World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany: Big losses for the conservative CDU in state elections

ஜேர்மனி: கன்சர்வேட்டிவ் கிறிஸ்தவ ஜனநாயக யூனியனுக்கு மாநிலத் தேர்தல்களில் பெரும் இழப்புக்கள்

By Peter Schwarz
2 September 2009

Back to screen version

ஜேர்மனியில் கடந்த ஞாயிறு நடைபெற்ற மூன்று மாநிலத் தேர்தல்கள் நாட்டின் சமூக உறவுகளின் உண்மைத் தன்மை பற்றிய ஒரு பார்வையை கொடுக்கின்றன.

சார்லாந்து, துரிஞ்சியா இரண்டிலும், மாநில அரசாங்கம், அரசியல் ஆகியவற்றில் மாறுதல் வரக்கூடும் என்று கருதப்பட்ட இடங்களில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பைவிட கணிசமான வாக்காளர்கள் பங்கு பெற்றனர். இரு மாநிலங்களிலும் ஆளும் Christian Democratic Union (CDU) வியத்தகு இழப்புக்களை அடைந்தது; சுதந்திர சந்தை ஜனநாயகக் கட்சி (FDP) ஓரளவிற்குத்தான் அதைப் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. CDU இரு மாநிலங்களிலும் முன்பு அறுதிப் பெரும்பான்மை கொண்டிருந்தது; கன்சர்வேடிவ்களுக்கு இப்பொழுது ஆதரவு குறைந்த நிலையில் FDP உடன் சேர்ந்து கூட்டணி அமைப்பதற்குக் கூட அது திறனற்று உள்ளது.

துரிஞ்சியாவில் இடது கட்சி மற்றும் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) இரண்டும் சேர்ந்து மாநில அரசாங்கம் அமைப்பதற்கு போதுமான வாக்குகளை பெற்றுள்ளன. சார்லாந்தில் SPD மற்றும் இடது கட்சி பசுமைவாதிகளுடைய ஆதரவுடன் அரசாங்கத்தை அமைக்கும்.

ஆனால் கருத்துக் கணிப்புக்கள் ஆட்சி மாற்றம் இராது என்று கூறியிருந்த சாக்சோனியில், வாக்குப் பதிவு எப்பொழுதையும் விட மிகக் குறைவாக இருந்தது. CDU 1990க்குப் பின்னர் இருந்து மோசமான தேர்தல் முடிவு என்றாலும் அதிக இடங்கள் கொண்ட வலுவான கட்சியாக வெளிப்பட்டு FDP, SPD அல்லது பசுமைவாதிகளை கூட்டணிப் பங்காளியாகக் கொள்ள முடியும்.

சார்லாந்து, துரிஞ்சியாவில் தேர்தல் முடிவுகள் செய்தி ஊடகம் தெரிவிப்பதைவிட ஆழ்ந்த முறையில் சமூக எதிர்ப்பை பிரதிபலிக்கின்றன. ஜேர்மனிய ARD தொலைக்காட்சி நிலையம் நடத்திய கருத்துக் கணிப்பின்படி, வாக்காளர்களின் முக்கிய கவலை சமூக சமத்துவத்திற்கான அவர்களுடைய கூடுதலான விழைவு ஆகும். ஆப்கானிஸ்தானில் ஜேர்மனிய இராணுவம் குறுக்கீடு செய்தது வாக்காளர்களின் அக்கறை பற்றி நிலையத்தின் மற்றொரு முக்கிய பிரச்சினையாக இருந்தது.

இரண்டிலும் இடது கட்சி ஆதாயத்தைப் பெற முடிந்தது. அதன் தேர்தல் பிரச்சாரத்தில் அது Hartz IV, வேலையின்மை நலன்களுக்கு பதிலாக வேலையில்லாதவர்களுக்கு ஓராண்டிற்கு பின் கொடுக்கப்படும் அற்ப பொதுநல உதவித் தொகை ஆகியவை அகற்றப்பட வேண்டும் என்றும், ஓய்வூதிய வயது 67 ஆக உயர்த்தப்படுவதை எதிர்க்கவும் செய்தது. ஆப்கானிஸ்தானில் இருந்து ஜேர்மனியத் துருப்புக்கள் திரும்பப் பெறவேண்டும் என்றும் அது கூறியது.

SPD யின் முன்னாள் பிரதம மந்திரியும் இன்றைய இடது கட்சித் தலைவருமான ஓஸ்கார் லாபோன்டைன் சார்லாந்தில் அதன் வேட்பாளராக நின்றார்; இடது கட்சி குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்தது. 21.3 சதவிகித வாக்குகளுடன் அது மூன்றாம் வலுவான கட்சியாக மாநிலத்தில் வெளிப்பட்டுள்ளது; இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த Party of Democratic Socialism 2004 தேர்தலில் கொண்டிருந்த 19 சதவிகித நிலைப்பாட்டை விட அதிகமாகப் பெற்றது. இடது கட்சி மற்ற கட்சிகளின் வாக்குகளையும் பெற்றது; இதில் SPD யில் இருந்து 26,000 அடங்கும்; ஆனால் இதன் ஆதரவுத்தளத்தில் மிகப் பெரிய குவிப்பு (114,000 வாக்குகளில் 43,000) முன்பு வாக்களிக்காத அடுக்குகளில் இருந்து வந்தது. தேர்தலில் 68 சதவிகித வாக்குப் பதிவு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட 12 சதவிகிதம் அதிகமாக இருந்தது.

மாநிலத் தேர்தலில் மிகப் பெரிய இழப்பு பெற்றவர் CDU வின் பிரதம மந்திரியான பீட்டர் முல்லர் ஆவார்; இக்கட்சி 13 சதவிகித வாக்குகளை இழந்தது. FDP அதன் வாக்குத்தளத்தை கிட்டத்தட்ட இரு மடங்காக 9.2 சதவிகிதத்திற்கு உயர்த்தியது; ஆனால் முந்தைய CDU வாக்குகளில் ஒரு சிறிய பகுதியைத்தான் பெற முடிந்தது. FDP முக்கியமாக CDU வின் வணிகச் சார்பு, வலது சாரி பிரிவில் இருந்து ஆதரவைப் பெற்றது; அது அதிபர் அங்கேலா மேர்க்கெல் (CDU), SPD யுடன் மிக சமரசப் போக்கை கொண்டுள்ளார் என்று குற்றம் சாட்டியது. SPD யும் 6 சதவிகித வாக்கை இழந்து, 24.5 சதவிகித வாக்குடன் மிகக் குறுகிய அளவில் இடது கட்சியைவிடக் கூடுதல் வாக்கைப் பெற்றது.

சார்லாந்து பாராளுமன்றத்தில் சமபல நிலை CDU, FDP ஒரு புறத்திலும் SPD, இடது கட்சி மறுபுறத்திலும் என்ற விதத்தில் உள்ளது. மாநில நிர்வாகத்தின் வருங்கால அமைப்பு மூன்று பசுமைக் கட்சி உறுப்பினர்களின் தயவில் உள்ளது; அவர்கள் இதுவரை எந்தக் கூட்டணிக்கும் உறுதியளிக்கவில்லை. CDU, FDP உடன் கூட்டு என்ற வாய்ப்பை பசுமைவாதிகள் கோடிட்டுக்காட்டியுள்ளனர். மாநிலத்தில் மற்றொரு வகை மாற்று வாய்ப்பு CDU, SPD - ன் பெரும் கூட்டணியாகவும் இருக்கலாம்.

துரிஞ்சியாவிலும் வாக்குப் பதிவு அதிகமாயிற்று; ஆனால் சார் பகுதியைவிட குறைவாகத்தான் அது இருந்தது. மொத்த வாக்காளர்களில் 56 சதவிகிதத்தினர் வாக்குப் பதிவு செய்தனர். 2004ல் அது 54 சதவிகிதம்தான் இருந்தது. இடது கட்சி மற்றும் SPD இரண்டுமே தங்கள் வாக்குகளை சிறிது அதிகப்படுத்திக் கொள்ள முடிந்தது; அதே நேரத்தில் பிரதம மந்திரி Dieter Althaus தலைமையில் CDU 12 சதவிகிதத்தை இழந்து 31.2 சதவிகித வாக்குகளைத்தான் பெற்றது. பசுமை வாதிகளும் FDP யும் மாநிலப் பாராளுமன்றத்தில் மறுபடியும் நுழைய முடிந்தது; அதே நேரத்தில் புதிய பாசிச ஜேர்மன் தேசிய கட்சி ( German National Party -NPD) மாநிலப் பாராளுமன்றத்தில் நுழையத் தேவையான 5 சதவிகித வாக்குளை சிறுவித்தியாசத்தில் பெற முடியாமல் போயிற்று. 4.3 சதவிகிதத்தை அது பெற்று, 2004ல் பெற்ற 3 சதவிகிதத்துடன் ஒப்பிடும்போது சற்று முன்னேறியது.

துரிஞ்சியா மாநிலப் பாராளுமன்றத்தில் இடது கட்சியும் SPD யும் இரண்டு இடங்கள் கூடுதலாகக் கொண்டு பெரும்பான்மையில் உள்ளன. ஆனால் SPD இடது கட்சியுடன் கூட்டணிக்கு உடன்படுமா என்பது வினாவிற்கு உரியதுதான். இதுவரை SPD தனக்கு பிரதம மந்திரி பதவி கொடுக்கப்பட்டால்தான் இடது கட்சியுடன் கூட்டணிக்குத் தயாராகும் என்று கூறியுள்ளது. 27.4 சதவிகிதத்துடன் இடது கட்சி SPD ஐ விட (18.5 சதவிகிதம்) மிக அதிக வாக்குகள் பெற்ற நிலையில், இந்த நிபந்தனையை ஏற்கத் தயாராக இருக்காது எனலாம்.

சாக்சனியில் FDP, பசுமைவாதிகளை தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் வாக்குளை இழந்தன. தேர்தல் வாக்குப்பதிவு 2004 உடன் ஒப்பிடும்போது 7.4 சதவிகிதம் குறைந்தது; பாதி வாக்காளர்கள்தான் வாக்களித்தனர். 1990 èOTM CDU கிட்டத்தட்ட 60 சதவிகித ஆதரவைப் பெற முடிந்தது. இம்முறை அதன் ஆதரவு 40 சதவிகிதத்திற்கு குறைந்துவிட்டது. 2004ல் சாக்சோனியில் முதல் தடவையாக அதன் ஒற்றை இலக்க முடிவைப் பதிவு செய்த SPD இம்முறை 10 சதவிகித அடையாளத்தை தாண்டியது; ஆனால் குறைந்த வாக்காளர் வாக்குப்பதிவினால் வாக்குகளை இழந்தது. சாக்சனில் அதன் வலதுசாரி நடைமுறை அரசியலுக்காக இகழ்வுற்றுள்ள இடது கட்சி மூன்று புள்ளிகளை இழந்து 20.6 சதவிகித வாக்குகளைத்தான் கொண்டது.

தீவிர வலதான NPD போருக்குப் பிந்தைய ஜேர்மனிய வரலாற்றில் மாநில பாராளுமன்றத்தில் அதன் நிலையை தக்க வைத்துக் கொண்டது. 2004 உடன் ஒப்பிடும்போது அது வாக்குகளை இழந்தது; அப்பொழுது அது SPD பெற்ற வாக்குகளைப் போலவே பெற்றது, ஆனால் ஐந்து சதவிகிதத் தடையைக் கடக்க முடிந்தது.

கடந்த ஞாயிறு நடந்த மாநிலத் தேர்தலின் முடிவு அரசியல் நடைமுறைக்கும் தொழிலாள வர்க்கத்தின் பரந்த மக்கள் பிரிவின் உணர்வுகளுக்கும் இடையே இருக்கும் பெரிய பிளவைப் பிரதிபலிக்கிறது. பெருகிய முறையில் வாக்காளர்கள் பதிவு செய்யாதது, முற்றிலும் இருக்கும் அரசியல் உறவுகளை தடைக்குட்படுத்துவது என்ற போக்கை மாற்றும் விதத்தில், சார்லாந்து மற்றும் துரிஞ்சியாவில் சிறந்ததற்கு மாற முடியுமோ என்ற சிறு நம்பிக்கை ஆயிரக்கணக்கில் மக்களைத் திரட்ட போதுமானதாக இருந்தது. CDU, FDP ஆகியவற்றின் கூட்டணி என்ற வாய்ப்பு பல கருத்துக் கணிப்பு அமைப்புக்களால் கூறப்பட்டுள்ளது; கூட்டாட்சித் தேர்தலுக்கு நான்கு வாரங்களுக்கு முன்பு கடுமையான அடியைச் சந்தித்துள்ள கன்சர்வேடிவ் முகாம் விரும்புவதும் அதுதான்.

ஆனால் சார்லாந்து, துரிஞ்சியாவில் வழிவகை செய்துள்ள இந்த அரசியல் சாய்வு SPD, இடது கட்சியினால் திகைப்பிற்கு கண்டிப்பாக உட்படுத்தப்படும். ஏற்கனவே SPD துரிஞ்சியிலும் சார்லாந்திலும் பெரும் கூட்டணி பற்றி சிந்திக்கிறது; அதே நேரத்தில் SPD தலைமை இடது கட்சியுடன் கூட்டாட்சி மட்டத்தில் கூட்டணி இல்லை என்றுகூறிவிட்டது; இந்த மாதம் புண்ட் ஸ்டாக் தேர்தலுக்குப் பிறகு இம்முடிவு வந்துள்ளது.

சமீபத்திய CDU சங்கடத்தை அடுத்து, SPD இப்பொழுது அதன் வேட்பாளர் Frank-Walter Sterinmeier செப்டம்பர் இறுதியில் பசுமை வாதிகள் மற்றும் FDP யின் வணிக்சார்பு உடையவர்கள் ஆதரவுடன்--CDU, பவேரியத் தளத்தை கொண்ட CSU, மற்றும் FDP பெரும்பான்மை பெறாவிட்டால்-- அதிபர் ஆகலாம் என்று எதிர்பார்க்கிறது. "கறுப்பு-மஞ்சள் (முறையே CDU/CSU மற்றும் FDP உடைய வண்ணங்கள்) இந்நாட்டில் விரும்பப்படவில்லை." என்று ஒரு நிம்மதியடைந்திருந்த ஸ்டீன்மையர் தேர்தல் இரவன்று தன்னுடைய கட்சி ஆதரவாளர்களுடன் களித்திருக்கையில் முழங்கினார். அதே நேரத்தில் ஸ்டீன்மையர் கூட்டாட்சித் தேர்தலுக்கு பின்னர் நிலவும் பெரும் கூட்டணி தொடர்வது இல்லை என்றும் கூறவில்லை.

ஆனால் இடது கட்சி மற்றும் SPD கூட்டணிகள் சார்லாந்து, துரிஞ்சியாவில் அமைக்கப்பட்டாலும், பெரும்பாலான மக்களுடைய நிலைமையில் கணிசமான மாற்றம் ஏதும் இராது. அத்தகைய நிர்வாகம் அடிப்படையில் CDU விட்ட இடத்தில் இருந்துதான் தொடரும். இடது கட்சியும் அதன் முன்னோடிக் கட்சியான PDS என்னும் Party of Democratic Socialism ம் எட்டு ஆண்டுகளுக்கு SPD உடன் கூட்டணியாக ஆட்சி நடத்தியபோது, மற்றும் பல கிழக்கு ஜேர்மனிய நகராட்சிகளிலும் அதிகாரத்தை கொண்டிருந்தபோது, கட்சி தன்னுடைய கொள்கைகளை வங்கிகள், பெரு வணிகத்தின் நலன்களுக்கு தாழ்த்திக் கொண்டது. எங்கு அது அரசாங்கத்தில் நுழைந்தாலும், 2007ல் கிழக்கு ஜேர்மனிய ஸ்ராலினிச PDS மற்றும் அதிருப்தியடைந்த SPD ஆதரவாளர்களின் இணைப்பினால் அமைக்கப்பட்ட கட்சியான இடது கட்சி, முன்னாள் கட்சித் தலைவர் லாபோன்டைன் உட்பட, அதன் கொள்கைகளை நிதிய மற்றும் பெரு வணிக நலன்களால் சரிந்துவிட்ட பட்ஜேட்டின் நடைமுறை கட்டுப்பாட்டிற்கு தாழ்த்திக் கொண்டுவிட்டது.

பெருகும் சமூக அதிருப்தியை திசைதிருப்ப இடது கட்சி இடது வனப்புரைகளை கூற முற்படுகிறது; அதிருப்தியை கெடுதல் பயக்காத வகையில் திருப்ப முற்படுகிறது. சமூகச் சீர்திருத்தம் பற்றிய அதன் உறுதிமொழிகளை செயல்படுத்தும் விருப்பமோ, திறனோ அதற்கு கிடையாது. உலகப் பொருளாதார நெருக்கடிச் சூழ்நிலையில், நிதிய உயரடுக்கின் சக்தியை சவால் செய்யாமல் ஒரு சமூக பிரச்சினைகூட தீர்க்கப்பட முடியாது; அதுதான் பொருளாதார, சமூக வாழ்வின் மீது மேலாதிக்கம் கொண்டுள்ளது. அத்தகைய செயலைச் செய்ய இடது கட்சி பெரிதும் தயங்கும். அதற்கு மாறாக அது 1960, 1970 களில் இருந்த சமூகச் சீர்திருத்த அரசியல் வகைக்கு மீண்டும் திரும்பும் வாய்ப்பை ஊக்குவிக்க முற்படுகிறது; அவையோ உலகெங்கிலும் இருக்கும் அரசாங்கங்களால் நீண்ட காலம் முன்னரே கைவிடப்பட்டுவிட்டன.

இடது கட்சியின் அவநம்பிக்கை அரசியலில் இருந்து தவிர்க்க முடியாமல் விளையும் பெரும் திகைப்பும் ஏமாற்றமும் வலது சாரிக்கு நன்மையாக போயிற்று. இவ்விதத்தில் NPD புதுப்பித்த முறையில் சாக்சோனி மாநில பாராளுமன்றத்தில் நுழைந்தது ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

ஜனநாயக உரிமைகள்மீதான அச்சுறுத்தல், சமூக சமத்துவமின்மை அதிகரிப்பு மற்றும் இராணுவவாதத்திற்கு ஒரு சர்வதேச சோசலிச விடையை முன்னெடுக்கும் பொருட்டு சோசலிச சமத்துவக் கட்சி (Partei fur Soziale Gleichheit-PSG) பாராளுமன்றத் தேர்தல்களில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய வெகுஜன அரசியல் கட்சியை கட்டியமைக்கப் போராடுகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved