World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Final SEP election meeting in Colombo on January 23

கொழும்பில் ஜனவரி 23 அன்று சோசலிச சமத்துவக் கட்சியின் இறுதி தேர்தல் கூட்டம்

21 January 2010

Back to screen version

சோசலிச சமத்துவக் கட்சியும் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள் அமைப்பும் கட்சியின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஜனவரி 23 அன்று கொழும்பில் இறுதியாக பொதுக் கூட்டமொன்றை நடத்தவுள்ளன.

சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர் விஜே டயஸ் மட்டுமே உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளையும் வாழ்க்கைத் தரத்தையும் காக்க ஒரு சோசலிச முன்நோக்கை அபிவிருத்தி செய்கின்றார். சோசலிச சமத்துவக் கட்சி. தெற்காசியாவிலும் சர்வதேச ரீதியிலும் சோசலிசத்துக்கான போராட்டத்தின் பாகமாக இலங்கையில் தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்காகப் போராடுகின்றது.

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவும் அவரது எதிரி ஜெனரல் சரத் பொன்சேகாவும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியுடன் முடிவடைந்த யுத்தத்தின் அழிவுகரமான விளைவுகளுக்கு பொறுப்பாளிகளாவர். சமாதானமும் சுபீட்சமும் கொண்ட ஒரு புதிய யுகத்தைப் பற்றி இராஜபக்ஷ வழங்கிய வாக்குறுதிகள் பொய் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்தவுடனேயே அடுத்த அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமைகள் மீது புதிய கொடூரத் தாக்குதல்களை முன்னெடுக்கும்.

சோசலிச சமத்துவக் கட்சி அடுத்து வரவுள்ள வர்க்க யுத்தத்திற்கு உழைக்கும் மக்களை தயார்செய்வதற்காக பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றது. நாம் எமது கூட்டத்துக்கு வருகை தந்து, சோ.ச.க. யின் சோசலிச வேலைத் திட்டம் மற்றும் முன்நோக்கு பற்றிய இந்த முக்கியமான கலந்துரையாடலில் பங்குபற்றுமாறு தொழிலாளர்கள், குடும்பப் பெண்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.

பிரதான உரை: சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் விஜே டயஸ்

இடம்: கொழும்பு பொது நூலக கேட்போர் கூடம்

காலம்: ஜனவரி 23, சனிக்கிழமை மாலை 3.00 மணி


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved