World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: SEP public meeting to launch election campaign

இலங்கை: தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுக்க சோ.ச.க. பொதுக் கூட்டம்

7 September 2009

Back to screen version

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள் (ஐ.எஸ்.எஸ்.ஈ.) அமைப்பும் தென் மாகாண சபைக்கான தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுப்பதன் பேரில் கரையோர நகரான அம்பலங்கொடையில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளன. கட்சி காலி மாவட்டத்தில் 26 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

சோ.ச.க. வடக்கு கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்புக்கு முடிவுகட்டவும், ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவும் மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு முடிவுகட்டும் சோசலிச வேலைத் திட்டத்துக்காகவும் இந்த தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் முடிவு, சமாதானத்தையும் சுபீட்சத்தையும் கொண்டுவராது, மாறாக, தொழிலாள வர்க்கத்தினதும் கிராமப்புற வறியவர்களதும் சமூக நிலைமைகள் மீதான தாக்குதல்களை புதுப்பிக்கும் என கட்சி எச்சரிக்கின்றது.

அரசாங்கத்தின் குற்றவியல் யுத்தத்திற்கு தீவின் தெற்கில் உள்ள உழைக்கும் மக்கள் ஏற்கனவே பெரும் விலை செலுத்தியுள்ளனர். பொருளாதார தேவையின் நிமித்தம் இராணுவத்தில் சேரத் தள்ளப்பட்ட இளைஞர்கள் பீரங்கிக்கு இரையாக்கப்பட்டனர். அரசாங்கம் வெகுஜனங்களை அலட்சியம் செய்வது அது 2004ல் அழிவுகரமான சுனாமியின் போது அது பிரதிபலித்த முறையில் அம்பலத்துக்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள் இன்னமும் ஒழுங்கான வீடுகள் இன்றி உள்ளனர்.

ஆழமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, உழைக்கும் மக்கள் மீது சுமைகளைத் திணிக்க ஒரு புதிய "பொருளாதார யுத்தத்தை" அறிவித்துள்ளார். எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்க யுத்தத்தின் போது கட்டியெழுப்பப்பட்ட பொலிஸ் அரச வழிமுறைகளை பயன்டுத்த அவர் தயங்கப்போவதில்லை. அரசாங்கம் 280,000 தமிழ் பொது மக்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருப்பதன் முக்கியத்துவம் இதுவே.

ஒரு மாற்றீட்டு சோசலிச முன்நோக்கின் அடிப்படையில் அணிதிரள்வதன் மூலம் மட்டுமே அடிப்படை உரிமைகளை தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களால் பாதுகாத்துக்கொள்ள முடியும். இராஜபக்ஷ அரசாங்கத்துக்கும் ஆளும் வர்க்கத்தின் சகல கட்சிகளுக்கும் எதிராக தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கம் ஒன்றுக்காகப் போராடுவதன் பேரில், சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்கு சோ.ச.க. அழைப்பு விடுக்கின்றது.

இந்த இன்றியமையாத அரசியல் பிரச்சினைகளைப் பற்றி கலந்துரையாட எமது பொதுக்க கூட்டத்துக்கு வருகை தருமாறு தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்தி ஜீவிகளுக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

இடம்: மீனவர் கூட்ட மண்டபம், அம்பலங்கொட

காலம்: 10 செப்டெம்பர் 2009 வியாழக்கிழமை மாலை 4 மணி.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved