World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Rice and Rumsfeld "discover" Al-Qaeda in Baghdad

ரைஸூம் ரம்ஸ்பெல்டும் பாக்தாதில் அல் கொய்தாவைக் "கண்டு பிடிக்கின்றனர்"

By David North
1 October 2002

Back to screen version

திட்டமிட்ட வகையில் போலந்து ஆக்கிரமிப்பிற்காக ஹிட்லர் குறித்திருந்த தேதிக்கு பத்து நாட்கள் முன்னர், இராணுவ கொமாண்டர்கள் மற்றும் தளபதிகளின் கூட்டத்தில், ஆட்சியானது போருக்கான "கருத்துப் பரப்பல் சாக்குப்போக்கை" கண்டு கொள்ளும் என அவர் கூறினார். "காரணங்கள் பலமாய் நம்பவைக்கக் கூடியதாக இருக்குமா இருக்காதா என்பது பற்றி அது வேறுபாட்டைச் செய்யாது," என முதல்வர் அறிவித்தார். எல்லாவற்றிற்கும் அப்பால், வெற்றி பெற்றவர் அவர் உண்மையைப் பேசினாரா இல்லையா என கேட்கப்படமாட்டார். நாங்கள் காட்டுமிராண்டித் தனமாக முன்செல்வோம். பலமானது எப்பொழுதும் சரியானதாக இருக்கும்" என்றார்.

இந்த வார்த்தைகளை நினைவில் கொண்டு வந்தது யாதெனில், ஈராக் ஜனாதிபதி சதாம் ஹூசைனுக்கும் அல் கொய்தா உறுப்பினர்களுக்கும் இடையில் நெருக்கமான தொடர்புகளின் "அசைக்க முடியா" ஆதாரம் இருக்கின்றது என, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கொண்டோலீசா ரைஸ் (Condoleezza Rice) ஆல் கூறப்பட்ட கூற்றை ஆதரித்து, பாதுகாப்பு செயலாளர் டொனால்ட் ஃபொன் ரம்ஸ்பெல்ட் (Donald von Rumsfeld) ஆல் செய்யப்பட்ட கடந்த வார அறிவிப்பு ஆகும்.

இந்த அறிக்கைகள் உண்மையாக இருக்கும் என அவர்களோ அல்லது மற்ற எவருமோ உண்மையில் நம்பினர் என்று நடிப்பதற்குக் கூட விஷயங்களைத் தொகுப்பது செய்தித்தொடர்பாளர்களுக்கு கடினமானதாக இருந்தபோதிலும், இந்தக்குற்றச்சாட்டுக்கள் மாலை செய்திகளில் அறிவிக்கப்பட்டன. ஹூசைன் அரசாங்கம் அல் கொய்தாவுடன் வேலை செய்து கொண்டிருக்கிறது அல்லது வேலை செய்திருக்கிறது என்ற அறிவித்தல்களை, அங்கு அத்தகைய தொடர்புக்கான ஆதாரம் இருக்கவில்லை என அமெரிக்க புலனாய்வுத் துறையால் கூறப்பட்ட, அடிக்கடி மேற்கோள் காட்டப்பட்ட கூற்றுக்கள் மறுக்கின்றன.

மேலும், ஈராக்-- அல் கொய்தா கூட்டு அரசியல் ரீதியாக நம்புதற்கரியது. 1990களில் நாடுகடந்த கம்பெனிகளின் அச்சுறுத்தலின் அமெரிக்க தேசிய பாதுகாப்பு சபையின் இயக்குநராக பணியாற்றிய டானியல் பெஞ்சமின், நியூயோர்க் டைம்ஸில் எழுதியது போல. "ஈராக் மற்றும் அல் கொய்தா உண்மையில் கூட்டாளிகள் அல்லர். உண்மையில், அவர்கள் இயல்பாகவே பகைவர்களாக இருக்கின்றனர். அல் கொய்தாவின் பிரதான கொள்கையான புனிதப்போர் சித்தாந்தம், மதச்சார்பற்ற முஸ்லிம் ஆட்சியாளர்களும் அவர்களது ஆட்சிகளும் நம்பிக்கையாளர்களை ஒடுக்கின மற்றும் இஸ்லாத்தை வரலாற்று நெருக்கடிக்குள் மூழ்கடித்தன என்பதாகும். அதனால், கிட்டத்தட்ட அரைநூற்றாண்டாக இஸ்லாமிய புரட்சியாளர்களின் பெரிய அளவிலான இலக்கு அத்தகைய தலைவர்களின் ஆட்சியை அழித்தலாக இருந்தது...."

துல்லியமாக இந்த அரசியல் பகைமை அத்தகைய இயக்கங்களுக்கு, எண்ணெய் வளத்தை தேசியமயமாக்குவதற்கு வளைந்து கொடுக்கும் மதச்சார்பற்ற தேசியவாத ஆட்சிகளை கீழறுக்க நாடும் அமெரிக்காவிடமிருந்து பெரும் ஆதரவைப் பெற்றுத்தந்தது. மற்றும், ஈராக்கிற்கும் அல் கொய்தாவிற்கும் இடையிலான தொடர்புகள் என்று கூறப்படுவன, ஒசாமா பின்லேடனுக்கும் அமெரிக்க புலனாய்வுத் துறைக்கும் உள்ள தொடர்பு போல முழுமையாய் பத்திரமயப்படுத்தப்பட்டு இருக்கவில்லை. விமானக் கடத்தல்களில் சம்பந்தப்பட்டுள்ளோரை விசாரிப்பதற்கு முன்மொழியப்பட்ட புலன்விசாரணைகளை நசுக்குதற்கு எடுக்கப்பட்ட ஆர்வமூட்டும் வரிசையான நடவடிக்கைகள் பற்றிய செனெட் அவையின் விசாரணைகள், அல் கொய்தாவுக்கும் குறைந்த பட்சம் அமெரிக்க புலனாய்வுத் துறை முகவாண்மைகளில் உள்ள சிலருக்கும் இடையில் செப்டம்பர் 11 வரை தொடர்புகள் தொடர்ந்ததா என்பது பற்றி அக்கறையுடன் கூடிய கேள்விகளை எழுப்புகின்றன.

செப்டம்பர்11ஐ அடுத்து புஷ் நிர்வாகத்தின் மைய இலக்கு மேலும் அல் கொய்தா பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுப்பதாக இருந்திருந்தால், அது சதாம் ஹூசைனிடமிருந்து தந்திரோபாய உதவியைப் பெற்றிருக்க அதனால் முடிந்திருக்கும். எப்படி இருந்தாலும், வாஷிங்டன் 1980களில் அவரது ஆட்சியுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்ததோடு, ஈரானுக்கு எதிரான அதன் இரத்தம் தோய்ந்த போரில் அது அதற்கு உதவியும் செய்தது. ஹூசைனே தாக்குதல்களுக்கப் பிறகு அனுதாப அறிக்கையை வெளியிட்டிருந்தார் மற்றும் அவருக்கு வாஷிங்டனுடன் நல்லிணக்கம் கொள்வதற்கான ஒரு சந்தர்ப்பத்தைப் பற்றிக் கொள்வது விரும்பத்தக்கதாக இருந்திருக்கும்.

இருப்பினும், அமெரிக்க அரசாங்கத்தைப் பொறுத்தவரை "பயங்கரவாதம் மீதான போரை" தொடர்ந்து நடத்துவது, ஈராக் எண்ணெய் வயல்களைக் கைப்பற்றுவதற்குரிய நீண்டகாலமாய்த் திட்டமிடப்பட்ட போரை நடத்துவதற்கு ஒரு சாக்குப்போக்காக செப்டம்பர் 11 தாக்குதல்களை பயன்படுத்துவதற்கு ஏதுவாக பின் இருக்கையை எடுத்துக் கொண்டது.

ஈராக்- அல்கொய்தா உறவுகளைக் குற்றம்சாட்டும் அறிக்கைகள் குழுவிசைக்கும் நேரப் பொருத்தம், அதன் முக்கிய கூற்றான ஈராக் "பரந்த அழிவுகரமான ஆயுதங்களின்" அபிவிருத்தி பற்றி அது சாட்டி உரைத்ததன் அடிப்படையில், அது சர்வதேச பாதுகாப்புக்கு ஒரு அச்சுறுத்தலை முன்வைக்கிறது என்ற கூற்றினை அடிப்படையாகக் கொண்டு அத்தகைய போருக்கான பொருத்தத்தை நம்பச்செய்வதாக ஆக்குவதில் புஷ் நிர்வாகத்தின் கஷ்டங்களை எதிரொலிக்கிறது.

இந்தவாரத் தொடக்கத்தில், பிரிட்டிஷ் பிரதமர் ரொனி பிளேயர் அவரது அரசாங்கத்தின் 50 பக்க ஆவணங்களை வெளியிட்டிருந்தார், அதில் அவர் ஈராக்கிற்கும் அல் கொய்தாவுக்கும் தொடர்பு பற்றி எந்த கூற்றையும் செய்யாமல், போருக்கான அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்திருந்தார். அது ஈராக்கிய ஆயுத வேலைத்திட்டங்களிலிருந்து வரும் அச்சுறுத்தல் பற்றி சாட்டி உரைப்பதன் மேல் மையப்படுத்தி இருக்கும் அதேவேளை, ஆவணமானது புதிய சான்றை அளிக்கவில்லை, பாக்தாத் அத்தகைய ஆயுதங்களைப் பயன்படுத்தும் திறனை எதிர்காலத்தில் பெறமுடியும் என்ற புஷ் நிர்வாகத்தின் கூற்றுக்களை வெறுமனே திருப்பிக் கூறியது. பிளேயரின் முயற்சியால் எவரையும் நம்பவைக்க முடியாமல், வாஷிங்டனானது அல்கொய்தா தொடர்பு பற்றி குற்றச்சாட்டுக்களைப் பரவ விட முடிவெடுத்தது.

கடந்த வார தொடக்கத்தில், பத்துலட்சக்கணக்கான அமெரிக்கர்களைக் கொல்லும் பெரியம்மை (பொக்குளிப்பான்) நோய்க்கிருமிகள் உடைய சிறு குப்பிகளை பயங்கரவாதிகள் பயன்படுத்தலாம் என்ற பீதியூட்டும் எச்சரிக்கைகளுடன் நாட்டை அச்சுறுத்துவதை நிர்வாகத்தின் அதிகாரிகள் நாடி இருந்தனர். ஒருநாள், தொற்றிப் பரவும் கிருமிகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு மருத்துவ சேவை செய்யக்கூடிய பத்துலட்சம் சுகாதாரப் பணியாளர்களுக்கு அரசாங்கத்தின் நோய்த்தடுப்பு திட்டங்கள் பற்றி செய்தி ஊடகத்தில் நிறைய அறிக்கைகள் இருந்தன. அடுத்த நாளன்று, அரசாங்கப் பேச்சாளர்கள்-- ஈராக்- அல்கொய்தா தொடர்பாக மாறிய-- அடுத்த "வெடி குண்டு" க்காக தயாரிப்பு செய்ததில், அந்த விஷயமானது கிட்டத்தட்ட மறைந்து போய்விட்டது.

ரம்ஸ்பெல்டும் சரி ரைஸூம் சரி அவர்களின் கூற்றுக்களுக்கு எந்தவித ஆதாரத்தையும் வழங்கவில்லை. பாதுகாப்புச் செயலாளர், ஈராக் அல்கொய்தாவுக்கு இரசாயன ஆயுதப் பயிற்சி கொடுத்தது என்று கூட குற்றம்சாட்டி உரைத்தார், ஆனால் பின்னர் குற்றச்சாட்டின் மூலாதாரம் அதிகமாய் "இன்னதென்று குறிப்பிடப்பட முடியாது" என உறுதிப்படுத்தினார், மற்றும் சிடுமூஞ்சித்தனமாய் செய்தியாளர்களிடம் "அதை அச்சிடாதீர்கள்" எனக் கூறினார்.

வர்த்தக சபை நண்பகல் உணவின் முன்னர் அவர் தோன்றிய போது குறிப்பிட்டதாவது: "நிரூபண சான்றுக்காக நமது வேட்கை இருந்தால், நாம் ஏறக்குறைய நிறைவேற்றப்படாது விடப்படுவது நிகழக்கூடும். நேர்மையான சந்தேகங்களுக்கு அப்பால் ஒவ்வொன்றையும் நாம் வைத்திருக்கப் போவதில்லை." வேறு வார்த்தைகளில் கூறினால், தனிநபரை குற்றவாளியென நிரூபிப்பதற்கான மற்றும் அவனுக்கு அல்லது அவளுக்கு சிறைத் தண்டனை அல்லது மரண தண்டனை கொடுப்பதற்குரிய ஆதாரம் பற்றிய அளவீடு, நூறாயிரக்கணக்கான ஈராக்கிய குடிமக்கள் மீது அழிவையும் மரண மழைகளையும் தயாரித்துக் கொண்டிருக்கும் அரசாங்கத்திடம் கோரப்பட முடியாது என்பதாகும். அதற்காக எந்த தவறான தகவலும் போதுமானதாக இருக்கும்.

இதற்கிடையில் ரைஸ், புஷ் நிர்வாகத்தின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களின் சுற்றிவளைத்து செல்லும் பகுதிக்குரிய இடத்தில் குறிப்பாய்க் கூறினார்: "செப்டம்பர் 11 அன்று நிகழ்ந்ததை இயக்குகின்ற கட்டுப்பாட்டை எப்படியோ சதாம் ஹூசைன் கொண்டிருந்தார் என இந்தப் புள்ளியில் ஒருவரும் வாதம் செய்ய முயற்சிக்கவில்லை, ஆகையால் இதனை அதிக தூரத்திற்குத் தள்ள நாம் விரும்பவில்லை," என்றார் அவர். "ஆனால் விரிந்து வந்து கொண்டிருப்பதும் இன்னும் தெளிவாகப் பெற்றுக் கொண்டிருப்பதும், மற்றும் நாம் இன்னும் கற்றுக் கொண்டிருப்பதும் இந்த விஷயத்தைத் தான்."

வாஷிங்டனில் நிலவுவது என்னவெனில் பொய்கள் மற்றும் ஆத்திரமூட்டல்களின் ஆட்சி ஆகும். அதன் முன்கூட்டியே தீர்மானித்த நோக்கங்களை மேம்படுத்துவதற்காக எந்த நேரத்திலும் எதனையும் அது கூறும். 1939ல் ஜேர்மன் முதல்வர் போல, போருக்கான அதன் "கருத்துப் பரப்பல் சாக்குப்போக்கு" நம்பத்தகுந்ததாக இருக்கின்றதா அல்லது இல்லையா என்பது பற்றி அது சிறிதளவே அக்கறை கொண்டுள்ளது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved