World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Hands off WikiLeaks!

விக்கீலீக்ஸில் தலையிடாதே!

Patrick Martin
14 June 2010

Back to screen version

பென்டகன் அதிகாரிகள் தனிப்பட்ட இராணுவப் பிரிவை சேர்ந்த ப்ராட்லி மன்னிங் ஐ தடுப்புக்காவலில் வைத்திருப்பதை அறிவித்துள்ளதுடன், விக்கீலீக்ஸ் வலைத் தளத்தை நிறுவிய ஜூலியன் அசாங்கேயைத் தேடும் முயற்சிகளையும் முடுக்கிவிட்டுள்ளனர். ஈராக்கில் அமெரிக்க இராணுவத்தின் படுகொலை ஒன்றின் வீடியோக் காட்சி வெளியீடானது அரசியல் ரீதியாக சேதப்படுத்துதல் வெளிப்பட்டதால் இந்தப் பாதுகாப்பு தீவிர நடவடிக்கைகள் வந்துள்ளன.

ஜூன் 7ம் தேதி, மானிங் குவைத்தில் "இரகசியத் தகவலை வெளியிட்டது எனக் கூறப்படுவதற்கு காவலில் வைக்கப்பட்டிருந்ததை" பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். மூன்று நாட்களுக்குப் பின்னர், பென்டகன் விசாரணையாளர்கள் வலைத்தளம் Daily Beast இடம் அவர்கள் மானிங் விசாரணை தொடர்பாக அசாங்கேயைத் தேடிவருவதாகக் கூறினர். ஆஸ்திரேலியாவில் பிறந்த விக்கிலீக்ஸை நிறுவியவர் நியூ யோர்க் நகரத்திலும் லாஸ் வேகாசிலும் கடந்த வாரம் உரைகளை ஆற்றுவதாக இருந்தது. இவை "பாதுகாப்புக் காரணங்களுக்காக" இரத்து செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுவிட்டது.

அரசாங்கம் மற்றும் பெருநிறுவன குற்றம்சார்ந்த செயல்களின் கசிவுகளை உலகெங்கும் தேடி அவற்றை இணையதளத்தின் மூலம் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்கு பகிரங்கமாக்கும் விக்கிலீக்ஸ், ஏப்ரல் மாதம் ஒரு இரகசிய காப்பில் இருந்து முறையீடு நீக்கப்பட்ட, திருத்தப்பட்ட வீடியோ காட்சியை வெளியிட்டது. இதற்கு "மாற்றுவழிக் கொலை" என்ற சிறப்பு வலைத்தளம் பயன்படுத்தப்பட்டது. முதல் வீடியோ காட்சி அமெரிக்க இராணுவத்தால் கிழக்கு பாக்தாத்தில் ஹெலிகாப்டர் மூலம் 2007ல் நடந்த அமெரிக்க இராணுவ தாக்குதல் எடுக்கப்பட்டிருந்தது. அதில் 15 பேர் கொல்லப்பட்டனர், அவற்றில் இரு ராய்ட்டர்ஸ் செய்தியாளர்களும் அடங்குவர்.

இந்த வீடியோக் காட்சியும் அத்துடன் இருந்த வானொலி பேச்சுக்களும்--அதில் அமெரிக்க படையினர்கள் ஈராக்கியர்களை பூண்டோடு அழிப்பது பற்றி நகைச்சுவையாக பேசியிருந்தனர்--சர்வதேச அளவில் சீற்றத்தை பரந்த அளவில் தூண்டியதுடன், மற்றும் அமெரிக்க இராணுவ/உளவுத்துறையினரால் கடுமையான பதில் தாக்குதலுக்கும் உட்பட்டது. பாதுகாப்பு மந்திரி ரோபர்ட் கேட்ஸ் வீடியோ வெளியிடப்பட்டதை கண்டித்தார். ஆனால் வீடியோக் காட்சி அமெரிக்க இராணுவத்தால் தயாரிக்கப்பட்டது, அதில் மாற்றங்கள் ஏதும் செய்யப்படவில்லை என்பதை ஒப்புக் கொண்டார்.

செய்தி ஊடகத் தகவல்களின்படி, மே 26ம் தேதி ஒரு ஆன்லைன் நண்பர், அனுபவமிக்க வலைத் தளத் தாக்குதல் நடத்துபவர் ஆட்ரியன் லாமோவிடம் இதைப்பற்றிய தகவலைக் கூறிய தவறை ஒப்புக் கொண்டபின், மானிங் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார். லாமோவிடம் இராணுவ உளவுத்துறை பகுப்பாய்வாளர், முன்னணி நடவடிக்கைத் தளம் கிழக்கு பாக்தாத்தில் உள்ள ஹாமரில் இருந்தபோது, அவர் பரந்த அளவு உள் இராணுவ, வெளியுறவுத்துறை ஆவணங்களையும் தொடர்புச் செய்திகளையும் பெற முடிந்தது, இவற்றுள் "மாற்றுவழிக் கொலை " தயாரிக்கப்பட்ட மூல ஒளிப்பதிவும் இருந்தது என்று கூறியிருந்தார். லாமோ மானிங்கைப் பற்றி இராணுவம் மற்றும் FBI இடம் தெரிவித்து விட்டார்.

குவைத்தில் ஒரு இராணுவ நிலையத்தில் மானிங் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பல கணினி மூல சேமிப்புப் பகுதிகள் வியாழனன்று வாஷிங்டனை வந்து அடைந்தன. இப்பொழுது அவை அரசாங்க கணினி வல்லுனர்களால் எந்த ஆவணங்களை மானிங் கீழிறக்கினார், அவற்றை என்ன செய்தார் என்று நிர்ணயிக்க பகுப்பாய்வு செய்யப்படுகிறது.

2007ம் ஆண்டு மானிங் இராணுவத்தில் சேர்ந்து ஒரு அதிக இரகசிய/SCI அனுமதி பெற்றார். லாமாவிடம் தான் இராணுவ மற்றும் அரசாங்க இணையங்களை ஓராண்டிற்கும் மேல் பார்த்துவருவதாகவும், "நம்பமுடியாத, கொடூரமான விஷயங்கள் பற்றி கண்டறிந்துள்ளதாகவும்....அவை பொதுப் பார்வை பெற்றிருக்க வேண்டும், வாஷிங்டன் டி.சி.யில் இருட்டு அறை ஒன்றில் சேமிக்கப்பட்டு வைக்க வேண்டியதில்லை" என்றும் கூறினார்.

"மாற்றுவழிக் கொலை " என்ற பெயர் பெற்ற இந்த வீடியோவை, மானிங் தான் விக்கிலீக்ஸுக்கு இரண்டாவது வீடியோ காட்சி ஒன்று, மே 2009 அமெரிக்க விமானத் தாக்குதல் ஆப்கானிஸ்தானில் கரானி கிராமத்திற்கு அருகே நடந்ததைப் பற்றியதையும் காட்டியதாகவும், அதில் 100 மக்களுக்கு மேல் கொல்லப்பட்டனர், பல சிறுவர்களும் அடங்குவர் என்று கூறினார்.

இராணுவம்/FBI விசாரணையின் முக்கிய குவிப்பு, மானிங் 260,000 இரகசிய தூதரகக் கேபிள் செய்திகளை கீழிறக்கியது பற்றிய கண்டுபிடிப்பாகும். இவற்றை "அநேகமாக குற்றம் சார்ந்த அரசியல் விவகாரங்களை காட்டுவதாக" என்று அவர் விளக்கினார். லாமோவிற்குக் கொடுத்த மின்னஞ்சல் ஒன்றின்படி, "வெளியுறவுக் கொள்கையின் இரகசியத் தகவல்கள் முழுவதும் மக்கள் தேடக்கூடிய வடிவமைப்பில் கிடைக்கப்பெறுவதைக் கண்டு ஹில்லாரி கிளின்டன் மற்றும் பல ஆயிரம் தூதர்கள் உலகெங்கிலும் ஒருநாள் காலை எழுந்துவுடன் நெஞ்சு வலி பெறுவர் என்றும்" மானிங் சேர்த்துக் கொண்டார்.

இந்த 260,000 இரகசிய கேபிள் செய்திகள் எதுவும் தன்னிடம் இல்லை என்று விக்கீலிக்ஸ் மறுத்துள்ளது. அசாங்கே மானிங்கின் சட்டபூர்வ காப்புச் செலவுகளுக்கு நிதி உதவி தர இருப்பதாகக் கூறப்படுகிறது.

மானிங் காவலில் இருப்பதும், அசாங்கேயைத் தேடும் முயற்சியும் ஜனநாயக உரிமைகளைக் பாதுகாக்கும் அனைவராலும் எதிர்க்கப்பட வேண்டும். அமெரிக்க மக்களும், உலகிலுள்ள மக்கள் அனைவருக்கும் அமெரிக்க ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் நடத்தப்படும் அமெரிக்க இராணுவ/உளவுத்துறை நிகழ்த்திய குற்றங்களைப் பற்றி அறியும் உரிமை உள்ளது.

விக்கிலீக்ஸ் மற்றும் அத்துடன் இணைந்து செயல்படுவோர் மீது தாக்குதல், ஒபாமா நிர்வாகத்தின் பரந்த பாதுகாப்பு முயற்சிகளின் ஒரு பகுதிதான். இந்த வாரம் நியூ யோர்க் டைம்ஸில் தெரிவித்துள்ளபடி, வெள்ளை மாளிகை தேசியப் பாதுகாப்பு நிறுவனத்தில் இருந்த ஒரு உடனுழைப்பாளரான தோமஸ் டிரேக் மீது குற்ற விசாரணையைத் தொடர உள்ளது. அவர் தேசியப் பாதுகாப்பு நிறுவனத்தின் நிதி முறைகேடான நிர்வாகத்தை அம்பலப்படுத்தும் விதத்தில் Baltomore Sun இடம் தகவல் தெரிவித்திருந்தார்.

Times கட்டுரைப்படி, "திரு டிரேக் மீது குற்ற விசாரணை என்பது ஒபாமா நிர்வாகம் புஷ் நிர்வாகத்தைவிடக் கூடுதலான இசைவு பெற்றிராத கசிவுகளை நாடுவதில் ஆக்கிரோஷம் காட்டுகிறது என்பதை நிரூபிக்கிறது. அதிகாரத்தில் உள்ள 17 மாதங்களில், ஜனாதிபதி ஒபாமா ஏற்கனவே கசிவு விசாரணைகள் பற்றி முந்தைய ஜனாதிபதியைவிட அதிகம் சாதித்து விட்டார்."

இந்த முடுக்கிவிடப்பட்ட கசிவுகள் மீதான தாக்குதல், கைதிகள் சித்திரவதையை நடத்திய விசாரணையாளர்களுடன் CIA க்காக வேலைபார்க்கும் டாக்டர்கள் ஒத்துழைத்தனர் என்று மனித உரிமைகளுக்கான டாக்டர்களின் அறிக்கை வெளிவந்த அதே வாரத்தில் வந்துள்ளது. சித்திரவதை நிகழ்வுகளை டாக்டர்கள் கண்காணித்தனர். இதற்குக் காரணம் கைதிகள் இறந்துவிடாமல் இருக்க வேண்டும் என்பதுதான். அப்பொழுதுதான் அவர்கள் இன்னும் விசாரணைக்கும், சித்திரவதைக்கும் உட்படுத்தப்பட முடியும். மேலும் சித்திரவதையை இன்னும் வேதனை தந்து திறம்பட ஆக்க வழிவகைகளை நயப்படுத்தவும் முடியும். அறிக்கையின் தலைப்பு இதைத் தெளிவுபடுத்துகிறது: "சித்திரவதைகளில் பரிசோதனை: "விரிவாக்கப்பட்ட" விசாரணை முறையில் மனிதனைப் பற்றிய ஆய்வுகள் மற்றும் சோதனைக்கான சான்றுகள்" என்பதாகும்.

ஒபாமா நிர்வாகம் ஓட்டைகளை அடைக்க முற்படுகிறது. பொதுவாகக் கூறப்படும் அமெரிக்க படையினர்களின் வாழ்க்கை ஆபத்திற்கு உட்பட்டுவிடும் என்ற அக்கறையினால் அல்ல. மாறாக புஷ் நிர்வாகத்திற்கு உந்துதல் கொடுத்த அதே காரணங்களினால்தான்--பென்டகன், CIA, NSA மற்றும் வெள்ளை மாளிகையும்கூட--போர்க்குற்றச் சாட்டுகளை எதிர்கொள்ள நேரிடும், அமெரிக்காவிலோ அல்லது ஒரு சர்வதேச நீதிமன்றத்தின் முன்பு, அத்தகைய வெளிப்படுத்தலை அளிக்கும் சான்றுகளின்படி என்பதால்தான்.

ஹெலிகாப்டர் தாக்குதல் மூலம் ஈராக்கில் இறந்தவர்களுடைய உறவினர்கள், மானிங்கின் தடுப்புக்காவலைக் குறை கூறியுள்ளனர். தாக்குதலில் கொல்லப்பட்ட ராய்ட்டர்ஸ் ஊழியர்களில் ஒருவரான நமீரின் சகோதரர் நபில் நூர் எல்டீன் செய்தி ஊடகத்திடம், "இந்த அமெரிக்க இராணுவ வீரர் மனிதகுலத்திற்கு எதிரான குற்றத்தைக் கண்டுபிடித்ததின் மூலம் மனித குலத்திற்கு நீதியைத்தான் அளித்துள்ளார். அமெரிக்க இராணுவம் அவரை கைது செய்யக்கூடாது, வெகுமதி அளிக்க வேண்டும்." என்றார்.

மானிங் ஒன்றும் ஒரு குற்றவாளியல்ல; "அவருடைய" இராணுவமும், "அவருடைய" அரசாங்கமும் செய்த குற்றங்களுக்கு எதிராக கசப்புணர்வினால் உந்தப்பட்டவர் என்பது தெளிவு. World Socialist Web Site ஆனது மானிங் அவருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள எவ்வித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாமல் விடுவிக்கப்படவேண்டும் என்று கோரும் அனைவருடனும் இணைந்து கொள்கிறது. ஜூலியன் அசாங்கே மற்றும் பிற விக்கிலீக்ஸ் சேவகர்களின் நடவடிக்கைகளை விசாரிக்கும், அடக்கும் முயற்சிகள் அனைத்தையும் கைவிடுமாறும் மேலும் கோருகிறது.