World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா 

Paulson warns: No limits on CEO pay

தலைமை நிர்வாக அதிகாரிகள் ஊதியத்திற்கு வரம்புகள் கிடையாது: போல்சன் எச்சரிக்கை விடுக்கிறார்

By Barry Grey
23 September 2008

Back to screen version

"Fox News Sunday" நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க நிதி மந்திரி ஹென்ரி போல்சன், புஷ் நிர்வாகத்தின் திட்டமான பெருமளவிலான வரி செலுத்துவோர் பணத்தை கொண்டு சக்தி வாய்ந்த வங்கிகள் மற்றும் நிதிய அமைப்புக்களை காப்பாற்றுவது என்பதில், இத்தகைய அரசாங்க உதவியை பெறும் நிறுவனங்களின் தலமை நிர்வாக அதிகாரிகளின் ஊதியம் வரம்பிற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பது உட்பட்ட சில ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினரின் முன்மொழிவுகளை நிராகரித்தார்.

சொந்த செல்வம் $700 மில்லியனாக இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ள, Godman Sachs என்னும் அமைப்பின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) இருந்த போல்சன் அத்தகைய விதியை திட்டத்தில் சேர்ப்பது வங்கிகள் வேலைத்திட்டத்தில் பங்குகொள்ள மறுக்க கூடிய நிலையை ஏற்படுத்தலாம் என்று அவர் வாதிட்டார்.

திங்களன்று நியூ யோர்க் டைம்ஸ் தகவல் கொடுத்தது: "திட்டத்தில் பங்கு பெறும் நிறுவனங்கள் நிர்வாகிகளுக்கு இழப்பீட்டுத் தொகையில் வரம்புகள் வைத்தால் அது பங்கு பெறாமல் போகும் நிலை ஏற்படக்கூடும் என்ற கவலையை திரு போல்சன் தெரிவித்தார்."

"அப்படி வடிவமைத்தால் அது தண்டனை என்று ஆகும்; அதையொட்டி நிறுவனங்கள் பங்கு பெறாவிட்டால், நாம் திட்டத்தை செயல்படுத்த விரும்புவது போல் செயல்படுத்த முடியாமல் போகும்."

உலக வரலாற்றிலேயே அதிகமான அளவில் மிகப் பெரிய நிறுவனங்கள் தப்பிப் பிழைப்பதற்கு பணம் கொடுக்க வேண்டும் என்று தொழிலாளர்களிடம் கூறும் இரு கட்சிகளும் --கிட்டத்தட்ட 700 பில்லியன் டாலர் என்று அரசாங்க மதிப்பீடு உள்ளது; இதுவே திட்டத்தின் உண்மை செலவை விட மிகக் குறைந்த மதிப்பீடு ஆகும்-- போல்சனின் அறிக்கைகளுடைய உட்குறிப்புக்களை ஆராய வேண்டும்.

இவர், ஜனாதிபதி புஷ் இன்னும் இரு கட்சிகளிலும் உள்ள பிற அரசியல் புள்ளிகள் விரைவில் சட்டமன்றம் தப்பிப் பிழைக்கும் திட்டத்தை இயற்றுவது 1930 களில் இருந்த பெருமந்த நிலை போன்ற பெரும் அழிவைக் கொடுக்கக்கூடிய ஒரு பொருளாதார மற்றும் சமூகப் பேரழிவைத் தவிர்க்க முக்கியமானது என்று வலியுறுத்துகின்றனர். இப்பொழுது விவாதிக்க, ஆராய, சிந்திக்கக்கூட நேரம் இல்லை என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

அனைவரும் கூறும் மந்திரம் அனைத்து அமெரிக்கர்களும் தங்கள் கட்சி வேறுபாடுகள், தனிப்பட்ட நலன் வேறுபாடுகள் இவற்றை ஒதுக்கி வைத்து "ஒன்றாக வரவேண்டும்", பொது நலனுக்காக "தியாகம்" செய்யும் தேவையை ஏற்க வேண்டும் என்பதாகும்; அதாவது இந்த பொது நலன் வோல் ஸ்ட்ரீட் மற்றும் பலமில்லியன், பில்லியன் உரிமையாளர்கள் என அதைக் கட்டுப்படுத்துபவர்களின் நலன்களோடு இயைந்து உள்ளது.

ஆனால் தன்னுடைய வார இறுதி தொலைக்காட்சித் தோற்றத்தில் சமூகத்தில் ஒரு பிரிவு ஒரு பத்துகாசு கூட தியாகம் செய்யத் தயாரில்லை என்பதை உட்குறிப்பாக ஒப்புக் கொண்டுள்ளார்; அதேபோல் மாற்றீடு அதன் ஏழு அல்லது எட்டு இலக்க ஊதியத் தொகுப்பில் சிறிது குறைந்தாலும் நாட்டை பெருமந்த நிலையில் ஆழ்த்தவும் அது தயங்காது என்பதையும் உட்குறிப்பாக ஒப்புக் கொண்டார்.

இவருடைய விருப்பத்தையும் மீறி போல்சனுடைய கருத்துக்கள் தேசிய சொத்தை வோல் ஸ்ட்ரீட்டின் காலடியில் வைப்பது என்பது அமெரிக்க மக்களுடைய நலனுக்காக எனக் கூறப்படுவது முழு மோசடி என்பதை நிரூபிக்கிறது. இவருடைய கருத்துக்கள் அமெரிக் சமூகம் பற்றிய அடிப்படை உண்மையை நன்கு வெளிப்படுத்துகின்றன. மக்களில் பெரும்பாலனவர்களுடைய நலன்கள் முற்றிலும் இந்த பணப்பைத்தியம் பிடித்த நிதிய தன்னலப் பிரபுக் குழுவின் தேவைகளுக்கு தாழ்த்தப்படுகிறது.

பெரும் செல்வந்தர் குழு விரும்புவதை கேட்டுப் பெறுகிறது. பொதுக் கொள்களைகளை அவர்கள் நிர்ணயிக்கின்றனர். அரசாங்கம் எடுக்கும் அனைத்து முடிவுகளை பற்றியும் அவர்கள் தடுப்பதிகாரம் செலுத்துகின்றனர்; இறுதிப் பகுப்பாய்வில் இவர்களுடைய குறுகிய சமூக அழிப்பு நலன்களை முன்னேற்றுவிக்கும், மற்றும் பாதுகாக்கும் கருவியாகவும்தான் அரசாங்கம் செயல்படுகிறது.

இடைவிடாமல் தேசப்பற்று பற்றி பேசுதல் என்பது பொதுமக்கள் நன்கு நினைக்க வேண்டும் என்பதற்காக; இது மக்களை அமெரிக்காவில் மேலாதிக்கம் செலுத்தும் வர்க்க உறவுகளில் ஒன்றாகப் பிணைத்துவிடும்.

தலைமை நிர்வாகியின் ஊதியம் பற்றிய போல்ஸனின் சொந்த அறிக்கைகளில் இருந்து கிடைக்கும் தர்க்கம் இந்நாடு எதிர்கொண்டிருக்கும் மிகப் பெரிய பிரச்சினை இவர் பாதுகாத்து உருவகமாகி நிற்கும் வர்க்கம்தான் --அதாவது அமெரிக்க முதலாளித்துவ வர்க்கம். தொழிலாள வர்க்கம் புரட்சிகரமாக, சுயாதீன அரசியல் வகையில் திரட்டப்படுவது ஒன்றுதான் இந்த நெருக்கடிக்கு பகுத்தறிவார்ந்த, ஜனநாயக முறையிலான தீர்விற்கு முன்னிபந்தனை ஆகும். 


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved