World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

German chancellor’s austerity measures recall the Weimar Republic

ஜேர்மன் சான்ஸ்லரின் சிக்கன நடவடிக்கைகள் வைமார் குடியரசை நினைவுபடுத்துகின்றன

Ulrich Rippert
10 June 2010

Back to screen version

கடந்த வார இறுதியில் ஜேர்மனிய அரசாங்கம் அறிவித்த 80 பில்லியன் கடும் சிக்கனத் தொகுப்பு, வறியவர்கள்மீது மிருகத்தனத் தாக்குல்களுக்கு அழைப்புவிடுவதுடன் மக்களின் பரந்த பிரிவுகளிடையே சீற்றத்தையும் அதிர்ச்சியையும் தூண்டியுள்ளது.

இந்த வெட்டுக்கள் வேலையற்றோர், சமூகநல உதவியில் குழந்தைகளுக்கு உதவிப்பணம் பெறுதலுக்கு முற்றுப்புள்ளி, வீட்டு நலன்களில் வெப்பமாக்குவதற்கு உதவி நீக்கப்படல், நீண்டகால வேலையில்லாதவர்கள் ஓய்வூதியக் காப்பீட்டுக் கட்டணத்திற்கு நிதியுதவி வழங்குதல் ரத்து செய்யப்படல் ஆகியவற்றைத் தாக்கும் ஆழ்ந்த முறையில் சமூக எதிர்ப்பைக் கொண்டது, நியாயமற்றது, கோழைத்தனமானது என்று பலரும் கருதுகின்றனர். இதற்கிடையில் வங்கிகள், ஊக வணிகர்கள், மற்றும் நெருக்கடிக்குக் காரணமானவர்கள் சிறிதும் பாதிப்பின்றி சமூகநலச் செலவுகளில் குறைப்புக்களுக்கு ஆணையிடுகின்றனர்.

இக்கொள்கையின் ஆத்திரமூட்டும் தன்மை கணிப்பிடப்பட்டதாகும். சமூகத்தின் மிக நலிந்த பிரிவினர்கள் மீதான தாக்குதல் தாராளவாத ஜனநாயக கட்சியின் (FDP) தலைவர் கீடோ வெஸ்டர்வெல்வின் இயல்பான நினைத்ததைச் செய்தல், திமிர்த்தனம், சான்ஸ்லர் அங்கேலா மெர்க்கெல் (CDU) தன்னுடைய பிரச்சினைக்குரிய அரசாங்கக் கூட்டணியைக் காப்பாற்றும் முயற்சி ஆகியவற்றின் விளைவாகும். கடும் சிக்கனப் பொதியின் முக்கியத்துவமோ இன்னும் அடிப்படையானது, நீண்டகால விளைவுகளை உடையது.

இதன் பொருள் ஆளும் உயரடுக்கு நிதிய, பொருளாதார நெருக்கடியின் முழுச் சுமையையும் சாதாரண மக்களின் முதுகுகளில் ஏற்றுவது என முடிவடுத்துள்ளது என்பதாகும். இது பெரும் மோதலை எதிர்கொள்ளாமல் செயல்படுத்தப்பட முடியாது, இறுதியில் ஜனநாயக வழிவகைகளைத் தக்க வைத்துக் கொள்ளுவதுடன் இயைந்து இருக்காது.

இந்த நிகழ்வுகள் வைமார் குடியரசின் கடைசி ஆண்டுகளை நினைவுறுத்துகிறது. இப்பொழுது போல் அப்பொழுதும் ஆளும் வர்க்கம் உலகப் பொருளாதார நெருக்கடியைத் தன்னை கட்டுக்கடங்காமல் செல்வக் கொழிப்பில் ஆழ்த்திக் கொள்ளப் பயன்படுத்தியது. இன்றைய மெர்க்கெலின் சிக்கன நடவடிக்கைகள் போலவே, புரூனிங் அரசாங்கத்தின் அவசரக்கால சட்டங்களுக்கு மாற்றீடு ஏதும் இல்லை என்று அப்பொழுதும் கூறப்பட்டது. இறுதியில் பரந்துபட்ட எதிர்ப்பு பாசிச அச்சுறுத்தல், சர்வாதிகாரம் ஆகிவற்றால் நசுக்கப்பட்டது.

மேர்க்கெல் அரசாங்கம் வர்க்கப் போராட்டத்தில் ஒரு புதிய கட்டத்தை சமூகத்தின் மிக நலிந்த உறுப்பினர்கள் மீது கோழைத்தனத் தாக்குதல் நடத்துவதின் மூலம் திறந்துள்ளது. ஜேர்மன் முதலாளித்துவம் வைமார் பெருந்துயரத்தினை தொடர்ந்து, நாஜிசத்தின் பேரழிவு விளைவுகளைக் கொடுத்த சமூக நடுநிலைமை கொள்கை இனித்திரும்ப முடியாத வகையில் முடிந்துவிட்டது.

தொழிலாளர் வர்க்கம் ஒரு மோதலைத் தவிர்க்க முடியாது. அது பெரும் வர்க்கப் போராட்டங்களுக்குத் தயாரிப்புக்களை மேற்கொள்ள வேண்டும். இது தளராத, முழுமையான அரசியல் மதிப்பீட்டை வேண்டி நிற்கின்றது. .

இதற்கிடையில், மேர்க்கெல், வெஸ்டர்வெல்ல மற்றும் Deutsche Bank தலைமை நிர்வாக அதிகாரி ஜோசப் அக்கர்மான் போன்றோர் பெரும்பாலான மக்கள் தங்கள் சமூகவிரோத அரசியலை நிராகரிக்கின்றனர் என்பதை நன்கு அறிவர். மே மாதத் துவக்கத்தில் நடைபெற்ற வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாத் தேர்தல்கள் CDU, FDP க்குக் கொடுத்த பெரும் அடி இதைத் தெளிவாகக் காட்டுகிறது.

வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட இக்கொள்கைகள் இன்னும் கடுமையான, ஆக்கிரோஷமான வடிவத்தில் தொடரப்படுகின்றன என்பது ஆளும் உயரடுக்கு மக்கள் விருப்பம் பற்றிச் சிறிதும் பொருட்படுத்தவில்லை என்பதை நிரூபணம் செய்கிறது. அரசாங்கத்தின் 80 பில்லியன் யூரோக்கள் குறைப்புத் திட்டம் ஜனநாயகத்தின்மீது தாக்குதலைப் பிரதிபலிப்பதுடன், சர்வாதிகார ஆட்சி வடிவமைப்பை நோக்கி ஓரடி வைக்கிறது.

கிரேக்கம், ஸ்பெயின், போர்த்துக்கல், பிரிட்டன், ஹங்கரி, ருமேனியா, இன்னும் பல ஐரோப்பா முழுவதும் உள்ள அரசாங்கங்கள் அறிவித்துள்ள கடும் சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளுடன் இது இயைந்துள்ளது. அனைத்துமே சர்வதேச நிதிய தன்னல கொள்ளையர் குழு கூறுவதைக் கேட்டு நடந்து கொள்ளுகின்றன.

ஐரோப்பா முழுவதும் உள்ள மற்ற அரசாங்கங்களைப் போலவே, மேர்க்கெல் அரசாங்கமும் அனைத்து பாராளுமன்றக் கட்சிகளின் மறைமுகமான ஆதரவில் தங்கி, தொழிற்சங்கங்களுடன் நெருக்கமாக ஒத்துழைக்கிறது. சமூக ஜனநாயகக் கட்சி, இடது கட்சி மற்றும் தொழிற்சங்கங்கள் இப்பொழுது கூக்குரல் இடுவது ஒரு அரசியில் போலித்தனம் ஆகும். வில்லி பிரண்ட் நிலையத்தில் (சமூக ஜனநாயகக் கட்சி தலைமையகம்), கார்ல் லீப்க்னெக்ட் நிலையம் (இடது கட்சித் தலைமையகம்) மற்றும் தொழிற்சங்கங்கள் விடுக்கும் ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்பிற்கான அழைப்புக்கள் முற்றிலும் பாசாங்குத்தனம் ஆகும். இவை தொழிற்சங்கங்கள் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சியின் பிடியில் இருந்த முறித்துக் கொண்டு ஒரு சுயாதீன இயக்கம் வளர்வதைத் தடுக்கும் நோக்கத்தைக் கொண்டவை.

மேர்க்கல் மற்றும் வெஸ்டர்வெல்ல மீது உள்ள சீற்றத்தைத் திருப்பும் விதத்தில் எவரும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தினரின் வார்த்தைஜாலங்களுக்கு இரையாகும்விதத்தில் எவரும் நடந்து கொள்ளக் கூடாது. நிதானமான சிந்தனையுடன் செயல்பட்டு அரசியல் உண்மைகளை அச்சமின்றி பக்குவத்துடன் எதிர்கொள்ள வேண்டும்.

மேர்க்கெலுடைய கடும் சிக்கன நடவடிக்கைகள் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சமூக ஜனநாயகக் கட்சியின் ஹெகார்ட் ஷ்ரோடர், பசுமைவாதிகளின் ஜோஷ்கா பிஷர் ஆகியோரின் கீழ் இயங்கி சமூக ஜனநாயகக் கட்சி-பசுமைவாதக் கட்சி அரசாங்கம் விட்டுச் சென்ற இடத்தில் இருந்து தொடர்கின்றன. சமூகநல அரசின் மீதான மிகப் பெரிய தாக்குதல்கள் அந்த அரசாங்கத்தின்கீழ் நடைபெற்றன. செயற்பட்டியல் 2010 மற்றும் தொழில்துறை “சீர்திருத்தங்கள்” என்பவை மிகப் பெரிய குறைவூதியத் துறையை நிறுவின. பல தசாப்தங்கள் உழைத்து, வேலையின்மை காப்புறுதிக்கட்டணம் செலுத்திய பலரும் விரைவில் சமூகநல உதவிக்கு தள்ளப்பட்டு, பெரும் வறிய நிலையில் ஆழ்த்தப்பட்டனர்.

வெட்டுக்களுக்குக் காரணம் என்று மேற்கோளிடப்படும் வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறை, வானத்தில் இருந்து ஒன்றும் கீழே குதித்துவிடவில்லை. முதலில் அது தொடர்ந்து பெருநிறுவனங்கள் மீது வரிகளைக் குறைத்தல், உயர்மட்ட வருமானமு்ள்ளவர்களின் வரிவிதிப்பைக் குறைத்தல் என்று சமூக ஜனநாயகக் கட்சி-பசுமைவாதிகள் அரசாங்கம் செய்தவற்றின் விளைவு ஆகும். ஜேர்மனிய பொதுநலச் செலவுகள் ஒதுக்கீடு, அதாவது கூட்டாட்சி, மாநில, உள்ளூர் வரவுசெலவுத்திட்டங்களுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒரு பங்கு செல்லுவதல் மற்றும் சமூகப் பாதுகாப்பு முறைக்குச் செல்லவது 1990 களின் நடுப்பகுதியில் இரந்த 50 சதவிகித த்தில் இருந்து தற்பொழுது 44 சதவிகித த்திற்கு குறைந்துவிட்டது-அதாவது இங்கிலாந்தின் தரத்தையும் விடக் குறைவாக.

இரண்டாவதாக, பிணை எடுப்புத் தொகுப்பின் விளைவாக ஒரு டிரில்லியன் யூரோக்களுக்கும் அதிகமாக செலவழிக்கப்பட்ட தொகையினால் அரசாங்கக் கடன்கள் உயர்ந்து விட்டன. அவை, வங்கிகளுக்கும் ஊகக்காரர்களுக்கும், அவர்களை பாதுகாக்கவும் மற்றும் யூரோவைக் காப்பாற்றுவதற்கும், சமூக ஜனநாயகக் கட்சி- பசுமைவாதிகளின் ஒப்புதலுடன் கொடுக்கப்பட்டதால் ஏற்பட்டவை,

சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைவாதிகள் உறுதியான கம்யூனிச எதிர்ப்பாளரும் ஸ்டாசிச (Stasi) ஆவணங்களுக்கு முன்னாள் கூட்டாட்சி ஆணையராக இருந்த ஜொஆகிம் கௌக்கை கூட்டாட்சி ஜனாதிபதியாக நியமிக்கும் முடிவு மற்றும் ஒரு அரசியல் அடையாளம் ஆகும். சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைவாதிகள் தங்களுக்கு மெர்க்கலுடன் தீவிர அரசியல் வேறுபாடு ஏதும் இல்லை என்பதைத் தெளிவாக்க விரும்புகின்றனர். மெர்க்கல் ஜனவரி மாதம் கௌக்கின் 70வது பிறந்த நாளன்று களிப்பான உரையை நிகழ்த்தினார்.

சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமை வாதிகள் கடுமையான சிக்கன நடவடிக்கைகள் தேவை என்பதில் விமர்சனத்தில் மேர்க்கலுடன் உடன்படுகின்றனர். அவர்களுடைய குறைகூறல் அவை செயல்படுத்தப்பட வேண்டுமா என்பதில்லை, எப்படி என்பதுதான். மெர்க்கெல்--வெஸ்டர்வெல்லவின் கூட்டணி மிகவும் எதிர்பார்க்கப்படும் கீழிருந்து வரும் அழுத்தங்களை எதிர்கொள்ள வலுவற்று அதிக அனுபவமும் இல்லாமல் உள்ளது. கடுமையான குறைப்புக்களைச் செயல்படுத்த வேண்டும் என்றால், அவை சமூக ஜனநாயக வாதிகளின் கொள்கையாக உள்ள சமூக ஒடுக்குமுறையில் வல்லுனர்களான சமூக ஜனநாயகக் கட்சியால்தான் முடியும்.

தொழிற்சங்கங்களின் பார்வையும் இதேபோல்தான் உள்ளது. அவர்களுடைய அதிகாரிகள் சான்ஸ்லரிக்கு அடிக்கடி செல்லுபவர்கள். சில வாரங்களுக்கு முன்புதான், DGB எனப்படும் ஜேர்மனிய தொழிற்சங்கக் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கு பெற்ற பிரதிநிதிகள் சான்ஸ்லரை ஆரவாரத்துடன் வரவேற்றுக் கைதட்டினர். 1930 களில் இருந்ததைப் போல், தொழிற்சங்கங்கள் பொருளாதார நெருக்கடிக்கு விடையிறுக்கும் வகையில் அரசாங்கக் அமைப்பிற்கு அருகே நெருக்கமாக நகர்கின்றனர், ஓரளவு அத்துடன் இணைந்தும் விட்டனர்.

DGB அதிகாரத்துவத்தினர் தங்கள் முக்கிய பணி முதலாளித்துவ ஒழுங்கைத் தக்க வைத்தலே என்று கருதுகின்றனர். தொழில்வழங்குனர்களும் அரசாங்கமும் தொழிலாளவர்க்கத்தின் மீது போர் தொடுத்துள்ள நிலையில், தொழிற்சங்கங்கள் இயன்றவை அனைத்தையும் தொழிலாளர்களைத் தடுத்து நிறுத்துவது, அதிக விளைவுகள் இல்லாத எதிர்ப்புகளுடன் கட்டுப்படுத்துதல், சுயாதீன அணிதிரளலை தடுத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளன.

குறிப்பிடத்தக்க வகையில் மோசமான பங்கு இடது கட்சியால் கொள்ளப்பட்டுள்ளது. இது தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் நெருக்கமான தொடர்பைக் கொண்டுள்ளது. பாராளுமன்றக் கட்சித் தலைவர் கிரிகோர் கீஸியின் எச்சரிக்கையான மேர்க்கெலின் சிக்கன நடவடிக்கைகள் ஜேர்மனியில் சமூக அமைதியை ஆபத்திற்கு உட்படுத்துகின்றன என்பது இவ்விதத்தில் இயல்பானதுதான்.

ஜேர்மனிய ஜனநாயகக் குடியரசு (கிழக்கு ஜேர்மனி, GDR) இருந்தபோது, இடது கட்சிக் கருவியின் முன்னோடி அமைப்பு, ஆளும் அதிகாரத்தின் சக்தியைக் காப்பதற்கு, சமூக அமைதியைக் காத்தல் என்ற பெயரில் பயன்படுத்தப்பட்டது. இப்பொழுது அவர்களே தொழிலாளர் வர்க்கத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைப்பதில் வல்லுனர்களாக முன்வந்துள்ளனர்.

இடது கட்சியைப்போல் நேர்மையற்ற கட்சியாக செயல்பட்டது அபூர்வம் ஆகும். இது சமூகநலச் செலவுகளைக் குறைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தாலும், அது எங்கு ஆட்சியில் இருந்தாலும், உதாரணம் பேர்லின் செனட், பிராண்டன்பர்க் மாநில அரசாங்க இன்னும் பல (பெரும்பாலும் கிழக்கு ஜேர்மனி) உள்ளூர் அதிகாரங்களிலும் குறிப்பிடத்தக்க கடுமையுடன் சமூகநலச் செலவுக் குறைப்புக்களைச் செய்துள்ளது.

வங்கிகள் மீட்புப் பொதிகளைப் பொறுத்தவரை இடது கட்சியின் கண்ணோட்டமும் அரசாங்கத்தினுடையதைப் போலவே இருந்தது. முதலில் இது விரைவாக்கப்பட்ட பாராளுமன்ற நடைமுறைப் பயன்பாட்டிற்கு ஒப்புதல் கொடுத்து, தன் ஆதரவை அடையாளம் காட்டியது. பின் மீட்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்தும் திறன் நிறைந்த சட்டவரைவிற்கு எதிராக வாக்களித்தது. ஏனெனில் சட்டத்தை பெரும்பான்மையுடன் நிறைவேற்ற அதன் வாக்குகள் தேவையில்லை என்பதை அது அறிந்திருந்தது.

வைமார் பெரும் சோகத்தில் இருந்து ஒரு முக்கியமான படிப்பினை அறியப்பட வேண்டும். இந்தச் சந்தர்ப்பவாதக் கொள்கைகள் சவாலுக்கு உட்படுத்தப்படாவிட்டால், ஒரு அரசியல் பேரழிவு தவிர்க்கப்பட முடியாதது என்பதே அது.

தொழிலாளர்கள் தொழிற்சங்க அதிகாரத்துவத்தினரின் வார்த்தைஜால உரைகள், இடது கட்சியில் உள்ள அவர்களுக்கு ஆதரவ கொடுப்பவர்கள் மற்றும் அதன் குட்டி முதலாளித்துவத்திற்கு வக்காலத்து வாங்குபவர்க்கள் ஆகியோரால் அமைதியடைந்துவிடக்கூடாது. தொழிலாளர்களுக்கு பிரச்சினயின் வேர்களை கையாளும் ஒரு புதிய கட்சி தேவை.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக்குழுவும், அதன் ஜேர்மனிய பிரிவுமான Partei fur Soziale Gleichheit (சோசலிச் சமத்துவக் கட்சி) இரண்டும் வங்கிகள், பெருநிறுவனங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுவதில் குவிப்புக் காட்டும் ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்திற்கு போராடுகின்றன. இந்த அடிப்படையில்தான் நிதிய மூலதனத்தின் சர்வாதிகாரத்தை முறிக்க இயலும், பெருவணிகத்தின் இலாப நோக்கிற்கு என்று இல்லாமல் மக்கள் தேவைக்கு எனச்செயல்படும் தொழிலாளர் அரசாங்கம் நிறுவப்பட முடியும்.