World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

US preparing full-scale invasion of Iraq

அமெரிக்கா ஈராக்கின் மீது முழு அளவிலான ஆக்கிரமிப்புக்கு தயார் செய்து கொண்டிருக்கிறது

By Bill Vann
10 July 2002

Back to screen version

அண்மையில் கசிந்த, பென்டகன் பத்திரங்கள் அதேபோல அமெரிக்க இராணுவத்தினால் தயாரிக்கப்பட்ட மூலோபாய தயாரிப்புக்கள் மீதான அறிக்கைகள் அடுத்த பல மாதங்களுக்குள்ளே ஈராக்கில் பரந்த ஆக்கிரமிப்புக்காக புஷ் நிர்வாகம் தயார் செய்துகொண்டு வருகின்றது என்பதைக் காட்டுகின்றது.

அத்தகைய யுத்தம் இந்த நூற்றாண்டின் மாபெரும் ஏகாதிபத்திய குற்றங்களில் ஒன்றாக இடம்வகிக்கும் - ஒரு தாசாப்தத்திற்கும் மேலான பொருளாதாரத் தடைகளால் சூறையாடப்பட்டுவரும் மற்றும் நிறுத்தப்படாத இராணுவ மற்றும் அரசியல் ஆத்திரமூட்டல்களுக்கு ஆளாகியுள்ள ஒரு நாட்டிற்கு எதிராக உலகின் மிகப் பெரிய இராணுவ சக்தியால் புறத்தூண்டுதல் இல்லாமல் நடாத்தப்படும் தாக்குதலாகும். "பேரழிவை உண்டுபண்ணும் ஆயுதங்கள்" மற்றும் "பயங்கரவாதத்தின் மீதான யுத்தம்" பற்றிய வாய்ச்சவடாலின் பின்னால், வாஷிங்டனின் அடிப்படை யுத்த நோக்கங்கள், முற்றிலும் சூறையாடுவதாகும். அமெரிக்காவானது ஈராக்கின் எண்ணெய் வயல்களின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற விரும்புகிறது மற்றும் நாட்டை அமெரிக்க பொம்மை ஆட்சி மண்டலமாக மாற்ற விரும்புகிறது.

ஜூலை8 அன்று நடைபெற்ற வெள்ளைமாளிகை செய்தியாளர் மாநாட்டில், "ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது இந்த அரசாங்கத்தின் அறிவிக்கப்பட்ட கொள்கையாகும்.... மற்றும் அவ்வாறு செய்வதற்கான எமது செயல் முடித்தலுக்கு அனைத்துவகையான கருவிகளையும் நாம் பயன்படுத்துவோம்" என அறிவித்து, அரபு தேசத்திற்கு எதிராக இராணுவ நவடிக்கை பற்றி ஜனாதிபதி புஷ் மீண்டும் அச்சுறுத்தினார்.

இந்த "கருவிகள்" தயார்ப்படுத்தப்பட்டிருக்கின்றன. பென்டகனானது precision-guided munitions, அமெரிக்கப் படைகள் சாவு மழைகளைப் பொழியவும் உண்மையில் பல மைல்கள் தொலைவிலுள்ள பாதுகாப்பற்ற மக்களை அழிக்கவும் அனுமதிக்கும் "smart bombs" என்று அழைக்கப்படுபவற்றையும் நிலைச்சான்றாய் ஆகும் அளவுக்கு ஒழுங்குபடுத்துவதற்கு ஆணை கொடுத்திருக்கிறது.

வாஷிங்டனானது பாரசீகவளைகுடா முழுவதும் நூலிழையாய் இராணுவ தளங்களையும் விமான தளங்களையுங்கூட கட்டி இருப்பதுடன், எதிர்பார்த்துள்ள யுத்தத்திற்காக ஆயிரக்கணக்கான துருப்புக்களை அனுப்பி உள்ளதுடன் ஆயுத தளவாடங்களை சேகரித்து வைத்துள்ளது. குறைந்த பட்சம் 2000 அமெரிக்க சிறப்புப் படைகள் மற்றும் ஏனைய படைகள் ஜோர்டானுக்கு இரகசியமாக அனுப்பி வைக்கப்பட்டன, லெபானிய செய்தித்தாள் அல் சபிர் படி, வாஷிங்டனானது அம்மானிலிருந்து பாக்தாத் நெடுஞ்சாலை வழியாக பெரும் கவசவண்டிகளுடன் ஆக்கிரமிப்பை நடத்துதற்கு திட்டமிட்டுள்ளது என மேலும் குறிப்பிட்டது. ஜோர்டானிய ஆட்சியானது அமெரிக்க இருப்பை மறுத்திருக்கிறது, ஆனால் இழப்பீட்டு ஏற்பாட்டின் உறுதியான அடையாளம் ஜோர்டானுக்கு அதன் உதவியை குறைந்த பட்சம் இரட்டிப்பாக்குவதற்கான புஷ் நிர்வாகத்தின் முன்மொழிவாகும்.

கலிபோர்னியா, பெண்ட்டில்டன் முகாமில் உள்ள முதலாவது கடற்பகுதியின் விரைவு படையின், ஆக்கிரமிப்பில் பயன்படுத்தப்பட இருக்கும் பிரதான தாக்குதல் பிரிவு, யுத்தத்திற்கான தயாரிப்பில் கடும் பயிற்சிகளை ஆரம்பித்திருக்கின்றது என்று இராணுவ தகவல்கள் செய்தி அறிவிக்கின்றன. இதற்கிடையில், அமெரிக்க போர் விமானங்கள் நாட்டின் தென்பகுதியில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் "பறக்கத் தடை செய்யப்பட்ட மண்டலத்திற்கு" ஈராக்கின் சவால்களுக்குப் பதில் கொடுக்கும் சாக்கின் கீழ் ஈராக்கிய இலக்குகளுக்கு எதிராக அதிகரித்த அளவில் அடிக்கடி தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன.

இந்த மாதத் தொடக்கத்தில் நியூயோர்க் டைம்ஸ் செய்தித்தாளுக்கு கசிந்த, பென்டகனின் போர்த்திட்டங்கள் குறைந்த பட்சம் 250,000 துருப்புக்கள் மற்றும் நூற்றுக்கணக்கான போர்விமானங்கள் திட்டமிட்ட ஆக்கிரமிப்பில் பங்கேற்க இருக்கின்றன என கூறியது. இராணுவம் மற்றும் குடிமக்கள் ஆகிய இரண்டையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான இலக்குகள் மீது அழிவுகரமான வான் யுத்தம் செலுத்தப்படுவதுடன், இராணுவ நடவடிக்கையானது ஆரம்பமாகும்.

அமெரிக்க ஆக்கிரமிப்புத் திட்டங்களை விவரிக்கும் பத்திரம் கசிந்து வெளியானது, புஷ் வெறுமனே "ஊகத்திற்கு" எதிரான எச்சரிக்கையுடன் வாஷிங்டனில் சிறு சர்ச்சையை- தூண்டிவிட்டது. அமெரிக்க ஐக்கிய அரசுகளுக்கும் ஈராக்கிற்கும் இடையிலான ஒரு யுத்தம் 12 ஆண்டுகளுக்கு முன்னரான கடந்த ஆக்கிரமிப்பிலிருந்து இன்னும் அழித்துக் கொண்டிருப்பது, புஷ் நிர்வாகம் அதன் திட்டத்தை இரகசியமாக வைத்திருக்க சிறு தேவையையே கொண்டிருக்கிற அந்த அளவுக்கு சமமற்றதாக இருக்கிறது.

கடந்த மாதம் மேற்கு முனை பட்டமளிப்பு விழாவில் புஷ் திரைநீக்கிக் காட்டிய "முன்கூட்டிய தாக்குதல்கள்" பற்றிய புதிய கொள்கையுடன் அது வைக்கப்பட்டிருக்கும். இந்தக் கொள்கையானது அமெரிக்காவை வாஷிங்டன் "ஊதாரி நாடுகள்" என கருதும் எந்த நாட்டிற்கும் எதிராக புறத்தூண்டுதல் இன்றியே ஆக்கிரமித்தலைத் தொடுக்க அமெரிக்காவிற்கு உரிமை இல்லாமலேயே உரிமையை எடுத்துக்கொள்கிறது.

பெரும்பாலான இராணுவ மற்றும் அரசாங்க தகவல்களின் படி, ஈராக்கிற்கு எதிரான தாக்குதல் இராணுவ நிலைகளைக் கட்டுவதற்கான கால அவகாசத்தை அளிக்கின்ற மற்றும் பாலைவனப் போருக்கான சிறந்த சூழ்நிலைக்கான இதமான காலநிலைக்கான நேரத்தை வழங்குகின்றவாறு, அடுத்த வசந்த காலத்தில் ஆரம்பிக்கும். இருப்பினும், அரசியல் அவசரநிலை இராணுவ கருதிப்பார்த்தல்களை முந்திச் செல்லக்கூடும். நிர்வாகமானது குடியரசுக்கட்சி நவம்பர் இடைத்தேர்தல்களில் தோல்வி காணப்போவதாகத் தெரிந்தால், போர்-வெறி சூழலை உருவாக்கி மற்றும் அவரது அரசாங்கத்தின் பின்னே வாக்காளர்களை அணிதிரட்டும் நோக்கத்துடன் புஷ் "அக்டோபர் ஆச்சரியத்தினை" எடுத்துக் கொள்ளக்கூடும்.

புஷ், உதவி ஜனாதிபதி செனி மற்றும் ஏனைய நிர்வாக அதிகாரிகளுக்கு குற்றத்தனமான வர்த்தக நடைமுறைகளில் உள்ள அவர்களது பாத்திரம் பற்றி அதிகமாக கவனத்தை ஈர்த்திருக்கும் தொடரான கார்ப்பொரேட்டுகளது ஊழல்கள், பெரும்பாலும் மக்களின் கோபத்தைத் திசைதிருப்பும் வண்ணம் விரைவிலேயே ஒரு போரைத் தொடுக்கச்செய்யும் வழிமுறைகளாக இருக்கும்.

வரவிருக்கும் பேரழிவை நியாயப்படுத்துதற்கும் அரசியல் ரீதியாக தயாரிப்பதற்கும், அமெரிக்க மண்ணில் தாக்குதல்களுக்காக சதாம் ஹூசைன் ஆட்சியானது உயிரியல், இரசாயன அல்லது அணுஆயுதங்களைக் கூட வழங்கக் கூடும் என மறைமுகமாகக் குறிப்பால் காட்டிக் கொண்டு, புஷ் நிர்வாகமானது ஈராக்கிய "பேரழிவுகரமான ஆயுதங்களில்" இருந்து அச்சுறுத்தல் என கூறப்படுவது பற்றி டமாரமடித்துக் கொண்டிருக்கிறது. பயங்கரவாத அச்சுறுத்தல் என கூறப்படுவதன் மாறாத வெற்று பொது எச்சரிக்கைகளுடன் இணைத்து, இப்பிரச்சாரமானது அமெரிக்க மக்களுக்கு எதிரான உளவியல் போரை வடிவமைக்கிறது.

அத்தகைய ஆயுதங்களை அபிவிருத்தி செய்வதற்கான எந்த வேலைத் திட்டத்தையும் ஈராக் பின்பற்றுகிறது என்பதற்கான நம்பத்தகுந்த ஆதாரம் அங்கு இல்லை. 1998 வரைக்கும் ஐக்கிய நாடுகள் அவையின் ஆயுதங்கள் சோதனைக் குழுவிற்கு தலைமை வகித்த முன்னாள் அமெரிக்க கடற்பகுதி நிலப்படையினரான ஸ்கோட் ரீட்டர், வாஷிங்டனின் வேண்டுகோளுக்கு இணங்க ஆய்வாளர்கள் திரும்பப் பெறப்பட்டபொழுது, பாரசீக வளைகுடா யுத்ததின்போது ஈராக் சக்திமிக்க வகையில் நிராயுதபாணி ஆக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்துகிறது.

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, வாஷிங்டன் ஆயுத சோதனை விவகாரத்தை ஈராக்கிற்கு எதிராக ஆத்திரமூட்டல்களைத் தொடுக்கவும் உளவுபார்க்கவும் வழிமுறைகளாக பயன்படுத்தி இருக்கிறது. அதேவேளை -ஈராக்கிய மண்ணின் ஒரு அங்குலப் பகுதியிலும் பரந்த அழிவுகரமான ஆயுதங்கள் இருக்கவில்லை என்பதை , அல்லது அவற்றை உருவாக்குவதற்கான சாதனங்கள் இல்லை என்பதை- நிரூபிக்க முடியாததை நிரூபிப்பதற்கான ஈராக்கின் திறனின்மையை -போருக்கான ஒரு சாக்குப்போக்காக அது பற்றிக் கொண்டு இருக்கிறது.

ஆக்கிரமிப்புத் திட்டம் பற்றி டைம்ஸ் இடம் பேசிய பென்டகன் அதிகாரிகள் அதில் அமெரிக்க குண்டு வீச்சுக்கான பரந்த எண்ணிக்கையிலான இலக்குகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்பதை உறுதிப்படுத்தினர். "இலக்கின் பட்டியல் கிட்டத்தட்ட அதிர்ச்சி உண்டாக்குகிற அளவு பெரியது" என இந்த வட்டாரம் செய்தித்தாளிடம் கூறியது. "இந்த பேர்வழிகளை நீண்டகாலமாக (மட்டு மீறிய அளவு) ஆர்வத்துடன் நாம் கவனித்துக் கொண்டிருக்கிறோம் என்பது ஐயத்திற்கிடமில்லாதது."

இந்த இலக்குகளில் பல ஐ.நா சோதனையாளர்கள் என்ற மூடுதிரையின் கீழ் வேலை செய்யும் அமெரிக்க உளவுத்துறை முகவர்களால் நிலப்படம் வரையப்பட்டன. புஷ் நிர்வாகம் கூட ஈராக் அரசாங்கத்தைத் தூக்கி வீசவும் அந்நாட்டின் ஜனாதிபதியை படுகொலை செய்வதற்கான சாத்தியத்தின் அறிவுறுத்தல்களை சி.ஐ.ஏ-க்கு உட்கசியவிட்டிருக்கிற சூழ்நிலைகளில், இதே சக்திகள் ஈராக்கிற்குள் தடைகள் இல்லாமல் அனுமதிக்கப்படவேண்டும் என வாஷிங்டன் வலியுறுத்தியிருக்கிறது.

புஷ்- ஆல் கோரப்பட்ட "ஆட்சி மாற்றத்தின்" உண்மையான இலக்கு பாக்தாத்தில் அமெரிக்க கைப்பொம்மை ஆட்சியை நிறுவுதலாகும், அப்பிராந்தியத்தின் மீது அதன் ஆதிக்கப்பிடியை மேலும் இறுக்குவதற்கு மற்றும் அதன் எண்ணெய் வயல்கள் மீது அமெரிக்காவை அடித்தளமாகக் கொண்ட எண்ணெய்க் கம்பெனிகளின் ஏகபோகத்தை வாஷிங்டனுக்கு உத்தரவாதம் செய்வதாகும்.

உதவி ஜனாதிபதி செனி, பாதுகாப்பு செயலாளர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் மற்றும் உதவி பாதுகாப்பு செயலாளர் போல் வோல்போவிட்ஜ் தலைமையிலான நிர்வாகத்துடன் வலதுசாரி வெறியர் குழு, அமெரிக்க இராணுவப் படை சக்திமிக்க வகையில் ஈராக்கை வென்று வசப்படுத்த வேண்டும், அது அமெரிக்காவிற்கு எண்ணெய்க்கும் இராணுவ தளங்களுக்கும் மூலாதாரமாக செளதி அரேபியாவுக்குப் பதிலாக மாற்றீடை வழங்கும் என்ற ஏரியல் ஷரோனின் இஸ்ரேலிய ஆட்சியுடன் உடன்படுவதாக அறிவிக்கப்படுகிறது.

நாட்டை காலனித்துவ பாணியில் அமெரிக்க பொம்மை ஆட்சிக்கு உட்பட்டதாக மாற்றுவதற்கு ஈராக்கிலேயே பரந்த மக்களின் ஆதரவு இல்லை என்பதை வாஷிங்டன் வெளிப்படையாகவே உணர்ந்துள்ளது. அமெரிக்க நிர்வாகம் ஜூலை 9 அன்று ஈராக்கிய "அதிருப்தியாளர்களின்" குழுவை ஒன்றாய்ச் சேர்க்கத் திட்டமிட்டிருந்த மற்றும் இந்த மாத பின்பகுதியில் அதேபோன்ற இன்னொரு கூட்டத்தைக் கூட்டுதற்கு திட்டமிட்டிருந்த அதேவேளை, இந்த சக்திகள் ஹூசைன் ஆட்சிக்கு எதிராக குறிப்பிடத்தக்க சக்திகளை அணிதிரட்டும் ஆற்றலைக் கொண்டிருக்கின்றன என எந்த வித சீரிய நம்பிக்கையையும் நிர்வாகத்தில் உள்ள ஒருவரும் குறிப்பிடவில்லை.

ஈராக்கிய தலைவருக்கு எதிரான வெற்றிகரமான ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு அங்கு வாய்ப்பில்லை அல்லது சிறிதே வாய்ப்பு உள்ளது என்றும், ஒரேயடியான அமெரிக்கத் தாக்குதல் மட்டுமே அமெரிக்க நோக்கங்களை அடையச்செய்ய முடியும் என்று ஆலோசனை கூறி, சி.ஐ.ஏ இயக்குநர் ஜோர்ஜ் டெனெட் புஷ்ஷை எச்சரித்திருப்பதாக அறிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், நிர்வாகத்திற்கு "பயங்கரவாதத்தின் மீதான யுத்தம்" சதித்திட்டத்தைக் கொண்டு வந்த வெய்ன் டெளனிங் எனும் ஓய்வுபெற்ற (இளைப்பாறிய) அமெரிக்க தளபதி கடந்த மாதம் திடீரென இராஜினாமாச் செய்தார். டெளனிங், ஈராக்கில் அமெரிக்க விமானப்படை மற்றும் தரைப்படையின் சிறப்பு நடவடிக்கைக் குழுக்களை ஆப்கான் வடக்குக் கூட்டணியின் பண்பினையொத்த அந்நாட்டுக்குரிய படைகளுடன் சேர்த்துப் பயன்படுத்தும், "ஆப்கான் பாணியிலான" தாக்குதலுக்கு ஆதரவாக இருந்தார் என கூறப்படுகிறது.

ஹூசைன் ஆட்சியால் என்னென்ன குற்றங்கள் இழைக்கப்பட்டாலும், என்ன இருந்தாலும் ஈராக் மக்கள், வாஷிங்டனை விடுவிக்கும் சக்தியாக அறிவுபூர்வமாக ஏற்கவில்லை. மூத்த புஷ்-ஆல் நடத்தப்பட்ட யுத்தம் பத்தாயிரக் கணக்கான ஈராக்கிய படைவீரர்களின் வாழ்வைப் பறித்தது, அவர்களில் பெரும்பாலோர் அவர்களின் நிலத்தடி பதுங்கு குழிகளிலேயே சுட்டெரிக்கப்பட்டனர் அல்லது குவெய்த்திலிருந்து பறந்தோடுகையில் வானிலிருந்து தாக்கப்பட்டு "நெடுஞ்சாலை இறப்பில்" கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான குடிமக்கள் க்ரூஸ் ஏவுகணைத் தாக்குதல்களில் மற்றும் குண்டு வீச்சுக்களில் கொல்லப்பட்டனர்.

அமெரிக்க வான் குண்டுத்தாக்குதல் கூட சக்திமிக்க வகையில் ஈராக்கிய தொழில்துறை மற்றும் சமூக உட்கட்டமைப்பை அழித்தது, பெருந்திரளான தொழிலாளர்களை வேலையற்றோராய் ஆக்கியது மற்றும் மிக அத்தியாவசிய மருந்து மற்றும் சுகாதர வசதிகள் இல்லாத மற்றும் அதேபோல மின்சார வசதி மற்றும் செய்தித் தொடர்பு வசதிகள் இல்லாத நாடாக ஆக்கிற்று. விளைவு முன் எதிர்பார்த்திராத அளவு வறுமை, பட்டினி மற்றும் நோயாக இருந்தது.

இந்த 12 ஆண்டுகளில், அமெரிக்காவானது பொருளாதாரத் தடைகளின் கொடூர ஆட்சியைத் திணிப்பதற்கு தலைமை தாங்கி இருக்கிறது, அது மக்கள் தொகையில் பயங்கரமான மரணத்தை தண்டனையாக ஏற்கும்படி செய்தது. 1999 யுனிசெப் (UNICEF) நிறுவனத்தின் ஆய்வு ஒன்றின்படி, ஒவ்வொரு ஏழு ஈராக்கியக் குழந்தைகளுள் ஒன்று ஐந்து வயதை அடையும் முன்பே இறக்கின்றது, அது அமெரிக்க யுத்தத்துக்கும் பொருளாதாரத் தடைகளுக்கும் முன்னர் நிகழ்ந்ததை விட ஒவ்வொருமாதமும் இன்னும் 5000 குழந்தைகளின் இறப்பை விளைவித்தது. அதற்கு மேலும் அது, நாட்டின் இளங்குழந்தைகளுள் 22 சதவீதத்தினர் ஊட்டச்சத்து இல்லாமையால் நோய் பீடித்துள்ளனர் என கண்டறிந்தது.

தசாப்தத்திற்கும் மேலாக, அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈராக் மக்களை சித்திரவதை செய்திருக்கிறது. இப்பொழுது அது என்றுமில்லா கொடூர தண்டனையை வழங்க தயார் செய்து வருகிறது. எந்த வித ஆக்கிரமிப்பும் பாக்தாத்தில் வீட்டுக்கு வீடு தெருச்சண்டைகளில் முடியக்கூடும், புராதன அரபு தலைநகரை பெரிதும் தரைமட்டமாக்கும் மற்றும் அதன் குடிமக்களில் பலரை கொல்லும் என புஷ் நிர்வாகத்தை இராணுவத் திட்டமிடுபவர்கள் எச்சரித்தனர்.

1990ல் அவரது தந்தைபோல் அல்லாமல், ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு சட்டப்பூர்வ பூச்சுப்பூச "சர்வதேச கூட்டணியை" கட்டுவதற்கு புஷ் விருப்பம் காட்டாதிருக்கிறார். பிரிட்டனில் உள்ள பிளேயர் அரசாங்கம் மீண்டும் ஒரு முறை வாஷிங்டனின் பாதையை அடியொற்றி நடக்கத் தயாராக இருக்கும் அதேவேளை- சுமார் 3000 துருப்புக்களை ஆக்கிரமிப்புக்கு வழங்குவதாக அறிவிக்கப்படுகிறது- வாஷிங்டனால் ஒருதலைப்பட்சமாக படைகள் பயன்படுத்தப்படுவதற்கு ஏனைய ஐரோப்பிய வல்லரசுகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி இருக்கின்றன. ஐரோப்பா வட அமெரிக்காவை விடவும் அதிகம் எண்ணெய் அளிப்புக்காக சார்ந்திருக்கும் மத்திய கிழக்கில் அதிகரித்துவரும் அமெரிக்க இராணுவ வேட்கைகளை இந்த அரசாங்கங்கள் நேரடி அச்சுறுத்தலாகப் பார்க்கின்றன.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பற்றியதில் அதன் மறுதலிப்புடன் அனைத்து அமெரிக்கர்களையும் போர்க்குற்றங்கள் பற்றிய விசாரணைகளில் இருந்து விலக்கீடு செய்வதற்கான அதன் தன்முனைப்பான கோரிக்கை இவற்றுடன், ஈராக்குடனான போர் தொடர்பானதில் ஐரோப்பாவுடன் எதிர்த்து நிற்க வாஷிங்டன் தயாரிப்பு செய்து வருகின்றது. உலக அரங்கில் அதன் நடத்தையில், புஷ் நிர்வாகமானது அமெரிக்க கார்ப்பொரேட்டுகளது தட்டினர் நிதிச் சந்தைகளை கையாளுவது போல் அதேவிதமான மட்டக்குறியை ஈவிரக்கமற்ற மற்றும் குற்றவியல் இணைந்த நடவடிக்கைகளை வெளிப்படுத்துகிறது. இரண்டுமே இறுதியில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் துன்பங்களையும் அழிவுகளையும் மட்டுமே உண்டுபண்ண முடியும்.

ஏனைய சாத்தியமான ரீதியில் அழிவுகரமான விளைபயன்களுக்கு மத்தியில் ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு அணுஆயுத யுத்தத்தின் சாத்தியத்தைக் கருதிக்கொண்டிருக்கின்றது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பத்திரிகைகளுக்கு கசிந்த அமெரிக்க அணுஆயுதக் கொள்கை மீதான பென்டகன் நிலைப்பாடுகள் பற்றிய பத்திரம் காட்டும் காட்சிகளுள் ஒன்றாக இஸ்ரேல் மீதான ஈராக்கின் தாக்குதல் அரபு நாட்டின் மீதான அமெரிக்கத் தாக்குதலைப் பதிலாக்கும், அது அமெரிக்க அணுவாயுத முதல் தாக்குதலுக்கு ஆளாக்கும் காட்சியை பட்டியலிட்டுக் காட்டியது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved