World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India: Victimized Foxconn and BYD workers speak out

இந்தியா: பாதிக்கப்பட்ட பாக்ஸ்கான் மற்றும் BYD தொழிலாளர்கள் பேசுகின்றனர்

By a WSWS Reporting Team
11 December 2010
Back to screen version

தென்னிந்திய மாநிலமான தமிழகத்தில் சென்ற மாதத்தில் பாக்ஸ்கான் மற்றும் BYD எலெக்ட்ரானிக்ஸ் ஆலைகளைச் சேர்ந்த பத்தாயிரம் தொழிலாளர்கள் பங்கேற்ற போர்க்குணமிக்க போராட்டங்கள் இந்திய தொழிற் சங்கங்களின் மையத்தால் (சிஐடியு) திடீரென்று முடித்து வைக்கப்பட்டது.

மாநிலத்தின் திமுக அரசாங்கத்திடம் இருந்தான எதிர்ப்பு, போலிஸ் அடக்குமுறை, மற்றும் “கருங்காலிகளாக” ஏழை கிராமவாசிகளை நிறுவனங்கள் பயன்படுத்துவது ஆகியவற்றின் காரணத்தால் வேலைநிறுத்தங்கள் வெற்றிகரமாய் நடத்தி முடிக்கப்பட முடியவில்லை என்று சிஐடியு தெரிவித்தது. பாக்ஸ்கான் மற்றும் BYD நிறுவனங்கள் தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கைகளில் (சொல்லும்படியான ஊதிய உயர்வு, ஒப்பந்தத் தொழிலாளர்களை “நிரந்தரமாக்குவது”, மற்றும் தொழிற்சங்க அங்கீகாரம்) எதனையும் ஒப்புக் கொள்ளவில்லை என்பதோடு வேலைநிறுத்தத்தில் முன்னணியில் நின்ற 41 சாதாரண தொழிலாளர்களை (பாக்ஸ்கானில் 24 பேர்,  BYDயில் 17 பேர்) வேலைநீக்கம் செய்திருந்தது என்கிற நிலையிலும் தொழிலாளர்களை வேலைக்குத் திரும்புவதற்கு சிஐடியு உத்தரவிட்டது.

சிஐடியு என்பது ஸ்ராலினிச இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் (சிபிஎம்) இணைப்பு கொண்ட தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகும். இந்த கட்சி தான் 2008 ஜூலை வரை மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுத்து வந்த இடது முன்னணி என்கிற நாடாளுமன்றத் தொகுப்பில் தலைமை அங்கத்தவராய் உள்ளது. திமுக கட்சி ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முக்கிய பாகமாக இருக்கும் கட்சிகளில் ஒன்றாக இருக்கிறது.

பாதிக்கப்பட்ட பாக்ஸ்கான் மற்றும் BYD தொழிலாளர்கள் பலருடனும் அதேபோல் இந்த நாடுகடந்த நிறுவனங்களில் தமிழகத்தில் வேலை செய்யும் மற்ற தொழிலாளர்களுடனும் சமீபத்தில் உலக சோசலிச வலைத் தளத்தின் செய்தியாளர்கள் பேசினர்.

BYD தொழிலாளியான முனுசாமி கூறியதாவது: “மூன்று வருடங்களாய் நான் BYD நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். நிரந்தர ஊழியர் தான் [ஒப்பந்தத் தொழிலாளி அல்ல]. என் ஊர் மதுரை (தமிழ்நாட்டின் தென்கோடியில் இருக்கிறது) ஆனால் பூந்தமல்லியில் ஒரு அறையில் தான் தங்கியிருக்கிறேன். எனக்கு நிறுவனத்திற்கு சென்று சேருவதற்கு 45 நிமிடங்கள் ஆகும். எனக்கு மாத சம்பளம் ரூ. 4800 (106 அமெரிக்க டாலர்) வழங்கப்படுகிறது. அறை வாடகைக்கு 500 ரூபாய் போய் விடும். சுமார் 3,000 ரூபாய் (66 அமெரிக்க டாலர்) எனது சாப்பாடு மற்றும் மற்ற செலவுகளுக்குப் போய் விடுகிறது. வீட்டிற்கு என்னால் 1500 ரூபாய் (33 அமெரிக்க டாலர்) தான் அனுப்ப முடியும்.

வீட்டிற்கு அனுப்ப முடிந்ததே கொஞ்ச பணம் தான். நிறுவனத்தில் இருந்து நீக்கிய பின்னர் இப்போது பொருளாதார ரீதியாக மோசமாய் பாதிக்கப்பட்டிருக்கிறோம்.

மாநில அரசாங்கமும் BYD நிர்வாகத்துக்கு சாதகமாகத் தான் செயல்படுகிறது. BYD தொழிலாளர்கள் 12 மணி நேர ஷிப்டுகளில் வேலை செய்வது இப்போது தான் தங்களுக்கே தெரியும் என்று அரசாங்கம் சொல்கிறது!

நிறுவனத்திற்கு ஐஎஸ்ஓ அந்தஸ்து வழங்கலாமா என்பதற்கு அரசாங்க அதிகாரிகள் ஆய்வு நடத்த வந்தபோது தொழிலாளர்கள் 8 மணி நேர ஷிப்டுகளில் வேலை பார்த்தார்களா அல்லது அதற்கு கூடுதலான நேரங்களுக்கு வேலை பார்த்தார்களா என்பதைப் பற்றி அவர்கள் கவலையேபடவில்லை. எட்டுமணி நேர வேலைக்கு ஒரு 10,000 ரூபாயாவது கொடுத்தால் ஏதோ எங்களால் கொஞ்சம் சமாளித்து வாழ முடியும்.

இந்த அரசாங்கம் பாக்ஸ்கான் தொழிலாளர்களை ஒடுக்கியதோடு அவர்களுக்கு எதிராக இட்டுக் கட்டி குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது. அனைத்து தொழிலாளர்களும் இதனை எதிர்த்துப் போராட வேண்டும். அரசாங்கம் BYD போன்ற நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரிக் குறைப்பு மற்றும் பிற சலுகைகளை எல்லாம் வழங்குகிறது, ஆனால் தொழிலாளர்களுக்கு வருடந்தோறும் சராசரியாக  200 ரூபாய் (4 அமெரிக்க டாலர்) தான் ஊதியம் உயர்த்தப்படுகிறது.

எங்கள் குடும்பத்தில் நான்கு பேர் இருக்கிறோம். எல்லோருமே விவசாய வேலையைத் தான் பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால் 2002ல் வறட்சி வந்த சமயத்தில் விவசாயம் மீதிருந்த எங்களது நம்பிக்கை பொய்த்துப் போனது. இதனையடுத்து நானும் எனது மூன்று தம்பிகளும் கிராமத்தை விட்டு கரூர், கோயம்புத்தூர், மதுரை மற்றும் சென்னை ஆகிய தொழில் நகரங்களுக்கு வேலை தேடி வந்து விட்டோம். இப்போது என் அப்பா மட்டும் தான் விவசாய வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதாக அரசாங்கம் பீற்றிக் கொள்கிறது. ஆனால் ஒரு மின்சார இணைப்பைப் பெற விவசாயிகள் 50,000 ரூபாய் (1,111 அமெரிக்க டாலர்) கொடுக்க வேண்டியிருக்கிறது. அப்போதும் கூட அடிக்கடி மின்வெட்டை வேறு சந்திக்க வேண்டியிருக்கிறது.

திமுகவைச் சேர்ந்த தொழிலாளர் முன்னேற்ற முன்னணி (Labour Progressive Front -LPF) நிர்வாகத்துடன் இரகசியமாகக் கைகோர்த்து செயல்படுவதால் BYD நிர்வாகம் அந்த சங்கத்திற்கு மட்டுமே அங்கீகாரம் வழங்குகிறது.

இன்னொரு BYD தொழிலாளி உ.சோ...விடம் கூறினார்: “ஊதிய உயர்வு கோரியும் வேலைநீக்கம் செய்யப்பட்ட 17 பேரையும் மீண்டும் சேர்க்கக் கோரியும் நாங்கள் மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடலாம். 12 மணி நேர ஷிப்டில் வேலைபார்த்தபோது எங்களுக்கு 6,500 ரூபாய் (144 அமெரிக்க டாலர்) கிடைத்தது. ஆனால் வேலைநிறுத்தத்திற்குப் பின்னர் இப்போது ஷிப்டுகள் 8 மணி நேரமாக குறைக்கப்பட்டிருக்கின்றன. இப்போது மூன்று ஷிப்டுகள் இருக்கின்றன. ஒரு நிரந்தரத் தொழிலாளிக்கு சம்பளமாக மாதம் 4,000 ரூபாய் (88 அமெரிக்க டாலர்) கிடைக்கும். ஒரு ஒப்பந்தத் தொழிலாளிக்கு 3,800 ரூபாய் (84 அமெரிக்க டாலர்) கிடைக்கும். உணவக வசதியையும் குறைத்து விட்டார்கள். அதனால், பல தொழிலாளர்களும் வெகு தூரம் பயணம் செய்து வந்து காலி வயிற்றுடன் வேலை செய்கிறார்கள்.”

இன்னொரு BYD தொழிலாளி (நிறுவனத்திற்கு அஞ்சி இவரும் பெயர் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்) கூறினார்: “வேலைநிறுத்தம் முடிந்ததில் இருந்து, சின்னச்சின்ன தவறுகளுக்கும் கூட BYD ஊழியர்களுக்கு எதிராய் நடவடிக்கை எடுக்கிறது. முன்னதாக ஆலையில் ஒரு குழு உருவாக்க நிர்வாகம் ஒப்புக் கொண்டிருந்தது. ஆனால் இப்போதுகரும் புள்ளிவாங்காத தொழிலாளர்கள் மட்டுமே அந்த குழுவில் இடம்பெற முடியும் என்று நிர்வாகம் கூறுகிறது.

பாதிக்கப்பட்ட BYD தொழிலாளி சிலம்பரசன் கூறியதாவது: “மூன்றரை வருடங்களாய் இந்நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். நாங்கள் வேலையில் சேர்ந்த சமயத்தில் ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் ஒருமுறை ஊதிய உயர்வு கிட்டும் என்று கூறினார்கள். ஆனால் இரண்டு வருடங்களாக, வருடத்திற்கு 200 ரூபாய் (4 அமெரிக்க டாலர்) மட்டுமே ஊதியம் உயர்த்தப்படுகிறது. 12 மணி நேர ஷிப்டில் வேலை பார்த்த சமயத்தில், வெகுதூரக் கிராமங்களில் இருந்து வந்து போவதற்கே ஒருநாளில் 5 அல்லது 6 மணி நேரம் போய் விடுவதால் அவர்கள் ஒரு சில மணி நேரங்கள் தான் தூங்கவே முடியும்.

”BYD முதலில் எங்களை நோக்கியாவின் ஒப்பந்த ஊழியர்களாய் தான் பணியமர்த்தியது. அவர்கள் வெளி மாவட்ட கிராமங்களில் இருந்து தொழிலாளர்களை எடுத்தார்கள். வேலை கொடுப்பதற்கு எங்கள் ஒவ்வொருவரிடம் இருந்தும் அவர்கள் 25,000 ரூபாயில் (555 அமெரிக்க டாலர்) இருந்து 50,000 ரூபாய் (1,111 அமெரிக்க டாலர்) வரை பிடுங்கிக் கொண்டார்கள்.

ஒரு பாக்ஸ்கான் தொழிலாளி உ.சோ...விடம் கூறினார்: “நிறுவனத்தின் ஜனநாயகவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக நீதிமன்றங்களுக்குப் போனால் அது வெகு காலம் இழுக்கும் என்று சிஐடியு தலைவர்கள் எங்களுக்குக் கூறினார்கள். ஏறக்குறைய இரண்டு மாதம் வேலைநிறுத்தம் நடந்ததால் பொருளாதாரச் சிக்கலும் தொழிலாளர்களை பாதித்தது. அந்நிலையில் நிர்வாகத்தால் எங்கள் மீது திணிக்கப்பட்ட நிலைமைகளை ஏற்றுக் கொள்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. அடுத்த வருட ஆரம்பத்தில் மாநில சட்டமன்ற தேர்தல் முடிந்து ஒரு புதிய அரசாங்கம் வரும்போது நல்ல மாற்றங்கள் நடக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

நாங்கள் வேலைக்குத் திரும்பிய பின் நிர்வாகம் ஒரு சுற்றறிக்கையை ஒட்டியிருந்தது. (திமுகவின்) LPF உடன் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைவதாக அந்த செய்தி தெரிவித்தது. இரண்டு முதல் மூன்று வருடங்கள் வரை நிறுவனத்தில் வேலை பார்த்திருக்கக் கூடிய நிரந்தரத் தொழிலாளர்கள் [ஒப்பந்தத் தொழிலாளர்கள் அல்லாதவர்கள்] 7,000 ரூபாய் (155 அமெரிக்க டாலர்) சம்பள உயர்வும், மூன்று அல்லது நான்கு வருடங்கள் வேலை பார்த்தவர்கள் 9,000 ரூபாய் (200 அமெரிக்க டாலர்) சம்பள உயர்வும் பெறுவார்கள். இது தவிர தொழிலாளர்களுக்கு திருவிழா போனசாக 3,000 ரூபாய் (66 அமெரிக்க டாலர்) வழங்கப்பட இருக்கிறது. திருமணம் செய்து கொள்ளும் தொழிலாளர்களுக்கு 25,000 ரூபாய் முன்பணமாய் கிடைக்கும், அத்தொகை மாதந்தோறும் அவர்களது சம்பளங்களில் இருந்து பிடித்துக் கொள்ளப்படும்.

ஆயினும் LPFல் இணைவதற்கு கையெழுத்திட்டால் தான் இந்த சலுகைகளைப் பெறுவதற்கான தகுதி எங்களுக்குக் கிட்டும். தொழிலாளர்களில் பலரும் இந்த நிர்ப்பந்தத்தின் கீழ் LPFல் இணைய கையெழுத்திட்டிருக்கின்றனர். எஞ்சிய சில நூறு பேரும் விரைவில் LPFல் இணைய கையெழுத்திட்டு விடுவார்கள்.

வேலைநீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் வேலையில் சேர்ப்பதற்கு பாக்ஸ்கான் நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்கக் கேட்டு சில பாதிக்கப்பட்ட தொழிலாளிகள் மாநிலத்தின் தொழிலாளர் நலத்துறை அமைச்சரான தா.மோ.அன்பரசனைச் சென்று பார்த்தனர். வேலைஇழந்தவர்களில் 15 பேரை திரும்பவும் எடுப்பதற்கு நிர்வாகத்துக்கு பரிந்துரைக்க யோசிக்கலாம் என்று அவர் அவர்களிடம் கூறினார். ஆனால் எஞ்சிய ஒன்பது பேரும்தீவிரவாதிகள்என்று கூறிய அவர் அவர்களை குறைந்தபட்சம் உடனடியாகவேனும் திரும்ப எடுக்க முடியாது என்று கூறி விட்டார். அந்த ஒன்பது பேரைப் பற்றி குறிப்பிடுகையில்சின்ன வேலையா அவர்கள் செய்திருக்கிறார்கள்?” என்று கோபமுற்றார் அன்பரசன்.

பாதிக்கப்பட்ட பாக்ஸ்கான் தொழிலாளி ராம்ராஜ் கூறினார்: “மாநில அரசாங்கம் தொழிலாளிகளுக்கு எதிராக மிகக் கடுமையாக நடந்து கொள்கிறது. நிர்வாகத்தின் தாக்குதலுக்கும் மற்றும் போலிசின் தாக்குதலுக்கும் முகம் கொடுக்கும் வேளையில், ’எல்லா தொழிலாளர்களின் உரிமைகளையும் பாதுகாக்க பரந்த வகையில் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கு சிஐடியு ஏன் முயற்சி மேற்கொள்ளவில்லைஎன்கிற கேள்வியை தொழிலாளர்களில் பலரும் எழுப்புகின்றனர்.”