World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Obama joins Netanyahu in shielding Israel from war crimes charges

யுத்த குற்றங்களின் வழக்குகளில் இஸ்ரேலுக்கு கவசமாகும் நீடன்யாஹூவுடன் ஒபாமாவும் இணைகிறார்

By Jean Shaoul
19 October 2009

Back to screen version

டிசம்பர் மற்றும் ஜனவரியில் காஜா மீதான இஸ்ரேலின் 22 நாள் தாக்குதலில், இஸ்ரேலின் யுத்த குற்றங்களை குற்றஞ்சாட்டி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் ஓர் அறிக்கையை சமர்பித்திருக்கிறது.

இஸ்ரேல் பிரதம மந்திரி, பின்யாமின் நீடன்யாஹூ, எதிர்பார்த்தபடியே அந்த அறிக்கையை பகிரங்கமாக குற்றஞ்சாட்டி இருந்தார். அது இஸ்ரேலுக்கு எதிராக ஒருதலைப்பட்சமாக இருப்பதாகவும், அநீதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். யுத்த குற்றங்களுக்காக எந்த இஸ்ரேலிய அதிகாரியும் வழக்கை எதிர்கொள்வதை அனுமதிக்க போவதில்லை என்று அவர் குறிப்பிட்டார். ஒபாமா நிர்வாகமும், இஸ்ரேலின் குரலையே எதிரொலித்தது. அந்த அறிக்கை ஒருதலைபட்சமாக இருப்பதாக அது குறிப்பிட்டது, இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்குவதற்கு இருக்கும் சாத்தியகூறுகளை அந்த அறிக்கையின் போக்கு பாதிக்கும் என்று ஒபாமா நிர்வாகம் குறிப்பிட்டது.

தென் ஆபிரிக்க நீதிபதி ரிச்சார்ட் கோல்டுஸ்டோனின் அந்த அறிக்கை குறிப்பிட்டதாவது: "அந்த யுத்தம், பொதுஜனங்களை தண்டிக்கவும், அவமானப்படுத்தவும், சித்திரவதைப்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட ஒரு திட்டமிடப்பட்ட அதிரடி தாக்குதலாகும். இதன் மூலம் வேலை செய்வதற்கும், சுயசார்பிற்குமான அதன் உள்நாட்டு பொருளாதார திறனை வேகமாக நாசப்படுத்தவும், சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்தையும், காயங்களையும் அதன்மீது திணிக்கவும் அந்த யுத்தம் நடத்தப்பட்டது."

இராணுவ நடவடிக்கைகள் குறித்து இஸ்ரேல் ஒரு புலன்விசாரணை நடத்த வேண்டும் என்றும், ஆறு மாதங்களுக்குள் அது அவ்வாறு செய்ய தவறினால், சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்திற்கு (ICC) அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்த வேண்டும் என்று அது பரிந்துரைத்தது. 400 பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட, சுமார் 1,400 பாலஸ்தீனியர்கள், அதில் பெரும்பாலானவர்கள் பொதுஜன மக்கள் கொல்லப்பட்டார்கள், குறைந்தபட்சம் 5,000 மக்கள் காயப்பட்டார்கள், 21,000 பேர் வீடிழந்தும், அத்துடன் முக்கிய உள்கட்டமைப்பு இழந்தும் இருந்தார்கள். பல "நட்புரீதியான துப்பாக்கி சூட்டின்" விளைவாக, இஸ்ரேலிய தரப்பில் வெறும் 13 பேர் மட்டுமே உயிரிழந்தார்கள்.

1949 ஜெனிவா உடன்படிக்கைகளில் கையெழுத்திட்ட நாடுகளுக்கும் கோல்டுஸ்டோன் அழைப்பு விடுத்தார். அவை தங்களின் "சர்வதேச சட்டதிட்டங்களை" பயன்படுத்தி, யுத்த குற்றங்களுக்கு காரணமானவர்களை தேடி தண்டிக்க வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார்.

வெள்ளை மாளிகையின் உதவியுடன், அந்த அறிக்கையை எதிர்க்க ஆராவார அச்சுறுத்தல்களுடன், வாக்கெடுப்பை மார்ச் வரை தள்ளி வைக்கவும், வீட்டோ அதிகாரத்தைக் கொண்டிருக்கும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பாதுகாப்பு கவுன்சில் ICC -க்கு வழக்கை கொண்டு செல்லாதவாறும் நீடன்யாஹூ ஒரு சர்வதேச பிரச்சாரத்தை நிலைநிறுத்தினார்.

பாலஸ்தீன ஆணையத்தின் பெயரளவு தலைவராக இருந்த மொஹமத் அப்பாஸ் இந்த அறிக்கையை எதிர்ப்பதாக நீடன்யாஹூ குறிப்பிட்டார். கடந்த ஜனவரியில் மொஹமத் அப்பாஸ் அவர்தம் பதவியில் இறங்கினார். பாலஸ்தீனியர்களுடனான பேச்சுவார்த்தைகளை நிறுத்திவிடுவோம் என்ற அச்சுறுத்தல்களால் மொஹமத் அப்பாஸ் அந்த அறிக்கையை எதிர்த்திருக்க கூடும். உண்மையில், பாலஸ்தீனர்களுடன் எந்தவித உடன்பாட்டையும் எட்டுவதற்கு தமது அரசாங்கம் தயாராக இல்லை என்று வெளிப்படையாகவே நீடன்யாஹூ தெளிவுபடுத்தி இருந்தார். மேற்கு படுகையில் கட்டுமானத்தை நிறுத்த அவர் மறுத்திருக்கிறார், கிழக்கு ஜெரூசலமில் கட்டியமைப்புகளை தொடரவே அவர் விரும்புகிறார். இரண்டு வாரங்களுக்கு முன்னர் தான், அடுத்து வரும் எந்த காலத்திலும் பாலஸ்தீனியர்களுடன் ஓர் உடன்படிக்கையை எட்டுவதற்கான எந்த முகாந்தரமும் கிடையாது என்று ஒரு ரேடியா பேட்டியில் வெளியுறவுத்துறை செயலாளர்Avigdor Lieberman, இதற்கு மாறாக சிந்திக்கும் யாரும் "சூழ்நிலையைப் புரிந்து கொள்ளாமல், வதந்திகளை பரப்பி வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

மேற்கு படுகையில் இரண்டாவது செல்லுலர் தொலைபேசி நிறுவனத்திற்கு அனுமதியளிக்க இஸ்ரேல் மறுக்கும் என்றும் இஸ்ரேல் அப்பாஸை எச்சரித்தது. இது பாலஸ்தீனிய ஆணையத்திற்கும், பாலஸ்தீன வர்த்தக நலன்களுக்கும் ஒரு முக்கிய பிரச்சனையாக இருக்கிறது. இஸ்ரேல் முக்கிய தொலைதொடர்பு சாதனங்களை அதன் துறைமுகத்திலேயே பிடித்து வைத்து கொண்டு, கடந்த ஆண்டு ஒத்து கொண்ட ரேடியோ அலைவரிசைகளையும் ஒதுக்கி கொடுக்க மறுத்து வருகிறது. இதுமட்டுமில்லாமல், குடாரி மற்றும் குவைத்தி முதலீட்டு நிதியகங்களிடம் இருந்து நிதியுதவி பெற்ற வட்டானியா டெலிகாம் நிறுவனமும் திரும்பி செல்ல வேண்டும் என்று அச்சுறுத்தப்பட்டிருக்கிறது, இந்நிறுவனம் ஏற்கனவே குறிப்பிடத்தக்க அளவில் இந்த திட்டத்தில் முதலீடு செய்திருக்கிறது. உரிமம் மற்றும் உள்கட்டமைப்பு கட்டணங்களில் முதலீடு செய்திருக்கும் 300 மில்லியன் டாலரும், செலவு செய்யப்பட்ட 200 மில்லியன் டாலரையும் திருப்பி அளிக்கும்படி பாலஸ்தீன ஆணையத்தை நிர்பந்தித்து வருகிறது.

இது அப்பாஸிற்கு ஒரு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. டெல் அவிவ், வாஷிங்டன் மற்றும் அரேபிய அரசாங்கங்களின் தீவிர அழுத்தங்களால், அந்த அறிக்கையின் மீதான வாக்கெடுப்பை தள்ளி போட வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டிருக்கிறார். ஹமாஸ் மற்றும் காஜா மீதான தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு அவர் அளித்து வந்த ஆதரவாலும், இஸ்ரேலிடம் அவருக்கு இருந்த அடிமைத்தனத்தின் காரணமாகவும் ஏற்கனவே தொங்கி கொண்டிருந்த அவர் பதவி மேலும் பலவீனமடைந்தது. Lieberman ன் கருத்துப்படி, உண்மையில் கடந்த டிசம்பரில் Operation Cast Lead ஐ "தொடர வேண்டும் என்று இஸ்ரேலுக்கு பாலஸ்தீன ஆணையம் அழுத்தம்" கொடுத்தது.

ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் நீடன்யாஹூவைக் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அப்பாஸ் சந்தித்து பேசினார், குடியிருப்பு கட்டுமானங்களை நிறுத்த முடியாது என்று இஸ்ரேல் மறுத்துவிட்ட நிலையில், அந்த சந்திப்பு அவரை மேலும் மதிப்பிழக்க செய்தது. மீண்டும் ஒருமுறை இஸ்ரேலிடம் மண்டியிடுவதற்கான அவரின் முடிவு, அவர் கட்டுப்படுத்தும் சக்தியற்றவர் என்பதை பல நிகழ்வுகளில் அமைத்து காட்டி இருக்கிறது.

மிகுந்த வெடிப்போடு இருந்த பாலஸ்தீனியர்கள், போராட்டத்திற்காக தெருக்களில் இறங்கினார்கள். பாலஸ்தீன ஆணையத்திற்குள்ளும், அப்பாஸின் சொந்த கட்சியான ஃபட்தாஹின் உள்ளேயும் இருக்கும் உறுப்பினர்களும் கூட தங்களின் படுபாதாளத்தில் இருக்கும் மதிப்புகளைக் காப்பாற்றி கொள்ளும் முயற்சியாக அவருக்கு எதிராக பேசினார்கள். பாலஸ்தீன ஆணையத்தின் பொருளாதார மந்திர பாஸ்ஸம் கெளரி, இராஜினாமா செய்தார். "காஜா பகுதியின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய போது, அந்த யுத்த குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்கள் தப்பிக்க நாம் சந்தர்ப்பம் அளிக்க கூடாது" என்று சொல்ல பிரதம மந்திரி சலாம் பையத்தும் கடமைப்பட்டிருந்தார்.

பாலஸ்தீன சுதந்திர மக்கள் முன்னணியின் தலைவர் அஹ்மத் ஜிப்ரெல், அப்பாஸை "வீட்டு போகும்படி" கூறினார், ஐரோப்பாவில் இருக்கும் பாலஸ்தீன அமைப்புகளின் கவுன்சில் அவரை பதவி விலகு வலியுறுத்தியது.

எகிப்திற்கான பாலஸ்தீன தூதரும், அப்பாஸிற்கு நெருக்கமானவருமான நபீல் அமரும் கூட, அப்பாஸை விமர்சித்தார். அதற்கு பிரதிபலிப்பாக, பாலஸ்தீன ஆணையம் உடனடியாக ரமல்லாஹ் வீட்டை பாதுகாத்து வந்த அதன் பாதுகாப்பு படைகளைத் திரும்ப பெற்றது. சில ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு கொலை முயற்சியில் அமர் படுகாயம் அடைந்தார்.

ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் காசாவில், மக்கள் செருப்புக்களை தூக்கி எறிந்தார்கள், இதுவொரு ஆழ்ந்த அவமதிப்பின் அறிகுறியாக இருந்தது, நூற்றுக்கணக்கான சுவரொட்டிகள் அப்பாஸை ஒரு துரோகியாக சித்தரித்தது. முதல்முறையாக, ஓர் இஸ்ரேலிய அரேபிய கட்சியான பலாட், உள்தொடர்புடைய பாலஸ்தீன அரசியலில் தலையிட்டது, அப்பாஸ் நீக்கப்பட வேண்டும் என்று அது வலியுறுத்தியது. அப்பாஸ் டமாஸ்கஸிற்கு வரவிருந்த ஓர் உத்தியோகபூர்வ விஜயத்தை சிரியா இரத்து செய்தது.

வாக்கெடுப்பு குறித்து பல்டி அடித்த அப்பாஸின் முயற்சி கேலிக்குள்ளானது.

இஸ்ரேலின் கூட்டாளிகளும் ஆதரவாக வரவேண்டும் என்று நீடன்யாஹூ கோரினார். வெள்ளியன்று நடக்கவிருக்கும் வாக்கெடுப்பை பிரிட்டன் தவிர்க்கும் என்று ஜோர்டன் பிரெளன் அறிவித்த போது, நீடன்யாஹூ அவரை தொலைபேசியில் கண்டித்தார். அந்த நிகழ்ச்சியில் பிரிட்டனும், பிரான்சும் தவிர்க்கவில்லை: அவர்கள் வாக்கெடுப்பின் போது அங்கு வராமல் இருந்து விட்டார்கள்.

பிபிசி உடனான ஒரு பேட்டியில், பிரிட்டனின் வெளியுறவு செயலாளர் டேவிட் மிலிபேண்ட் அவர்களின் நிலைப்பாட்டை நியாயப்படுத்தினார், பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் அரசாங்கங்கள் "மூன்று முக்கிய விவகாரங்கள் குறித்து இஸ்ரேலின் நீடன்யாஹூவுடனான பேச்சுவார்த்தையின் மத்தியில் இருக்கின்றனஅதாவது, சுயாதீனமான ஒரு விசாரணை, காஜாவிற்கான மனிதாபிமான உதவி மற்றும் அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது" ஆகியவை தான் அந்த மூன்று முக்கிய விவகாரங்கள். "இந்த பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் தான் இந்த வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது, ஆகவே அந்த மூன்று அடிப்படை விஷயங்களில் எங்களின் பணியைத் தொடர்வது தான் சரியாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம், ஆகவே மத்திய கிழக்கில் நம்பிக்கை மற்றும் நம்பிக்கையின்மையின் ஓர் அபாயகரமான சுற்றுகளில் திருப்புமுனையில் கலந்து கொள்ள முடியவில்லை," என்று அவர் தெரிவித்தார்.

47 உறுப்பினர்கள் இருக்கும் அந்த கவுன்சிலில் அமெரிக்கா தலைமையிலான ஆறு நாடுகள் தான் அந்த அறிக்கைக்கு எதிராக வாக்களித்தன. இவற்றில் மூன்று நாடுகள், வாஷிங்டனின் நல்லுறவை வேண்டி நிற்கும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளாகும். இருபத்தி ஐந்து நாடுகள் ஆதரவாக ஓட்டளித்தன, 11 நாடுகள் இதில் கலந்து கொள்ளவில்லை.

வாக்கெடுப்புக்கு பின்னர், பிரெளனும், பிரெஞ்சு அதிபர் நிகோலா சார்க்கோசியும் நீடன்யாஹூவிற்கு கூட்டாக ஒரு கடிதம் எழுதினார்கள். இதில் இஸ்ரேலின் "சுய-பாதுகாப்பிற்கான உரிமையை" அவர்கள் ஆதரித்தார்கள். ஆனால் மத்திய கிழக்கில் உறவுகளை கெடுக்காத வகையில், பாலஸ்தீனர்கள் மற்றும் காஜா தொடர்பாக ஒரு சிறந்த சமரச நிலைப்பாட்டை எடுக்கும்படி அவர்கள் வலியுறுத்தினார்கள்.

"காஜாவில் நடந்த நிகழ்வுகளின் விளைவுகள் தங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டிருப்பதாகவும், அங்கு ஒரு சுயாதீனமான மற்றும் வெளிப்படையான புலனாய்வு நடத்தப்பட வேண்டும்" என்று நீடன்யாஹூவுடன் சேர்ந்து அவர்களும் குரல் கொடுத்தார்கள். "காஜாவை அணுகுவதை எளிமைப்படுத்தவும்", "ஆக்கிரமிப்பு பிராந்தியங்களுக்குள் குடியிருப்பு நடவடிக்கைகளை நிறுத்தவும்", "ஐக்கிய நாடுகள் சபையில் ஜனாதிபதி ஒபாமா பேசிய போது எடுத்துக்காட்டிய குறிப்புகளின் அடிப்படையில் பேச்சுவார்த்தைகள் நடத்தவும்" எங்களோடு விபரங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கின்றன என்று அவர்கள் தெரிவித்தார்கள்.

பாலஸ்தீன ஆணையத்தை ஸ்திரமின்மைக்கு கொண்டு வரும் முயற்சி, பாலஸ்தீனியர்களுக்கும், கிழக்கு ஜெரூசலீமில் இருக்கும் இஸ்ரேலிய தீவிரவாதிகளுக்கும் இடையே பதட்டம் அதிகரித்திருக்கும் நேரத்தில் கொண்டு வரப்படுகிறது. இஸ்ரேல் கிழக்கு ஜெரூசலேமிற்கு நீதிநெறி விளக்க விரும்புவதாக பாலஸ்தீன ஆணையம் இஸ்ரேலை குற்றஞ்சாட்டி இருக்கிறது, மேலும் ஹராம் அல்-ஷரீப் என்றும், யூதர்களின் கோவில் என்றும் அறியப்படும் அல்-அக்ஷா மசூதி வளாகத்திற்குள் முஸ்லீம்கள் நுழைய அனுமதி மறுத்துவிட்டு, வலதுசாரி ஜீலோட்களை நுழைய அனுமதிக்கிறது என்றும் பாலஸ்தீன ஆணையம் குற்றஞ்சாட்டி உள்ளது. இது தான் 2000 செப்டம்பரில் இன்டிபதாவைத் தூண்டிவிட்ட முக்கிய புள்ளியாக இருந்தது.

செப்டம்பர் இறுதியில் பாலஸ்தீனியர்களுக்கும், வலதுசாரி இஸ்ரேலியர்களுக்கும் இடையில் நடந்த சண்டையில் முப்பது பேர் காயமடைந்தார்கள். அப்போதிருந்து, அந்த வளாகத்திற்குள் இஸ்ரேலிய தீவிரவாதிகள் நுழைய விரும்பினார்கள் என்ற பாலஸ்தீனியர்களின் அச்சத்தால் அங்கு அங்குமிங்குமாக மோதல்கள் இருந்து வருகின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை, ஹமாஸால் "எழுச்சி நாளாக" அறிவிக்கப்பட்டது. அதேநாளில் மசூதிக்கு ஆதரவாக பட்தாஹ் ஒரு வேலைநிறுத்தத்திற்கும், அமைதியான போராட்டத்திற்கும் அழைப்புவிடுத்திருந்தது. இஸ்ரேலைத் தலைமையகமாக கொண்ட ஓர் அரசியல் இயக்கமான The Islamic Movement, "அல்-அக்ஷாவைப் பாதுகாப்பதற்காக" ஜெரூசலேமிற்கு கூட்டம் கூட்டமாக வரும்படி இஸ்ரேல் முஸ்லீம் மக்களுக்கு அழைப்புவிடுத்திருந்தது.

இஸ்ரேல் ஆயிரக்கணக்கான கூடுதல் போலீஸை நிறுத்தியது, தொழுகைக்கு வரும் பெண்களையும், ஆண்களில் 50 வயதிற்கு மேற்பட்டவர்களையும் மட்டும் மசூதி பகுதிக்குள் உள்ளே விடுவது என்ற அவர்களின் சமீபத்திய கொள்கையை கடைபிடித்தது. பழைய நகரத்தில் பல கடைகள் அடைக்கப்பட்ட நிலையில் அமைதி நிலவினாலும், கிழக்கு ஜெரூசலேமில் உள்ள ரஸ் அல்-அமோத் பகுதியிலும், ரமால்லாஹின் மேற்கு படுகை நகருக்கு பக்கத்தில் இருக்கும் குலாண்டியா சோதனைச்சாவடியிலும் முழு கலக ஒடுக்க ஆயுதங்களுடன் இருந்த போலீஸாருக்கும், முகமூடி அணிந்த பாலஸ்தீன இளைஞர்களுக்கும் இடையே வன்முறை மோதல்கள் வெடித்தன.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved