World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்: ஐரோப்பா : பிரான்ஸ்

France: the politics of presidential candidate Jean-Pierre Chevènement

பிரான்ஸ்: ஜனாதிபதி வேட்பாளரான ஜோன் பியர் சேவனுமோ இன் அரசியல்

By Marianne Arens and Françoise Thull
15 February 2002

Back to screen version

ஜனவரி இறுதியில் இருந்து வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரங்கள் பிரான்சில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தேர்தலின் முதலாவது சுற்று ஏப்ரல் 21 இல் நடைபெற இருக்கின்றது, அதைத்தொடர்ந்து இரண்டாவது சுற்று மே 5 நடைபெறும். சில கிழமைகளுக்குப் பின்னர் யூன் மாதம் புதிய பாராளுமன்றத்துக்கான அங்கத்தவர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்.

பதவியில் இருக்கும் ஜனாதிபதி ஜாக் சிறாக் (Gaullist, RPR) மற்றும் பிரதமர் லியோனல் ஜொஸ்பனும் (Socialist Party) முக்கிய இரண்டு எதிர் போட்டியாளர்கள் ஆவார்கள். இந்த வாரம் சிறாக் தனது வேட்பாளர் மனுவை உத்தியோகபூர்வமாக அறிவித்த போதும், செப்டம்பரில் இருந்து ஒரு 'மூன்றாவது மனிதன்' என்ற ஒரு பெயரை தனக்கு ஏற்படுத்திக்கொண்ட ஜொஸ்பனின் முன்னாள் உள்நாட்டமைச்சரான Jean-Pierre Chevènement தனது தீவிர பிரச்சாரத்தை தொடங்கும் வரை ஜொஸ்பன் காத்திருப்பதாக தெரிகிறது. 14 வீதமான செல்வாக்கை செவனுமோ கொண்டிருப்பதை தற்போதைய வாக்கெடுப்பு சுட்டிக்காட்டுவதுடன் அவர் ஜொஸ்பன் மற்றும் சிறாக்குக்கு மிக அண்மித்து வந்துள்ளார்.

'சே' (சே குவேராவுக்குப் பிறகு) என அவரை குறிப்பிட்டுக்கொண்டு, தொடர்புச்சாதனங்கள் ஒரு வழமைக்கு மாறான கவனத்தை அவருக்கு கொடுத்ததுடன் அவரது 'குளிர்கால பிரச்சாரத்தைப்' பற்றி பேசின. கோலிஸ்ட் மற்றும் ஸ்ராலினிஸ்ட், சோசலிஸ்ட்டுகளின் தேசியவாதிகள் மற்றும் கம்யூனிஸ்டுகளின் நீண்ட காலத்திற்கு முன்னர் புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகத்தின் ( Ligue communiste révolutionnaireலிசிஸி) முன்னணி அங்கத்தவராக இருந்த முன்னாள் ட்ரொட்ஸ்கிஸ்ட் என சொல்லிக்கொள்ளும் பிரான்சுவா மோர்வன் மற்றும் முடியரசுவாதிகள் உள்ளடங்கலாக தீவிர வலதுசாரிகளான பஸ்குவா மற்றும் லு பெனின் முன்னாள் ஆதரவாளர்களையும் குடியரசுவாதிகளின் துருவம் (pôle républicain) என்ற அவரது இயக்கத்தில் செவனுமோ ஐக்கியப்படுத்துகின்றார்.

அனைத்து பிரெஞ்சு வேட்பாளர்களைப்போல், பூகோளமயமாக்கலுக்கு எதிரான இயக்கமான அட்டாக்குக்கு (Attac) செவனுமோ ஆதரவளிக்கிறார். நீண்டகாலமாக சேவை செய்யும் சோசலிசக் கட்சியின் ஒரு அரசியல்வாதியும் மற்றும் ஜொஸ்பனின் கடல் அபிவிருத்திகளுக்கான அமைச்சருமான சார்ல் ஜொஸ்லின், ''SFIO [forerunner of the SP] இன் நாட்களில் இடதுக்கு போவதன் ஊடாக நீ காங்கிரசை வெல்வாய் என சொல்லப்பட்டது. அதே தந்திரோபாயத்துடன் இந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடையப்படுவதற்கு எதிராக நான் எதையும் கொண்டிருக்கவில்லை'' ( Le Figaro, January 1, 2002) என சிடுமூஞ்சித்தனத்துடன் குறிப்பிட்டார்.

இந்த வருட பிரான்சின் தேர்தல் பிரச்சாரம் பாரிசில் தொடங்காமல் பிரேசிலின் போர்ட்டோ அல்ஜெரில் தொடங்கியது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. 40 ஆயிரம் பூகோளமயமாக்கத்தின் எதிர்ப்பாளருக்கு அப்பால், நியூயோர்க்கின் உலக பொருளாதார ஒன்றுகூடலுக்கு (World Economic Forum) மாற்றீடாக பிரெஞ்சு வேட்பாளர்களின் ஒரு குழு உலக சமூக அவையின் திறப்பு விழாவுக்காக பிரேசிலுக்கு ஜெட் விமானத்தில் யாத்திரை மேற்கொண்டார்கள். அவர்களில் சோசலிசக் கட்சியின் ஆறு முன்னணி பிரதிநிதிகளை மட்டும் காணக்கூடியதாக இருக்கவில்லை மாறாக பச்சைக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான நோயல் மாமேர் மற்றும் பப்லோவாத LCR இன் வேட்பாளரான Olivier Besancenot மற்றும் சிறாக்கின் கோலிச இயக்கத்தின் தேசியச் செயலாளரான Serge Lepeltier கூட அங்கு வந்திருந்தார். கடந்த வருடம் கூட தான் அங்கு வந்திருந்ததால் தானேதான் ''பூகோளமயமாக்க எதிர் இயக்கத்தின் தலைவர்'' என செவனுமோ தம்பட்டம் அடித்துக்கொண்டார்.

யார் இந்த ஜோன்-பியர் செவனுமோ?

 

30 வருடகாலமாக பிரெஞ்சு அரசியலில் ஒரு முக்கியமான பாத்திரத்தை செவனுமோ வகித்துவருகிறார். 1971 இல் எப்பினேயில் நடைபெற்ற காங்கிரசில் ஒரு ஆச்சரிய சதி எழுந்தபோது சோசலிச கட்சியின் தலைமையை பாதுகாக்க பிரான்சுவா மித்திரோனுக்கு அவர் உதவிசெய்தார். கட்சியின் வேலைத்திட்டத்தை வரைந்ததில் செவனுமோ ஏற்கனவே பொறுப்பு வகித்துவந்தார். 1981 மித்திரோனின் வெற்றிக்குப் பிறகு அவர் பல தடவைகள் சோசலிச கட்சியின் அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகித்தார். அவரது சொந்த இயக்கமான CERES இன் பெயரை சோசலிசம் மற்றும் குடியரசு (Socialism and Republic) என மாற்றினார். சில வருடங்களாக 'சோசலிசம்' காணாமல் போய், 'குடியரசு' --பிரெஞ்சு தேசிய வாதத்திற்கு இது ஒரு பொருந்தக்கூடிய வார்த்தையாக இருக்கிறது-- அதிகரித்த முறையில் முன்னணிக்கு வந்துகொண்டிருக்கிறது.

மூன்று சந்தர்ப்பங்களில் அமைச்சர் பதவியில் இருந்து செவனுமோ இராஜினாமா செய்தார். ஒவ்வொரு தடவையும் செய்யப்பட்ட இராஜினாமா அவரது பிரெஞ்சு தேசியவாதத்துடன் தொடர்பு பட்டிருந்தது. அவரது முதலாவது இராஜினாமா 1983 இல் இடம்பெற்றது, இது 1981 இல் நடைமுறைக்கிட்ட தேசியமயமாக்கல் வேலைத்திட்டத்தை பின்னடித்ததுவிட்டு, தன்னை அதிகரித்த முறையில் ஐரோப்பிய ஐக்கியத்திற்கு அர்ப்பணித்த மித்திரோனின் அரசியல் மாற்றத்திற்கு எதிரான ஒரு எதிர்ப்பாக இருந்தது. இரண்டாவது இராஜினாமா ஜனவரி 1991 இல் இடம்பெற்றது. இது, வளைகுடா யுத்தத்தில் பிரான்சின் அமெரிக்காவுக்கு சார்பான நிலைப்பாட்டிற்கு எதிரான எதிர்ப்பாக இருந்து. மூன்றாவது இராஜினாமா, 2000 இன் கோடையில் இடம்பெற்றது. இது ஜொஸ்பனின் கோர்சிகாவுக்கான மட்டுப்படுத்தப்பட்ட சுயாட்சியை வழங்கும் திட்டத்தின் விளைவாக அது இருந்தது. அவர் பலமாக எதிர்த்த அந்த திட்டம் பிரான்சின் சுயாதீனத்தினை மீறும் ஒரு செயலாக இருப்பதுடன் ஐரோப்பிய பிராந்திய மயப்படுத்தலினை நோக்கிய ஒரு முதல்படியாகும் என செவனுமோ எதிர்த்தார். யூரோவின் நீண்டகால எதிர்ப்பாளராக இருந்த அவர் அண்மையில் அந்தக் குண்டினை விழுங்க நிர்ப்பந்திக்கப்பட்டதுடன், ஐரோப்பாவின் பொதுநாணயத்தின் வருகையை ஏற்றுக்கொண்டார்.

1992 இன் இலையுதிர் காலத்தில் செவனுமோ சோசலிசக் கட்சியினை கைவிட்டதுடன் அவர் குடியானவர்களின் இயக்கத்தினை (Mouvement des Citoyens விஞிசி) உருவாக்கினார். 1993 இல் அதனது வேலைத்திட்டத்தில், ''சமூக கேள்வியானது தேசியக் கேள்வியில் இருந்து பிரிக்க முடியாது என MDC கருதுகிறது. தேசத்தின் பிரச்சனை வலதுக்கோ அல்லது குறைந்தபட்சம் தீவிர வலதுகளிடமோ விட்டுவிடமுடியாது.'' என அவர் அறிக்கைப்படுத்தினார். பிரெஞ்சு அரசாங்கம் ஆதரவளித்த மாஸ்ட்ரிச் உடன்படிக்கை மற்றும் ஐரோப்பிய ஐக்கியத்திற்கான செவனுமோவின் பதிலாக MDC இன் ஸ்தாபிதம் இருந்தது.

எப்படியிருந்தபோதும், அவரது ஐரோப்பிய ஐக்கிய எதிர்ப்பைவிட அவரது அமெரிக்க எதிர்ப்புவாதம் இன்னும் அதிகமாக உச்சரிக்கப்பட்டது. அமெரிக்காவுக்கு எதிராக பிரான்சினால் தனித்து இயங்குவது சாத்தியமற்று இருப்பதனால், ஐரோப்பிய திட்டத்துடன் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள அவர் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் L'Express சஞ்சிகைக்கு அளித்த பேட்டியில் அமெரிக்காவுடனான உறவு பற்றிய தனது கருத்தை விவாதித்தார், ''தனது சொந்த விடயத்தை செயல்படுத்தக்கூடிய சாத்தியத்தினை கொண்டிருக்கும் ஐரோப்பியர்களின் ஒரு ஐரோப்பாவிற்காகவே நான் சார்பாக இருக்கிறேன். ஐக்கிய அமெரிக்கா இந்த உலகத்தில் செய்வதற்கு வேறொரு விடயம் இருக்கிறது! அமெரிக்காவுடனான உறவில் அபிவிருத்தியடைந்த விதத்தில் குறிப்பிட்ட ஒரு சுயாதீனத்தை அடைவதற்கு சாத்தியமான சந்தர்ப்பத்தை இன்று ஐரோப்பா கொண்டிருக்கிறது. உதாரணமாக இன்று எம்மால் முடிந்தால், யூரோ எல்லையை பூரணமாக ஒழுங்கு செய்ய முடியும் மற்றும் நாம் அனுமதித்தால் எமது எல்லைகளையும், எமது பிராந்தியங்களையும் உத்தரவாதப்படுத்துவதற்கான கூடிய பட்சமான பாதுகாப்பு சாத்தியப்பாடுகளையும் நாம் கொண்டிருக்கிறோம்.'' என பிரகடனம் செய்தார். (நவம்பர் 23, 2000)

இந்த அவரது நிலைப்பாடு செப்டம்பர் 11 க்கு பின்னர் அமெரிக்காவினது ''பயங்கரவாதம் மீதான யுத்தம்'' என்பதற்கு ஆதரவளிக்க அவரை தடுக்கவில்லை. அந்த விடயத்தில், அமெரிக்காவுடனான குறைந்தபட்சமான ஐக்கியத்தினையும் விட பூகோள மூலப்பொருட்களுக்கான மூலோபாய யுத்தத்தில் பிரான்சின் நலன்களை தொடர்வதில்தான் செவனுமோ அக்கறைப்பட்டிருந்தார்.

எல்லாமட்டத்தில் இருந்தும் ஆதரவை செவனுமோ வரவேற்றார். ''குடியரசுவாதத்தின் கோட்பாட்டினை விளங்கிக்கொண்ட பிரெஞ்சு ஆண்கள் மற்றும் பெண்கள் எல்லோரையும் நான் என்னை சுற்றி அணிதிரளும்படி அழைக்கிறேன். அத்துடன், அவர் எந்தக் கூடாரத்தில் இருந்து வருகிறார் என்பதை நான் கேட்கப்போவதில்லை.'' என அவர் பிரகடனம் செய்தார்.

நவம்பரில் செவனுமோவுக்கு ஆதரவளிக்க முடிவெடுத்த 81 வயதான Pierre Poujade இக்கும் கூட இந்த அழைப்பு விடப்பட்டது. வணிகர்கள் கைவினைஞர்கள் மற்றும் விவசாயிகளை கொண்ட ஒரு தீவிர வலதுசாரி இயக்கத்தை 1953 இல் Pierre Poujade ஸ்தாபித்தார். இந்த UDCA இயக்கம் ஒரு வரித்தடையை ஒழுங்கு செய்தது. 1956 இல் தேசிய முன்னணியின் தற்போதைய பாசிச தலைவரான Jean-Marie Le Pen பாராளுமன்றத்தில் ஒரு இடத்தினை வெற்றிகொள்வதற்கு இவர் உதவி செய்தார்.

சமூகத்தின் துருவமுனைப்படுத்தல்

செவனுமோவின் போட்டியிடலானது பிரெஞ்சு சமூகத்துக்குள்ளான ஆழமான பதட்டத்தின் அறிகுறியாகும். சமூக துருவமுனைப்படுத்தல், பூகோள மயமாக்கம் மற்றும் ஐரோப்பிய ஐக்கியத்தால் தற்போது தூக்கியெறியப்பட்டிருக்கும் மற்றும் பிரெஞ்சு அரசியலில் எப்போதும் ஒரு முக்கியமான பாத்திரத்தினை வகித்துவரும் பாரம்பரிய மத்தியதர வர்க்கத்தினை அணிதிரட்டுவதன் ஒரு முயற்சியினை அவரது குடியரசு துருவம் (Republican Pole) ஸ்தாபிதம் செய்கிறது. தீவிர வலதுசாரியில் இருந்து முன்னாள் இடதுசாரிகள் வரையிலான பலதரப்பட்ட மக்களிடம் இருந்து அவருக்கு கிடைக்கும் ஆதரவை விளங்கப்படுத்துவதற்கான ஒரேவழி இதுதான். ''அவர் எல்லா மட்டத்தில் இருந்தும் ஆதரவைப் பெறுகிறார். குறிப்பாக வலதிலிருந்து -அவரது 47 வீதமான முக்கியமான வாக்காளர்கள் தாம் இடதுசாரிகளாக இருப்பதாக கருதவில்லை.'' (டிசம்பர் 25, 2001) என லு மோந் (Le monde) பத்திரிக்கை எழுதியது.

முதலாளிகளின் கழகமான Medef பாரம்பிரமாக கோலிசத்திற்கு சார்பாகத்தான் இருந்துவருகிறது. இது ஐரோப்பிய ஐக்கியத்திற்கும் மற்றும் யூரோ அறிமுகத்திற்கும் ஆதரவளித்ததுடன் பிரெஞ்சு தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை குறைப்பதிலும் மற்றும் சமூகநல அரசினை இல்லாதொழிக்கும் நோக்கத்துடன் இந்த தேர்தல் விவகாரத்தில் சக்திவாய்ந்த முறையில் தலையீடு செய்கிறது.

ஜனவரி 15ம் திகதி லியோனில் Medef இன் தலைவர் Baron Ernest-Antoine Seillière பல "வளர்ச்சி மற்றும் அபிவிருத்தியினை முடமாக்கும் பிரச்சனைகள்'' பற்றி புகைந்து தள்ளியதுடன், வர்த்தக சமூகத்தின் பிரதிநிதிகளை நோக்கி கீழ்காணும் முறையில் எரிந்துவிழுந்தார், ''தற்போது இந்தக்கணத்தில் எமது ஐரோப்பிய சகாக்கள் அனைவரும் நவீன உலகத்திற்கு ஏற்ற மாதிரியான பாதையை தீர்மானித்துவிட்டதுடன் அவர்கள் அதை செயல்படுத்திக்கொண்டுள்ளார்கள், ஆனால் எங்களது சமூகம் பார்ப்பதற்கு இன்னும் மிக பின்னுக்கு இருப்பது எமக்கு எவ்வளவுக்கு ஆத்திரமூட்டுகிறது.''

ஒரு கிழமைக்கு 35 மணிநேர வேலை மணித்தியாலத்தை நீக்கிவிடும்படியும், ஒரு ''நவீன வரிவிதிப்பு கொள்கையானது வெளிநாட்டு போட்டியாளர்களுடன் ஒரேமாதிரியான பொருளாதார கருவிகளுடன் பணிபுரிவதற்கு ஒவ்வொரு வர்த்தக பிரமுகரையும் அனுமிதிக்கும்,'' ''சமூக புதுப்பிப்பு'' (refondation sociale, உதாரணமாக, சமூகநல அரசினை அழிப்பதாகும்), மற்றும் தொழிற் சங்கங்களின் பங்களிப்பு இல்லாமல் கூலி உடன்படிக்கையை செய்வதற்கான தொழில் நிறுவனங்களின் உரிமையை.'' அறிமுகப்படுத்தும்படியும் Seillière கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜனவரி மத்தியில் ஜொஸ்பன் அரசாங்கத்தின் மீதான அதனது முன்னணி தாக்குதலின் போது, அரசின் உயர் வடிவமான அரசியல் அமைப்புச் சட்ட மன்ற பேரவையின் ஆதரவை Medef பெற்றுக்கொண்டதுன், அவர்களது முடிவுகள் தான் இறுதியானவை. ஜொஸ்பன் அரசாங்கத்தின் பல முக்கிய தீர்மானங்கள் சட்டப்படி செல்லாது இருந்ததுடன் அவை சட்டத்திற்கு புறம்பானவையாகவும் இருந்தன என அது குறிப்பிட்டிருந்தது.

புதிய ''சமூக நவீனமயமாக்கலுக்கான சட்ட'' த்தில் குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் வேலையில் இருந்து நீக்குவதை தடைசெய்வது ''தொழில் உரிமையாளர்களின் சுதந்திரத்திற்கு'' ஒவ்வாததாக இருக்கிறது என முதல் ஒரு சட்டவரைவில் அது பிரகடனம் செய்தது. அதன் பின்னர் கோர்சிகன் பாராளுமன்றத்திற்கான சுதந்திரமாக சட்டம் இயற்றும் சாத்தியம் --மட்டுப்படுத்தப்பட்ட கோர்சிகன் சுயாதீனத்திற்கு தேவையாக இருந்த உள்ளீடு-- பிரெஞ்சு அரசியல் அமைப்புச் சட்டத்துடன் பொருத்தமற்றதாக இருக்கிறது என நீதிமன்றம் பிரகடனம் செய்ததுடன், ஜொஸ்பனின் கோர்சிகா கொள்கைக்கு அதனது உடன்பாட்டினை அளிக்க மறுத்துவிட்டது.

மையத்தின் இடதுகளாக இருப்பதாக கருதும் ஐந்து கட்சிகள் அடங்கிய (The Socialist Party, The Greens, The Communist Party, The MDC citizens movement and the Party of the Radical Left) ஒரு கூட்டின் தற்போதைய அரசாங்கத் தலைவரான ஜொஸ்பன் 1995 இன் பரந்த வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து, 1997 இல் ஆச்சரியமானவகையில் அதிகாரத்தை அவர் பெற்றுக்கொள்ள உதவிய நம்பிக்கையை அவர் பரந்தளவில் இழந்துவிட்டார். வர்த்தக உலகத்தின் நலன்களுக்கு ஏற்ப அவரது கொள்கைகளை அமைத்துக்கொண்டதன் ஊடாக அவரது தேர்தல் உறுதிகள் மற்றும் அரசியல் கொள்கைகளை ஒன்றொன் பின் ஒன்றாக காட்டிக்கொடுத்துள்ளார்.

எப்படியிருந்தபோதும், ஜொஸ்பனினின் முக்கிய எதிர் போட்டியாளரான கோலிச சிறாக் பல ஊழல் மோசடிகளில் சம்பந்தப்பட்டிருப்பதால் இந்த நிலைமையை தமக்கு சாதகமாக எடுத்துக்கொள்வது கடினமானதாக இருக்கும் என காணப்படுகிறது. அவரது பிரபல்யம் வீழ்ச்சியடைந்துள்தை அண்மைய வாக்கெடுப்பு காட்டுவதுடன், அவர்களில் பலர் அவரது நம்பிக்கைத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளனர். அவரது நம்பிக்கைத்தன்மை பூஜ்ஜியத்தில் இருப்பதாக அவர்களில் பலர் கேள்விக்குள்ளாக்கியுள்ளனர்.

பாரீஸ் நகரபிதாவாக இருந்த சிறாக்கின் சகாவான ஜோன் திபேரி மற்றும் சிறாக்கின் விவகாரங்களை விசாரணை செய்யும் நீதிபதியான Eric Halphen இற்கு தொந்தரவு கொடுத்ததன் ஊடாக அவரை நீக்கிவிட்டதில் சிறாக் வெற்றியடைந்துள்ளார். தானும் தன் குடும்பமும் பயமுறுத்தப்பட்டதாக் கூறி கடந்த மாதம் Eric Halphen அவரது பதவியை இராஜினாமா செய்தார். கோலிச ஊழல் விவகாரத்தில் ஒரு முக்கிய நபரான Didier Schuller அண்மையில் பிரான்சிற்கு திரும்பியதைத் தொடர்ந்து மோசடி விவகாரம் மீண்டும் சிறாக்கினை பிடித்துள்ளதை காட்டுகின்றது.

Edouard Balladur மற்றும் Alain Juppé போன்ற பல முன்னணி கோலிச அரசியல் வாதிகள் சிறாக்கின் உதவிக்கு வேகமாக பாய்ந்தோடினர். பழமைவாத எதிர்க்கட்சியான UDF அவர்களது கட்சியின் சொந்த வேட்பாளரை நிறுத்துவதற்கு பதிலாக முதல் சுற்றில் சிறாக்கிற்கு ஆதரவளிக்கின்றனர். இரண்டு வருடங்களுக்கு முன் சிறாக்கிடம் இருந்து ஒதுங்கி நின்ற Philippe Séguin மீண்டும் கட்சிக்கு திரும்பியுள்ளார். RPR ஒரு தூய ஜனாதிபதி இயல்பைக்கொண்ட கட்சியாக சீரழிந்துபோவதுடன், ஏனைய குழுக்களிடமும் மற்றும் கட்சிகளிடமும் கூடுதலாக ''குடியரசு'' விவகாரத்தை அடிபணிய செய்வதாகவும், மற்றும் வர்த்தக சமூகத்தின் நலன்களை புறக்கணிப்பதால் ஆபத்தினுள் சென்றுகொண்டிருக்கின்றது என அவர் எச்சரித்தார்.

''தேசத்தின் தந்தையாக'' திரைக்கு வந்துகொண்டிருக்கும் செவனுமோ ''ஒன்றில் இடதுசாரி அல்லது வலதுசாரி'' என தன்னை வரையறை செய்வதை விரும்புகிறார். அமெரிக்க கூட்டினையும் ஐரோப்பிய ஐக்கியத்தினையும் ஐயப்பாட்டுடன் நோக்கும் பிரெஞ்சு முதலாளித்துவ மற்றும் மத்தியதர வர்க்கத்தின் கன்னைகளை செவனுமோ பிரதிநித்துவம் செய்கிறார்.

பிரெஞ்சு முதலாளித்துவத்தின் பாரம்பரிய அடிப்படையில் தற்போது ''குடியரசு'' க்கு செவனுமோ அழைப்பு விடுக்கின்றார். பூகோளமயமாக்க எதிர் இயக்கத்திற்கு ஏற்ப தன்னை இசையவைப்பதன் மூலம் சோவினிசத்திற்கு முற்போக்கு தன்மையை அளிப்பதற்கு முயன்றுகொண்டிருப்துடன், அதே நேரம் தனது வழியில் கிடைத்த அனைத்து சந்தர்ப்பங்களையும் அவர் சுரண்டிக்கொண்டுள்ளார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved