World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்:தென் அமெரிக்கா

Political crisis deepens in Argentina after De la Rua's fall

ஆர்ஜெண்டினாவில் டு லா ருவாவின் வீழ்ச்சிக்குப் பின்னர் அரசியல் நெருக்கடி ஆழமடைகிறது

By Rafael Azul
22 December 2001

Back to screen version

ஆர்ஜென்டினாவில் புதன்கிழமையன்றும் வியாழக்கிழமையன்றும் தொழிலாள வர்க்கமும் தீவிரமயப்படுத்தப்பட்ட நடுத்தர வர்க்கத்தின் ஒரு பகுதியும் ஒரு பெரும் எழுச்சிப் பேரணியை நடத்தி ஜனாதிபதி பெர்னான்டோ டு லா ருவா-வின் அரசை வீழ்த்திய பொழுது பரந்த மக்கள் எழுச்சி ஒன்று அபிவிருத்தி அடையத் தொடங்கியது.

அண்மைய புள்ளி விவரங்கள் Plaza Demayo-வில் ஏழு போராளிகள் காவல் படைகளுடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டனர் என்பதை எடுத்துக் காட்டியது. பியூனஸ் அயர்சில் அரசு மாளிகைகளில் போலீசாருடன் கடும் மோதல் ஏற்பட்டது. சூப்பர் மார்க்கெட்டுகள் மீதான தாக்குதலின் போது பாதுகாப்புப் படைகளோடும் சொந்தக்காரர்களுடனும் நடந்த மோதலில் மேலும் 18 பேர் கொல்லப்பட்டனர். இரண்டு கடைக்காரர்கள் தங்கள் கடைகள் கொள்ளையடிக்கப்பட்ட பின் தற்கொலை செய்து கொண்டனர். பாதிக்கப்பட்ட சொத்துக்களுள் வங்கிகள் மற்றும் எந்த நேரமும் பணம் எடுக்கும் எந்திரங்கள், மார்க்கெட்டுகள் மற்றும் கடைகள் ஆகியன உள்ளடங்கும். இதில் ஆயிரம் பேர் காயமடைந்தனர் மற்றும் 1500 பேர் மோதல்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டனர்.

போலீசால் நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள் பலர் பலியானார்கள். Cordientes நகரத்தில் வேலை பார்த்த பின்னர் ஓய்வு எடுத்துக்கொண்ட ஒருவர் போலீஸினால் சுட்டுக்கொல்லப்பட்டார். Rusario-விலும் Santafe-விலும் இத்தகைய தாக்குதல்கள் நடந்தன.

டு லா ருவா வியாழக்கிழமை ராஜினாமா செய்யும்முன் முற்றுகையைத் தளர்த்தினார். புதிய அரசு பியூனஸ் அயர்ஸ் பிராந்தியத்தில் அதை மீண்டும் வெள்ளிக்கிழமை அமல்படுத்தியது.

பிளாஸா டி மேயோவில் முதலில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் வலதுசாரி தேசிய குழுக்கள், பிளாஸா டு மேயோ பாட்டிகள், இடதுதுசாரி கட்சிகளின் ஆதரவாளர்கள் ஆகிய பல்வேறு அரசியல் கருத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்தின. மதியத்திற்குள் பியூனஸ் அயர்சில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளிகளும் நடுத்தர வர்க்க மக்களும் அவற்றில் கலந்து கொண்டனர். பார்லிமெண்டிற்கு முன்பாக, வியாழக்கிழமை அதிகாலையில், நடுத்தர வர்க்க கூட்டத்தினர் அணிவகுத்து வந்ததுடன் பாத்திரங்களைத் தட்டி ஒலி எழுப்பிக் கொண்டு டு லா ருவாவுக்கு எதிராக முழக்கமிட்டனர். அவர்கள் போலீசுடனும் கூட போராடினர்.

மூன்றரை ஆண்டு பொருளாார சுருக்கம் காரணமாக, சந்தேகமில்லாமல் மக்கள் அதிருப்தி அடைந்திருந்தனர். ஆனால் அனைவரும் ஒரே மாதிரியாக பாதிக்கப்படவில்லை. ஆர்ஜென்டினா நாட்டின் குடிமக்களின் முழுத் தட்டினரும் தங்களுக்காக நன்கு உழைத்திருந்தனர். ஆகஸ்ட் மாதத்தில் பியூனஸ் அயர்ஸ் நாளிதழ் கிளாரின் (Clarin) 1996-2001-க்குள் அடிமட்டத்தில் உள்ள 85சதவீதம் பேர் தங்களது வாங்கும் திறன் 40 சதவீதம் குறைந்ததைக் கண்டனர் என்று சுட்டிக் காட்டியது. ஆனால் அதற்கு மாறாக, 5சதவீதம் மேல் தட்டு மக்களுடைய உண்மை வருமானம் கருத்தைக் கவரும் வண்ணம் அதிகரித்தது.

உலக அளவிலான சமூக சமத்துவமின்மையில் ஆர்ஜென்டினா அடிமட்டத்தில் இருந்து 15வது இடத்தை வகிக்கிறது. 1970களில் 20 சதவீத மேல்தட்டு மக்கள் கீழ்மட்டத்து 20 சதவீதத்தினரினது வருமானத்தைப் போல் சுமார் 8 மடங்குதான் வருமானம் அதிகம் பெற்றனர், இப்போது 14 மடங்கு அதிகரிப்பு நிகழ்ந்துள்ளது. மெக்சிகோ, கோஸ்டாரிகா, மலேசியா, ஸ்பெயின் மற்றும் ஏனைய கிழக்கு ஐரோப்பாவை விட ஆர்ஜெண்டினாவின் வருமான சமத்துவமின்மை அதிகம் ஆகும். எடுத்துக் காட்டாக, ஸ்பெயினில் 20சதவீத மேல் தட்டினர் ஆர்ஜெண்டினாவில் உள்ளதைப் போலவே சம்பாதித்தாலும், அடிமட்டத்தில் உள்ளவர்கள் நான்கு மடங்கு அதிகம் சம்பாதிக்கின்றனர். 1980கள் வரை இலத்தின் அமெரிக்காவிலேயே வருமானத்தை பெரும்பாலும் சமமாக பகிரக் கூடிய நாடுகளுள் ஒன்றாக அர்ஜெண்டினா இருந்தது .

மேல்தட்டு மக்களின் சொத்தைப் பாதுகாக்க எடுத்த கடைசி முயற்சியாக வங்கி சேமிப்புகளின் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் டிசம்பர் 9 கிளர்ச்சியை வெடிக்கச் செய்தது. கடல் போல் காணப்பட்ட ஆர்ஜெண்டினிய கொடிகளின் மத்தியில் மிகப் பிரபலமான "ஆர்ஜெண்டினா ஆர்ஜெண்டினா" என்ற முழக்கம்-- பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு தொழிலாள வர்க்கத்துக்குள் முன்னோக்கு இல்லாமை பற்றிய குறிகாட்டலாக இருக்கிறது.

தொழிலாள வர்க்கம் ஜனாதிபதியை பதவியிலிருந்து அகற்றுவதற்கு போதுமான பலமுள்ளது என்பதை நிரூபித்தது, ஆனால் தங்கள் நலனைக் காப்பாற்றுதற்கு அது ஆட்சிக்கு வர இயலாததாக இருந்தது. டு லா ருவாவின் Radical Party- யிடமிருந்து ஆட்சியானது பெரோனிச எதிர்க் கட்சியான Justicialista கட்சிக்கு மாறிற்று.

டு லா ருவாவின் Radical Party- மற்றும் முக்கிய எதிர்க்கட்சியான Justicialista கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் மேல்தட்டு மக்களின் விசுவாசமான பிரதிநிதிகள் ஆவர். உண்மையில் முன்னாள் ஜனாதிபதி கார்லோஸ் மெனம் (பெரோனிசவாதி) பெர்ணான்டோ டு லா ருவா (radical) இருவர் கொள்கையும் சலுகை மிக்க மேல்தட்டினரின் செல்வத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டது. அம்மேல் தட்டினர் அரசு ஏகபோகத்தை இல்லாமற் செய்ததிலிருந்து ஒரு முறையும் ஆர்ஜெண்டினிய நுகர்வோர்களை எரிவாயு கட்டணம், டெலிபோன் கட்டணம் சுங்கக் கட்டணங்களை உயர்த்தி பலவந்தமாக செலுத்த வைத்ததிலும் சுரண்டி இருமுறை சம்பாத்தியத்தைப் பெருக்கிக் கொண்டனர்.

புதிய ஜனாதிபதி ரமோன் புயெர்ட்டா (Ramon Puerta) வலதுசாரி பெரோனியவாதி மற்றும் இந்த அடுக்கில் ஒருவர் ஆவார். இவர் Justicialista கட்சியின் பழமைவாத கிராமப்புற குழுவடன் மிக நெருக்கமாக இருந்தார். மெனம் போலவே இவரும் செல்வம்மிக்க சீமானாக பேர்பெற்றவர் மற்றும் இவருடைய சொத்து மதிப்பு 16 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாகும். காங்கிரஸ் ஒரு புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் வரை 48 மணி நேரம் அதிபராக இருப்பதாக புயெர்ட்டா அறிவித்தார்.

வர இருக்கும் பெரோனிச ஆட்சி பரந்த ஆர்ஜெண்டினிய உழைக்கும் மக்களின் செலவில் ஆர்ஜென்டினாவின் ஆளும் செல்வந்தத்தட்டின் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் நலன்களைப் பாதுகாக்க நடவடிக்கைகளை திணிப்பதைத் தொடரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved