World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German executives awarded themselves millions in 2009

ஜேர்மனிய உயர்நிர்வாகிகள் 2009ல் தங்களுக்கு மில்லியன் கணக்கில் வெகுமதி அளித்துக் கொள்கின்றனர்

By Elizabeth Zimmermann
17 March 2010

Back to screen version

ஜேர்மனிய பங்குச் சந்தை குறியீடான DAX இல் பதிவு செய்துள்ள நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் பொருளாதார நெருக்கடி, தொழில்துறை உற்பத்தியில் தீவிரசரிவு ஆகியவற்றை பொருட்படுத்தாது 2009ல் பல மில்லியன்களை தமக்கு சொந்தமாக்கியுள்ளனர்.

அதிக ஊதியம் பெரும் நிர்வாகிகள் என்ற பட்டியிலில் முதலில் இருக்கும் Deutsche Bank இன் தலைமை நிர்வாக அதிகாரி யோசெப் அக்கர்மானின் ஆண்டு வருமானம் ஊதியமாகவும், மேலதிக கொடுப்பனவுகளுமாக மொத்தமாக 9.6 மில்லியன் யூரோக்கள் ($13.2 million) ஆகும். இது 2008ல் அக்கர்மான் பெற்ற வருமானமான1.4 மில்லியன் யூரோக்களை போல் ஆறு மடங்கு அதிகம் ஆகும். ஜேர்மனியின் மிகப் பெரிய வங்கி வியாழனன்று அதன் நிர்வாகிகள் குழுவிற்கான 2009 ஊதியத்தை முந்தைய ஆண்டைவிட 9 மடங்கு அதிகம் உயர்த்தியதாகவும் அறிவித்தது.

2009ல் அதன் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் எட்டு பேருக்கு 39 மில்லியன் யூரோக்களுக்கு சற்று குறைவாக 2008 இல் கொடுத்துள்ளதாக Deutsche Bank அதன் அறிக்கையில் கூறியுள்ளது. இது கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகம் ஆகும். 2008 பெரும் இழப்பு 3.9 மில்லியன் யூரோக்கள் என்பதற்குப் பின்னர் Deutsche Bank 2009ல் பெரும் இலாபத்தை ஈட்டியது (5 பில்லியன் யூரோக்கள்). வங்கி முறையை அரசாங்கம் பல பில்லியன் பிணை எடுப்பு கொடுத்த காப்பாற்றிய பின் செய்த முதலீடுகளால் இது முடிந்தது.

Handelsblatt ஏடு சமீபத்தில் வெளியிட்ட வருமானம் பற்றிய ஆய்வின்படி, Siemens தலைமை நிர்வாகி பீட்டர் லொஸ்ஸர், RWE தலைவர் யூர்கன் குரோஸ்மான் ஆகிய இருவரும் 2009ல் 7மில்லியனுக்கும் மேலாக பெற்றுள்ளனர். இவர்களை அடுத்து பின்தொடர்ந்தவர் Volkswagen தலைமை நிர்வாகி மார்ட்டின் வின்ரர்கோர்ன் ஆவார். அவர் 6.6 மில்லியன் யூரோக்களை பெற்றார். இதில் ஓய்வூதிய தொகையாக இந்நிறுவனங்களின் தலைமைகளுக்கு ஒதுக்கப்பட்டள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ள 2மில்லியன் யூரோக்கள் அடங்கவில்லை.

தற்போதைய ஆய்வு DAX குறியீட்டில் இருக்கும் 30 நிறுவனங்களின் 18 தலைமை நிர்வாகிகளின் வருமானங்களை பகுப்பாய்கிறது. நெருக்கடி இருந்தும் அவர்களுடைய வருமானங்கள் சராசரியாக 2009ல் குறைவாகத்தான் குறைந்தன.

இந்தக் குழுவில் ஒரு விதிவிலக்கு Thyssen-Krupp தலைமை நிர்வாக அதிகாரி எக்கார்ட் சூல்ஸ் ஆவார். அவருடைய வருமானம் 2008ல் 4.2 மில்லியன் யூரோக்களில் இருந்து 2009ல் 1.9 மில்லியன் யூரோக்கள் என்று குறைந்தது. எஃகு நிறுவனம் சர்வதேசப் பொருளாதார நெருக்கடியை ஒட்டி அதிக உற்பத்தி அழைப்புகளை பெறவில்லை. இதைத்தவிர, நிறுவனம் பிரேசிலிலும் அமெரிக்காவிலும் புதிய எஃகு ஆலைகள் அமைப்பதில் ஏற்பட்ட பிரச்சினைகளில் மில்லியன் கணக்கான பணத்தை நஷ்டம் என எழுத வேண்டியதாக போயிற்று. இருந்தபோதிலும், எக்கார்ட் சூல்ஸ் உடைய தற்பொழுதைய வருமானம் Thyssen-Krupp ல் வேலைபார்க்கும் சராசரி எஃகுத் தொழிலாளியின் ஆண்டு வருமானத்தை போல் 60 மடங்கு ஆகும்.

இந்த உயர்மட்ட நிர்வாகிகளின் ஊதியங்களுக்கும் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலுக்களுக்கும் இடையே ஒரு நேரடி தொடர்பு உள்ளது. 2009 DAX நிறுவனங்கள் மிகஅதிக வேலைநீக்கங்களை செய்தன. அவற்றில் ஜேர்மனியில் 45,000க்கும் மேலும், உலகெங்கிலும் 116,000 உள்ளடங்கும்.

"2009ல் நெருக்கடி ஜேர்மனியை முழு வேகத்தில் தாக்கியது" என்று Spigel-Online டிசம்பர் கடைசியில் எழுதியது. "சில சமயம் அதிக பரபரப்புடன் Opel, Karstadt, Quelle ஆகியவை போலும், சில நேரம் மிக அமைதியாக ஆயிரக்கணக்கான வேலைகள் இந்த ஆண்டில் அறிவிப்பின்றியும் இழக்கப்பட்டுவிட்டன."

மிகஅதிக வேலைகளை நீக்கும் நிறுவனங்களில் ஒன்று Allianz காப்புறுதி நிறுவனம் ஆகும். இது 2009ல் தன் தொழிலாளர் பிரிவில் 21,000 பேரைக் குறைத்தது. இவற்றுள் சில Dresdner Bank, Commerzbank க்கு விற்கப்பட்டதின் விளைவு ஆகும். Dresdner Bank, Commerzbank உடன் இணைக்கப்படுவது, கிட்டத்தட்ட மொத்த நடவடிக்கைகளில் 40 சதவிகித சரிவு ஆகியவை இன்னும் ஆயிரக்கணக்கான வேலைகளை அகற்றும்.

இரண்டாம் மிகப் பெரிய வேலை இழப்புக்கள் Daimler கார் நிறுவனத்தில் ஏற்பட்டன. அங்கு 4,200 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். வணிகக்குழு Metro 3,800 வேலைகளை தகர்த்தது, Thyssen-Krupp 3,200 வேலைகளை அகற்றியது, மின் பொறியியல் நிறுவனம் Simens 3,000 பேரை அகற்றியது. இவை பல ஆயிரக்கணக்கான துணைஒப்பந்த பணியாளர்களை கணக்கில் கொள்ளவில்லை. அவர்கள்தான் எப்பொழுதும் முதலில் வேலையை இழப்பர்.

ஜேர்மனிய நிறுவனங்கள் இன்னும் அதிகக் குறைப்புக்களை தங்கள் சர்வதேச செயற்பாடுகளில் செய்தன. Deutsche Post 18,000 வேலைகளை உலகம் முழுவதும் தகர்த்தது. Daimler 16,000 பேரை பணிநீக்கம் செய்தது, ThyssenKrupp 10,000 பேரை அகற்றியது.

ஊதிய வெட்டுக்களுக்கும் நிர்வாகிகள் ஊதியத்திற்கும் இடையே உள்ள நேரடி பிணைப்பு மிகத் தெளிவாக Siemens இல் வெளிப்படுகிறது. நிறுவனம் குறிப்பிடத்தக்க வகையில் ஆக்கிரோஷமாக உள்ளது. கடந்த ஆண்டு 20,000 பணிகளை உலகம் முழுவதும் அகற்றியது. இந்தச் சாதனைக்குத்தான் தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் லொஸ்ஸர் இரண்டாம் மிகஅதிக ஊதியம் பெறும் DAX நிர்வாகியாக உள்ளார்.

ஜனவரி கடைசியில், Siemens ஜேர்மனியில் இன்னும் 2,000 வேலைக் குறைப்புக்களை அறிவித்தது. இது 2009 நிகர இலாபங்கள் 25 சதவிகிதமாக 1.5 பில்லியன் யூரோக்கள் என்று அறிவிப்பிற்கு முன்னதாகக் கூறப்பட்டது. முழு நிதி ஆண்டிலும் இது கிட்டத்தட்ட 20 சதவிகித இலாப அதிகத்தை எதிர்பார்க்கிறது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள வேலைக் குறைப்புக்கள் பனிப்பாறையின் உச்சியை மட்டும் காட்டுகின்றன. நிறுவனத்தின் தொழில்நுட்ப இணைநிறுவனம் SISஇல் 35,000 வேலைகள் இழக்கப்பட உள்ளன; இதற்குக் காரணம் Siemens மறுசீரமைப்பு செய்யும் விதத்தில் இப்பிரிவை விற்க இருப்பதுதான்.

"Siemens இல் ...இன்னும் வேலைக் வெட்டுக்கள் இருக்கும்" என்று டிசம்பர் மாதம் Süddeuschue Zeitung முடிவிற்கு வந்தது; "ஆனால் லொஸ்ஸர் அதை ஓசையின்றி செய்ய விரும்புவார். இது வேலைக் குறைப்புக்களுக்கும் பொருந்தும்; நிறுவனத்தின் தொழில்துறை பிரிவில் அவை குறிப்பாகத் தொடரும். தொழிலாளர்களின் பிரதிநிதிகள் கிட்டத்தட்ட 10,000 வேலைகள் நிறுவனம் முழுவதும் தகர்க்கப்படும் என்று அஞ்சுகின்றனர்....ஆனால் வியத்தகு அளவில், எந்த சப்தமும் செய்யாமல், Siemens ஏற்கனவே இந்த ஆண்டு உலகெங்கிலும் அதன் தொழிலாளர் பிரிவில் 23,000இனை குறைத்துவிட்டது."

இப்படி எவ்வித சத்தமுமின்றி வேலைகளை தகர்ப்பதுதான் முதலிலும் முக்கியமானதுமாக நிறுவனத்தின் முக்கிய தொழிற்சங்கமான IG Metall இன் பணியாக உள்ளது. IGM தலைவர் பெர்த்தோல்ட் ஹூபர் Siemens இன் மேற்பார்வைக்குழுவின் துணைத் தலைவர் ஆவார்.

மார்ச் 17 புதனன்று Siemensஇன் முதலாளி லொஸ்ஸர், ஹ்பரின் 60வது பிறந்த நாள் விருந்து ஜேர்மனிய அதிபர் அலுவலகத்தில் நடக்கும்போது ஒரு மரியாதைக்குரிய விருந்தாளியாக இருப்பார். அதிபர் அங்கேலா மேர்க்கெலே இதில் கலந்து கொள்கிறார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved