World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India's budget: Concessions to business, new burdens for workers

இந்திய வரவு-செலவுத் திட்டம்: பெருவணிகத்திற்கு சலுகைகள், தொழிலாளர்களுக்குப் புதிய சுமைகள்

By Deepal Jayasekera
5 March 2010

Back to screen version

பெப்ருவரி 26-ம் தேதி பாராளுமன்றத்தில் நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி இந்தியாவின் தேசிய வரவு-செலவு திட்டத்தை சமர்ப்பித்தார். உள்ளுர் மற்றும் வெளிநாட்டு பெரு நிறுவனங்கள் கோரிய "சீர்திருத்த" நடவடிக்கைகள் மற்றும் பல வரிச் சலுகைகளை செய்துள்ளது. இந்தியாவின் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகள் மீது பெட்ரோலியப் பொருட்கள், உரங்கள் ஆகியவற்றின் விலைகளை கடுமையாக உயர்த்தி, சமூக நலச் செலவுகளில் உண்மையான குறைப்புக்களையும் ஏற்படுத்திய விதத்தில் புதிய சுமைகளைக் கொடுத்துள்ளது.

வணிக மற்றும் முதலீட்டு "நட்பு" நடவடிக்கைகளில் பெருநிறுவன துணைவரி 10-ல் இருந்து 7.5 என வெட்டிக் குறைக்கப்பட்டது, நேரடி வெளிநாட்டு முதலீட்டு (FDI) வரம்புகள் சில முக்கிய பிரிவுகளில் உயர்த்தப்பட்டது, நிதித்துறை சீர்திருத்த ஆணைக்குழு நிறுவப்பட்டது, கூடுதலான "முதலீட்டுக் குறைப்பு (Disinvestment)" -அதாவது பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குதல் ஆகியவை அடங்கியிருந்தன.

பெருமந்த நிலைக்கு பின் உலக முதலாளித்துவத்தில் பெரும் நெருக்கடிக்கு இடையேயும் புதிய தாராளவாத "சீர்திருத்தத்திற்கு"அரசாங்கம் உறுதியை அடையாளம் காட்டியதாலும், அரசாங்கமானது ஆண்டு வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறையை தீவிரமாகக் குறைத்துள்ளதாலும், பெருவணிகமானது வரவு-செலவுத் திட்டத்தை வரவேற்றுள்ளது. முகர்ஜி தன்னுடைய உரையை முடிப்பதற்கு முன்னரே நாட்டின் பங்குச் சந்தையின் குறியீடானது Bombay Stock Exchange உடைய சென்செக்ஸ் 350 புள்ளிகளால் உயர்ந்தது.

இந்திய வணிக, தொழில்துறை பிரிவுகளின் கூட்டமைப்பு (FICCI) தலைவர் ஹர்ஷ்பதி சிங்கானியா "நல்ல சமசீர் செயலுக்காக" முகர்ஜியை பாராட்டினார். இந்திய தொழில்துறைக் கூட்டமைப்பு (CII) தலைவர் வேணு சீனிவாசன் "மிகவும் சமசீர் உடைய, பொறுப்பான வரவு-செலவு திட்டம்", "வளர்ச்சி தொடரும்" என்று கூறினார்.

பெரு வணிகத்தின் ஒரே குறைகூறல் வரவு-செலவு திட்டமானது குறைந்த மாற்றீட்டு வரி (MAT) ä 15-ல் இருந்து 18 சதவிகிதத்திற்கு உயர்த்தியதுதான். "ஒரே கரும்புள்ளி MAT உயர்வுதான்" என்ற CII தலைவர் கூறினார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னேற்ற முன்னணி (UPA) அரசாங்கம் பெருவணிகத்திற்கு, குறிப்பாக ஏற்றுமதியாளர்களுக்கு 2008 கடைசி, 2009 ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதார "ஊக்கப் பொதிகளின்கீழ்" கொடுக்கப்படும் பெரும் தற்காலிக வரிச்சலுகைகளை படிப்படியாகத்தான் திரும்பப் பெற உள்ளது என்பது பற்றி இந்தியாவின் தொழில்துறை தலைவர்கள் மகிழ்ச்சி கொண்டுள்ளனர்.

இந்திய, சர்வதேச நிதிய வட்டாரங்களுக்குள் இந்தியாவானது வரவிருக்கும் ஆண்டுகளுக்குள் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்திற்கு ஏற்ப கடுமையாக குறைக்கும் தேவை பற்றி அதிக விவாதம் உள்ளது. ஆனால் UPA அரசாங்கம், இந்தியப் பெருவணிகத்தின் ஒருமித்த கருத்தை பிரதிபலிக்கும் வகையில் அதன் முதல் இலக்கு இந்தியாவை மீண்டும் "உயர்" பொருளாதார வளர்ச்சிக்கு கொண்டு வருவதுதான் என்று அறிவித்துள்ளது. அந்த இலக்கை ஒட்டி அது ஊக்கப் பொதிகளை, உடனடியாக என்று இல்லாமல், படிப்படியாக நிறுத்துவது என்று முடிவெடுத்துள்ளது.

இவ்விதத்தில் அரசாங்கம் உற்பத்தி வரியை அனைத்து எண்ணெய் பொருட்கள் அல்லாதவற்றின் மீது 2 சதவிகித புள்ளி உயர்த்தி 10 ஆகச் செய்துள்ளது. டிசம்பர் 2008-க்கு முன்பு உற்பத்தி வரி 14 சதவிகிதமாக இருந்தது. டிசம்பர் 2008 ஊக்கப் பொதிக்கு முன் 12 சதவிகிதமாக இருந்த சேவை வரி இப்பொழுது மாறாமால் 10 சதவிகிதமாக உள்ளது.

முகர்ஜியும் UPA அரசாங்கமும் இந்தியாவானது பூகோள பொருளாதர நெருக்கடியை சமாளித்துள்ளது என்றும் இரண்டு ஆண்டுகளுக்குள் மீண்டும் 9 சதவிகித வளர்ச்சிக்கு வந்துவிடும் என்றும் கூறுகின்றன.

இந்தியா மந்த நிலைக்குள் தடுமாறி விழவில்லை என்பது சரிதான். ஆனால் அதன் விரிவாக்க விகிதம் பெரிதும் சரிந்தது. பிரதம மந்திரி மன்மோகன் சிங் விரைவில் பெருகும் இளைஞர்களை தொழிலாளர் தொகுப்பில் இணைத்தல் முக்கியம் என்றும் அதே நேரத்தில் முதலாளித்துவ பொருளாதார "சீர்திருத்த" வேலைத்திட்டத்திற்கு ஆதரவு கொடுப்பதும் தொடர வேண்டும் என்று கூறினார்.

ஊக்கப் பொதி நடவடிக்கைகள் படிப்படியாக அகற்றிவிடுவது என்னும் அரசாங்கத்தின் முடிவு தற்போதைய "மீட்பு" என்பதின் நலிந்த தன்மையை ஒப்புக் கொள்ளுவது போல்தான் உள்ளது.

இந்திய பொருளாதாரமானது பூகோள மந்த நிலைக்காலம் முழுவதும் தொடர்ந்து விரிவு அடைந்திருந்தாலும், நாட்டின் ஏற்றுமதிகள் 30 சதவிகிதம் குறைந்தும், இந்திய தொழிலாளர்களும், கிராமப்புற உழைப்பாளிகளும் பணவீக்க உயர்வினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர், குறிப்பாக உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்தினாலாகும். மொத்த பொருட்கள் வியாபார விலைகள் இப்பொழுது 8.5 சதவிகிதத்தில் உயர்ந்து கொண்டிருக்கின்றன. ஒரு தசாப்தத்தில் இது அதிகமாகும். மொத்த உணவுப் பொருட்களின் விலைகளும் கிட்டத்தட்ட 20 சதவிகிதத்தில் உயர்ந்துள்ளன.

சில்லறை விற்பனையில் பொருட்களின் விலை இன்னும் அதிகமாக உயர்ந்துள்ளன என்பது அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. நூறு மில்லியன் கணக்கான மக்கள் ஏற்கனவே வறுமையில் வாழும் நாடாகும் இது.

பெருவணிகத்தின் தேவைகளை பூர்த்தி செய்யக் காட்டும் அக்கறை கொண்டுள்ள அரசாங்கமானது வரி உயர்வுகள் மற்றும் உதவிநிதிக் குறைப்புக்களை அறிவித்துள்ளது. இது இன்னும் அதிகமாக பணவீக்கத்தை அதிகரிக்கும்.

பெட்ரோல் மற்றும் டீசல் மீது சுங்க வரியை வரவு-செலவுத் திட்டத்தில் 2.5 சதவிகிதத்தில் இருந்து 7.5 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது. இந்தியாவானது அதற்கு தேவையான பெட்ரோலிய பொருட்களில் 70 சதவிகிதம் இறக்குமதி செய்கிறது. உற்பத்தி வரி இரண்டின் மீதும் லிட்டருக்கு ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் எரிபொருள் விலைகளில் உயர்வை கொடுக்கும். அது பொருளாதாரத்தில் பாதிப்பை போக்குவரத்து செலவினங்கள் மூலம் ஏற்படுத்தும். இறுதியில் எல்லா பொருட்களின் விலைகளும் உயரும்.

சமீபத்தில் அரசாங்கம் நியமித்திருந்த கிரித் பாரிக் குழு பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கட்டுப்பாட்டில் இருந்து தளர்த்தப்பட வேண்டும், அரசாங்கமானது சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய்க்கு கொடுக்கும் உதவித் தொகையிலும் தீவிர குறைப்பு வேண்டும் என்று பரிந்துரைத்தது. இத்திட்டங்கள் பரந்த எதிர்ப்பை தூண்டியுள்ளன. ஆனால் தன்னுடைய வரவு-செலவுத் திட்ட உரையில் முகர்ஜி அரசாங்கம் "நிதிய ஒருங்கிணைப்பை" செய்யும்போது, இவற்றுள் சிலவற்றையாவது செயல்படுத்தும் என்று குறிப்புக் காட்டியுள்ளார். அதாவது வரவு-செலவு திட்ட பற்றாக்குறையை குறைக்கும் நடவடிக்கைகளுக்கு. "இந்த பரிந்துரைகளின் மீதான முடிவுகள் என்னுடைய சக ஊழியர் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு மந்திரியால் உரிய நேரத்தில் எடுக்கப்படும்."

விவசாயிகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் நிலையாக அரசாங்கம் உரத்திற்கான உதவித் தொகையை கணிசமாகக் குறைத்துவிட்டது.

இதன் விளைவாக அதிகம் பயன்படுத்தப்படும் உரமான யூரியாவின் விலை 10 சதவிகிதம் உயர்கிறது.

கடும் விளைவு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில், UPA-யின் இரு முக்கிய கூட்டணிக் கட்சிகளான மேற்கு வங்கத்தை தளமாகக் கொண்ட திருணமூல் காங்கிரஸ் மற்றும் தமிழ் நாட்டை தளமாகக் கொண்ட DMK இரண்டும் எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்துள்ளன. ஆனால் பிரதம மந்திரி மன்மோகன் சிங்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியும் இக்குறைகூறல்களை உதறிவிட்டனர். "எரிபொருள் விலை சிலரைப் பாதிக்கத்தான் செய்யும்" என்று இந்தியாவிற்கு செளதி அரேபியாவில் இருந்து திரும்பி வரும்போது மன்மோகன் சிங் நிருபர்களிடம் கூறினார். "ஆனால் நாம் ஒரு நீண்டகாலப் பார்வையைக் கொள்ள வேண்டும்."

எரிபொருள் மற்றும் உரங்களில் விலையுயர்வுகள் அரசாங்கம் எவருடைய இழப்பில் "நிதிய ஒருங்கிணைப்பை செய்ய உள்ளது" என்பதை தெளிவாகக் காட்டுகின்றன.

அரசாங்கம் வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறையை இந்த நிதியாண்டில் இருக்கும் 6.9 சதவிகிதத்தில் இருந்து 5.5, 4.8, 4.1 சதவிகிதம் என முறையே 2010-11, 2011-12, 2012-13-ல் குறைக்கும் என்று பெருவணிகம் பாராட்டும் விதத்தில் உறுதியளித்துள்ளது. ஒரு வணிகரும் மற்றும் நிதியத்துறை வல்லுனரான உதய் கோடக் கூறினார்: "வரவு-செலவுத் திட்டம் நிதியப் பற்றாக்குறையை கட்டுப்படுத்துவதில் ஒரு பெரும் நேரிய தன்மையைக் கொண்டுள்ளது."

முதலாவது பதவிக்காலத்தில் இருந்தபோது, காங்கிரஸ் தலைமையிலான UPA புதிய தாராளக் கொள்கைகளுக்கு ஊக்கம் கொடுத்தது. விரைவில் பெருகிய பொருளாதார விரிவாக்கத்தில் இருந்து ஒரு சிறிய பிரிவை மட்டும் சமூகச் செலவுகளை அதிகரிக்கப் பயன்படுத்தியது. இதில் வேலை உறுதித்திட்டம் என்று ஒன்றும் உறுதியளிக்கப்பட்டது. அதில் கிராமப்புற வறிய குடும்பங்களில் ஒரு நபருக்கு குறைந்தது 100 நாட்கள் மிகக் குறைந்த மோசமான ஊதியமாக ஒவ்வொரு ஆண்டும் கொடுக்கப்படும் என்று இருந்தது.

இந்திய முதலாளித்துவத்தின் முக்கிய கட்சியான காங்கிரஸ் சம்பிரதாயமாக கூறுவதைப் போல், முகர்ஜி இந்த வரவு-செலவுத் திட்டம் சாதாரண மனிதனுக்கு அர்ப்பணிப்பதாக கூறுகிறார். உண்மையில் இது சமூக நலச் செலவினங்களை குறைத்துவிட்டது.

"வரவு-செலவுத் திட்டத்தின் உள்ளடக்க நிரலிலும் சமூக நலத் திட்டங்களிலும் மிகப் பழமைத்தனம் உள்ளது" என்று வரவு-செலவுத் திட்டம் பற்றி அதிக ஆதரவு கொடுத்துள்ள ஒரு வர்ணனையாளர் டைம்ஸ் ஆப் இந்தியாவில் குறிப்பிட்டுள்ளார். "....இவ்விதத்தில் முக்கிய திட்ட உள்ளடக்கமான NREGA, தற்பொழுது மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டம் என்று அழைக்கப்படுவது, அடிப்படையில் ஒரே தரத்தில் 40,100 கோடி ரூபாய்கள் என்று கடந்த ஆண்டு இருந்த 39,100 கோடி ரூபாய்களுடன் ஒப்பிடுகையில் உள்ளது. உண்மை மதிப்பில் இது குறைந்துவிட்டது என்று கூறமுடியும். இதே கதைதான் கிராமப்புற வளர்ச்சி, விவசாயம், பள்ளிக் கல்வி, எழுத்தறிவு, பெண்கள், சிறார் வளர்ச்சி, சுகாதாரம் ஆகியவற்றிலும் உள்ளது. இந்த சமூக உள்ளடக்கத் திட்டங்கள் அனைத்திலும் செலவுத் தரங்கள் கடந்த ஆண்டு இருந்த பெயரளவு தரங்களிலேயே உள்ளன, அதாவது உண்மைத் தரத்தில் சரிவு என்ற பொருளை இது கொடுக்கும்."

உண்மையான சமூக நலச் செலவுகளில் இந்தக் குறைப்பு பற்றாக்குறைக்கும், நிதி வளம் இல்லை என்று கூறப்படுவதையும் காரணம் காட்டி நியாயப்படுத்தினாலும், அதன் "கைவிடப்பட்ட வரி வருமானம்" பற்றிய புள்ளி விவரங்கள் அரசாங்கம் இந்திய வணிகங்களில் இருந்து வரி வருமானங்களை பல பில்லியன் டாலர்களுக்கு இழக்கிறது என்பதைக் காட்டுகின்றன.

தன்னுடைய வரவு-செலவுத் திட்டமானது விவசாயிகளுக்கும் ஆதரவு கொடுக்கிறது என்று முகர்ஜி சித்தரித்தார். உண்மையில் வரவு-செலவுத் திட்டமானது இரு தசாப்தங்களாக இருக்கும் பழைய வழக்கமான பெருவணிகம் கோரும் ஏற்றமதிச் சார்புடைய உள்கட்டுமான பொருட்களுக்கு, பாசன வசதி இன்னும் பலவிதத்தில் விவசாயிகளுக்கு ஆதரவு என்பதற்கு பதிலாக முன்னுரிமையை கொடுக்கிறது. Hindu ஏட்டில் சாய்நாத் குறிப்பிட்டுள்ளபடி, விவசாயத்திற்கு அரசாங்கக் கடன் என்பது பெருகிய முறையில் சிறு விவசாயிகளுக்கு பதிலாக விவசாய வணிகத்திற்குத்தான் கொடுக்கப்படுகிறது. சமீபத்திய வரவு-செலவுத் திட்டமானது இந்த வகையைத்தான் தொடர்கிறது. விவசாயிகளுக்கு கொடுக்கப்படும் கடன்கள் "தட்ப நிலையில் சேமிப்பதற்கான வசதிகள், வெளிநாட்டுத் தளம் உடைய விவசாய வணிகம் ஆகியவற்றிற்கு கொடுக்கப்படுகின்றன.

கடந்த வார வரவு-செலவுத் திட்டமானது பார்த்தால் நிதானமானது என்று கருதக்கூடிய 4 சதவிகித அதிகரிப்பைத்தான் இராணுவச் செலவுகளுக்கு அறிவித்துள்ளது. ஆனால் இது கடந்த ஆண்டின் வரவு-செலவுத் திட்டமானது மகத்தான 34 சதவிகித உயர்விற்குப்பின் வந்துள்ளது. மேலும் இந்திய இராணுவத்திற்கு தேவையானால் அதிக நிதிகளை ஒதுக்குவதாகவும் முகர்ஜி உறுதியளித்துள்ளார். இந்திய முதலாளித்துவம் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்களை வறுமையில் தள்ளி, அது பெரும் இராணுவ வலிமைக்கு முயல்கிறது, ஏவுகணைத் திட்டங்கள், கடல் வலிமையைத் தொடர்தல் என்று உலக சக்தியின் ஆளும் வர்க்கமாவதற்கான விழைவுகளுக்கு ஏற்ப நடந்து வருகிறது


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved