World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Iraqi election for a new US puppet regime

ஒரு புதிய அமெரிக்க கைப்பாவை அரசாங்கத்திற்கான ஈராக்கிய தேர்தல்

By James Cogan
8 March 2010

Back to screen version

மார்ச் 2003ல் நாடு அமெரிக்கப் படையெடுப்பின் கீழ் வந்த பின்னர் ஈராக்கில் நேற்று மூன்றாம் பாராளுமன்ற தேர்தல்கள் நடைபெற்றன. சட்டமன்றத்தில் உள்ள 325 இடங்கனில் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கு 6,529 வேட்பாளர்கள், 89 அரசியல் கட்சிகள் மற்றும் 20 தேர்தல் கூட்டணிகள் களத்தில் உள்ளன. செவ்வாயன்று ஒரு ஆரம்பகட்ட முடிவு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறுதி முடிவு மாதக் கடைசியில் வெளிவரும். முக்கிய கூட்டணிகளில் எதுவும் நேரடிப் பெரும்பான்மையை பெறாது என்பதை ஆரம்ப அடையாளங்கள் காட்டுகின்றன.

வாக்களிப்பு பாக்தாத்திலும் மற்ற பகுதிகளிலும் 100 சிறிய வெடிகுண்டுவீச்சுக்களால் தடைக்கு உட்பட்டது. அவற்றில் கிட்டத்தட்ட 38 பேர் இறந்து போயினர். ஆனால் அமெரிக்க போர்விமான மற்றும் ஹெலிகாப்டர் ஆதரவுடனான நூறாயிரக்கணக்கான ஈராக்கிய துருப்புக்களும் பொலிசாரினது பாரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் வாக்குச் சாடிகள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக அறிவித்திருந்த ஆக்கிரமிப்பு எதிர்ப்பாளர்களை தடுத்துவிட்டன.

வாக்களார்கள் அதிகமாக வந்ததாக வெளிவந்துள்ள தகவல்கள், அமெரிக்க அரசியல் நடைமுறை மற்றும் செய்தி ஊடகத்தில் எதிர்பார்த்த விளைவுகளை கொடுத்தன. "ஈராக்கின் வருங்காலம் ஈராக்கின் மக்களுக்குத்தான்" என்பதற்கு இதுதான் நிரூபணம் என்று ஜனாதிபதி ஒபாமா அறிவித்தார். பாதுகாப்பு மந்திரி ரோபர்ட் கேட்ஸ், "ஈராக்கியர்களுக்கு இது ஒரு நல்ல நாள்" என்றார். ஞாயிறு வாக்கெடுப்பு "வாதத்திற்கு உரியது என்றாலும், காலனித்துவ ஆட்சி, சர்வாதிகாரம், போர் என்ற நாட்டின் நீண்டவரலாற்றில் இது மிகவும் போட்டித்தன்மை நிறைந்த தேர்தலாக இருந்தது" என்று நியூ யோர்க் டைம்ஸ் பாராட்டியுள்ளது.

ஈராக்கின் உண்மையான நிலை இத்தகைய வெற்று அறிக்கைகளால் மறைக்கப்பட்டுள்ளது. ஒரு மில்லியன் மக்களுக்கும் மேலானவர்கள் கொல்லப்பட்டுவிட்டனர், குறைந்தது 2 மில்லியனுக்கும் மேலானவர்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். மக்களில் பெரும்பாலானவர்கள் வாழ்க்கைத் தரத்தில் பெரும் சரிவைக் கண்டுள்ளனர். முழு நகரங்களும், புறநகரங்களும் அமெரிக்க குண்டுவீச்சு மற்றும் படையெடுப்பிற்கு ஈராக்கிய எதிர்ப்பை அடக்கிய விதத்தில் இன்னும் அழிவில் உள்ளன. நாட்டின் பெரும்பகுதியையும் பாவிக்கப்பட்ட யூரேனிய வெடிப்பொருட்களின் மிச்சங்கள் சேதம், தொற்றுக்கு உட்படுத்தியுள்ளன. இந்த மாதம் ஒரு BBC தகவல் அன்பார் மாநிலத்தில் உள்ள பல்லுஜா நகரத்தில் பிறப்பில் குறைகளுடன் இருக்கும் குழந்தைகள் பற்றிய ஆவணத்தை அளித்துள்ளது. இந்த நகரம் அமெரிக்கத் துருப்புக்களால் 2004ல் அழிக்கப்பட்டுவிட்டது. பெண்கள் கருவுறாமல் பாதுகாத்துக் கொள்ளுமாறு ஆலோசனை கூறப்பட்டுள்ளனர். இதில் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதி அல்-ஜுலான் என்னும் தொழிலாள வர்க்க புறநகராகும். இங்கு 14 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் தங்கள் குடும்பங்களையும் வீடுகளையும் அமெரிக்க மரைன்களில் இருந்து காப்பாற்றப் போரிட்டு இறந்தனர்.

"நீண்ட கால காலனித்துவ ஆட்சிமுறை" முடிவுறுவதற்கு பதிலாக, ஈராக் கடந்த ஏழு ஆண்டுகளில் நடைமுறையில் அமெரிக்காவின் காலனித்துவநாடு போல் இயங்குகிறது. அங்கே 100,000 க்கும் மேலான அமெரிக்க துருப்புக்கள் ஆக்கிரமித்துள்ளன. மத்திய பாக்தாத்தை மேலாதிக்கத்திற்கு உட்படுத்தியிருக்கும் பாரிய அமெரிக்க தூதரகத்தை கேட்காமல் இதன் முழு உரிமை பெற்ற அரசாங்கம் என்று கூறப்படுவது எந்த முடிவையும் எடுக்க முடியாது. நேற்று வெற்றுத்தன ஆளும் உயரடுக்கின் பிரதிநிதிகள் என்று வேட்பாளராக நின்றவர்கள் சலுகைகள், பதவிகள், செல்வம் இவற்றைப் பெறுவதற்கு ஆக்கிரமிப்புப் படையின் பேரழிவு கொடுக்கும், மிருகத்தன செயல்களுடன் ஒத்துழைக்க தயாராக இருக்கின்றனர்.

அமெரிக்க தளபதி டேவிட் பெட்ரியஸ் "ஈராக்கியவகை" (Iraqcracy) என்ற சொல்லை கடந்த மாதம் புழக்கத்தில் விட்டார். இதன் பொருள் ஊழல், மிரட்டல், குறுங்குழுவாதம், இனவாத மற்றும் பழங்குடித்தன்மையை ஆகியவற்றை அப்பட்டமாக கையாண்டு மக்கள் ஆதரவைப் பெறுவது என்பதாகும். அமெரிக்க ஆக்கிரமிப்பு தோற்றுவித்துள்ள இந்த உண்மை அடுத்த ஈராக்கிய அரசாங்கத்தின் தன்மையை நிர்ணயிக்கும். அது ஒரு உறுதித்தன்மை அற்ற அமெரிக்கக் கைப்பாவை அரசாங்கமாக, வகுப்புவாத சக்தியின் அழுத்தங்கள் நிறைந்து எந்த நேரமும் இவை உள்நாட்டுப் போரில் ஈடுபடக்கூடும் என்று முன்கூட்டியே எவரும் மறுக்க முடியாது என்ற அளவிற்குக் கூற முடியும்.

பாராளுமன்றத்தில் மொத்த இடங்களை நான்கு கூட்டணிகள் பெறக்கூடும்.

* தற்போதைய பிரதம மந்திரி நெளரி அல்-மாலிகி சட்ட முகாமின் தலைவர் என்ற முறையில் தேர்தலில் போட்டியிட்டார். இதின் அவருடைய ஷியைட் (Shiite) அடிப்படைவாத தாவா கட்சியும் ஒரு சிறிய அன்பார் "எழுச்சி" இயக்கத்தின் சுன்னி (Sunni) அரேபிய பிரிவும் அடங்கியுள்ளன. எழுச்சி இயக்கம் என்பது 2007ல் இருந்து வழிவகையை குறிக்கிறது. அதில் எழுச்சித் தளபதிகள் கிட்டத்தட்ட 100,000 பெரும்பாலான சுன்னிப் போராளிகளை போரை நிறுத்தி அதிக ஊதியம் கிடைத்த அமெரிக்க நலன்களை நாடுமாறு நம்ப வைக்கப்பட்டனர். அதன் தொண்டர்கள் அமெரிக்கா கொடுத்த உதவித் தொகையையும் ஆக்கிரமிப்புப் படைகள், மாலிகியிடம் இருந்து அமெரிக்க ஆதரவு பெற்ற ஈராக் இராணுவத்தில் உள்ள ஷியைட் மரணப்படைகளை இயக்கும் குழுக்களில் இருந்து சுன்னி மக்கள் கொல்லப்படமாட்டார்கள் என்ற உத்தரவாதத்தையும் பெற்றனர்.

பெரிதாக வளர்ந்துவிட்ட 600,000 பாதுகாப்பு அமைப்பிற்குள் இருப்பவர்கள் மற்றும் தங்கள் சிதைந்துவிட்ட வாழ்வை மறு கட்டமைக்கு உறுதியை விரும்பும் மக்கள் பிரிவுகளிடம் இருந்தும் ஒரு ஆதரவுத் தளத்தை பெற மாலிக் முயன்றார். தன்னை எவ்விதமான எதிர்ப்பையும் அடக்கத் தயாராக இருக்கும் ஒரு "வலுவான நபர்" என்று அவர் காட்டிக் கொண்டுள்ளார். 2008ல் மாலிகி மத குரு மொக்டாடா அல் சதர் ஆயுதங்களை கைவிட்டு ஆக்கிரமிப்பாளர்களுடன் ஒத்துழைக்கும்படி கொடுத்த உத்தரவுகளை மறுத்த பஸ்ரா, அம்ரா, பாக்தாத்தில் இருந்த ஷியைட் மெகதி இராணுவப் போராளிகளுக்கு (Mahdi Army) எதிராக பெரிய நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டார். குர்திஸ் அரேபிய தேசியவாதத்தை தூண்டுவதற்கும் மாலிகி முற்பட்டார். இதற்காக நாட்டின் வடக்கில் இருக்கும் எண்ணெய் வளம் நிறைந்த கிர்குர்க் பகுதியில் KRG எனப்படும் குர்திஸ் பிராந்திய அரசாங்கம் இணைந்திருக்கவேண்டுமா என்பது பற்றி அரசியலமைப்பு முறைக்கு தேவையான சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதையும் நிராகரித்தார்.

* முக்கிய ஷியைட் மத கட்சிகளான இஸ்லாமிய ஈராக்கிய தலைமைக்குழு (ISCI) மற்றும் மொக்டாடா அல் சதர் இயக்கமும், UIA எனப்பட்ட ஐக்கிய ஈராக்கிய ஐக்கிய கூட்டணியின் ஒரு பகுதியாக இருந்தன. நாட்டின் தெற்கே இருக்கும் ஷியைட் மாநிலங்களிலும், சதர் நகர் உட்பட பாக்தாத்தில் தொழிலாள வர்க்கப் பகுதிகளிலும், இக்கூட்டு பெரும்பான்மை கணிசமான விகிதத்தில் தொகுதிகளை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாலிகியின் சட்டமும் ஒழுங்கும் என்ற முகாமுடன் கூட்டணிக்கு தயாராக உள்ளது என்பதையும் UIA குறிப்பிட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரம் முழுவதும் இதன் போட்டியாளர்கள் பலமுறையும் இதை ஈரானிய ஆட்சியின் கைப்பாவை என்று முத்திரையிட்டனர். இக்குற்றச்சாட்டுகளுக்கு எரியூட்டும் விதத்தில் மொக்டாடா அல் சதர் தேர்தலுக்கு முன் தெஹ்ரானில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தேர்தலுக்கு முன் ஆதரவிற்கு அழைப்பு விடுத்தார்.

அமெரிக்க அதிகாரிகள் கொடுத்துள்ள அறிக்கைகள் வாஷிங்டன் UIA ஈராக்கிய பாராளுமன்றத்தில் கணிசமாக வலுவழிந்துவிடும் என்ற நம்புவதை சந்தேகத்திற்கு இடமின்றி காட்டுகின்றன. இக்கூட்டு குறுகிய ஷியைட் அச்சங்களான முன்னாள் சுன்னி ஆதிக்கத்திற்குட்பட்டிருந்த சதாம் ஹுசைனின் பாத்திஸ (Baathist) ஆட்சியுடன் தொடர்புடைய கூறுபாடுகள் மீண்டும் அரசியல் எழுச்சி செய்யுமோ என்பதின் மீது குவிப்புக் காட்டும் விதத்தில் பிரச்சாரத்தை நடத்தியது. UIA கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் அமைப்பான Justice and Accountability Board வெற்றிகரமாக நூற்றுக்கணக்கான சுன்னி மற்றும் மத சார்பற்ற வேட்பாளர்கள் தேர்தலில் நிற்பதை அவர்கள் பாத்திஸ சிந்தனைக்கு ஆதரவு கொடுத்தனர் என்று காரணம் காட்டி தடை செய்துவிட்டது.

* ஒபாமா நிர்வாத்திற்கு பெரும் பரிவு உணர்வு கொண்ட முகாம் ஈராக்கியா கூட்டணி (Iraqiya coalition) என்று முன்னாள் பிரதம மந்திரி ஐயத் அல்லாவி மற்றும் இப்பொழுது துணை ஜனாதிபதியாக இருக்கும் தரிக் அல்-ஹஷேமியின தலைமையில் உள்ள கூட்டணியாகும். ஈராக்கிய ஒரு மதசார்பற்ற, தேசியவாத எதிர்ப்பு அமைப்பான இது ஷிtணீtமீ ஷீயீ லிணீஷ் (மிsறீணீனீவீநீ ஞிணீஷ்ணீ றிணீக்ஷீtஹ், ஞிணீஷ்ணீ றிணீக்ஷீtஹ் மிக்ஷீணீஹீ ளிக்ஷீரீணீஸீவீக்ஷ்ணீtவீஷீஸீ, tலீமீ மிஸீபீமீஜீமீஸீபீமீஸீt ஙிறீஷீநீ, ஷிஷீறீவீபீணீக்ஷீவீtஹ் ஙிறீஷீநீ, மிsறீணீனீவீநீ ஹிஸீவீஷீஸீ ஷீயீ மிக்ஷீணீஹீவீ ஜிuக்ஷீளீனீமீஸீ, ரிuக்ஷீபீவீstணீஸீ திமீறீவீ திக்ஷீணீtமீக்ஷீஸீவீtஹ் விஷீஸ்மீனீமீஸீt, ஷிலீணீணீதீணீஸீவீ ஹிஜீக்ஷீவீsவீஸீரீ ஙிறீஷீநீ 1991 ஆகியவற்றின் கூட்டு) இற்கும் மற்றும் இன்னும் வெளிப்படையாக அடிப்படைவாத UIAக்கும் எதிர்ப்பை காட்டுகிறது. அல்லவி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பயன்படுத்தப்பட்ட ஊழியர் ஆவார். புஷ் நிர்வாகத்துடன் நெருக்கமான தொடர்பு கொண்டு ஈராக் படையெடுப்பிற்கு ஊக்கம் அளித்த விதத்தில் அல்லவி இருந்ததுடன் 2004ல் முதல் ஆக்கிரமிப்பு ஆட்சி தோற்றுவிக்கப்பட்டபோது அதன் தலைவராக இருத்தப்பட்டார்.

ஈராக்கியாவும் மாலிகியின் சட்ட முகாமும் ஒரே மாதிரியான சமூக அடுக்குகளின் ஆதரவிற்கு போட்டியிட்டனர். அதாவது பாதுகாப்புப் படைகள் மற்றும் ஷியைட், சுன்னி பிரிவுகளின் மத்தியதர வர்க்கம். ULA ஒரு ஈரானின் முன்னணி என்று பலமுறை இது கண்டித்து, மாலிகியின் அரசாங்கம் திறமையற்ற, குறுங்குழுவாத தன்மையுடையது என்றும் கூறியது. ஆயினும்கூட ஈராக்கியா அல்லவியைப் பிரதமராகக் கொண்ட State of Law உடன் சேர்ந்து கூட்டணி அரசாங்கம் அமைக்க முற்படும் என்று கணிசமான ஊகங்கள் உள்ளன.

* முக்கிய குர்திஸ் கட்சிகள் மீண்டும் ஒரு முகாமாக குர்திஸ் கூட்டணி என்ற பெயரில் போட்டியிட்டன. இவை பிரிந்த குழு ஒன்றான மாற்றத்திற்கான இயக்கம் (Movement for Change) என்பதால் சவாலுக்கு உட்பட்டது. இது குர்திஸ் பகுதியில் உள்ள 43 தேசிய பாராளுமன்ற இடங்களில் 10ஐ பெறக்கூடும் என்று கருதப்படுகிறது. முந்தைய பாராளுமன்றங்களில் இருந்ததைப் போல், குர்திஸ் கூட்டு அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆலோசனை கூறும், அதற்கு அதிக நலன்களை கொடுக்கும் பெரிய அரபுத் தள பிரிவிற்கு பதவி கிடைக்க உதவும்.

முடிவை பொறுத்து, புதிய அரசாங்கம் அமைப்பது தாமதப்படலாம். டிசம்பர் 2005 தேர்தலுக்கு பின்னர் ஷியட் கூட்டணிக்கு மாலிகியை பிரதம மந்திரியாக இருத்தி, பல மந்திரிப் பதவிகளை நட்பு அமைப்புக்களுக்கு, குர்திஸ் இனத்தினருக்கு மற்றும் பெயரளவிற்கு சுன்னி பிரதிநிதிகளுக்கு கொடுக்க என்பதற்கு ஆறு மாதம் ஆயிற்று. 2010ல் இன்னும் கொந்தளிப்பு தன்மை உடையதாக வழிவகை இருக்கலாம். ஏனெனில் இரண்டு அல்லது மூன்று கூட்டுக்கள் பாராளுமன்ற பெரும்பான்மை பெற்று அரசாங்கம் அமைக்கக்கூடிய வாய்ப்புக்களை கொண்டுள்ளன.

அடுத்த அரசாங்கத்தின் முக்கிய செயல் ஈராக் இப்பொழுது இறைமை பெற்ற நாடு என்னும் அமெரிக்க கூற்றை நெறிப்படுத்தத் தொடரும் முயற்சியாக இருக்கும். ஆகஸ்ட் மாதம் அமெரிக்க போரிடும் துருப்புக்கள் பின்வாங்குவதையும், 2011க்குள் ஆக்கிரமிப்பு முடிவடைவதையும் பெயரளவிற்கு முன்னெடுக்கும். உண்மையில் அமெரிக்க திட்டம் நாட்டில் காலவரையற்று இருப்பது என்பதுதான். ஈராக்கிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே உள்ள "மூலோபாய வடிவமைப்பு", புஷ் நிர்வாகத்தின் கடைசி வாரங்களில் தயாரிக்கப்பட்டு, ஒபாமாவால் ஒப்புதல் கொடுக்கப்பட்டது, "பொருளாதார, இராஜதந்திர, கலாச்சார, பாதுகாப்புத் துறைகளில் நீண்டகால உறவுகள்" இருக்கும் என்று கூறுகிறது. அமெரிக்க இராணுவம் பாலாட், அல் அசாத் மற்றும் தலில் போன்ற முக்கிய தளங்களில் இருந்து நீங்காது.

ஒரு பொதுவான அமெரிக்க மூலோபாயம், 2003 படையெடுப்பிற்கு உண்மையான உந்துதல் மத்திய கிழக்கை மற்றும் அதன் எரிசக்தி இருப்புக்கள்மீது மேலாதிக்கத்தை கொள்வது என்பதாகும். அதையொட்டி அமெரிக்காவின் ஐரோப்பிய, ஆசிய போட்டியாளர்களுக்கு தனது கட்டளைகளை இடமுடியும். இறுதி வடிவமைப்பு எப்படி இருந்தாலும், அடுத்த ஈராக்கிய அரசாங்கம் பெரும் போட்டி ஏகாதிபத்தியசக்திகளின் பரந்த விளையாட்டில் ஒரு பகடைக்காயாக தொடரும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved