World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள்:கணனி தொழில்நுட்பம்

European Union extends investigation of Microsoft

ஐரோப்பிய ஒன்றியம் மைக்ரோசொப்ட் மீதான விசாரணையை நீட்டிக்கின்றது
ByMike Ingram
4 September 2001

Back to screen version

பாரிய மென்பொருளுக்கான [Software] நிறுவனமான மைக்ரோசொப்ட் [Microsoft] அமெரிக்க நீதித்துறையோடான 4 வருட மோதலுக்கு பின்னர் வழக்கை முடிவுக்கு கொண்டுவர முயற்சிக்கின்றது. இந்நிறுவனம் ஐரோப்பாவின் நுணுக்கமான ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் நடைபெற்ற இவ்வழக்கின் தொடர்ச்சியாக, இந்நிறுவனத்தின் கணினி செயற்படு பொறியமைவை பாவிப்பதன் ஊடாக தனியார் கணினிகளை [Personal Computer] இணைக்கும் மென்பொருள் பணியகத்தில் [Server Software] அதனது சந்தையில் பங்கு உயர்ந்துள்ளது என ஐரோப்பிய ஒன்றியத்தின் விசாரணை எடுத்துக்காட்டுகின்றது. மைக்ரோசொப்டின் புதிய வெளியீடான கணணிசெயற்பாடு பொறியமைவுடன் Windows Media Player [ஒலி, ஒளி பதிவுகளை பார்க்க உதவும்] உள்ளிணைப்பதையும் ஐரோப்பிய ஒன்றியம் விசாரணை செய்கின்றது.

மாசி 2000 இல், ஐரோப்பிய ஆணைக்குழு மைக்ரோசொப்டின் வின்டோஸ் 2000 [Windows 2000 operating system] த்தின் செயற்பாட்டு பொறியமைவுக்கு மேல் விசாரனை ஒன்றை ஆரம்பித்துள்ளது. மைக்ரோசொப்ட் தனது தனி கணினி செயற்பாட்டு பொறியமைவின் [Desktop computer operating systems] மீதான தனது மேலதிக்கத்தை பயன்படுத்தி வின்டோஸ் 2000 த்தின் மென்பொருளை பணியாக சந்தையில் [Server market] விட்டுள்ளதாக விவாதிக்கின்றது. இந்த நடவடிக்கை ஐரோப்பிய ஆணைக்குழுவால் சுயாதீனமாக ஆரம்பித்துள்ளபோதிலும், மைக்ரோசொப்டின் எதிரிகளால் ஆதரவும் ஆதாரமும் வழங்கப்பட்டுள்ளது.

மைக்ரோசொப்ட் உரிமை மறைப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், தனது வின்டோஸ் செயற்பாட்டு பொறியமைவு [Windows operating system] அடங்கிய முக்கிய தகவல்களை வழங்க மறுத்தாக Sun Microsystems இன் குற்றச்சாட்டை அடுத்து இந்த விசாரணை வைகாசி 2000 இல் தொடரப்பட்டது.

ஐரோப்பா பின்வரும் விசாரணைகளை விஸ்தரிக்கவுள்ளது:

* மைக்ரோசொப்ட் சட்டவிரோதமாக ஊடக காட்சியினுள் உள்ளிணைக்க பயன்படுத்தப்பட்ட தொடரோட்ட தொழில்நுட்பம் [Streaming Technology] அதனது வின்டோஸ் செயற்பாட்டு பொறியமைவினுள் ஒலி மற்றும் ஒளிகாட்சிப்பதிவுகளை வலைதளத்திலிருந்து பாரியளவில் தகவல்களை கீழ் இறக்காமல் [Downloads] வாசிக்கிறதா என்பதை அறிதல்.

* மைக்ரோசொப்ட் சட்டவிரோதமான கட்டுப்பாட்டு அனுமதி ஒப்பந்தங்களை பயன்படுத்தி, வின்டோஸ் பாவனையாளர்களை அதன் போட்டியாளர்களான SunMicrosystems, IBM ஐ போலல்லாது மைக்ரோசொப்ட் சார்ந்த மென்பொருள்களை பதிவுசெய்ய வேண்டுகின்றதா.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வழக்கு அமெரிக்க நீதிதுறையாலும், மற்றும் 18 மாநிலங்களாலும் முன்னெடுக்கப்பட்ட வழக்கிற்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லையானாலும் மைக்ரோசொப்டின் எதிரிகளால் இதனை நிருபிக்க ஓர் சந்தர்ப்பமாக பார்கின்றார்கள். அமெரிக்காவில் Iowa என்னும் இடத்தின் தலைமை வழக்குத்தொடுனரான Tom Miller ''இதுவும் அமெரிக்க வழக்குகளின் செயல்பாடும் ஒரேமாதிரியானது. ஐரோப்பாவின் நடவடிக்கையை நான் இன்று வரவேற்கின்றேன். மைக்ரோசொப்டின் உறுதியான மற்றும் தொடர்ச்சியான ஒரேமாதிரியான சட்ட விரோதமான செயல்பாடுகள் எங்களை போல் ஐரோப்பாவையும் ஆழ்ந்த கவனத்துக்குள்ளாக்கியுள்ளது'' என கூறினார்.

ஐரோப்பாவின் நம்பிக்கையின்மை சட்டத்தை [European anti-trust laws] அத்துமீறியதாக மைக்ரோசொப்டை இனம் கண்டுகொண்டால், அந்நிறுவனம் அதன் வருட வருமானமான 25 பில்லியன் டொலரில் இருந்து 10% இற்கு மேலான அபராதம் செலுத்தவேண்டியிருக்கும். 2.5$ பில்லியன் அபராத தொகையானது, உண்மையில், இவ்வழக்குகளின் அபராதம் மட்டுபடுத்தப்பட்டுள்ளதோடு வருடவருமானத்தின் 1% இலும் குறைந்தது. இக் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க மைக்ரோசொப்ட்டுக்கு 60 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மைக்ரோசொப்டின் போட்டியாளர்களால் எதிர்க்கப்பட்ட இந்ததொடரோட்ட ஊடகம் [Streaming Technology] மற்றும் இணையத்திற்கு அங்கீகாரமளித்தலும் ஒத்துபோகாததையடுத்து, ஐப்பசி மாதம் 25 இல் புதிதாக வெளிவரவிருந்த Windows XP செயற்பாட்டு பொறியமைவு ஐரோப்பாவால் தற்காலிகமாக வெளியிட தடைசெய்யப்பட்டுள்ளது.

நியூயோர்க் குடியரசுக்கட்சி சட்டசபை உறுப்பினரான Charles Schummer புதிய உற்பத்தியை மைக்ரோசொப்ட் உடனான நம்பிக்கையின்மை உடன்பாட்டினுள் சேர்க்கவும், Windows XP இனை பிந்தி வெளியிட கூறுமாறும் கடந்தமாதம் நீதிதுறையிடம் கேட்டுள்ளார்.

மைக்ரோசொப்டின் செயற்பாட்டு பொறியமைவில் இறுதியாக செய்யப்பட்ட திருத்தத்தின் தாக்கமானது போட்டியாளர்களின் பொருள்களை இயங்க தடைசெய்வதற்கும் அப்பால் செல்கின்றது. தொழில்நுட்ப வல்லுனர்கள் மைக்ரோசொப்டின் இறுதிச் செயற்பாடானது இணையத்தின் வெளிப்படையான சுதந்திரத்தை முற்றிலும் தடை செய்யவுள்ளது என குற்றம்சாட்டியுள்ளனர். வலைத் தளங்கள் கொண்டுசெல்லும் போட்டியாளர்களின் தகவல் சாதனங்கள் உருவமைப்பான Real Audio அல்லது Real Video போன்றவற்றை மைக்ரோசொப்டின் புதியபதிப்பான Internet Explorer ஒருபோதும் அதனுடாக வேலைசெய்ய அனுமதிக்காது. இது Windows மேலதிக்கத்துக்கு நன்றி தெரிவிக்கின்றது, ஏனெனில் அதன் தனி கணினிகளில் பலகாலமாக Internet Explorer மிகபுகழ் பெற்ற இணைய மேலோடியாக இருக்கின்றது. இந்த மாற்றமானது மைக்ரோசொப்டின் Browser களை பாவிக்காது தளங்களை உருவாக்குபவர்களை அவர்களது செயல்முறைக் குறியீட்டுக்களில் கூடிய மாற்றத்தை செய்ய வேண்டுவதுடன், சிலவேளை ஒரு தளத்தை உருவாக்க இரண்டு பதிப்புகள் உருவாக்கவும் நிர்ப்பந்திக்கின்றது.

தற்போது குறுக்குமேடை [Cross-Platform] செயல்முறை மொழியான யாவாவை [Java] பாவிக்கும் சில தளங்களுக்கு இதுபோன்ற பிரச்சனைகள் இருக்கின்றது. ஆனால் இதற்கு மைக்ரோசொப்ட் தனது சொந்த கருவிகளை இணைத்துள்ளதன் ஊடாக வின்டோஸ் மேடை [Windows platform] வேலை செய்ய அனுமதிக்கின்றது. இதேபோன்று, மைக்ரோசொப்டின் செயற்பாட்டு பொறியமைவு அங்கீகாரமளித்தல் மாறியுள்ளது. இது வல்லுனர்கள் கருத்தின்படி, மற்றய விற்பனையாளர்களின் பணியகத்துடன் [Server] இலவுவான ஒருங்கிணைப்பை தடைசெய்யும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

அமெரிக்க நீதிதுறையால் கடந்த வருடம் நீதிபதி Thomas Penfield Jackson இடம் முன்வைக்கப்பட்டுள்ள இந்த வழக்கில் இந்த விடயங்கள் அனைத்தும் கையாளப்பட்டுள்ளதாக வல்லுனர்களை சாட்சியமளிக்கின்றனர். அத்தீர்ப்பில் நிறுவனம் குற்றமிக்க முறையில் தனது ஏகபோகத்தை பாதுகாக்க செயல்பட்டது எனவும் இது தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் இறுக்கப்பட்டது என அவர் தீர்ப்பளித்தார். அவர் மேலும் மைக்ரோசொப்ட் ஒரு பகுதி செயற்பாட்டு பொறியமைவுக்கும், மற்றையது இணைய மேலோடிக்கும் [Web Browser], Microsoft Office போன்ற தொழில் பயன்பாட்டுக்கானதாகவும் இரண்டாக பிரிக்கப்படவேண்டும் என கட்டளையிட்டார்.

ஆனால் இந்த வழக்கில் சட்டபூர்வமான அரசியல் கட்சிகளின் கருத்துக்கள் பரத்தளவில் வாஷிங்டனில் அமைந்த நிறுவனத்தின் பின்னர் நிற்பது வெளிப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் இந்த வருட தொடக்கத்தில் மைக்ரோசொப்ட் நிறுவனத்திற்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமான தீர்ப்பு வழங்கியதற்காகவும், மைக்ரோசொப்டுக்கு எதிராக மற்றும் ஆதிக்கத்தை உடைத்துவிடும் என்பதற்காகவும் Jackson னை இந்த வழக்கில் இருந்து நீக்கிவிட்டது. மைக்ரோசொப்ட் தனது மேலாதிக்க சக்தியை முறைகேடாக பிரயோகித்தது என்ற Jackson இன் தீர்ப்புக்கு மேன்முறையிட்டு நீதிமன்றம் ஆதரவளிக்கவில்லை, ஆனால் வழக்கை மீண்டும் புதிய நீதிபதியின் கீழ் விசாரிக்க கீழ் நீதிமன்றத்திற்கு அனுப்பியது.

இந்த நீதிபதி கணனியால் குலுக்கி தேர்ந்தெடுக்கப்பட்டார். கிளின்டனால் நியமிக்கப்பட்ட Colleen Kollar-Kotelly சட்டதுறையில் 17 வருட அனுபவம் உள்ளவர். அவர் நீதித்துறையின் வழக்கறிஞ்ஞர்களையும் தன்னையும், 18 மாநிலங்களையும், மைக்ரோசொப்டும் உள்ளாடக்கிய கலந்துரையாடலுக்கு உத்தரவிட்டார். அதில் அவர் வழக்கின் முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் ஒரு உடன்பாட்டுக்கு வரவும் மற்றும் பொதுஉடன்படிக்கையை அபிவிருத்திசெய்யவும், எவ்வகையில் வழக்கை தொடர்வது என்பது தொடர்பாகவும் திட்டமிட முன்மொழிந்தார். இது ஒரு உடன்பாட்டை அடைவதற்கான பேச்சுவார்த்தை என பிரகடனம் செய்யப்பட்டது. செப்டம்பர் 21ம் திகதி அக்கலந்துரையடல் ஆரம்பமாகவுள்ளது. இதில் அனைத்து கட்சிகளையும் செப்டம்பர் 14ம் திகதிக்குள் சிறிய அறிக்கை கொடுக்கும்படி கேட்கப்பட்டது.

ஐரோப்பாவின் நீடித்த விசாரணையானது, மைக்ரோசொப்டுக்கு எதிரான முகாமிற்கு எண்ணெய் வார்ப்பதிலும் பார்க்க அந்நிறுவனத்திற்கு சாதகமாக இயங்கலாம். அமெரிக்காவின் உலக நிலைமைக்கு இது சிறப்பானதாக இல்லாததுடன், அமெரிக்காவின் உலக பொருளாதார போட்டியாளர்களினதும், அரசாங்கத்தினதும் குற்றச்சாட்டுக்கும் இவ் இணக்கமற்ற கண்டுபிடிப்புக்ளுக்கும் எதிராக இத்துறையில் தனது ஆதிக்கமானது அமெரிக்காவின் உலக பொருளாதார விவகாரங்களின் முன்னணி பாத்திரத்தை பாதுகாக்கிறது என மைக்ரோசொப்ட் விவாதிக்கின்றது. ஐரோப்பிய ஒன்றியமானது நம்பிக்கையின்மை நடவடிக்கையை [anti-trust action] பிரயோகிக்கும் முயற்சியை ஐரோப்பாவின் தகவல் தொழில்நுட்ப சந்தையில் அமெரிக்காவின் மேலதிக்கத்தை தடைசெய்ய பாவிப்பதாக கருதப்படுவது, மைக்ரோசொப்ட் நிறுவனம் அமெரிக்காவின் அரசியல் ஆளும்தட்டினரின் மத்தியில் பலமான ஆதரவை பெற்றுக்கொள்ளக்கூடும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved