World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Britain: Unemployment continues rise to 2.4 million

பிரிட்டன்; வேலையின்மை 2.4 மில்லியன் வரை தொடர்ந்து உயர்ந்துள்ளது

By Peter Reydt
25 July 2009

Back to screen version

உலகப் பொருளாதார மந்தநிலை ஒன்றும் பெரும் ஆழ்ந்த தன்மை கொண்டிருக்கவில்லை, ஒரு மீட்பு ஏற்கனவே தொடங்கிவிட்டது என்ற கருத்தை தொழிலாளர்கள் நம்புமாறு செய்வதற்கு செய்தி ஊடகத்தின் முயற்சி சிறிதும் தளர்ச்சி அடையவில்லை. ஆனால் புதிய பொருளாதார புள்ளிவிவரங்கள் இதற்கு மாறாக உள்ள நிலையைத்தான் நிரூபிக்கின்றன. மந்த நிலையின் சமூக பாதிப்பு இப்பொழுதுதான் மக்களுடைய வாழ்வில் குறுக்கிட்டு தனது வேலையை செய்யத்தொடங்கியுள்ளது.

தேசிய புள்ளி விவரங்கள் அலுவலகம் இம்மாதம் இங்கிலாந்தின் வேலையின்மை மே வரையிலான மூன்று மாதத்தில் 281,000 இனால் முன்னொருபோதுமில்லாதவாறு மிகஅதிகரித்து 2.38 மில்லியனை அடைந்துள்ளதாக அறிவித்துள்ளது. வேலையின்மை விகிதம் இப்பொழுது 7.6 சதவிகிதம் என்று உள்ளது; வேலையின்மை நலன்களை பெறும் மக்களின் எண்ணிக்கை ஜூன் மாதத்தில் 1.56 மில்லியன் என்று 23,800 பேரினால் கூடுதலாக உயர்ந்தது.

இப்பொழுது பகுதி நேரத் தொழிலாளர்கள் 927,000 பேர் உள்ளனர். கிடைக்கும் வேலைகளுக்கான போட்டி பெருகுகையில், தொழிலாளர்கள் பகுதிநேர வேலையானாலும் கிடைப்பதை செய்யத் தொடங்கியுள்ளனர். British Airways போன்ற நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வேலைநேரத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் அல்லது ஊதியமற்ற விடுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றன. பகுதி நேரத் தொழிலாளர்களில் 12.5 சதவிகிதத்தினர் விருப்பமின்றியே குறைந்த மணி நேர வேலையைச் செய்கின்றனர்.

அப்படியும் வேலையின்மை 1980களில் இருந்து எப்பொழுதும் இருந்ததைக் காட்டிலும் வேகமாக உயர்ந்து வருகிறது. பல பொருளாதார நிபுணர்களும் இது 2010ல் மூன்று மில்லியனை தாண்டிவிடும் என்று கணித்துள்ளனர்.

வேலை இழப்புக்கள், ஆள்குறைப்புக்கள் மற்றும் ஆலை மூடல்கள் என்று கீழே பட்டியல் உள்ளது. இது BBC இன் வேலைகள் ஆய்வை அடிப்படையாக கொண்டது (http://news.bbc.co.uk/1/hi/business/8078914.stm). மொத்த வேலை இழப்புக்கள் பற்றி ஒரு விரிவான பட்டியில் இது என எடுத்துக் கொள்ள வேண்டாம். இங்கிலாந்தில் ஜூன் 10 முதல் ஜூலை 11 வரை பொதுவாக இருக்கும் நிலை பற்றி ஒரு காட்சியை அளிக்கிறது. இந்த இழப்புக்களில் பெரும்பாலானவை செய்தி ஊடகத்தில் குறிப்பு பெறவில்லை.

எஃகுத் தயாரிப்பாளர் Corus எண்ணிக்கை அதிகம் எனக் கருதப்பட்டு நீக்குபடுபவர்கள் பற்றி புது அறிவிப்பை கொடுத்துள்ளது. இங்கிலாந்தில் Teeside, Scunthorpe, Rotherham ஆகிய இடங்களில் உள்ள ஆலைகளும் கிட்டத்தட்ட 2,000 வேலைகள் இதில் அடங்கும்.

TeesideTM Dow Chemical Company அதன் ethylene oxide, glycol ஆலைகளை மூடுவதாக அறிவித்துள்ளது; மற்றொரு இரசாயன நிறுவனமான Croda International Plc. தனது Wilton நிறுவனத்தை மூடக்கூடும் என்று அறித்துள்ளது இதில் 200 வேலைகள் பாதிப்பிற்கு உட்படும்.

கார்த்தயாரிப்பாளர் Jaguar-Land Rover Midlands, Merseyside ஆகிய இடங்களில் உள்ள அதன் ஆலைகளில் இன்னும் வேலை இழப்புக்கள் வரக்கூடும் என்று எச்சரித்துள்ளது.

இவை அனைத்தும் பனிப்பாறையின் ஆரம்ப வெடிப்புத்தான். இங்கிலாந்து முழுவதும், தெற்கே ஜெர்சியில் இருந்து வடக்கே ஹெப்ரைட்ஸ் வரை பாதிப்பிற்கு உட்பட்டுள்ளது. மிக அதிகம் பின்தங்கிய நிலை என்பதால், ஐரோப்பிய ஒன்றிய உதவிக்கு தகுதி கொண்டுள்ள நான்கு இங்கிலாந்து பகுதிகளில் ஒன்றான Cornwall பல தொடர்ச்சியான பணிநீக்கங்களை சந்தித்துள்ளது. இவற்றில் Redruthல் அச்சுநிறுவனமான Century Litho வில் நீக்கப்பட்ட 60 தொழிலாளர்களும் அடங்குவர். இது திவால் நிர்வாகத்தின் கண்காணிப்பில் உள்ளது. RedruthTM Pall Corporation ம் அடங்கும்; அது கப்பல்கள், விமானங்கள் மற்றும் வணிக வண்டிகள் தொழில்துறைக்கு சிறப்பான வடிகட்டும் கருவிகளை தயாரிக்கிறது. இங்கு 14 வேலைகள் இல்லாதொழிக்கப்பட்டன.

மத்திய Cornwall பகுதியில் Par என்ற இடத்தில் உள்ள இயந்திர உற்பத்தி நிறுவனமான Kemutecல் 49 ஊழியர்கள், கூடுதல் பணியாளர்கள் என்று அகற்றப்பட்டனர். CornwallTM St.Colum ல் மின்னியல் கருவிகள் தயாரிப்பு நிறுவனமான Infoteam International ல் 80 ஊழியர்களுக்கு மேல் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இரவு பணி தொழிலாளர்கள் பணிக்கு வந்தவுடன் தங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்டு இடத்தை விட்டு நீங்குமாறு உத்தரவிடப்பட்டனர்.

இங்கிலாந்தின் தெற்குப் பகுதியில் சிலிகான் சிப் தயாரிக்கும் Plymouthல் உள்ள X-Fab அதன் உற்பத்திப் பிரிவுகளில் ஒன்றை நிறுத்தி, 65 வேலைகளை தகர்க்க உள்ளது.

Swindon இல், மின்னணுக்கருவிகள் உற்பத்தி செய்யும் Plus Semi மேலதிகமாக இருக்கும் 85 பேரை அகற்ற இருப்பதாகக் கூறியுள்ளது.

Axa PPP Healthcare என்று Kent ஐ தளமாகக் கொண்ட நிறுவனம் மூத்த நிர்வாக அதிகாரிகளுக்கு கூடுதல் ஊதியம் இல்லாமல் வேலைநேரத்தில் கட்டாயமாக 7.15 சதவிகிதம் அதிகரிக்க இருப்பதாகக் கூறியுள்ளது. மற்ற தொழிலாளர்கள் இதே போல் வேலைநேரத்தில் அதிகரிப்பு அல்லது 5 சதவிகித ஊதியக் குறைவு அல்லது ஆண்டு மேலதிக கொடுப்பனவில் 50 சதவிகிதக் குறைப்பு என்று ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு முன்னணியில் இருக்கும் உலகம் முழுவதும் பணி கொடுக்கும் சட்ட நிறுவனமான Ogier அதன் Jersey சட்ட அலுவலகத்தில் 17 பேரை வீட்டிற்கு அனுப்புகிறது.

வேல்ஸில் கட்டாயப் பணிநீக்க முன்னறிவிப்புக்கள் Anglesey Aluminum நிறுவனத்தில் 350 தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட்டது. Wrexham க்கு அருகே ஒரு இராசயன தொழிற்சாலையான Air Products இல் 200 தொழிலாளர்கள் ஆலை நவம்பர் முதல் மூடப்பட உள்ளது என்று கூறப்பட்டுவிட்டனர். உற்பத்தி சீனாவிற்கு மாற்றப்பட உள்ளது.

கிட்டத்தட்ட 240 வேலைகளைக்கும் மேல், Torfaen இல் உள்ள Premium Aircraft Seating ல் அச்சறுத்தலுக்கு உட்பட்டுள்ளன. Padeswood இல் இருக்கும் Hanson Cement உம் உற்பத்தி அழைப்பாணைகள் குறைந்துவிட்டதால் 93 வேலைகளைக் குறைப்பதாக திட்டமிட்டுள்ளது.

இங்கிலாந்து கூட்டுறவு நிறுவனமான Dairy Farmers of Britain, திவால்தன்மைக்கு வந்த பின்னர் Bridgend இல் கிட்டத்தட்ட 279 வேலைகள் பால்பண்ணையில் இழக்கப்படுகின்றன. DFB யின் சரிவு கிட்டத்தட்ட 300 வேலைகள் Tyneside ல் இருக்கும் Blaydon பால்பண்ணையில் இழக்கப்படும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தவிர வட கிழக்கு மற்றும் வடக்கு Yorkshire இல் DFB இற்கு விநியோகிக்கும் 300 பால்பண்ணைகளிலும் கணக்கிலடங்கா வேலை இழப்புக்கள் இருக்கும்.

தெற்கு வேல்ஸில் கிட்டத்தட்ட 170 வேலைகள் ஆபத்தில் உள்ளன; இதற்குக் காரணம் FSS எனப்படும் Forensic Science Service நிறுவனம் அப்பகுதியில் இருக்கும் பரிசோதனைக் கூடம் ஒன்றை மூட இருக்கிறது.

உலகின் மிகப் பெரிய மதுபானத்தயாரிப்புக் குழுவான Diageo வில் ஏற்பட்டுள்ள குறைப்புக்கள் ஸ்கொட்லாந்து, அயர்லாந்தில் நூற்றுக்கணக்கான வேலைகளை இழக்கச் செய்துவிடும்.

900 வேலைகள் வரை ஸ்கொட்லாந்தில் அச்சுறுத்தலுக்கு உட்பட்டுள்ளன. இங்கு Glasgowஇல் இருக்கும் நிறுவனத்தின் மதுபான பதனிடும் ஆலை, மற்றும் அவற்றை பல இடங்களுக்கு அனுப்பிவைக்கும் Kilmarnock பிரிவு ஆகியவை மூடப்பட உள்ளன. அயர்லாந்தில் இதையொட்டி 107 வேலைகள் அகற்றப்படும்.

மேலும் ஸ்கொட்லாந்தில், Bathgate ஐத் தளமாகக் கொண்ட துணிகள் நிறுவனமான Russen Europe, அதன் விநியோக ஆலையை மூட இருப்பது 60 வேலை இழப்புக்களைக் கொடுக்கும். Angus இல் இருக்கும் 2 Sisters Food Group அதன் பதனிடும் ஆலையில் 95 தொழிலாளர்களை வெளியே அனுப்ப இருக்கிறது.

Hebrides இல் பாதுகாப்பு அமைச்சரகம் Benbecula ஏவுகணை சோதனை பகுதியில் 125 வேலைகளை குறைக்க உள்ளது. இங்கு உள்ளூர் மக்களில் ஆறில் ஒருவர் வேலை பார்க்கின்றனர்.

அயர்லாந்தில், பெல்பாஸ்ட் நகர மைய உணவு விடுதிகளான Chilli's, Maggiano's ஆகிய இரண்டும் மூடப்படுவதை ஒட்டி 100 தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் உரிமையாளர் அதன் அனைத்து இங்கிலாந்து பிரிவுகளையும் மூட இருப்பதாக வந்த அறிவிப்பைத் தொடர்ந்து இது நிகழ்கிறது.

அயர்லாந்தின் செய்தி நிறுவனமான Setanta Sports திவாலுக்குப் போய்விட்டது. அதன் பிரிட்டிஷ் பிரிவு 200 வேலைகளை இழக்க உள்ளது. இந்த நிறுவனம் அயர்லாந்திலும், ஐக்கிய அரசியலும் 420 தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருந்தது. டப்ளினில் Setanta Ireland இல் 20 ஊழியர்கள் அதிகாக உள்ளதாக பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர். இதைத்தவிர Setanta Sports News என்னும் Virgin Media உடனான கூட்டு நிறுவனத்தில் 60 பேர் நீக்கப்பட உள்ளனர். இதற்குக் காரணம் ITN வேலைக்குறைப்பை எதிர்பார்ப்பதாலாகும்.

Setanta சரிவின் உபவிளைவாக, Fife இலுள்ள தொழில்நுட்ப நிறுவனமான MGt இன், மென்பொருள், பண வசூல் தகவல் பணிகளை அதற்காக செய்யும் Kirkcaldy மற்றும் Methil அலுவலகங்களில் வேலைகள் மற்றும் செலவினக் குறைப்புக்களுக்காக 30 நாள் ஆலோசனைக்கு ஏற்பாடு செய்துள்ளது. 1,000 வேலைகளில் 100 பாதிப்பிற்கு உட்படக்கூடும்.

BBC உள் மறுசீரமைப்பை ஒட்டி 26 வேலைகள் அகற்ற இருப்பதாக அறிவித்துள்ளது.

நிதியப்பணிகள் பிரிவும் வேலைகளில் இழப்பை தொடர்ந்து காண்கிறது. Lloyds Banking Group மற்றும் ஒரு 2,100 தொழிலாளர்களை அடுத்த மூன்று ஆண்டுகளில் அகற்ற உள்ளது. இது இந்த ஆண்டு மொத்த இழப்பை 7,000 க்கு கொண்டுவரும். உடனடியாக பாதிப்படுவது இக்குழுவின் கடல்கடந்த வங்கி செயற்பாடுகளில் உள்ள 242 வேலைகளாகும். இதில் Jersey இல் 180, Isle of Man இல் 18, Guernsey யில் 5 மற்றவை லண்டனில் அடங்கும்.

Yorkshire Bank, Yorkshire, Midlands இல் 122 வேலைகளைக் குறைக்க இருப்பதாக அறிவித்துள்ளது. 188 வேலை இழப்புக்கள் Barclays Bank நடத்தும் Merseyside இலுள்ள சேமிப்பு பிரிவு நிலையங்களில் அறிவிக்கப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி அதிகாரங்களும் இப்பொழுதுதான் சீரமைக்கும் திட்டங்களை தெளிவுபடுத்த தொடங்கியுள்ளன. ஏற்கனவே Oxfordshire County Council 500 வேலைகள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சேமிப்பு உந்துதலால் தகர்க்கப்படும் என்றும் Gloucestershire County Council அடுத்த இரு ஆண்டுகளில் 200 வேலை இழப்புக்கள் இருக்கும் என்றும் அறிவித்துள்ளன.

பணிநீக்கங்கள் உயர்கல்விக் கூடங்களில் விரைவாகவும் அதிக அளவிலும் அறிவிக்கப்பட்டுள்ளன.

பெல்பாஸ்ட்டில் உள்ள Queen's University அதன் ஜேர்மனிய மொழித் துறையை மூடி 103 வேலைகளை தகர்க்கிறது. குறைந்தது 12 வேலைகள் ஸ்கொட்லாந்தில் இருக்கும் Forth Valley Colege இல் அகற்றப்படுகின்றன. வேல்ஸ் Lampeter பல்கலைக்கழகம் 46 ஊழியர்கள் அதிகமாக இருப்பதாக கணக்கிட்டுள்ளது.

Birmingham கல்லூரி விரிவுரையாளர்கள் 76 பணிகள் அகற்றப்படும் திட்டத்தை எதிர்த்து வேலைநிறுத்த நடவடிக்கையை கொண்டுள்ளனர். அத்தகைய பணி அகற்றுதல் என்பது கிட்டத்தட்ட ஆசிரியர்கள் மூன்றில் ஒரு பங்கு ஒரே ஆண்டில் வெளியேற்றப்படுவதை குறிக்கிறது. கிழக்கு லண்டலில் Tower Hamlets கல்லூரியில் 25 பணிகள் அகற்றப்படுவது பற்றியும், Leeds பல்கலைக்கழகத்தில் 100 வேலைகள் தகர்க்கப்படுவது பற்றியும் எதிர்ப்புக்கள் நடத்தப்பட்டுள்ளன. Leeds Metropolitan பல்கலைக்கழகமும் வேலைகளை அகற்ற முன்வந்துள்ளது.

இன்னும் கூடுதலாக அறிவிக்கப்ப்ட்ட இழப்பில் கீழ்க்கண்டவையும் அடங்கும்;

* Birthdays-now வாழ்த்து அட்டைகள் தொடர் நிறுவனங்களில் நிர்வாகப் பிரிவில் 750 வேலைகள்.

* Nortel Networks UK யில் நாடெங்கிலும் நிர்வாகப் பிரிவில் 150 ஊழியர்கள் பணிநீக்கம் ஜனவரி மாதம் நடத்தப்பட்டது. எவருக்கும் வேலை இழப்பு ஊதியம் கொடுக்கப்படவில்லை.

* Scuthorpe தளமுடையை aerosol ஆலையில் 150 வேலைகள், Penrith plasterboard உற்பத்தி நிறுவனத்தில் 55 வேலை இழப்புக்கள்.

* Immingam தளத்தைக் கொண்ட கப்பல் நிறுவனமான DFDS Tor Line ல் 25 வேலைகள் தகர்ப்பு. இந்த ஆண்டு முன்னதாக 41 பேர் அகற்றப்பட்டனர். Great Yarmouth துறைமுகத்தில் 11 துறைமுகத் தொழிலாளர்கள் பணிநீக்கம்.

* Vion Food Group ல் 100 வேலைகள் தகர்க்கப்படும் அபாயம்.

* ஜேர்மனிய இரசாயன பெருநிறுவனமான BASF, Bradford இல் 150 ஊழியர்களை அதிக எண்ணிக்கையில் இருப்பவர்கள் எனக்கூறி அகற்றுகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved