World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்: ஐரோப்பா

மிtணீறீஹ்'s ஙிமீக்ஷீறீusநீஷீஸீவீ ணீஸீபீ லீவீs "பிஷீusமீ ஷீயீ திக்ஷீமீமீபீஷீனீs"ணீ ஸீமீஷ் பீவீனீமீஸீsவீஷீஸீ வீஸீ tலீமீ பீமீஸ்மீறீஷீஜீனீமீஸீt ஷீயீ tலீமீ க்ஷீவீரீலீt ஷ்வீஸீரீ வீஸீ ணிuக்ஷீஷீஜீமீ

இத்தாலியில் பெர்லுஸ்கோனியும் அவரது ''சுதந்திரத்திற்கான வீடும்'' ஐரோப்பாவில் வலதுசாரிகளின் அபிவிருத்தியில் ஒரு புதிய மட்டத்தினை எடுத்துக்காட்டுகின்றது

By Peter Schwarz
7 May 2001

Back to screen version

இக்கட்டுரையின் முதல் பகுதி16/05/2001 ல் பிரசுரிக்கப்பட்டது. இரண்டாம் பகுதியை கீழே காணலாம்.

பெர்லுஸ்கோனியின் கூட்டுகட்சிகள்

பெர்லுஸ்கோனியின் ''சுதந்திரத்திற்கான'' போராட்டத்தில் அவரது முக்கிய கூட்டுக்கள் நவபாசிச தேசிய கூட்டணியும் (National Alliance), பிரிவினைவாத வடக்கு முன்னணியுமாகும் (Northern League).

தேசிய கூட்டணி (National Alliance) ஆனது பலபத்து வருடங்களாக இத்தாலியின் பாசிச முசோலினியின் கருத்துக்களை ஆதரித்துவரும் விஷிமி இல் இருந்து 90ஆம் ஆண்டுகளில் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டதாகும். அதன் தற்போதைய தலைவரான Gianfranco Fini இன் கீழ் அது தனது பாசிச கடந்தகாலத்திலிருந்து விலகி ஒரு பழைமைவாத, தேசியரீதியில் ஒழுங்கமைக்கப்பட்ட கட்சியாக காட்ட முனைகின்றது. இதன் அடித்தளத்தில் பினி நாசிகளின் கொலை முகாம்களின் நினைவாலயமான (Holocaust memorial) அவுஸ்விட்ஸ் (Auschwitz) இற்கு விஜயம் செய்ததுடன், பல வருடங்களாக இஸ்ரேலின் பகிரங்க அழைப்புக்காக முயற்சி செய்கின்றார். எவ்வாறிருந்தபோதிலும் MSI இன் பழைய அங்கத்தவர்களின் குரல் கட்சியினுள் முக்கியமாக ஒலிக்கின்றது.

அவர்கள் வெளியில் காட்டுவது போல் தமது பாசிச கடந்தகாலத்துடனான வரையறுப்பு தெளிவாக தெரியவில்லை. ''சுதந்திரத்திற்கான வீடு'' MSI இனை தேசிய கூட்டணியாக மாற்றமறுத்து தனது சொந்தக்கட்சியை உருவாக்கிய Pino Rauti உடன் தேர்தல் பேச்சுவார்த்தையை நடத்தியது. Pino Rauti இன் பாசிசவாதிகள் ''சுதந்திரத்திற்கான வீட்டுக்கு'' வாக்களிக்க அழைப்புவிடும் தறுவாயில் பெர்லுஸ்கோனியின் தேர்தல் சீட்டின் மூலம் அவர்களுக்கு பாராளுமன்ற பதவிகள் வழங்கவும், தேர்தல் பிரச்சார நிதியுதவி, மற்றைய அரசாங்க உதவிகள் வழங்கவும் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ளது.

வடக்கு முன்னணி (Northern League) பொருளாதார ரீதியில் வழமிக்க வட இத்தாலியின் ஒரு கூட்டுக்கலவையாகும். இது தமது உயர் வரிப்பணத்தின் மூலம் ரோமின் அரச அதிகாரத்துவத்திற்கும், வறுமையான தென் இத்தாலிக்கும் நிதிஉதவியளிப்பதற்கு எதிரானதாகும். Padua சுதந்திர அரசை அமைப்பதற்கான அவர்களின் நோக்கம் வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து தமது கொடிகளில் வெளிநாட்டவருக்கு எதிராக இனவாதத்தை எழுதியுள்ளனர்.

இதனுடன் தொடர்ந்து இக்கட்சி இனவாத பிரச்சாரங்களையும் தொடங்கியுள்ளது. அவர்கள் மசூதிகள் கட்டுவதற்கு எதிராக உள்ளிருப்பு வேலைநிறுத்தங்களையும், எதிர்ப்பு ஊர்வலங்களையும் ஒழுங்குசெய்துள்ளனர். இவர்கள் முஸ்லீம் குடிவரவாளரல்லாது கத்தோலிக்க குடிவரவாளரை மட்டும் உள்வர அனுமதிக்க கோரும் பழைமைவாத கத்தோலிக்க தேவாலயங்களினது ஆதரவை பெற்றுள்ளனர். மைலாந்துக்கு அருகாமையிலுள்ள லோடி என்ற இடத்தில் நிகழ்ந்த இரட்டை கொலை தொடர்பாக இவ் வடக்கு முன்னணி ''வெளிநாட்டவரின் குற்றச்செயல்களுக்கு'' எதிரான தீப்பந்த ஊர்வலத்தை ஒழுங்கு செய்தது. ஆனால் பின்னர் இக்கொலைகள் இத்தாலிய இளைஞர் ஒருவரால் செய்யப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டது.

உள்ளூர் மட்டத்தில் வடக்கு முன்னணி நாசிக் குழுக்களுடன் இணைந்து இயங்குகின்றது. இவர்களின் ஆதரவு மிக்க பிரதேசமான வெரோனாவில் உள்ள நகரசபை நிர்வாகம் நாசிகளின் இசைநிகழ்ச்சிகளையும், ''அவுஸ்விட்ஸ் பொய்களுக்கு'' எதிரான விரிவுரைகளையும், நாசிகளின் புத்தக வெளியீட்டாளரின் புத்தகவெளியீட்டு நிகழ்ச்சிக்கும் ஆதரவளித்துள்ளது. வெரோனாவின் உள்ளூர் உதைபந்தாட்ட கழகத்தின் ஆதரவாளர்கள் எதிர்கழகங்களில் விளையாடும் ஆபிரிக்க வீரர்களுக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் எதிராக கூச்சலிட்டதற்காக பத்திரிகைகளில் பிரபல்யப்படுத்தப்பட்டது. வெரோனாவின் உதைபந்தாட்ட கழகத்தின் தலைவர் தமது ஆதரவாளர்களின் எதிர்ப்பு காரணமாக தான் கறுப்பின வீரர்களை தமது கழகத்தில் ஈடுபடுத்த முடியாது என கூறியுள்ளார்.

''சுதந்திரத்திற்கான வீட்டின்'' இரண்டாம் கட்ட ஆதரவாளர்கள் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சிகளான CCD, CDU ஆகும். இதில் CDU வத்திக்கானுடனும், ஜேர்மனியின் CDU உடனும் நெருங்கிய உறவுகளை கொண்டுள்ள Rocco Buttiglione ஆல் தலைமைதாங்கப்படுகின்றது. அண்மைக்காலத்தில் Bobo Craxi ஆலும், முன்னாள் வெளிநாட்டு அமைச்சரான Gianni de Michelis ஆலும் தலைமை தாங்கப்படும் இத்தாலியின் சோசலிச கட்சியும் பெர்லுஸ்கோனியுடன் இணைந்துள்ளது. இது தற்செயலான நிகழ்வல்ல. Bobo Craxi இன் தந்தையாரும், முன்னாள் சோசலிச கட்சியின் தலைவரும், ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான முன்னாள் பிரதமருமான Bettino Craxi பெர்லுஸ்கோனியின் பின்னணியிலுள்ள முக்கிய ஆதரவாளராகும். 1970களில் சோசலிச கட்சியின் ஆதிக்கத்திலிருந்த மைலாந்தில் பெர்லுஸ்கோனி தனது பணத்தின் உதவியுடன், நிலக்கட்டிட ஊகவியாபாரியாக தனது அடிக்கல்லை நாட்டிக்கொண்டார்.

ஐரோப்பாவில் பிரதிவிளைவுகள்

பல பழைமைவாத கட்சிகளின் ஆதரவுடன் ஐரோப்பிய அரசாங்கங்கள் ஒஸ்ரியாவில் (Austria) அண்மையில் வலதுசாரி சுதந்திரக் கட்சி பதவிக்கு வந்தபோது அதன் மீது பொருளாதாரத் தடைகளை விதித்ததின் ஊடாக தமது பிரதிபலிப்பை காட்டின. ஆனால் பெர்லுஸ்கோனியின் எழுச்சி இப்போது அதே கட்சிகளால் தாராளமனதுடன் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.

முக்கியமான ஜேர்மன் CDU/CSU பெர்லுஸ்கோனியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு பாரிய உதவி வழங்கியுள்ளன. முன்னாள் பிரதமரான கெல்முட் கோலின் ஆதரவுடன் 1999 இல் வடக்கு முன்னணி, ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு ஐரோப்பிய மக்கள் கட்சியின் பிரிவாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அன்றிலிருந்து இது CDU இன் துணைக்கட்சியாக உள்ளது. தற்போது இக்கட்சி CDU சார்பான கொன்றாட் அடினவர் நிறுவனத்தினால் (Konrad Adenauer foundation) ஆலோசனைகள் வழங்கப்படுவதுடன், முக்கிய CDU அரசியல்வாதிகள் தேர்தல் பிரசார கூட்டங்களிலும் கலந்துகொண்டுள்ளனர். CDU இன் ஐரோப்பிய ஆலோசகரான Karl Lammers மார்ச் மாதம் ரோமில் நடைபெற்ற பாரிய கூட்டமொன்றில் பேசியதுடன், அதில் இச்சந்தர்ப்பம் கொன்றாட் அடினவர் நிறுவனத்தின் உதவியுடன் இது சாத்தியமானதற்கு ஜேர்மன் கிறிஸ்தவ ஜனநாயக்கட்சி பெருமைப்படுவதாக தெரிவித்தார்.

90ம் ஆண்டுகளின் பின்னர் கூடுதலான ஐரோப்பிய நாடுகளில், சமூக ஜனநாயக கட்சிகளால் ஆட்சி செலுத்தப்படுகையில், ஐரோப்பிய பழைமைவாதிகளும் கிறீஸ்தவ ஜனநாயக் கட்சிகளும் தாம் மற்றைய நாடுகளிலும் பதவிக்கு வருவதற்கான வழிவகுப்பதற்கான ஒரு மைல் கல்லாக இத்தாலியை நோக்குகின்றனர்.

இக்கட்சிகளில் பெரும்பாலானவை கடந்த 10 வருடங்களாக பாரிய நெருக்கடிக்குள் மூழ்கியுள்ளன. பொருளாதாரம் பூகோளமயமாக்கப்பட்டதும், சோவியத் யூனியனின் கலைப்பும் இக்கட்சிகளின் அடித்தளத்தை இல்லாதொழித்துள்ளன. தேசிய சந்தைகள் சர்வதேச போட்டிக்கு திறந்துவிடப்பட்டமை இக்கட்சிகளின் பாரம்பரிய சமூக அடித்தளமான மத்தியதர தட்டினரிடம் பாரிய விளைவுகளை உருவாக்கியுள்ளது. சோவியத் யூனியனின் கலைப்பு அவர்களின் முக்கிய தத்துவார்த்த ஆயுதமான கம்யூனிச எதிர்ப்பை இல்லாதொழித்துள்ளது.

இது இத்தாலியில் மிக தெளிவாகத்தெரிகின்றது. அண்ணளவாக 50 வருடங்களாக இத்தாலிய அரசியலில் ஆளுமை செலுத்திய Democrazia Christiana அரை டசின் சிறிய கட்சிகளாக உடைந்ததுடன், இவர்களில் எவரும் மிஞ்சியிருக்கவில்லை. பிரான்சில் கோலிஸ்டுகளும், தாராளவாதிகளும் உட்குழு முரண்பாடுகளாலும், ஊழல்களாலும், உடைவுகளாலும் நிரந்தரமான நெருக்கடிக்குள் இருக்கின்றனர். பிரித்தானியாவில் ஐரோப்பாவுடனான இணைவு தொடர்பான கேள்வி ரோரியினரை உடைவுக்குள்ளாக்கியதுடன், கடந்த தேர்தலில் பாரிய தோல்விக்கும் இட்டுச்சென்றது. ஜேர்மனியிலும் கெல்முட் கோல் பதவியிலிருந்து விலகியதிலிருந்து எந்த திசையில் போவது என்பது தொடர்பாக கிறிஸ்தவ ஜனநாயக் கட்சி பலமிழந்து போயுள்ளது.

இப் பழைமைவாத கட்சிகள் விட்டுச்சென்ற இடத்தை நிரப்புவதற்கு பல வலதுசாரிக் கட்சிகள் முயல்வதுடன், சில சந்தர்ப்பங்களில் ஓரளவு வெற்றியும் அடைந்துள்ளன. ஆனால் அவர்களும் தமது உறுதியற்றை தன்மையை காட்டுகின்றன. பிரான்சின் தேசிய முன்னணி (National Front) பிரிவுகளாக உடைந்து போயுள்ளது, ஒஸ்ரியாவின் சுதந்திரக் கட்சி (Freedom Party) உள்முரண்பாடுகளால் பிளவடைந்து போயுள்ளது. அதேவேளை இவர்கள் பாரம்பரிய வலதுசாரிக் கட்சிகளால் புறக்கணிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இத்தாலியின் செல்வம் மிக்க மனிதரான பெர்லுஸ்கோனிக்கு பொருளாதரத்தையும் தொலைத் தொடர்பு சாதனங்களையும் பழைய அரசியல் கட்டமைப்பையும் முக்கிய வலதுசாரிக் கட்சிகளையும் முதல் தடவையாக ஒரு கூட்டாக ஒன்றிணைக் கூடியதாக இருக்கின்றது.

அவரது அரசியல் நோக்கம் பாரம்பரிய கிறிஸ்தவ ஐனநாயகக் கட்சிகளை விட முற்றிலும் வித்தியாசமானது. குடும்பம், சமுதாயம் தொடர்பாக கத்தோலிக்க நிலைப்பாட்டை எடுக்கையில், மூர்க்கமான தேசிய வாதத்தையும் இனவாதத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவதுடன், பொருளாதாரத்தின் மீதான அரச கட்டுப்பாட்டிற்கு மாறாக முற்றுமுழுதான பொருளாதார தாராளவாதத்தை கடைப்பிடிக்கின்றார்.

இவரின் நிலைப்பாடு தொடர்பாக புகழக்கூடியவராக 80 களில் பிரித்தானியாவை ஆட்சி புரிந்த பழைமைவாத மார்கிரட் தட்சராக இருக்கலாம். தட்சர் தனது கொள்கைகளை நடைமுறைப்படுத்த பாரம்பரிய ரோரிக்கட்சியினரில் தங்கியிருக்க வேண்டியிருந்தது. ஆனால் பெர்லுஸ்கோனி பாசிசவாதிகளுடனும், இனவாதிகளுடனும் கூட்டுக்கு சென்றுள்ளார். மே மாதம் 13 ம் திகதி வெற்றிபெறுவாரானால், இது ஐரோப்பாவில் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியினரின் கீழ் அவருடைய கொள்கைகளை நடைமுறைப்படுத்த விரும்பும் ஜேர்மன் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் Roland Koch போன்ற வலதுசாரிகளை பலமடையச்செய்யும்.

பெர்லுஸ்கோனியின் வெற்றி

பெர்லுஸ்கோனியின் வெற்றியின் இரகசியம் தொடர்பாக பல ஊகங்கள் இருக்கின்றன. தொலைத்தொடர்பு சாதனங்கள் மீதான ஆதிக்கமும், விளம்பரத் துறையின் நுட்பம் மீதான ஆழுமையும், எல்லையற்ற நிதிவழங்களும் ஒரு முக்கிய பங்கை வகிக்கலாம். ஆனால் இறுதி ஆய்வுகளில் பெர்லுஸ்கோனியின் தோற்றத்திற்கான அரசியல் காரணங்கள் விளங்கப்படுத்தப்பட வேண்டும்.

இங்குதான் தொழிலாள வர்க்க இயக்கத்தின் நெருக்கடி முக்கிய பங்குவகிக்கின்றது. பாரம்பரிய தொழிலாளர் இயக்கங்களான இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியும், தொழிற்சங்கங்களும் 20 வருடங்களாக தொடர்ச்சியாக வலதுசாரிப்பக்கம் சென்றுள்ளதுடன், அடிப்படையான சமூக வெற்றிகளையும் உரிமைகளையும் பாதுகாப்பதை கைவிட்டுவிட்டன.

1994ம் ஆண்டு அரசியலமைப்பை உலுப்பிய ஊழல்களுக்கு மத்தியில் முதல் தடவையாக பெர்லுஸ்கோனி பதவிக்கு வருகையில் ஓய்வு ஊதியத்தின் மீதான அவரின் தாக்குதல் பாரிய எதிர்ப்பை உருவாக்கியது. அவரது கூட்டரசு உடைந்து கொட்டியபின் ஒருதொடர் இடைக்கால அரசாங்கங்களின் பின்னர் 1996 இல் ''ஒலிவ் மர'' கூட்டு பதவிக்கு வந்தது. இதன் முதுகெலும்பாக இருந்தது முன்னாள் இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியாகும்.

5 வருட மத்திய- இடது அரசாங்கமானது பாரியளவில் மதிப்பிழந்து போனது. இது பெர்லுஸ்கோனி பதவிக்கு வருவதற்கான சாத்தியகூற்றை உருவாக்கியுள்ளது. அவர் பாரிய மக்கள் திரளினரின் ஆதரவில் இல்லாது, பாரிய மக்கள் மத்தியிலிருக்கும் உத்தியோக அரசியலில் இருந்து அந்நியப்பட்ட தன்மையையிலும், அரசியல் அமைதிப்போக்கிலும் தங்கியுள்ளார்.

இந்த அபிவிருத்தியானது மக்கள் ஆய்வு ஒன்றில் வெளிப்பட்டுள்ளது. Ispo Institute ஆனது எடுத்த கணிப்பீட்டில் 15% மக்கள் அரசியலையும் அரசியல்வாதிகளையும் நம்புவதாகவும், 50% ஆனோர் நம்பிக்கையீனத்தையும் அதிருப்தியையும் வெறுப்பையும், 25% ஆனோர் அசிரத்தையையும் ஆர்வமின்மையையும் காட்டுவதாக எடுத்துக்காட்டியுள்ளது.

பாரம்பரிய கட்சிகள் பல மில்லியன் கணக்கான அங்கத்தவர்களை கொண்டிருக்கையில், இத்தாலி மேற்கு ஐரோப்பாவில் அரசியல்மயமற்ற நாடாக மாறியுள்ளது. வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமையும், வாக்காளர்களின் எதிர்ப்பும் பாரியளவில் அதிகரித்துள்ளது. கடந்த தேர்தலில் வாக்களிக்காதவர்களே அதிகமாகும்.

இந்த அரசியல் வெற்றிடம் காரணமாக பெர்லுஸ்கோனி மோசமான, பிற்போக்கான முறைகள் வெற்றியளிக்கும். தொழிலாள வர்க்கத்தின் எழுச்சியானது விரைவில் பெர்லுஸ்கோனியை ஆடைகளற்ற அரசனாக்கும். ''ஒலிவ் மர'' கூட்டிலிருந்தும், அதன் ஆதரவாளர்களிடமிருந்தும் ஒன்றையும் எதிர்பார்க்க முடியாது. இவர்கள் இத்தேர்தலில் வெற்றி பெற்றாலும் கூட அது வலதுசாரிகளின் அடித்தளத்தை பலப்படுத்தும்.

பெர்லுஸ்கோனிக்கும், அவர் உள்ளடக்கியிருக்கும் அரசியல் அபாயத்திற்கான பதில் தொழிலாள வர்க்கம் சோசலிச அடித்தளத்தில் ஒரு புதிய கட்சியை கட்டுவதிலேயை தங்கியுள்ளது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved