World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக் 

Australian PM Gillard, and the reactionary nostrum of “border protection”

ஆஸ்திரேலியப் பிரதம மந்திரி கில்லர்ட், “எல்லைப் பாதுகாப்பு” எனும் பிற்போக்குத்தன ஆரூடம்

By Nick Beams
9 July 2010

Back to screen version

செவ்வாயன்று Lowy Institute ல் ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் தஞ்சம் கோருவோர் கொள்கை சீரமைக்கப்படும் என்று தன்னுடைய உரையில் அறிவிக்கையில், 120 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய தொழிற் கட்சியின் கொள்கைகளாகவும், சித்தாந்தத்தின் மைய ஆதாரமாக உள்ள தேசியவாத, வெளிநாட்டவரிடம் கடும் வெறுப்பு காட்டுதல், இனவெறிக் கோட்பாடுகள் என்ற தொகுப்பில் இருந்து கருத்துக்களை ஆஸ்திரேலியப் பிரதம மந்திரி ஜூலியா கில்லர்ட் எடுத்து உதிர்த்துள்ளார்.

இந்த உரையை அடுத்து அவருடைய திட்டமான கிழக்குத் திமோரில் ஒரு “பிராந்திய வழிவகை மையம்”, “ஒப்புதல் பெறா வருகைகளை” சமாளிக்கவும், ஆஸ்திரேலிய மண்ணில் அகதிகள் அந்தஸ்து பற்றிய அவர்கள் விண்ணப்பங்கள் பரிசீலிப்பதை தடுக்கவும் உள்ளதைப் பற்றி பெரும்பாலான செய்தி ஊடகத்தின் கவனம் திரும்பியுள்ளது.

கிழக்குத் திமோர் அரசாங்கத்திடம் தெரிவிக்கப்படாமலேயே சிட்னியில் அறிவிக்கப்பட்ட இத்திட்டம் முன்னாள் ஹோவர்ட் அரசாங்கத்தின் “பசிபிக் தீர்வு” என்று அழைக்கப்பட்டதற்கு தொழிற் கட்சியின் எதிர்ப்பில் இருந்த மோசடியை அம்பலப்படுத்தியுள்ளது. ஹோவர்டின் கொள்கைப்படி, தஞ்சம் கோருபவர்கள் நௌரு, பாபுவா நியூ கினியில் உள்ள மனுஸ் தீவில் உள்ள ஒதுங்கிய, வெறுமை நிறைந்த காவல் நிலையங்களில் அவர்களுடைய விண்ணப்பங்கள் “பரிசீலிக்கப்படும் வரை” ஐந்து ஆண்டுகள் அடைக்கப்பட்டிருந்தனர்.

ஆனால், கில்லர்டின் உரையில் இருக்கும் இப்பிற்போக்குத்தன மையக்கருத்து அவர் அழைத்த “இந்தியப் பெருங்கடல் தீர்வு” என்பதில் இல்லாமல் அது தளத்தைக் கொண்டிருந்த முன்கருத்துக்களில் இருந்து வருவதாகும்.

கொள்கை விளக்க உரைக்கு முந்தைய நாட்களில், கில்லர்ட் தான் சில “கவலைகள்” பற்றி விடையிறுப்பதாக வலியுறுத்தினார். குறிப்பாக சிட்னி, மெல்போர்ன் மேற்குப் புறநகரங்களில் தஞ்சம் கோருவோர், மற்றும் “எல்லைப் பாதுகாப்பு” பற்றியும், அனைத்து இப்பிரச்சினையில் உள்ள “அரசியல் சரியான தன்மைகள்” விரைவில் நிறுத்தப்பட வேண்டியது பற்றியும். முன்னாள் வலதுசாரியும் வெளி நாட்டவரிடம் கடும் வெறுப்பைக் காட்டும் ஒரு தேசியக் கட்சியின் தலைவரான பவுலின் ஹான்சன் அவர் “ முழு உடன்பாட்டை ” பிரதமருடன் கொண்டிருப்பதாக அறிவித்தார்.

ஹான்சனின் இனவெறி, வெளி நாட்டவரிடம் கடும் வெறுப்பு காட்டுதல் ஆகியவை “சமூகக் கவலைகளுக்கு” குரல் கொடுக்கின்றன என்று வலியுறுத்திய ஹோவர்டை போலவே, கில்லர்டும் தான் ஒரு “எல்லைப் பாதுகாப்பு, தஞ்சம் கோருவோர் பிரச்சினைகள் பற்றி வெளிப்படையான, நேர்மையான, தேசிய உரையாடலை” விரும்புவதாகக் கூறினார்.

உண்மையில், “கவலைகள் பற்றிக் குரல் கொடுப்பதற்கு பதிலாக”, கில்லர்ட் அத்தகைய அகதிகள்-எதிர்ப்புணர்வைத் தூண்டிவிடத்தான் முயல்கிறார். இது புறநகர்ப்பகுதிகளில் வசிக்கும் தொழிலாள வர்க்கத்தின் மோசமாகிக் கொண்டுவரும் சமூக, பொருளாதார நிலைமைகளின் விளைவுகளில் இருந்து எழுந்துள்ள அழுத்தங்களை ஒரு பிற்போக்குத்தன திசைக்குத் திருப்புவதாகும். அவருடைய நோக்கம் பெருகிய வேலையின்மை, அதிகரித்து வரும் போக்குவரத்துப் பிரச்சினைகள், உயரும் வீட்டு விலைகள், சமூக நலன்கள் இல்லாத தன்மை இன்னும் பல பிரச்சினைகளை அரசாங்கத்திடம் இருந்து திருப்பி அவைகளை குடியேறுபவர்கள் மற்றும் அகதிகள் பக்கம் திருப்புவது ஆகும்.

படகுகளில் வருவது மிகக் குறைந்த எண்ணிக்கையிலான அகதிகள் தான் என்பதை ஒப்புக் கொண்டவிதத்தில் கில்லர்ட் தன் உரையைத் தொடங்கினார். குடியுரிமைகள் வக்கீல் Julia Baumside தற்போதைய “படகு மூலம் வரும் மக்களின்” வருகை விகிதத்தில் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் (100,000 பேர் அமரக்கூடியது) நிரம்புவதற்கு 20 ஆண்டுகள் பிடிக்கும் என்ற கருத்துக்கள் “சரியானவைதான்” என்று அவர் ஒப்புக் கொண்டார். படகுகள் மூலம் ஆஸ்திரேலியாவிற்கு தஞ்சம் கோரி வருபவர்கள் எண்ணிக்கை “மிக, மிகக் குறைவு.”

ஆனால், இதற்குப் பின்னர் மறைமுகமான கருத்துக்கள் நிறைந்த தொடர்ச்சியான தகவல்கள், தஞ்சம் கோருவோரின் மீது விரோதப் போக்கை தோற்றுவித்து எரியூட்டும் வகையில் கவனமாக வெளிவந்தன.

அவருடைய உரை முழுவதும் கில்லர்ட் “ஒப்புதல் இன்றி வரும் வருகைகள்”, “ஒப்புதல் இல்லாமல் மக்களின் நடமாட்டங்கள்” பற்றிக் குறிப்பிட்டு, ஆஸ்திரேலிய கூட்டாட்சிப் பொலிஸ் 5,000 பேருக்கும் மேலான வெளிநாட்டு மக்கள் “நம் நிலப்பகுதிக்குச் சட்டவிரோதமாக” வருவதைக் கடந்த செப்டம்பரில் இருந்து தடுத்துள்ளது என்றார். இக்கருத்துக்கள் படகோ, வேறுவிதத்திலோ தஞ்சம் கோருவோர் வருவது சட்டவிரோதம், எனவே குற்றவாளிகளால் மேற்கோள்ளப்படுகிறது என்ற உணர்வைத் தோற்றுவிக்கும் நோக்கத்தைக் கொண்டவை ஆகும். உண்மையில், ஆஸ்திரேலியா கையெழுத்திட்டுள்ள சர்வதேச சட்ட மரபுகள், அடக்குமுறைக்கும் ஆபத்திற்கும் எதிராக மக்கள் தப்பி ஓடலாம், அவர்களுடைய தஞ்சம் கோரும் உரிமை அவர்கள் விண்ணப்பிக்கும் நாட்டினால் ஏற்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

நீண்ட கால சட்டபூர்வக் கடமைகள் மீதான கில்லர்டின் தாக்குதலுடன், வலதுசாரி வானொலியில் பரபரப்பாகப் பேசுபவர்கள், செய்தி ஊடக வர்ணனையார்கள் மற்றும் ஹான்சனைப் பின்பற்றுவர்களின் அகதிகள் சலுகைகளைப் பெறுகின்றனர் என்னும் வாதங்களை வலியுறுத்தும் நோக்கம் கொண்ட தொடர்ந்த கருத்துக்கள் வெள்ளமென வந்தன.

“தஞ்சம் கோருவோருக்கு” சட்டத்தின் ஆட்சி விதிகள் முறையாக கடைப்பிடிக்கப்பட வேண்டும், “முறையான குடியேற்றத் திட்டத்தைத் தாக்கும் வகையிலும், நியாயமற்ற நலன்களைப் பெறும் வகையிலும் எவரும் இருக்கக் கூடாது” என்றும் கில்லர்ட் வலியுறுத்தினார். எந்த ஆதாரமும் இல்லாமல் தஞ்சம் கோருவோர், சட்டத்தை தவிர்க்கின்றனர் என்ற குற்றச்சாட்டைக் கூறியதோடு மட்டும் இல்லாமல், கில்லர்ட் இன்னும் எதிர்ப்புணர்வைத் தூண்டும் விதத்தில்தான் பேசினார்.

“கடுமையாகத் தாங்களே உழைக்கும் ஆஸ்திரேலியர்கள், இங்கு குடியேற விரும்புவர்கள் சிறப்பு சலுகைகள் பெறக்கூடாது என்பதை விரும்புகின்றனர்” என்று கூறிய கில்லர்ட், பின் தன்னுடைய குடியேற்றப் பின்னணியைப் பற்றியும் கூறினார் (இவர் வேல்ஸில் பிறந்தவர்); சமூகத்தின் மிக வறிய, பாதிப்பிற்கு உட்படக்கூடிய உறுப்பினர்களுக்கு எதிராக உணர்வைத் தூண்டும் வகையில், “என்னுடைய பெற்றோர்களே வாழ்நாள் முழுவதும் கடினமாக உழைத்தனர், மற்றவர்களுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தை ஏற்க முடியாதவர்கள்” என்றும், “அது ஆஸ்திரேலியரின் நியாய உணர்வைத் தாக்கும்” என்றும் அறிவித்தார்.

“ஆஸ்திரேலியாவின் நியாய உணர்வு” பற்றி கில்லர்ட் இழுப்பது அவருடைய பிற்போக்குத்தனத்திற்கு ஒரு நீண்ட, இழிந்த வரலாற்றின் அடிப்படையில் உள்ளது. இனவெறி நிறைந்த வெள்ளை ஆஸ்திரேலியக் கொள்கை, ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக தொழிற் கட்சியின் அரங்கில் மையக் கருத்தாக இருந்தது, எப்பொழுதுமே கணக்கிலா தொழிற் கட்சித் தலைவர்கள் மற்றும் தொழிற் சங்க அதிகாரத்துவத்தினரால், இடதாயினும் வலதாயினும், “ஆஸ்திரேலிய வாழ்க்கை முறையின்” தொடர்ச்சியை உறுதிப்படுத்துகிறது என்று “நியாயப்படுத்தப்பட்டது.” உண்மையில் அந்த வழிவகை, தொழிலாள வர்க்கத்தை அதன் “சொந்த” தேசிய-அரசிற்கு தாழ்த்தி வைத்து அதையொட்டி, முதலாளித்துவ வர்க்கத்திற்கும் தாழ்த்தி வைக்கவே முற்பட்டது.

போருக்குப் பிந்தைய கால பொருளாதார மாற்றங்கள்—பிரிட்டிஷ் பேரரசின் சரிவு, ஆஸ்திரேலிய முதலாளித்துவம் எழுச்சி பெற்று வரும் ஆசியப் பொருளாதாரப் பகுதியுடன் கொண்டுள்ள நெருக்கமான பொருளாதாரப் பிணைப்பு போன்றவை—தொழிற் கட்சியினர் பெயரளவிற்கு வெள்ளை ஆஸ்திரேலியக் கொள்கையை 1960 களின் நடுப்பகுதியிலை கைவிட்டதைக் கண்டது. ஆனால் தாங்கள் தளமாகக் கொண்டிருந்த தேசியவாத, புறநீங்கல்வாத கோட்பாட்டைத் தக்க வைத்தக் கொண்டனர்.

ஹாக், கீட்டங் அரசாங்கங்களின் கீழ் இந்தக் கோட்பாடு 1980 களில் தொடர்ந்த விலை, வருமானங்கள் “ஒப்பந்தங்களுக்கு” அடிப்படையாக இருக்குமாறு இருத்தப்பட்டது. இதையொட்டி ஆஸ்திரேலியப் பொருளாதாரத்தில் “மறு கட்டமைப்பு” என்பது தோன்றி நூறாயிரக்கணக்கான வேலைகள் அழிப்பு ஏற்பட்டன. தொழிற்சங்கங்கள், பெருநிறுவனங்கள் மற்றும் முதலாளித்துவ அரசாங்கத்தின் வெளிப்படையான கருவிகளாக மாறி, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அமைப்புக்கள் அனைத்தும் உடைக்கப்பட்டன. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் “தேசிய நலனை ஒட்டி” இருப்பதாகவும் ஆஸ்திரேலிய முதலாளித்துவம் இதையொட்டி இன்னும் கூடுதலான போட்டித் தன்மையைப் பெறும் என்றும் கூறப்பட்டது.

இப்பொழுது மற்றொரு தொழிற் கட்சி அரசாங்கம் சர்வதேச நிதிய மூலதனத்தின் கோரிக்கைகளான சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்துதல், தொழிலாள வர்க்கத்தின் மீது இன்னும் தாக்குதல்களைக் தொடுத்தல் ஆகியவற்றைச் செயல்படுத்துகையில், கடந்த மூன்று தசாப்தங்களாக மேற்கோள்ளப்பட்ட இக்கொள்கைகளின் விளைவாக எழுந்துள்ள கோபங்கள் மற்றும் அழுத்தங்களை அகதிகள், தஞ்சம் கோருவோர் ஆகியோர் மீது திருப்ப முற்படுகிறது.

இத்தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கம் தன்னை பாதுகாத்துக்கொள்வதானது எந்த அளவிற்கு அது தன் சொந்த அரசியல் சுயாதீனத்தை வளர்க்கிறதோ, அதை ஒட்டித்தான் அமையும். இதில் அகதிகள் பிரச்சினைக்கு சிறிதும் இடமில்லை.

அரசியலில் முழு நனவுடைய தொழிலாளர்களும் இளைஞர்களும் தொழிற் கட்சி அரசாங்கம் மற்றும் லிபரல் கட்சி முன்வைத்திருக்கும் “எல்லைப் பாதுகாப்பு” பற்றிய பிற்போக்குத்தன கணிப்புக்களை தீவிரமாக எதிர்க்கின்றனர். மேலும் அவர்கள் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன நலன்களை பல “சிறிய எல் எழுத்து”—தஞ்சம் கோருவோர், அகதிகள் உரிமைகளைக் காப்பதாகக் கூறும் Burnside, Greens போன்ற தாராளவாத அமைப்புக்களிடம் இருந்தும் வேறுபடுத்தி உணர வேண்டும்.

அவர்கள் கில்லர்ட், ஆப்பட் ஆகியோரின் கொள்கைகளைக் கண்டித்தாலும், இக்குறைகூறுபவர்கள் அடிப்படையில் உடன்பாட்டைத்தான் கொண்டுள்ளனர். இறுதிப் பகுப்பாய்வில் ஒருவித “எல்லைப் பாதுகாப்பு” வேண்டும், குடியேறுபவர்கள், தஞ்சம் கோருவோர் எண்ணிக்கையில் உறுதியான தடுப்புக்கள் தேவை என்பதை ஒப்புக் கொள்ளுகின்றனர். வேறுவிதமாகக் கூறினால், இறுதியில் அவர்கள் 2001 தேர்தல் பிரச்சாரத்தில் “இங்கு எவர் வரவேண்டும், எந்தச் சூழ்நிலையில் வரலாம்” என்பதை நாம் தான் நிர்ணயிப்போம் என்று முன்வைத்த இழிந்த கோஷத்துடன் உடன்படுகின்றனர்—ஒரே வேறுபாடு எந்த விதத்தில் அது செயல்படுத்தப்படுகிறது என்பதுதான்.

அப்பட்டமான பிற்போக்குவாதிகள், தாராளவாதிகள் ஆகியோருக்கு எதிராக ஆஸ்திரேலிய தொழிலாளர்கள், தொழிலாளர்கள் உலகெங்கிலும் பயணிக்கவும், வாழவும், உழைக்கலாம் என்ற அடிப்படை உரிமைகளில் உறுதியாக இருக்க வேண்டும். பணமும் அதை வைத்திருப்போரும் உலகம் முழுவதும் தடையின்றிச் சுற்றுகின்றனர். தொழிலாள வர்க்கமும் அதைவிடக் குறைந்ததைக் கோரக்கூடாது.

இக்கொள்கைக்கான போராட்டம் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன நலன்களை அடைவதை துரிதப்படுத்தும். பெருகும் சமூகப், பொருளாதாரப் பிரச்சினைகளானது குடியேற்றம் மற்றும் அதிக மக்கள் தொகையில் அதிகரிப்பது இல்லை, அதுவும் அகதிகள், தஞ்சம் கோருவோரால் ஏற்படுத்தப்படுவதில்லை, மாறாக முதலாளித்துவப் பொருளாதாரத்தின் உலக நெருக்கடியில் இது வேர்களைக்கொண்டுள்ளது, உலக மக்கள் இலாப முறையின் ஆணைகளுக்கு தாழ்ந்திருப்பதனாலும் ஆகும். இப்பிரச்சினைகள் “எல்லைப் பாதுகாப்பை” ஏற்படுத்துவதால் தீர்க்கப்பட முடியாதவை, மாறாக தனியார் இலாபமுறைக்கு பதிலாக உலகப் பொருளாதாரமானது மனிதத் தேவைகளை நிறைவேற்ற சர்வதேச அளவில் சமூகத்தைப் பொருளாதார மறு கட்டமைப்பை செய்வதும், ஜனநாயக முறையில் திட்டமிட்ட பொருளாதாரத்தை அமைப்பதற்கான இத்தகைய போராட்டத்தின் மூலம் தான் முடியும்.