World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: Artists and entertainers strike continues

பிரான்ஸ்: கலைஞர்கள் மற்றும் மகிழ்வூட்டுவோரின் வேலை நிறுத்தம் தொடர்கிறது

By Francoise Thull
4 August 2003

Back to screen version

பிரெஞ்சு ஜனாதிபதி ஜாக் சிராக்கும் பிரான்சின் கலாச்சாரச் சிறப்பின் தனித்தன்மையைப் பாதுகாத்ததற்காகத் தன்னைத் தானே, ஜூலை 14ம் தேதி நாட்டுக்கு ஆற்றிய உரையில் வாழ்த்திக்கொண்டார், ``இது (ஐரோப்பாவின் வருங்கால அரசியலமைப்பாகிய) கன்வென்ஷனில் (Convention) எழுப்பப்படலாம்`` என்றும் அறிவித்தார். ``இது ஒரு மாபெரும் வெற்றி. பிரான்ஸ்தான் படைப்பாற்றலுக்கும், கலைகளுக்கும் அவற்றின் அனைத்துப் பிரிவுகளுக்கும் பொதுமக்களுடைய ஆதரவு தேவை என்ற முழு உணர்வைக் கொண்டுள்ள ஒரே நாடு ஆகும்`` என்று ஷிராக் பெருங்களிப்புடன் கூறினார்.

இவருடைய தற்புகழ்ச்சி உரையை நடத்திக்கொண்டிருக்கும்போதே, நிறுவனங்கள் சாராக் கலைஞர்கள், படைப்பாற்றல் பன்முகக் கலைஞர்கள், மகிழ்வூட்டும் துறையின் தொழில்நுட்ப வல்லுநர்கள் ("Intermittents"), இவர்களுள் பலர் தமது கலாச்சாரத்தின் உயிர் பிழைப்பிற்கே ஆபத்து வந்துவிட்டதெனக் கருதி அரசாங்கத்திற்கு எதிரான தீவிரப் போராட்டத்தில் இறங்கியிருந்தனர்.

பலவிதமான நடவடிக்கைகளுக்குப் பிறகு சினிமா கலைஞர்கள், நாடகத்துறைக் கலைஞர்கள் என்று பலரும் ஒரு தேசிய எதிர்ப்புத் தினத்தைக் கடைபிடித்து, நான்கு வாரங்கள் முன்பு வேலையளிப்போர் கூட்டமைப்பு - மேஃடப் (Medef)க்கும் 3 தொழிற்சங்கங்களுக்கும் (CFDT, CFE-CGC, CFTC) - இடையே ஏற்பட்ட உடன்பாட்டை எதிர்த்துப் பேசினார். இந்த உடன்பாட்டின்படி கலாச்சாரப் பிரிவில் வேலையிழந்தோருக்கான விதிமுறைகள் எவ்வாறு கொள்ளப்படும் என்பது பற்றிய புதுச் சட்டவரைவைக் கொண்டிருந்தது.

தற்காலிக வேலையாட்களுடைய (Intermittents) வேலையின்மை உதவி நிதிதான், இப்பூசலின் மையமாக உள்ளது, பல கலாச்சாரத் தொழிலாளர்களுக்கு முக்கியமான ஆதரவு ஆதாரமாக உள்ளது. 1936ம் ஆண்டு முதன் முதலில் இது தோற்றுவிக்கப்பட்டது; இப்பொழுது 200,000 கலைஞர்கள், நடிகர்கள், பாடகர்கள், நாட்டியக்காரர்கள், இயக்குனர்கள், தன உதவியாளர்கள், ஒலி, ஒளிப்பதிவு தொழில்நுட்பக்காரர்கள், உடை தயாரிப்பாளர்கள், சினிமா, தொலைக்காட்சி, ரேடியோ தொழில்நுட்பப் பணியாளர்கள், சர்க்கஸ் வீரர்கள் என்று பலருக்கும் தன்னுடைய சேவையைச் செய்துவருகிறது.

வேலையளிப்போர் கூட்டமைப்பிலிருந்தும், வலதுசாரி அரசியல்வாதிகளிடமிருந்தும் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நிதி பற்றித் தொடர்ந்து தாக்குதல்கள் வந்த வண்ணமிருக்கின்றன. நடைமுறையில் பல தவறான பயன்பாடுகள் காணப்படுவதாக அவர்கள் குறை கூறுகின்றனர்; நடைமுறையில் காட்சித்துறை முதலாளிகள் தாம் நிதியத்தை, அரை நேரத்திற்குப் பதிலாக முழுநேரக் கலைஞர்களைக் கொள்வது போன்ற தவறான முறைகளில் ஈடுபடுவதோடு அக்கலைஞர்களை இடைக்காலத்தில் பகுதி நேர ஊழியராகப் பதிவு செய்துகொள்ள வேலையின்மை உதவித்தொகையை மட்டும் அவர்கள் நம்பி வாழ முடியாததால், இந்த முறைக்கு இணங்க இயலாத சிறிய, அமைப்புச்சாராக் கலைஞர்கள், நிலையான ஒப்பந்தம் அற்றவர்கள் ``கலாச்சார சேவையை``த் துறந்துவிட நேரிடும்.

இப்பொழுதைய வேலை நிறுத்தம் பல ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள போராட்டத்தின் தொடர்ச்சியாக இருப்பதோடு, அனைத்து மகிழ்விப்போர் பொது வேலை நிறுத்தமாக உச்சக் கட்டத்தை பெப்ரவரி 2003ல் அடைந்தது. புதிய ஒப்பந்தப்படி, கலைஞர்கள் வேலையின்மை நிதியிலிருந்து உதவி பெறும் நிபந்தனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்பப் பணியாளர்கள், உதாரணமாக, முந்தைய 10 மாதங்களில் 507 மணி நேரமும் உழைத்திருக்கவேண்டும் (கலைஞர்கள் 10 1/2 மாதங்கள்) முன்பு இந்த காலவரையறை ஓராண்டாக இருந்தது. மேலும் ஓராண்டிற்குப் பதிலாக எட்டு மாத காலத்திற்கு மட்டுமே உதவித்தொகையைப் பெறலாம்.

இந்தக் கால அளவு பற்றிய கணக்கீடு ஒரு தொழில்நுட்பப் பணியாளர் அல்லது கலைஞர் அரங்கில் அல்லது அரங்கின் பின்புறமோ, ஸ்டூடியோவிலோ செலவழிக்கும் நேரத்தைப் பொறுத்துக் கடுமையாக்கப்பட்டுள்ளது. பல மணி நேரம் ஒரு நடிகர் தன்னுடைய வேலைக்காக எடுத்துக்கொள்ளும் தயாரிப்பு நேரம் - புதிய நாடகமோ, சினிமாவோ, புரவலர் தேடுவதோ, தயாரிப்பாளர் கிடைப்பதோ - புதிய கணக்கில் எடுக்கப்படாமல் - கணக்கில் கொள்ளப்படும்.

நாடகக் கலைஞர்கள் கீழ்க்கண்டவாறு எழுதியள்ளனர்: "ஆண்டு ஒன்றுக்கு 507 மணி நேரம் தான் நாங்கள் வேலை செய்வதாகக் கூறமுடியாது." ஆண்டு முழுவதும், வாரத்திற்குச் சராசரியாக 60 மணி நேரம் உழைப்பதோடு, 507 மணி நேர வேலை மட்டும் மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்படுகிறது. இந்த பணம் கொடுக்கப்படும் மணிகளுக்கான உழைப்பு, பணம் கிடைக்காமல் செய்யப்படும் உழைப்பான கண்டுபிடித்தல், ஒருங்கிணைத்துத் தயாரித்தல், நல்ல முறையில் கற்று நாடகத்தைத் திறமையாகப் போட ஒத்திகை பார்த்தல், இவற்றைக் கணக்கில் கொள்ளவில்லை. எனவே நாங்கள் நிரந்தரமாகப் பணிபுரிந்தாலும், ஒழுங்கின்றித்தான் ஊதியம் பெருகிறோம்.`` (From the Internet Forum Culture in Danger - Strike Co-ordination of the Theatre Workers).

சமீபத்திய உடன்பாட்டின்படி முன்பு உதவித்தொகை பெற்று இப்பொழுது மிக வறிய நிலையில் உள்ளவர்களை எந்த உதவியையும் இழக்கும் ஆபத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது பல சிறிய நடாகக் குழுக்கள், இசை மன்றங்களில் நிகழ்ச்சிகள், தெருக்கூத்துக்கள் போன்றவற்றை அழித்துவிடும்.

பெரும் எதிர்ப்பையும் சமாளித்தபின்னர் தன்னுடைய ஓய்வூதியக் குறைப்பை வெற்றிகரமாகச் செயல்படுத்திய ரஃபரனின் அரசாங்கம் புதிய ஒப்பந்தத்தை ஜூன் கடைசியில் கையெழுத்திட ஏற்பாடு செய்திருந்தது தற்செயலான நிகழ்ச்சி அல்ல. மரபின்படி கோடைகாலத் துவக்கத்தில் ஏராளமான பெரிய அளவு நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடைபெறும். ஆதலால் இதற்கு எதிர்ப்பு இருக்காது என்று அவர்கள் கணக்குப் போட்டிருந்தனர்.

ஆனால் அரசாங்கத்திற்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில், இந்த அறிவிப்பு - ஒப்பந்தக் கையெழுத்து தவிர்க்கப்படமுடியாது என்பது - எதிர்பாராமல் இயக்க ஒற்றுமையை வளர்த்து கோபத்தை அதிகரித்த நிலை, இன்னமும் குறையவில்லை. நாடெங்கிலும் கிராமப்புறக் கலைஞர்களும், காட்சித்துறை தொழில்நுட்ப பணியாளர்களும், வேலை நிறுத்தம் மற்றும் வளமான கற்பனையுடன் புறக்கணிப்பு நடவடிக்கைகள் போன்றவற்றின் மூலம் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். மிகப் புகழ்பெற்ற கோடை விடுமுறைத் விழாக்களை நடத்த இயலாமற்போய்விட்டது; அவிக்ளன், மார்சேயி விழாக்கள், கவிதைக் கலைத்விழா Alx-en-Provenceல் நடப்பது, லிணீ RochelleTM Francofolies, Toursல் ஜாஸ் இசைவிழா, Montpellierல் நாடகவிழா. இவையனைத்துமே இதில் அடங்கும். பாரிசில் ஜெர்மனிய நாட்டியத் தயாரிப்பாளர் Pina Bauschன் இறுதி விழா நடத்த முடியாமல் போய்விட்டதுடன், Molieveன் The Imaginary Invalid, Comedie Francaiseல் நடைபெற வேண்டியதும் நின்றுபோயின.

Lilleக்கு அருகே Lambersartல் ஆர்ப்பாட்டக்காரர்கள் France-3 ஸ்டூடியோ நுழைவாயிலைத் தடுத்து, Tour de France (சைக்கிள் சுற்றுப்போட்டி) காட்டப்படுவதைச் சீர்குலைத்தனர். Chalonsur - Saoneல் கலைஞர்கள் ``கலைத்துவ இராணுவத்தின் அணிவகுப்பு`` என்ற பெயரில் ``பெரும் ஆக்கத்திட்டதிற்கான ஆயுதம்`` என்று பறையறிவித்து முழங்கி ஆர்ப்பரித்தனர்.

கலைஞர்கள், தொழில்நுட்பப் பணியாளரின் வேலை நிறுத்தம் பெரும்பாலான பிரான்ஸ் மக்களின் பரந்த ஆதரவைக் கொண்டுள்ளது. Jean-Pierre - Torn, Christian Vincent, Jacques Maillot போன்றே படத் தயாரிப்பாளர்கள் Paris - Cinema, Festival de Fuix, La Rochelle திருவிழா போன்றவற்றில் தங்கள் படங்களைத் திரும்பப் பெற்றக்கொண்ட அளவில், வேலை நிறுத்தத்தில் பங்குகொண்டுள்ளனர். பிரெஞ்சு சினிமாவிற்குப் புதிய சட்டத்தின் மூலம் வரும் விளைவுகளை விளக்குவதற்காகத் தங்கள் வேலை நிறுத்த விருப்பம் அமைந்துள்ளதாக Maillot குறிப்பிட்டார். அவர் கூறியது: ``அனைத்துக் கிளைகளையும் ரம்பம் கொண்டு அறுத்துத் தள்ளுவதாக மக்கள் எங்கள் மீது குற்றம் சாட்டியுள்ளனர்; ஆனால் மெடஃப் (முதலாளிகள் சங்கம்) முழு மரத்தையும் வெட்டி வீழ்த்திவிட்டது.``

மிக முக்கியமான நபர்கள், சினிமா இயக்குனர் Bertrand Tavernier உட்பட 1109 கலைஞர்கள் (இயக்குனர்கள், நடிகர்கள், தொழில்நுட்பப் பணியாளர், உற்பத்தியாளர்) ஆகியோர் கையெழுத்திட்டு 650 படத் தயாரிப்பாளர்களுக்கு பகிரங்கள் கடிதத்தில் சிராக் ``மீண்டும் அக்கறையுடன் பிரான்சில், செலவு செய்து கலையின் பங்கு பற்றி சிந்திக்கவேண்டும்`` எனத் தெரிவித்துள்ளனர். Tavernierவுடன் இந்தக் கடிதத்திற்கு நடிகர் Gérard Dépardieu, இயக்குனர் Constantain Costa - Gavras, மற்றவர்களும் ஆதரவு கொடுத்துள்ளனர்.

பொதுப்போக்கான வணிகப் பார்வை, பொது நிறுவனங்களைத் தனியார்மயமாக்குதல் போன்றவற்றிற்கு இணங்கி நடக்க, மேலும் மேலும் கடுமையான நிபந்தனைகளை ஏற்க, கலையும் பண்பாடும் வற்புறுத்தப்படும் அளவில், கலைஞர்களுக்கும், தொழில்நுட்பப் பணியாளர்களுக்கும் வேலையின்மை நிதியுதவி நிபந்தனைகள் திருத்தி அமைக்கப்படுகின்றன. வலதுசாரி அரசாங்கப் பொறுப்பை ஜீன்பெரி ராபின் ஏற்றுக்கொண்டதலிருந்தே, கலைக்கும் பண்பாட்டிற்குமான செலவினங்களைத் தீவிரமாகக் குறைத்துள்ளார். அரசாங்கத்தின் மொத்தச் செலவில் 1 சதவிகிதம்கூட கலைகளுக்குக் கூடாது என்று வந்துவிட்டது. ரஃபரினின், வருங்கால மையத்தளத்தல் திட்டங்களின்படி கடுமையான பண நெருக்கடிகளின் காரணமாக பண்பாட்டுத்துறைச் செலவீனங்கள் குறைக்கப்படும்.

பரந்த அளவில் கஞைர்கள் திரள்வது கலாச்சாரத்தை வணிகப்படுத்தும் முயற்சி பெருகிவருவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முறையையும் ஓரளவு காட்டுகிறது. ஏனெனில் சுரண்டல் தன்மையுடைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளான "Loft Story," "Big Brother" போன்றவை, நல்ல கற்பனை வளம் மிகுந்து, கூடுதலான நடிப்பு, கலாச்சாரத்திறன் இவற்றின் இழப்பில், ஆதரவிற்கு உட்படுத்தப்படுகின்றன.

ஆனால் இந்தக் கலைஞர்களின் பொறுப்புணர்வும், வளமான நடவடிக்கைகளும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நடைமுறைக்கு நேர்மாறாக உள்ளன. (CGT, FO கலைஞர்கள் கூட்டமைப்பு Attac,ஜோசே போவே(José Bové) என்பவருக்கு சார்புடைய சுற்றுப்புறச்சூழல் குழுக்கள் - ஆகிய தொழிற்சங்க அமைப்புக்கள்). அரசாங்கம் ஓய்வூதிய சீர்திருத்தச் சட்டத்தைக் கொண்டு வருவதில் வெற்றியடைந்ததைக் கண்ட இந்த அமைப்புக்கள் மிகவும் மிரட்டப்பட்டு, அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டு, அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிரான மறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுப் பலன்பெற முடியும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டன.

தொழிற்சங்கங்கள், அவற்றோடு இணைந்த அமைப்புக்களின் அரசியல் கோழைத்தனம் தான் சிராக் தன்னை கலாச்சாரக் காவலன் மற்றும் சமுதாய உரையாடலின் வெற்றியாளன் எனக் காட்டிக்கொண்டுர அதே நேரத்தில் அடிப்படைச் சமுதாய உரிமைகளையும் வேலை நிறுத்தங்களையும் நசுக்க முடிகிறது. சமீபத்திய கருத்து ஒன்றில் அரசாங்கம் எதிர்பார்க்கும் வகையில் பிரச்சினை முடியாவிட்டால், ``அரசாங்கம் தன் பொறுப்புக்களைத் தீவிரப்படுத்தி, நிலைமையைச் சமாளிக்கப் புதிய சட்டங்களைக் கொண்டு வரும்`` எனக் குறிப்பிட்டுள்ளார்.

கலாச்சாரப் பிரிவில் தொழிலாளர்கள் மேற்கொண்ட வேலை நிறுத்தம் பிரான்சில் தொழிலாளர் வர்க்கத்தின் தலைமை நெருக்கடியினை மீண்டும் ஒருமுறை ஆழமாய் புலப்படுத்தியுள்ளது. CFDT உடனடியாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு சோசலிச கட்சியுடன் தனக்குள்ள உறவைத் தெளிவுபடுத்தியுள்ளது. ஸ்டாலினிச ஆதிக்கம் நிறைந்த CGTயும் FOவும் உடன்பாட்டில் கையெழுத்து இடவில்லை; ஆனால் ``ஒரு நியாயமான சீர்திருத்தத்திற்கான உண்மையான பேச்சுவார்த்தைகள் நடந்தால் தொடருவோம்`` என்ற கோரிக்கையை விடுத்துள்ளனர்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved