World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள்:ஆபிரிக்கா

African leaders supports US, but fear domestic opposition.

ஐக்கிய அமெரிக்க அரசுக்கு ஆபிரிக்கத் தலைவர்கள் ஆதரவு, ஆனால் உள்நாட்டு எதிர்ப்புக்கு நடுக்கம்.

By chris Talbot
26 september 2001

Back to screen version

ஐக்கிய அமெரிக்க அரசின் ''பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்'' என்பதற்கு ஆதரவாக ஆபிரிக்கா முழுவதிலும் உள்ள தலைவர்கள் எல்லா வகையிலும் தமது ஆதரவை வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளனர். எவ்வாறாயினும், இதன் விளைவாக எழும்பும் தமது சொந்த மக்களின் எதிர்ப்புக்களால் தாங்கள் பாதிக்கப்படலாம் என்ற பயத்தின் காரணமாக ஆப்கானிஸ்தான் மீதான ஐக்கிய அமெரிக்க அரசின் இராணுவத் தாக்குதலுக்கான தமது ஆதரவின்மையை அனேகர் வெளிப்படுத்தியிருந்தனர். ஆபிரிக்காவில் ஐக்கிய அமெரிக்காவினது பல நடவடிக்கைகளின் கசப்பான அனுபவங்கள் இருந்தபோதும், அவர்களில் எவராயினும் ஐக்கிய அமெரிக்க அரசின் வெளிவிவகாரக் கொள்கைக்கு அடிப்படையான எதிர்ப்பைக் காட்டியதோ அல்லது புஷ் நிர்வாகத்தின் போக்கை கேள்விக்குட்படுத்தியதோ கிடையாது.

ஆபிரிக்க நாடுகளில் ஒன்றாகிய சூடான் அமெரிக்க அரசினால் பயங்கரவாதத்திற்கு ஆதரவான நாடு என குற்றம்சாட்டப்பட்டதுடன், விசேடமாக ஒசாமா பின் லேடனுக்கு ஆதரவு வழங்கியதற்காக குற்றம்சாட்டப்பட்டதோடு ஐக்கிய அமெரிக்க அரசு கொடுத்த அழுத்தத்தினால் அவர் அங்கிருந்து 1996 ல் வெளியேற்றப்பட்டார். 1998 ஆகஸ்ட் மாதம், Khartoum லுள்ள Al-Shifa மருந்துகள் உற்பத்தித் தொழிற்சாலை மீது அமெரிக்க அரசு குண்டு போட்டுத்தள்ளியதற்கு இத் தொழிற்சாலையானது பின் லேடனுடன் தொடர்புகளைக் கொண்டிருந்து இரசாயன ஆயுதங்களை உற்பத்தி செய்ததிற்காகவே தாக்கப்பட்டதாகக் கூறியது. அப்படியான இரசாயன ஆயுதங்கள் அங்கிருந்ததிற்கான சான்றுகள் நிரூபிக்கப்படவில்லை.

ஐக்கிய அமெரிக்காவின் ஆதரவை வென்றெடுப்பதில் சூடானிய அரசாங்கம் நம்பிக்கையிழந்து போயுள்ளது. BBC குறிப்பிட்டுள்ளபடி கடந்த வருடம் FBI மற்றும் CIA யினது உளவாளிகள் சூடானில் முகாமிட்டிருந்ததுடன் சூடானியப் புலனாய்வாளர்களுடன் நெருங்கி வேலை செய்து ''சூடானில் பயங்கரவாதக் குழுக்கள் அடித்தளமிட்டுள்ளன என புலனாய்வுகள் குறிப்பிட்டுள்ளன.'' என்றது. பின் லேடன் மீண்டும் சூடானுக்கு திரும்ப அனுமதிக்கபடமாட்டாரென வெளிவிவகார அமைச்சுப் பேச்சாளர் செய்தியாளர்களுக்கு உத்தரவாதம் அளித்ததுடன் ''நாங்கள் பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடும் கட்சி'' எனவும் குறிப்பிட்டுள்ளார். எப்படியிருந்தபோதிலும், இந்த உத்தரவாதங்களைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் மேல் தொடுக்கப்படும் எந்தவொரு தாக்குதல்கள் அல்லது எந்தவொரு மக்கள் படுகொலைகள் சம்பந்தமாக சூடானிய ஜனாதிபதி Omar-el Bashir அவசியமான எச்சரிக்கை செய்யத் தள்ளப்பட்டார். அதாவது ''சர்வதேச சமூகத்திடம் அதிக காழ்ப்புனர்ச்சியுடன் கூடிய, கசப்புத்தன்மையை உருவாக்குகின்ற, அதிக வலுச்சண்டையை கொண்டுவருகின்ற பரம்பரையை இவைகள் உருவாக்கும்'' என்றார்.

பின் லேடனைப் பாதுகாக்கக்கூடிய இன்னுமொரு ஆபிரிக்க நாடாக சோமாலியா குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த நாடு 1992ல் (UN) ஐக்கிய நாடுகளின் நடவடிக்கைகளின்போது அதன் தலைமையிலிருந்த ஐக்கிய அமெரிக்காவின் படையெடுப்புக்கு உள்ளாகியதுடன், இந்த நடவடிக்கை மனிதாபிமான உதவிகளுக்காகவே எனவும் கூறப்பட்டது. இருந்தபோதிலும், இந்த நாடு உள்நாட்டு யுத்தத்தால் புறம்பாக சின்னாபின்னாமாகியது. அமெரிக்காவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து தலைநகர் Mogadishu வில் மக்கள் எதிர்ப்புக்கட்டியதோடு அமெரிக்கத் துருப்புக்களுக்கு எதிராக சண்டையையும் பிடித்தனர். அதில் 18 பேர்கள் பலியாகினர். 1995ல் அனைத்து அமெரிக்கத் துருப்புக்கள் பின்வாங்கிச் சென்றபோதிலும் இந்த நாடு யுத்த நடவடிக்கைகள் காரணமாக பிளவுண்டுபோயுள்ளது. கடந்த வருடம் மேற்குலகின் ஆதரவுடன் இடைக்கால அரசாங்கம் உருவாக்கப்பட்டிருந்த போதிலும், அவர்களால் நாட்டின் ஒரு பகுதியையே கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கக் கூடியதாகவுள்ளது. பின் லேடனை வரவேற்பது சம்பந்தமாக அரசாங்கப் பேச்சாளர் மறுதலித்ததுடன் ''பயங்கரவாத்திற்கெதிரான யுத்தத்தில் நாங்கள் அமெரிக்காவுடன் கூட்டுப்போடவும் தகவல்களை பரிமாறவும் தயாராகவிருக்கின்றோம்'' என்றார்.

அண்மையில் மக்கள் கூட்டத்தில் பிரகடனப்படுத்திய லிபியாவின் மும்மர் கடாபி தனது அமெரிக்க எதிர்ப்பு வாய்ச்சவடால்களை கைவிட்டுவிட்டு ''அமெரிக்காவுக்கு பழிவாங்குவதற்கான உரிமையுண்டு'' என்றார். அமெரிக்காவின் பட்டியலிலுள்ள பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளில் லிபியாவும் உள்ளது. ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தொடுக்கும் தாக்குதல்கள் பற்றி கடாபியும் எச்சரிக்கை செய்திருந்தார். அதாவது ''இஸ்லாமிய அரசாங்கங்களிடமிருந்து அமெரிக்காவானது இதற்கான ஆதரவு உத்தரவாதத்தைப் பெற்றிருந்தாலும், அதே நிலைப்பாட்டை அவர்களுடைய மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்'' என்றார்.

லிபேரிய (Liberia) நாட்டு ஜனாதிபதியான Cherls Tayler அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைக்கு தங்குதடையற்ற ஆதரவு தெரிவித்து தீர்மானம் செய்துள்ளார். லிபெரியாவும்கூட ''போக்கிரி நாடாக'' பட்டம் சூட்டப்பட்டதுடன், அருகிலுள்ள நாடான Sierre Leone னுள்ள கிளர்ச்சிப்படையான புரட்சிகர ஐக்கிய முன்னணிப் படைக்கு பின் ஆதரவை இந்நாடு வழங்குவதற்காக ஐ.நா வின் தடைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றது. செப்டம்பர் 11ம் திகதி தாக்குதல்களுக்குப்பின் லிபேரியன் வானொலி நிலையம் அமெரிக்க அரசாங்கத்துக்கு எதிரான நேயர்களின் தொலைபேசி உரையாடல்களை பெற்றுக்கொண்டதற்காக அது உடனடியாக மூடப்பட்டதுடன், அதன் அறிவிப்பாளர் ''தேசிய பாதுகாப்பு நலன்களை மீறியதற்காக'' சிறைக்குள்ளே தள்ளப்பட்டார். யாராவது பின் லேடனின் படத்தை விற்றால் அல்லது வாங்கினால் அவர் ''பயங்கரவாதியாக'' கைது செய்யப்படுவார் என பொலிசார் கூடவே அறிவுறுத்தியுள்ளார்கள்.

அல்ஜீரியா அரசாங்கம் 350 ஆக நம்பப்படும் இஸ்லாமிய தீவிரவாதிகளின் பட்டியலை அமெரிக்க அரசாங்கத்திற்கு வழங்கியதுடன் அல்ஜீரியாவுக்கு வெளியில் வாழும் இவர்களை இவ் ஆட்சியாளர்கள் தேடியும் வருகின்றார்கள். இப்பட்டியலில் உள்ள அநேகர் இந்த இராணுவ ஆட்சிக்கு எதிரான ஜனநாயகவாதிகளாகவோ அல்லது சோசலிஸ்டுக்களாகவோ இருக்கலாம். அவர்கள் திரும்பிவர முறையீடு செய்தால் உருட்டுப் புரட்டுக்ளுடன்கூடிய இராணுவ இரும்புக்கரம் ''இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு'' எதிராக பாவிக்கப்படும். இதுபோன்ற முறையீடுகள் மனித உரிமை அடித்தளத்தின் பேரில் முன்பும் நிராகரிக்கப்பட்டன. ஒரு தசாப்தத்துக்கும் மேலாக கட்டவிழ்த்து விடப்பட்ட பயங்கரத் தாக்குதல்களை இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்களால் நிரப்பப்பட்ட அல்ஜீரிய இராணுவ ஆட்சியாளர்களால் செய்யப்பட்டதற்கான சாட்சியங்கள் வளர்ச்சி கண்டுள்ளன. அவர்களது ஆட்சிக்கு வளர்ந்துவரும் எதிர்ப்புக்களினால் பத்தாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். வாஷிங்டனிலிருந்து அல்ஜீரிய அரசாங்கத்துக்கு இதுபற்றிய பொறுப்பான அறிக்கைகள் வரவேயில்லை.

செனகல் ஜனாதிபதி Abdoulaya Wade மற்றும் கென்யா ஜனாதிபதி Daniel Arap Moi போன்றவர்கள் உட்பட மற்றைய தலைவர்கள் ஐக்கிய அமெரிக்காவின் இராணுவ ஆக்கிரமிப்புக்கு தமது முழு ஆதரவுகளையும் வழங்கியுள்ளனர். ''முழுமையான யுத்தத்திற்கு (பயங்கரவாதத்திற்கெதிராக) நேரடியான நடவடிக்கைகளை எடுக்க'' ஆபிரிக்கத் தலைவர்களுக்கு Wade அழைப்பு விட்டுள்ளார். இந்த நாடுகளின் இராணுவ மூலோபாயங்கள் மேற்குலகின் நடவடிக்கைகளில் அடித்தளமிட்டுள்ளன. சோமாலியாமீது அமெரிக்கா ஆக்கிரமித்தபோது கென்யா தளமாகவிருந்தது. அத்தோடு கொங்கோ மற்றும் சூடான் மீதான அமெரிக்க உளவாளிகளின் நடவடிக்கைக்கான மையத் தளமாக நைரோபியிலுள்ள அமெரிக்கத் தூதரகமும் செயற்பட்டுக் கொண்டிருந்தது. கடந்த வருடம் Sierra Leone மீது பிரித்தானியா ஆக்கிரமிப்புச் செய்வதற்கு செனகல் அதற்கான தளங்களை ஏற்பாடு செய்து கொடுத்தது.

இக் கண்டத்தின் ஆற்றல்மிக்க இராணுவத்தையும் பொருளாதாரத்தையும் கொண்டுள்ள தென்னாபிரிக்கா மற்றும் அதனது ஆட்சியாளர்களான ஆபிரிக்க தேசிய காங்கிரஸ், வாஷிங்டனுடனான உறவுகளை கடுமுயற்சியுடன் வைத்திருக்கின்றது. தென்னாபிரிக்கா அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் ''அமெரிக்க அரசாங்கமானது அங்கீகரிக்கப்பட்ட உரிமைகளுடன் குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்களை நீதி விசாரனைக்கு கொண்டுவரவேண்டும்.'' இராணுவ ஒத்துழைப்புக்கு கோரிக்கை விடவில்லையாயினும், ''பிரிட்டோரியா தனது சக்திக்கு உட்பட்டவகையில் தேவையான, அவசியமான ஆதரவை வழங்கும்'' என்றார். அத்தோடு எதிராளிகளுக்கு எதிராக அமெரிக்காவுடன் தென்னாபிரிக்கா பாதுகாப்பு நிறுவனங்கள் தொடர்ந்தும் ஒத்துழைத்து வருகின்றன. எவ்வாறாயினும், ''உறுதியான ஆதாரங்களுடன் விசாரனைகள் மேற்கொள்வதன் பேரில்'' எந்த நடவடிக்கையும் அவர்களுக்கு அறிவிக்கப்படும்.

ஆபிரிக்கத் தேசிய காங்கிரசினுடைய ANC Today என்னும் வார ஏட்டில் ஜனாதிபதி Thabo Mbeki எழுதிய கட்டுரையொன்றில், அமெரிக்காவின் இராணுவ மற்றும் யுத்த நிலைப்பாட்டினால் ஆபிரிக்க ஆளும்தட்டுக்கு மேலுள்ள நடுக்கத்தை உண்டுபண்ணுகின்ற போக்கைப் பார்க்கக் கூடியதாகவுள்ளது. பயங்கரவாதத்திற்கான கண்டனத்தின் நீண்ட அச்சத்தினால், கடந்தகால பயங்கரவாத நடவடிக்கைகளின் தொடர்புகளிலிருந்து விடுபட்டு ANC க்கான இடைவெளியைக் கொண்டிருப்பதையே Mbeki யின் குறியாகவுள்ளது.

அவர் குறிப்பிட்டுள்ளபடி, பொதுமக்கள் தாக்கதலின் குறியாகவிருப்பதை ANC தவிர்த்துக்கொள்ள முயற்சித்ததுடன் இன ஒதுக்கல் ஆட்சியை எதிர்த்ததால், தெற்கு ஆபிரிக்கா எங்கனும் மக்கள் படுகொலை நடாத்தப்பட்டது. பயங்கரவாதத்திற்கு ANC ஒரு புகலிடம் இல்லை. இருப்பினும் ''அதன் உள்ளடக்கமானது Soweto வில் படுகொலை செய்யப்பட்ட சிறுவர்களதும், அதற்குப்பின்பு நடாத்தப்பட்ட வேறு படுகொலைகளிலும், இவைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோதும் நாங்கள் இன ஒதுக்கல் ஆட்சியாளர்களோடு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தோம்'' என்றார்.

ANC யின் 7 வருட ஆட்சியின் போலித்தன்மையானது Mbeki னுடைய பயங்கரவாதத்தைப் பற்றிய உணர்வுபூர்வமான குற்றச்சாட்டுக்களை மிகவும் தரமானமுறையில் எடுத்துக்காட்டுகின்றது. தென்னாபிரிக்கா பூராகவும் மற்றும் பண்ணை நிலங்களிலிருந்தும் வந்த பரந்த மக்கள் இயக்கத்தை, இன ஒதுக்கல் ஆட்சியை துடைத்துக்கட்டுவதிலிருந்து விலக்கிய ANC யானது ஏகாதிபத்தியவாதிகளுடன் முக்கிய பாத்திரத்தை வகித்துக்கொண்டும், கறுப்பின மக்களிடமிருந்து கிடைத்த மிகப்பரவலான ஆதரவோடு பேச்சுவார்த்தைக்கும், சமரச உடன்பாட்டிற்கும் வந்து சிறுபான்மை வெள்ளை ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தார்களே தவிர அவர்கள் மேற்கினதும் மற்றும் அமெரிக்காவினதும் கூட்டு நலன்களை அப்பிராந்தியத்தில் சவால் செய்யவில்லை. எவ்வாறாயினும் ஐக்கிய அமெரிக்காவின் உதவி ஜனாதிபதியான Dick Cheney அந்த நேரத்தில் மற்றவர்களைக் காட்டிலும் நெல்சன் மண்டேலாவை ஒரு பயங்கரவாதியெனக் கூறி அவரை சிறையில் சந்திக்க மறுத்துவிட்டார். Mbeki யினுடைய நடுக்கம் என்னவென்றால், அவரும் மற்றும் அவரது அரசாங்கமும் நினைக்க முடியாத அமெரிக்காவின் கொள்கைக்கு தடையாக பார்க்கப்படும் பட்சத்தில் மீண்டும் ஒருமுறை ''பயங்கரவாதி'' அல்லது குறைந்த பட்சம் பயங்கரவாதத்திற்கான ஆதரவாளர்கள் என அறிவிக்கப்படலாம் என்பதுதான்.

பின் லேடனுடன் தொடர்புடையவர்களென நம்பப்படும் ஆட்களது பெயர்ப்பட்டியலை FBI தென்னாபிரிக்கா, கென்யா, உகண்டா, மற்றும் தன்சானியா போன்ற நாடுகளிடம் கொடுத்துள்ளது. பத்திரிகை செய்திகளின்படி கென்யாவினுடைய பெயர்ப்பட்டியலில் 200 பேர்கள் அடங்குவதுடன், கென்யாவின் இரண்டாவது நகரமான Mombasa வில் வங்கி கொடுக்கல் லாங்கல் நடவடிக்கைகள் இருந்ததாக அமெரிக்கப் புலனாய்வாளர்கள் ஆராய்ந்து தெரிவித்துள்ளார்கள் என்றது. தாங்கள் 60 பேர்களுடைய பெயர்களைப் பெற்றிருப்பதாக தன்சானியாப் பொலீஸ் கூறியுள்ளது. தென்னாபிரிக்கா மற்றும் உகண்டா பொலீசார்கள் தாங்கள் எத்தனை பேர்களது பெயர்களைப் பெற்றுக்கொண்டார்கள் என்பது பற்றி வாய்திறக்கவேயில்லை.

அரசியல் அமைதிப்படுத்தலுக்கான இதுபோன்ற கோரிக்கைகளும் அமெரிக்க எதிர்ப்பு உணர்வுகளை மேலும் பற்றியெரியச் செய்யும். 23 செப்டம்பரில் பின் லேடனுக்கு ஆதரவாகவும் அமெரிக்காவுக்கு எதிராகவும் சோமாலியாவின் தலைநகரான Mogadishu வில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்ட ஊர்வலம் செய்தனர். இடைக்கால தேசிய அரசாங்கம், ஆரம்பத்தில் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை கண்டனம் செய்தபோதும் அமெரிக்கா மீதான பரந்துபட்ட மக்களின் அதிகரித்த ஆத்திரத்திரத்தின் அளவே காரணமாகவே இதைச் செய்வதற்கான அனுமதியை வழங்க அவர்கள் தள்ளப்பட்டார்கள். சோமாலியாவிலிருந்த சர்வதேச அலுவலர்களை அடுத்தநாளே ஐக்கிய நாடுகள் சபை வாபஸ்பெற்றுக் கொண்டதுடன் mogadishu வில் தரையிறங்கும் அல்லது புறப்படும் விமானங்களுக்கு எந்தவித உத்தரவாதமும் இல்லையென குற்றம்சாட்டியது. கடந்த வாரம் அங்கு வாழ்ந்து வந்த தமது அலுவலர்களை வெளியேற்றியமை தொடர்பாக ஐரோப்பிய யூனியனின் நிலைப்பாடு இன்னும் தெளிவாகவிருந்தது, அது ''ஸ்திரமின்மையும் மற்றும் பொதுப்பதட்டமும்'' அந்நாட்டில் இருப்பதாக கூறிக்கொண்டது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved