World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

IG Metall deal paves way for austerity campaign against German workers

IG Metall உடன்பாடு ஜேர்மனிய தொழிலாளர்களுக்கு எதிராக கடும் சிக்கன நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கிறது

By Peter Schwarz
23 February 2010

Back to screen version

கடந்த வாரம் ஜேர்மனியின் மிகப் பெரிய தொழிற்சங்கம்--IG Metall-- வடக்கு ரைன் வெஸ்ட்பாலியாவில் உலோகத் தொழில், மின் தொழில் துறைகளில் 700,000 தொழிலாளர்களுக்கும் மேலானவர்களுக்காக புதிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தம் முழு ஜேர்மனிய தொழிலாளர் உறவுகளுக்கும் முன்னோடி அமைக்கும் என்று கருதப்படுகிறது. சமூக அழுத்தங்கள் பெருகியுள்ள நேரத்தில், இந்த ஒப்பந்தம் அரசாங்கத்திற்கு மிகவும் தேவைப்படும் ஆதரவைக் கொடுக்கிறது.

IG Metall எந்த ஊதிய கோரிக்கையையும் முன்வைக்காமல் முதலாளிகளுடன் பேச்சு வார்த்தைகளை நடத்தியது: இதுவே மிக அசாதாரணமானது ஆகும். இப்பொழுது அது உண்மை ஊதியங்களை குறைத்திருக்கும், முதலாளிகளுக்கு பணி நேரத்தை ஒருதலைப்பட்சமாக குறைக்கும், அதையொட்டி குறைந்த ஊதியத்தை கொடுக்கும் அதிகாரத்தைத் தரும் ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளது. தொழிலாளர்கள் இவ்விதத்தில் நிறுவனத்தின் கைப்பாவைகளாக மாறுகின்றனர்; எந்த நேரத்திலும் வீட்டிற்கு அனுப்பப்டலாம் அல்லது ஆலைக்கு உத்தரவிற்கு ஏற்ப கொண்டுவரப்படலாம்.

23 மாதங்களுக்கு பொருந்தும், அதுவும் முதல் ஆண்டில் ஒரே ஒரு முறை 320 யூரோக்கள் வழங்கும் ஒப்பந்தத்தை அளிப்பது--அதாவது ஊழியர்கள் மாதம் ஒன்றிற்கு கூடுதலாக 27 யூரோக்களை பெறுவர் என்னும் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. ஏப்ரல் 1, 2010ல் இருந்து ஊதியங்கள் 2.7 சதவிகிதம் உயரும். இது ஆண்டு சராசரி என்னும் விதத்தில் 1.4 சதிகிதம் என்றுதான் ஆகும்; இது தற்போதைய விலை ஏற்றத்தில் கணிசமாக குறைவு ஆகும். IG Metall கையெழுத்திட்டிருந்த முந்தைய ஒப்பந்தம் இரு கட்ட ஊதிய உயர்விற்கு வகை செய்து 18 மாதங்களில் 4.2 சதவிகிதம் உயர்த்தியிருந்தது.

ஆனால் புதிய ஒப்பந்தத்தின் சாராம்சம் IG Metall பாசாங்குத்தனமாக "வேலைப் பாதுகாப்பு" என்று குறிப்பிட்டிருப்பதுதான். "வருங்காலத்தில் வேலை" என்ற போலிப் பெயரில் அது ஊழியர்களை பணி நேர வாரத்தை 28 மணிகளுக்கு குறைந்த ஊதியங்களுக்கு முதலாளிகளை குறைக்க வைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. தொழிலாளர்கள் 29.5 மணி நேரத்திற்குத்தான் ஊதியம் பெறுவர்; பலருக்கும் இது வாழ்க்கை நடத்த போதாத வருமான இழப்பைக் கொடுத்துவிடும்.

இந்த கட்டுப்பாடுகள் பின் வேலைத்துறை மூலம் நிதி கிடைக்கும் குறுகிய காலப் பணி எதுவும் முடிந்த பின்னர் நடைமுறைக்கு வரும் இதற்கு ஈடாக முதலாளிகள் ஆறு மாதங்களுக்கு பணிநீக்கத்தை தவிர்க்க வேண்டும்; எப்படியும் சட்டப்படி கொடுக்கப்பட வேண்டிய முன்னறிவிப்புக் காலத்தைவிட இது ஒன்றும் அதிகம் இல்லை.

தொழிற்சங்கமும் முதலாளிகளும் உடன்பட்டுள்ள அரசாங்க குறுகிய நேரப் பணி நிதிக்கு ஒரு கூட்டாட்சி உதவித்தொகையையும் கோரியுள்ளனர். அரசாங்கம் குறுகிய கால பணி நேரத்திற்கு சமூக காப்பீட்டு அளிப்பில் குறைப்பிற்கு ஒப்புக் கொண்டால்தான் நடைமுறைக்கு வரும். ஏற்கவே பெரிதும் குறைக்கப்பட்டுவிட்ட சமூக காப்பீட்டு நிதிகள் இன்னும் குறைக்கப்பட்டுவிடும்; இறுதியில் ஊழியர்களும், நலன் பெறுபவர்களுக்கும் அதிக கட்டணங்கள் கொடுத்தல், நலன்கள் குறைப்பு ஆகியவற்றில் முடியும்.

வடக்கு ரைன் வெஸ்ட்பாலியாவில் ஏற்கப்பட்டுள்ள ஒப்பந்தம் நாடு முழுவதும் 3.4 மில்லியன் ஊழியர்கள் இருக்கும் உலோகத் தொழில்துறையில் செயல்படுத்தப்படும். இது IG Metall ன் தலைவர் பெர்த்தோல்ட் ஹ்யூபரால் பரிந்துரைக்கப்பட்டது; அவர் முழுத் தொழிற்சங்க தலைமையுடன் Dusseldorf ற்கு பேச்சுவார்த்தைகளுக்கு சென்றிருந்தார். உடன்பாட்டின் நாடுதழுவிய முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், Gesamtmetall தொழிலாளர்கள் கூட்டமைப்பின் தலைவரும் பேச்சு வார்த்தைகளில் கலந்து கொண்டார்.

இந்த ஒப்பந்தம் மற்ற தொழில்துறைகளுக்கும் வழிகாட்டி நெறியைக் கொடுக்கிறது. மிகக் குறுகிய காலத்தில் நடந்த பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் இந்த உடன்பாடு வந்துள்ளது; போருக்குப் பிந்தைய ஜேர்மனியல் மோசமான பொருளாதார நெருக்கடிக்கு நடுவே பூசல்கள் ஏதும் வராமல் தடுக்க இது உதவும்.

மொத்தத்தில் 9.4 மில்லியன் தொழிலாளர்களுக்கு பொருந்தும் ஒப்பந்தங்கள் இந்த ஆண்டு பேச்சுவார்த்தைகளுக்கு வருகின்றன. குறிப்பாக இது பொதுத்துறையில், கூட்டாட்சி, உள்ளூர் மட்டத்தில் வருவதுடன் பல சமூக காப்பீட்டு திட்டங்கள், மற்றும் இராசயனத் தொழிலுக்கும் நடைபெறும். IG Chemie, IG Metall போலவே ஊதிய அதிகரிப்புத் திட்டம் எதையும் முன்வைக்கவில்லை; ஆனால் பொதுத்துறை தொழிற்சங்கமான வேர்டி, அதன் உறுப்பினர்கள் அழுத்தத்தில் பேரில் 5 சதவிகித ஊதியத்திற்கு முறையீடு செய்துள்ளது; உண்மையில் ஆராய்ந்தால் அது போலித்தனம் என்று தெரியவரும்.

காக்பிட் விமானிகள் தொழிற்சங்கம், ஜேர்மனிய தொழிசங்க கூட்டமைப்பு DGB யுடன் சேராதது, லுப்ட்ஹான்சாவில் நான்கு நாள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது; இது ஜேர்மனியின் முக்கியமான விமான நிறுவனத்தை முடக்கும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது. விமானிகள் இன்னும் வேலைகள் வெளியே கொடுக்கப்படுவதை, குறிப்பாக மிகக் குறைந்த ஊதியங்கள் கொடுக்கும் நிறுவப்பட்டுள்ள துணை நிறுவனங்களுக்கு அளிப்பதை தவிர்க்க விரும்புகின்றன. Deutsche Bahn இரயில் சாரதிகளின் இரண்டு ஆண்டுகள் முன் நடந்த வேலைநிறுத்தத்தை போலவே, செய்தி ஊடகம் லுப்ட்ஹான்சா விமான ஓட்டிகளுக்கு எதிராக தங்கள் நிலையைக் காக்க அவர்கள் நடத்தும் போராட்டத்திற்கு எதிராக வெறித்தனமாக பிரச்சாரத்தை நடத்துகிறது.

IG Metall உடன்பட்டுள்ள ஒப்பந்தம் பொதுத்துறைத் தொழிலாளர்கள், விமானிகள் ஆகியோரை வேண்டுமென்றே முதுகில் குத்தும் முயற்சி ஆகும். நிதி மந்திரி CDU வின் Wolfgang Schauble மிருகத்தனமான கடும் சிக்கன நடவடிக்கைகளை தயாரித்து வருகையில், துணை அதிபர் FDP யின் கைடோ வெஸ்டர்வெல்லே சமூகப்பாதுகாப்பு பெறுபவர்களுக்கு எதிரான சூனிய வேட்டை நடத்தி வருகையில் IG Metall தொழில்துறை அமைதியை காப்பதற்கு அனைத்தையும் செய்துவருகிறது. ஜேர்மனிய அரசாங்கம் கிரேக்க அரசாங்கத்திற்கு அதன் பொதுத்துறை ஊதியம், சமூக நலன்களைப் பெரிதும் குறைக்க அழுத்தம் கொடுத்துவரும் நேரத்தில இது வந்துள்ளது.

IG Metall, அதன் உறுப்பினர்கள் நலனைப் பிரதிபலிக்காமல், அரசாங்கத்திற்கும் பெருநிறுவனத்திற்கும் தொழில்துறை பொலிஸ் சக்தி போல் நடந்துவருகிறது என்பதைத்தான் மீண்டும் நிரூபிக்கிறது. வணிகங்கள் செல்வக் கொழிப்பில் இருப்பது, மக்களில் பரந்த பிரிவு வறிய நிலையில் தள்ளப்பட்டுள்ளது பற்றிய பெரும் சீற்றம் உள்ள சூழ்நிலையில், இந்த அமைப்பு ஒரு ஐரோப்பா முழுவதும் தொழிலாளர்கள் பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் ஆணைகளுக்கு எதிராக திரண்டுவிடாமல் தடுப்பதற்கு அனைத்தையும் கையாள்கிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved