத்தி உள்ளார். க்சு, சிச்சிவான் (Sichuan) மாகாணத்தில் உள்ள சொங்குய்ங் (Chongquing) இல் 1955ல் பிறந்தார். 1990ல் அமெரிக்காவுக்கு சென்றார். பாரம்பரிய வடிவங்களுக்கும் கருவி கல அமைப்பின் வேறுபட்ட அளவுகளுக்கும் இடையிலான முரண்பாடு கவனத்தை ஈர்க்கக்கூடியதாகவும் சிந்தனையைத் தூண்டுவதாகவும் அமைந்துள்ளன.

சீனாவில் நிகழ்காலக் கலையின் எதிர்கால திசைவழி தெளிவாக இல்லை. அரசியல் மற்றும் கலாச்சார சூழல் குறிப்பாக கடினமானதாகவும் சோர்வுறச் செய்வதாகவும் உள்ளது. உள்ளே வெளியில் கண்கட்சியானது, அங்கு தங்களது கலைத்துவ ஒருமைப்பாட்டைப் பராமரித்துக் கொள்ளும் மற்றும் அறிவார்ந்த மற்றும் முரண்படும் கலைப்படைப்புக்களை தொடர்ந்து உருவாக்கி வரும் பல கலைஞர்கள் இருக்கின்றனர் என்று சுட்டிக்காட்டுகின்றது. அவர்களது முயற்சிகள் இன்னும் பரந்த பார்வையாளர்களை ஈர்க்கும் தகுதி வாய்த்ததாக இருக்கும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved