World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

The ties that bind: Dodd, Schumer and Wall Street

ஒன்று சேர்க்கும் இணைப்புகள்: டோட், ஷ்யுமர் மற்றும் வோல் ஸ்ட்ரீட்

By Barry Grey
24 September 2008

Back to screen version

வோல் ஸ்ட்ரீட்டை மீட்டெடுப்பதற்கான புஷ் நிர்வாகத்தின் திட்டம் மீது செவ்வாயன்று நடந்த அவை சாட்சிய கூட்டத்தில், கருவூல செயலாளர் ஹென்றி போல்சன் மற்றும் பெடரல் ரிசேர்வ் தலைவர் பென் பெர்னான்கே ஆகியோர் குறித்து செனட் வங்கி கமிட்டியின் உறுப்பினர்கள் காட்டிய பரிபூரண கரிசனத்தில் எந்தவித புதிரும் இல்லை.

அமெரிக்க மக்களின் நலன்களை பலியிட்டு நிதித்துறை மேல்தட்டினரை மீட்பதற்கு இவர்கள் எல்லோருக்குமே அக்கறை இருக்கிறது - தனிப்பட்ட வகையிலோ, நிதித்துறை ரீதியாகவோ அதே போல் அரசியல் ரீதியாகவோ. இது பொருந்துவதில் குடியரசுக் கட்சியினருக்கு எந்தவிதத்திலும் ஜனநாயகக் கட்சியினர் சளைத்தவர்களல்ல.

செனட்டின் 100 உறுப்பினர்களில் சுமார் பாதிப்பேர் 2006ல் சராசரி மதிப்பாக சுமார் 8.9 மில்லியன் டாலர் சொத்துடன் இலட்சாதிபதிகளாக இருந்தவர்கள் என்கிறது பொறுப்பான அரசியலுக்கான மையம் (Center for Responsive Politics (CPR)) என்கிற அரசியல் அமைப்பு.

வங்கி கமிட்டியில் இருக்கும் ஜனநாயகக் கட்சியின் இரண்டு முன்னணி உறுப்பினர்கள் - கனெக்டிகடை சேர்ந்த தலைவர் கிரிஸ்டோபர் டோட் மற்றும் நியூயோர்க்கின் சார்லஸ் ஷ்யுமர் - வோல் ஸ்ட்ரீட் பெரு நலன்களிடம் இருந்து பிரச்சார நிதி பெறுவதில் பெரும் சாதகத்தை பெற்றவர்களாக இருக்கிறார்கள்.

செனட்டர் ஷ்யுமர் 2003-2008 தேர்தல் சுற்றில் 12,928,000 டாலர் தொகையை திரட்டியதாக CPR தெரிவிக்கிறது. நிதிப் பிரச்சாரத்திற்கான அவரது முன்னணி ஐந்து துறைகள் பங்குகள் மற்றும் முதலீடு, வழக்கறிஞர்கள் மற்றும் வழக்காடும் நிறுவனங்கள், ரியல் எஸ்டேட், இதர நிதி மற்றும் வர்த்தக வங்கிகள் ஆகியவை. இவற்றின் மூலம் அவர் மொத்தம் 3,937,000 டாலர் தொகையை திரட்டியிருக்கிறார். அவருக்கு நிதியளித்ததில் முன்னணி பங்களிப்பு செய்த ஐந்து நிறுவனங்கள் Citigroup, UBS, Paul Weiss et al, Kasowitz, Benson et al and Metlife ஆகியவை. இவையெல்லாம் இவரது பிரச்சாரத்திற்கு மொத்தம் 271,000 டாலர் தொகையை அளித்திருக்கின்றன.

செனட்டர் டோட் தனது அரசியல் வாழ்க்கை பாதையில், 43,344,000 டாலர் தொகையை திரட்டியிருக்கிறார். 2003-2008 தேர்தல் சுற்றில் பிரச்சார நிதியில் அவரது முதன்மை ஐந்து துறைகளாக இருந்தவை பங்குகள் மற்றும் முதலீடு (4,268,000 டாலர்), வழக்கறிஞர்கள் மற்றும் வழக்காடு நிறுவனங்கள், காப்பீடு, ரியல் எஸ்டேட் மற்றும் வர்த்தக வங்கிகள் ஆகியவை, திரட்டிய தொகை மொத்தம் 9,826,000 டாலர். அவருக்கு நிதியளித்ததில் முதன்மை ஐந்து நிறுவனங்களாவன: Citigroup, SAC Capital Partners, United Technologies, Royal Bank of Scotland மற்றும் காப்பீடு துறையின் பெருநிறுவனமான American International Group (இது இந்த மாத தொடக்கத்தில் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டது). இந்த நிறுவனங்களில் இருந்தான அவரின் மொத்த திரட்டல் 1,315,000 டாலர் ஆகும்.

குறைந்த பிணை கடன் பாதிப்பால் பாதிப்புற்ற வீட்டுமனை உரிமையாளர்களில் தானே ஒருவர் தான் என்பது போல் காட்டிக் கொள்கின்ற டோட் இந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் குறைந்த பிணை வீட்டுவசதி கடனளிக்கும் நிறுவனங்களான Countrywide Financial போன்ற மிகப்பெரும் நிறுவனங்களுக்கு உதவும் வகையிலான ஒரு வீட்டு வசதி மசோதாவை முன்மொழிந்தார். பொறிவின் விளிம்பில் இருந்த Country wide பாங்க் ஆஃப் அமெரிக்காவால் இந்த ஆண்டில் வாங்கப்பட்டது.

2003ல் வாஷிங்டன் மற்றும் கனெக்டடில் இருக்கும் தனது வீடுகளுக்கு Countrywide மூலம் டோட் மறுகடனுதவி பெற்றார் என்றும் "Friends of Angelo" (தலைமை நிர்வாக அதிகாரி ஏஞ்சலோ மொசிலோவின் பேரினாலானது) திட்டத்தின் கீழ் இடம்பெற்றிருந்ததால் சந்தை விலைக்கும் குறைவாகவே பெற்றார் என்றும் Condé Nast Portfolio தெரிவித்தது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved