World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Papandreou in Washington: Obama administration backs Greek austerity measures

வாஷிங்டனில் பாப்பாண்ட்ரூ : கிரேக்க சிக்கன நடவடிக்கைகளுக்கு ஒபாமா நிர்வாகம் ஆதரவு

By Barry Grey
10 March 2010

Use this version to print | Send feedback

கிரேக்க பிரதம மந்திரி ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூ ஜனாதிபதி ஒபாமாவை வெள்ளை மாளிகையில் செவ்வாயன்று சந்தித்தார். இந்தச் சந்திப்பு பாப்பாண்ட்ரூவின் சமூக ஜனநாயக PASOK அரசாங்கத்திற்கும் அதன் கிரேக்க தொழிலாளர்களின் வேலைகள், வாழ்க்கைத் தரங்களை பெரிதும் தாக்கும் திட்டத்திற்கு அரசியல் ஆதரவைத்திரட்டும் வகையில் மூன்று நாட்கள் வாஷிங்டன் பயணத்தின் ஒரு பகுதியாகும்.

செய்தி ஊடகத்திற்கு தகவல் தரப்படாத பேச்சுக்களுக்கு பின் செய்தியாளர் கூட்டமில்லாத இந்த ஓவல் அலுவலக பேச்சுக்கள், திங்களன்று பாப்பாண்ட்ரூ Brookings Institution இல் உரையாற்றிய பின்னரும், அதே நாள் வெளிவிவகார செயலாளர் ஹில்லாரி கிளின்டனை சந்தித்த பின்னரும் வந்துள்ளது ஆகும். செவ்வாயன்று பாப்பாண்ட்ரூ காங்கிரஸ் தலைவர்களையும் சந்தித்ததுடன் நிதி அமைச்சர் டிமோதி கீத்நருடனும் பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளார்.

பாப்பாண்ட்ரூவின் வாஷிங்டன் வருகை கடந்த வெள்ளியன்று நடந்த ஜேர்மனிய அதிபர் அங்கேலா மேர்க்கெலுடன் பேர்லினில் நடந்த பேச்சுக்களுடன் தொடங்கி, லுக்சம்பேர்க்கில் யூரோக்குழுவின் தலைவர் ஜோன் குளோட் யுங்கர், ஞாயிறன்று பாரிஸில் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியுடன் பேச்சுக்கள் என்று இறுதியாக நான்கு நாடுகளின் சுற்றுப் பயணத்தில் முடிந்தது.

ஒவ்வொரு தலைநகரத்திலும் பாப்பாண்ட்ரூ தன்னுடைய சிக்கன நடவடிக்கைக்கு ஆதரவைத் திரட்டும் வகையிலும் சர்வதேச நிதியச்சந்தைகளுக்கு உத்தரவாதம் கொடுப்பதற்கும் சமூக அமைதியின்மையை அடக்குவதற்கு அவர் சிலவேளை எடுக்கக்கூடிய அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு பெரும் சக்திகளின் ஆதரவையும் திரட்ட முற்பட்டார்.

இதற்கிடையில் பாப்பாண்ட்ரூவுடன் பயணிக்கும் மந்திரிகள் அமெரிக்க பெருநிறுவன நிர்வாகிகளையும் வங்கியாளர்களையும் சந்தித்து அவர்களை கிரேக்கத்தில் முதலீடு செய்ய ஊக்கப்படுத்துகின்றனர். இதற்காக ஏற்கனவே ஐரோப்பாவில் இருப்பதற்கு குறைவாக இருக்கும் ஊதியங்களில் இன்னும் குறைப்பையும் கிரேக்க தொழிலாளர்கள் மீது சுமத்த தயார் என்பதையும் கூறினார்.

கிரேக்க அரசாங்க கடன்கள் திருப்பிக் கொடுக்கவியலாமையை ஏற்படுவதை தவிர்க்க வாஷிங்டனிடம் தான் நிதி கோர வரவில்லை என்பதை பாப்பாண்ட்ரூ தெளிவுபடுத்தினார். ஆனால் தன்னுடைய பகிரங்க அறிக்கைகளின் மையத்தானத்தில் அமெரிக்கா ஐரோப்பாவுடன் சேர்ந்து கட்டுப்பாடற்ற எஞ்சிய, கடன்கள் பத்திரபரிமாற்ற சந்தையில் (credit default swap markets) ஊகங்களை தடை செய்ய அழைப்புவிடுத்துள்ளார். அதுதான் கிரேக்கத்தின் கடன் வாங்கியதற்கான செலவுகளை அதிகரித்து யூரோவே குறைமதிப்பிற்கு உட்படுத்திவிட்டது.

திங்களன்று கிளின்டனுடன் ஒரு கூட்டுச் செய்தியாளர் கூட்டத்தில் பாப்பாண்ட்ரூ கிரேக்க அரசாங்க பத்திரங்களுக்கு எதிராக நடக்கும் ஊகங்களுக்கு எச்சரிக்கை விடுத்து, அவை இந்த வசந்த காலத்தில் தீர்க்கப்பட வேண்டிய $20 பில்லியன் கடன் தொகைகளை அரசாங்கம் கொடுக்கும் திறனை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன என்றார். "ஊக வணிகம் எங்களை சரியான வட்டி விகிதத்திற்கு கடன் வாங்க அனுமதிக்கவில்லை என்றால்", ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் ஆதரவு கிரேக்கத்திற்கு தேவை என்றும் அவர் வாதிட்டார். "நாங்கள் பிணை எடுப்புக் கோரவில்லை. நாம் கூறுவது ... இந்த நடவடிக்கைகளை நாங்கள் சந்தையில் எடுத்துள்ளோம், மற்றவர்கள் பெற்றதை நாங்களும் பெறுவதற்காக, அதாவது அடிப்படையில் பொதுவாக பெறக்கூடிய வட்டி விகிதங்கள் பெறப்பட வேண்டும்."

குழப்பத்திற்கு இடமின்றி கிளின்டன் கிரேக்கத்தின் கடும் சிக்கன திட்டத்திற்கு ஆதரவு கொடுத்து, "கிரேக்கத்தையும் அதன் கடும் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் நாங்கள் ஆதரவு கொடுக்கிறோம்" என்று அறிவித்தார். ஆனால் அடுத்த G-20 கூட்டத்தில் கடன் பத்திர பரிமாற்ற மற்றும் பிற எஞ்சியவற்றில் ஊகங்கள் பற்றிய வரம்பு பற்றி விவாதங்கள் வேண்டும் என்பது பற்றி அவர் அவ்வளவு உறுதியாகக் கூறவில்லை.

செய்தி ஊடகத் தகவல்கள்படி, பாப்பாண்ட்ரூ கிரேக்கத்திற்கும் யூரோவிற்கும் எதிரான ஊகத்தைத் தடுக்கும் பிரச்சினையை ஒபாமாவுடன் நடத்தும் விவாதத்தில் எழுப்புவதற்கு திட்டமிட்டிருந்தார் என்று தெரிகிறது. செவ்வாயன்று ஒபாமா, பாப்பாண்ட்ரூ ஓவல் அலுவலகத்தில் பேசுவதற்கு முன்பு ஜேர்மனிய அதிபர் மேர்க்கெல் யூரோப் பகுதி நாடுகளுக்கு எதிராக கடன் பத்திரபரிமாற்ற முறை பற்றிய ஊகங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்து ஒரு அறிக்கை விட்டிருந்தார்.

அமெரிக்க, ஐரோப்பிய கட்டுப்பாட்டு அதிகாரிகள் கிரேக்க செலுத்துமதி மீது தனியார் முதலீட்டு நிதியங்களும் வங்கிகளும் பந்தயங்கள் வைப்பது பற்றிய விசாரணையை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தானே வங்கிகளுக்கு பிணை எடுக்க முயற்சி எடுத்த ஒபாமா நிர்வாகம், நிதிய உயரடுக்கின் செல்வங்களை காத்தது, நிதியச் சந்தைகளில் எந்த உண்மை சீர்திருத்தத்தையும் தவிர்ப்பது, நாணய மற்றும் எஞ்சியவற்றின்மீது ஊகத்தை தடுக்க தீவிர நடவடிக்கைக்கு ஒப்புக் கொள்ளுமா என்பது சந்தேகம்தான்.

ஜனநாயகக் கட்சி சார்புடைய Brookings Institution ல் திங்களன்று பாப்பாண்ட்ரூ நிகழ்த்தி பேச்சு PASOK யின் ஆழ்ந்த பிற்போக்குத்தனத்தை அடிக்கோடிட்டுக் காட்டியது. அமெரிக்க கிரேக்க, அமெரிக்க ஐரோப்பிய உறவுகளில் ஜனாதிபதி ஹாரி ட்ரூமன் மார்ச் 12, 1947ல் சிறப்பு கூட்டு காங்கிரஸ் மன்றக் கூட்டங்களுக்கு நிகழ்த்திய உரை ஒரு மைல் கல் என்று கூறினார். அதில் ட்ரூமன் நூறாயிரக்கணக்கான மில்லியன் டாலர்களை பொருளாதார, இராணுவ உதவிக்கு கிரேக்கத்திற்கு கொடுக்கப்பட வேண்டும், வலதுசாரி கிரேக்க அரசாங்கத்தை தொழிலாளர்கள், விவசாயிகள் ஆயுதமேந்திய இயக்கத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று கூறியிருந்தார்.

1946-1949 கிரேக்க உள்நாட்டுப் போரில் ட்ரூமனின் தலையீடு பனிப்போர் உத்தியோகபூர்வமாக தொடங்கியதை குறித்தது. அவருடைய மார்ச் 12 பேச்சு ட்ரூமன் கொள்கை என்று அறியப்பட்டது. அமெரிக்க தலையீட்டிற்கு எதிராக கிரேக்க தொழிலாளர்களுடைய உதவிக்கு வர மறுத்த மாஸ்கோவின் ஸ்ராலின் ஆட்சி அலையின் வேகத்தை மாற்றி புரட்சியை நசுக்க வகை செய்தது. கிட்டத்தட்ட 100,000 தொழிலாளர்களும் விவசாயிகளும் எழுச்சியின் தோல்வியை அடுத்து வந்த காட்டுமிராண்டித்தன அடக்குமுறையில் சிறையில் அடைக்கப்பட்டனர், நாடுகடத்தப்பட்டனர் அல்லது கொல்லப்பட்டனர்.

1949 தோல்வி 1967ன் இராணுவ சதி மற்றும் ஏழு ஆண்டுகள் கிரேக்க சர்வாதிகாரத்திற்கு விதையை ஊன்றியது.

பாப்பாண்ட்ரூ இந்த புரட்சி எதிர் நடவடிக்கையைத்தான் ஒரு புதிய நெருக்கடியை எதிர்கொள்வதற்கு கிரேக்கத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையே புதுப்பிக்கப்படும் ஒத்துழைப்பிற்கு சிறந்த முன்னோடி என்று அளித்துள்ளார். தான் சுமத்தும் கடுமையான நடவடிக்கைகளின் தன்மையை போற்றும் விதத்தில், "கிரேக்கத்தின் தற்கால வரலாற்றில் மிகக் கடுமையான கடும் சிக்கன நடவடிக்கைகளை பாராளுமன்றம் இயற்றியுள்ளது" என்றார்.

இந்த நடவடிக்கைகளை "வேதனை தரும் செயற்பாடுகள், அதிக அரசியல், சமூக செலவுகளுடன் வருவது" என்று அழைத்த அவர் இவை ஒரு தொடக்கம்தான் என்பதை தெளிவாக்கினார். "கிரேக்க மக்களுக்கு 2010 கட்டாயமாக ஒரு கடுமையான சீர்திருத்தம் என்று எங்கள் வரி முறைகள், எங்கள் சமூகப்பாதுகாப்பு முறை, எங்கள் பொது நிர்வாகம், கல்வி முறை மற்றும் வளர்ச்சி மாதிரி என்ற அனைத்து அரசாங்க செயல்களிலும் இருக்கும் என்று கூறியுள்ளேன்" என்றார்.

"கடுமையான சமூக அமைதியின்மை" ஏற்படக்கூடும் என்று எச்சரித்த அவர், சமூக எழுச்சி ஆபத்துக்கள் ஊகவணிகர்களால் அதிகப்படுத்தப்படுகிறது, அவர்கள்தான் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். ஊக வணிகம் யூரோவின் மதிப்பை சரிவிற்கு உட்படுத்துகிறது, அதையொட்டி அமெரிக்க ஏற்றுமதிகளின் விலை அதிகரிக்கிறது, அமெரிக்க வணிகப் பற்றாக்குறை அதிகரிக்கிறது என்றும் அவர் சேர்த்துக் கொண்டார்.

பாப்பாண்ட்ரூவின் உரையில் கூறப்படாத உட்குறிப்பு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகியவை புரட்சிகர ஆபத்துக்கள் நிறைந்த காலக்கட்டத்தில் நுழைந்துள்ளன, 1946-49 ல் கிரேக்கத்தில் பயன்படுத்தப்பட்ட வழிவகைகள் மீண்டும் புதுப்பிக்கப்படலாம் என்பதாகும்


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved