World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

The bombing of Syria: a new eruption of US-Israeli aggression

சிரியாமீது குண்டு வீச்சு: அமெரிக்க - இஸ்ரேலிய வலியத் தாக்குதலின் புதிய வெடிப்பு

By Bill Vann
7 October 2003

Back to screen version

ஞாயிறு அன்று சிரியாவின் உள்ளேயான அதன் குண்டுவீச்சுத் தாக்குதலுடன், பிரதம மந்திரி ஏரியல் ஷரோனின் இஸ்ரேலிய ஆட்சியானது மத்திய கிழக்கில் ஒரு பரந்த போருக்கான கதவை திறந்துவிட்டுள்ளது.

இஸ்ரேல், சிரியா மீதான தாக்குதலை -30 ஆண்டுகளில் இது முதலாவது- அக்டோபர் 4ம் தேதி 19 குடிமக்களைக் கொன்று இருபதுகளுக்கு மேலாக காயப்படுத்திய ஹைஃபா தற்கொலைக் குண்டு வெடிப்புக்கு பதிலடியாக நியாயப்படுத்தும் அதேவேளை, சிரியாவோ அல்லது ஏவுகணை தாக்கிய இலக்கோ அந்த அட்டூழியத்துடன் எந்தவிதத்திலும் தொடர்புடைய வகையில் அது எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை.

இஸ்ரேலின் வலியத்தாக்கும் செயலுக்கான அதனது ஆதரவை வாஷிங்டன் உடனே சமிக்கை காட்டியது. ஜனாதிபதி புஷ் திங்கட்கிழமை தான் ஷரோனுடன் பேசியதாகவும் மற்றும் "இஸ்ரேல் தன்னைக் காத்துக் கொள்ள உரிமை பெற்றது, இஸ்ரேல் தாயகத்தைப் பாதுகாக்கும் அர்த்தத்தில் இக்கட்டான நிலையை கட்டாயம் உணரக் கூடாது" என்று வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார். வெள்ளமாளிகை பேச்சாளர் ஒருவர், கலந்துரையாடலில் சிரியா மீதான குண்டு வீச்சை புஷ் எழுப்பக் கூட இல்லை, மிகக் குறைவானவரே அதனை விமர்சித்தனர் என்றார்.

ஐக்கிய நாடுகள் சபையில், சிரியா மீதான தாக்குதலை "இராணுவ வலியத் தாக்குதல்" நடவடிக்கை எனக் கண்டிக்கும் "பிராந்திய மற்றும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்தும் ஆபத்தான மோசமாகிவரும் நிலை" என எச்சரிக்கும் முன்மொழியப்பட இருக்கும் தீர்மானத்தை ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுக்க தாங்கள் தயாரிப்புடன் இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் குறிகாட்டினர்.

ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதரும், பாதுகாப்பு சபைக்கு தற்போது தலைமை வகித்து வருபவருமான ஜோன் நெக்ரோபொன்ட், எந்தவிதமான வாக்கெடுப்புக்கும் திட்டமிடாமல் தீர்மானத்தை விவாதத்திற்கு வைத்தார். சிரியா "பயங்கரவாதத்தின் மீதான போரில் தவறான பக்கம் நிற்பதாக" அறிவித்து, சிரியா எதற்குத் தகுதியாக இருக்கிறதோ அதனைப் பெறும் எனப் பலமாக அறிவிக்கும் அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டார்.

குண்டு வீச்சுத் தாக்குதல் தொடர்பாக முன்கூட்டிய விவாதம் எதுவும் இருக்கவில்லை என டெல் அவிவ் மற்றும் வாஷிங்டன் இரண்டும் கூறிக்கொண்ட போதிலும், இஸ்ரேலிய ஆட்சியானது தாக்குதலை கையாளுமுன் வெள்ளைமாளிகையுடன் தாக்குதல் பற்றித் தெளிவுபடுத்தியதா இல்லையா என்பது பற்றித் தெரியவில்லை. எப்படி இருப்பினும், இஸ்ரேலிய ஆட்சியானது அதன் அரபு அண்டை அயலாருக்கு எதிராக இராணுவ வலியத்தாக்குதலை மேற்கொள்வதில் தண்டனையிலிருந்து முழு விலக்கீட்டு உரிமையுடன் அது செயல்பட முடியும் மற்றும் சிறப்பான அனுமதி தேவையில்லை என்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறது. "நீங்கள் பச்சை விளக்குக்காக காத்திருக்கவும் வேண்டாம், பச்சை விளக்கைப் பெறவும் வேண்டாம்" என ஒரு இஸ்ரேலிய அதிகாரி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையிடம் கூறினார்.

இஸ்ரேலிய குறி இலக்கில் தெளிவாகத் தெரிவது வாஷிங்டனை மேற்கில் ஈராக் மீதான அதன் ஆக்கிரமிப்பை கிழக்கில் சிரியாவரை, இன்னும் கிழக்கில் ஈரான் வரையிலும் கூட விஸ்தரிப்பதற்கு இணங்கச்செய்வதாக இருக்கிறது. தாக்குதலுக்குப் பின்னர் ஷரோனின் மூத்த ஆலோசகர் ஒருவர் பயிற்சி முகாம் என்று கூறப்படுவது ஈரானால் நிதியூட்டப்பட்டிருந்தது எனக் கூறினார்.

"தெஹ்ரான், டமாஸ்கஸ் மற்றும் காசாவிற்கு இடையிலான இந்த பயங்கரவாத போக்கிரி நாடுகளின் தொடர்ச்சியை நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம்" என உதவியாளர் ரான்னன் ஜிஸ்ஸின், புஷ்ஷின் "போக்கிரி நாடுகளின்" பகட்டுப் பேச்சை தெளிவாக எதிரொலிக்க முயற்சித்தார்.

"பயங்கரவாதத்தின் மீதான போரில்" சிரியா அடுத்த இலக்கா?

ஐக்கிய நாடுகள் அவையில், இஸ்ரேலின் தூதுவர் டான் ஜில்லர்மன், வாஷிங்டனின் "பயங்கரவாதத்தின் மீதான போரை" டமாஸ்கஸில் ஆட்சியைக் கவிழப்பதற்கு ஒரு போராக விஸ்தரிக்க நேரடியாக வேண்டுகோள் விடுத்தார்." சிரியா கண்ணாடியில் உணர்ச்சியற்ற பார்வை பார்ப்பதில் மற்றும் அதிர்ஷ்டவசமாக அது இன்னும் பயங்கரவாதத்திற்கு எதிரான பூகோள பிரச்சாரத்தின் பகுதியாக திட்டமிடப்பட்ட நடவடிக்கையின் கருப்பொருளாக இருந்திருக்கவில்லை, துரதிர்ஷ்டவசமான காரணங்களுக்காக அந்நடவடிக்கையின் கருப்பொருளாக இருந்து வந்திருக்கின்றது என்பதை நன்கு செய்யலாம்" என அவர் கூறி, சிறிது இடைவெளிக்குப் பின் மெதுவாக, "என்றாலுங்கூட இன்னும் இல்லை." என்றார்.

அண்மைய மாதங்களில், புஷ் நிர்வாகமானது, சிரிய அரசாங்கம் "பேரழிவு ஆயுதங்களை" வைத்திருக்கிறது மற்றும் அது அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்க்க ஈராக்கிற்குள் கொரில்லாப் படைவீரர்களை எல்லை தாண்டி செல்வதற்கு அனுமதிக்கிறது என்று குற்றம் சாட்டும் அதேவேளை, சிரிய அரசாங்கத்தை "போக்கிரி அரசு" மற்றும் "பயங்கரவாத ஆதரவாளர்" என விவரித்து, டமாஸ்கசைத் திரும்பத்திரும்ப அச்சுறுத்தி இருக்கின்றது.

இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களில் பெரும்பாலானவை, ஈராக்கிற்கு எதிரான தூண்டிவிடப்படாத போரைத் தொடுப்பதற்கு சாக்குப்போக்குக்களாகப் பயன்படுத்தப்பட்டவற்றுக்கு நேரடியாய் இணையானவைகளாக இருக்கின்றன.

கடந்த ஏப்பிரலில், சிரியா மீதான அமெரிக்க ஆக்கிரமிப்புக்கான சாத்தியமான திட்டங்கள் பாதுகாப்பு செயலர் டொனால்ட் ரம்ஸ்பெல்டின் ஆணைகளுக்காக இருந்தன எப்பது பற்றிய தகவல் புலனாய்வுத்துறை தகவல்கள்களிலிருந்து கசிந்தது. இத்திட்டங்கள் சதாம் ஹூசேன் ஆட்சியின் பறந்தோடும் மூலக்கூறுகளை "சூட்டோடு சூட்டாகப் பின்பற்றலை" மேற்கொள்ளல் எனும் மூடுதிரையின் கீழ் அமெரிக்கப் படைகள் ஊடுருவுதலாய் சம்பந்தம் கொண்டிருந்தது என கூறப்படுகிறது. இஸ்ரேலிய ஆட்சி தன்னிலேயே, வலதுசாரிகளும் பென்டகனின் ஆட்சியியல் துறை தலைமையில் உள்ள சியோனிச ஆதரவு சதிக்கூட்டமும் ஈராக் போரை சிரியாவுக்கு விஸ்தரிக்க முன்னிலைப்படுத்தி இருக்கின்றது.

பாதுகாப்புக் கொள்கை வாரியத்தின் உறுப்பினரும் பென்டகனின் உயர் அதிகாரிகளிடம் மிக நெருக்கமான அரசியல் மற்றும் கருத்தியல் உறவுகளை வைத்திருக்கும் ரிச்சார்ட் பேர்ல், இஸ்ரேலிய குண்டு வீச்சை வரவேற்றார். "அது அமைதி நிகழ்ச்சிப் போக்கிற்கு உதவும்" என அவர் போஸ்ட்டிடம் கூறினார். அவர் மேலும், "பயங்கரவாதிகளுக்கு பின்னால் போவது மற்றும் அவர்களின் முகாம்களிற்குப் பின்னால் போகாமலிருப்பது அர்த்தமில்லாதது" என்பதன் காரணமாக, முன்னரே சிரிய இலக்கை ஏன் இஸ்ரேல் தாக்கி இருக்கவில்லை என்பதைத் தாம் புரிந்துகொள்ள முடியவில்லை என்றார்.

இதற்கிடையில், ஹைஃபா பயங்கரவாதிகள் குண்டுவெடிப்பானது ஷரோன் அரசாங்கத்திற்குள்ளே இருந்து பாலஸ்தீனிய நிர்வாகத்தின் ஜனாதிபதி யாசிர் அரஃபாத்தை படுகொலை செய்வதற்கு முன்னரே அறிவித்த திட்டத்தை மேற்கொள்ளுமாறு புதுப்பிக்கப்பட்ட கோரிக்கைகளை தூண்டிவிடும்.

ஆக்கிரமிக்கப்பட்ட எல்லைப் பகுதிகளில் ஒரு பெரிய அளவிலான புதிய இஸ்ரேலிய தாக்குதலை முன்கணிக்கும் தெளிவான முயற்சியில், அரஃபாத் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்து அவரால் நியமிக்கப்பட்ட பிரதமர் அகமது குரேயா தலைமையில் ஒரு புதிய அமைச்சரவையை நியிமித்தார். சமீபத்திய பெரும்பான்மையான தற்கொலைக் குண்டு வெடிப்புக்களுக்கு காரணம் என அறிவித்துக் கொண்டுள்ள ஹமாஸ் மற்றும் இஸ்லாமிக் ஜிஹாத் ஆகிய இரு அமைப்புக்களின் போராளிகளை நசுக்குவதற்கு தாங்கள் தயாரிப்பு செய்து கொண்டிருப்பதாக பாலஸ்தீனிய அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

தற்கொலைக் குண்டு வெடிப்புக்களின் சமூக வேர்கள்

இஸ்ரேல் ஆட்சியின் இராணுவத் தாக்குதலோ அதிகாரமற்ற பாலஸ்தீனிய நிர்வாகம் இஸ்லாமிய போராளிகளை கட்டுப்படுத்துவதோ, தற்கொலை குண்டுவெடிப்புக்களின் பயங்கரத்தை எழச்செய்திருக்கும் அதன் பின்னே உள்ள அரசியல் ஒடுக்குமுறை மற்றும் சமூக இழப்பு இவற்றினை தீர்க்கப் போவதில்லை. இந்த தாக்குதல்கள் தாமே தங்களின் சொந்த நாட்டில் அவமதிப்பிற்குள்ளாகும் சிறைக்கைதிகளின் நிலைக்கு குறைக்கப்பட்ட 35 இலட்சம் பாலஸ்தீனியர்களை கொண்ட மக்கட்தொகையின் உக்கிரமான கோபம் மற்றும் ஆற்றொணாநிலையின் உற்பத்தியாக இருக்கின்றன.

ஹைஃபா தற்கொலைக் குண்டுவெடிப்பாளரின் வாழ்க்கை வரலாறு இஸ்ரேலின் குடிமக்கள் மீதான இரத்தம் தோய்ந்த தாக்குதல்களின் மூலத்தை குறிகாட்டுகிறது. அவர் மேற்கு கரை நகரமான ஜெனினிலிருந்து வந்த, 29 வயதுடைய, ஹனாடி ஜராதத் எனும் பெண் ஆவார். அந் நகர் வாரக்கணக்கில் இடைவிடாத இஸ்ரேலிய தாக்குதல்களின் இலக்காக இருந்திருக்கின்றது. ஒரு வழக்குரைஞராவதற்காகப் படித்துக் கொண்டிருந்த அப்பெண், ஜூனில், தனது சொந்த சகோதரனும் மற்றும் அவரது பெற்றோரின் உடன்பிறந்தோரின் பிள்ளையும் அவரது வீட்டுக்கு வெளியே இஸ்ரேலிய துருப்புக்களால் கொல்லப்பட்டதைக் கண்டார். கடந்த ஆண்டு இஸ்ரேலிய இராணுவம் அந்நகரை ஆக்கிரமித்தது, குடிமக்களது இல்லங்களை டாங்கிகளின் குண்டுகளுக்கு இரையாக்கியது மற்றும் பலநூறு குடிமக்களைக் கொன்றது மற்றும் காயப்படுத்தியது. ஹைஃபா குண்டு வீச்சுக்குப் பின்னர், இஸ்ரேலிய டாங்கிகள் மீண்டும் ஜெனினுக்குள் நகர்ந்தன, மக்கள் மீது ஊரடங்குச்சட்டம் திணிக்கப்பட்டு, ஜராதத் குடும்பத்தின் வீடு இடிக்கப்பட்டது.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகளாலான இந்த முடிவற்ற ஒடுக்குமுறைகள் மேற்குக் கரையிலும் காசா பாலைநிலத்துண்டிலும் உள்ள பாலஸ்தீனியர்களின் வாழ்க்கையை வாழும் நரகமாக மாற்றி உள்ளது.

ஆக்கிரமிப்பின் கடும் பொருளாதார மற்றும் சமூகப் பாதிப்பு ஐ.நா சிறப்புத்தூதர் ஜீன் ஜிக்ளர் (Jean Ziegler) ஆல் தயாரிக்கப்பட்ட 25 பக்கங்கள் கொண்ட வரைவு அறிக்கையில் தெளிவாகக் கூறப்பட்டிருப்பது அண்மையில் பத்திரிகைகளுக்கு கசிந்தது. பெரும்பாலான பாலஸ்தீனிய குடும்பங்கள் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு பெறும் அளவுக்கு மற்றும் ஐந்து வயதிற்குட்பட்ட பாலஸ்தீனியக் குழந்தைகளில் 22 சதவீதம் பேர் கடும் ஊட்டச்சத்துப் பற்றாக்குறைக்கு ஆளாகி உள்ள அளவுக்கு உணவு உற்பத்தியையும் விநியோகத்தையும் சீர்குலைத்துள்ளது என்று அது இஸ்ரேலின் "கூட்டுத் தண்டனை" பற்றிய கொள்கையை குற்றம் சாட்டுகிறது. போதுமான உணவு அளிப்புக்கு உணவை உற்பத்தி செய்யக்கூடியது என நிரூபிக்கப்பட்ட நிலத்தை எடுத்துக் கொள்ளுகையில், அத்தகைய நிலைமைகள் "அபத்தமானது" என்று விவரித்தது.

செப்டம்பர் 2000-ல் இரண்டாவது இண்டிபதா வெடித்தெழுந்த பின்னர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவப் படைகளால் திணிக்கப்பட்ட தீவிர கடும் நடவடிக்கைகளின் விளைவாக ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன எல்லைப் பகுதிகள் மனிதப்பேரழிவுகளின் விளிம்பில் இருக்கின்றன.

மக்களை, உணவு, தண்ணீர் இவற்றைப் பெறுவதிலிருந்து தடுக்கும் உள்நாட்டிற்குள்ளேயான கடும் வழி மூடல்களை, அத்தகைய இராணுவ நடவடிக்கைகளை திணித்தல் 'பட்டினி போடும் கொள்கை' என்றழைக்கப்பட்டு வருவதை கணக்கிலெடுப்பதன்றி, வேறு நியாயப்படுத்தல் இருக்க முடியாது என்று அவ்வறிக்கை மேலும் கூறியது.

வர்த்தகம் மற்றும் வளர்ச்சி பற்றிய ஐக்கிய நாடுகள் மாநாட்டின்படி (UNCTAD), மேற்கு கரையிலும் காசாவிலும் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு பாலஸ்தீனியர்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழுகின்றனர், அதேவேளை வேலையின்மை வீதம் 40 சதவீதத்திற்கும் மேலாக இருக்கிறது.

கடந்த வாரத்திற்குள்ளே, ஷரோன் ஆட்சியானது பாலஸ்தீனியர்கள் மீது தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி உள்ளது, ஆக்கிரமிக்கப்பட்ட எல்லைப் பகுதிகளில் இஸ்ரேலிய நில அபகரிப்புக்களை பரந்த அளவில் விரிவுபடுத்தும் அச்சுறுத்தலை செய்யும் வரிசையான முன்முயற்சிகளை திரைவிலக்கிக் காட்டி இருக்கிறது.

மேற்குக் கரையின் உள்ளே சட்டவிரோத குடியேற்றங்களில் இன்னொரு 600 வசிப்பிடங்களைக் கட்டுவதற்கான திட்டங்களை இஸ்ரேலிய அமைச்சரவை வெளிப்படுத்தியது. பாலஸ்தீனிய - இஸ்ரேலிய மோதலுக்கு பேச்சுவார்த்தை அடிப்படையிலான இரு நாடு என்ற தீர்வுக்கு பாதையாக, வாஷிங்டனால் முன்னிலைப்படுத்தப்பட்ட "சாலை வரைபடம்" என்று அழைக்கப்படுவது புதிய குடியேற்ற நடவடிக்கையை நிறுத்துமாறு கோருகின்ற அதேவேளை, புஷ் நிர்வாகமானது இவ் விரிவாக்கத்தை வெறுமனே "உபயோகமற்றது" என விவரித்தது.

ஷரோனின் அமைச்சரவையும் கூட "பாதுகாப்பு சுவரை" முன்னுக்கு எடுத்துச்செல்லும் அதன் விருப்பத்தை அறிவித்துள்ளது. அது ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையை ஆழமாகத் துண்டாடுகிறது மற்றும் பாலஸ்தீனிய நிலத்தின் பெரும் புல்வெளிகளின் கட்டுப்பாட்டைக் சக்திமிக்கவகையில் கைப்பற்றுகிறது. இஸ்ரேலிய மனித உரிமை கழக குழுவான B'Tselem படி, அச்சுவரானது ஒன்றில் 80,000 பாலஸ்தீனியர்களை சுவருக்குப் பின்னால் சிக்கவைக்கும் அல்லது எல்லாப் பக்கங்களிலும் பாதுகாப்பு வேலிகளால் சூழ வளைக்கும். இதன் விளைவு இவர்களை இஸ்ரேலுக்குள் நுழைவதை தடுக்கும் அதேவேளை, இம்மக்களை ஏனைய பாலஸ்தீனிய மக்கள் தொகையினரிடம் இருந்து அவர்களின் வேலைகள், கல்விக்கூடங்கள், வேலைத் தளங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து துண்டித்து, அவர்களை பொருளாதாரக் கொடுமைக்கும் சமூகப் புறக்கணிப்பிற்கும் ஆளாக்கும். கிழக்கு ஜெருசலேத்தில் வாழும் பத்து இலட்சம் பாலஸ்தீனியரில் கால்பகுதியினரும் மேற்குக் கரையிலுள்ள ஏனையோரிடமிருந்து துண்டிக்கப்படுவர்.

மேற்குக்கரை மற்றும் காசா பாலை நிலத்துண்டு முழுவதும் சிதறிக்கிடக்கும் இஸ்ரேலிய 170 குடியேற்றங்கள் ஒவ்வொன்றைச் சுற்றியும் பாதுகாப்பு வேலிகள் நீட்டிக்கப்படுவது பாதுகாப்பு நடவடிக்கைகள் என்று பேணும் மேலும் கூடிய முன்முயற்சியாகும். குடியேற்றத்தை சுற்றி ஒவ்வொரு வேலியும் 400 மீட்டர் ஆரம் உடைய சுற்றி வளைப்பாகும், இது சக்தி மிக்க வகையில் பெரும் நிலப் பகுதியின் கட்டுப்பாட்டை கைப்பற்றும் மற்றும் ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள பாலஸ்தீனியர்களின் வாழ்க்கையை மேலும் தொல்லைகாளாக்கும்.

சிரியா மீதான குண்டு வீச்சு போல, பாலஸ்தீனிய போராளிகள் மற்றும் தலைவர்கள் மீதாக இலக்கு வைத்து நடத்தப்படும் படுகொலைகள் மற்றும் நாளாந்த ஒடுக்குமுறைகள் மூன்று ஆண்டுகளில் 3000 பாலஸ்தீனிய உயிர்களை பலிவாங்கி இருப்பதாகக் கூறுகிறது, இந்நடவடிக்கைகள் பிரதானமாக பாதுகாப்பிற்காக வடிவமைக்கப்பட்டவை அல்ல, மாறாக படிமுறை ரீதியான பாலஸ்தீனிய மக்களை உடைமையற்றவராக்கும் நோக்கம் கொண்டது. ஷரோனும் அவரது வலதுசாரி சியோனிச கூட்டாளிகளும் ஒரு சுதந்திர பாலஸ்தீனிய நாட்டை உருவாக்கும் எந்த சாத்தியத்தையும் நிர்மூலமாக்க உறுதிகொண்டுள்ளனர் மற்றும் பாலஸ்தீனியரது நிலங்களில் இருந்து பெரும் திரளானோரை வெளியேற்றுவதன் மூலம் "அகன்ற இஸ்ரேல்" ஒன்றை அடைவதற்கு தொடர்ந்து தம்மை அர்ப்பணித்துக் கொண்டுள்ளனர்.

ஹைஃபா மீதான பயங்கர குண்டு வெடிப்புத் தாக்குதல் மற்றும் சிரியா மீதான இஸ்ரேலிய தாக்குதல் இரண்டும், ஈராக்கிற்கு எதிரான அதன் போர் அரபு- இஸ்ரேலிய மோதலுக்கான ஒரு அமைதி தீர்வுக்கான சூழ்நிலைமைகளை உண்டுபண்ணும் என்ற புஷ் நிர்வாகத்தின் கூற்றை கேலிக்கூத்தாக ஆக்கியுள்ளது. பேரழிவு ஆயுதங்கள் என்று கூறப்படுபவைபோல, பயங்கரவாதிகளுடன் உறவுகள் மற்றும் ஏனைய சாக்குப் போக்குகள் ஒரு சூறையாடும் காலனித்துவ போருக்காக கொடுக்கப்படும், இந்த நியாயப்படுத்தல்கள் அப்பட்டமான மோசடி என்பது நிரூப்பிக்கப்பட்டுள்ளது.

மாறாக, அமெரிக்காவின் வலியச்சென்று தாக்குதல், இஸ்ரேலை பாலஸ்தீனியர்கள் மீது ஈவிரக்கமற்ற நசுக்குதலை உக்கிரப்படுத்துவதற்கு துணிவூட்டி இருக்கிறது, இப்பொழுது பக்கத்து அரபுநாடுகள் மீது இராணுவ தாக்குதல் தொடுக்க வைத்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் அவையில் அதன் செயலை நியாயப்படுத்தி, சிரியா மீதான அதன் தாக்குதலைக் கண்டனம் செய்பவர்கள் "இரட்டை அளவுகோலைக் கொள்வதில்" ஈடுபடுகிறார்கள் என்று இஸ்ரேல் குற்றம் சாட்டியது. இந்த அமைப்பானது, மற்றவர்களுக்கு அந்த உரிமை மறுக்கப்படுகிறபோது, "பயங்கரவாதத்திற்கு எதிராக தங்களது குடிமக்களை பாதுகாக்க" சில நாடுகளை அனுமதிக்க முடியாது, என இஸ்ரேலிய தூதர் அறிவித்தார். இக்கூற்றானது, புஷ் நிர்வாகம் அரவணைக்கும் கருத்துருவான -ஈராக்கிற்கெதிரான அமெரிக்காவின் வலியத்தாக்கும் போர்-- இஸ்ரேலுக்கு எதுஎது பொருந்துகின்றது என்று பார்க்கின்றதோ அந்த இராணுவ நடவடிக்கைகளை எல்லாம் நியாயப்படுத்துவதற்கான ஒரு முன்னோடியாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

இஸ்ரேல், பாலஸ்தீனிய மக்களுக்கு அல்லது அதன் பக்கத்து நாடுகளுக்கு எதிராக என்ன குற்றங்களை இழைத்தாலும் அதைப்பற்றிப் பொருட்படுத்தாமல், இஸ்ரேலுக்கு வாஷிங்டனின் நிபந்தனை அற்ற ஆதரவு கொடுப்பது, அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லவும் கொல்லப்படுவதற்கும் இன்னொரு தூண்டப்படாத போருக்கு அனுப்பப்படுவர் என்ற நேரடி அச்சுறுத்தலை முன் வைக்கிறது.

புஷ் மற்றும் ஷரோன் இருவருமே மத்திய கிழக்கில் புதிய போர் நடவடிக்கையை உள்நாட்டில் பெருகி வரும் அரசியல், பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியிலிருந்து கவனத்தை திசைதிருப்பும் வழிமுறையாகப் பார்க்கின்றனர். இஸ்ரேலிய அரசு அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நிலையில், இந்த இராணுவ பாதையானது பூகோள பேரழிவிற்கான உண்மையான ஒரு அச்சுறுத்தலைதான் எடுத்துச்செல்கிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved