World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள்:ஆபிரிக்கா

France implicated in attempted coup in Central African Republic

மத்திய ஆபிரிக்க குடியரசு மீதான சதி முயற்சியில் பிரான்ஸ் சம்பந்தப்பட்டுள்ளது.

By John Farmer and Chris Talbot
19 June 2001

Back to screen version

மத்திய ஆபிரிக்க குடியரசின் தலைநகரான Bangui வில் 11 நாள் நடந்த கடும் சண்டைக்குப் பின் அரசு கவிழ்ப்பு முயற்சி தடுக்கப்பட்டது. அதிகாரபூர்வமற்ற கணிப்பீட்டின்படி ஜனாதிபதியான Ange-Felix Patasse யின் றோயல் படைக்கும் மற்றும் 1981ல் இருந்து 1993 வரையும் ஆட்சியில் இருந்த General Kolingba வால் வழிநடாத்தப்பட்ட கிளர்ச்சிக் குழுவுக்குமிடையில் நடந்த சண்டையில் 300 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

இச்சண்டையின் விளைவாக 100,000 மேலான மக்கள் இடம் பெயர்ந்துள்ளதுடன் உதவி நிறுவனங்கள் அவர்களுக்கான மருந்து, குடிநீர் போன்றவைகள் தற்போது வழங்க ஆரம்பித்துள்ளார்கள். விலைகள் 3 மடங்காக உயர்ந்துள்ளது மற்றும் மக்கள் உணவு இல்லாமல் அலை மோதுகிறார்கள் (ஓடுகிறார்கள்) என அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. Chad மற்றும் Democratic Republic of Congo வுக்கு இடையில் மத்திய ஆபிரிக்க குடியரசு (Central African Republic) அமைந்திருக்கின்றது. மத்திய ஆபிரிக்காவிலே ஆக வறுமையான நாடாக இருப்பதுடன், கொங்கொ நாட்டு யுத்தாத்தால் முக்கிய வர்த்தக பாதையும், கொங்கொ ஆறும் மூடப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ளது.

Kolingba மற்றும் அவருடைய கிளர்ச்சியாளர்களும் தலைநகரில் இருந்து பின் வாங்கும்போது அரச படையினர் ஒவ்வொரு வீடு வீடாக சோதனை இட்ட வண்ணம் உள்ளனர். நாட்டின் தென்பகுதியிலுள்ள Kolingba ஆதரவு Yakoma இன் பழங்குடி மக்களை துருப்புக்கள் மீள தமது பிடிக்குள் கொண்டு வந்துள்ளதாக பல அறிக்கைகள் குறிப்பிட்டுள்ளன. Patasse ஆதரவாளர்கள் மக்களுக்கும் சதியாளர்களுக்கும் இடையிலான வேறுபாட்டை இனம் காணமாட்டார்கள் என Radio France Internationale அறிவித்ததுடன் "Bangui லில் காழ்ப்புணர்ச்சியைத் தூண்டும் செய்திகள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்றது.

பிரான்சின் காலனியாக மத்திய ஆபிரிக்கக் குடியரசு இருந்தபோது அது பழங்குடி மக்களை பிரிக்க ஊக்குவித்தது. Yakoma மக்கள் பரம்பரை வர்த்தகர்களாகவும், பலர் ஒழுங்கான கல்வி கற்றவர்களாகவும் மற்றும் அரசு ஊழியர்களாகவும் இருந்தனர். மத்திய ஆபிரிக்க குடியரசு 1960 இல் சுதந்திரமடைந்த பின்பும் பிரான்சினுடைய ஆட்படுத்தலுக்குள் இருந்ததுடன் 1966ல் இருந்து 1979 வரையிருந்த கொடும் சர்வாதிகாரியான Jean-Bedel Bokassa க்கு அது பின் ஆதரவு வழங்கியதோடு மட்டுமன்றி அவர் பேரரசராக முடிசூடும் விழாவுக்கு பண உதவியும் அளித்தது. வடக்கு நாடோடி பழங்குடியைச் சேர்ந்த Patasse 1993 ம் ஆண்டு IMF மற்றும் உலக வங்கியின் அழுத்தத்தின் கீழ் நடைபெற்ற தேர்தலின் மூலம் பதவிக்கு வந்தார். அன்றிலிருந்து அவருடைய அரசாங்கம் ஒரு நெருக்கடியிலிருந்து மற்றொன்றுக்கு உள்ளானது. அரசு ஊழியர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால் தொழிற்சங்கங்களால் ஒழுங்கு செய்யப்பட்ட வேலைநிறுத்தத்தில் மீண்டும் அவர்கள் குதித்தனர்.

இந்த வருட தொடக்கத்தில் வேலைநிறுத்த நடவடிக்கைகள் அதிகரிக்கும்போது அரசாங்கம் 3 மாத ஊதியத்தை அவர்களுக்கு வழங்க, தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தத்தை கைவிட்டன. 9 மாத காலமாக ஊதியம் ஆசிரியர்களுக்கு வழங்கப்படாததையடுத்து அவர்கள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர். மத்திய ஆபிரிக்க குடியரசின் அரசாங்கத்திற்கு IMF வழங்கிய சில பண உதவிகளையடுத்து ஒரு பொது வேலை நிறுத்தம் தவிர்க்கப்பட்டது. பிரான்ஸ், லிபியா ஆகிய இரு நாடுகளும் உதவிகளை வழங்கின. வேலை நிறுத்தத்திற்கு Patasse அரசின் பதிலானது சகல எதிர்ப்புக்களையும், ஊர்வலங்களையும் இரும்புக்கரம் கொண்டு உடைத்தெறிந்ததுடன் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களையும் சிறையில் அடைத்தது.

இந்த அரசுக்கு பரந்தளவு எதிர்ப்பு உருவாகுவதற்கு முக்கிய காரணம் சமூக நிலைமைகள் மோசம் அடைவதுதான். 50% மேலான மக்கள் விவாசயத்தை நம்பி உயிர் வாழ்பவர்கள். நாட்டின் கிழக்கு பகுதியானது அரசின் கட்டுப்பாட்டை இழந்து போனதையடுத்து அப்பகுதியிலுள்ள யானைகள் தந்தத்துக்காக சட்ட விரோதமாகவும் சுதந்திராமாகவும் வேட்டையாடப்படுகின்றன. கிளர்ச்சி இராணுவத்தினரால் 3 தடவைகள் Bangui நாசமாக தாக்கப்பட்டதையடுத்து அங்கு ஒரு திரையரங்கு கூட மிச்சமில்லை. கணக்கெடுப்பின் படி 15% வீதமான மக்கள் HIV யின் பாதிப்புக்குள்ளாகியிருப்பதோடு, Aids ஆல் பாதிக்கப்பட்டோர் மருத்துவமனை படுக்கையில் 95% வீதத்தை பிடித்துள்ளனர்.

மத்திய ஆபிரிக்க குடியரசிற்கான ஐக்கிய நாடுகள் அமைதிக் குழுவின் முன்னாள் தலைவரும் தற்போதைய Sierra Leone ற்கான ஐ.நாவின் பிரதிநிதியுமாகிய Oluyemi Adeniji இந் நிலமையை குறிப்பிடுகையில் ''சர்வதேச சமூகத்தின் வழக்கமான பிழை என்னவென்றால் நாட்டை அரசியல் ரீதியாக பலப்படுத்த உதவுகின்றார்கள். ஆனால் மோசமான பொருளாதார நிலைமைகளை அவர்கள் மறந்தால் அரசியல் நெருக்கடி மறுபடியும் உருவாகும்'' என்றார். கிளர்ச்சிப் படைகளின் தொடர் நடவடிக்கைகளால் மத்திய ஆபிரிக்க குடியரசிற்கு ஐ.நா சமாதானப்படை அனுப்பப்பட்டு பின்பு கடந்த வருடம் மீளப்பெறப்பட்டதையடுத்து அன்றிலிருந்து நாடு உதவியற்று பட்டினிச் சாவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

Somalia மற்றும் Rwanda வில் நடந்த பேரழிவுக்களுக்கு பின் ஐக்கிய நாடுகள் தூதுக்குழுவினது சில வெற்றிகரமான ஆபிரிக்க சேவைகளில் இதுவும் ஒன்றாகும். 1996 வரை முன்னைய பிரெஞ்சு காலனியில் இருந்து வந்த பிரெஞ்சு படையினை ஐ.நா சபை படையினருக்கு பதிலாக பதிலீடு செய்யவேண்டுமென ஐ.நா சபைக்கு பிரான்சின் பிரதமர் Lionel Jospin அழுத்தம் கொடுத்திருந்தார். ஆபிரிக்காவை நோக்கிய பிரான்சின் புதிய கொள்கைகளின் ஒரு பகுதி இப்படியிருக்கையில், முன்னைய காலங்களில் பண்பாக்கம் செய்யப்பட்ட ஒரு சங்கிலித்தொடர் ஊழல் ஆதரவு நிலைகளிலிருந்து விலகுவதை இவை சுட்டிக்காட்டுகின்றன.

பிரான்சின் வெளிவிவகார அமைச்சரான Hubert Védrine தற்போதைய நிலமைகளை குறிப்பிடும்பொழுது ''ஆபிரிக்காவுக்கான தலையீட்டு காலம் முடிந்துவிட்டது'' என்றார். மேலும் அவர் லிபியாவின் ஜெனரல் கடாபி தலையிட்டதையிட்டு வருத்தப்பட்டார். ஜனாதிபதி Patasse ன் அரசைப் பாதுகாக்க இரண்டு விமானங்களில் ஆயுதம் மற்றும் இராணுவத்தை லிபியா அனுப்பிவைத்தது. பிரான்சினுடைய ஆளும் வர்க்க ஒரு பகுதியினரின் கவனத்திலுள்ள கருத்து யாதெனில், ஆபிரிக்காவிலுள்ள பூமத்தியரேகைப் பகுதிகள் யாவும் பிரான்சின் தனியுரிமையைக் கொண்டுள்ளதுடன் கடாபி, பிரான்சின் காவலாளிபோல் நாடகம் ஆடுகின்றார் என Le Monde பத்திரிகை குற்றம்சாட்டியது. வேறுபகுதிகளில் இராணுவத்தலையீடு செய்வது சரியெனில் ஏன் ஆபிரிக்காவுக்கு இல்லை என இப் பத்திரிகையானது கேட்டுக்கொண்டது. ''மனித உரிமையானது வெள்ளையர்களுக்கு மட்டுமா பொதுவானதாக இருக்கின்றது?'' எனத் தெரிந்துகொள்ளவேண்டும் எனவும் அது எழுதியிருந்தது.

எப்படியிருந்தபோதும் Jospin மற்றும் Védrine இன் முறையான பாதையானது, அச்சம்பவங்களில் பிரான்ஸ் சம்பந்தப்பட்டதற்கான ஆதாரங்களை வழங்கியிருந்ததுடன் அவர்கள் அரசாங்கத்துக்கு சார்பாகவில்லை என்பதையும் காட்டியது. Kolingba வீட்டிலிருந்து ஆயுதங்கள் எடுக்கப்பட்டதாகவும், இது சம்மந்தமான சர்வதேச அறிக்கையை கேட்டு ஜனாதிபதி Patasse ஒரு உரை நிகழ்த்தியுள்ளதாகவும் Radio France International அறிவித்தது. மத்திய ஆபிரிக்கா குடியரசின் பொலிஸ் படையினருக்கு பிரான்ஸ் ஆயுதங்களை வழங்கியுள்ளது என்பதை இவைகள் சுட்டிக்காட்டுகின்றன. வானொலி அறிக்கையின் படி Patasse ''கூடவோ அல்லது குறையவோ பிரான்சின் பாத்திரம் பற்றி கேள்வி எழுப்பியுள்ளார் ''

ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களை கண்டனம் செய்ய Jospin மறுத்ததானது இவற்றின் நிஜத்தன்மையை எடுத்துக்காட்டின. பதிலாக அவர் கூறுகையில் ''நாங்கள் தளராத முயற்சியுடன் பேச்சுவார்த்தையைத் தூண்டுவித்து இந்த நெருக்கடியைத் தீர்க்கவேண்டும்'' என்றார்.

General Kolingba பிரான்சின் ஆதரவுக்கு அழைப்பு விடுத்து, ஆட்சியை சதிக்கவிழ்ப்புச் செய்வது தனது நோக்கம் இல்லை எனக் கூறி ''நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்பு தேசிய கூட்டமைப்பை'' எனபவற்றை மீள் அமைப்பதே நோக்கம் என்றார். Kolingba பிரான்சிடமிருந்து நேரடியான ஆதரவைப் பெற்றுக்கொள்ளாவிட்டாலும், ஆபிரிக்காவிலுள்ள பிரான்சினுடைய பங்காளிகள் மூலம் உதவிகளைப் பெற்றிருக்க கூடும்.

மத்திய ஆபிரிக்கக் குடியரசு அரசாங்கத்தின்படி, இரண்டு Rwanda ஜெனரல்களின் கீழ் 300 ஆபிரிக்க கூலிப்படையினர் Kolingba வின் கிளர்ச்சியாளர்களோடு சேர்ந்து சண்டையில் ஈடுபட்டிருக்கின்றனர். அவர்கள் Rwanda Hutu militia உள்ள Interahamwe வை சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம். இவர்கள் பக்கத்து நாடான Congo வுடன் சண்டைசெய்தவண்ணம் இருந்ததுடன் Lusaka அமைதி பேச்சுவார்த்தையின் காரணமாக அவர்களது நடவடிக்கைகளை வேறு இடங்களில் செய்வதற்கு நிர்ப்பந்தக்கப்பட்டிருக்கலாம்.

மத்திய ஆபிரிக்க குடியரசில் நிகழ்ந்த சம்பவங்களிலுள்ள தொடர்புகளை பிரான்சின் ஆளும் வர்க்கத்தின் கூர்மையான பிரிவுகள் வெளிப்படுத்திக்காட்டுகின்றன. பழைய கொள்கையான ஆபிரிக்காவுக்கான நேரடியான இராணுவத் தலையீட்டை முன்னெடுத்துச் செல்ல விரும்பியபோதும், அடுத்தவருடம் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி Jospin இன் பார்வை எல்லாம் Elysée மாளிகை பற்றி இருப்பதால் இராணுவ மூலகங்களை பாவிப்பது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அதை எதிர்க்கவேண்டியிருந்தது.

அதே நேரத்தில், Pan-African கொள்கையின் தனது ஒரு பகுதிதான் Patasse என கடாபி குறிப்பிட்டிருந்தார். ஏனென்றால் Chad மீதான நடவடிக்கைகளுக்கான இராணுவத்தளங்களை அமைக்க மத்திய ஆபிரிக்கா குடியரசு தேவைப்படுவதனாலேயாகும். 2004 ஆண்டு திறக்க இருக்கும் எண்ணெய் குழாய்கள் Chad இன் தெற்கு பிரதேசத்திலிருந்து ஆபிரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதியில் அமைந்திருக்கும் Cameroon வரைக்கும் எண்ணெய் எடுத்துச் செல்லப்படவுள்ளது.

மத்திய ஆபிரிக்க குடியரசின் மீது Jean-Pierre Bemba வும் நலன்களைக் கொண்டிருக்கின்றார். இவர் கொங்கொ விடுதலை இயக்கத்தின் (MLC) தலைவராக இருப்பதுடன், Gadhaffi உடன் சேர்நது Patasse அரசுக்கு ஆதரவாக படைகளையும் அனுப்பி வைத்தார். Bemba ஒரு கோடீஸ்வர தொழிலதிபர். Uganda வின் ஆதரவுடன் அவர், கொங்கோ ஜனநாயகக் குடியரசிலுள்ள கபிலா ஆட்சிக்கு எதிராக சண்டைபிடித்தவண்ணம் உள்ளார். அவரது அமைப்பில் முன்னாள் Mobutu வின் ஆதரவாளர்களும் உள்ளதுடன் அவர்கள், அமெரிக்கா ஜனாதியான George W. Bush ன் குடும்பத்தவர்களுடனும் மற்றும் துணை ஜனாதியான Cheney யுடனும் நெருங்கிய தொடர்புகளை வைத்துள்ளார்கள். கடந்த காலங்களில், கொங்கோ ஜனநாயகக் குடியரசுடன் Patasse நெருங்கிய உறவு வைத்திருந்ததோடு, Bemba யின் தலையிடலுக்கு எதிராக ஆர்ப்பாட்டமும் செய்தார்.

தங்கம், வைரம் மற்றும் யுரேனியம் மத்திய ஆபிரிக்கா குடியரசில் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து சந்தேகமின்றி Bemba வின் நடவடிக்கைகான ஆர்வத்தைக் இவைகள் காட்டுகின்றன. எவ்வகையிலும் இதை ஒரு சுதந்திரமான வேலையாகவோ அல்லது எவ்வகையிலும் அமெரிக்கவின் ஆதரவையோ Bemba விளங்கிகொள்ளவில்லை, Bemba மற்றும் Interahamwe இவைகளின் தலையீடுகள் எதை உறதியாக காட்டுகிறதென்றால், Lusaka உடன்படிக்கை மத்திய ஆபிரிக்காவில் நிலைமைகளை கட்டுபடுத்த முடியாததையும் மாறாக சூழ்ந்திருக்கும் நாடுகளில் குழப்பங்களை உண்டு பண்ணியிருக்கிறது என்பதைத்தான்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved