World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

SEP Sri Lanka public meeting: Defend Julian Assange and Wikileaks!

இலங்கை சோ... நடத்தும் பொதுக் கூட்டம்: ஜூலியன் அசாங்கே மற்றும் விக்கிலீக்ஸையும் பாதுகாக்க

15 December 2010

Back to screen version

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ...), விக்கிலீக்ஸ் மற்றும் அதன் ஸ்தாபகர் ஜூலியன் அசாங்கேயின் ஜனநாயக உரிமைகளை காக்கவும் இலங்கையிலும் உலகம் பூராவும் உள்ள தொழிலாள வர்க்கத்துக்கு விக்கிலீக்ஸ் செய்த அம்பலப்படுத்தல்களின் அரசியல் முக்கியத்துவத்தைப் பற்றிக் கலந்துரையாடவும் டிசம்பர் 21 அன்று கொழும்பில் பொதுக் கூட்டமொன்றை நடத்தவுள்ளது.

அமெரிக்காவும் ஏனைய அரசாங்கங்களும், தமது எதிரிகளிடம் இருந்து தமது பொருளாதார மூலோபாய நலன்களை பாதுகாக்க முயற்சிக்கும் நிலையில், அவற்றின் குற்றவியல் நடவடிக்கைகள் மற்றும் அரசியல் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தியதற்காக, விக்கிலீக்ஸும் அசாங்கேயும் திட்டமிடப்பட்ட ஒரு சர்வதேச வேட்டையாடலை எதிர்கொண்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொழும்பு அரசாங்கத்தின் யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு ஒபாமா நிர்வாகமும் உடந்தையாய் இருந்ததை இலங்கை தொடர்பான அமெரிக்க தகவல்கள் வெளிப்படுத்துகின்றன. ஆயிரக்கணக்கான தமிழ் பொது மக்கள் கொல்லப்பட்டமைக்கு ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவும் ஏனைய உயர்மட்ட தலைவர்களும் பொறுப்பாளிகள் என்பதை வாஷிங்டன் நன்கு அறிந்திருந்த போதிலும், அவர்களின் பெயர்களை பகிரங்கமாக அறிவிக்கவில்லை.

விக்கிலீக்ஸுக்கு எதிரான சட்ட நடவடிக்கையானது பேச்சு சுதந்திரம், சுதந்திரமான இணையத்தள பிரவேசம் மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீது உக்கிரமடைந்துவரும் சர்வதேச தாக்குதல்களின் ஒரு பாகமாகும். அமெரிக்காவும் ஏனைய அரசாங்கங்களும் யுத்தத்துக்கான தயாரிப்புக்களை கலந்துரையாடுவதோடு நிதி நெருக்கடியின் சுமைகளை தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்துகின்ற நிலையில், அவை மக்களை இருட்டுக்குள் வைத்திருக்க தீர்மானித்திருக்கின்றன.

எனவே விக்கிலீக்ஸ் மற்றும் ஜூலியன் அசாங்கேயை பாதுகாப்பதானது ஜனநாயக உரிமைகளையும் உலகம் பூராவும் உள்ள உழைக்கும் மக்களது சமூகத் தேவைகளையும் காப்பதற்கான பரந்த போராட்டத்தின் பாகமாகும். இத்தகைய விடயங்களை கலந்துரையாடுவதற்கு கொழும்பில் நடக்கும் கூட்டத்துக்கு வருகை தருமாறு எமது அனைத்து வாசகர்களுக்கும் சோ... ஆதரவாளர்களுக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

இடம்: ஜயவர்தன கேந்திரம், நகர மண்டபம், கொழும்பு

திகதியும் நேரமும்: டிசம்பர் 21 மாலை 4.00 மணி