World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : இந்தியா

India continues to stoke conflict with Pakistan

பாக்கிஸ்தானுடனான மோதலை இந்தியா தொடர்ந்து எரியூட்டி வளர்க்கிறது

By K. Ratnayake
4 February 2002

Back to screen version

இந்தியாவுக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையிலான கூர்மையான பதட்டங்களைத் தணிப்பதற்கு சர்வதேச அழுத்தம் இருப்பினும், இந்தியப் பாராளுமன்றம் மீதான டிசம்பர் 13 தாக்குதலை அடுத்து புதுதில்லியானது கடும் நிலைப்பாட்டை தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது. இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயி தாக்குதலுக்கு இரு காஷ்மீரி பிரிவினைவாதக் குழுக்களைக் குற்றம் சாட்டினார் மற்றும் எந்தவிதமான இராணுவத் குறைப்புக்கும் முன்னர், பயங்கரவாதிகள் என சந்தேகப்படக்கூடிய 20 பேர்களை ஒப்படைத்தல் மற்றும் "எல்லை கடந்த பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டல்" உட்பட, அதிகரித்துவரும் கோரிக்கைகளின் பட்டியலை பாக்கிஸ்தான் நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறது. தற்போது, இரு போட்டியாளர்களுக்கும் இடையில் இன்னொரு யுத்தத்தைத் தூண்டிவிடும் அச்சுறுத்தலுடன், எல்லையில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட அளவிலான அதிகம் ஆயுதங்களைக் கொண்ட இந்திய மற்றும் பாக்கிஸ்தானிய துருப்புக்கள் ஒன்றுக்கொன்று எதிராக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

பிரிட்டிஷ் பிரதமர் டொனி பிளேயர், அமெரிக்க அரசுத்துறை செயலாளர் கொலின் பாவெல் மற்றும் ஐ.நா பொதுச் செயலாளர் கோபி அன்னான் உள்பட அதிகம் செல்வாக்கு உள்ளவர்களின் அணி ஒன்று கடந்த சில வாரங்களாக இந்தியத் துணைக்கண்டத்திற்கு விஜயம் செய்து, இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக வேண்டுகோள் விடுத்தது. வாஷிங்டன் தனது சொந்த உடனடி காரணங்களுக்காக, ஆயுத மோதலைத் தடுக்க நாடும் அதேவேளை, ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத் தலையீடு மற்றும் அதன் "பயங்கரவாதத்தின் மீதான பூகோள யுத்தம்" ஆகிய இவை பாரதிய ஜனதாக் கட்சி (பி.ஜே.பி) தலைமையிலான அரசாங்கம் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பாக்கிஸ்தான் மீது ஒருவழி பற்சக்கரத் தடையாக அழுத்தம் கொடுப்பதற்கு மட்டும் ஊக்கம் கொடுத்திருக்கிறது.

ஜனவரி 22-ல் கல்கத்தாவில் உள்ள அமெரிக்க மையத்தின் மீதான தாக்குதலுக்கு புதுதில்லி உடனடியாக இஸ்லாமாபாத்தைக் குற்றம் சாட்டியது. அதில் நான்கு இந்தியப் போலீசாரும் 50 பேரும் காயம் அடைந்தனர். உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி பாக்கிஸ்தானிய இராணுவ உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ இதற்குப் பொறுப்பு எனக் குற்றம் சாட்டி, அது தாக்கியவர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறினார். அந்நேரம் இந்தியாவில் இருந்த அமெரிக்க எப்.பி.ஐ இயக்குநர் ரொபேர்ட் முல்லர், நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் குறைத்தார், ஆனால் இந்திய அரசாங்கம் அவ்விஷயத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

உள்துறை அமைச்சக செயலாளர் கமால் பாண்டே, கடந்த வாரம் இரு பாக்கிஸ்தானியர் ஜார்கண்ட் மாநிலத்தில் போலீஸ் சோதனையில் கொல்லப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டார். ஒருவர் இறப்பதற்கு முன்னர் போலீசாரிடம் - தாம் இருவரும் ஜம்மு மற்றும் காஷ்மீரில் இந்தியாவின் கட்டுப்பாட்டை எதிர்க்கும் இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுவான லஷ்கர்-இ-தொய்பாவின் உறுப்பினர்களாக இருந்ததாகவும் கல்கத்தா தாக்குதலை நடத்தியதாகவும் வாக்கு மூலம் அளித்திருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இந்தியத் துணைக் கண்டத்தில் உயர் அழுத்த சூழ்நிலைமையின் மத்தியில், வாஜ்பாயி அரசாங்கமானது ஆத்திரமூட்டும் வகையில் தொடரான ஏவுகணைச் சோதனைகளுக்கு ஆணையிட்டிருந்தது. முதலாவது ஜனவரி 25 அன்று இந்திய இராணுவமானது தனது நடுத்தர ஏவுகணையான அக்னி ஏவுகணையை சோதிக்கும் பொழுது இடம் பெற்றது. அது 10 டன் எடையுள்ள அணு ஆயுதத்தை சுமந்து செல்லக் கூடியதாகவும், இரயில்வே வாகனத்தில் இருந்து கூட ஏவக்கூடியதாகவும், கண்டுபிடிப்பது அரிதாக இருக்கக்கூடியதாகவும் திறம் பெற்றதாகவும் இருக்கிறது. வாஜ்பாயி "நிலைகுலைவிக்கும் மற்றும் நேரத்திற்குப் பொருந்தாதது" என்ற அது பற்றிய பாக்கிஸ்தானிய விமர்சனத்தை நிராகரித்து, அது "தேசிய பாதுகாப்புக்கு" அவசியமானதாக இருந்தது என்று கூறினார் மற்றும் மேலதிக சோதனைகளை முன்னெடுக்கவும் ஆதரவு வழங்கினார். கடந்த வாரம் இந்தியா மேலும் மூன்று ஏவுகணைச் சோதனைகளை-- அக்னியின் மேலதிக சோதனை மற்றும் இரண்டு கடற்படை சம்பந்தப்பட்ட மேலிருந்து வானுக்குத் தாக்கும் ஏவுகணை சோதனைகளை-- நடத்தியது.

அதேவேளை, புதுதில்லி காஷ்மீர் மீதான அதன் நிலையில் கடுமையாக இருக்கிறது. ஜனவரி 28 அன்று, வாஜ்பாயி பாக்கிஸ்தானுடனான எந்தப் பேச்சையும் கடினமானதாக ஆக்கினார். அவர் ராய்ப்பூரில் கூட்டம் ஒன்றில் பேசியதாவது: "காஷ்மீர் தான் பிரதான பிரச்சினையாக இருந்தால், மூன்றில் ஒரு பங்கு காஷ்மீர் பாக்கிஸ்தானால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், அவர்கள் அதனை இந்தியாவிடம் திருப்பித் தந்துவிட்டு பின்னர் பேச்சைத் தொடங்கலாம் என்றார். "அவர் காஷ்மீர் இந்தியாவின் பகுதி" என்றார் மற்றும் "எவராலும் அதனைப் பிரிக்க முடியாது" என்று கூறினார்.

அந்த அறிக்கை பேச்சுவார்த்தையை வழங்க முன்வருவதாக இராமல் இறுதிக் கெடுவாக இருந்தது. எந்த பேச்சுவார்த்தைக்கும் முன்பாக, பாக்கிஸ்தானின் சர்வாதிகார தளபதி பர்வெஸ் முஷாரப் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பாக்கிஸ்தானின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வரும் சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியில் இருந்து துருப்புக்களை விலக்கிக் கொள்ளமாட்டார் என்று இந்தியப் பிரதமர் நன்கு அறிவார். இருந்தும் வலியுறுத்துவது நா தவறி கூறியது அல்ல, வெளியுறவு அமைச்சகப் பேச்சாளர் நிருபமா ராய் பாக்கிஸ்தானிய விமர்சனத்தை ஒதுக்கித்தள்ளிவிட்டு, வாஜ்பாயி இன் கூற்று "நன்கு எண்ணிப்பார்த்துக் கூறப்பட்ட மற்றும் கொள்கை ரீதியான ஒன்று" என்று கூறினார்.

பாக்கிஸ்தான் வெளியுறவு அமைச்சகப் பேச்சாளர் அஹ்மது கான் இந்தியாவின் நிலைப்பாட்டை "துரதிர்ஷ்டவசமானது" என்றதுடன் --எல்லையின் இருபக்கமும் இருந்து துருப்புக்களை அவரவர் முன்னர் இருந்த அமைதிகால இருப்பிடங்களுக்கு கட்டம் கட்டமாக திருப்பி அழைத்துக் கொள்ளுதல் பற்றிய பேச்சுக்கள் எனும்--- மாற்று முன்மொழிவை வைத்தார். வாஜ்பாயி சந்தேகப்படும் 20பேரை ஒப்படைப்பதற்கான கோரிக்கையை திரும்பக்கூறுவதற்கு ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி, ஒரேயடியாக அதை நிராகரித்தார். இஸ்லாமாபாத் இணங்கவில்லை எனில், அரசாங்கத்தின் "எண்ணங்கள் நன்கு வகுக்கப்பட்ட திட்டங்களாக மாற்றப்பட்டு இத்திட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார் அவர். அது, இந்தியா பாக்கிஸ்தானுக்கு எதிராக குறைந்த பட்சம் நடவடிக்கை எடுக்கும் என்ற குறைந்தபட்ச மறைமுக அச்சுறுத்தலாக இருந்தது.

பிப்ரவரி 3 அன்று, மேலும் ஒரு பத்திரிகைச் செய்தியை அவர் வெளியிட்டார், அதில் அவர் தனது நிலைப்பாட்டை சிறிது மாற்றுவதாகத் தோன்றியது. பாக்கிஸ்தானின் மீது புது நிபந்தனைகளை வைத்திருக்கவில்லை, ஆனால் எப்பொழுதெல்லாம் பேச்சுவார்த்தைகளைப் புதுப்பிக்கப்படுகின்றனவோ அப்போதெல்லாம், பாக்கிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரைத் திரும்ப ஒப்படைப்பது நிகழ்ச்சி நிரலில் முதலில் இருக்கும் என்று கூறினார். இந்திய-மற்றும் பாக்கிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதிகளுக்கு இடையிலான தற்போதைய அரை உத்தியோக ரீதியிலான கோடான --"எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (LoC) தொடர்பாக சமரசம்" எதுவும் இருக்காது-- எல்லைக்கட்டுப்பாட்டுக் கோடு இருநாடுகளுக்கும் இடையிலான சர்வதேச எல்லையாகவும் மாற்றப்படாது. இந்தியா "எல்லை மீதான மோதல்" உடன் "அறிவிக்கப்படாத அவசரகால சூழ்நிலையில்" இருந்தது.

இந்தியாவும் பாக்கிஸ்தானும் சர்ச்சைக்குரிய காஷ்மீர் எல்லை தொடர்பாக சுதந்திரத்திற்குப் பின்னர் நடந்த மூன்று யுத்தங்களில் இரண்டில்-1947 மற்றும் 1964ல் சண்டை இட்டிருக்கின்றன. இவ்விரு ஆணுஆயுத அரசுகளும் 1999-ல் இந்தியக் கட்டுப்பாட்டு காஷ்மீரில் உள்ள கார்கில் பகுதியில் பாக்கிஸ்தான் ஆதரவு போராளிகள் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த மலைஉச்சிகளைக் கைப்பற்றியபோது, கிட்டத்தட்ட மீண்டும் மோதலுக்கு வந்தன.

இந்த சர்ச்சையின் எதிரெதிர்ச் செயல்விளைவானது, இந்திய உபகண்டம் பிராந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதிகளின் --இந்திய காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக்கின்-- ஆதரவுடன் பிரிட்டிஷாரால் வகுப்புவாத அடிப்படையில் பிரிவினை செய்யப்பட்டதன் உற்பத்திப் பொருளாகும். முஸ்லிம் பாக்கிஸ்தான் மற்றும் பெரும்பாலும் இந்து இந்தியா என்ற கட்டமைப்புக்குள்ளே முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சமஸ்தானமான-- காஷ்மீர் நிலைக்கு நட்புரீதியான தீர்வு எதுவும் இல்லாதிருந்தது. இந்து மகாராஜா தொடக்கத்தில் தட்டிக்கழித்தவர் பின்னர் இந்தியாவுடன் இணைவதை நாடினார், அது எழுச்சியைத் தூண்டிவிட்டது மற்றும் அது பாக்கிஸ்தானால் ஆதரிக்கப்பட்டது. பின் தொடர்ந்த யுத்தம் தற்போதைய அரச பிரிவுக்கு வழிவகுத்தது.

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, லஷ்கர்-இ-தொய்பா போன்ற ஆயுதக் குழுக்கள் இந்திய இராணுவத்துடன் பிரகடனம் செய்யப்படாத யுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன. அது சுமார் 30,000 உயிர்களைப் பலிகொண்டு இருக்கிறது. பாக்கிஸ்தான் அது "விடுதலைப் போராளிகள்" என்று குறிக்கும் இந்த போராளிகளுக்கு தான் தார்மீக மற்றும் அரசியல் ஆதரவை மட்டும் அளிப்பதாக வலியுறுத்தியதுடன் இந்தியப் பாதுகாப்புப் படைகளால் நடத்தப்படும் கடும் ஒடுக்குமுறைகளைக் கண்டனம் செய்கிறது. இத்தகைய குழுக்களுடன் பாக்கிஸ்தானின் இராணுவத் தொடர்பு பற்றி ஆதாரத்தை இந்தியா சுட்டிக் காட்டுகிறது. அது அதனை "பயங்கரவாதி" என முத்திரை குத்துகிறது.

வாஜ்பாயி பல காரணங்களுக்காக பாக்கிஸ்தான் மீது கடும் அழுத்தத்தைக் கொடுப்பதற்கு இந்தியப் பாராளுமன்றத்தின் மீதான டிசம்பர் 13 தாக்குதலைப் பற்றிக் கொண்டார். முதலாவதாக அவரது பி.ஜே.பி பிப்ரவரி 18-ம் தேதி முக்கிய மாநிலங்களில் நடைபெற இருக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் இந்து பேரினவாத துருப்புச்சீட்டைப் பயன்படுத்துவதற்கு விழைகிறது. இவற்றுள் பி.ஜே.பி-ன் கோட்டையான, அது இன்னும் அதிகாரத்தில் இருந்துவரும் ஒரே மாநிலமும் மக்கள் தொகை அதிகமான வடமாநிலமானமுமான உத்திரப் பிரதேசமும் அடங்கும். கடந்த ஆண்டு ஏனைய மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் கட்சி படுமோசமாக தோல்வி அடைந்தது. பி.ஜே.பி தனது எதிர் அணியினரை "பயங்கரவாதம் மீது மென்மையாக" இருப்பதாகக் குற்றம் சாட்டியது. ஒரு தேர்தல் கூட்டத்தில் உத்திரப் பிரதேச பி.ஜே.பி தலைவர், பாக்கிஸ்தான் தனது போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால் " பாக்கிஸ்தான் இருந்ததற்கான தடயம் இருக்காது" என்றார்.

முஸ்லிம் எதிர்ப்பு வகுப்புவாத ஆத்திரமூட்டும் பிரச்சாரத்தின் விளைவாக, 1990-ல் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்த முதல் மாநிலம் உத்திரப் பிரதேசம் ஆகும். வாஜ்பாயியே தேசியப் பாராளுமன்றத்தில் உத்திரப் பிரதேச தலைநகர் லக்னெள-ன் பாராளுமன்ற இருக்கையை வகிக்கிறார். பி.ஜே.பி -ன் கூட்டாளியான உலக இந்து பேரவை (விஷ்வ இந்து பரிஷத்), "பி.ஜே.பி உத்திரப் பிரதேசத்தில் அதன் கோட்டையை இழந்தால் தில்லியில் உள்ள அரசாங்கம் விரிசல் விட ஆரம்பிக்கும்" என்று கூறியதன் மூலம் அதன் முக்கியத்துவத்தைக் கோடிட்டுக்காட்டியது. பி.ஜே.பி ஆனது விவசாயிகளின் பயிர்களுக்கு குறைந்தவிலைகளில் இருந்து அதிக செலவு பிடிக்கும் சுகாதார வசதி மற்றும் நிலையற்ற மின்சார அளிப்புக்கள் வரையிலான, எண்ணிறைந்த விஷயங்கள் தொடர்பாக வாக்காளர்களின் எதிர்ப்பை எதிர்கொண்டிருக்கிறது.

ஆனால் பாக்கிஸ்தான் தொடர்பான இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு வெறும் தேர்தல் காரணங்களுக்காக அல்ல. வாஜ்பாயியின் வலியத் தாக்கும் மனப்பான்மை இந்திய அரசியல் நிறுவனத்தின் தட்டு, புஷ்ஷின் "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை" தப்புவதற்கு அதி நல்வாய்ப்பாக கருதுவதை பிரதிபலிக்கிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சிக்கான ஆதரவை முடிவுக்குக் கொண்டு வரவும் பாக்கிஸ்தானில் இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களை ஒடுக்கவும் முஷாரப் வாஷிங்டனால் நிர்ப்பந்திக்கப்பட்டார். அதன்விளைவாக பாக்கிஸ்தானின் வலிமை மிக்க இவர், இராணுவம் உட்பட, இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடமிருந்து எதிர்ப்பினை எதிர்கொண்டிருக்கிறார், அதேவேளை, "எல்லை கடந்த பயங்கரவாதிகளுக்கு" எதிராக நடவடிக்கை எடுக்கும்படி தில்லியிலிருந்தும் கோரிக்கைகள் அதிகரித்து வருகின்றன.

வாஜ்பாயி அரசாங்கமானது காஷ்மீர் பிரச்சினையை, ஒரேயடியாக, --யுத்த வழியில் கூட-- இந்தியாவிற்கு சாதகமாகத் தீர்ப்பதற்கு, சூழ்நிலையை சுரண்டிக்கொள்வதில் விருப்பம் உள்ளதாகக் காணப்படுகிறது. எல்லையில் இரு இராணுவங்களையும் சிக்கலான வகையில் நெருங்கவிடாது தூரத்திலேயே வைத்திருப்பது, தொடரான சிறுசிறு மோதல்களால் குறிக்கப்படுகிறது --அதில் ஏதாவது ஒன்று ஒரேயடியான மோதலுக்கு சாக்காக பற்றிக்கொள்ளப்பட முடியும். அவை பிப்ரவரி 1 அன்று, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பல முனைகளில் கனரக எந்திரத்துப்பாக்கிச் சூடுகளையும் மோட்டார் ஷெல்களையும் பரஸ்பரம் வீசிக் கொண்டன. பூஞ்ச் மாவட்டத்தில் மூன்று குடிமக்கள் கொல்லப்பட்டதாக இந்தியா கூறியது, அதேவேளை சியால்கோட் அருகே படைவீரர் ஒருவர் இந்திய கனரக எந்திர துப்பாக்கிச் சூட்டினால் கொல்லப்பட்டதாக பாக்கிஸ்தான் குற்றம் சாட்டியது. இரு நாட்களுக்கு முன்னர், பாக்கிஸ்தான் பிரதான இராணுவ ஊடுருவலுக்கு முயன்றதாக இந்தியா குற்றம் சாட்டியது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved