World Socialist Web Site www.wsws.org


 WSWS: செய்திகள் & ஆய்வுகள்: மத்திய கிழக்கு

Thousands of Israeli workers and youth demonstrate against Sharon's war

ஆயிரக்கணக்கான இஸ்ரேலிய தொழிலாளர்களும் இளைஞர்களும் ஷரோனின் யுத்தத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்

By David Cohen and Chris Marsden
5 April 2002

Back to screen version

யுத்தத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம்'' என்ற சுலோகத்தின் கீழ், ஆயிரக்கணக்கான இஸ்ரேலிய யூத தொழிலாளர்கள், மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகள் ஏப்ரல் 3 இல் ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங்களில் ஆர்ப்பாட்டம் செய்தனர். "Ta'ayush" (யூத அராப் கூட்டு) இயக்கம், இஸ்ரேலின் பெண்கள் குழு மற்றும் மனித உரிமைகளுக்கான இயற்பியல் (பெளதீக) விஞ்ஞானிகள் இந்த ஆர்ப்பாட்டத்தினை நடாத்தினர். இஸ்ரேலிய பாதுகாப்பு படை (IDF) இந்த எதிர்ப்பாளர்கள் மீது தொடர்ச்சியான மற்றும் கொடூரமான தாக்குதலை நடாத்தினர்.

''Kalandia சோதனைச் சாவடி (check point) அருகில் திட்டவட்டமாக என்ன நடந்துகொண்டிருக்கிறது? எமக்கு தெரியாது. மேலதிகமாக கருணையற்ற முறையிலான கொலைகள், விரிவாக்கப்பட்டிருக்கும் அழிப்புகள் இடம் பெறுவதாகவும் மற்றும் Al-Mukataa மற்றும் அறியப்பட்ட பாலஸ்தீன தலைவரான Yasser Arafat அந்நியப்படுத்தப்பட்டு முற்றுகையிடப் பட்டிருப்பதுடன், றமல்லா அரசாங்க மருத்துவமனை உள்ளடங்கலாக ஏனைய தனியார் மருத்துவமனைகளில் மருந்துக்களின் தேவைகள் பற்றாக்குறையாக இருக்கின்றன. ஆக்கிரமிப்பினை ஒரு முடிவுக்கு கொண்டுவருவதன் மூலம் பலாத்காரத்தின் சுற்றுவட்டத்தினை நாம் முடிவுக்கு கொண்டுவரவேண்டும். அதன்பின்னர் மட்டுமே கொடூரமான முறையில் மக்களை --அராப் மற்றும் யூத மக்களை-- கொலைசெய்தல் நிறுத்தப்படும்.'' ''பாலஸ்தீன ஒன்றியத்தின் மருத்துவ பாதுகாப்பு மையம் (Palestinian Union of Medical Relief) மற்றும் பெண்களின் அமைப்புக்களுக்கான உணவு மற்றும் மருந்து வினியோகங்கள் ஆர்ப்பாட்டதில் எடுத்துச்செல்லப்படும்.'' என Beer-Sheva இல் இருக்கும் Ben-Gurion பல்கலைக் கழகத்தில் அரசியல்துறை விரிவுரையாளரும் இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்த முன்னணியாளர்களில் ஒருவருமான வைத்தியர் Neve Gordon ஆர்ப்பாட்டத்திற்கு முன்னர் உலக சோசலிச வலைத்தள நிருபரிடம் கூறினார்.

சமாதான ஆதரவு (Gush Shalom/Peace Block) இயக்கத்தின் அங்கத்தவரான Yehudit Harel ஆர்ப்பாட்டத்திலான அவரது அனுபவத்தை விபரித்தார்.

''வரையறுக்கப்பட்ட அமைதிவாதிகளின் பிரமாண்டமான ஒரு அணிதிரள்வாக அது இருந்தது. அங்கே கிட்டதட்ட 50 போக்குவரத்து வண்டிகளும், தனியார் கார்களும் வந்திருந்ததுடன், நாட்டின் அனைத்துப் பாகங்களிலிருந்தும் யுத்த எதிர்ப்பு கூட்டினை பிரதிநித்துவப்படுத்தும் அனைத்து அமைதிவாத இயக்கங்கள் மற்றும் கழகங்களின் கிட்டதட்ட 3 ஆயிரம் யூத மற்றும் அராபிய பெண்கள் மற்றும் ஆண்கள் இதில் கலந்துகொண்டனர்.

''வந்து சேர்வதற்கு ட்ரக் வண்டிகளுக்காக காத்திருந்த கணம், திடீரென்று எல்லை காவல் படை அல்லது உடையணிந்திருந்த அடியாள் கூட்டங்கள் ஜனத்திரளின் மத்தியில் கண்ணீர் புகையினை எறியத் தொடங்கினர். அந்தப் புகை மிகவும் அடர்த்தியாக இருந்ததுடன், அவர்கள் பல தடவைகள் எம்மை நோக்கிச் சுட்டனர். அடர்த்தியான கனமான வடிவத்தில் புகை உடனடியாக எங்கும் பரந்ததது. மக்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். நானும் கூட அதிர்ச்சியடைந்தேன். என்னால் சுவாசிக்கவே முடியாதிருந்தது. மக்கள் அனைவரும் ஓடத்தொடங்கினர், சிலர் கிடங்குகளுக்குள் விழுந்தனர். அயலில் குடியிருந்த பாலஸ்த்தீன வீடொன்றில் நான் தஞ்சமடைந்தேன். அங்கே என்னை கவனித்துக்கொண்டவர்கள் என்னை அமைதிப்படுத்தியதுடன் சிறிதுநேரம் கழித்து வெங்காயமும் தந்தனர்.

அணிதிரண்டு ஒன்றுகூடி காத்துக்கொண்டும், சுலோகங்களை உரத்து கத்திக்கொண்டும் நின்று கொண்டிருந்த பின்னர்... முதல் வரிசையில் சோதனை சாவடியில் நான் நின்றுகொண்டிருந்தேன், அப்போது அவர்கள் மீண்டும் சுடத்தொடங்கினர். இந்தத் தடவை காவல் துறையினர் வெளியே வந்ததுடன் தப்பியோடிக்கொண்டிருந்த கூட்டத்தினை வேட்டையாடினர். அவர்களை கொடூரமான முறையில் தள்ளியதுடன், தமது தடிகளினால் அடித்தனர், அவர்களில் சிலர் தடுமாறி நின்றனர், அதில் பலர் கிடங்குகளுக்குள் விழுந்தனர். கூட்டம், சோதனை இடத்தில் இருந்து தூரமாக நிற்கத்தொடங்கியது. ஆனால் அவர்கள் எமக்கு பின்னால் வந்ததுடன், புதிய கண்ணீர்ப் புகை வெடியினை சுட்டனர். அதில் சிலர் காயமுற்றதையும் மற்றும் ஒரு பெண்மணி மயக்கமுற்றதையும் நான் கண்டேன்.''

ஒரு சில நடவடிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டார்கள் ஆனால் ஒரு குறுகிய விசாரணைக்குப்பின் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஒரு முற்றான பொய் நிறைந்த ஆத்திரமூட்டும் மற்றும் ஒரு பலாத்கார நடவடிக்கையாக இது இருந்தது என அதிகாரத்தினர் அறிவித்தனர். அங்கு எவ்வித பலாத்காரமோ அல்லது கற்கள் கூட காவல் துறையினரை நோக்கி எறியப்படவில்லை. அடிக்கடி, நாம் தாக்கப்பட்ட பின்னர் 'பொலீஸ் அரசு', 'பாசிசம் வெற்றிபெறப் போவதில்லை', உங்களையிட்டு நாம் வெட்கப்படுகிறோம், யூத மக்கள் உங்களால் வெட்கப்படுகிறார்கள்' இப்படியான சுலோகங்களை அவர்கள் முன் கோஷமிட்டதன் மூலம் எமது தாக்குதலாளர்களுக்கு எமது எதிர்ப்பை தெரிவித்தோம். சில நடவடிக்கையாளர்கள், 'நீங்கள் நாசிகளைப்போல் செயல்படுகிறீர்கள்', என அவர்கள் முன் கத்தினர். இது அவர்களை இன்னும் கோபமடையச் செய்தது மற்றும் கொடூரப்படுத்தியது.''

இரண்டு நாட்களுக்கு முன்னர் இஸ்ரேலுக்கு ஓடிய நூற்றுக் கணக்கானவர்களுக்கு மத்தியில் 9 வெளிநாட்டு அமைதி நடவடிக்கையாளர்கள் பாலஸ்தீனிய பிராந்தியத்தில் IDF இராணுவ நடவடிக்கைக்கு எதிராக ''மனித கேடயங்களாக'' ஆர்ப்பாட்டம் செய்துகொண்டிருந்தபோது காயப்படுத்தப்பட்டார்கள். அந்த ஒன்பது பேரும்-- நான்கு பிரித்தானியர்கள், இரண்டு அமெரிக்கர்கள், ஒரு பிரெஞ்சுக்காரர் மற்றும் ஒரு ஆஸ்திரேலியர் -- Bethlehem அருகில் ஒரு அமைதி ஆர்ப்பாட்டத்தின் போது, இஸ்ரேலிய இராணுவத்தால் சுடப்பட்டார்கள். ஆஸ்திரேலியரான Tracy Irving க்கு அவரது வயிற்றில் இருந்த குண்டின் தகட்டினை எடுப்பதற்காக அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.

'' 'எதிர்ப்பு என்பது பயங்கரவாதமல்ல' என்ற பதாகையை நான் கொண்டு சென்றேன், அப்போது என் கைகளில் அடித்தார்கள். அவநம்பிக்கை உடைய ஒருவராக எனது வெளிப்படுத்தல் இருந்தது. நிஜ துப்பாக்கி ரவைகளை நாம் எதிர்பார்க்கவேயில்லை. சாதரணமாக, கண்ணீர் புகை மற்றும் றப்பர் குண்டுகளுக்கும் நாம் முகம்கொடுத்தோம்.'' என 31 வயதாகும் லண்டன் engineering consultancy இன் இயக்குனரான Chris Dunham கூறினார்.

Bristol இல் வசிக்கும் ஒரு தொழில்நுட்ப ஆலோசகராக இருக்கும் 30 வயதாகும் Kunle Ibidun முழங்கையில் காயமுற்றார். ''அது ஒரு கொடூரமானதாக இருந்தது. எனது தந்தையார் இறந்துவிட்டதாக இன்றுதான் கேள்விப்பட்டேன் ஆகையால் நான் நாட்டிற்கு திரும்பிப் போகிறேன். ஆனால் இங்கே நான் பார்த்தவைகளை மறப்பது எனக்கு சாத்தியமற்றதாகும்.''

''என் வாழ்வில் இதுவரை நான் பார்த்திராத மிக கொடூரமான அதிர்ச்சியாக அது இருந்தது. உண்மையில் எமது பக்கத்தில் இருந்து எவ்வித ஆத்திரமூட்டலும் இடம்பெற்வில்லை. அது ஒரு நடுக்கத்திற்குரிய விடயமாக இருந்தது.'' என பிரித்தானியாவின் எழுத்தாளரும், நடிகருமான Jeremy Hardy, BBC Radio 4 இடம் கூறினார்.

பிரெஞ்சு பூகோளமயமாக்கத்திற்கு எதிரான மற்றும் விவசாய சார்பு நடவடிக்கையாளரான Jose Bove தாக்கப்பட்டதுடன் திருப்பியனுப்பும் பாகமாக அவர் தடுப்பு முகாமிற்கு சிலருடன் சேர்த்து அழைத்துச்செல்லப்பட்டார். ''மைதானத்திலும், கூடாரத்திற்குள்ளும் மற்றும் முள்ளுக் கம்பிக்கு பின்னாலும் நூற்றுக்கணக்கானவர்கள் உட்கார்ந்திருந்ததுடன், அவதானிப்பு கோபுரத்திலிருந்து அவர்கள் அனைவரும் அவதானிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். 300 பேர்களுக்கு மேல் கண்கள் கட்டப்பட்டும், முழங்காலில் இருக்க வைக்கப்பட்டு இருந்ததுடன் விசாரணை செய்வதற்காக குளிரிலும் இரவிலும் காத்திருந்ததை நாம் பார்த்தோம். அது பார்ப்பதற்கு பொறுக்க முடியாததாக இருந்தது.'' என தடுப்புமுகாமில் வைத்து பேட்டி கொடுத்தபோது Jose Bove கூறினார்.

மொத்தத்தில் 11 பிரெஞ்சு ஆர்ப்பாட்டக்காரர்கள் திருபியனுப்பும் பாகமாக இஸ்ரேலிய இராணுவத்தால் பொலீசிடம் கையளிக்கப்பட்டனர். ''அமைதிவாதிகள் என்பது சரியான வார்த்தையில்லை. அவர்களை ஆத்திரமூட்டுபவர்களாகத்தான் நாம் பார்கிறோம். பிரச்சனைகளை உண்டுபண்ணுவதற்காக அவர்கள் வெளிநாட்டில் இருந்து வருகிறார்கள்.'' என ஒரு இராணுவ பேச்சாளரான லெப்டினன் கேணல் Olivier Rafovitch கைதிகளை பற்றி குறிப்பிட்டார்.

றமல்லாவில் இருக்கும் West Bank நகரத்தின் மீதான இஸ்ரேல் இராணுவத்தின் முற்றுகையில், Sussex பல்கலைக்கழகத்தின் 12 மாணவர்கள் அகப்பட்டுக்கொண்டனர். ''இரவு பகல் முழுவதும் கவச வாகனங்களின் தாக்குதல், கனமான கலிபர் துப்பாக்கிச் சூடு, வெடிப்புகளையும் எமக்கு கேட்கக்கூடியதாக இருக்கிறது. இஸ்ரேலிய ஸ்னைப்பர்களால் {snipers} அயலில் இருக்கும் நிராயுதபாணிகளான அப்பாவி மக்கள் மீது தொடர்ச்சியாக சுட்டுக்கொண்டிருக்கிறார்கள். நாம் இதை எழுதிக்கொண்டிருக்கும்போது தலைக்குமேல் அமெரிக்க தயாரிப்பான Apache ஹெலிகாப்ட்டர்கள், நகரமெங்கும் துப்பாக்கி சூடு நடத்திக்கொண்டிருக்கின்றன. தனியார் வீடுகளைச் சுற்றி கவசவாகனங்களுக்கான நிரந்தரமான நிலையை இஸ்ரேலிய புல்டோசர்கள் உருவாக்கிக் கொண்டு இருக்கின்றன.''

''தெருவுக்கு தெரு மற்றும் வீட்டிற்கு வீடு தீவிர வேட்டையில் இஸ்ரேலிய படை பாலஸ்தீனிய கைதிகளை பிடித்துச் செல்கின்றனர். 16 வயதில் இருந்து 40 வரையிலான அயலில் உள்ள ஆண்கள் அனைவரையும் 'சரணடைவதற்கு' இஸ்ரேலிய துருப்புக்கள் அழைப்பு விடுகின்றனர். காயப்பட்டவர்கள் கொடூரமாக நடத்தப்படுவதுடன், அவர்களுக்கு மருத்துவ வசதிகள் நிராகரிக்கப்பட்டன. இப்போது அவர்களது தலைவிதி என்னவென்றே தெரியாத நிலையில் இருக்கிறது. கைதிகளில் சிலர் கொல்லப்பட்டிருப்பதாக அறிக்கைகள் இருக்கின்றன.'' என அமைதி நடவடிக்கையாளர்கள் தம்மை பாதுகாக்கும்படி விட்ட ஒரு அழைப்பில் விளங்கப்படுத்தியிருந்தனர்.

ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங்களில் சேவை செய்வதனை மறுக்கும் இஸ்ரேலிய அதிரடிப்படை மற்றும் இராணுவ வீரர்களின் எண்ணிக்கை ஒரு ஆச்சரியமானமுறையில் அதிகரித்து வந்திருக்கிறது. அவர்களில் பலருக்கு 28 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டன.

''சுற்றி வளைக்கப்பட்டிருக்கும் அரபாத்தின் தலைமையகத்தில் ஒரு இடதுசாரி நடவடிக்கையாளரான Neta Golan இடமிருந்து வந்த ஒரு செய்தியொன்றினை சமாதான ஆதரவு {Peace Block} இயக்கம் பிரசுரித்திருந்தது. ''நானும் என் நணபர்களும் --இத்தாலி, பிரான்ஸ், அமெரிக்கா மற்றம் ஏனைய நாடுகளில் இருந்து வந்திருக்கும் சர்வதேச அமைதி நடவடிக்கையாளர்கள், அவர்களில் பலர் யூதர்கள்-- IDF இராணுவம் பலாத்காரமாக நுளைய முயலும் பட்சத்தில் ஒரு மனிதக் கேடயங்களாக இயங்குவதற்காக இங்கு வந்துள்ளோம். இராணுவத்தை முகம்கொடுப்பதற்கு தீர்மானமாக இருப்பவர்கள் நிராயுதபாணியாக இருப்பதுடன் மற்றும் டெல் அவிவ் {Tel-Aviv} இல் இருந்து ஒரு இஸ்ரேலியர் கூட அவர்களது பாதையில் தடையைமைத்திருக்கிறார் என்பதை அரசாங்கம் தெரிந்துகொள்ள வேண்டும்'' என Neta Golan குறிப்பிட்டதாக சமாதான ஆதரவு {Peace Block} அங்கத்தவர் ஒருவர் உலக சோசலிச வலைத் தளத்திடம் குறிப்பிட்டார். ''அங்கு தரித்து நின்ற மற்றும் சுட்டுக்கொண்டிருந்த இஸ்ரேலிய கவச வாகனங்களை நோக்கி இன்று ஆர்ப்பாட்டம் செய்த Beit Jala இல் அமைந்திருக்கும் சர்வதேச ஐக்கிய குழு அங்கத்தவர்கள் பற்றி விளங்கப்படுத்த தொடங்கினார்... ஏற்கனவே பலதடவை நடைபெற்றதுபோல், தொலைபேசி துண்டிக்கப்பட்டதுடன், அதன்பின்னர் மீண்டும் தொடர்பு கொள்ளமுடியவில்லை'' என அமைதித்தடை அங்கத்தவர் மேலும் கூறினார்.

இடதுசாரிக் கவிஞரான Yitshak Leor ஒரு பகிரங்க அழைப்பினை விட்டுள்ளார். ''ஒரு பெரிய இராணுவம் ஒரு சிறிய மக்களினை நசித்துக்கொண்டிருக்கிறது. எமது மகன்கள் மற்றும் சகோதரர்கள் பரந்த கைதுக்கு உள்ளாகியிருப்பதுடன், இளம் பெண்களை கொடூரப்படுத்தியும், அவர்களது தந்தையர்களை அசிங்கப்படுத்தியும் இருப்பதுடன், ஒரு புதிய தற்கொலையாளர்களின் சந்ததியினை உருவாக்கி கொண்டுள்ளது. இது வரவிருக்கும் சந்ததிகளுக்கான முரண்பாட்டின் தொடர்ச்சியை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது. இந்த ஆக்கிரமிப்பு எங்கள் எல்லோரையும் கொல்லப்போகிறது... குடியேற்றக்காரர்கள் மற்றும் இராணுவத்தின் மூலம் பாலஸ்தீனியர்களை கட்டுப்படுத்துவதைத் தவிர இந்த யுத்தம் எந்தக் காரணத்தையும் கொண்டிருக்கவில்லை. இந்த யுத்தம் எந்த பாதுகாப்பினையும் கொண்டுவரவில்லை. கண்ணீர் மற்றும் இரத்த ஆற்றில் எம் எல்லோரையும் மூழ்கடித்துள்ளது. நிரந்தரமான யுத்தத்தாலான ஒரு வாழ்வு எமக்கு வேண்டவே வேண்டாம். அரசியல் வாதிகள் எதை நிறைவேற்ற தவறினார்களோ, அதை செய்து முடிப்பதற்கு ஒரு பரந்த மக்கள் இயக்கத்தினை நாம் கட்டியெழுப்புவோம், வாருங்கள்.'' என அவர் அதில் குறிப்பிடுகிறார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved