World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Obama touts economic "recovery"

ஒபாமா பொருளாதார "மீட்சி" வந்துவிட்டது என்று கட்டியம் கூறுகிறார்

Tom Eley and Barry Grey
3 August 2009

Back to screen version

இரண்டாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) புள்ளிவிவரங்களை ஆதாரமாக கொண்டு ஒபாமா நிர்வாகமும் செய்தி ஊடகமும் மந்த நிலை முடிந்து கொண்டிருக்கிறது, "மீட்சி": வந்துகொண்டிருக்கிறது என்ற கருத்தை முன்வைக்கின்றனர். Newsweek உடைய தற்போதைய பதிப்பின் அட்டைப்படம் "மந்தநிலை முடிந்துவிட்டது!' என்ற தலைப்பில் வெளிவந்துள்ளதில் இத்தகைய முயற்சி சுருக்கமாக கூறப்படுகிறது.

மந்தநிலை முடிந்துகொண்டிருக்கிறது என்னும் கூற்று பணிநீக்கங்கள், ஊதியக் குறைப்புக்கள், வீடுகள் ஏலத்திற்கு விடப்படல், அடிப்படை சமூகசேவைகள் குறைக்கப்படுதல் மற்றும் முன்னோடியில்லாத வகையில் Medicare, சமூக பாதுகாப்பு திட்டங்கள் மீதான தாக்குல்கள் வங்கிகள் பிணை எடுப்பிற்காக கொடுக்கப்பட்ட பல டிரில்லியன் டாலருக்கு ஈடுகட்ட நடத்தப்படுதல் ஆகியவற்றால் பேரழிவிற்கு உட்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு எவ்விதமான தீவிர விடுதலையளிப்பதையும் மறுப்பதற்குத்தான் பயன்படுத்தப்படுகிறது.

வெள்ளியன்று, வணிகத் துறை மொத்த உள்நாட்டு உற்பத்தி ஏப்ரல் முதல் ஜூலையில் பொருளாதார வல்லுனர்கள் கணித்திருந்த 1.5 என்பதைவிட 1 சதவிகிதம் சரிந்துள்ளது என்று அறிவித்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்ச்சியான நான்காம் காலாண்டில் இத்தகைய மந்தநிலையை 1940 களுக்கு பின்னர் சந்திக்கிறது.

வணிகத்துறை 2009 முதல் காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பற்றி முதலில் அது குறிப்பிட்டிருந்த 5.5 சரிவில் இருந்து 6.4 சதவிகிதம் என்று தீவிரமாக அதன் மதிப்பீட்டை திருத்தியது. 2008 ஆண்டு முழுவதற்கும் +1.1 என்பதில் இருந்து -0.4 என்றும் திருத்தியது.

முதல் காலாண்டில் பொருளாதார நடவடிக்கையில் சரிவு குறைந்துவிட்டது என்று அறிக்கை காட்டும்போது கட்டிடங்கள், கருவிகள், மென்பொருட்கள் ஆகியவற்றின் மீதான செலவினங்களை வியாபாரத்தில் ஏப்ரல் முதல் ஜூலை வரை 8.9 சதவிகிதம் குறைத்தன. இது இன்னும் கூடுதலான பெரும் பணிநீக்கங்கள் மற்றும் வேலையின்மையில் உயர்வு என்பதை கொண்டுவரும்.

பொருளாதார நெருக்கடியின் பாதிப்பு சாதாரண அமெரிக்கர்கள் மீது ஆழ்ந்துள்ளது என்பதையும் அது காட்டுகிறது. தனிப்பட் நுகர்வுச் செலவுகள் இக்காலாண்டில் 1.2 சதவிகிதம் குறைந்தது. இது எதிர்பார்த்த சரிவு விகிதத்தைவிட இருமடங்காகும். நீடித்து உழைக்கும் பாவனைப்பொருட்கள் வாங்குவது 2.5 சதவிகிதம் குறைந்துவிட்டது.

ஞாயிறன்று நியூ யோர்க் டைம்ஸ் மக்களின் பிரிவுகள் பெருகிய முறையில் வறிய நிலை அடைவது ஒரு குறியீட்டின் மூலம் காட்டியது. பல்லாயிரக்கணக்கான பணிநீக்கம் பெற்ற தொழிலாளர்கள் ஏற்கனவே தங்கள் மிகக் குறைந்த வேலையின்மை நலன்களான சராசரியாக வாரத்திற்கு $300 செலவு செய்துவிட்டனர். இன்னும் அரை மில்லியன் மக்கள் அடுத்த மாத இறுதிக்குள் செல்வழித்துவிடுவர். மற்றும் 1.5 மில்லியன் ஆண்டு இறுதிக்குள் செலவழித்துவிடுவர்.

ஆயினும்கூட, ஒபாமா தன்னுடைய சனிக்கிழமை வாரந்திர உரையை மொத்த உள்நாட்டு உற்பத்தி புள்ளிவிவரங்கள் அவருடைய பொருளாதாரக் கொள்கைகளை சரியெனக் காட்டுகிறது என்று பாராட்ட பயன்படுத்திக் கொண்டார். அவருடைய ஊக்கப் பொதிகளும், அவருடைய "மற்ற கடினமாக, முக்கியமான நடவடிக்கைகளும்", "இந்த மந்தநிலையை தடுத்துவிட்டன" என்றார்.

"பொறுப்பான வீட்டு உரிமையாளர்கள் முன்கூட்டி வீடுகளை ஏலத்திற்கு விடாமல் தங்கள் வீடுகளில் இருக்கவும் அடைமானங்களை கொடுக்கவும், நாங்கள் முன்னோடியில்லாத நடவடிக்கைகளை எடுத்தோம். கடன் சந்தைகள் புதுப்பிக்க உதவினோம். குடும்பங்களுக்கும் சிறு வணிகங்களுக்கும் கடன்கள் திறந்துவிடப்பட உதவினோம். ஒரு மீட்பு சட்டத்தை கொண்டுவந்து.... திணறிக் கொண்டிருக்கும் மாநிலங்கள் ஆசிரியர்கள், போலீஸ் அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்வதைத் தடுக்கும் விதத்தில் உதவினோம். மீண்டும் சாலைகள், பாலங்கள், பள்ளிகள், மருத்துவமனைகளை புதுப்பிக்க, மறுகட்டமைக்க உதவியதின் மூலம் மக்களை வேலைக்கு பழையபடி செல்ல உதவினோம்." என்று அவர் தொடர்ந்து கூறினார்.

எந்த நாட்டைப் பற்றி ஒபாமா பேசிக் கொண்டிருக்கிறார் என்பது பற்றி வியப்பு அடைய வேண்டியதாக உள்ளது. மாநில மற்றும் நகராட்சி நிர்வாகங்கள் பெரும் வேலைக்குறைப்புக்கள் மற்றும் சமூகநலத் திட்டங்கள் செலவினக் குறைப்புக்களை செய்து தற்கால வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு முடக்கும் வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறைகளை சரி செய்ய வேண்டியுள்ளது. இந்த வாரம் வந்துள்ள புதிய தவகல்கள் பிணை எடுப்பு நடத்தப்பட்ட வங்கிகள் தொடர்ந்து நுகர்வோருக்கு கடன் கொடுக்க மறுத்து ஆண்டு தொடக்கத்தில் இருந்ததைவிட பணத்தை சேமித்து வைத்துக் கொண்டிருப்பதைக் காட்டுகின்றன. "பொறுப்பான" வீடுகள் உரிமையாளர்களுக்கு உதவுதல் என்பதைப் பொறுத்தவரையில், இந்த ஆண்டு முதல் ஆறு மாதங்களில் ஏலத்திற்குவிடப்படல் மிக அதிக அளவான 1.5 மில்லியனை தொட்டுள்ளன.

இவருடைய கொள்கைகள் வெற்றிபெற்றதாக ஒபாமா தெரிவிப்பது, ஐயத்திற்கு இடமின்றி இலாபமுறைக்கு இவர் கொடுத்த ஆதரவும், வணிகங்களை அவற்றின் சுகாதார பாதுகாப்பில் தொழிலாளர்களுக்கு கொண்டிருந்த பங்கிலிருந்து விடுபட்டுக்கொணட்திலும்தான் காணப்படுகிறது. இதுதான் அவருடைய சுகாதார பாதுகாப்புத் திட்டங்களின் அடித்தளத்தில் இருந்த நோக்கம் என்பது "தொழில்வழங்குனர்கள் புதிய கண்டுபிடிப்புகளில் முதலிடவும், மிக அதிகமாகியுள்ள காப்பீட்டுச் செலவினங்கள் சுமத்ததாதது, போட்டியில்லாமல் இயங்க ஒரு சுகாதாரத் திட்டத்தை புதிதாகக் கண்டுபடிக்க உதவுதல்" என்ற அழைப்பின் மூலம் நன்கு தெளிவாகிறது.

இதே கருத்துக்கள்தான் மீண்டும் மீண்டும் உயர்மட்ட நிர்வாக பொருளாதார அதிகாரிகளால் அடிக்கோடிட்டு காட்டப்படுகின்றன; ஞாயிறு தொலைக்காட்சி உரையாடல் நிகழ்வுகளில் இதைத்தான் அவர்கள் கூறுகின்றனர். வெள்ளை மாளிகையின் தேசிய பொருளாதார குழுவின் இயக்குனரான லோரன்ஸ் சம்மர்ஸ் NBS உடைய "Meet the Press", மற்றும் CBS உடைய "Face the Nation" இரண்டிலும் தோன்றினார்; நிதி மந்திரி டிமோதி கீத்னர் ABC யுடைய "This Week with George Stephanopoulos" நிகழ்ச்சியில் தோன்றினார்; அவரைத் தொடர்ந்து முன்னாள் மத்திய வங்கிக்கூட்டமைப்பு தலைவர் கிரீன்ஸ்பானும் பேசினார்.

சம்மர்ஸ், கீத்னர் மற்றும் கிரீன்ஸ்பான் ஆகியோர் அனைவரும் வங்களிகளை மீட்டதில் அரசாங்கத்தின் "வெற்றியை" பாராட்டினர்; பிந்தைய இருவரும் ஜூலை மாதத்தில் பங்குகள் விலைகள் தீவிரமாக உயர்ந்ததை மந்த நிலை முடிவிற்கு ஒரு சான்றாக சுட்டிக் காட்டினர். பெருநிறுவன உயரடுக்கிற்கு உறுதியளிக்க கீத்னர் முற்பட்டு நிர்வாகம் "தனியார் துறைத் தலைமையில் மீட்பை" நாடுகிறது என்று வலியுறுத்தினார்.

அவருடைய சனிக்கிழமை உரையில் ஒபாமாவோ, ஞாயிறு உரையாடல் நிகழ்ச்சிகளில் அவருடைய பொருளாதார அதிகாரிகளோ கடந்த வியாழனன்று நியூ யோர்க்கின் தலைமை அரசாங்க வக்கீல் ஆண்ட்ரூ க்யூமோ வெளியிட்ட அறிக்கை பற்றி ஏதும் கூறவில்லை; அதில் மொத்தமாக $175 பில்லியன் அரசாங்க ரொக்கத்தை கடந்த ஆண்டு பெற்ற ஒன்பது முக்கிய வங்கிகள் கிட்டத்தட்ட $33 பில்லியனை மேலதிக கொடுப்பனவாக கொடுத்துள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

சம்மர்ஸும் கீத்நரும் மீட்பு எனக் கூறப்படுவதின் பொருள் சாதாரண வேலையின்மை தரத்திற்கு மீண்டும் வந்துவிடுவோம் என்ற எதிர்பார்ப்புக்களை குறைக்கும் விதத்தில் சிரமப்பட்டு கருத்துக்களைக் கூறினர். "Meet the Press" ல் பேசிய சம்மர்ஸ் "வேலைகள் பற்றிய நிலைமை இன்னும் நீண்ட காலத்திற்கு தீவிரமாகத்தான் இருக்கும்" என்று எச்சரித்தார். ஆயினும்கூட நிர்வாகம் ஒரு இரண்டாம் ஊக்கப்பொதிக்கான திட்டத்தை கொண்டிருக்கவில்லை என்று சம்மர்ஸ் சொன்னார்.

மாறாக அவரும் கீத்நரும் "நடுத்தரக்காலம்", "சமூக நலன்களின் வேதனை தரும் வெட்டுக்கள்" ஆகியவற்றின் தேவைபற்றி வலியுறுத்தினர். ஒபாமாவின் சுகாதாரப் பாதுகாப்பு செலவினக் குறைப்புக்கள் ஒரு துவக்கம்தான் என்பதை அவர்கள் தெளிவுபடுத்தினர்.

நாடு மீண்டும் "எமது வருவாய்க்குள் வாழவேண்டும்" என்று வருவதற்கு "கடினமான விருப்புரிமைகளைக் கொள்ள வேண்டும்" என்று கீத்னர் கூறினார்; இதில் "சுகாதாரப் பாதுகாப்பு சீர்திருத்தம் மட்டும்" தொடர்பு கொண்டிருக்கவில்லை, "பல மற்ற விஷயங்களும் உள்ளன" என்றார். உயரும் வரவுசெலவுத் திட்ட பற்றாக்குறைகளை சமாளிப்பதற்கு, "நீங்கள் ....சுகாதார பாதுகாப்பை கவனிக்க வேண்டும்..... கொடுக்கப்பட்டுவரும் சலுகைகளை கவனிக்க வேண்டும்" என்றார்.

கிரீன்ஸ்பான் இன்னும் அப்பட்டமாக பேசினார்; "பற்றாக்குறை பிரச்சினையின் மையத்தில்" இருப்பது மருத்துவ பாதுகாப்பு என்றும் ஒபாமாவின் சிக்கன நடவடிக்கை "போதுமானது இல்லை" என்றும் அறிவித்தார். அவர் மேலும் கூறியது: "மிக முக்கியமான கூடுதல் நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன." Stephanpoulos ஆல் ஊக்கப்படுத்தப்பட்டபோது, அவர் வரிப்பிரிவில் ஒரு மதிப்புவரிக்கு (value-added tax) தான் ஆதரவு கொடுப்பதாக, அதாவது தொழிலாள வர்க்கத்தின் தலையில் பொருத்தமற்றவிகிதத்திற்கு அதிகமாக விழும் கடுமையான வரி வேண்டும் எனகூறினார்.

இத்தகைய கருத்துக்கள் சமூகப் பாதுகாப்பு, பெருமந்த காலத்தில் இருந்து ஓய்வுபெற்றவர்களுக்கு கூட்டாட்சி திட்டம் உதவியாக இருப்பதின் மீதான முன்னோடியில்லாத தாக்குதலுக்குத்தான் வழிவகுக்கின்றன; ஞாயிற்றுக் கிழமை வாஷங்டன் போஸ்ட் வலைத் தளத்தில் வந்துள்ள இரு கட்டுரைகள் அதைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. "Don't Expect Retirement Help" (ஓய்வூதிய உதவியை எதிர்பார்க்காதீர்கள்) என்ற தலைப்பில் வந்த கட்டுரை அறிவிப்பது: "சமூக பாதுகாப்பு முறை நலன்கள் பெரும் வெட்டுக்களை எதிர்பார்க்கக்கூடிய நிலையில், ஓய்வூதிய சேமிப்புக்கள் தகர்க்கப்பட்டுவிட்ட மில்லியன் கணக்கானவர்களுக்கு, Uncle Sam அதிகம் உதவமாட்டார்." மற்றொரு கட்டுரை பெரும் அச்சத்தைக் கொடுக்கக்கூடிய வகையில், "ஒரு நலிந்த நம்பிக்கை: எதற்காக சமூக பாதுகாப்பு திட்டங்கள் முக்கிய திருத்தங்களை கொள்ள வேண்டும்" என்ற தலைப்பை கொண்டிருந்தது.

ஒபாமா, கீத்னர், சம்மர்ஸ், கிரீன்ஸ்பான் மற்றும் உரையாடல் நிகழ்வுத் தொகுப்பாளர்கள் அனைவரும் பல மில்லியன் சொத்து உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் கூறும் "கடின விருப்புரிமைகள்" என்பது அவர்களுடைய வாழ்க்கையை சிறிதும் பாதிக்காதவை. ஒபாமா முதல் அவர்கள் அனைவரும் அவர்களுடைய சிறிதும் பொருட்படுத்தாத் தன்மை, இரக்கமற்ற குணம் இவற்றை வெளிப்படுத்துவது மட்டும் இல்லாமல், தாங்கள் பாதுகாக்கும் ஆளும் வர்க்கத்தின் அத்தகைய தன்மையையும் வெளிப்படுத்துகின்றனர். பரந்த மக்களின் இழப்பில் நடக்கும் செல்வந்தர்களுடையது பொருளாதார "மீட்சி" பற்றிய அவர்கள் பாராட்டு ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். ஒபாமா நிர்வாகத்தின் அனைத்துக் கொள்கைகளும் நாட்டின் சமூக மற்றும் அரசியில் வாழ்வின் மீது நடைமுறை சர்வாதிகாரம் கொண்டிருக்கும் ஒரு நிதிய பிரபுத்துவத்தின் நலன்களை பாதுகாப்பதில்தான் குவிப்புக் காட்டுகிறது. இப்பொழுது வங்கியாளர்கள் ஏற்படுத்திய நெருக்கடி நிரந்தரமாக தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரத்திலும் சமூக நிலையிலும் குறைப்பை ஏற்படுத்தத்தான் பயன்படுத்தப்படுகிறது.

2008க்கு உடைவிற்கு முன்னர் இருந்த ஏற்கனவே குறைந்துவிட்ட ஊதியத்தரங்கள் மற்றும் அற்ப சமூக நலன்கள் என்ற நிலைக்கு மீண்டும் திரும்ப முடியாது. மாறாக கீழிருந்து மேல்மட்டத்த்திற்கு கூடுதலான செல்வ மறுபங்கீடு கடந்த சமூக நலன்களில் எஞ்சியிருப்பதை தகர்த்தல் மற்றும் தொழிலாள வர்க்கத்தை மகத்தான முறையில் சுரண்டுவது தீவிரப்படுத்தபடுதல் என்ற விதத்தில் நடத்தப்படும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved