World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்

US planned war in Afghanistan long before September 11

செப்டம்பர் 11க்கு நீண்டகாலம் முன்னரே ஆப்கானிஸ்தானில் போருக்கு அமெரிக்கா திட்டமிருந்தது

By Patrick Martin
20 November 2001

Back to screen version

பிரிட்டிஷ், பிரெஞ்சு மற்றும் இந்திய செய்தி ஊடகங்களில் வெளியிடப்பட்ட உள்ளிருப்போரின் கணக்குப்படி 2001 கோடையின் பொழுது ஆப்கானிஸ்தானுக்கு எதிராக யுத்தம் தொடுக்கப் போவதாய் அமெரிக்க அதிகாரிகள் அச்சுறுத்தியதை வெளிப்படுத்தி இருக்கின்றன. "இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக இருந்தால், அது அக்டோபர் நடுவில் முன்பகுதியில் ஆப்கானில் வெண்பனி விழத் தொடங்குவதற்கு முன்னரே இடம் பெறும் என்று கணிப்பிட்டது உட்பட இவ்வறிவிப்புக்கள் ஜூலையில் செய்யப்பட்டன. புஷ் நிர்வாகம் மகிழ்ச்சி அற்ற, வறுமை பீடித்த நாட்டின் மீது அக்டோபர் 7ல் குண்டுகளை வீசித் தாக்கியது, மற்றும் அக்டோபர் 19ல் அமெரிக்க அதிரடிப்படைகளால் தரைவழித் தாக்குதலைப் புஷ் நிர்வாகம் ஆரம்பித்தது.

இந்த வெளிப்படுத்தல்கள் அமெரிக்காவைக் காட்டிலும் வெளிநாடுகளில் காணப்பட்டிருப்பது தற்செயலானது அல்ல. இந்நாடுகளில் உள்ள ஆளும் வர்க்கங்கள் அவர்கள் பேணவிருக்கும் சொந்த பொருளாதார மற்றும் அரசியல் நலன்கள், மத்திய ஆசியாவில் உள்ள எண்ணெய் வளம் மிக்க எல்லைப் பகுதிகளை கட்டுப்பாட்டில் எடுப்பதற்காக அமெரிக்க ஆளும் தட்டால் மேற்கொள்ளப்படும் ஓட்டத்துடன் பொருந்திப் போவதில்லை, மற்றும் சில விஷயங்களில் அவை நேரடியாக மோதுகின்றன. செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்கதல்களுக்குப் பதிலாக, முற்றிலும் பெருக்க முற்றதாய், யுத்தம் தோன்றியது என்ற பாசாங்கை தக்க வைக்கும் பொருட்டு ஆப்கானிஸ்தானுக்கு எதிரான யுந்தத்தின் பின்னே கிடக்கும் உண்மையான பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களை முறையாய் மூடிமறைக்கும் வேலையை அமெரிக்க செய்தி ஊடகம் செய்து வருகின்றது.

அமெரிக்கத் தொலைக்காட்சி வலைப்பின்னல்கள் மற்றும் நாளிதழ்களுக்கான பண்டிதர்கள் தலிபான் ஆட்சியின் விரைந்த இராணுவத் தோல்வியை எதிர்பாராது அடித்த நல் அதிர்ஷ்டமாகக் கொண்டாடுகின்றனர். கடந்த இருவாரங்களின் நிகழ்ச்சிகளை அக்கறையுடன் கவனித்து வரும் எவரும் அதிலிருந்த பெற்றாக வேண்டிய படிப்பினைகளில்: அமெரிக்க ஆதரவுப்படைகளின் விரைவான வெற்றியானது, உலக வர்த்தக மையத்தின் மீதும் பெண்டகன் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு முன்னரே அமெரிக்க இராணுவத்தால் ஆன கவனமான திட்டமிடலும் தயாரிப்பும் பற்றியதில்-- இருந்து பெறும் முடிவுகளிலிருந்த பொது மக்களின் கவனத்தை அவை சிதறடிக்கின்றன

நான்கு விமானங்கள் கடத்தப்பட்ட மற்றும் கிட்டத்தட்ட 5000 பேர் கொல்லப்பட்ட அந்நாளில் "எல்லாமே மாறிவிட்டது" என்று உத்தியோகபூர்வ அமெரிக்கக் கட்டுக்கதை இருக்கிறது. இந்தக் கணக்கினால் ஆப்கானிஸ்தானில் இராணுவத் தலையீடு ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்தில் அவசர அவசரமாக திடீரென்று நடத்தப்பட்டது. நவம்பர்18 தொலைக்காட்சி நேர்காணலில், துணைப் பாதுகாப்புச் செயலர் போல் வோல்போவிட்ஸ், இராணுவத் தாக்குதலைத் திட்டமிட மூன்று வாரங்கள் மட்டுமே ஆனது என்று உண்மையில் குறிப்பிட்டார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான யுத்தம் பற்றி வெள்ளை மாளிகையிலிருந்தும் பென்டகனிலிருந்தும் ஊற்றெடுக்கும் எண்ணற்ற பொய்களில் இதுவும் ஒரு பொய்யாகும். பயங்கரவாதத் தாக்குதல்கள் அதனை இயக்குவிப்பதற்கான சாக்குப் போக்கை வழங்குவதற்கு நீண்ட காலம் முன்னதாகவே அமெரிக்கத் தலையீட விரிவாகவும் கவனமாகவும் தயாரிக்கப்பட்டது என்பது உண்மை. வரலாறு செடம்பர் 11ஐத் தாண்டிச் சென்றிருக்குமானால், மற்றும் அந்நாளின் சம்பவங்கள் ஒருபோதும் நடந்திராது இருக்குமாயின், எந்தவிதத்திலும், பெரும்பாலும் அதே திட்டப்படி, ஐக்கிய அமெரிக்க அரசுகள் ஆப்கானிஸ்தானில் யுத்தத்திற்குச் சென்றிருக்கும் என்பது மிகவும் ïடக்கக்கூடியதுதான்.

ஆப்கானிஸ்தானும் எண்ணெய்க்கான முண்டியடிப்பும்

ஐக்கிய அமெரிக்க அரசுகளது ஆளும் தட்டு மத்திய ஆசியாவில் யுத்தத்தை குறைந்த பட்சம் ஒரு தசாப்தகாலமாக சிந்தித்து வந்திருக்கின்றன. 1991க்கு முன்னதாக, பாரசீக வளைகுடாப் போரில், ஈராக்கின் தோல்விக்குப் பின்னர், நியூஸ் வீக் இதழ் 'வன்பாலைக் காப்பு நடவடிக்கை?' என்று தலைப்பிடப்பட்ட கட்டுரையை வெளியிட்டது. சவுதி அரேபியா, குவெய்த் மற்றும் ஈராக்கில் பாலைவன நடவடிக்கை அணிவகுப்பை மாதிரியாகக் கொண்ட கஜக்கஸ்தானில் ஒரு நடவடிக்கையை அமெரிக்க இராணுவம் தயார் செய்து கொண்டிருந்தது என செய்தி வெளியிட்டிருந்தது.

1991ல் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு மத்திய ஆசியாவில் அமெரிக்க அதிகாரத்தை முன்னிலைப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கியது எனில், பரந்த எண்ணெய் மற்றும் எரிவாயு சேர்மக் களங்களின் கண்டுபிடிப்பு ஊக்கத்தைக் கொடுத்தது. அஜர்பைஜான் காஸ்பியன் கடற்கரை (பாக்கு) நூற்றாண்டு காலமாக எண்ணெய் உற்பத்தி மையமாக இருந்து வரும் அதேவேளையில், கடந்த தசாப்தத்தில் தான் வடமேற்கு காஸ்பியன் (கஜகஸ்தான்) மற்றும் துர்க்மேனிஸ்தானில், தென்மேற்கு காஸ்பியன் அருகே புதிய சேர்மக் களங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தப் புதிய எண்ணெய் வயல்களின் உற்பத்தியில் 75 சதவீதம் அளவுக்கு அமெரிக்க எண்ணெய்க் கம்பெனிகள் உரிமை பெற்று இருக்கின்றன, மற்றும் அமெரிக்க அரசாங்க அதிகாரிகள் நிலையற்ற பாரசீக வளைகுடாப் பிராந்தியத்தில் தங்கி இருப்பதற்கு ஒரு உள்ளுறை மாற்றாக காஸ்பியன மற்றும் மத்திய ஆசியாவை வரவேற்றுள்ளனர். இந்த ஒப்பந்தங்களைப் பின் தொடர்ந்து அமெரிக்கத் துருப்புக்கள் இறங்கி உள்ளன. அமெரிக்க சிறப்புப் படைப் பிரிவுகள் 1997ல் கஜக்கஸ்தானில் கூட்டு நடவடிக்கைகளை ஆரம்பித்தன மற்றும் ஒரு ஆண்டு கழித்து உஸ்பெக்கிஸ்தானுடன் சேர்ந்து, சிறப்பாக கிர்கிஸ்தான், தஜிக்கிஸ்தான மற்றும் வட ஆப்கானிஸ்தான் உள்ளடங்கலான தெற்கு மலைப் பிராந்தியத்தில் தலையீடு செய்வதற்காகப் பயிற்சி எடுத்தன.

மத்திய ஆசியாவின் சக்தி வளங்களைச் சுரண்டுவதில் பிரதான பிரச்சினை, உலகச் சந்தைக்கு நிலத்தால் சூழப்பட்டிருக்கும் பிராந்தியத்திலிருந்து எப்படி எண்ணெயையும் எரிவாயுவையும் எடுப்பது என்பதுதான். அமெரிக்க அதிகாரிகள் குயழாய் வழிப்பாதை அமைப்பைப் பயன்படுத்துவதையும் சரி ஈரானின் குறுக்காக பாரசீக வளைகுடாவுக்கு செல்லும் மிக எளிதான இருக்கின்ற தரைவழித் தடத்தையும் சரி எதிர்த்து வருகின்றனர். பதிலாக கடந்த தசாப்தம் முழுவதும், அமெரிக்க எண்ணெய்க் கம்பெனிகளும் அரசாங்க அதிகாரிகளும் வரிசைக்கிரமமான மாற்று குழாய் வழித் தடங்களை -- மேற்கில் அஜர்பைஜான், ஜோர்ஜியா மற்றும் துருக்கி வழியாக மத்தியதரைக் கடலுக்கு; கிழக்கில் கஜக்கஸ்தான் மற்றும் சீனா வழியாக பசிபிக் கடலுக்கு; மற்றும் தற்போதைய நெருக்கடிக்கு மிகப் பொருத்தமுள்ளதான, தெற்கில் மேற்கு ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தான் வழியாக இந்துப் பெருங்கடலுக்கு -- கண்டறிந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் குழாய்வழித் தடம் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட யுனோகால் எண்ணெய்க் கம்பெனியால் முன்றுக்குத் தள்ளப்பட்டது, அது தலிபான் ஆட்சியுடன் மும்முரமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இருப்பினும், இப்பேச்சுவார்த்தைகள், ஒசாமா பின் லேடன் பொறுப்பாக இருந்த கென்யாவிலும் தான்சானியாவிலும் அமெரிக்கத் தூதரகங்களின் மேல் குண்டுத் தாக்குதலால்-- 1998ல் குழப்பத்தில் முடிந்தது.1998 ஆகஸ்டில், கிளிண்டன் நிர்வாகமானது கிழக்கு ஆப்கானிஸ்தானில் பின் லேடன் பயிற்சி முகாம் என்க் கூறப்படுவதன் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது.அமெரிக்க அரசாங்கம் தலிபான் பின் லேடனை ஒப்படைக்க வேண்டும் பொருளாதாரத்தடை விதிக்க வேண்டும் என்று கோரியது. குழாய்வழிப்பாதை பேச்சுவார்த்தைகள் வலுவிழந்து போயின.

தலிபானை வீழ்ச்சியுறச் செய்தல்

1999 முழுவதும் ஆப்கானிஸ்தான் மீதான அழுத்தம் அதிகரித்தது. அந்த ஆண்டு பிப்ரவரி 3ல், ராஜாங்க உதவிச் செயலர் கார்ல் இ. இன்டர்பர்த் மற்றும் அரசுத்துறை பயங்கரவாத எதிர்ப்பு தலைவர் மைக்கேல் ஷீஹான், தலிபானின் துணை வெளியுறவு அமைச்சர் அப்துல் ஜலீலைச் சந்திப்பதற்கு பாக்கிஸ்தானுக்கு, இஸ்லாமாபாத்துக்குப் பயணம் செய்தனர். அவர்கள் பின் லேடனால் மேலும் பயங்கரவாத நடவடிக்கைகள் எதுவும் நடைபெற்றால் அதற்காக ஆப்கானிஸ்தான் அரசாங்கம் பொறுப்பு என எச்சரித்தார்.

வாஷிங்டன் போஸ்ட் (அக்டோபர்3,2001)ல் செய்தியின்படி, கிளிண்டன் நிர்வாகமும் அப்போதைய பாக்கிஸ்தான் ஜனாதிபதியான நவாஸ் ஷெரிப்பும், 1999ல் பின் லேடனைக் கொல்வதற்கு கூட்டு நடவடிக்கைக்கு உடன்பட்டனர். அமெரிக்க செயற்கைக்கோள் உளவுத் தகவல்களை, விமானத் தாக்குதல் மற்றும் நிதி அளிப்புக்கும், அதேவேளை பாக்கிஸ்தான் பஷ்துன் பேசும் இயக்குவிப்பாளர்களை அளிக்கும்--அவர்கள் தெற்கு ஆப்கானிஸ்தானில் ஊடுருவி உண்மையான கொலைகளைச் செய்வர்.

பாக்கிஸ்தானிய அதிரடிப்படைக் குழு 1999 அக்டோபர் அளவில் தாக்குதலுக்கு ஆயத்தமாக, உருவாக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருந்தது என்று போஸ்ட் செய்தி வெளியிட்டது. முன்னாள் அதிகாரி ஒருவர் பத்திரிகையிடம் கூறினார்: "அது ஒரு அமைப்பு........ அது மேற்சென்று கொண்டிருந்தது" கிளிண்டன் உதவியாளர்கள் வெற்றிகரமான சதிப்படுகொலையின் முன்னேற்றத்தில் மகிழ்ச்சி கொண்டிருந்தனர், அதில் ஒருவர் "அது கிறிஸ்மஸ் நாள் போல இருந்தது" என்று அறிவித்தார்.

ஷெரிப், ஜெனரல் பர்வெஸ் முஷாரப்பால் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு சதியால் தூக்கி எறியப்பட்ட பொழுது, தாக்குதல் 1999, அக்டோபரில் கருக்கலைக்கப்பட்டது. அவர் முன்மொழியப்பட்ட இரகசிய நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தினார். கிளிண்டன் நிர்வாகம் "தகுந்த பொறுப்பாளர்களுக்கு" பின் லேடன்பால் திருப்பிப் பரிசீலனை செய்யக் கோரும் ஐ.நா பாதுகாப்புச் சபையின் தீர்மானம் மூலம் தீர்க்கப்பட இருந்தது, ஆனால் அவர் ஐக்கிய அமெரிக்க அரசுகளிடம் ஒப்படைக்கப்படுவது தேவையில்லாததாக இருந்தது.

மக்பர்லேனும் அப்துல்ஹக்கும்

றேகன் நிர்வாகத்தின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் றொபர்ட் மக்பர்லேனால் எழுதப்பட்டு, நவம்பர்2ம் தேநி வோல்ஸ்ட்ரீட் பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட கணக்கின்படி, தலிபானுக்கு எதிரான அமெரிக்காவின் வீழ்ச்சியுறச் செய்யும் முயற்சி 2000ல் தொடர்ந்தது. பாக்கிஸ்தானில் உள்ள ஆப்கன் அகதிகள் மத்தியில் ஆளெடுத்து, தலிபான் எதிர்ப்புக் கூலிப்படையை அமைப்பதில் அவர்களுக்கு உதவி செய்ய, மக்பர்லேன், ஜோசப் மற்றும் ஜேம்ஸ் ரிட்ச்சி எனும் இரு சிகாக்கோ சரக்கு ஊகவணிகர்களால் வாடகைக்கு அமர்த்தப்பட்டார். அவர்களது முக்கிய ஆப்கான் தொடர்பு முன்னாள் முஜாஹைதீன் தலைவரான அப்துல்ஹக் ஆவார். இவர் தனது சொந்த மாகாணத்தில் கலகத்தைத் தூண்டிவிடும் முயற்சியில் தோல்வியுற்ற பின்னர், கடந்த மாதம் தலிபானால் தூக்கிலிடப்பட்டார்.

மக்பர்லேன் அப்துல்ஹக்குடனும் ஏனைய முன்னாள் முஜாஹைதீன்களுடனும் 2000ம் ஆண்டு குளிர்காலம் மற்றும் அதன் முடிவின்போது சந்திப்புக்களை நிகழ்த்தினார். புஷ்நிர்வாகம் அலுவலகத்தை பொறுப்பேற்றதும், மக்பர்லேன் அவரது குடியரசுக்கட்சி தொடர்புகளூடாக அரசுத்துறை, பென்டகன் மற்றும் வெள்ளை மாளிகை அதிகாரிகளுடனும் கூட வரிசைக்கிரமமான சந்திப்புக்களை நிகழ்த்தினார். அனைவரும் தலிபான் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான தயாரிப்பை ஊக்கப்படுத்தினர்.

தலிபான் மீது விமானத் தாக்குதலை ஐக்கிய அமெரிக்க அரசுகள் நடத்துதற்கு வெகு காலம் முன்னரே, கோடையின் பொழுது, ஜேம்ஸ் ரிச்சி அப்துல்ஹக் மற்றும் முதலாவது புஷ் நிர்வாகத்தில் ஆப்கான் எதிரணியினருக்கு அமெரிக்க சிறப்புத் தூதுவராக இருந்திருந்த பீட்டர் டோம்செனுடன் சேர்ந்து தஜிக்கிஸ்தான் சென்றார். அங்கு அவர்கள் தங்களின் பாக்கிஸ்தானைத் தளமாகக் கொண்ட தாக்குதல்களை, தலிபானுக்கு எதிர்பை வழங்கிக் கொண்டிருந்த ஒரே இராணுவ சக்தியுடன் ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன், வடக்கு கூட்டணி தலைவர் அஹ்மது ஷா மசூத்தை சந்தித்தனர்.

இறுதியாக, மக்பர்லேன்படி, அப்துல்ஹக் "ஆப்கானிஸ்தானில் நடவடிக்கைகளைத் தொடங்க மற்றும் முன்செல்ல ஆகஸ்டு மத்தியில் முடிவு செய்தார். அவர் இறுதித் தயாரிப்புக்களைச் செய்வதற்கு பாக்கிஸ்தான், பெஷாவருக்குத் திரும்பினார்." வேறு வார்த்தைகளில் சொன்னால், தலிபானுக்கு எதிரான யுத்தத்தின் இந்தப் பகுதி செம்டம்பர்11க்கு முன்னரே சென்று கொண்டிருந்தது.

ரிச்சிகளின் தந்தை 1950களில் ஒரு பொறியாளராக வேலைசெய்தவேளை, அவர்கள் சிறிது காலம் வாழ்ந்த நாடு ஆப்கான், அதனுடன் தொடர்புடைய உணர்வுகளால் நோக்கங்கொண்ட சுதந்திரமாய் இயங்கும் நடவடிக்கையாளராக அமெரிக்க செய்தி ஊடகங்களால் ரிச்சிகள் காட்டப்பட்ட அதேவேளையில், குறைந்த பட்சம் ஒரு செய்தியாவது அவர் தலிபானுடனான எண்ணெய் குழாய்வழிப்பாதை பற்றிய கலந்துரையாடல்களில் தொடர்புடையவராகக் கருத்துரைத்தது.1998ல் ஜேம்ஸ் ரிச்சி சிறிய வர்த்தகத்தை ஆதரிப்பதற்கான திட்டம் ஒன்றை தலிபானுடன் கலந்துரையாடுவதற்கு ஆப்கானிஸ்தானுக்கு விஜயம் செய்தார். அவருடன் செளதி அரேபியாவின் டெல்டா எண்ணெய்க் கம்பெனியிலிருந்து வந்த அதிகாரியுடன் சென்றிருந்தார். அது அர்ஜெண்டினிய நிறுவனத்துடன் பங்குதாரராக, ஆப்கான் வழியாக எரிவாயு குழாய்வழிப் பாதை அமைப்பதை விரும்பியது.

சி.ஐ.ஏ இரகசிய யுத்தம்

மக்பர்லேனின் வெளிப்படுத்தல்கள் ஆப்கானில் அப்துல் ஹக்கின் நடவடிக்கைகளை ஆதரிக்கத் தவறி, மற்றும் அவரை தலிபானின் கைகளில் சாகடிக்க விட்டதற்கு, அவரைக் "காட்டிக் கொடுத்ததற்காக" சி.ஐ.ஏக்கு எதிரான பழியுரையின்போது வருகின்றன. சி.ஐ.ஏ சான்று பூர்வமாக மக்பர்லேனையும் அப்துல்ஹக்கையும் குறைவான நம்பிக்கைக்குரியவர்களாகக் கருதியது- மற்றும் பஷ்துன் பெரும்பான்மையாக உள்ள ஆப்கானின் தென்பாதி பகுதியில் அதே பிராந்தியத்தில் நடத்துவதற்கு அது தனது சொந்த இரகசிய யுத்தத்தை வைத்திருந்தது.

நவம்பர்18 வாஷிங்டன் போஸ்டில் இடம் பெற்ற முதற்பக்கக் கட்டுரையின்படி, 1997க்குப் பின்னர் சி.ஐ.ஏ தெற்கு ஆப்கானில் இராணுவத் துணைப்படை நடவடிக்கைகளை குவித்து வந்திருக்கின்றது. கட்டுரையானது, வாட்டர்கேட் விவகாரத்தால் புகழ்பெற்ற போஸ்ட் எழுத்தாளர் பொப் வுட்வர்டின் குறிப்பை குறிப்பிட்டது. அவர் உயர்மட்ட இராணுவம் மற்றும் உளவு அதிகாரிகளிடமிருந்து கசியும் விஷயங்களுக்கான குழாயாக தொடர்ந்து இருக்கிறார். வுட்வர்ட் தற்போதைய இராணுவ மோதலில், இரகசிய இராணுவத் துணைப்படைப்பிரிவை, சிறப்பு செய்ல்பாட்டு பிரிவை நிறுவுதல் உள்ளடங்கலான சி.ஐ.ஏ பாத்திரம் பற்றி விவரங்களை வழங்குகிறார். தளத்தில் செயல்படும் இயக்கிகள் மற்றும் ரிமோட் கண்டரோலில் ஏவுகணைகளை இயக்கக் கூடியவகையில் சாதனங்களைக் கொண்ட முன்கூட்டிய கண்காணிப்புப் பிரதேசங்கள் ஆகிய இரண்டையும் பயன்படுத்தும் மோதலை இந்தப் படை செப்டம்பர் 27 அன்று தொடங்கியது.

சிறப்பு செயல்பாட்டுப் பிரிவு, இராணுவச் சீருடை அணியாத அரைடஜன் ஆட்களைக் கொண்டதாக உள்ளது என வுட்வர்ட் குறிப்பிடுகிறார். இப்பிரிவு 150 வீரர்கள், பைலட்டுகள் மற்றும் வல்லுநர்களைக் கொண்டுள்ளது மற்றும் அது பெரும்பாலும் அமெரிக்க இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவத்தினரைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

"கடந்த 18 மாதங்களாக, சி.ஐ.ஏ தெற்கு ஆப்கானில் அகதிகள் மற்றும் யுத்தப் பிரபுக்களுடன் சேர்ந்து வேலைசெய்தது மற்றும் படைப்பிரிவின் அலகுகள் தலிபானின் மிகப் பலமான பிராந்தியத்தில் குறிப்பிடத்தக்க வலைப்பின்னல்களை உருவாக்க உதவி செய்திருக்கிறது. இதன் அர்த்தம், உலக வர்த்தக மையத்தையும் பென்டகனையும் தற்கொலை விமானக் கடத்தல்கள் அழிப்பதற்கு ஒரு ஆண்டுக்கு முன்னர், 2000ஆண்டு வசந்த காலத்திலிருந்து, ஆப்கான் ஆட்சிக்கு எதிராக அமெரிக்க உளவு நிறுவனமானது, மற்றைய சூழ்நிலைமைகளில் அமெரிக்க அரசாங்கம் இதனைப் பயங்கரவாதம் என்று அழைக்கும்- இத்தாக்குதலில் ஈடுபட்டிருந்தது என்பதாகும்.

யுத்தத் திட்டங்கள் வடிவமெடுத்தல்

வெள்ளை மாளிகையில் ஜோர்ஜ் புஷ்ஷை அமர்ந்தியதுடன், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கக் கொள்கை பின் லேடனைப் பிடிக்க அல்லது கொல்ல உள்ளேறித் தாக்குதல் என்ற நிலையிலிருந்து தலிபான் ஆட்சி மொத்தத்தையும் நோக்கிய மிக வலுவான இராணுவத் தாக்குதலைத் தயாரிப்பதற்கு இடம்பெயர்ந்தது.

"ஆப்கானிஸ்தானின் தலிபான் ஆட்சிக்கு எதிராக ஒன்று சேர்ந்த முன்னனியில்" -புதிய அமெரிக்க நிர்வாகம் இந்தியா, ஈரான் மற்றும் ரஷ்யாவுடனும் சேர்ந்து வேலை செய்தது என்று பிரித்தானியாவை தளமாகக் கொண்ட ஜேன்ஸ் சர்வதேசப் பாதுகாப்பு எனும் இதழ் மார்ச்15, 2001அன்று செய்தி வெளியிட்டது. வடக்குக் கூட்டணிக்கு இந்தியா இராணுவ சாதனம், ஆலோசகர்கள் மற்றும் ஹெலிகாப்டர் தொழில் நுட்ப வல்லுநர்களை அளித்தது மற்றும் இந்தியா, ரஷ்யா இரண்டும் தங்களின் நடவடிக்கைகளுக்காக தஜிக்கிஸ்தான் மற்றும் உஸ்பெக்கிஸ்தான் இரண்டிலும் தளங்களைப் பயன்படுத்திக் கொண்டிருந்தனர் என்று அவ்விதழ் குறிப்பிட்டது.

அந்த இதழ் குறிப்பிட்டதாவது: "புதிதாக அமைக்கப்பட்ட இந்தோ-அமெரிக்க மற்றும் இந்தோ-ரஷ்ய அமைப்புக்களின் பயங்கரவாதம் பற்றிய கூட்டுப் பணிக் குழுக்கள் இடையிலான சமீபத்திய பல சந்திப்புக்கள், தலிபானை தந்திரோப ரீதியாகவும் தர்க்க ரீதியாகவும் எதிர்ப்பதற்கான முயற்சிகளுக்கு வழி வகுத்தன. இந்தியா, ரஷ்யா மற்றும் ஈரான் தரையில் தலிபான் எதிர்ப்புக்கு தலைமை வகிக்கும் அதேவேளை, வாஷிங்டன் வடக்குக் கூட்டணிக்கு தகவல்களையும் தார்மீக ஆதரவையும் வழங்கும் என்று டெல்லியில் உள்ள உளவுத்துறை வட்டாரங்கள் கூறின."

இந்த ஆண்டு மே23 அன்று, வெள்ளை மாளிகை வளைகுடா, தென்மேற்கு ஆசியா மற்றும் மற்றும் ஏனைய பிராந்திய விஷயங்கள் தொடர்பான இயக்குநருக்கும் ஜனாதிபதிக்கும் சிறப்பு உதவியாளராக, தேசியபாதுகாப்புச் சபையில் ஒருஸ்தானத்தில் ஜல்மே கலில்ஜாத்தை நியமித்தது. ஜல்மே கலில்ஜாத் றேகன் நிர்வாகத்திலும் முதலாவது புஷ் நிர்வாகத்திலும் இருந்த முன்னாள் அதிகாரியாவார். அரசாங்கப் பதவியை விட்டதும் அவர் யுனோகாலுக்காக வேலை செய்தார்.

இந்த ஆண்டு ஜூன்26 அன்று இந்தியா ரிஆக்ட்ஸ் இதழ், தலிபான் ஆட்சிக்கு எதிரான அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா மற்றும் ஈரானின் கூட்டு முயற்சிகளின் விவரத்தைப் பற்றி செய்தி வெளியிட்டது. ஆப்கானில் மத அடிப்படை வாத ஆட்சியை கவனமாகக் கருத்தில் கொண்டுள்ள கடினமான புதிய பொருளாதாரத் தடைகள் பயனளிக்காவிட்டால் தலிபானுக்கு எதிரான 'மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கை' க்கான அமெரிக்க மற்றும் ரஷ்ய திட்டமிடல்களை இந்தியாவும் ஈரானும் 'முன்னேற்றுவதற்கு' உதவும்" என அவ்விதழ் குறிப்பிட்டது.

இராணுவத் திட்டமிடலின் இந்தக் கட்டத்தில், மஜார்-இ-ஷெரிப் நகரை நோக்கி தலிபான் அணிகளை திருப்பி அனுப்பும் பொருட்டு, கடந்த இருவார காலமாக நடைபெற்ற கவனத்தை ஈர்த்த அதே காட்சி- அமெரிக்காவும் ரஷ்யாவும் வடக்கு கூட்டணிக்கு உஸ்பெக்கிஸ்தான் மற்றும் தஜிக்கிஸ்தான் வழியாக நேரடி இராணுவ உதவியை அளிக்க இருந்தன. பெயரிடப்படாத மூன்றாவது நாடு வடக்குக் கூட்டணிக்கு டாங்கி எதிர்ப்பு ராக்கெட்டுகளை அளிக்கும்- அது ஏற்கனவே ஜூன் ஆரம்பத்தில் தலிபானுக்கு எதிராக உபயோகிக்கப்பட்டிருந்தது.

அமெரிக்க அரசு செயலாளர் கொலின் பாவெலுக்கும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் இகோர் இவானவ் மற்றும் பின்னர் பாவெலுக்கும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த்சிங்கிற்கும் இடையில் வாஷிங்டனில் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் தலிபான் எதிர்ப்பு பின்தொடர்ந்தது என்று ராஜதந்திரிகள் மேலும் குறிப்பிட்டனர். "ரஷ்யா, ஈரான் மற்றும் இந்தியா கூட வரிசையாய் பல கலந்துரையாடல்களை நடத்தின மற்றும் அதிகம் இராஜதந்திர நடவடிக்கை எதிர்பார்க்கப்பட்டது."

தற்போதைய நடவடிக்கை போல் அல்லாமல், அவ்வேலைத்திட்டம் உஸ்பெக்கிஸ்தான் மற்றும் தஜிக்கிஸ்தான், அதேபோல ரஷ்யாவிலிருந்தும் கூட இராணுவப் படைகளைப் பயன்படுத்துவதை சம்பந்தம் கொண்டிருந்தது. இந்தியா ரிஆக்ட்ஸ் ஜூன் ஆரம்பத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புட்டின் முந்தைய சோவியத் குடியரசுகள் பலவற்றையும் உள்ளடக்கிய சுதந்திர அரசுகளின் கூட்டமைப்பின் கூட்டத்தில் தலிபானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை அருகில் இருப்பதாகக் குறிப்பிட்டார் என்று குறிப்பிட்டது. செப்டம்பர் 11 பாதிப்பு, சோவியத்திற்குப் பின் வந்த அரசுகளது இராணுவப்படைகளாலான நேரடிப் பங்கேற்பு எதுவுமின்றி, மற்றும் இவ்வாறு ஆப்கானில் தீர்வின் வடிவத்தை ஆணையிடும் சர்ச்சைக்கிடமில்லாமல் அமெரிக்க உரிமையைக் கூறிக்கொண்டு ஐக்கிய அமெரிக்க அரசுகள் தாம் சொந்தமாகத் தலையீடு செய்வதற்கான சூழ்நிலையை அது உருவாக்கிக் கொடுத்தது.

செப்டம்பர் 11க்கு முன்னர் அமெரிக்க யுத்த அச்சுறுத்தல்

உலக வர்த்தக மையம் மற்றும் பென்டகன் மீதான பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து உடனடியாக அமெரிக்க அரசாங்கம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக செப்டம்பர் 11க்கு பல மாதங்களுக்கு முன்பே இராணுவ நடவடிக்கை அச்சுறுத்தலைக் கொண்டிருந்தது என்பதைச் சுட்டிக்காட்டும் இரு செய்தி அறிவிப்புக்கள் பிரிட்டிஷ் பத்திரிகைளில் காணப்பட்டன.

செப்டம்பர் 18 அன்று பி பி சி யின் ஜோர்ஜ் ஆர்னி, முன்னாள் பாக்கிஸ்தானிய வெளியுறவுச் செயலர் நியாஸ் நாய்க்கிடம் அமெரிக்க அதிகாரிகள் ஜூலை நடுவில், தலிபான் ஆட்சிக்கு எதிரான இராணுவ நவடிக்கைக்கான திட்டங்கள் பற்றிக் குறிப்பிட்டதாக செய்தி அறிவித்தார்.

"திரு நாய்க், அமெரிக்க அதிகாரிகள் தமக்கு இத்திட்டம் பற்றி பேர்லினில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் மீதான ஐ.நா ஆதரவு சர்வதேச தொடர்புக் குழுவில் கூறியதாகக் குறிப்பிட்டார்.

"திரு நாய்க் பிபிசியிடம் அக்கட்டத்தில் அமெரிக்கப் பிரதிநிதிகள், பின் லேடன் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படாவிட்டால், அமெரிக்கா பின்லேடன் மற்றும் தலிபான் தலைவர் முல்லா உமர் இருவரையும் இராணுவ நடவடிக்கை மூலம் பிடிக்கவோ அல்லது கொல்லவோ செய்யும் எனக் கூறியதாகக் குறிப்பிட்டார்.

"திரு நாய்க்கின்படி, பரந்த குறியிலக்கு தலிபான் ஆட்சியைக் கவிழ்த்து மற்றும் அதன் இடத்தில் மிதவாத ஆப்கன்களின் இடைக்கால அரசாங்கத்தை -முன்னாள் ஆப்கான் அரசர் ஜாகிர் ஷா தலைமையின் கீழ் சாத்தியமான வகையில் நிறுவுவதாக இருக்கும்.

"அமெரிக்க ஆலோசகர் ஏற்கனவே உள்ள தஜிக்கிஸ்தானின் தளங்களில் இருந்து அதன் நடவடிக்கையைத் தொடங்கப் போவதாக வாஷிங்டனால் நாய்க்கிற்கு கூறப்பட்டது.

"உஸ்பெக்கிஸ்தானும் கூட இந்நடவடிக்கையில் பங்கு கொள்ளும் எனவும் மற்றும் 17000 ரஷ்யத் துருப்புக்கள் ஆயத்தமாக வைக்கப்பட்டிருப்பதாகவும் அவருக்குக் கூறப்பட்டது.

"திரு நாய்க்கிற்கு, இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படுமானால், அது ஆப்கானிஸ்தானில் வெண்பனிப் பொழிவு ஆரம்பிப்பதற்கு முன்னால் இடம் பெறும், குறைந்தது அக்டோபர் நடுவில் என்று கூறப்பட்டது.

நான்கு நாட்கள் கழித்து செப்டம்பர் 22ல் கார்டியன் பத்திரிக்கை இக்குறிப்பை உறுதி செய்தது. ஜூலை மத்தியில் பெர்லினில் உள்ள விடுதி ஒன்றில், அமெரிக்க, ருஷ்ய, ஈரானிய மற்றும் பாக்கிஸ்தானிய உயர் அதிகாரிகளின் நான்கு நாள் கூட்டத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எச்சரிக்க்ைகள் வெளிவந்தன. இது "ஆப்கான் மீதான மூளைப்புயல்" படி எடுக்கப்படும் வரிசையான பின்புல மாநாடுகளில் மூன்றாவதாகும்.

இதில் பங்கேற்றவர்கள் மூன்று பாக்கிஸ்தானிய தளபதிகளுடன் சேர்ந்து நாய்க்; ஐ.நாவிற்கான முன்னாள் ஈரானியத் தூதர் சயீது ராஜாப் கொரஸ்லானி; வடக்குக் கூட்டணி வெளியுறவு அமைச்சர் அப்துல்லா அப்துல்லா; ஆப்கானுக்கான முன்னாளைய சிறப்புத் தூதுவர் நிக்கொலாய் கொஜிரேவ் மற்றும் ஏனைய பல ரஷ்ய அதிகாரிகள்; மற்றும் மூன்று அமெரிக்கர்கள்: பாக்கிஸ்தானுக்கான முன்னாள் அமெரிக்கத்தூதர் டாம் சிமோன்ஸ்; தெற்காசிய விவகாரங்களுக்கான முன்னாள் அரசு உதவிச்செயலாளர் கார்ல் இன்டர்பர்த்; 1997 வரை அரசுத்துறையில் பாக்கிஸ்தான், ஆப்கான் மற்றும் பங்களாதேஷ் அலுவலகத்திற்கு தலைமை தாங்கிய லீகோல்ட்ரன் ஆகியோர் உள்ளடங்குவர்.

கூட்டமானது அன்றும் இன்றும் ஆப்கானுக்கான ஐ.நா பிரதிநிதியான துணைத்தலைவர் பிரான்செஸ்க் வென்டரலால் கூட்டப்பட்டது. ஆப்கானில் அரசியல் தீர்வுக்கான சாத்தியமுள்ள திட்டவரையைக் கலந்துரையாடுவதற்கானதாக பெயரளவில் நோக்கங்கொண்டிருந்த அதேவேளையில் தலிபானும் இதில் பங்கேற்க மறுத்தது. அமெரிக்கர்கள் ஆப்கானிஸ்தான் நோக்கிய அமெரிக்கக் கொள்கையில் கிளிண்டனிலிருந்து புஷ்க்கு நகர்வு பற்றி விவாதித்தனர், மற்றும் இராணுவ நடவடிக்கை தேர்வுக்குரியது என்று பலமாய் கருத்துத் தெரிவித்தனர்.

மூன்று அமெரிக்க முன்னாள் அதிகாரிகளும் குறிப்பிட்ட எந்த அச்சுறுத்தலையும் செய்வதற்கு மறுத்த அதேவேளை, கோல்ட்ரன் கார்டியனிடம் கூறினார், "அமெரிக்கா சில இராணுவ நடவடிக்கையை எண்ணக் கூடிய அளவு தலிபானுடனுன் சீற்றம் கொண்டிருந்தது என்ற உண்மை பற்றிய கலந்துரையாடல் சில அங்கு இருந்தன. இருப்பினும் நாய்க், ஒரு அமெரிக்கர், பின் லேடனுக்கு எதிரான நடவடிக்கை நிகழவிருக்கின்ற ஒன்று என்று கூறியதாக மேற்கோள்காட்டினார்: "இம்முறை அவர்கள் உறுதியாக இருந்தனர். அவர்கள் எல்லா உளவுத் தகவல்களையும் வைத்திருந்தனர் மற்றும் இம்முறை அவரைத் தவறவிடமாட்டார்கள். அது வானிலிருந்து தாக்கும் நடவடிக்கையாக இருக்கக்கூடும், அது பீரங்கி பொருத்தப்பட்ட ஹெலிகாப்டராக இருக்கலாம், மற்றும் வெளிப்படையாகத் தெரியத்தக்கதாக மட்டும் அல்லாமல் ஆப்கானிஸ்தானுக்கு மிக அருகிலிருந்து நடத்தப்படுவதாக இருக்கலாம்"

கார்டியன் கூறியது: "தலிபான் ஒசாமா பின் லேடனை சரண்டையச் செய்யாவிட்டால் யுத்த அச்சுறுத்தல் பற்றி ஆப்கானில் உள்ள ஆட்சியாளருக்கு பாக்கிஸ்தான் அரசாங்கத்தால் தெரியப்படுத்தப்பட்டதாக மூத்த ராஜதந்திர வட்டாரங்கள் நேற்று வெளிப்படுத்தி இருந்தன. பத்து நாட்களுக்கு முன்னால் துயரத்தில் ஆழ்த்திய நியூயோர்க்கில் உலக வர்த்தக மையம் மற்றும் பென்டகன் மீதான தாக்குதல் என்பதற்கு அப்பால், அமெரிக்க அச்சுறுத்தல் என தான் பார்த்ததற்கு பதில்விடுத்த, முன்கூட்டிய தாக்குதலாக இருந்ததற்கான சாத்தியத்தை அவர்களிடம் கூறப்பட்ட விஷயத்தின் சீரியசான தன்மை எழுப்புகிறது."

புஷ், எண்ணெய் மற்றும் தலிபான்

புஷ் நிர்வாகத்திற்கும் தலிபான் ஆட்சிக்கும் இடையிலான இரகசிய தொடர்புகள் மீதான மேலும் வெளிச்சம், நவம்பர் 15ல் பிரான்சில், Jean-Charles Brisard மற்றும் Guillaume Dasquie ஆகியோரால் எழுதப்பட்டு, பின்லேடன், தவிர்க்கப்பட்ட உண்மை என தலைப்பிடப்பட்ட புத்தகத்தால் பாய்ச்சப்பட்டது. பிரிஸார்ட் முன்னாள் பிரெஞ்சு உளவு ஸ்தாபன உளவாளி, பின் லேடனின் அல்கொய்தா வலைப்பின்னல் மீதான முந்தைய அறிக்கைளின் ஆசிரியர் பிரெஞ்சு அமைப்பான விவேண்டிக்கான முன்னாள் மூலோபாய இயக்குநர் ஆவார். அதேவேளை டாஸ்கி புலனாய்வுப் பத்திரிகையாளர் ஆவார்.

பயங்கரவாதத்தை அது ஆதரிக்கின்றபோதும் தலிபான் ஆட்சியை, அது மத்திய ஆசியாவில் எண்ணெய் வளங்களின் அபிவிருத்திக்கான திட்டங்களுடன் ஒத்துழைத்தால், அதனை புஷ் நிர்வாகம் ஏற்க விருப்புக் கொண்டிருந்தது என இரு பிரெஞ்சு எழுத்தாளர்களும் எழுதினர். அவர்கள் கூறுகிறவாறு, அமெரிக்க அரசாங்கம் "தலிபானை" மத்திய ஆசியாவின் குறுக்கே எண்ணெய் குழாய்வழிப்பாதை அமைக்க்கூடிய விதத்தில், மத்திய ஆசியாவில் ஸ்திரப்பாட்டின் வளமாக" பார்த்தது. தலிபான் அமெரிக்க நிபந்தனைகளை ஏற்க மறுத்தபோது மட்டுமே, "இந்த பகுத்தறிவுக்கு உகந்த காரணமான சக்தி பாதுகாப்பு இராணுவ நடவடிக்கையாக மாறியது".

கூடுதலான சான்றுகளால் வலியுறுத்தல்கள் மூலம், ஒசாமா பின் லேடன் தலிபான் ஆட்சியாளரின் விருந்தினர் என்று தெரிந்திருந்தும், கிளிண்டன் நிர்வாகமோ புஷ் நிர்வாகமோ ஆப்கானிஸ்தானை பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் என்று உத்தியோகப்பூர்வ அரசுத்துறைப் பட்டியலில் ஒருபோதும் வைத்திருக்கவில்லை என்ற ஆர்வமூட்டும் உண்மையைக் கவனிக்க வேண்டும். அத்தகைய அமர்வு, அமெரிக்க எண்ணெய் கம்பெனி அல்லது கட்டுமானக் கம்பெனி, மத்திய ஆசிய எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களுக்கு குழாய்ப்பாதைக்காக, காபூலுடன் ஒரு பேரத்தைக் கையெழுத்திட முடியாதிருந்தது.

புஷ் நிர்வாகத்திற்கும் தலிபானுக்கும் இடையிலான பேச்சுவார்தத்தைகள் புஷ் பதவி ஏற்ற குறுகிய காலத்தில் பிப்பரவரியில் ஆரம்பமானது. விலைமிகுந்த ஆப்கான் தரைவிரிப்பு உட்பட, புதிய தலைமை நிர்வாகிக்கான பரிசுகளுடன், தலிபான் தூதர் ஒருவர் வாஷிங்டன் வந்திருந்தார். ஆனால் பேச்சுவார்த்தை உளங்கனிந்த நிலைக்கும் குறைவானதாக இருந்தது. பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில், அமெரிக்கப் பிரதிநிதிகள் தலிபானிடம், 'ஒன்றில் நீங்கள் எமது தங்கத் தரைவிரிப்புக்களை ஏற்க வேண்டும் அல்லாவிடில் உங்களை குண்டுகள் விரிப்பின் கீழ் புதைப்போம்' " என்றனர்.

குழாய் வழிப்பாதை பேரம் சாத்தியம் என்று இருந்தவரை வெள்ளை மாளிகை ஒசாமா பின் லேடனின் செய்ல்பாடுகள் பற்றிய மேலதிக புலனாய்வு எதனையும் நிறுத்தி வைத்திருந்தது என்று பிரிஸார்ட் மற்றும் டாஸ்கி எழுதுகிறார்கள். மட்டுமீறிப் பேசுவதன் மூலம் மாமன்ற வேலைகளுக்கு முட்டுக்கட்டை இடுவதை எதிர்த்து எப்.பி.ஐ க்கான துணை இயக்குநர் ஜோன் ஒ. நெய்ல் ராஜனாமாச் செய்தார் என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர். அவர்களிடம் ஒரு பேட்டியில் ஒ.நெய்ல், "இஸ்லாமிய பயங்கரவாதம் பற்றிய புலனாய்வுக்கு அமெரிக்க எண்ணெய்க் கம்பெனி நலன்களும் அதில் சவுதி அரேபியாவின் பாத்திரமும் பிரதான தடைகளாக இருந்தன" என்றார். எப்.பி.ஐயை விட்டு விலகிய பின்னர் அவர், புதிரான வகையில் பொருத்தமுடையதாக உலக வர்த்தக மைய பாதுகாப்புத் தலைமையை ஏற்றுக் கொண்டார் மற்றும் அவர் செப்டம்பர் 11ல் கொல்லப்பட்டார்.

நாய்ஜ் நாய்க்கின் இரகசிய பேர்லின் கூட்டம் பற்றிய குறிப்பை உறுதிப்படுத்தி, இரு பிரெஞ்சு எழுத்தாளர்களும், அமெரிக்க மற்றும் சர்வதேச அங்கீகாரத்தை உறுதிப்படுத்த கஜக்கஸ்தானிலிருந்து குழாய்வழிப் பாதை அமைப்பதை எளிதாக்க தலிபானுக்கு வெளிப்படையான விவாதத்தின் தேவை இருந்தது என்றனர். வரவர எரிச்சலான அமெரிக்க- தலிபான் பேச்சுக்கள், இஸ்லாமாபாத்தில் அமெரிக்கத் தூதர் ரொக்காவிற்கும் தலிபான் பிரதிநிதிகளுக்கும் இடையிலான இறுதிச் சந்திப்பிற்குப் பின்னர், ஆகஸ்டு 2ல் முறிந்தன. இரண்டு மாதங்கள் கழித்து அமெரிக்கா காபூலில் குண்டுகளை வீசியது.

ஆத்திரமூட்டும் அரசியல்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான யுத்தத்திற்கான தயாரிப்புக்கள் பற்றிய இக் குறிப்புக்கள் எம்மை செப்டம்பர் 11க்கு கொண்டு வருகின்றன. உலக வர்த்தக மையத்தை அழித்த மற்றும் பென்டகனை சேதப்படுத்திய நிகழ்வுகள் அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதலால் உண்டு பண்ணப்பட்ட சேதங்களின் சங்கிலியில் ஒரு முக்கிய இணைப்பாக இருக்கிறது. அமெரிக்க அரசாங்கம் யுதத்தத்தை முன்னதாகவே நன்கு திட்டமிருந்தது, ஆனால் செப்டம்பர் 11 அதிர்ச்சியானது, உள்நாட்டில் பொதுமக்கள் கருத்தை உணர்வு மழுங்கச்செய்வதன் மூலம் மற்றும் வெளிநாடுகளில் தயக்கம் காட்டுகின்ற நாடுகள் மீது அத்தியாவசிய நெம்பு கோல் ஆதாயமாகப் பயன்படுத்தியதன்மூலம் அதனை அரசியல் ரீதியாக சமாளிக்கக் கூடியதாக ஆக்கியது.

பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதில் அமெரிக்க பொதுமக்கள் மற்றும் டஜன் கணக்கான வெளிநாட்டு அரசாங்கங்கள் முண்டி அடித்து நின்றனர். உலக வர்த்தக மைய கொடூரத்திற்கு தலிபான் ஆட்சியோ அல்லது பின் லேடனோ பொறுப்பு என்பதற்கான எந்த ஆதாரத்தையும் முன்வைக்காமல், புஷ் நிர்வாகம் காபூலை இலக்கு வைத்தது. மத்திய ஆசியாவில் அமெரிக்க அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்கான நீண்டகால அபிலாஷைகளை முன்னெடுப்பதற்கு ஒரு சந்தர்ப்பமாக அது செப்டம்பர் 11ஐப் பற்றிக் கொண்டது.

செப்டம்பர் 11 நிகழ்வு வெறுமனே தற்செயலான நிகழ்வு என சிந்திப்பதற்கு காரணம் எதுவும் இல்லை. ஆப்கானிஸ்தானில் யுத்தத்திற்கான ஒவ்வொன்றும் கவனமாகத் தயாரிக்கப்பட்டது. இராணுவ நடவடிக்கைக்கான பொருத்தமான சாக்குப் போக்கை கேள்விக்குள்ளாக்கும் சந்தர்ப்பத்தை அமெரிக்க அரசாங்கம் விட்டு வைக்க விரும்பவில்லை.

செப்டம்பர் 11ஐ அடுத்து உடனடியாக, விமானக்கடத்தல் உட்பட, பெரிய அளவிலான பயங்கரவாதத் தாக்குதல்கள் பற்றி குறிப்பான எச்சரிக்க்ைகளை அமெரிக்க உளவுத்துறை பெற்றிருந்ததாக வெளிநாட்டிலும் -மீண்டும் பல பத்திரிகைச் செய்திகள் வெளிவந்திருந்தன. ஆப்கானிஸ்தானில் தேவைப்படும் யுத்தத்துக்கான பொறியை வழங்கும் பொருட்டு, ஒருவேளை பாதிப்பின் அளவைக் கருத்தில் கற்பனை செய்து பார்க்காமல், அமெரிக்க அரசின் உயர் மட்டத்தில் அத்தகைய தாக்குதல் மேற்கொண்டு நடைபெற அனுமதிக்கப்படிருக்கும் என்பது மிக சாத்தியதானதாக இருக்கிறது.

இல்லாவிடில் எப்படி எப்.பி.ஐ இன் உயர்மட்ட அதிகாரிகள், விமானத்தைக் கிளப்புவதற்கு அல்லது இறக்குவதற்கு அல்லாமல், சரக்கு விமானத்தை எப்படி ஓட்டுவது என அமெரிக்க விமானப் பயிற்சிப் பள்ளியில் கற்க வந்ததாகக் கூறப்படும் சந்தேகத்திற்கு ஆளான பிரெஞ்சு -மொரோக்கன் புலம் பெயர்ந்தவரான Zaccarias Massaoui பற்றிய விசாரணையை தடுக்க முடிவு செய்தனர் என்ற நன்கு தெரிந்த உண்மையை விளக்குவது.?

மின்னியாப்பொலிஸ் அலுவலகம் மாஸ்ஸூவியை ஆகஸ்டு மாத ஆரம்பத்தில் கைது செய்திருந்தது மற்றும் அவரது கணினியின் ஹார்ட்ரைவ்வை தேடுதல் உட்பட, அவரை மேலும் விசாரணை செய்வதற்காக எப்.பி.ஐ தலைமையகத்தை அனுமதி கேட்டிருந்தது. எப்.பி.ஐ உயர்மட்டம் மாஸ்ஸூவி பங்கில் குற்றச்செயலுக்கான நோக்கத்திற்கு போதுமான ஆதாரம் இல்லை என்ற அடிப்படையில் அனுமதி மறுத்தது-- மனித உரிமைகள் பற்றிய விஷயத்திற்கு இரக்கம் காட்டுவதை அறிந்திராத உளவு ஸ்தாபனத்தினைப் பொருத்தவரை இம் முடிவு வியப்பூட்டுவதாக இருந்தது.

இது, பயங்கரவாதத்த தாக்குதல்களின் ஒவ்வொரு விவரத்தையும் அமெரிக்க அரசாங்கம் வேண்டுமென்றே திட்டமிட்டது அல்லது கிட்டத்தட்ட 5000 பேர்கள் கொல்லப்படலாம் என்று எதிர்பார்த்தது என்று சொல்வதற்கு இல்லை. ஆனால் செப்டம்பர்11 ஐப் பற்றிய குறைந்த பட்சமாய் எடுத்துக் கொள்ளக்கூடிய விளக்கம்: டஜன் கணக்கான இஸ்லாமிய அடிப்படைவாதிகள், ஒசாமா பின் லேடனுடன் தொடர்பு கொண்டிருந்தவர்கள் என அறியப்பட்ட பலர், அவர்கள் என்ன செயதார்கள் என்பது பற்றி அமெரிக்க உளவுத்துறைக்கு கொஞ்சம் கூட தெரியாதவகையில், அமெரிக்க அதிகாரத்தின் முக்கிய அடையாளமாக விளங்குவதை இலக்கு வைத்து, மூன்று கண்டங்களிலும் பரந்துபட்ட அளவில் சதித்திட்டத்தை மேற்கொள்ளக்கூடியவர்களாக இருந்தனர் என்பது உத்தியோகபூர்வ ஒன்றாக இருக்கிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved