World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக் 

Up to 50 refugees drown off Australian coast after authorities fail to intercept boat

ஆஸ்திரேலிய கடலோரத்தையொட்டி அதிகாரிகள் படகை நிறுத்த முடியாமல் போனதில் கிட்டத்தட்ட 50 அகதிகள் மூழ்கினர்

By Patrick O’Connor
16 December 2010
Back to screen version

நேற்று கிறிஸ்துமஸ் தீவின் கரையோரத்தில் கிட்டத்தட்ட 100 அகதிகளைக் கொண்டு வந்த ஒரு படகு கொடூரமாக மூழ்கியதில் கில்லார்டின் தொழிற் கட்சி அரசாங்கம் மற்றும் ஆஸ்திரேலிய அதிகாரிகளுக்கு நேரடிப் பொறுப்பு உள்ளதைப் பற்றித் தீவிரமான வினாக்கள் எழுப்பப்படுகின்றன. இந்தோனேசியாவிற்கும் இந்தியப் பெருங்கடலில் ஒரு சிறிய ஆஸ்திரேலியப் புறச் சாவடியான கிறஸ்துமஸ் தீவிற்கும் இடையேயுள்ள பகுதி ஆஸ்திரேலிய பகுதியில் மிக அதிகமாகக் கண்காணிப்பிற்கு உட்படும் பகுதிகளில் ஒன்றாகும். கடற்படை அல்லது சுங்க அதிகாரிகளால் பொதுவாக நடப்பது போல் அவர்களுடைய மரப்படகு பல முறை கனமான அலைகளால் மோதப்பட்டு சுண்ணாம்புக் குன்றின் சிகரங்களில் தாக்குண்ட நிலையில் சிதைய இருந்தபோது, ஏன் இந்த அகதிகள் தடுத்து நிறுத்தப்படவில்லை?

இந்த நிகழ்வு “SIE V X” அகதிகள் படகு அக்டோபர் 2001 வட மேற்கு ஆஸ்திரேலியாவில் மூழ்கடிக்கப்பட்டதை நினைவிற்குக் கொண்டுவருகிறது. அதில் 365 பேர் இறந்து போயினர். பின்னர் வெளிவந்த சான்றுகள் ஆஸ்திரேலிய அரசாங்கமும் கடற்படையும் படகைப் பற்றி அறிந்திருக்கலாம் என்றும் அதன் ஆபத்திற்குட்பட்ட தன்மையை அறிந்திருக்கக்கூடும் என்றும் ஆனால் தலையிட்டு அகதிகளைக் காப்பாற்ற ஏதும் செய்யவில்லை என்பதைக் காட்டின.

நேற்று சிதைந்த படகில் இருந்தவர்களுள் 28 பேர் பெண்கள், சிறு குழந்தைகள் உட்பட பெரும்பாலான ஈராக்கிய, ஈரானிய தஞ்சம் கோருபவர்கள். இவர்கள் இறந்துவிட்டது உறுதியாகியுள்ளது. 44 பேர் காப்பாற்றப்பட்டனர், அவற்றுள் 11 பேர் குழந்தைகள் எனக் கூறப்படுகிறது. எத்தனை பேர் காணாமல் போயினர் என்பது பற்றி இன்னும் தெரியவில்லை.

உள்ளூர் கிறிஸ்துமஸ் தீவில் வசிப்பவர்கள் அகதிகள் பெரும் ஓலச் சத்தத்தில் எழுந்தனர். அப்பொழுது படகு இன்னும் Flying Fish Cove ல் உள்ள சுண்ணாம்பு குன்றின் உச்சிப்பகுதியில் முட்டி மோதி மிதந்து கொண்டிருந்தது. West Australian செய்தித்தாளிடம் மிக் டாசோன் தான் காலை 5 மணி அளவில் வேலைக்குப் புறப்படத் தயார் செய்துகொண்டிருந்தபோது படகு பெரும் அலையினால் தள்ளப்பட்ட 3-4 மீட்டர்கள் உயரத்தில் ஏறி இறங்கிய வண்ணம் இருந்தது என்றார். “அதில் இருந்தவர்கள் தங்கள் கைகளை அசைத்துஆஸ்திரேலியா, ஆஸ்திரேலியா, உதவி, உதவி, உதவி”” என்று கூவியதாகவும் அவர் கூறினார். படகின் எஞ்சின் நின்றுவிட்டது, நீரில் நிறைய டீசல் கொட்டியிருந்தது என்றும் டாசோன் கூறினார். மற்ற உள்ளூர்வாசிகளும் உதவியை நாடி ஓலமிடுகையில் பெண்கள் கைக்குழந்தைகளை உயரத்தூக்கிப் பிடித்த வண்ணம் இருந்தனர் என்று தெரிவித்தனர்.

சற்று நேரத்திற்குப் பின்னர் -மாறுபட்ட தகவல்களின்படி அரை மணி அல்லது அதற்கும் சற்று அதிகமாககுன்றின்மீது ஒரு பெரிய அலை அதைத் தள்ளியபோது படகு சிதைந்து கவிழ்ந்தது. கிறிஸ்துமஸ் தீவு ஒரு கடலடி மலை உச்சி, கடலடிப் பாறைகளோ இயற்கையான தடுப்புக்களோ இல்லாத ஒரூ தீவு. கிறிஸ்துமஸ் தீவின் டஜன் கணக்கான மக்கள் தஞ்சம் கோருவோரைப் பெரும் தைரியத்துடன் காப்பாற்ற முயன்று, உயிர்காக்கும் ஜாக்கெட்டுக்களை வீசி, கயிறுகளையும் ஏணிகளையும் நீரில் கொடுத்தனர். சிலர் மனிதச் சங்கிலிகளையும் அமைத்து நீரில் மூழ்குபவர்களை இழுக்கப் பெரும் முயற்சியையும் மேற்கொண்டனர். அவர்களே கூர்மையான பாறைகளில் மோதிய நிலையில் மருத்துவ உதவி பின்னர் தேவைப்பட்டது.

நீரில் தள்ளப்பட்ட பல அகதிகள் உயிர்காக்கும் ஜாக்கெட்டுக்களையும் மரப்படகில் இருந்து சிதைந்து விழுந்த பலகைகளையும் பிடித்துப் பற்றிக் கொண்டு அவர்கள் மீட்கப்படுவதற்கு முன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடினர்.

அதிகாரிகளின் மீட்பு விடையிறுப்பு பற்றி பல வினாக்கள் விடையளிக்கப்படாமல் உள்ளன. உத்தியோகபூர்வ அறிக்கைகளின்படி, இரு ஆஸ்திரேலியக் கப்பல்கள் பெரும் விபத்து நடந்த நேரத்தில் அப்பகுதியில் இருந்தனகடற்படையின் HMAS Pirie, மற்றும் சுங்க இலாக்காவின் கப்பல் ACV Triton.  இரு கப்பல்களுமே மற்ற அகதிகள் படகுகளில் இருந்த பிற அகதிகிளை முந்தைய நாட்களில் கொண்டு சென்றுள்ளனர். உள்ளூர் வாசிகள் உடைந்த படகை முதலில் பார்த்ததில் இருந்து ஒரு மணிநேரத்திற்குப் பின் பாறைகளில் மோதி உடைந்த நேரம் வரை அவை ஏன் அகதிகளைக் காப்பாற்ற முயலவில்லை என்பது தெளிவாகத் தெரியவில்லை. சில தகவல்களின்படி, அகதிகள் படகு அது மூழ்குவதற்கு முன்னதாக HMAS Pirie யினால்பின்தொடரப்பட்டது”. ஆயினும்கூட சிறிய கடற்படை, சுங்க ரப்பர் படகுகள் நீரில் பயணிகள் மூழ்கத்தொடங்கிய பின்னரே பயன்படுத்தப்பட்டன.

இக்கப்பல்கள் [HMAS Pirie, ACV Triton] விபத்திற்கு முன் கொண்டிருந்த நடமாட்டம் பற்றி அதிகாரிகள் மௌனம் சாதிக்கின்றனர்என்று West Australian  தகவல் கொடுத்துள்ளது. “நேற்று சோகநிகழ்வைப் பற்றி எந்தக் கேள்விக்கும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பதிலளிக்க மறுத்துவிட்டனர். எல்லா வினாக்களும் எல்லைப் பாதுகாப்புக் கட்டுப்பாட்டைக் கவனிக்கும் சுங்க அதிகாரிகளிடம் கேட்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவிலிருந்து புறப்பட்டதிலிருந்து அகதிகள் படகு கண்காணிப்பின் கீழ் இருந்ததா என்று நேற்று கேட்டபோது, துணைப் பிரதம மந்திரி வேன் ஸ்வான் விடையிறுத்தார்: “ஒரு சோகமான நிகழ்வு இப்பொழுதுதான் ஏற்பட்டுள்ளது என்பதை நான் கூறலாமா? இது ஒன்றும் அது பற்றி விவாதிக்க உகந்த நேரம் இல்லை.” ஆஸ்திரேலிய எல்லை அதிகாரிகள் கப்பல் வருகையை முன்கூட்டியே அறிந்து அது கிறிஸ்துமஸ் தீவின் ஆபத்தான கடலோரப் பகுதியை புயல் காற்று நிலைமையில் செல்ல அனுமதித்ததா என்ற வினாவிவாதத்திற்குகேட்கப்படவில்லை, உண்மை வினாவிற்கு விடையறியும் பொருட்டுத்தான் கேட்கப்பட்டது.

பிரதம மந்திரி ஜூலியா கில்லார்ட் சோகத்தை முன்னிட்டு தன் விடுமுறையை நேற்று தள்ளிவைத்தார். அகதிகளுக்கான பொதுமக்களின் பரிவு அதிகம் வெளிப்பட்டுள்ளதை நன்கு அறிந்த நிலையில் இவ்வாறு செய்தார். அகதிகளின் கொடூரமான நிலை புகைப்படங்களிலும், வீடியோக்களிலும் கிறிஸ்துமஸ் தீவு மக்களால் எடுக்கப்பட்டிருந்தன. என்ன நடந்தது என்பது பற்றி வாடிக்கையான பயனற்ற அறிக்கையை தவிர கில்லார்ட் கூடுதலான தகவல்களை, என்ன நடந்தது என்பது பற்றி  இன்னமும் அளிக்கவில்லை.

குடியேற்றத்துறை மந்திரி கிறைஸ் போவன் ஒரு மெல்போர்ன் வானொலி நிலையத்திடம் இன்று காலை படகு கண்காணிப்பில் இருந்ததா என்பது இனிமேல்தான் உறுதி செய்யப்பட வேண்டும் என்றார்: “எனக்குத் தெரிந்தவரையில் அது கண்காணிப்பில் இல்லை, ஆனால் இது பற்றி முன்கூட்டியே இப்பொழுது கூறுவதற்கில்லைஎன்றார் அவர்.

ஒரு முழு விளக்கத்தையும் விரைவில் அளிக்குமாறு அரசாங்கம் சவாலுக்கு உட்பட்டுள்ளது. “நாம் வான்வழி, கடல்வழிக் கண்காணிப்பைக் கொண்டுள்ளோம், நம்முடைய மிகத்திறைமையான எல்லைப் பாதுகாப்பு செயற்பாடுகள் அங்கு உள்ளன. ஆனால் இப்படகு அமைதியற்ற கடலில் வருவதற்கு ஏன் அவை அனுமதித்தன? விடைகள் தேவை. தேடி மீட்கும் குழுவிற்கு இந்தோனேசியாவிலிருந்து இப்படகு வருகிறது என்று தகவல்கள் தெரியும். எத்தனை பேர் அதில் இருந்தனர் என்பதும் தெரியும். எனவே அவர்களைச் சந்திக்க இவர்கள் ஏன் செல்லவில்லை? அவர்கள் செல்லும் கடற்பகுதி கொந்தளிப்பில் உள்ளது என்று அறிந்தும் அது ஏன் அங்கு செல்ல அனுமதிக்கப்பட்டது.

2001ம் ஆண்டு இழிவுற்றதம்பனாஅகதிகள் விவகாரம் பற்றி ஒரு புத்தகம் எழுதியவரும், செய்தியாளருமான டேவிட் மார் கூறுகிறார்: “இச்சோகத்தின் முக்கிய திறவுகோல் அந்த மட்டமான வானிலையில் படகு ஏன் பாறைகளுக்கு அருகே செல்ல அனுமதிக்கப்பட்டது என்பதுதான். … கடற்படை மற்றும் சுங்க அதிகாரிகள் எங்கும் உள்ளனர். ஒருவரும் கண்டுபிடிக்காமல் ஒரு படகு அங்கு செல்லுதல் என்பது இயலாத செயல். சிலர் தாங்களே துறைமுகத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படுவர். ஆனால் அப்படகுகளை கடலில் தொலைவில் அழைத்துச் சென்று பயணிகளைத் தங்கள் கப்பலில் ஏற்றிப் பின் தீவிற்கு அனுப்புவதுதான் வழக்கம். இம்முறை அவ்வாறு நடைபெறவில்லை.”

அதிகாரிகளின் மீட்பு விடையிறுப்புக்களைப் பற்றியும் மார் மற்றொரு முக்கிய கேள்வியை எழுப்பினார்: “[கிறிஸ்துமஸ் தீவில் வசிக்கும்] நீரில் மூழ்கித் தேடுபவர்களுக்கு அழைப்புவிடுத்து பாறைகளுக்கு அப்பால் இன்னும் கூடுதலான உயிர்காக்கும் ஜாக்கெட்டுக்களை வீசுவதற்குக் கொண்டுவந்தன. ஆனால் கப்பல்துறையில் குடியேற்ற அதிகாரிகள் வைத்திருந்த நூற்றுக்கணக்கான உயிர்காக்கும் ஜாக்கெட்டுக்கள் எங்கு போயின?’

முன்னாள் தூதரும், SIEV X பேரழிவு பற்றி உத்தியோகபூர்வமாக மூடிமறைத்தவை பற்றித் தகவல் கொடுக்கப்பட்ட ஒரு புத்தகத்தின் ஆசிரியருமான Tony Kevin, கில்லார்ட்  அரசாங்கம் உடனடியாக ஒரு சுயாதீன விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளார். மேற்கு ஆஸ்திரேலிய உத்தியோகபூர்வ இறப்பு விசாரிப்பவரிடம் விசாரணையை ஒப்புவித்தால், அதுமூன்று நாட்களில் செய்திகளில் வரும் பின்னர் அது நீதிமன்றத்தில் இரு ஆண்டுகள் தேங்கி நிற்கும்என்று ABC வானொலி நிலையத்திடம் குறிப்பிட்டார்.

கிறிஸ்துமஸ் தீவையொட்டி இருந்த மோசமான வானிலை அகதிகள் படகைத் தடுத்து நிறுத்த முடியாமல் போனதற்கு வெளிப்படையாக காரணமா என்று கெவின் கேட்கப்பட்டார். “இல்லைஅவர் உறுதியாகக் கூறினார். “எல்லைக் கட்டுப்பாட்டு கப்பல்கள் நல்ல முறையில் கருவிகளைக் கொண்டுள்ளன. அவற்றை இயக்கும் மாலுமிக் குழுக்கள் அனைத்து வானிலைச் சூழலிலும் செயல்படப் பயிற்சி பெற்றவர்கள். அவர்கள் ஒன்றும் ஞாயிறு விடுமுறையில் அழைத்துச் செல்லும் கடல் வீரர்கள் அல்ல, கடலில் அவர்கள் எந்த வானிலைச் சூழ்நிலைமையிலும் படகுகளைத் தடுத்துப் பிடித்துவிட முடியும். ஏன் இந்தப் படகு, வாடிக்கையாக நடப்பது போல், கிறிஸ்துமஸ் தீவிலிருந்து பாதுகாப்பாக 12 அல்லது 24 கடல் மைல்கள் தொலைவிற்குச் செல்லுமாறு உத்தரவிடப்படவில்லை என்பதுதான் கேள்வி.”

SIEV X 2001ல் மூழ்கியதும், அப்பொழுது குடியேற்றத் துறை மந்திரியாக இருந்த பிலிப் ரட்டோக் 353 இறப்புக்கள்என்பது சற்று கூடுதலாக இருக்கும். ஏனெனில் சிலர் இதில் உள்ள ஆபத்துக்களைப் பற்றி நன்கு அறிந்திருப்பர்என்றார். வேறுவிதமாகக் கூறினால், ஆஸ்திரேலியாவை அடையும் முயற்சியில் அகதிகளைத் தடுப்பதற்கு பேரழிவும் பயன்படும் என்று அரசாங்கம் நினைத்திருக்கலாம். அப்பொழுது எழுப்பப்பட வேண்டிய வினா: அரசாங்கம் மற்றும்/அல்லது இராணுவம்/அரசாங்க அதிகாரிகள் இத்தகைய கணக்கீடு செய்து வேண்டுமென்றே நேற்று கிறிஸ்துமஸ் தீவை படகு அடைய அனுமதித்தார்களா?

பேரழிவு முழு உணர்வுடனான திட்டத்தையொட்டி அல்ல பெரும் புறக்கணிப்பினால் என்று பின்னர் தெரியவந்தாலும்கூட, இறுதிப் பொறுப்பு முழுவதும் தொழிற் கட்சி அரசாங்கம் மற்றும் முழு ஆஸ்திரேலிய அரசியல் ஸ்தாபனத்திடம்தான் உள்ளது. “எல்லைப்பாதுகாப்புஎன்னும் பிற்போக்குத்தன உரைகள் பசுமைவாதிகள் உட்பட அனைத்து பாராளுமன்றக் கட்சிகளாலும் எப்பொழுதும் கூறப்படுகின்றன. குற்ற விசாரணையில் இருந்து தப்பி ஓடிவரும் எவருக்கும் சட்டப்பூர்வ, ஜனநாயக உரிமை எந்நாட்டிலும் தஞ்சம் நாடுவதற்கு உள்ளது என்ற நிலையில், தொடர்ச்சியான ஆஸ்திரேலிய அரசாங்கங்களின் விடையிறுப்பு, தொழிற் கட்சி, லிபரல் என, அகதிகளை இழிவுபடுத்தி, பலிகடாக்கள் ஆக ஆக்குவது என்றுதான் உள்ளது. இது வெள்ளை ஆஸ்திரேலிய இழிந்த சிந்தனை மரபுகளிலிருந்து பற்றியெடுக்கப்பட்டுள்ளதுநாட்டின் கடல்பிரிவு எல்லைகளை இன்னும் இராணுவ மயமாக்கும் முயற்சியாகும்.

2007ல் பதவியில் இருந்த ஹோவர்ட் அரசாங்கத்தின் தஞ்சம் கோரியவர்களை நடத்திய தீய முறைக்கு எதிராக இருந்த மகத்தான விரோதப் போக்கிற்கு இடையே தொழிற் கட்சி பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆயினும்கூட கில்லார்ட் அரசாங்கம் சிறிதும் இடைவெளி இன்றி அதே கொள்கையைத்தான் தொடர்கிறது. ஒவ்வொரு புறத்திலும் அகதிகள் இடர்ப்படுகின்றனர் 2,700க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட தஞ்சம் நாடுவோர் முறையாக அங்கீகரிக்கப்பட்டு ஆஸ்திரேலியாவில் அனுமதிக்கப்படுவதற்கு முன் இப்பொழுது இந்தோனேசியாவில் உள்ளனர். இந்த அகதிகளில் 500 பேரை மட்டும் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏற்பதாக ஆஸ்திரேலிய அரசாங்கம் உறுதியளித்தது. ஆனால் Age இத்திட்டத்தின்கீழ் 100க்கும் குறைவானவர்களே வந்து அடைந்துள்ளனர் என்றும் இன்னும் 50 பேர் வருவதற்குத்தான் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறது. உத்தியோகபூர்வமாக புகலிடத்திற்கு அதிக வாய்ப்புக்கள் இல்லை என்ற நிலையில் தஞ்சம் கோருவோரும் அவர்களுடைய குடும்பங்களும் தங்களின் உயிர்களின் பொறுப்பைத் தாமே கையிலெடுத்து இந்தோனேசியாவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கான பயணத்தை நெரிசல் நிறைந்த, பாதுகாப்பற்ற கப்பல்களில் மேற்கொள்கின்றனர்.

நேற்றைய பேரழிவு சமீபத்திய, தொடர்ச்சியான அகதிகளின் மோசமான இறப்புக்களில் ஒன்றாகும். தொழிற் கட்சி அதிகாரத்திற்கு வந்த பின்னர் இந்நாட்டை அடைய முயற்சிக்கையில் ஏற்கனவே கிட்டத்தட்ட 170 பேர் மூழ்கிவிட்டனர். மற்றும் மூன்று அகதிகள் சமீபத்திய மாதங்களில் காவல் மையங்களில் தற்கொலை செய்துகொண்டனர். கில்லார்ட் அரசாங்கம் முன்பு ஹோவர்ட் அரசாங்கம் SIEV X  இறப்புக்களைப் பயன்படுத்தியது போலவே இப்பொழுது செய்துவருகிறது. இந்த ஆண்டு ஜூன்மாதம், ஒரு குடியேற்றத்துறை வீடியோ விளம்பரத்தை அது YouTube ல் வெளியிட்டது. அதன் நோக்கம் தஞ்சம் கோருவோரை ஊக்கம் இழக்கச் செய்வது ஆகும். அவற்றுள் ஒன்றில் நீரில் மூழ்கும் நபரின் காட்சியும் இருந்தது.